ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்- 1 ஸ்ரீ மாதா (2) பதிவு 5

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீ மாதா (2) 

பதிவு 5


நாமாவளி (நாமங்கள்) ஆரம்பிக்கும்போதே 'ஸ்ரீமாதா' என்றுதான் ஆரம்பிக்கிறது. 

ஸ்ரீமாதா, ஸ்ரீமஹாராக்ஞீ, ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ - இந்த முதல் மூன்று நாமங்களும் சிருஷ்டியை, ஸ்திதியை, சம்ஹாரத்தைத் காட்டக்கூடியவை. 

ஸ்ரீமாதா என்று சொல்வது அம்மாவாக, தாயாக அந்த அம்பிகையைப் பார்த்து சொல்வது. 

தாயாக இருப்பவள்தான் படைப்பவள். படைப்புத் தொழிலுக்கு அதிபதியாக இருப்பவள் ஸ்ரீமாதா என்பதால் ஆரம்பிக்கும்போதே அம்மா என்றுதான் ஆரம்பிக்கிறது. 

லலிதா சஹஸ்ரநாமம்தானே, 'லலிதாம்பிகே' என்று ஆரம்பித்திருக்கலாம் அல்லவா? 

ஆனால் அவ்வாறு ஆரம்பிக்கவில்லை; 

'தாயாக இருப்பவளே; எங்களைப் படைப்பவளே!' என்னும் பொருளில் ஸ்ரீமாதா என்றுதான் ஆரம்பிக்கிறது. 

அந்தத் தாய்க்கு, படைப்பதிலே அவ்வளவு சந்தோஷம். படைப்பதற்காகவே அவள் வடிவம் எடுத்து வருகிறாள்.

முற்றும் துறந்த ஆதிசங்கரர் தன் தாயை பிரிய மனமில்லாமல் தவிக்கிறார் ..

இருக்கும் போது உன்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை 

ஆனால் உன்னை முழுவதும் எரிக்கும் என் கரங்கள் மட்டும் எரியாமல் நன்றாக இருக்கிறதே . என்ன விந்தை அம்மா இது ??

சரி பட்டினத்தார் என்ன சொல்கிறார் ??

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி ?

2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்

அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன் ?

3.வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ?

வாழை மட்டை பற்றி எரிகிறது . தொப்புள் கொடியின் தொடர்பை அறுத்து ..😰😰

பட்டினத்தார் தொடர்கிறார் .😰😰

4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ

மெய்யிலே தீ மூட்டுவேன் ?🔥🔥🔥

5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மானே என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள

முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்

மகனே” என அழைத்த வாய்க்கு ?🔥🔥🔥

    பட்டினத்தார் தொடர்கிறார் 😰😰

6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள

முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்

மகனே” என அழைத்த வாய்க்கு ?

7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே;

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக்

குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை.🔥🔥🔥

*பட்டினத்தார் தொடர்கிறார் ....* 😰😰

9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்

வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய் ?

10.வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்!

நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க

எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்!

துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம்.👣👣👣

தாயின் அருமையை இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் .

எதற்கும் மூலமாக இருப்பவள் தான் தாய் .

அம்பாளுக்கு மூலா தாரா என்று ஒரு திருநாமம் உண்டு . 

குண்டலியில் மூலாதாரமாய் சுருண்டு பாம்பு போல் படுத்து இருக்கிறாள் .

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல சொல்ல அவள் எழுந்து மேலே நம்மை ஆயிரம் கமலங்கள் உள்ள பரமேஸ்வரன் களி நடம் புரியும் இடத்தில் அமுதம் சொரியும் அந்த சுகத்தில் நம்மை அவனுடன் ஐக்கியமாக்குகிறாள் .🌷🌷🌷

தமிழில் பல ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து வரும் பழமொழிகள் சரியான புரிதல் இல்லாமையால் பல பேர்களின் வாழ்க்கையை பந்தாடிக் கொண்டிருக்கிறது இன்னும் .

உதாரணம் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை நிர்மூலம் என்று .. 

இது பெரும் தவறு ... ஏன் என்று பார்ப்போம் .🙌🙌🙌

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை நிர்மூலம் எனும் பழமொழியை இந்த தலைமுறையாவது நிர்மூலம் ஆக்க வேண்டும் .. 

அம்பாளின் திருநாமம் மூலம் ஆண்டாள் பிறந்தது மூலம் ... 

பெண்ணாகா பிறந்தவர்கள் மாதவம் செய்திருந்தால் மட்டுமே மூல நட்சத்திரம் கிடைக்கும் .

இதை எல்லோருக்கும் உணர்த்துவோம் ... திருமணம் இதனால் ஆகாத பெண்களுக்கு இனிமேலாவது வெகு சிறப்பாக திருமணம் நடக்கட்டும் ... அம்பாள் இவர்களை என்றும் கை விட மாட்டாள் .

ஸ்ரீ மாதாவாக அவள் இருக்கும் போது வேறு என்ன மனக்கவலை .

இழுவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் இனி என் குறை என்றே பாடினார் பட்டர் ..ஒரு குறையும் நம்மை அண்டாது .. இது சத்தியம் 🌷🌷🌷👍👍👍🙏🙏🙏

மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை அம்பாளின் அருளால் நிர்மூலம் ஆகாது என்று பார்த்தோம் .

இன்னும் பல தவறான புரிதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னும் சில பழ மொழிகளை பார்ப்போம் 

மகள் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்   

இது மாமியார்கள் இன்றும் தங்கள் வீடு தேடி வரும் மகாலட்சுமிகளை நடுத்தும் முறை .

தவறு . உண்மையான அர்த்தம் .. 🤛🏾

நம் வீட்டுக்கு வருபவள் மகாலட்சுமி 

சுபிக்ஷம் தர வருபவள் அக்ஷ்ய பாத்திரமாய் .. 

அவள் தொடுவதெல்லாம் பொன்னாக மாறும் வலிமை கொண்டவை ..

அவள் மண் குடத்தை தொட்டாலும் அது பொன்னாகும் ... 

அதுவே உடைந்து போனால் பொன் குடம் உடைந்து போனது என்று தானே கூறுவார்கள் .  

வரும் பொண்ணை பொன்னாக பாவிக்காதவர்கள் .

மண் குடத்தில் மிஞ்சும் சாம்பல்கள் என்று சொல்லவரும் பழமொழி இது 👍👍👍


இன்னமொறு தவறாக உபயோகப்படுத்தும் பழமொழி 

ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குபவள்

அதாவது ஒரு சின்ன விஷயத்தை பெரிது படுத்துபவள் என்று புரிதல் ..மிகவும் தவறு இது

ஒரு விந்துவை குழவியாக்கி அதற்கு உயிர் உடல் கொடுத்து கை கால்கள் பார்வை கேட்க்கும் திறன் , நடக்கும் சக்தி என ஒன்றை அணுவிலும் சிறிய விந்துவை ஒன்பதாக்கி இந்த உலகத்திற்கு தருகிறாள் .

பட்டர் இதை மனதில் வைத்தே ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே என்று பாடுகிறார் ..  ஒரு பெண் தாயாகும் போது எங்கிருந்து தான் கருணை சமுத்திரம் அவளுக்குள் எழுகிறதோ .. அதனாலேயே அவள் ஸ்ரீ மாதா எனப்போற்ற படுகிறாள்.

தாயின் பெருமைகள் நாம் எடுத்துச் சொல்வது என்பது ஒரு பெரிய சமுத்திரத்தில் ஒரு சில திவலைகள் மட்டுமே நாம் சொம்பில் எடுத்துக்கொண்டததை போல ..

எப்படி அம்பாள்  அழகை நம்மால் பூரணமாக விவரிக்க முடியாதோ அதே போல் தாயாய் கருணைக்கடலாய் இருக்கும் அவள் பெருமைகளையும் எவ்வளவு யுகங்கள் ஆனாலும் பிறவிகள் எடுத்தாலும் விவரிக்கவே முடியாது .🌷🌷🌷🌷🌷



                                     👌👌👌👌👌💐💐💐💐💐👍👍👍



Comments

ravi said…
6. பகவான் கிருஷ்ணர் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நித்தியமாக வழிபடும் பக்தர்களை எப்படி பாதுகாக்கின்றார்? / How does Lord Krishna preserve those who worship Him with sincere devotion?
*
1/1
a. வேண்டியவற்றைக் கொடுத்து இருப்பதை பாதுகாக்கின்றார் / He gives what they want and preserves what they have

b. வேண்டுவதைக் கொடுப்பதில்லை; இருப்பதைப் பாதுகாக்கின்றார் / He does not give what they want; preserves what they have
c. நாம் வேண்டுவதைக் கொடுத்து இருப்பதை எடுக்கிறார் / He gives what they want and takes away what they have
d. நமக்கு வேண்டியதையும் கொடுப்பதுமில்லை ; இருப்பதைக் காப்பதுமில்லை / He neither gives what they want nor takes what they have
ravi said…
Feedback
ப.கீ: 9.22
ஆனால், எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்து கொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றைக் காத்தும் நான் பாலிக்கின்றேன்.
BG: 9.22
But those who always worship Me with exclusive devotion, meditating on My transcendental form – to them I carry what they lack, and I preserve what they have.
ravi said…
7. மூதாதையர்களையும் பூதங்களையும் ஆவிகளையும் வணங்கும் ஒருவரின் நிலை என்ன? /What is the status of one who worships ancestors, giants and spirits?
*
1/1
a. கிருஷ்ணரின் தூய பக்தர்களாக மாறுகிறார்கள் / Become unalloyed devotees of Krishna/
b. மூதாதையர்கள் மற்றும் பூதங்கள் மற்றும் ஆவிகள் மத்தியில் பிறப்பு / Take birth among ancestors and ghosts and spirits

c. பிரம்மஜோதியில் ஒன்றிணைவது / Merge in the Brahmajyoti
d. மிகவும் பணக்காரர், அழகானவர் மற்றும் அறிவார்ந்தவராக மாறுகிறார் / Become very rich, beautiful and scholarly
ravi said…
Feedback
பகீ.9.25 -
தேவர்களை வழிபடுபவர்கள்
தேவர்களிடையே பிறப்பர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.

BG 9.25: Those who worship the demigods will take birth among the demigods; those who worship the ancestors go to the ancestors; those who worship ghosts and spirits will take birth among such beings; and those who worship Me will live with Me.
ravi said…
8. கிருஷ்ணர் என்ன வகையான பிரசாதங்களை ஏற்றுக் கொள்கிறார்? / What kinds of offerings does Lord Krishna accept?
*
1/1
a. தூய நெய் மற்றும் பழங்கள் மற்றும் கொட்டைகள் கொண்டு தயாரிக்கபட்ட பிரசாதம் / Made with pure ghee, fruits and nuts
b. தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்களில் தயாரிக்கபட்ட பிரசாதம் / Made in gold and silver vessels
c. ஒரு பழம், ஒரு மலர், ஒரு இலை அல்லது நீர் இவற்றில் ஒன்றை அன்பு மற்றும் பக்தியுடன் சமர்பிப்பது / A fruit, a flower ,a leaf and water offered with devotion

d. வேத மந்திரங்களை முழக்கமிடும் போது செய்யப்பட்ட பிரசாதம் / Made while chanting the Vedic mantras perfectly
ravi said…
Feedback
பகீ.9.26 - அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.

BG 9.26: If one offers Me with love and devotion a leaf, a flower, a fruit or water, I will accept it.
ravi said…

9. இவற்றுள் தவறான கூற்று எது? / Which one of the following statement is wrong?
*
1/1
a. பகவான் அனைவருக்கும் சமமானவர் / Lord Krishna is Impartial
b. பகவான் பாரபட்சம் காட்டுபவர் / Lord Krishna is partial

c. பகவான் பக்தர்களை நேசிக்கிறார் / Lord Krishna loves devotees
d. பகவான் அனைவருக்கும் உணவளிக்கிறார் / Lord Krishna feeds everyone
ravi said…
Feedback
ப. கீ: 9. 29
நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.

BG: 9. 29
I envy no one, nor am I partial to anyone. I am equal to all. But whoever renders service unto Me in devotion is a friend, is in Me, and I am also a friend to him.
ravi said…

10. பகவான் கிருஷ்ணரின் பக்தர் என்னவாகிறார்? / What happens to the devotees of Lord Krishna?
*
1/1
a. என்றும் அழிவதில்லை / Never perishes

b. வீழ்ச்சியடைகின்றனர் / Falls
c. அசுரர்களால் தோற்கடிக்கப்படுகின்றனர் / Defeated by demons
d. கர்மவினையால் துன்புறுகின்றனர் / Suffer due to reactions of Karma
ravi said…
Feedback
ப.கீ: 9.31
அவன் வெகு விரைவில் தர்மாத்வாகி, நித்தியமான அமைதியை அடைகின்றான். குந்தியின் மகனே, எனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை நீ தைரியமாக அறிவிப்பாக.

BG: 9. 31
He quickly becomes righteous and attains lasting peace. O son of Kuntī, declare it boldly that My devotee never perishes
ravi said…
1. பகவான் அணைத்து பிரபஞ்சங்களையும் எவ்வாறு படைக்கிறார், கட்டுப்படுத்துகிறார், இயக்குகிறார் மற்றும் அழிக்கிறார் என்பதை விவரிக்கவும். / Explain how Lord creates, controls, directs and annihilates the universes ?
ravi said…
ப.கீ: 7. 4: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.

ப.கீ: 7. 6 : படைக்கப்பட்டவை அனைத்தும் இந்த இரண்டு இயற்கையைச் சேர்ந்தவையே. இவ்வுலகில் ஜடமாகவும் ஆன்மீகமாகவும் இருப்பவை அனைத்திற்கும், ஆதியும் அந்தமும் நானே என்பதை நிச்சயமாக அறிவாயாக.

ப.கீ: 9. 4 :
நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன்; ஆனால் அவர்களில் நான் இல்லை.

ப.கீ: 9. 5 :
அவர் தனித்து இருக்கிறார். கிரக அமைப்புகள் பிரபஞ்ச வெளியில் மிதக்கின்றன. இது பகவானின் ஆற்றல். ஆனால் அவர் பிரபஞ்சத்தில் இருந்து வேறுபட்டவர்
.
ப.கீ: 9.6 – 9.7 :
எல்லாம் அவரது இச்சையால் நடைபெறுகிறது. அவருடைய உயர்ந்த விருப்பத்தால் படைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அழிக்கப்படுகிறது. ஆனால் காற்றின் சுழற்சியில் இருந்து விலகி நிற்கும் வானத்தைப் போல எல்லாவற்றிலிருந்தும் விலகி இருக்கிறார்.

ப.கீ: 9. 8:
பரம புருஷ பகவானின் தாழ்ந்த சக்தியின் தோற்றமே இந்த ஜடவுலகம். படைப்பின்போது, ஜட சக்தி மஹத்-தத்த்வமாக விடுவிக்கப்படுகின்றது. பகவானின் முதல் புருஷ அவதாரமான மஹாவிஷ்ணு அதனுள் நுழைகிறார். காரணக் கடலில் படுத்துக் கொண்டிருக்கும் அவர், தமது சுவாத்தின்போது எண்ணற்ற அண்டங்களை படைக்கின்றார். அவை ஒவ்வொன்றிலும் அவர் மீண்டும் கர்போதகஷாயி விஷ்ணுவாக நுழைகின்றார். ஒவ்வொரு பிரபஞ்சமும் இப்படித்தான் படைக்கப்படுகிறது. அவர் மீண்டும் க்ஷீரோதகஷாயி விஷ்ணுவாக விரிவடைகிறார். அந்த விஷ்ணு மிகவும் நுண்ணிய அணுவிற்குள்ளும் நுழைகின்றார். அவர் எல்லாவற்றிலும் நுழைகின்றார்.

ப.கீ: 9.9: அவர் எப்போதும் நடுநிலை வகிப்பவர்

ப.கீ: 9. 10 : முழுமுதற் கடவுள் தனது பார்வையின் மூலம் எல்லா ஜீவாத்மாக்களையும் ஜட இயற்கையின் கருப்பையில் விதைக்கிறார்.
ravi said…
BG 7.4: Earth, water, fire, air, ether, mind, intelligence and false ego – all together these eight constitute My separated material energies.
BG 7.6: origin and the dissolution of all that is material and all that is spiritual in this world
BG 9.4: All the manifestations seen and exist, both in material and spiritual world, are resting on His energy and created by the diffusion of His different energies.
BG 9.5: He is aloof. The planetary systems are floating in space, and this space is the energy of the Supreme Lord. But He is different from space.
BG 9.6, 9.7: everything is moving under His will, being created, maintained, and annihilated by His supreme will. But aloof from everything, like sky from the activities of the wind.
BG 9.8: This inferior material world is the manifestation of Supreme Personality of Godhead. At the creation, it is let loose as the mahat-tattva where Lord incarnates as Mahā-viṣṇu. and breathes out innumerable universes where enters as Garbhodaka-śāyī Viṣṇu and then further manifests Himself as Kṣīrodaka-śāyī Viṣṇu
BG 9.9: He is always neutral.
BG 9.10: All these living entities are born under the glance of the Supreme Lord.
ravi said…
2. Bg 9.22 - Bg 9.32 பகவான் கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு அளிக்கும் விஷேச சலுகைகளை பட்டியலிடுக / List the special favours given by Lord Krishna to his devotees in Bg 9.22 to 9. 32 ?
ravi said…
BG 9.22: "அவர்களுக்கு இல்லாததை நான் தருகிறேன்" மற்றும் "அவர்களிடம் இருப்பதை நான் பாதுகாக்கிறேன்"

ப.கீ: 9.26: கிருஷ்ணர் ஒரு பக்தனிடமிருந்து - இலை, பூ, பழம் அல்லது தண்ணீர் எதையும் ஏற்றுக்கொள்கிறார்

ப.கீ: 9.29: கிருஷ்ணர் தனது பக்தர்களுக்கு மட்டுமே நண்பர்.

ப.கீ: 9.30 : ஒரு பக்தன் நிறைவற்று இருந்தாலும், அருவருப்பான முறையில் ஈடுபட்டாலும், கிருஷ்ணர் அவரை தூய்மையானவராக எடுத்துக்கொள்கிறார்.
ப.கீ: 9.31: கிருஷ்ணர் விரைவில் நல்லொழுக்கமுள்ளவராக, நிரந்தரமான அமைதியை அடையும் பக்தராக தூய்மைப்படுத்துகிறார்.

ப.கீ: 9.31:கிருஷ்ணரின் வாக்குறுதி; "எனது பக்தன் ஒருபோதும் அழிவதில்லை"

ப.கீ: 9.32: தகுதியற்ற வகுப்பினரும் கூட கிருஷ்ணரை அவருடைய கருணையால் அடைகிறார்கள்
ravi said…
BG 9.22: “I carry what they lack” and “I preserve what they have”
BG 9.26: Krishna accepts anything offered from a devotee – a leaf, flower, fruit or water
BG 9.29: Krishna is a friend to His devotees alone.
BG 9.30: Even if a devotee is imperfect engages abominably, Krishna takes him as saintly.
BG 9.31: Krishna purifies Devotee who quickly becomes righteous, attains lasting peace.
BG 9.31:Krishna promises; “My devotee never perishes”
BG 9.32: Even unqualified classes also achieve Krishna by His mercy
ravi said…
ஹரே கிருஷ்ணா பக்தர்களே!! 🙏🙏

உங்கள் descriptive பதில்களுக்கான Grading’s பின்வருமாறு;


நாள் 6 - B
நாள் 7 - A

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருள் என்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

(A - Very Good , B - Good , C - Ok)
NA- descriptive questions not attended
Blank- quiz not attended

நன்றி
ஹரேகிருஷ்ணா
தமிழ் கீதை குழு
ravi said…
According to Mahabharata.:

“śrīruvāca na mā̃ virōcanō vēda nāyaṁ vairōcanō baliḥ. āhurmā̃ duḥsahētyēvaṁ vidhitsēti ca mā̃ viduḥ.|7 bhūtirlakṣmīti māmāhuḥ śrīrityēvaṁ ca vāsava. tvaṁ mā̃ śakra na jānīṣē sarvē dēvā na mā̃ viduḥ|” (MBH 12:225:7-8)

“Sree said, ‘Virochana did not know me. This Bali also that is the son of Virochana knows me not. The learned called me by the name of Duhshaha. Some knew me by the name of Vidhitsa. I have other names also, O Vasava! They are Bhuti, Lakshmi, and Sree. Thou knowest me not, O Sakra, nor doth any one among the deities know me”.

When Indra asks her the reason behind her deserting Bali and asks if due to his(Indra's) acts or due to Bali’s any act, Sree says that it is nobody’s acts that can invite her or make her desert someone. She functions at the commands of Kala (mahakala).

“śrīruvāca nō dhātā na vidhātā mā̃ vidadhāti kathañcana. kālastu śakra paryāgānmainaṁ śakrāvamanyathāḥ|” (MBH 12:225:10)

“Sree said, ‘Neither the Creator(Brahma) nor the Ordainer(Vishnu) rules me. It is Kala(Shiva) that moves me from one place to another. Do not, O Sakra, disregard Bali."

Sree clearly says that neither the creator (dhata i.e., Brahma) nor the ordainer (vidhata i.e., Vishnu) rule her. She moves from one place to another at the command of Mahakala (Shiva).

Again, Ishwar Gita Chapter 6 Lord Shiva says thus.:

योऽपि नारायणोऽनन्तो लोकानां प्रभवाव्ययः । ममैव परमा मूर्तिः करोति परिपालनम् ॥ ६.१४॥ Meaning: - The endless Narayana, origin of world(s), is my (Lord Shiva's) best form and by my blessings he sustains entire creation.

या च श्रीः सर्वभूतानां ददाति विपुलां श्रियम् । पत्नी नारायणस्यासौ वर्त्तते मदनुग्रहात् ॥ ६.३१॥ Meaning: - The goddess of wealth and dispenser of the same, who is the consort of Narayana, known as “Sri” also functions at my (Lord Shiva's) command alone.

So, from the above verse it's fully crystal clear that it's Lord Shiva only who controls Maa Lakshmi alone. So, mahabharata is also in sync with it.

Further, Mahabharata also says that Mahadeva is the possessor of ‘Sri’ and is identical with the deity of blazing flames viz. Agni (the cosmic Agni-Linga is the reference).

“dyaurnabhaḥ pṛthivī khaṁ ca tathā caivaiṣa bhūpatiḥ |

sarvavidyēśvaraḥ śrīmānēṣa cāpi vibhāvasuḥ ||” (MBH 13:85:93)

“He (Mahadeva) is Heaven, Firmament, Earth, and the Welkin. He is called the Lord of the Earth. He is the Lord whose sway is owned by all obstacles. He is endued with ‘Sri’ and He is identical with the deity of blazing flames”.
ravi said…
नमस्ते अस्तु भगवन

विश्र्वेश्र्वराय महादेवाय

त्र्यम्बकाय त्रिपुरान्तकाय

त्रिकालाग्निकालाय

कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युंजयाय

सर्वेश्र्वराय सदाशिवाय

श्रीमन् महादेवाय नमः

ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

"சர்வேஸ்வர மகாப்ரபு.. நீயே என்னைத் தேடி வந்துட்டியா!" - பாட்டி.

பாட்டியிடம் பரிவு காட்டிய மகா பெரியவா.

ஒரு அனுஷத்தில் நடந்த சம்பவம். (இன்று வைகாசி அனுஷம் 13-06-2022)


டிசம்பர் 15,2015-,தினமலர் சி. வெங்கடேஸ்வரன்


காஞ்சிப்பெரியவர் அவதரித்தது வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில். இதனால், அவரது பக்தர்கள் ஒவ்வொரு மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தையும் விசேஷமாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அவரை எண்ணி பூஜை செய்பவர்களும் உண்டு.

ஒருமுறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.

ஒரு பாட்டியும் வந்தார். அந்தக்கால வழக்கப்படி, அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தாள். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை...

சொத்து நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன...! அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால், பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, ""இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார். ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது.

அன்றைக்கு பாட்டியிடம், "ஒன் உடம்பு எப்படி இருக்கு?'' என்று பெரியவர் கேட்டார்.

"ஏதோ இருக்கேன். ..
பெரியவா அனுக்ரஹம்... மழை பெஞ்சா ஆத்துலே (வீட்டில்) முழுக்க முழுக்க ஒரேயடியா ஒழுகறது... அதைக் கொஞ்சம் சரி பண்ணிக் கொடுத்தா தேவலை,'' என்றார் பாட்டி.

அப்போது, மடத்து நிர்வாகிகள் சிலர் காஞ்சி காமாட்சி பிரம்மோற்ஸவ பத்திரிகை கொண்டு வந்தனர். அதை கலெக்டருக்கும், மற்ற முக்கியஸ்தர்களுக்கும் கொடுத்த பிறகு, பெரியவருக்கு கொடுக்க வந்தது தெரிய வந்தது. பெரியவருக்கு கோபம்.. அதுபற்றி காரசாரமாக விவாதித்தார்.

பிறகு நிர்வாகி ஒருவரிடம்,""நீ எங்கே குடியிருக்கே?'' என்றார்.

"வடக்கு சன்னிதி பக்கம்...'' என்றார் அவர்.

"அங்கே இன்னும் ரெண்டு மூணு வீடு இருந்ததே...'' என்ற பெரியவரிடம், "அங்கே சுப்புராமன் இருக்கார்,'' என்றார் நிர்வாகி.

"சுப்புராமன் தான் மேலே போயிட்டாரே! அவரோட வாரிசுகள் மடத்துல வேலை செய்றாங்களா என்ன...?''

"இல்லை...''

"மடத்துலே வேலை செய்றவாளுக்கு தான் வீடு... நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது... நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு போயாகணும்...'' என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். அதன் படியே பாட்டியும் அங்கே குடிபோய் விட்டார்.

மூன்று மாதம் கழித்து, பெரியவர் சன்னிதி தெரு வழியாக சென்ற போது, ஒரு வீட்டின் முன் நின்றார்.

ஒரு சீடரிடம், "டேய்... அந்த பாட்டியை ரெண்டு மூணு நாளா காணலே.. உள்ளே போய் என்ன ஏதுன்னு பாரு...'' என்றார்.

சீடர் உள்ளே படுத்திருந்த பாட்டியை அழைத்து வந்தார்.

தன் வீட்டுக்கே வந்து விட்ட பெரியவரைப் பார்த்த பாட்டி, அதிர்ந்து போய், "சர்வேஸ்வர மகாப்ரபு. நீயே என்னைத் தேடி வந்துட்டியா!'' என்று அவர் பாதத்தில் விழுந்து வணங்கினாள். மூன்று முறை அவரை வலம் வந்தாள்.

தினமும் பெரியவரைக் காண பலர் வந்தார்கள். ஆனால், அவரிடம் ஆத்மார்த்தமாக பக்தி கொண்டவர்கள் வராவிட்டால், அவரே அவர்களைத் தேடி வருவார். அன்று மட்டுமல்ல.. இன்றும் அப்படியே! வாழும் தெய்வமான அவரை, ஆத்மார்த்தமாக வணங்கினால், நம்மையும் தேடி வருவார்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏
கரை காணமுடியாத கருணை பெருங் கடலே ஞானப் பேரொளியே ஸாந்த ரூபனே ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸத்குரோ நின் திருமலர் பொற் பாதம் போற்றி போற்றி.🌹🌹🙏

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️🙏🙏
ravi said…
கண்ணா நவரத்தினம் அழகூட்டுமோ ...

உன் கருமை மேனி தனில் கசிந்தோடும் காரூண்யம்

கோடி கதிரவனாய் ஜொலிக்கும் போது

நகைகள் உன் எழில் கூட்டும் என்றால்

கதிரவனுக்கு கற்பூரம் காட்டுவது போல் அன்றோ அது ?

உன் புன்னகை எந்நகையும் தலை குனிய வைக்கும் அன்றோ .. ??

கண் படும் என்றே உன் கருமேனிதனில் நவரத்தினம் நளிந்து உருண்டு சென்றதோ

உன் ஒளியில் ஓர் கதிர் பட்டதனால் கடையில் ஒரு கோடி விலை போகின்றதே ...

உன் இதழின் மதுரம் சுவைத்தனால் குழலும் கோடி விலை போகின்றதே ...

உன் கேசத்தில் தோகை விரித்து ஆடியதால் மயில் பீலிகள் மாணிக்கம் விலை கண்டதே ...

பாதம் கொஞ்சிய கொலுசுகள் காஞ்சி பட்டு புடவை என விலையில் உயர்ந்து போனதே ...

எங்கள் அன்பும் இன்று உச்சம் தொட்டே இப்புவியை விலை பேசியதே

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Oldest Older 201 – 221 of 221

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை