ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 16 - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா பதிவு 23

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா 

பதிவு 23

                                               👍👍👍


பூர்ண நிலவில் கருப்பு புள்ளி ... இது சந்திரனுக்கு இருக்கும் களங்கம் அல்லவா ? 

வாக்தேவிகளும் , ஹயக்ரீவரும் , ஆதி சங்கரரும் அப்படி பார்க்க வில்லை உவமை சொல்லும் போது.

அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் . என்றும் வளர்பிறை கொண்ட முகம் ... அந்த பூர்ண சந்திரனின் கருப்பு புள்ளி கூட உன் முகம் எனும் சந்திரனில் கஸ்தூரி திலகம் போல் இருக்கறதே .. என்ன அதிசயம் ... 

கஸ்தூரி என்பது ஒரு வகை மான் .. இதில் இருந்து கிடைப்பது தான் இந்த திலகம் .. 

பூரி ஜகந்தநாத்திற்கு நேப்பால் இருந்து கொண்டு வரப்படுகிறது அதே போல் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கும் கஸ்தூரி உடம்பெங்கும் சாத்தப்படுகிறது .. 

இதில் இருந்து தெரியும் உண்மை அம்பாள் தான் ஆண் உருவில் இருக்கும் நாராயணன் .. ஹரி 

இதை நன்கு உணர்ந்த பட்டர் ... தனது 35வது பாடலில் இப்படி பாடுகிறார் 

தரங்கக் கடலுள்

வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!!👌👌👌

திருப்பாற்கடலிற்   🏵️சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! 👍👍👍



"முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா”சந்திரனுக்கு மத்தியில் களங்கத் திட்டு மாதிரி அம்பாள் முகத்தில் கஸ்தூரிப் பொட்டு என்று அந்த நாமா சொல்கின்றது

நெற்றியை வர்ணிக்கும் நாமாவுக்கும் 

அஷ்டமீசந்த்ர...சோபிதா

புருவத்தை வர்ணிக்கும் நாமாவுக்கும் (“வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா” – மன்மதன் வசிக்கும் மங்கல வீடாகிய முகத்திற்கு தோரணங்கள் போன்ற புருவங்களை உடையவள்) இடையே இந்த நாமா வருவதால் இது புருவ மத்தியைச் சொல்வதாக ஸ்பஷ்டமாகின்றது.


அம்பாளுடைய திருநெற்றியில் மேலும் அழகு ஜொலிக்கிறது. கூந்தலின் முன்னால் இருக்கும் கற்றைகள் நெற்றியில் சுருண்டு சுருண்டு விழுகின்றன. அதுதான் அளகம் (அல்லது அலிகம்) - அலிக ஸ்தல - கூந்தல்கள் விளையாடும் ஸ்தலம்! 

அந்தத் திருநெற்றியில் கஸ்தூரி மானிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி திலகத்தை அம்பாள் அணிந்துகொண்டு இருக்கிறாள் என்பதால் முக சந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா என்கிறது இந்த திருநாமம். 

ம்ருகம் என்றாலே மான், கஸ்தூரி மான். 

அதனிடமிருந்து கிடைக்கும் கஸ்தூரியைத் திலகமாக அணிந்திருக்கும் அம்பாள். 

அவளுடைய ஸ்வரூப வர்ணனை திருநெற்றி, திருமுகம், திருவடி என்று தொடர்ந்து, அவளுடைய ஸ்வரூப சௌந்தர்யத்தால் எப்படி அனுக்ரஹத்தைத் தருகிறாள் என்பதை வர்ணித்துக் கொண்டே வருகிறது.


         

                    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



Comments

ravi said…
A crowd gathered in front of our house. Paramacharya entered and gracefully sat on the wooden Asana decorated with kolam. We did poorna kumbha pada puja and Arati. My wife, children and I came round him thrice and prostrated to him. Paramachara pointed his hand to the divine portrait kept in the inner room and told the gathering, "It is with this Sri Lakshmi Narayana portrait kept for worship, that these people conducted the four-and-half years Mahabharata (pravachana) and the recital of Vishnu Sahasranamam for a total of three lakhs and twenty four thousand counts." Acharyal then clapped his hands to gesture to the people who had gathered inside the house blocking his view to move away. He looked keenly at the portrait and said "Rajagopala!" calling me near him. He let his glance fall on my old house which had a low, tiled roof and asked me, "So this is your house and you are living here?" When I said yes, he told me, "Have another prostration." All our family members prostrated to him again.

Within days after his arrival, we were blessed with an opportunity to leave that old home and acquire the larger home where we are living now. Good things and marriages started happening in this new house, following our moving in.

The fortune of Badrinath and Kedarnath holy yatra also came our way. When I took the blessings of Paramacharya for these trips at his camp in Madurai, he blessed and told me, "Go with all the family! Not only Badrinath, but also visit Kedarnath!"

It was the time when the fear of the eight planets assembling in a line was dominant throughout the world. He asked me to visit Kedarnath as a remedy, and also blessed me with a garland of rudrakshas.
ravi said…
I acceded to the request of the people in the Nepali ashram where we stayed and held a discourse in Puranas. I spoke in Sanskrit and a Guruji translated it in Hindi. The North Indian devotees became fond of my discourses. At the end of the discourse I told them about our predicament. I came to know that day the respect and love showered by the North Indians towards Sanskrit pundits.

A man from the crowd of devotees rose and spoke to me, "I shall take up the responsibility of taking you to Badrinath. Be ready in the morning. How many people are there with you?" And he kept up with his words. Even in the Badrinath darshan we had problems of rush, which were solved by good people who appeared suddenly from nowhere at such times. I believe all this happened due to Paramacharya's anugraha. Our Kedarnath pilgrimage was also completed without problems due to his grace.

About twenty of us who undertook the pilgrimage, at last reached Chennai safely. We had a continuous stream of calls from relatives and stu
ravi said…
A man from the crowd of devotees rose and spoke to me, "I shall take up the responsibility of taking you to Badrinath. Be ready in the morning. How many people are there with you?" And he kept up with his words. Even in the Badrinath darshan we had problems of rush, which were solved by good people who appeared suddenly from nowhere at such times. I believe all this happened due to Paramacharya's anugraha. Our Kedarnath pilgrimage was also completed without problems due to his grace.

About twenty of us who undertook the pilgrimage, at last reached Chennai safely. We had a continuous stream of calls from relatives and students seeking to ensure our safe arrival.

I knew the reason for this wide attention only later. After our return, news had come in the press that the routes in the Himalayas were closed due to landslides and that many travellers met with accidents.

Within two or three days, I reached Ilayatthankudi village with family to have darshan of Paramacharya. I submitted the teertham I had brought from Ganga. The Dhanuskoti tirtham had also come. When Paramacharya took his bath in the pond the next morning, he poured over him the two teerthas. Looking at this we felt the happiness of deliverance from the cycle of births. We also took our bath there along with other devotees.

Swamigal later inquired about our pilgrimage and said, "I heard there were landslides in the Himalayan roads?" I replied, "Those things did not affect us since we had the kavacham." He said, "kavacham?” repeating the word. I touched the rudraksha garland on my neck and said, "When this form of your blessing was with us, what hurdle could we have had?" He smiled. We prostrated again and took leave of him.

Even though many years have gone by since these things happened, the memory of them is fresh in mind.

BrahmaSrI Vazhutthur Rajagopala Sarma
Author: 'Paranthaman' (V.Narayanan)
Source: Paramacharyar
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
அம்பாளை உபாஸிப்பதால் பதிபக்தி உண்டாவது ரொம்பவும் நியாயம்தான். ஏனென்றால் அவளே மகா பதிவிரதையாக இருக்கிறவள். பிரியம் வைக்க முடியாதவரிடம் மகாப் பிரியமும், விசுவாசமுமாக இருப்பதுதான் விசேஷம். சகல ஐசுவரியமும் உள்ள வைகுண்டத்தில் அலங்காரப் பிரியராக ரூபலாவண்யத்தோடு இருக்கிற மகா விஷ்ணுவிடத்தில் மஹாலக்ஷ்மி பிரியமாக இருப்பதில் சுவாரஸ்யம் இல்லை. மயானவாசியாக, புலித்தோலை கட்டிக்கொண்டு கபால மாலை போட்டுக் கொண்டு, ஊரெல்லாம் பிச்சை எடுக்கிற பரமேசுவரனிடத்தில் அம்பாள் மாறாத அன்போடு இருப்பதே விசேஷம். தாக்ஷாயணியாக அம்பாள் பிறந்தபோது அவளது பிதாவான தக்ஷன் ஈசுவரனை மதிக்கவில்லை. இதைக் கண்டு பொறுக்க முடியாத தாக்ஷாயணி தகப்பனுடைய யாகசாலையில், “என் பர்த்தாவை மதிக்காத தக்ஷனுக்குப் பெண்ணாக பிறந்து, தாக்ஷாயணி என்று வைத்துக் கொண்டிருக்கிற இந்தச் சரீரமே எனக்கு வேண்டாம்” என்று பிராணனை விட்டாள். யாக குண்டலத்திலேயே உயிரைத் தியாகம் செய்தாள் என்பது கதை. தாக்ஷாயணிக்கு ‘ஸதி’ என்றே இயற்பெயர். ‘தக்ஷனின் புத்ரி’ என்கிற அர்த்தத்தில் ‘தாக்ஷாயணி’ என்ற காரணப் பெயரும் ஏற்பட்டது. இதனால்தான் வெள்ளைக்காரர்கள் பதிவிரதத்தின் உச்சியாக உடன்கட்டை ஏறுகிறதை Suttee (ஸதி) – என்றே சொன்னார்கள். ‘ஸதி’ என்றாலே கற்புக்கரசி என்று அர்த்தமாகிவிட்டது. அதற்கப்புறம் தாக்ஷாயணியே பர்வத ராஜபுத்திரியாக ஜனித்து பார்வதி என்று பேர் பெற்றாள். சம்ஹார மூர்த்தியும், கோர மசானவாசியுமான பரமேசுவரனிடம் இப்போதும் அவளுடைய அன்பு மாறவே இல்லை. அவரையே மறுபடியும் பதியாக அடைய வேண்டும் என்று சின்னஞ்சிறு வயதிலேயே உக்கிர தபஸ் செய்தாள் பார்வதி. கடைசியில் ஈசுவரனைக் கல்யாணம் செய்து கொண்டாள். இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட விசேஷத்தால், ‘கோர கோர தரேப்ய:’ என்று வேதம் சொல்கிற கோரருத்திரனும், பரம மங்கள ஸ்வரூபியாக, சிவமாக ஆனார். அவளுக்கு ‘சிவா’ என்ற பேர் உண்டாயிற்று.

ravi said…
அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆசாரியாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் கூறுகிறார். காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ‘தாலீபலாச தாடங்கம்’ என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன. பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிட்சமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலைதான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை ‘வைர ஓலை’ என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
ravi said…
*கந்தர் அலங்காரம் 47* 🐓🦚🙏

*அலங்காரம்-12:*

முருகனின் மயில்! சேவல்! குதிரை?

குசை நெகிழா வெற்றி வேலோன்!

அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,

அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!

அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!

🙏🙏🙏
ravi said…
எப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை?

இந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு!

மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி!

சித்ரப் பதம் நடிக்கு மயிலாம்!

ரத்ன கலாப மயிலே! ரத்ன கலாப மயிலே!-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை!


பரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும்!

அவ்ளோ மயில் சந்தம்! அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை!

மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா?🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 329*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
*பி³ம்போ³ஷ்ட²த்³யுமணிப்ரபா⁴ஸ்வபி ச யத்³பி³ப்³போ³கமாலம்ப³தே” “பி³ம்போ³ஷ்ட²ம்” –*

கோவை பழம் போல உதடு, உதட்டுல இருந்து தான் மந்தஸ்மிதம் வருது, அந்த கோவைபழம்போல உதடுங்கிறது,

“ *த்³யுமணி”* அப்படினு அழகான ஒரு வார்த்தைய use பண்றார். *த்³யுமணி”* னா பகலை உண்டாகிற மணி, அதாவது சூரியன்.

இந்த கோவைப்பழம் போல இருக்குற உதடு சூரியன் மாதிரி இருக்கு.

அந்த சூரியன் பக்கத்துல இருக்கற இந்த மந்தஸ்மித சந்திரிகை, ரொம்ப சூரியன்பக்கத்துல சந்திரன் இருந்தா தெரியவே தெரியாது, ஆனா அந்த சந்திரன், மந்தஸ்மித சந்திரன், அந்த சூரியன் பக்கத்துல இருக்கும் போது கூட ரொம்ப அழகா ஒளிவிடுகிறது, அப்படினு சொல்றார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 326* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
ravi said…
இங்கே வராதே. உனக்கு அடைக்கலம் கொடுத்தால், இந்திர லோகமே ராம பாணத்துக்கு இரையாகி விடும்!” என்று
சொல்லிக் கதவடைத்தான் இந்திரன்.

மற்ற தேவர்களின் உலகங்களுக்கெல்லாம் சென்று அடைக்கலம் தேடிய காகத்துக்கு
யாரும் அபயம் அளிக்கவில்லை.

எத்திசையும் உழன்றோடி இளைத்து, இறுதியில் ராமனின் திருவடிகளிலேயே வந்து விழுந்தது.

அதிலும், கால்கள் இரண்டையும் ராமனை நோக்கி நீட்டியபடி வந்து விழுந்தது.

தன்னிடம் பிழை இழைத்ததையும் பொருட்படுத்தாத சீதை,
அந்தக் காகத்தின் மேல் கருணை கொண்டு, அதன் தலை ராமனின் திருவடிகளில் படும்படிக் கிடத்தி,

“இதோ சரணாகதி செய்த இந்தக் குழந்தையை மன்னித்தருளுங்கள்!” என்று வேண்டினாள்.💐💐💐
ravi said…
79

காலாஞ்ஜன ப்ரதிபடம் கமனீய காந்த்யா
கந்தர்ப தந்த்ரகலயா கலிதானுபாவம் |
காஞ்சீ விஹார ரஸிகே கலுஷார்தி சோரம்
கல்லோலயஸ்வ மயி தே கருணாகடாக்ஷம் ||79||

காஞ்சீயில் விளையாடிக் கொண்டிருப்பதில் விருப்பமுள்ளவளே! தன்னுடைய அழகுள்ள காந்தியால் கருத்த கண்மைக்கு ஒத்ததாயும், காமசாஸ்திர ஞானத்தினால் உண்டாகும் பாவங்களோடு கூடியதும் , பாபத்தினால் தோன்றும் துன்பங்களை போக்குவதுமான உன் கருணை நிறைந்த கடைக்கண் பார்வை ஒளியை(கடாக்ஷம்) என்மீது அலைபோல் பாயும்படி செய்வாயாக!
ravi said…
🌹🌺 *எதிலும் எப்பொழுதும் சமநிலை* .... *இதுவே கீதாச்சாரனின் வாழ்க்கை முன்னிலை* ….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹‘“ மன்னன் இளங்கோவன் வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.

🌺நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள்...
ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.

🌺நமசிவாய என்றார் ஒருவர்.
ஓம் சக்தி என்றார் மற்றவர்.
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் இளங்கோவன் திருப்தியாகவில்லை .

🌺எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான்.

🌺அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

🌺மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது.

🌺இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.சில வருடங்களுக்குப்பின்...
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

🌺தயார் நிலையில் இல்லாததால் மன்னன் இளங்கோவன் தோற்றுப் போனான்.
நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன்...

🌺தூரத்தில் ஒரு மலையினை கண்டான்...இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான்.

🌺தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், வேங்கடவா....என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான்.
, மந்திரி, பிரதானிகள்...
ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...

🌺மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

🌺தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன் இளங்கோவன்.

🌺"மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன்.

🌺மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.

🌺இறுதியாக மன்னன் இளங்கோவன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.

🌺அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “

🌺மன்னன் இளங்கோவன் , “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.

🌺உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.அதில் அதே மந்திர வாசகம் இருந்தது."இந்த நிலை மாறும்..."எதிலும் எப்பொழுதும் சமநிலை.... இதுவே கீதாச்சாரனின் வாழ்க்கை முன்னிலை💐🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…

🌺அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

🌺“மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”

🌺இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

🌺மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்...

🌺ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான்...

🌺*"இந்த நிலை மாறும்..."*🌹

🌺அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான்.

🌺தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்...

🌺தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

🌺அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

🌺மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான்...

🌺நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது...
அரண்மனையில் மக்கள் கூட்டம்..
அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள்
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*சிவாயநம*
*நமோ நாராயணா*


2391 வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து (11)

2400 நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை (20)
*நமோ நாராயணா*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
ravi said…
அவனருளால் அவன் தாள் வணங்கி என்பார்கள்

அவன் அருள் இல்லாவிடில் நம்முடைய தலை
இறைவனின் திருவடிகளில் வணங்காது

இறைவனுக்கு பதி என்று பெயர்

பதி என்றால் தலைவன்.

தலைவன் என்றால்
நம்முடைய தலையில் இருப்பவன்.

நாமே எழுதிக்கொண்டே தலைஎழுத்தை
மாற்றவல்லவன் அவன்தான்

தலை எழுத்து மாற வேண்டுமென்றால் "ராம"என்ற
இரண்டெழுத்தைசொல்ல வேண்டும்.


அதனால்தான் அந்த இறைவன்
நமக்கு நினைவுபடுத்தும் பொருட்டே
மலைகளின் உச்சியில்
சிலையாய் வந்து நின்று நிலையாய்
அதனுள்ளே வாசம் செய்கின்றான்.

நமக்கு துன்பங்களை கொடுத்து துவளச் செய்து
அவனிடம் வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றான்

அப்போதும் நாம்
அவனை நினைப்பது கிடையாது.

மாயத் திரையை அகற்றி நமக்கு
மரணமில்லா வாழ்வு அளிக்க
அவன் காத்திருப்பதை அறியாது
மாத்திரைகளை விழுங்கிவிட்டு
மருத்துவர்களின் தரிசனதிர்க்காக
பல மணி நேரம் காத்திருக்கிறோம்.

அடுத்து அவர் எழுதி தரும் பரிசோதனைகளுக்காக
பல ஆய்வு கூடங்களில் காத்திருந்து
காசை அழுதுவிட்டு வருகிறோம்.

அப்போதும் நம் நோய்கள் தீருவதில்லை.மாறாக புது புது நோய்களாக அவைகள் மீண்டும் மீண்டும் நம்மை பாடாய் படுத்தி கொண்டு வருகின்றன. இந்த உடலில் உயிர் உள்ள வரை

நம்மை கடைதேற்ற காத்திருக்கும்
அந்த வெங்கடாசலபதி

ஆனால் அவன் யாரிடமும்
குறை காணாத கோவிந்தனல்லவா!

அவனருள் பெற அவனின்
தாள்களை வணங்க நம் மனதை
அவன் திருவடிகளில் முழுவதுமாக ஒப்படைப்போம்.

அண்ட சராசரங்களை ஆச்சரியப்படக்கூடிய வகையில்
நிர்வாகம் செய்யும் அந்த பரப்ப்ரம்மமாகிய ஸ்ரீராமன்
எந்த கணக்கிலும் வராத ஜீவாத்மாவாகிய
நம்மையும் ஒரு பொருட்டாகக் கருதி
காப்பாற்றுவான் என்பது சத்தியம்.

சாரங்கபாணியின் திருவடிகளில்
சராணகதி செய்வோம்
சங்கடமின்றி வாழ்வோம்!

#mahavishnuinfo
ravi said…
#அந்த_மலைவாசி_யாரு_தெரியுமோ!?

கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினி பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்த அந்த சமயத்துல ஒரே ஒரு பொம்மனாட்டி மட்டும் ரொம்பவே சோர்வா, அசிரத்தையா இருக்கிறமாதிரி நின்னுண்டு இருந்தா,

முப்பது முப்பத்தஞ்சு வயசுதான் இருக்கும் அவளுக்கு. அம்பது அறுபது வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு இருக்கறச்சே, அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, "அதோ அவளைப்பாரு…பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம. இவளை யார்னா இங்கே வரச் சொன்னா?” அப்படின்னு முணங்கினா. அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா, ஆனா, அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார் பரமாசார்யா. கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு. அருள்ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும் ஒருதரம் பார்த்துட்டு, அந்தப்பெண்ணை கூப்பிடச் சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பெண், “சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!” கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

“வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!” என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும் சொல்ல ஆரம்பிச்சா, ”என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல இருந்தார். ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர் செத்துப் போயிட்டார்னும் எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா! எனக்கு லோகமே இருண்டுடுத்து. இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன் . அவரோட ஆன்மா சாந்தி அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன். இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது தப்புதான். மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து கேட்டுக்கிறேன்” கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.

சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா. அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவமேல பரிதாபப்பட, மெதுவா நடந்து வெளில போகத்தயாரானா, அந்தப் பெண்மணி.

“ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்” பெரியவா குரல் கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா.

ravi said…
கை நடுங்க, உடல் சிலிர்க்க,கண்ணுல ஜலம் முட்டிண்டு வழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகாபெரியவாளே அப்படிச் சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா?

எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம், புடைவை, ரவிக்கைத் துணி, திருமாங்கல்யச் சரடு, புஷ்பம்னு எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.

ஒரு வாரம் முடிந்து அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா, அதே பெண்மணி.

“பெரியவா…ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும் நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார். இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த இவர். எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு விழுந்துட்டாராம்.இவர் செத்துட்டதா நினைச்சு, இழுத்துண்டுபோய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப் போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம் தேடி அலைஞ்சுட்டு, உடலும் கிடைக்காததால இறந்துட்டதா தகவல் சொல்லிட்டா.

ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்சநஞ்சம் உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலைஜாதிக்காரர் பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க வைச்சிருக்கா. விழிச்சு எழுந்ததும், அவாளுக்கு நன்றி சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டார்.
அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான் மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தி யிருக்கேள்” தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா , ”மலைவாசின்னா யாரு? சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன் தான். மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தியிருக்கான். அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும் வராது. க்ஷேமமா இருங்கோ!” கை நிறைய குங்குமத்தைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு, ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி..

ஜய ஜய சங்கர...
ஹர ஹர சங்கர..

காஞ்சி சங்கர ..
காமகோடி சங்கர...

ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...

இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்.
ravi said…
80

க்ரான்தேன மன்மததேன விமோஹ்யமான-
ஸ்வான்தேன சூததரு மூலகதஸ்ய பும்ஸ: |
காந்தேன கிஞ்சிதவலோகய லோசனஸ்ய
ப்ராந்தேன மாம் ஜனனி காஞ்சிபுரீ விபூஷே ||80||

காஞ்சீ நகருக்கு அணியாக இருக்கும் காமாக்ஷியே! ஆம்ரவிருஷத்தின் அடியில் வஸிப்பவரான ஏகாம்ரநாதனுடைய சேர்க்கையால் ஏற்பட்ட காமவேகத்தினால் மோஹமடைந்த மனதோடு கூடியதும், அழகுள்ளதுமான உன்கடைக் கண்ணால் என்னை சிறிது கடாஷிப்பாயாக! .
ravi said…
அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவனே

பேரண்டத்தை இயக்குபவனே

அரியின் அருளின் சாராம்சமாக நீயன்றோ,

உன் பாதங்கள் வணங்குவதில் ஏதும் தவறுண்டோ ?

தீய சிந்தனைகளை அழிப்பவன் நீயன்றோ

இந்த அண்டத்தை ஆள்பவன் நீ அன்றோ ,

அரி அரனின் புதல்வனே உனையே சரணடைந்தோம்.

சரண் அடைவோரின் பாடலை விரும்புவன் நீ அன்றோ ,

பக்தர்களின் மனதில் நிறைந்தவன், நீ அன்றோ

பக்தர்களை ஆள்பவனும் நீயே அன்றோ

ஆடலை விரும்புபவன்.நீ அன்றோ

உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவன் நீயே அன்றோ

உயிர்களின் வேந்தன்,நீ அன்றோ

அரி அரனின் புதல்வன், உனையே சரணடைந்தோம்.

உண்மையின் உணர்வாக இருப்பவன் நீ அன்றோ

எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவன் நீயே அன்றோ

பேரண்டத்தைப் படைத்தவன் நீ அன்றோ,

சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவன் நீயே அன்றோ.

ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீயே அன்றோ

பக்தர்களின் பாடல்களை விரும்புபவன் நீ அன்றோ .

அரி அரனின் புதல்வனே, உனை சரணடைந்தோம்.

உண்மையின் உணர்வாக இருப்பவன் நீ அன்றோ ,

எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவன் நீயே அன்றோ

பேரண்டத்தைப் படைத்தவன் நீ அன்றோ

சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவன் நீயே அன்றோ.

ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீ அன்றோ

பக்தர்களின் பாடல்களை விரும்புபவன் நீயே அன்றோ .

அரி அரனின் புதல்வனே உனையே சரணடைந்தோம்.

குதிரையை வாகனமாகக் கொண்டவன் நீ அன்றோ

அழகிய திருஉருவம் கொண்டுள்ளவன் நீயே அன்றோ ,

ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவன் நீ அன்றோ,

ஒய்யாரமானவன் என்னுடைய குரு நீயே அன்றோ .

பக்தர்களின் பாடல்களை விரும்புபவன் நீ அன்றோ,

அரி அரனின் புதல்வனே, உனை சரணடைந்தோம்.

மூவுலகாலும் வணங்கப்படுபவன் நீ அன்றோ

கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவன் நீயே அன்றோ,

சிவனின் உருவமாக இருப்பவன் நீ அன்றோ,

தேவர்களால் வணங்கப்படுபவன் நீயே அன்றோ ;

உன்னை தினமும் மும்முறை வணங்குகிறோம்.

எங்கள் மனம் நிறைந்தவன் நீ;

அரி அரனின் புதல்வனே உன்னை சரணடைந்தோம்.

அச்சத்தை அழிப்பவன் நீ அன்றோ,

செழிப்பை கொணர்பவன் நீயே அன்றோ,

இந்த அண்டத்தை ஆள்பவன் நீ அன்றோ,

திருநீற்றை ஆபரணமாக அணிந்தவன் நீயே அன்றோ

வெள்ளை யானையை வாகனமாக கொண்டவன் நீ அன்றோ.

அரி அரனின் புதல்வனே, உனை சரணடைந்தோம்.

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவன் நீ அன்றோ ,

அழகிய திருமுகத்தை உடையவன் நீயே அன்றோ

இளமையும், மென்மையும் உடையவன் நீ அன்றோ .

சொக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவன் நீயே அன்றோ.

அரி அரனின் புதல்வனே, உனை சரணடைந்தோம்.

பக்தர்களால் நேசிக்கப்படுபவன் நீ அன்றோ,

பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவன் நீயே அன்றோ ,

வேதங்களால் துதிக்கப்படுபவன் நீ அன்றோ ,

ஞானியரை ஆசிர்வதிப்பவன் நீ அன்றோ

வேதங்களின் சாராம்சம் நீயே அன்றோ;

தெய்வீக இசையை ரசிப்பவன் நீ அன்றோ.

அரி அரனின் புதல்வனே,

சபரி விடுத்தே காஞ்சி வந்தனையோ காரூணியம் பம்பா நதி என பாய்ந்து வர அடித்து செல்லும் எங்களை தாய் என அணைத்து க் கொண்டனையோ

உனை சரணடைந்தோம். மணிகண்டா 🙏🙏🙏
ravi said…
கண்ணா* ....

மேகம் போன்று கருத்திருப்பாயோ நீ

மஞ்சள் நிற பட்டாடையை
உடுத்திருப்பாயோ நீ

மார்பில் ஸ்ரீவத்ஸம் பதிந்திருக்குமோ *கண்ணா* ?

கழுத்தில் தொங்குமோ கௌஸ்துபம் *கண்ணா* ?

ஜொலிக்குமோ உன் மார்பில் *கண்ணா* ?

புண்ணியங்களின் இருப்பிடமோ நீ *கண்ணா*

விழிகள் தாமரையோ *கண்ணா*

அங்கே தேனீக்கள் தேன் உண்ண வருமோ *கண்ணா*

எல்லா லோகங்களுக்கும் தலைவன் நீயன்றோ *கண்ணா* ..

எங்கும் இருந்தும் ஏன் என் நெஞ்சம் தனை விடுத்து எங்கோ சென்றாய் *கண்ணா* ?

உன்னிலும் கள்வன் உண்டோ என்றே காவலுக்கு வைத்தேன் உனையே

நீ இருப்பாய் அங்கே என்றே உறங்கி போனேன் ..

ஐம்புல கள்வர்களை உள்ளே விடுத்து ஏனோ நீ வெளி சென்றாய் ...

கேட்போர் இல்லை என்றே சென்றாயோ ...

தரம் அன்று இவன் என்று எண்ணி சென்றாயோ

பரம் நீ யே என்று எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் *கண்ணா* ..

என்னுள் நீ இருந்து உன்னில் நான் கலந்து ஒருமிப்போம் *கண்ணா* ..

வந்த கள்வர்கள் சிறைப்படட்டும் இல்லை சிரச்சேதம் பெறட்டும் *கண்ணா*...
Kousalya said…
ஆஹா...அருமை அருமை...இப்படி ஒரு அச்சு வெல்லம் போலே அருமையாய் என் மனதில் அமர்ந்து கொண்டு நீ ஆட்சி செய்யும் போது....கண்ணால் கண்டால் கவலைகள் பறந்து போகுமே ..வாய்திறந்து உனை புகழ்ந்தால் என் வாய் தன்யமாகும்....உன்னை மனதார நினைத்தால் என் ஐம்புல கள்வர்கள் அலறிக்கொண்டு அகல்வார்கள்... இது பொய்யல்ல உண்மை என்று உணர்ந்து விட்டேன் கண்ணா...என் சித்த Chora என்னையும் சேர்த்துக்கொள் காருண்ய மூர்த்தியே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹😊💖❣️
Kousalya said…
அருமை... படிப்படியாய் ஏறி மனதை படியவைக்கும் மார்கத்தை அற்புதமாய் அறிய வைத்து காஞ்சியின் காருண்யத்தை அடையும் வழி காட்டினீர்கள்....அருமை..👍👍🙏🙏🙇‍♀️🙇‍♀️
Moorthi said…
அருமையான படிப்பாட்டு வரிகள் 👌👌👏🙏🙏🙏🤲🤲🙏🙏🙏
ravi said…
ஓரடி எனப்பிறந்தேன் ஐயனே

இருமுடி எடுத்தேன்
உன் திருவடி காண

மூன்றடி மண் கேட்டான் ஒருவன்

நான்கடி வேதம் தாண்டி நின்றான் ஒருவன் ..

ஐந்தடியும் எட்டடியும் சேர அங்கே ஜோதி ஒன்று கண்டேன் கண்டபின்

ஆறடி நிலம் தந்தினும் வேண்டேன் ...

ஏழடி மலையப்பன் எழில் தனை படைத்தவன் தாயுமானான் தரணி புகழ் நாயகன் தனை பரணிக்கு தாரை வார்தான் .. சிவமயமாய் சிசு ஒன்று சிரித்து பிறந்ததே


ஒன்பது அடி கோள்கள் என் செய்யும்

பத்தடி பஞ்சடி பாதங்கள் பதினொன்றாய் வேலி போட்டு எனை காக்கும் போதே ..

பன்னிரண்டு கரங்கள் உன் சோதரனாய் சுற்றி வரும் போது

பதிக்கு மூன்றும் பத்தனிக்கு மூன்றுமாய் உள்ள நயனங்கள் என் மீது விழும் போது

பதினான்கு புவனமும் பூக்காதோ எனைக் கண்டே ?

பதினைந்து முறை வலம் வந்தேன் மணிகண்டா

என்றும் பதினாறும் தருவாய் என் அபிராமி போல்

பதினேழு பாவங்கள் என் செய்யும்

பதினெட்டு படியும் ஏறியபின்னே

காஞ்சி வாழ் கருணா மூர்த்தியும் நீயே என்ற பின் மீண்டும் பிறவி வேண்டுமோ எனக்கே மணிகண்டா💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 333* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*வஶ்யா* = கட்டுப்படுதல்

*❖ 120 பக்திவஶ்யா* = தூய களங்கமில்லாத பக்திக்கு வசப்படுபவள்
ravi said…
இங்கே அவள் சகோதரனைப் பற்றி கொஞ்சம் நினைப்போம் .. உரலில் யசோதை அவனை கட்டிப்போட தவிக்கிறாள் .. எவ்வளவு பெரிய கயிறை கொண்டு வந்தாலும் அவனை கட்ட குறைவாகவே உள்ளது .. பக்தி எனும் கயிறை தவிர எதனால் அவனை கட்ட முடியும் ...

பூசலார் மனதில் ஆலயம் கட்டினார் ... பல கோடி செலவில் கட்டிய கோபுரம் ஈசனுக்கு பெரிதாய் படவில்லை ...

கல்லும் மண்ணும் cement ம் இல்லாத கோயிலில் விரும்பி போய் அமர்ந்தான் ஈசன்

சபரியின் எச்சிலில் மதுரம் சுவைத்தான் ராமன் ...

என் மகள் சுகபிரசவம் காண வேண்டுமே இப்படி காவேரி வெள்ளமாய் ஓடுகின்றதே ஈசனே யார் என் மகளை பார்த்துக்கொள்வார்கள் என ஏங்சிய ஒரு தாயை மதித்து தாயகவே வந்தான் ஈசன்

எல்லாம் பக்தி சரணாகதி என்ற கயிறு ஒன்றை வைத்து தான் இறையை நம் பக்கம் திருப்ப முடியும்

அம்பாளை வசியம் பண்ண அவள் திருவடிகளில் நம் கண்ணீர் சிந்துவதன் மூலம் தான் முடியும் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 333* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
89 சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி
ஸகலரோக நிவிருத்தி

நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:

தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ

பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்

தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89
ravi said…
மகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம்.

அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார்.

வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை ' *ஷட்-சரணம்'* என்று கூறுவார்கள்.

இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.💐💐💐
பாக்கியலக்ஷ்மி said…
Namaskaram 🙏🙏
Superb sir
We need thousands of ears and eyes for listening kannan's slogas and ahagu pictures
Jai Sriram
ravi said…
🌹🌺" *நமது குருநாதர் ராமானுஜருக்கு உதவாத ஆபரணங்கள் நமக்கெதற்கு* , *என்று துறந்து விட்டாயா? என்ற கணவன்...விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹 தன் பொன்னாச்சியே (பெண்டாட்டி) கதியாக இருந்த மனிதர், இப்போது ராமானுஜரின் சம்பந்தம் பெற்றதும், மகான்கள் போற்றும் உத்தமராக மாறி விட்டார். எல்லாம் ராமானுஜரின் அருள்தான்.

🌺பொன்னாச்சிக்கும், தானே கதி என்று கிடந்த (பெண்டாட்டி) தாசரை விட, ரங்கனுக்கு தாசனாகிவிட்ட தாசரைத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவர் அழைத்ததும் நொடிகூட தாமதிக்காமல் அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.
ravi said…


🌺அவளைக் கண்ட தாசர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். காரணம் இல்லாமல் இல்லை. பொன்னாச்சியின் உடலில் ஒரு பாதியில் மட்டுமே ஆபரணங்கள் இருந்தது, மற்றொரு பாகத்தில் ஆபரணங்களைக் காணவில்லை.

🌺வலது பக்கத் தோடு இருந்தால், இடது தோடை காணவில்லை. வலது பக்க வளையல் இருந்தால் இடது பக்கத்து வளையலைக் காணவில்லை. ஒரு வேளை அரங்கனை எண்ணிய படியே ஆபரணங்கள் அணிந்து கொண்டதால் , தன்னை மறந்து போய் இவ்வாறு செய்து கொண்டாளோ?.... தாசர் சிந்தித்தார்.

🌺பிறகு மெல்ல நடப்புக்கு வந்தவர்,‘‘என்ன பொன்னாச்சி?, ஒரு பாதி அங்கத்தில் ஆபரணத்தையே காணவில்லை? அணிந்து கொள்ள மறந்து விட்டாயா? நமது குருநாதர் ராமானுஜருக்கு உதவாத ஆபரணங்கள்
ravi said…
நமக்கெதற்கு, என்று துறந்து விட்டாயா?

🌺அப்படி என்றால் ஏன் ஒரு பாதி உடலில் மட்டும் ஆபரணம் அணிந்து கொண்டிருக்கிறாய்?’’ என்று அன்பாக வினவினார். கேட்ட பொன்னாச்சி ‘‘ஓ’’ என்று அழுது கொண்டே, நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

🌺‘‘அரங்கனை வேண்டி விட்டு, உறங்கச் சென்றதுதான் நினைவு இருக்கிறது சுவாமி. பிறகு யாரோ நான்கைந்து பேர் என்னை தீண்டுவது போல உணரும்போதே, விழிப்பு வந்தது...’’‘‘என்ன சொல்கிறாய் பொன்னாச்சி?!’’ தாசர் திடுக்கிட்டார்.‘‘பயம் கொள்ள வேண்டாம் சுவாமி! இருங்கள் நடந்தவற்றை முழுவதுமாக சொல்லி விடுகிறேன்’’.‘‘வேகமாக சொல்!’’ பரபரத்தார் தாசர்.
ravi said…

🌺‘‘அரங்கனை வேண்டி விட்டு, உறங்கச் சென்றதுதான் நினைவு இருக்கிறது சுவாமி. பிறகு யாரோ நான்கைந்து பேர் என்னை தீண்டுவது போல உணரும்போதே, விழிப்பு வந்தது...’’‘‘என்ன சொல்கிறாய் பொன்னாச்சி?!’’ தாசர் திடுக்கிட்டார்.‘‘பயம் கொள்ள வேண்டாம் சுவாமி! இருங்கள் நடந்தவற்றை முழுவதுமாக சொல்லி விடுகிறேன்’’.‘‘வேகமாக சொல்!’’ பரபரத்தார் தாசர்.

🌺பழைய தாசராக இருந்திருந்தால் இந்நேரம், ரங்க மாநகரமே ரெண்டாகி இருக்கும். இப்போது தான் அவர் ராமானுஜதாசராகி விட்டாரே, அதனால் நிதானத்தோடே நடந்து கொண்டார். அதை கவனித்த பொன்னாச்சி மெல்ல உள்ளம் பூரித்தாள். ராமானுஜரின் தாள்களை மனதாற வணங்கிய படியே, தொடர்ந்தாள்.

🌺‘‘விழிப்பு வந்ததும் மெல்ல கண்களைத் திறந்து நோக்கினேன். முகத்தில் துணியை இருக்கக் கட்டிக் கொண்டு, நான்கைந்து ஆடவர்கள் எனது இடது பக்க ஆபரணங்களை கழற்றிக் கொண்டிருந்தார்கள்.
ravi said…
🌺அவர்களை திருடர்கள் என்று நினைத்து, கத்திக் கூப்பாடு போட இருந்தேன். ஆனால், நல்ல வேளையாக எம்பெருமானாரின் அருள் நம்மைக் காத்து விட்டது. எனது நகைகளை கழற்றுவது சாதாரண மனிதர்கள் இல்லை,

🌺மாலவனின் உன்னத அடியார்கள் என்பதை அப்போது நொடியில் உணர்ந்தேன். அதைக் காட்டிக் கொடுத்த அவர்களது உடலில் மின்னும் பன்னிரு திருநாமச் சின்னத்துக்கு மனதாற நன்றி உரைத்தேன்.

🌺பரம வைஷ்ணவர்களான அவர்களுக்கு என்ன பணக் கஷ்டமோ? நம்மிடத்தில் வந்து திருடுகிறார்கள். இந்தப் பாழாய்ப்போன நகைகள், ஒரு வைஷ்ணவரின் குடும்பத்திற்கே உணவிடவாவது பயன்படுகிறதே? என்று உள்ளம் உவந்தேன்.

🌺இப்படி பகவானின் பக்தர்களான அவர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை, நமக்குத் தந்த ராமானுஜரின் சரணங்களுக்கு வந்தனங்கள் செய்தேன். அதற்குள் அவர்கள் உடலின் ஒரு பாதியில் இருந்த நகைகளைக் களைந்து விட்டார்கள்.
ravi said…
🌺மறுபாதி நகைகளும் பகவத் பக்தர்களின் சேவைக்கு பயன்படட்டுமே என்று எண்ணிய நான் மெல்ல தூக்கத்தில் திரும்புவது போல இடது பக்கம் திரும்பினேன். சத்தியமாக அந்த வைஷ்ணவர்களுக்கு நன்மை செய்யவே அவ்வாறு செய்தேன். ஆனால் சில நொடிகளில் நான் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர்ந்தேன்.

🌺ஆம். நான் திரும்பியதைக் கண்டு அவர்கள் பயந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்கள். அந்தோ! நான் கெட்டேன்!, பாகவதர்களை பயமுறுத்திய பாவம் என்னை வந்து அடைந்து விட்டதே! இந்தப் பாவத்தை எங்கே சென்று தொலைப்பேன் என்றே விளங்கவில்லையே.?’’ என்று அழ ஆரம்பித்தாள் பொன்னாச்சி.

🌺எத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்தாளோ தெரியாது. தாசரைக் கண்டு அவரிடம் நடந்ததை சொல்லும் வரையில் பொறுத்திருந்த அவளால், அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ஓவென அழுது விட்டாள். அதைக்கண்ட தாசருக்கு அவள் மீது கருணை வரவில்லை, மாறாக கோபமே பொங்கிப் பொங்கி வந்தது. சினத்தை அடக்கியவர்களே வைஷ்ணவர்கள்.
ravi said…
🌺ஆனாலும், இறைவன் அடியவருக்கு தீங்கு செய்ததைக் கண்டு கோபம் கொள்ளாமல் இருந்தால் தானே பெரும் அபசாரமாகும்.? ஆகவே, தாசரைச் சொல்லிக் குற்றமில்லை. கோபமாக தனது மனைவியை இழுத்துக் கொண்டு ராமானுஜரிடம் ஓடினார்.

🌺அவரோ எப்போதும்போல ஒரு ஆழ்வார் பாசுரத்தை ஜபித்தபடியே ரங்கனை நினைத்துக் கொண்டிருந்தார். அவரெதிரில் , தன் மனைவியைக் கொண்டு நிறுத்தினார் தாசர்.

🌺தாசரைக் கண்ட எம்பெருமானாரது கண்கள் ஆச்சரியத்தில் அகன்று விரிந்தது. ‘‘என்ன பொன்னாச்சி ஏன் அழுகிறாய்? தாசா, என்ன ஆனது வழக்கத்துக்கு மாறாக கோபத்தோடு காணப் படுகிறாயே?.’’ என்று கேட்ட எம்பெருமானாரின் குரலில் கரிசனம் நிரம்பி வழிந்தது.

🌺எம்பெருமானாரின் உத்தரவுக்காக காத்திருந்தார் தாசர். அது அவர் கேட்ட கேள்வியின் மூலம் வெளிப்படவே, மடை திறந்த வெள்ளம்போல நடந்ததைக் கொட்டித் தீர்த்தார்.‘‘இவள்.... (தழு தழுத்துவிட்டு பின் தொடர்ந்தார்) இறை அடியவர்கள் வந்து நகைகளைக் களையும்போது கல்லாக சமைத்திருந்தால் இன்று நான் இப்படி ஒரு அபச்சாரத்துக்கு ஆளாகி இருப்பேனா? இவள் எதற்காக அப்போது இடது புறமாக நகர்ந்தாள்?’’ கொதித்தபடியே மொழிந்தார் தாசர்.
ravi said…

‘🌺‘சுவாமி! வந்த அடியவர்கள் மற்றொரு பாகத்து நகையையும் எடுத்துக் கொண்டு போகட்டுமே என்றுதான் இந்தப் பேதை அப்படி செய்து விட்டேன்! அறியாமல் செய்துவிட்ட பிழை சுவாமி! தயை கூர்ந்து மன்னித்து அருளுங்கள்.’’ பொங்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மொழிந்தாள் பொன்னாச்சி.

🌺‘‘செய்யக் கூடாத பாவத்தை செய்துவிட்டு மன்னிப்பாம் மன்னிப்பு’’ என்று கொக்கரித்த தாசரை எம்பெருமானாரது பார்வை தடுத்தது. தனது எதிரே இருக்கும் இருவரையும் கருணை பொங்க பார்த்து விட்டு, இளப்பமாக தனது இரு புறமும் இருந்த மற்ற சீடர்களை நோக்கினார் எம்பெருமானார். மற்ற சீடர்கள் யாரும் அவரது விழி நோக்கை சந்திக்க சக்தியில்லாமல் தலைகுனிந்தார்கள். எம்பெருமானார் முகத்தில் மீண்டும் இள நகை அரும்பியது.

🌺‘‘எடுத்த நகைகளை கொண்டுவந்து தாசரிடம் கொடுங்கள்!’’ மெல்ல கட்டளை பிறந்தது. பொன்னாச்சியின் நகைகள் அடங்கிய மூட்டையை, எம்பெருமானாரின் முன்னிலையில் வைத்தார்கள், அவரது மற்ற சீடர்கள். நகையை திருடும் நாடகத்தை அரங்கேற்றியதே அவர்தானே! ஆம்.

🌺எம்பெருமானார் தாசருக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார், என்று சீடர்கள் வெதும்பினார்கள். விஷயம் ராமானுஜரின் காதுகளுக்குச் சென்றது. தாசரின் பக்குவ நிலையை, உலகிற்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தார் எம்பெருமானார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹
ravi said…
🌹🌺 "What is the use of ornaments that don't help our guru Ramanuja? Have you given up the husband...a simple story explaining 🌹🌺
-------------------------------------------------- ------🌺🌹 The man who was his Ponnachiye (Pendati) Kathi, now having got Ramanuja's sambandha, has become an uttama admired by saints. Everything is the grace of Ramanuja.

🌺 Ponnachi also liked Rangan's Dasa who had become a Dasa rather than Dasa who had become a Kathi (pentati). So, when he called her, she ran to Arakparaka without delaying even a second.

🌺 Seeing her, Dasar went to the peak of surprise. Not without reason. Only one half of Ponnachi's body was ornamented, while the other half was missing.

🌺If the right side is present, then the left knee is missing. If the right side bracelet is present then the left side bracelet is missing. Perhaps because he wore ornaments as per the stage, he forgot himself and did this?... Dasar thought.
ravi said…

🌺Then the person who came to walk slowly said, "What is Ponnachi?" Forgot to wear it? Have you renounced the ornaments that do not help our guru Ramanuja?

🌺 I saluted Ramanuja's verses for giving us the privilege of serving the Lord's devotees. By then they had removed the jewelry from one half of their body.

🌺Thinking that the other half of the jewels should also be used for the service of Bhagavad devotees, I slowly turned to the left side as if turning in sleep. Truly I did so to benefit those Vaishnavas. But within a few seconds I realized what a great sin I had committed.

🌺Yes. Seeing my return, they were frightened and ran away. Alas! I am damned!, the sin that scared the Bhagavathas has reached me! I don't know where to go to get rid of this sin.'' Ponnachi started crying.

🌺 I don't know how long it was suppressed. She could not wait till she saw Dasar and told him what had happened. Owena cried. On seeing that, Dasar did not feel pity for her, instead his anger flared up. Vaishnavas are the ones who suppress sin.

🌺 However, if the Lord does not get angry at seeing the harm done to the servant, it is a great afasara.? So there is no crime in saying Dasar. Furious, he ran to Ramanuja, dragging his wife.

🌺He too was thinking of Rangan while chanting an Alvar Pasuram as usual. Dasar stood against him with his wife.

🌺Emperumana's eyes widened in surprise when he saw Dasa. "What Ponnachi why are you crying? Dasa, why are you looking so angry?

🌺 Dasar was waiting for the order of Emperor. It was revealed by the question he asked, and he resolved what had happened like an open flood. Why did she move to the left side then?

'🌺'Swami! I did this thing so that the servants who came would take another part of the jewel and leave! Swami made an unknowing mistake! Ponnachi spoke while suppressing her tears.

🌺 Emperumanar's gaze blocked Dasar who shouted, "I will forgive you after committing a sin that should not have been committed". Leaving the two in front of him with compassion, he looked lightly at the other disciples on either side of him. None of the other disciples bowed their heads unable to meet his gaze. Emperumanar's face was once again tinged with youth.

🌺 "Bring the jewels you took and give them to Dasar!" came the slow order. The bundle containing Ponnachi's jewels was placed in front of Emperumanar by his other disciples. He is the one who staged the drama of stealing the jewel! Yes.

🌺 The disciples said that the Lord gives more importance to Dasa. The matter reached the ears of Ramanuja. Emperumanar wanted to show Dasar's mature state to the world.🌹🌺
-------===---======

🌺🌹Sarvam sri Krishnarpanam 🌹🌺
ravi said…
கஷ்டங்கள் தீர்க்கும் ராதாஷ்டமி...

இன்று (04.09.2022 ) ராதாஷ்டமி, ராதை அவத ரித்த இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை பஜனை செய்து பாடுவது மிகவும் நல்ல பலன்களை வழங்கும்.

கவி ஜெயதேவர் காவியத்தில் தன்னை முழுதும் இழந்திருந்தார். வரிவரியாக அதை இழைத்திருந்தார். கிருஷ்ணனின் அன்பும் ராதையும் அர்ப்பணிப்பும் அவர் கவிதைகளில் கரை புரண்டு ஓடின.

ஆற்று வெள்ளத்தில் வீழ்ந்தவர் மீள முடி யாமல் அடித்துச் செல்லப் படுவதைப் போல பக்தி வெள்ளத்தில் வீழ்ந்த அந்தக் கவியும் அதன் ஓட்டத்திலேயே அடித்து செல்லப்படுகிறார்.
ravi said…
காவியத்தில் ஒரு கட்டம். கிருஷ்ணருக்கு ம் ராதைக்கும் சிறு ஊடல். காவியமரபுப் படி கவி கிருஷ்ணராகி ராதையிடம் அன்பு க்காகக் கெஞ்ச வேண்டும். அளவை மீறிக் கொஞ்ச வேண்டும்.

"அடியே ராதே, விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பாதங்களை வைத்து அருள்வாய்'' என்று எழுதுகிறார்.

அவரா எழுதுகிறார்... அந்தக் கண்ணன் அல்லவா அவர் மூலம் எழுதுகிறார். எழுதி முடித்தகணம் கவி தன் சுய நினைவுக்கு மீள்கிறார். அடுத்த கணம், 'என்ன அபசா ரம் செய்துவிட்டோம்,' என்று அலறினார்.

'பகவானின் சிரசில் ராதையின் பாதங்க ளா..' ஜீவாத்மாக்கள் எல்லாம் பற்ற வேண் டியது அந்தப் பரமனின் திருவடியல்லவா... சாதாரண கோபியின் கால்களை அந்த கோகுலன் பற்று வதா என்று வெதும்பி அந்தக் கவி எழுதிய ஏட்டைக் கிழித்தார்.

பண்ணிய பாவத்துக்கு பிராயச்சித்தமாக நதியில் நீராடித் திரும்பலாம் என்று புறப் பட்டுப் போகிறார்.
ravi said…
சிறுது நேரம் சென்றது. பாதிக்குளியலில் திரும்பி வருகிறார். "என்ன பாதி நீராடலி ல் திரும்பும் கோலம்..." மனைவி பத்மாவதி கேட்கிறாள். அதற்குக் கவியோ, "ஒரு கவிதை நினைவுக்கு வந்துவிட்டது. அதை எழுதி வைத்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லி ஏட்டில் எழுதி வைத்துவிட்டு மீண்டும் நீராடச் சென்றுவிட்டார்.

குளித்துமுடித்துத் திருமண் இட்டு அந்த தாமோதரனின் நாமம் சொல்லியபடி வீடு வந்த சேர்ந்தார் ஜெயதேவர், ஏட்டில் ஒரு கவிதை எழுதியிருப்பதைக் கண்டார்.

தான் கிழித்து எறிந்த அதே கவிதை. "யார் ஏட்டில் கவிதை எழுதியது" என்று பத்மாவ தியிடம் கேட்டார். "நீங்கள்தானே பாதிக்கு ளியலில் வந்து எழுதிப்போனீர்கள்." என்று பதிலளித்தார்.
ravi said…
நான் எங்கே பாதியில் வந்தேன்' என்று எதிர்க் கேள்வி கேட்டார். அடுத்த கணம் அவருக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. தான் புறந்தள் ளிய கவிதையை அந்த மாலவன் தன் கரம் கொண்டு எழுதியிரு க்கிறான் என்பதை உண ர்ந்து கொண்டார்.

ராதையின் மேன்மையை உலகுக்கு உண ர்த்த அந்த ஜகன்நாதர் செய்த திருவிளை யாடல் என்பதை அறிந்துகொண்டு ராதையின் புகழை நா தழுக்கப் பாடினார்.

ராதை, கிருஷ்ண பக்தியின் ஆகச்சிறந்த அடையாளம். ராதையின் அளவுக்கு யாராலும் கிருஷ்ணன் மேல் அன்பையும் பக்தியையும் செலுத்த முடியாது. கிருஷ் ணனே ராதையிடம் ஒரு முறை,

"சதா சர்வகாலமும் என் நாமத்தையே சொல்லி க்கொண்டிருக்கிறாயே, அதில் அப்படி என்ன தான் இன்பம் இருக்கிறது..." என்று கேட்டார்.

அதற்கு ராதை, "நீங்கள் ராதையாக மாறி னால் மட்டுமே அதை அறிந்துகொள்ள முடியும்" என பதிலுரைத்தாள் அதை அறிந் துகொள்வதற்கா கவே கிருஷ்ணர் சைத ன்யராக அவதரித்தார் என்று சொல்கிறா ர்கள் பெரியோர்கள்.

ராதை திருமகளின் அம்சம். கண்ணன் அவதரி ப்பதற்கு முன்பாகவே அவதரித்து கண்ணனு க்காகக் காத்திருந்தவள் ராதா. ராதா கண்ண னுக்கு முன்பாக பிறந்து விட்டாலும், கண்ணன் பிறந்தபின்புதான் கண் திறந்தாள் என்று சொல்வார்கள்.
ravi said…
ராதை திருமகளின் அம்சம். கண்ணன் அவதரி ப்பதற்கு முன்பாகவே அவதரித்து கண்ணனு க்காகக் காத்திருந்தவள் ராதா. ராதா கண்ண னுக்கு முன்பாக பிறந்து விட்டாலும், கண்ணன் பிறந்தபின்புதான் கண் திறந்தாள் என்று சொல்வார்கள்.

கிருஷ்ண சிந்தனையே கலியுகத்தில் இருக்கு ம் துன்பங்களைக் கடக்க வழி. கலியுகத்தில் யாகங்களும் தவங்களும் செய்த ல் அரிது. ஆனால் நாம சங்கீர்த்த னம் செய்வ து எளிது.

அதுவும் கிருஷ்ண நாமம் சொல்பவர்க ளை பகவான் ஓடிவந்து காப்பார் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே ராதை, 'கிரு ஷ்ண ஜப' த்திலேயே மூழ்கிக் கிடந்தாள்.

அதன் பலன் கிருஷ்ணனை நினைவுக்கூ ரும் போதே ராதையும் நினைவு கூரப்படு கிறாள். ராதே கிருஷ்ணா என்பதற்கு இணையான உயர்வான நாமம் நாம சங்கீர்த்தனத்தில் இல் லை. அதனால் தான் பாகவதர்கள் தங்களுக்கு ள் 'ராதே கிருஷ்ணா' என்று எப்போதும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ராதை, உத்தரப்பிரதேசம் மதுராவில் இருக்கும் பிரம்மஸரண் என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள பர்ஸானா என்னும் ஊரில் பிறந்தாள். இந்த ஊரில் ராதையை 'ராதா ராணி' என்றே போற்றுகிறார்கள். ராதா ராணிக்கு இங்கு ஓர் ஆலயமும் உள்ளது.

இங்கு வாழும் மக்கள் அனைவரும் தங்க ளை ராதையாகவே பாவிக் கிறார்கள். ஒருவருக் கொருவர் பேசிக்கொள் ளும் போது, 'ராதே, ராதே' என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு கிருஷ் ண பக்தி அங்கு நிறைந்திருக்கிறது.
ravi said…
கிருஷ்ணனைப்போலவே ராதா பிறந்த தும் ஓர் அஷ்டமி தினத்திலேயே. எனவே ராதாவும் கிருஷ்ணரும் வேறு வேறல்ல என்றும் சொல் வார்கள். கிருஷ்ணரின் சக்தி ரூபமே ராதா என்பது நம்பிக்கை.

ராதா அவதரித்த அஷ்டமி யை ராதாஷ்டமி என்று அழைக்கிறார்கள். ராதாஷ்டமி நாளின் நண்பகலில் ராதே கிருஷ்ண வழிபாடு செய்து நாம சங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் உண்டு.

ராதை அவதரித்த இந்த நன்னாளில் அஷ் டபதி பஜனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அஷ்டபதி தெரியாதவர்கள், 'ராதே கிருஷ்ணா' என்னும் நாமத்தை 108 முறை ஜபம் செய்து கிருஷ்ணர் படத்துக் குப் பூ சாத்தி வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை..

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்....
ravi said…
*கந்தர் அலங்காரம் 48* 🐓🦚🙏

*அலங்காரம்-12:*

முருகனின் மயில்! சேவல்! குதிரை?

குசை நெகிழா வெற்றி வேலோன்!

அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,

அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!

அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!

🙏🙏🙏
ravi said…
[04/09, 18:11] Jayaraman Ravilumar: *அலங்காரம் 13*
[04/09, 18:12] Jayaraman Ravilumar: படைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,
தடைபட்ட சேவல்,

சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,
உடைபட்டது அண்ட கடாகமும்!

உதிர்ந்தது உடு படலம்!

உதிர்ந்தது
இடைபட்ட குன்றமும்! மேரு வெற்பும் இடிபட்டவே!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 330*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
இந்த ஸ்லோகத்தை கொண்டு, அந்த பரமேஸ்வரன்ங்கிற சந்திரன், மந்தஸ்மிதம் என்கிற சந்திரிகை, அப்படிங்கிறது, நாம கண்ணால பார்க்கற சந்திரன் இல்ல. இந்த கண்ணால பார்க்கற சந்திரன், பகல்ல ஒளிவிடாது. அது வளர்ந்து, தேய்ந்து, அப்படி ஆயிண்டு இருக்கும். சூரியன் வந்தா மறைஞ்சிடும்.

அப்படிலாம், நம்மோடய material life மாதிரி இருக்கு அது. நமக்கு material life ல ஒரு சுகம், துக்கம்னு மேல, கீழ போயிண்டு இருக்கு. அதுக்கு ஏத்தா மாதிரி நம்மோடய மனசும் ஆடறது. நமக்கு ஒருசுகம் வந்ததுனு நெனைச்சாக்கூட, அத விட இன்னொருத்தர் சுகமா இருக்கார்னு நெனச்சாலே, நம்மோட சுகம் கொறஞ்சி போய்டறது.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 327* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
ravi said…
இவனை மன்னிக்கிறேன். இருப்பினும் இவனை நோக்கி எய்த என் பாணத்துக்கு இலக்காக ஏதோ ஒன்றைத் தந்தாக வேண்டுமே!” என்றான் ராமன்.

“தவறான பார்வை உடையவனான எனது கண்களுள் ஒன்று இந்த பாணத்துக்கு இரையாகட்டும்!” என்று காகாசுரனே கூற,

ராம பாணம் அவனது வலக்கண்ணைப் பறித்தது.

அவன் மேல் கருணை கொண்ட ராமன்,
“உனது வலக்கண் பறிபோனாலும், இடக்கண்ணாலேயே இருபுறமும் பார்க்கும் ஆற்றல் உனக்கு உண்டாகட்டும்!” என வரமளித்தான்💐💐💐.
ravi said…
*வாசல் தெளித்து கோலம் போடுவது பூமி பூஜையே*

*ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.*

*"அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.*

*பணக்காரக் குடும்பத் தினருக்கு, ஒரு நொடி 'சப்'பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,*

*'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' ,* *'ஆயிரக்கனக்கானவர்க்கு* *அன்னதானம் செய்'*
*என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந் தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, 'செய்யப்படுகிறது' என்றனர்.*

*ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.*
*'யாரால் செய்யப் படுகிறது?' என்று வினவினார்.*

*இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.*

*மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக,. "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார்.*

*அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.*

*தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக் கிறாள்.*
*எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.*

*மறவாமல் தினமும் வீட்டின் வாசலில் வீட்டின் பெண்கள் தண்ணீர் தெளித்து கோலமிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுவே சிறந்த குடும்ப சந்தோஷமும் நிம்மதியையும் தரும்.*
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 107* 💐💐💐
ravi said…
माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे

माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।

मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्

माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ

ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே

மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய

அன்யதா³க்²யானஜாதம் ।

மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே

சேதஸாபஹ்னுவானான்

மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ

ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
ஹே மாதவா! ஹே லோகநாதா! புவனபதே! *மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான்க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே*

உன்னுடைய பாதாரவிந்தத்தில் பக்தி இல்லாத *க்ஷீணபுண்யாஹா* - புண்யம் இல்லாத அந்த பாபிகளை நான் ஒரு க்ஷணம் கூட ‘ *க்ஷணமபி மாத்ராக்ஷம்* பார்க்க மாட்டேன்னு சொல்றார்.

உன்கிட்ட பக்தி இருக்கிற அந்த பக்தர்கள் மட்டும் எனக்கு போறும்.

உன்கிட்ட பக்தியில்லாதவனை நான் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன்.🙏🙏🙏
ravi said…
ஓம் நமசிவாய

உயிரும் உடலும் ஆகிய மனிதன் மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா). இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும். புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்
ravi said…
ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
-----------------------------------------------------------

ஓம் - மூச்சி ஒலி (ஆன்மா)

ந - நிலம்,
தேவதை - நீலி,
புலன் - மூக்கு,
ஞானம்-வாசனை,
கரணம்- முனைப்பு

ம - மழை(நீர்),
தேவதை - மாரி,
புலன் - நாக்கு,
ஞானம்-சுவை,
கரணம்- நினைவு
ravi said…
சி - நெருப்பு,
தேவதை - காளி,
புலன் - கண்,
ஞானம்-ஒளி,
கரணம்- அறிவு

வா - வாயு,
தேவதை - சூலி,
புலன் - மெய்,
ஞானம்-உணர்வு,
கரணம்- மனம்

ய - ஆகாயம்,
தேவதை - பாலி,
புலன் - காது,
ஞானம்-ஒலி,
ravi said…
கண்ணா*🦚🦚🦚

கரும்பு சாறு எடுத்தேன்

அதிலே பக்குவமாய் கோடி அண்டாவின் தேன் கலந்தேன்

நாட்டு வெல்லம் நலம் என்றே கோடி மூட்டைகள் அதில் கொட்டினேன் ...

பனங்கற்கண்டு பாதி வியாதி தீர்க்கும் என்றே

கோடி குடம் அதில் சேர்த்தேன்

எட்டிப்பார்த்த முந்திரி எனையும் சேர்த்துக்கொள் என்றே கெஞ்ச

பிஸ்தா, திராட்சை , பாதாம் ,ஏலக்காய் பச்சைக் கற்பூரம் என தன் நண்பர்களையும் சேர்த்து அழைத்து வர

கலவையில் கொட்டினேன் கணக்கின்றி *கண்ணா*

சர்க்கரையும் கற்கண்டும் நாங்கள் தாழ்ந்த சாதியோ ஏன் தவிர்த்தாய் எங்களை என்றே கெஞ்ச

சேர்த்து அணைத்தேன் அவர்களையுமே *கண்ணா*

பார்த்த பசுக்கள் தானாய் அதில் பால் சுரக்க

காத்திருந்த நெய் கண்ணை மூடிக்கொண்டு அதில் குதித்ததே *கண்ணா*

பழங்கள் எல்லாம் பல் இளிக்க சேர்த்தேன் எல்லாம்
சுவை அதிகம் தூக்க

கலந்த கலவை தனில் ஒரு சொட்டு நாவில் குதிக்க

அங்கே உன் நாமம் குழலிசைக்க கண்ணா அதுவன்றோ இன்சுவை ...

கோடி அண்டாக்கள் சுவை சேர்ந்து என்ன பயன் *கண்ணா*

உன் நாமம் ஒன்றிக்கு ஈடாகுமோ *கண்ணா* ...

கோடிகள் குவிந்தாலும் கோமகன் உன்னை மறவேனோ *கண்ணா*

தெருக்கோடிக்கே வந்தாலும் உன் நாமம் அன்றி மாளிகைகள் தேடுவேனோ *கண்ணா*

உன் நாமம் சுவை கண்டோர் எச்சுவை பெறினும் வேண்டோர் அன்றோ *கண்ணா*
ravi said…
சிவப்பு*

*அம்மா*

குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவளே !💐

முக்கண்ணுடையவளே 👀👁️

சிவந்த மாணிக்கத்தை சிரசிலும்,

நட்சத்திரங்களின் நாயகன் சந்திரனை உச்சியில் தரித்தவளே !!

மந்தஹாச புன்னகை சிந்துபவளே 😊😊😊

திண்மையான மார்பை உடையவளே !!

கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தையும்,

சிவந்த மலர்களையும் கொண்டவளே 👌👌👌

சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளே 👍👍👍

சௌந்தர்யம் பொருந்தியவளே 🦚🦚🦚

அம்பிகையே உனை தியானிக்கிறேன்.🪷🪷🪷

சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளே 🌞🌞🌞

அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளே

பாசம், அங்குசத்தை தரித்தவளே

புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளே

அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளே,

ஒளிக்கதிரென மிளிர்பவளே

பெரும் மஹத்துவத்தையுடையவளே

பவானீயே

நான் உனை தியானிக்கிறேன்.💐💐💐

பத்மத்தில் வீற்றிருப்பவளே

ஒளிரும் திங்களென முகமுடையாளே 🌝🌝🌝

தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளே🪷🪷🪷

பொன்னென ஜொலிப்பவளே

பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளே

கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளே,

சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளே

பவானீயே உனை தியானிக்கிறேன் 🙏🙏🙏

குங்குமத்தை பூசியிருப்பவளே

நெற்றியில் கஸ்தூரி திலகம் கொஞ்சத் திகழ்பவளே

மென்மையான புன்னகை சிந்துபவளே

அம்பு-வில்-பாசாங்குசம் ஏந்தியவளே,

எல்லா ஜீவனையும் தன்னிடத்தில் மோஹத்திருக்கச் செய்பவளே,

சிகப்பு மாலை, செம்பருத்தி மலர் சூடி, அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜொலிப்பவளே

அம்பிகையே உனை தியானிக்கிறேன்.🙏🙏🙏

அனுஷத்தில் பெரியவளாய் அவதாரம் எடுத்தவளே ..

புரம் எரித்தவன் தனை விழுப்புரத்தில் தன்னில் சேர்த்தவளே ..

அருளும் கருணையும் *கலவையாய்* நிற்கும் உன் *காலடி* என் சென்னியில் பதியும் நாள் எந்நாளோ ? 👣👣👣👣
ravi said…
வடுவூர் ராமன் திருமஞ்சனம் முடிந்த பிறகு அலங்காரத்தில். வேஷ்டியின் அழகை பாருங்கள். மண்ணார்குடி ராஜகோபாலன் போல் அலங்காரம்.

கம்பன் வரிகள் ஞாபகம் வருகிறது

இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன்.

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப் பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
ravi said…
👌🏻அற்புதம்
எங்கள் உள்ளம் கவர்ந்த
புன்னகை ராமர்
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 334* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*பய = பீதி ஆபஹ* = விலக்குதல்

❖ *121 பயாபஹா* =

பயத்தை களைபவள் - அச்சத்தை அகற்றுபவள்🙏🙏🙏
ravi said…
*121* भयापहा - *பயாபஹா* -

நல்ல நாமம்.அம்பாள் பயத்தை போக்குபவள்.

பயம் ஒன்று தான் மற்ற ஜீவன்களையும் நம்மையும் பிரிக்கிறது.

பயம் நம்மை விட்டு போக வைக்க முடியும்.

அதற்கு உண்டான திறமை, வழி, நம்பிக்கை, நமக்கு புரியும்.

மற்ற ஜீவராசிகள் பயத்தில் வாழ்ந்து முடிகிறது.

பிரம்மத்தை புரிந்துகொண்டவன், தெரிந்து கொண்டவன். பயத்திற்கு அப்பாற்பட்டவன்.

எல்லாம் நானே, நானே ப்ரம்மம்., எல்லாம், பிரம்மமே எல்லாம் என்றால் பயம் எதனிடமிருந்து வர முடியும்.

எது பயம் தரும்?

என்ன இருக்கிறது பயப்பட?

என்னிடம் எனக்கே பயமா? புரிகிறதா?

ஆதிசங்கரரும் சரி, துர்வாச முனிவரும் சரி இருவருமே பயப் பட வேண்டியது அடுத்தடுத்து நிகழும் ஜனனமரணம் பற்றி தான்.

இதிலிருந்து தான் விடுபடவேண்டும் என்கிறார்கள்.👣👣👣👣
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 334* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

89 சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி
ஸகலரோக நிவிருத்தி

நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:

தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ

பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்

தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89
ravi said…
அன்பினர் இரப்பதின் இரட்டி அருள் செய்யும்
நின் பதத் தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்

இன்பம் உறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன் புளகம் மெய்க்களி தழைக்க அருள் தாயே.🙏🙏🙏
ravi said…
அன்புடன் இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியதை விட இரட்டிப்பாக அருளும் நின் பாதத் தாமரையின் இனிமையான தேனில் முழுகும்

என் இதய வண்டின் மெய்சிலிர்ப்பு என்றும் தழைத்திருக்க அருள்வாய் தாயே.🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 108* 💐💐💐
ravi said…
माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे

माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।

मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्

माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ

ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே

மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய

அன்யதா³க்²யானஜாதம் ।

மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே

சேதஸாபஹ்னுவானான்

மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ

ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
*மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம்* –

உன்னுடைய சரிதம்

‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோன்னு’ நம்மாழ்வார் பாடறார்.

அந்த மாதிரி கிருஷ்ணருடைய கதையோ, ராமருடைய கதையோ, இல்ல பக்தர்களுடைய சரித்ரமோ இதெல்லாம் மட்டும் தான் நான் கேட்பேன்.

உன்னுடைய சரிதம் அல்லாத வேற எந்த ப்ரபந்தமா இருந்தாலும் அது ‘ *ச்ராவ்யப³ந்த⁴ம்’ –*

கேட்கறதுக்கு ரொம்ப இனிமையா இருந்தாலும் மனசை கவரக் கூடிய விதத்துல கதை சொன்னாலும் அந்த கதைகளை ‘ *மாஸ்ரௌஷம்* ’ – நான் கேட்க மாட்டேன்னு சொல்றார்.🙏🙏🙏🙏
ravi said…
🌹🌺" *ஸ்ரீமதி ராதா தான் என்னிடம் உள்ள செல்வங்களில் சிறந்தவர்* . *ஆகையால் என்னுடைய சொத்தான அவரை எடுத்துக்கொள்ளுங்கள்* ", *என்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்* .... *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் மற்ற சகிகளுடன் நீராடிக்கொண்டிருந்தனர்.

🌺நீராடி முடித்தவுடன், அவர்கள் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் அங்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். அவர், "எனக்கு திருமண வயதில் ஒரு புதல்வி இருக்கிறாள். என்னிடம் பணம் இல்லாததால் அவளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை. ஆகையால் எனக்கு பண உதவி செய்யுங்கள்", என்று கேட்டார்.

🌺இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், " ஸ்ரீமதி ராதா தான் என்னிடம் உள்ள செல்வங்களில் சிறந்தவர். ஆகையால் என்னுடைய சொத்தான அவரை எடுத்துக்கொள்ளுங்கள் ", என்று பதிலளித்தார்.

🌺இதை கேட்ட பிராமணர் தன் தலையில் அடித்துக்கொண்டு, "என்னுடைய ஒரு புதல்விக்கே திருமணம் செய்ய முடியாமல் நான் தவிக்கின்றேன். நீங்கள் செல்வத்திற்கு பதிலாக இன்னொரு புதல்வியை தருகிறேன் என்று கூறுகிறீர்கள்", என்று கூறினார்.

🌺இதை கேட்ட கிருஷ்ணர், நிலைமை புரிந்து கொண்டு, ஸ்ரீமதி ராதாராணியை தராசின் ஒரு பக்கம் அமர வைத்து, மறுபக்கம் அவரின் எடைக்கு சமமான தங்கத்தை வைத்து, அந்த தங்கத்தை பிராமணருக்கு வழங்கினார்.

🌺மிகவும் மகிழ்ச்சியடைந்த பிராமணர் தன்னுடைய புதல்வியின் திருமணத்தை மிகவும் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடத்தி முடித்தார்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 A simple story explaining that Lord Sri Krishna said "Srimati Radha is the best of my wealth. So take her as my property" 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Once Srimati Radharani and Lord Krishna were taking bath with other Sakis.

🌺After bathing, a poor Brahmin came there while they were decorating. He asked, "I have a daughter of marriageable age. She cannot get married because I don't have money. So help me financially".

🌺 On hearing this, Lord Krishna replied, "Shrimati Radha is the best of all the wealth I have. So take her as my property".

🌺Hearing this, the Brahmin hit his head and said, "I am suffering from not being able to marry one of my daughters. You say that I will give you another daughter in exchange for wealth."

🌺 On hearing this, Krishna, understanding the situation, made Srimati Radharani sit on one side of the scale and put gold equal to her weight on the other side and gave that gold to the Brahmin.

🌺The very happy Brahmin conducted his daughter's wedding very well and lavishly.🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
நீலோத்பல ப்ரஸவ காந்தி நிதர்ஶனேன
காருண்ய விப்ரமஜுஷா தவ வீக்ஷிதேன |
காமாக்ஷி கர்மஜலதே: கலஶீஸுதேன
பாஶத்ரயாத் வயமமீ பரிமோசனீயா: ||82||

ஹே காமாக்ஷி ! கருநெய்தல் புஷ்பத்தின் காந்திக்கு சமமான காந்தியோடு கூடியதும், காருண்யத்தின் அழகினால் விளங்குவதும், கர்மாக்களாகிற ஸமுத்திரத்திற்கு அகஸ்தியராய் இருப்பதுமான உனது பார்வையினால் நாங்கள் மூன்று பாசங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம் !
ravi said…
*ஸ்ரீ மாத்ரே*

*வெள்ளை நிறம்*

வெள்ளை மனம் கொண்டவளே வேழம் தனை தந்தவளே

வெண்காட்டு நாயகியே வெண்நீறும் அணிபவளே

வெண் தாமரையில் வீணை வாசிப்பவளே வெண் சாமரம் ஈசனுக்கு வீசுபவளே

வெண் திங்கள் சிரசில் அணிபவளே வெண் முகில் தனில் வெற்றி முழக்கம் செய்பவளே ..

வேண்டியவர்க்கு வேண்டா வரமும் தருபவளே

மீண்டும் மகானாய் பிறந்ததே வெள்ளை உள்ளம் குழந்தை நெஞ்சம் கொண்டே அருள்பவளே 🪷🪷🪷
ravi said…
கண்ணா ...

வானமென்னும் என் மனமதை வில்லாய் வளைத்தே பக்தி எனும் அம்பு உன் மேல் தொடுத்தேன் கண்ணா

எண்ணற்ற என் எண்ணங்கள் எனும் தாரகை கூட்டம் தனை அழைத்தே சரணாகதி எனும் மாலை தொடுத்தேன் கண்ணா

கரும் மேகங்கள் எனும் என் நெஞ்சமதில் அன்பு எனும் பஞ்சு திரித்தேன் கண்ணா

உள்ளம் தனை பெருங்கோயில் ஆக்கினேன் கண்ணா

ஊனுடம்பு உன் ஆலயம் ஆனதே கண்ணா

என் வாய் அதை கோபுரவாசல் ஆக்கினேன்

உள் செல்வதும் வெளி வருவதும் கண்ணா எனும் உன் நாமம் ஒன்றே அன்றோ கண்ணா 🪷🪷🪷
ravi said…
*கந்தர் அலங்காரம் 47* 🐓🦚🙏

*அலங்காரம்-12:*

முருகனின் மயில்! சேவல்! குதிரை?

குசை நெகிழா வெற்றி வேலோன்!

அவுணர் குடர் குழம்பக்,
கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,

அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு!

அடியிட, எண்
திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே!

🙏🙏🙏
ravi said…
*படைபட்ட வேல்! அவன் பால் வந்த* =

படைகளில் சிறந்த வேலாயுதம்! அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு! அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு!
ஒன்று மயில் = சென்ற பாட்டில்! இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்!

*வாகை பதாகை என்னும்* = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது!

*பதாகை* =கொடி!
தடைபட்ட சேவல் =

அது என்ன தடைபட்ட சேவல்?

சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே!

காலங்கார்த்தால கத்துமே! அப்புறம் என்ன தடை?

போர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன்!

ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்!

அதான் தடைபட்ட சேவல்!
பேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்!🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 331*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
உடுக்கத் துகில் வேணும்,
நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும்…..,
….. உள் இருக்கச் சிறுநாரி வேணும்”. (திருப்புகழ்)

இப்படி…. இது வேணும், அது வேணும்னு கேட்டுண்டு, இந்த உலகத்தில ஒரு குடும்பஸ்தனாகி, பெரிய ஸம்ஸார சக்ரத்தில மாட்டிண்டறோம்.

“க்ருபை சித்தமும் ஞான போதமும்
அழைத்து தர வேணும் ஊழ் பவ
கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே” – (திருப்புகழ்)

அப்படினு முடிக்கறார் அவர். அந்த மாதிரி, இந்த ஸம்ஹாரங்கிற மலைல நம்ப சுத்திண்டே இருக்கறோம். இதிலிருந்து நம்மள விடுவிச்சு….,

“க்ருபை சித்தமும் ஞான போதமும் – ஹே முருகா ! நீ என்னிக்கி கொடுப்பியோ, அந்த நாள் தான் ஒரு நாள்”, அப்டிங்கறார்.
ravi said…
பெரும் தீங்கு இழைத்த என்மீது கருணை காட்டிய சீதையைப் போலக் குணமுடையவள் எவள்?

சரணம் என்று வந்தமையால் பாவியான என்னையும் மன்னித்தருளிய ராமனைப் போன்ற சீலன் எவன்?” என்று காகாசுரன்
விசாரம் செய்யத் தொடங்கினான்.

‘ *கா* ’ என்றால் வடமொழியில் ‘ *எவள்* ’ என்று பொருள். ‘

*க* ’ என்றால் ‘ *எவன்* ’ என்று பொருள்.

சீதையைப் போன்றவள் எவள்?

ராமனைப் போன்றவன் எவன்?-

கா? க?, கா? க? என்று விசாரம் செய்யத் தொடங்கியதால்
அவனையும் அவன் இனத்தையும் ‘ *காக* ’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

அதுவே ‘காகம்’ என்றானது.

காகாசுரன் எவ்வளவு தேடியும், சீதா ராமர்களுக்கு நிகராக மற்றொருவரைக் காண முடியவில்லை.

இப்படி ஒப்புயர்வற்றவராகத் திருமால் விளங்குவதால், அவரை
வேத வியாசர் ‘ *அநுத்தமஹ* ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *81* -வது திருநாமத்தில் அழைக்கிறார்.
“ *அநுத்தமாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ராமனின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.👍👍👍
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 328* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*அனுத்தமோ* துராதர்ஷ:
க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்||9

*81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)* 💐💐💐
ravi said…
பவித்ர மாலையுடன்
பக்தவத்சலப்பெருமாள்..
அக்காரக்கனி.. சோளிங்கர்..
ஸேவிச்சுக்கோங்கோ..

இங்கிருக்கும் சடாரியை
நன்றாக கவனியுங்கள்..
ஆதிசேஷனே சடாரியாக..
இது போன்று எங்கும் கிடையாது..
ஸேவிச்சுக்கோங்கோ..

சென்றால் குடையாம்..
இருந்தால் சிங்காசனமாம்..
நின்றால் மரவடியாம்..
நீள் கடலுள் என்றும்
புணையாம்.. அணி விளக்காம்..
பூம் பட்டாம்.. புல்கும்
அணையாம்.. திருமாற்கு அரவு..

#கோமான் #இரகுநாதன்
ravi said…
சகஸ்ரநாமத்தில் விஸ்வத்தை ஏன் முதலில் வைத்தார்கள்?

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வத்தைத் திரும்பக் கூறினான். அது முடிந்ததும் இப்போது விஷ்ணு என்று மெல்லச் சொல்கையில் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி அவனுக்கு அசதியாக இருக்கும். மறுநாள் பார்க்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே நல்ல வேத வித்துக்களாக வளர்ந்தனர். இந்தப் பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம், புகழ், மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நல்ல வேத வித்துக்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எண்ணினார். அந்த பிராமணர் அதிர்ஷ்டவசமாக வசிஷ்ட முனிவரை சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூற வசிஷ்டர், உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் புரிந்தததினால்தான். மனதாலும், உடலாலும், ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாஸு தேவனை மட்டுமே இது குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் வேறு எதுவும் தேவையில்லை. பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை.

ravi said…
விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம், புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது. வேத வியாசர் மேற்கூறிய கதையைத் தன் கொள்ளுத்தாத்தாவான வசிஷ்டரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதை மனதில் கொண்டே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார்.

சர்வம் விஷ்ணு மயம்
ravi said…
*மறு + உந்து*
=
*'மருந்து"*

உடல் இயங்குவதற்கு தேவையான 'உந்து' சக்தி தான்...
*உணவு*

தவறான உணவுகள்,
தவறான பழக்க வழக்கங்கள்,
மற்றும்
விபத்துகளால்...

உடலில் ஏற்படும் கோளாறுகளால்...
உடல் இயங்க தடுமாறும் போது...

மாற்று அதாவது 'மறு...'
உந்து சக்தி தேவைப்படுகிறது.

அதாவது உணவுக்கு மாற்றாக *வீரியமிக்க உணவு...*

மறு உணவு தான்...

மறு உந்து.

*'மருந்து'*

ஆக,
*உணவே மருந்து*

வீரியம் மிக்க உந்து சக்திகள் தான்...
உண்மையான மருந்து.

*பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் தான்...* உணவே மருந்து.

உடலின்
*கழிவுகளை நீக்கம் செய்வது* பெரும் மருந்து.

*உடற்பயிற்சி செய்வது* தின மருந்து.

*விரதம் இருப்பது* குண மருந்து.

*சிரித்து மகிழ்வது* உற்சாக மருந்து

*தூக்கம்...* ஆக்க மருந்து.

*சூரியஒளி* சிறந்த மருந்து.

*நன்றியுடன், அன்புடன் வாழ்வது* அருமருந்து.

*நல்ல நண்பர்கள்* நல்மருந்து.

*மன சுத்தத்தினால் ஏற்படும் 'மன அமைதி'* அகமருந்து.

*தன்நம்பிக்கை* ஒரு நித்ய மருந்து.

*அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது* 'கருணை' எனும் உயரிய மருந்து.

"எண்ணம் போல் வாழ்வு" என்ற இயற்கையின் நியதி படி
*நல்ல எண்ணங்கள்* தான் நல்ல மருந்து.

மொத்ததில்
*இயற்கையுடன் இணைந்து...*
*இயல்பாய் வாழ்வதே* நிறை மருந்து.

*இதை ஏற்றுகொண்டு வாழ்பவர்களுக்கு...*

*தேவையில்லை ரசாயன (நச்சு) மருந்து*

ஆகவே,
*இயற்கையோடு இணைவோம்🙏*

*இனிய வாழ்வு பெறுவோம்*🙏

*நன்றி!🙏*
ravi said…
🌹🌺" *உண்மையான தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்களது குழந்தைகளை மீண்டும்..மீண்டும் பிறக்காமல் செய்வதாகும்.....விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹 தாயின் பணி தந்தையை சுட்டிக்காட்டுதல். தந்தையின் பணி குருவை சுட்டிக்காட்டுதல் .குருவின் பணி தெய்வத்தை சுட்டிக்காட்டுதல் என்ற பொருளிலும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

🌺ஒரு தாயின் கடமை குழந்தையை பெற்றெடுத்து பால் கொடுப்பது மட்டுமல்ல .அந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும் பொருட்டு அவனது தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பது ஆகும்.

🌺அது போல தந்தையானவர் தனது மகனுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து காலப்போக்கில் ஒரு திறன் வாய்ந்த குருவிடம் தனது மகனை ஒப்படைக்கிறார்.

🌺அந்த குருவானவர் ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை தனது சீடனுக்கு அறிவுறுத்துகிறார். இதுவே மாதா பிதா குரு தெய்வம் இதன் விளக்கமாகும்.. இதை ஏறுமுகமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்

🌺உண்மையான தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்களது குழந்தைகளை மீண்டும் பிறக்காமல் செய்வதாகும்..

🌺அதாவது தனது குழந்தையின் வடிவில் உலகில் பிறந்துள்ள ஜீவன் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகளைச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய வேண்டியது தாய் தந்தையரின் தலையாய கடமை.

🌺குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து உலக வாழ்வில் அவர்களை புகுத்தி .ஆன்மீக பாடங்களை கற்றுக் கொடுக்காமல். சாதாரண மிருகங்களைப் போல உணவு உறக்கம் பாலுறவு தற்காப்பு போன்றவற்றை மட்டும் பயிற்றுவிப்பாளராக பெற்றோர்கள் இருக்கக்கூடாது...

🌺நாம் குரு என்று பார்த்தோமானால் ஆன்மீகக் கல்வியை வழங்கும் ஆன்மீக குருவை குறிக்கிறது .பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகள் மறு பிறவி எடுக்காமல் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமோ. அதே போன்ற பொறுப்பும் கடமையும் குருவிற்கு உள்ளது.

🌺அதாவது தாயைக் காட்டிலும் தந்தைக்கு பொறுப்பு அதிகம். தந்தையைக் காட்டிலும் குருவுக்கு பொறுப்பு அதிகம். அனைவரை காட்டிலும் கடவுள் மிகுந்த அன்புடன் உள்ளார்.

🌺யாரொருவர் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைகிறாரோ அவர் தனது தாய் தந்தைக்கு உரிய மரியாதை கொடுத்தார் என்பதாகும்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹

ravi said…
🌹🌺 "The main duty of true parents is to make their children not born again..again.....A simple story that explains 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 A mother's job is to point to the father. Father's mission is to point to Guru. Guru's mission is to point to God.

🌺A mother's duty is not only to give birth to a child and give milk, but also to introduce the child to the father and hand over the child to the father in order to help the child's smooth development.

🌺Like a father teaches his son new things and in time entrusts his son to a skilled guru.

🌺 That guru instructs his disciple on the path to attain God through spiritual wisdom. This is the explanation of Mata Pitha Guru Deiva.. We have to know this gradually

🌺The main duty of true parents is to prevent their children from being born again..

🌺 That is, it is the primary duty of the parents to do whatever help is necessary so that the life born in the world in the form of their child does not take birth again in this world.

🌺 Pampering children too much and introducing them to worldly life without teaching them spiritual lessons. Parents should not be only instructors of food, sleep, sex, self-defense like normal animals...

🌺If we see guru it means spiritual master who gives spiritual education.How parents should try to prevent children from taking rebirth. Guru has similar responsibility and duty.

🌺 That means father has more responsibility than mother. Guru has more responsibility than father. God is the most loving of all.

🌺One who surrenders completely to Krishna means that he has given due respect to his parents.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 335* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
❖ *122 ஷாம்பவீ* =

சிவனின் துணைவியானவள்-சாம்பவீ ( சிவனின் இன்னொரு ரூபம் 'சம்பு')💐💐💐
ravi said…
சிவனை சம்போ, சம்பு என்பதால் சிவை சாம்பவி என்ற நாமம் பெறுகிறாள்.

பக்தர்களுக்கு எல்லா சௌகர்யங்களையும் அருள்பவள்.

குண்டலினி வழிபாட்டில் *சாம்பவி* *முத்திரை* என்று ஒன்று உண்டு.

அர்ச்சனை, நைவேத்தியம் எல்லாம் பண்ணும்போது கை விரல்களால் சில முத்திரைகள் காண்பிக்கவேண்டும்.

சக்தி உபாசகர்கள் தீக்ஷை பெறும்போது சக்தி தீக்ஷை, மாந்த்ரீ தீக்ஷை, சாம்பவி தீக்ஷை என்று உண்டு.💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 335* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*90 கற்பகப் பூங்கொத்தாகிய* *பாதம்*
*துர்மந்திரச் சேதனம்*

ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்

அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி

தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90💐💐💐
ravi said…
ஏழை எளியவர்களுக்கு அவரவர்களின் விருப்பத்திற்கு இணங்க செல்வத்தை எப்போதும் அளிப்பதும்,

குறைவின்றி அளவுகடந்த அழகாகிய மகரந்தத்தை இறைப்பதும்,

கற்பகத்தின் பூங்கொத்தைப் போல் மங்கலவடிவாகியதும் ஆன உன்னுடைய இப்பாத கமலங்களில் புகுந்து உறைவதும்,

மனத்துடன் கூட இந்திரியங்கள் ஆகிற கால்களைக் கொண்டதுமான ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை என்னுடைய ஜீவன் அடையட்டும்.🪷🪷🪷
ravi said…
ராமாயணத்தில் காக்காசுரன் சீதையை தொந்தரவு செய்த கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ..

ராமர் ஒரு தர்பையை எடுத்து அதில் பிராமஸ்திர மந்திரத்தை சொல்லி அந்த காக்கையை தண்டிக்கிறார் ... பிரம்மாஸ்திரம் காக்கையை விடாமல் துரத்துகிறது..

கடைசியில் சீதை ராமரிடம் சரண் அடைகிறது தன் இரு கால்களையும் பரப்பிக்கொண்டு ..

சீதை அதை வாஞ்சையுடன் தடவி கொடுக்கிறாள் ..

ஸ்ரீ மாதா அல்லவா? காரூண்யம் கடல் போல் பொங்கி வழிந்தது ..

இந்த குழந்தை நாம் தான் கதி என்று நம்மை சரண் அடைந்து விட்டான் .. இவனை மன்னித்து விடுங்கள் என்று ராமனிடம் சொல்கிறாள் ...

ராமன் காக்கையின் ஒரு கண்ணை பறித்து பிரம்மாஸ்திரத்தின் பசிக்குத் தருகிறார்

காக்கைக்கு அம்மாவாசை அன்று அதை எல்லோரும் வேண்டி அழைக்கும் உயர்வை தருகிறார்

----2
ravi said…
பெரும் தீங்கு இழைத்த என்மீது கருணை காட்டிய சீதையைப் போலக் குணமுடையவள் எவள்?

சரணம் என்று வந்தமையால் பாவியான என்னையும் மன்னித்தருளிய ராமனைப் போன்ற சீலன் எவன்?” என்று காகாசுரன்
விசாரம் செய்யத் தொடங்கினான்.

‘ *கா* ’ என்றால் வடமொழியில் ‘ *எவள்* ’ என்று பொருள். ‘

*க* ’ என்றால் ‘ *எவன்* ’ என்று பொருள்.

*சீதையைப் போன்றவள் எவள்?*

*ராமனைப் போன்றவன் எவன்?-*

*கா? க?, கா? க?* என்று விசாரம் செய்யத் தொடங்கியதால்
அவனையும் அவன் இனத்தையும் ‘ *காக* ’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

அதுவே ‘ *காகம்* ’ என்றானது.

காகாசுரன் எவ்வளவு தேடியும், சீதா ராமர்களுக்கு நிகராக மற்றொருவரைக் காண முடியவில்லை.

இப்படி ஒப்புயர்வற்றவராகத் திருமால் விளங்குவதால், அவரை
வேத வியாசர் ‘ *அநுத்தமஹ* ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *81* -வது திருநாமத்தில் அழைக்கிறார்.

“ *அநுத்தமாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ராமனின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.👍👍👍
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 109* 💐💐💐
ravi said…
माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे

माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।

मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्

माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ

ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே

மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய

அன்யதா³க்²யானஜாதம் ।

மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே

சேதஸாபஹ்னுவானான்

மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ

ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
உன்னுடைய சரிதம் அல்லாத வேற எந்த ப்ரபந்தமா இருந்தாலும் அது ‘ *ச்ராவ்யப³ந்த⁴ம்’ –* கேட்கறதுக்கு ரொம்ப இனிமையா இருந்தாலும் மனசை கவரக் கூடிய விதத்துல கதை சொன்னாலும் அந்த கதைகளை ‘ *மாஸ்ரௌஷம்* ’ – நான் கேட்க மாட்டேன்னு சொல்றார்.

‘ *மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்* ’

மனதால் உன்னை நினைச்சுண்டே இருக்கணும்.

உன்னை தன் உள்ளத்தில் வெச்சுண்டு இருக்காதவனை ‘ *மாச்மார்ஷம்* ’ – நான் அவாளை நினைக்கக் கூட மாட்டேன்.

உன்னை நினைச்சுண்டு இருக்கிரவாளை நான் நினைப்பேன். உன்னை நினைக்காதவர்களை நான் நினைக்க மாட்டேன்னு சொல்றார். ‘ *மாபூ⁴வம் த்வத்ஸபர்யா* *வ்யதிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரேऽபி* ’

உன்னுடைய பூஜை பண்ணாம ஒரு நாளும் இருக்க மாட்டேன்னு சொல்றார்.💐💐💐
ravi said…
அத்யந்த சஞ்சலம க்ருத்ரிமமஞ்ஜனம் கிம்
ஜம்கார பங்கி ரஹிதா கிமு ப்ருங்கமாலா |
தூமாங்குர: கிமு ஹுதாஶன ஸங்கஹீன:
காமாக்ஷி நேத்ரருசி நீலிம கந்தளீ தே ||83||

ஹே காமாக்ஷி ! உனது நேத்ரங்களின் காந்தியான கருமையான சேர்க்கையானது அதிகமான சஞ்சலத்தை உடையதும், பிறரால் செய்யப்படாத மை என்றோ, ஐங்கார சப்தமில்லாத வண்டுகளின் வரிசையென்றோ, அக்னி சம்பந்தமற்ற கருத்த புகை தாரையோ என்று நினைக்கக் கூடியதாயிருக்கிறது !
ravi said…
ஸ்ரீ மாத்ரே*

*நீல நிறம்*

அம்மா உன் அருளும் வெகு நீளம் உன் நிறமும் அதி நீலம்

உடல் நீலமாக்கும் நஞ்சு கொண்ட நாகம் தனை அணிந்திருக்கும் ஈசனின் கண்டம் அதை நீயன்றோ நீலமாக்கினாய் ...

நஞ்சு தனை அமுதமாக்கும் நாயகியே

தேவர்கள் ஏனோ இது தெரியாமல் பாற்கடலை பல காலம் கடைந்தனர் .. தானவரும் வழி இன்றி தவித்தனர்

உன் கை பட்டிருந்தால் வாசுகி என்றோ அமுதம் கக்கி இருப்பாள் மேருவும் உயிர் தப்பி இருப்பான் ...

நீல வானமதில் நீண்ட பயணம் செய்கின்றாய் ...

நிலவின் ஒளியில் அமுத மழை பொழிகின்றாய் ...

மலரும் குவளை தனில் மழலை மொழியில் சிரிக்கின்றாய் ...

காஞ்சி தனில் ஏகாம்பரமாய் ஜகத் குருவாய் நீல மேக சியாமளனாய் நீ இருக்கும் வேளையில் வேண்டுவது ஏதும் எனக்கு உண்டோ என் அபிராமியே 💐💐💐
ravi said…
கண்ணா* ...

நீ பிறந்தது ஒரு சிறை அன்றோ

பின் ஏன் நெஞ்சின் சிறையில் இருக்க மறுக்கின்றாய் *கண்ணா* ?

திருடியது என் நெஞ்சம் அன்றோ ..

சிறை தண்டனை அதற்கு கிட்டும் அன்றோ
*கண்ணா*?

காற்று செல்ல இடம் இல்லை என்றாய்

கருநாகங்கள் விஷம் கக்கும் இடமென்றாய்

குப்பை நிறைந்த பெருங் காடு என்றாய்

உனக்கு குறை ஏது *கண்ணா* .. ?

நிறை தரும் நீ
மறை துதிக்கும் நீ
வரை இன்றி வரம் தரும் நீ

கறை இல்லா என் கண்ணன் நீ
கரை சேர்க்க வேண்டுகிறேன் .

விடையேறும் நாயகனும் நீ

என் கேள்விக்கு விடையாய் வருபவனும் நீ

தடை இன்றி என் நெஞ்ச சிறையினில் இருப்பாயோ *கண்ணா*?

சிறைக்கு மேலே என் கண்கள் எனும் தடாகத்தில் யமுனை ஓடும் *கண்ணா* ..

அதில் என் பாவையாய் என்றும் குளிப்பாய் *கண்ணா*

துடைத்த விட கண்ணின் இமைகள் உண்டு *கண்ணா*

உன் நிறம் ஒத்த புருவம் எனும் நண்பன் உண்டு ...

நெற்றி எனும் மைதானத்தில்

நீ பறித்து தின்ன என் பக்தி எனும் பழங்கள் உண்டு

*கண்ணா* சிறை விடுத்து சொல்லாதே

இது சிறை அன்று *கண்ணா*

நரை கொள்ளும் தேகமதில் என்றும் பதினாராய் வாழும் உன் எண்ணமெனும் என் பிருந்தாவனம்

💐💐💐
Kousalya said…
அருமை அருமை அருமை கண்ணா...சிறை இல்லை .....🙏🙏💖🌹🌹🙇‍♀️🙇‍♀️
Savitha said…
அற்புதம்
ravi said…
https://chat.whatsapp.com/H4dn65T51EQKJZtNCOhnDr

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் பற்றிய பதிவுகள் :*

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான்.

தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.”

அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.

பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.

“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று. ஒவ்வொரு நாள் இரவிலும் இந்திரன் இங்கு வந்து சிவலிங்கத்திற்கு அர்த்தஜாம பூஜை செய்வதாக ஐதீகம்.

கன்னியாகுமரி பகவதியம்மை தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர்.

முன்னமேயே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என பிரம்மன் சாபமிட்டிருந்தான். ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார்.

திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்மை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்கு திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரி கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது "தாணுமாலயத் தீர்த்தம்" என அழைக்கப்படுகின்றது.

கோயிலில் பரப்பளவு - 5,400 சதுர அடி

அரச கோபுரத்தின் உயரம் - 134.5 அடி

அங்குள்ள கல்வெட்டு ஒன்றினால், இவ்வாலயம் 1881-ல் திருப்பணிகள் தொடங்கி 1888-ல் குடமுழுக்கு நடந்ததாக அறிகிறோம். இவ்வாலயம் பாண்டியர் காலக் கலை, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளுக்கு கட்டியம் கூறுகின்றன.

கணபதியை பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை "விக்னேஷ்வரி" என அழைக்கிறார்கள். இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணப்பதியும், அவருக்கு இட பக்கத்தில் அன்னை பார்வதியும் உள்ளனர். இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவகிரகங்களின் சிற்பங்களை மேற்கூறையில் அமைந்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள அனுமானின் சிற்பமும் உள்ளது. இவ்னுமன், கேட்போருக்கு கேட்டதை கேட்டபடி தருபவர்.

நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு லிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.

கலைநயம் கூறும் சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம். இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம். திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம். வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம். பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.

குலசேகர மண்டபத்தின் கீழ்ப்புறத்தில் "அறம் வளர்த்த அம்மன்" கருவறை உள்ளது. சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் அனுமன் நொடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும் போது இச்சிலை கிட்டியதாம். 1929-ல் இப்பொழுது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கருவறையில் தாணுமாலய பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள லிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார். லிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம் உள்ளது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 350* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
அம்பாளை வர்ணிக்கும் விதமே அலாதி ..

சௌந்தர்ய லஹரி சொல்லுவதில் படிப்பதில் ஒரு புதுமை என்னவென்றால் நாமும் சங்கரரைப் போல் குழந்தையாகி விடுகிறோம் ...

இப்படி எல்லாம் கூட நம் தாயை வர்ணிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது ...

அதில் விரசம் இல்லை விவேகம் கிடைக்கின்றது ...

காமம் இல்லை .. அவள் வர்ணனை மேல் காதல் பிறக்கின்றது ...

ஆசை மோகம் இல்லை அன்பும் பக்தியும் இரட்டிப்பாக ஆகின்றது ...

அவள் என் தாய் அவளை வர்ணிக்க எனக்கு உரிமை உண்டு என்ற கர்வம் பிறக்கின்றது... 👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 353* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)
ravi said…
*ஆதார* = பிடிப்பு - அஸ்திவாரம்

*❖ 132 நிராதாரா* = சுவாதீனமானவள் - தன்னிறைவுற்றவள்
Oldest Older 201 – 313 of 313

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை