ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 26.கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா- பதிவு 33

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 33

26 கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா



26 कर्पूरवीटिकामोदसमाकर्षिदिगन्तरा - கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --(1

அவள் இருக்கும் இடத்திற்கு வெகுதூரம் வரை கம்மென்று மணம் வீசுகிறதே அது என்னவா ? 

வேறு ஒன்றுமில்லை.

அவள் மெல்லும் வெற்றிலை தாம்பூலம் அதில் இருந்து வீசும் சுகந்தம்.👍👍👍

கற்பூர = கற்பூரம் 

வீடிகா = வெற்றிலையுடன் மெல்லக்கூடிய பாக்கு மற்றும் இதர நறுமணப் பொருட்கள் 

 மோத = நறுமணம் 

சமாகர்ஷி = பரவலாக மணம் கம்ழதல் 

திகந்தரா= பிரபஞ்சம் 

 = நறுமணத் தாம்பூலம் மென்று பிரபஞ்சமெங்கும் சுகந்தம் பரப்புபவள்🪔



ம்பாள் போடும் தாம்பூலம் அதில் இருந்து சொட்டும் தேன் அதை பருக  மொய்க்கும் வண்டுகள் போல தேவர்கள் ரிஷிகள், கிங்காரர்கள் பல பல மகான்கள் புத்தி மான்கள் இப்படி ஒரு பெருங்கூட்டமே காத்திருக்க 

அவள் என்ன செய்தாள் தெரியுமா ? 

தன்னை கூப்பிடாத ஒருவனை தேடிச் சென்று அந்த மடப்பள்ளி வரதனை காளமேகமாக்கி கவி மழை பொழிய வைத்தாள் ... 

பேசத் தெரியாத ஊமையை 500 பதிகங்கள் பாட வைத்தாள் , 

நுனிக்கிளையில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் முட்டாளை சியாமளா தண்டகம் பாட வைத்தாள் 

அவள் சிந்தும் தாம்பூலம் கலைவாணி யாழ் இசைத்து பாடும் பதிகங்கள் 🪔🪔🪔🪔🪔

கர்பூர வீடிகை என்கிற தாம்பூல ரஸத்தின் சிறப்பான வாஸனையால் (தன்னிடம்) கவர்ந்திழுக்கப்படும் திசைகளைக் கொண்டவள். 

அம்பாளுடைய தாம்பூல ரஸத்தைப் பருகியவர்கள் மிகப் பெரிய கவிஞர்களாவார்கள். 

காளிதாஸர், காளமேகப் புலவர், ஏன், ஆதிசங்கரர்கூட இப்படிப்பட்ட தாம்பூலச் சுவையால் கவித்வ விவேகம் பெற்றவர்கள். 

பத்து திசைகளும் அம்பாளைச் சுற்றிச் சூழ்ந்திருக்கின்றன; 

அம்பாளுடைய தாம்பூலம்தான் தங்களுக்குக் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் அந்த வாசனையாவது கிடைக்கட்டுமே என்று சுற்றிக் கொண்டுள்ளன.



ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அருகே இருக்கிறது அரசவல்லி கிராமம். அங்கே, பண்டைய சூரியனார் கோயில் இருக்கிறது. ஒருமுறை ரதசப்தமியன்று நரசமாம்பா என்ற பெண்மணி சூரியனை வணங்க வந்தார். 

அப்போது ஒருபெண், அவர் கையில் ஒளிவீசும் குடத்தைக் கொடுத்து விட்டு மறைந்தாள். இதன்பின் கருவுற்ற நரசமாம்பா, பிறக்கப்போவது ஆண்குழந்தை என்று உணர்ந்தார்.

அந்த சமயம் காசி சென்ற நரசமாம்பாவின் கணவர் நரசிம்ம சாஸ்திரி, அங்குள்ள விநாயகர் முன்பு கைகூப்பி நின்றார். திடீரென்று அந்த சந்நிதியிலிருந்து ஒரு குழந்தை வெளிப்பட்டுத் தன்னுள் கலப்பதாக உணர்ந்தார். அதே நேரம் நரசமாம்பா ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க குழந்தைக்கு கணபதி என்று பெயரிட்டனர்.

அவரை அனைவரும் 'நாயனா' (தலைவர்) என்று அழைத்தனர். 

பிற்காலத்தில் வாசிஷ்ட காவ்ய கண்ட கணபதி முனி என்ற பெயர் ஏற்பட்டது. 


தான் கணபதியின் அம்சம் என்பதை அவரே தன் எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கணம், இலக்கியத்தில் பிரமிக்கத்தக்க அளவு புலமை கொண்ட நாயனாவுக்கு மந்திர மார்க்கத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. 18 வயதில் திருமணம் ஆனாலும், 

திருத்தலங்களுக்குச் சென்று தியானம் செய்வதிலேயே அவருக்கு விருப்பமிருந்தது. ஒருமுறை புவனேஸ்வரில் இருந்தபோது, கனவில் அம்பாள் வந்து, அவர் நாக்கில் தேன் ஊற்றினாள். அந்தக் கணமே கடல் மடை திறந்தாற்போல் வடமொழியில் கவிதை பாடும் கவியானார். 

அவர் சொல்லச்சொல்ல அவருடைய சீடர்கள் எழுதிக் கொண்டனர்.

என்றும் இளையவள் நீ

என்றும் இருப்பவள் நீ

என்றுமே புதிராய்ச் சிரிப்பவள் நீ!

ஏழ்கடல் அலைகள் போல்

எண்ண முடியாதவள் நீ

என்னுள் தெரிபவள் நீ!

வங்காளத்தில் உள்ள நவத்வீபத்தில் 

மிகச்சிறந்த அறிஞர்கள் பங்குபெற்ற ஓர் அவை கூடியது. 

அங்கே சென்ற நாயனா, சான்றோர்கள் வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்று அவர்களைத் திகைக்க வைத்தார். 

அவர்கள் தான் அவருக்கு காவ்ய கண்ட என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டினர்.

நினைத்த மாத்திரத்தில் நெடுங்கவிதைகளை சொல்லக்கூடிய கவிஞர்' 

என்பது அதன் பொருள். 

அப்போது அவருக்கு வயது 22.


புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்

அன்னையே பார்கவி!

இன்னும் நான் என்சொல்?

இவர் மந்திர சாதனையில் பல சிகரங்களைத் தொட்டார். 

அவருக்கு எல்லா நாட்களுமே நவராத்திரி தான் என்று சொல்லுமளவு அம்பிகையைப் பல 

வடிவங்களில் நேரில் பார்த்தார். 

அவர் இயற்றிய உமா சஹஸ்ரம் உலக பெயர் பெற்றது .. எல்லாம் அம்பாளின் தாம்பூலத்தின் மகிமை 

அம்பாளின் தாம்பூல மகிமை பக்தர்களுக்கு என்னவெல்லாம் தரும் .. பட்டியலை பார்த்தால் தலை சுற்றி மயக்கமே வந்து விடும் 


கல்வி, 

நீண்ட ஆயுள், 

கபடு இல்லாத நட்பு, 

நிறைந்த செல்வம், 

எப்போதும் இளமை, 

பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், 

சலிப்பு வராத மனம், 

அன்பு நீங்காத மனைவி/ கணவன் 

புத்திர பாக்கியம், 

குறையாத புகழ், 

சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், 

எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), 

செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசு, 

துன்பமில்லாத வாழ்வு, 

உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. 


1. விழுத்துணை ? (1)

2. துணையும்,  தொழும் தெய்வமும் பெற்றதாயுமாக வருவாள் ( பாடல் 2) 

3. புத்தியில் வந்து பொருந்தும் தம்பதிகள் ( 3) 

4. பாசத்தொடரை எல்லாம் வந்து வந்தரிப்பவள் (8)

5. மன்னளிக்கும் செல்வம் தருவது மட்டும் அல்லாமல் விண்ணளிககும் செல்வமும் , அழியா முத்தி வீடும் தருவாள் (15) 

6 என் அறிவின் அளவிற்க்கு தன்னையே தாழ்த்திக்

கொள்பவளாய் வருவாள் (16)

7.அவள் பாதங்கள் என் பயத்தை அழித்து ஆண்டு கொண்ட பொற் பாதங்கள் (18)

8.எமன் வரும்போது அவனை என்னிடம் அண்டவிடாது வெளியில் நின்று ரக்ஷிக்கிறாள்(18)

9.மீண்டும் பிறவாமல் என்னை ஆண்டு கொள்வாள்(22) 

10 என் உள்ளத்தே விளையும் கள் அவள் . களிக்கும் களியும் அவளே .. என் கண்மணியும் அவளே (23)


11. பிணிக்கு மருந்தும் அவளே -24 

12.. வஞ்சப் பிறவியை உடைப்பவள் , 27

13.உள்ளம் உருகும் அன்பு படைப்பவள் 27

14 நெஞ்சத்தில் உள்ள அழக்கையெல்லாம் தன் அருட்புனலால்  துடைப்பவள் -- 27

15. அழியா அரசு , செல்லும் தவநெறி ,சிவலோகம் தருபவள் ..28 

16. வானுலகம் தருபவள் 34

17 என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இல்லாமல் ஒளிவெளி ஆகி இருப்பவள் 36

18.அமராவதியை ஆளும் அருள் 38

19 நாம் வாழ்வதற்கு அவள் பாதத் தாமரைகள் உண்டு , எமனிடம் இருந்து தப்பிக்க அவள் விழியின் கடை உண்டு 39 

20 அவள் தன் அடியார்களின் நடு இருக்கக் பண்ணுவாள் ... நம் சென்னியின் மீது அவள் தன் பத்ம பாதம் பதித்திடுவாள் 41

21 மீண்டும் இந்தத் தோலும், ரத்தமும், குடலும், தசையும் கொண்ட உடற்கூட்டை விரும்பிப் பிறக்க மாட்டார்கள் 48

22.. மரணம் பிறவி இரண்டும் எய்தார்...51

23. தேர், குதிரை, மதங்கொண்ட யானை, மாபெரும் மணிமகுடம், நவமணிகளா லான அழகிய பல்லக்கு, பிற மன்னர்கள் கப்பமாகச் செலுத்திய பொற்குவியல், விலைமதிப்பு மிக்க பொன்னாரம் ஆகிய உன் அழகிய அணிகலன் களெல்லாம், 52

24 வண்மை , குலம் கோத்திரம் கல்வி குணம் 67

25 . படையாத தனம் இல்லை 68 


26 தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே 69

27 இந்திர பதவி யையும், ஐராவதம் என்ற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகுந்ததான வச்சிராயுதத்தையும் கற்பகச் சோலையையும் 83

28 பல்வகை இசைக்கருவிகள் முழங்க வெள்ளை யானை  யின் மேல் ஏறிச் செல்லக் கூடிய இந்திர பதவியை அருள் பவள் 91

29 தம்மால் இயன்ற அளவு தொழும் அடியவர்கள் ஏழுலகங்களையும் ஆட்சி புரியக் கூடிய அதிபர்கள் எனத்தக்க அளவில் வளமான வாழ்வைப் பெறுவர்.96

30 அபிராமியன்னையின் மூங்கிலை யொத்த அழகிய நீண்ட திருத்தோள் களும்,

கரும்பு வில்லும், ஆணும், பெண்ணும் ஒருவரை யொருவர் விரும்பக் காரணமாக உள்ள மணம் மிகுந்த அழகிய ஐந்து மலரம்புகளும், 

வெண் முத்தனைய புன்முறுவலும் மானின் கண்ணையொத்த 

திருவிழிகளும் எளியவனாகிய அடியேனின் நெஞ்சில் எப்போதும் குடிகொண் டிருக்கின்றன.  100 

31 அவளை தொழுவோர்க்கு ஒரு தீங்கும் இல்லை 



                                                 👌👌👌👌👌👌👌👌👌👌












Comments

ravi said…
https://chat.whatsapp.com/JGsa4x9TMosCpfQapJIJm9

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முருகனின் 16 வகை திரு கோலங்கள் பற்றிய பதிவுகள் :*

1. ஞானசக்திதரர்:

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி:

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி:

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர்:

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

5. கஜவாகனர்:

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர்:

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர்:

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது

8. குமாரசாமி:

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9.சண்முகர்:

இவரைப் வழிபட்டால் சிவ சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10.தாரகாரி:

'தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தை பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழி செய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11.சேனானி:

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12.பிரம்மசாஸ்தா:

இவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமாரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13.வள்ளிகல்யாண சுந்தரர்:

இவரை வழிபட்டால் திருமண தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்கு கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14.பாலசுவாமி:

இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருகாண்டியூர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15.கிரவுபஞ்சபேதனர்:

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும், திருநெல்லிக்கா, திருக்குறுங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.

16.சிகிவாகனர்:

மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

பராசக்தியின் க்ருபை இருந்தால்தான் ஸத்குரு கிடைப்பதும், அவரிடம் சரணாகதி பண்ணத் தோன்றுவதும். அதைத்தான் “ஸத்க்ருத தேசிக சரணா:…. தவ க்ருபயா” என்று சொல்லியிருக்கிறார்.

ravi said…
இங்கே ஸத்குரு என்பதற்கு “தேசிக” என்ற வாரத்தையையே போட்டிருக்கிறது என்று காட்ட வந்தேன். மோக்ஷ உச்சிக்கு ஏற்றிவிடக்கூடிய சக்தியுள்ளவராக ‘தேசிகர்’ இருக்கிறார்.
அம்பாள் க்ருபையால் தேசிகர் கிடைத்து அவரிடம் சரணாகதி செய்வதையே மூகர் சொன்னாரென்றால், காளிதாஸர் அம்பாளையே தேசிக ரூபிணியாகச் சொல்லியிருக்கிறார். ‘ச்யாமளா தண்டகம்’ பண்ணிய அவர் ‘ச்யாமளா நவரத்னமாலா’ என்ற ஸ்தோத்ரமும் செய்திருக்கிறார். அதில்,
தயமாந தீர்க்க நயநாம் 
தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்
என்று குரு ஸ்வரூபிணியாக அவளைச் சொல்லியிருக்கிறார். ‘
ravi said…
தயமான’ என்பதில் வருகிற ‘தய’வை ‘தர்சிதாப்யுதயாம்’ என்று திருப்பி அழகாக சப்தாலங்காரம்-சொல்லணி- செய்திருக்கிறார்.
ravi said…
அம்பாளுடைய அழகான நீண்ட நேத்ரங்களில் தயை பெருகுகிறது. அப்படி தயாகடாக்ஷம் செய்கிறவள் தேசிக ரூபத்தில் – குரு ஸ்வரூபிணியாக – வந்து அப்யுதயத்தைக் காட்டுகிறாள் என்கிறார். ‘அப்யுதயம்’ என்றால் நல்ல எழுச்சி. ‘ஸூர்ய உதயம்’ என்பதை ஸூர்யன் எழுந்தான் என்கிறோம். ‘உதயம்-எழுச்சி. ‘அப்யுதயம்’ – உயர்வு பொருந்திய எழுச்சி. ‘தர்சித அப்யுதயாம்’ என்பதற்கு இரண்டு தினுஸாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அம்பாள் தன்னுடைய அனுக்ரஹத்தின் மேலான எழுச்சியை பக்தனுக்குக் காட்டுகிறாள் என்பது ஒன்று. இன்னொன்று – பக்தனுக்கு அவனுடைய மேலான அத்யாத்ம எழுச்சியைக் காட்டுகிறாள்; அதாவது ‘தேசிக’ சப்தத்திற்கேற்ப, அவன் ஆத்யாத்மிகமாக உயரே எழும்ப வழிகாட்டுகிறாள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
தயாகடாக்ஷத்தைச் சொல்லி உடனே தேசிக ஸ்வரூபத்தைச் சொல்வதில் நிரம்பப் பொருள் பொதிந்திருக்கிறது.
ravi said…
கண் பார்வைதான் ஒருத்தரை வழிநடத்திச் செல்வது. கண்ணில்லாதவரை வேறெவராவது தானே பிடித்து நடத்திச் செல்லவேண்டியிருக்கிறது? ஆகையால் கண்ணே நம்மை அழைத்துப் போவதாக ஆகிறது. கண் காட்டிக் கொடுக்கும்படிதான் கால் நடப்பது. ‘நயனம்’ என்கிற வார்த்தைக்கும் வழிநடத்திப் போவது, முன்னே சென்று வழி காட்டுவது, ‘லீட்’ பண்ணுவது என்றுதான் அர்த்தம். நம் ஒவ்வொருவருடைய கண்ணும் அவரவருக்குத்தான் வழிகாட்டி அழைத்துப் போகிறது; அம்பாளுடைய கண்ணோ அதிலிருந்து பெருகும் தயா கடாக்ஷத்தால் லோகத்து ஜனங்களையெல்லாம் ச்ரேயோ மார்க்கத்தில் வழிகாட்டி அழைத்துப் போகிறது!
ravi said…
உத்தம குருவாயுள்ள எவருமே சிஷ்யர்களுக்குக் கடாக்ஷ மாத்திரத்தால் தீக்ஷை தந்து நல்வழி நடத்திச் செல்லமுடியும்.*3 அதற்கு ‘நயன தீக்ஷை’ என்றும் ‘சக்ஷு தீக்ஷை’ என்றும் பெயர். சக்ஷு என்றாலும் கண்தான்.
மீநாக்ஷியம்மனை சக்ஷுதீக்ஷை தரும் குருவாகவே மஹான்கள் அநுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ஒரு தாயார்-மீன் தான் இட்ட முட்டையைக் கண்ணால் பார்த்தே பொறிக்க வைத்துவிடும் என்று நம்பிக்கை.
ravi said…
முட்டை பொரிந்ததும் உள்ளேயிருந்த கரு முழு ப்ராணியாகிறது. அப்படியே மீன்போன்ற நயனங்களைக் கொண்ட மீநாக்ஷி ஒருவரைக் கடாக்ஷித்து, சக்ஷு தீக்ஷை கொடுத்தால் அந்த ஜீவனுக்குள்ளே கரு மாதிரி உள்ள ஆத்ம தத்வம் பூர்ணமாக விகஸித்து [மலர்ச்சி கண்டு]விடும்.
மீநாக்ஷியையே மந்த்ர சாஸ்த்ரத்தில் ச்யாமளா என்று சொல்வது. மந்த்ரிணி, மாதங்கி, ச்யாமளா என்ற மூன்று பெயர்களும் மீநாக்ஷியுடையவையே. அவளைக் குறித்துத் தான் காளிதாஸர் இந்த நவரத்னமாலை பாடியது. ஆகையால் அவளுடைய தயா கடாக்ஷத்தை அவர் சொல்லும்போதே குருவாக அவள் சக்ஷு தீக்ஷை தருவதை வ்யங்க்யமாக [மறைமுகமாக]த் தெரிவித்து விடுகிறார். அப்புறம் வ்யக்தமாகவே [வெளிப்படையாகவே] “தேசிக ரூபேணே தர்சிதாப்யுதயாம்” என்று சொல்லிவிடுகிறார்.
ஞானாம்பிகையாக உள்ள அவள் தேசிக ரூபத்தில் எல்லோருக்கும் அருள்புரிந்து நல்லவழியில் போகப் பண்ணும்படி ப்ரார்த்தனை செய்வோம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏


பெரியவா சரணம்


ஹிந்து ஸமூஹத்தின் தோஷம் :தெய்வத்தின் குரல்

எந்த கட்டுப்பாடும் இல்லாத ஹிந்து ஸமூஹந்தான் இந்தப்பெரிய தோஷத்துக்குப் பாத்திரமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற மதஸ்தருக்கு சக்தி வாய்ந்த ஆர்கனைஸேஷன்கள் இருக்கிறமாதிரி நம் ஸமூஹத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்? மடம் என்று வைத்துக் கொண்டு உங்கள் பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு, குரு ஸ்தானம் கொண்டாடிக் கொண்டிருக்கிற என்னால்தான் என்ன ப்ரயோஜனம்? ஆஸேது ஹிமாசலம், இந்த தேசத்தில் எங்கே ஒரு அநாதை ஹிந்து செத்துப்போனாலும் அவன் சரீரத்தை சாஸ்த்ரப்படி ஸம்ஸ்காரம் பண்ணுவதற்கு ஒரு ஏற்பாடு செய்ய எனக்குக் கையாலாகவில்லை. ஆனாலும், இதில் குரு ஸ்தானம் என்ற பெத்த பேர் எனக்கு இருப்பதால், பொறுப்பு எனக்குத்தான் ஜாஸ்தி என்றாவது தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.
ravi said…
என்னால் முடிந்தது, நம் ஸமூஹத்தின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நிஜமாக துக்கப்படுகிறேன். என் வார்த்தையைக் கேட்கக்கூடியவர்கள் என்று தோன்றுகிற உங்களிடம் என்னால் முடிந்தமட்டும் சொல்கிறேன்.

நீங்கள் பாபம் பண்ணினால், அது உங்களைத் திருத்தாமலே ‘குரு’ என்று பேர் மட்டும் வைத்துக் கொண்டிருக்கிற என்னைத்தான் சேரும். எனக்கு நீங்கள் நமஸ்காரம் பண்ணுகிறீர்கள் அல்லவா? அதனால் உங்கள் பாபத்தைப் போக்குகிற பொறுப்பையும் என்னிடந்தான் ஒப்படைக்கிறீர்கள்.

ravi said…
‘அநாதை ப்ரேதம்’ ஒரு பக்கம் இருக்கட்டும் — ஹிந்து ஸமூஹமே அநாதையாக இருக்கிற இப்போது, இந்த ஸமூஹத்தை நாதனுள்ளதாக்கி, அது சாஸ்த்ரப்படி புனிதமாக விளங்கும்படிப் பண்ணவேண்டிய கடமையை நான்தான் கண்ணும் கருத்துமாக ஆற்றியாக வேண்டும்.

இந்த அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்துக்காகத்தான் ஒவ்வோர் ஊரிலும் ‘ஹிந்துமத ஜீவாத்ம கைங்கர்ய ஸங்கம்’ என்று ஆரம்பிக்கச் சொல்லி வந்தேன். அநேக ஊர்களில் அப்படி ஏற்பாடு பண்ணி நன்றாக உருவாகியும் இருக்கிறது. முக்யமாக கும்பகோணத்தில் இந்த ஸங்கம் ரொம்பவும் நன்றாக நடந்து வருகிறது. ஆஸ்பத்திரிக்காரர்களும், முனிஸிபாலிடிகாரர்களும், ஜெயில் அதிகாரிகளுமே இந்த ஸங்கத்துகாரர்களைக் கூப்பிட்டுத் தங்களிடம் சேரும் அநாதை ப்ரேதத்தை ஒப்பிக்கிற அளவுக்கு அங்கே இந்த உத்தமமான தொண்டு வேர் பிடித்துவிட்டது.

ravi said…
இதற்காகத் தனி ஸங்கம் இல்லாவிட்டாலும், அந்தந்த ஊர் பஜனை கோஷ்டிகளே வாரவழிபாடும், மற்ற பொதுநலப்பணிகளும் பண்ணுவதோடு அநாதை ப்ரேத ஸம்ஸ்காரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறோடு நூற்றியொன்று என்று இல்லாமல், தாங்கள் செய்கிற மற்ற எல்லாப் பணிகளையும்விட இதுவே உத்க்ருஷ்டமானது என்ற உணர்வோடு செய்ய வேண்டும்.

அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்? 68


ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 379* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*90 ப்ரஜாபவ*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
உக்ரசேனர் உட்பட ஊரார் யாருக்கும் கம்சன் கந்தர்வனின் மகன் என்பது தெரியாது.

அதனால்தான் கம்சன் தன் மகன் என்று
அவர் நம்பிக் கொண்டிருந்தபோதும், உக்ரசேனருக்கு அவன்மேல் இயற்கையான அன்போ அக்கறையோ உண்டாகவில்லை.

கம்சனும் அவரை வெறுத்தான்!” என விடையளித்தான்.

சகதேவனும் பீமனும் தங்கள் அரண்மனைக்குத் திரும்புகையில் பீமன்,

“எனக்கு மற்றோர் ஐயம் இப்போது எழுந்து விட்டது.

கண்ணன் உலகுக்கே தந்தையாக விளங்குகிறான்.
அந்தக் கண்ணனையே கம்சன் வெறுத்தானே. அது எப்படி சாத்தியம்?” என்றான்.☘️☘️☘️
ravi said…
*கந்தர் அலங்காரம்*
*97* 🐓🦚🙏
ravi said…
பயந்த தனி வழிக்கு - முருகன் துணை என்று சொல்லாது, எதுக்கு வேலும் மயிலும் துணை-ன்னு சொல்லணும்?
* மயில் = சூரன் = ஆயிரம் தவறுகள் செய்து இருப்பினும், இன்று அவன் காலடியில்!

அதே போல் நாம் ஆயிரம் தவறுகள் செய்திருப்பினும்...

என்று மயிலைக் காட்டுகிறார் - Negative Inspiration!

* வேல் = ஞானம் = இருட்டு வழிக்கு ஒளி பாய்ச்சி, உடன் அழைத்துச் செல்வது!

வேல் நம் மீது பட்டு, நம்மையும் அவனிடம் மயிலாய் அடைவிக்கும் -
Positive Inspiration!

அதான் பயந்த தனி வழிக்கு, இரண்டு Inspiration!
பயந்த தனி வழிக்கு, வேலும் மயிலும் துணை! வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 380*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
*சிவானந்தலஹரி 49வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
ஆனந்தா³ம்ருʼதபூரிதா
ஹரபதா³ம்போ⁴ஜாலவாலோத்³யதா

ஸ்தை²ர்யோபக்⁴னமுபேத்ய ப⁴க்திலதிகா
ஶாகோ²பஶாகா²ன்விதா .

உச்சை²ர்மானஸகாயமானபடலீமாக்ரம்ய நிஷ்கல்மஷா

நித்யாபீ⁴ஷ்டப²லப்ரதா³ ப⁴வது மே
ஸத்கர்மஸம்ʼவர்தி⁴தா .. 49..
ravi said…
*ஸ்தை²ர்யோபக்⁴னமுபேத்ய ப⁴க்திலதிகா*

பக்தி எனும் கொடி அது பற்றிக் கொள்வதோ சித்தம் எனும் கொம்பை

கொடி கொம்பு சொல்லியாகி விட்டது கொடி வளர ஒரு பாத்தி வேண்டுமே அது தான் பரமேஸ்வரனின் பாதங்கள் ...

அவன் திருவடிகள் எனும் பாத்தியில் பக்தி எனும் கொடி சித்தம் எனும் கொம்பை பற்றிக்கொண்டு வளர்கிறது

ஆனந்தம் எனும் ஜலத்தை விட்டு அந்த கொடியை வளர்க்க வேண்டும் .. பகவானிடம் பக்தி செலுத்த ஆனந்தம் அடைய வேண்டும் . எப்படி ஒரு குழந்தையை பார்த்தாலோ இல்லை யானை ஒன்றை பார்த்தாலோ அல்லது கடலை பார்த்தாலோ

பார்த்தவுடன் நமக்கு இயற்கையாய் ஆனந்தம் வருவதைப்போல பகவானிடம் பக்தி செலுத்த முயலும் போது ஆனந்தம் தானாக வர வேண்டும் .

கடனே என்று அவனை வணங்கக் கூடாது...

உயர்ந்த மனம் எனும் பந்தல் மேல் நம் பக்தி எனும் கொடி வளரட்டும்

உயர்ந்த மனம் எப்படி வரும் .. எப்பவும் ஆன்மீக சிந்தனை வளர்த்துக்கொண்டால் நம் மனம் உயரும்

இப்படி செய்தால் நம் பக்தி எனும் கொடி ஒரு பூச்சி அரிக்காமல் நல்ல பூக்களையும் பழங்களையும் தரும் அதைத்தான் முக்தி என்கிறோம்


*ஶாகோ²பஶாகா²ன்விதா .*

*உச்சை²ர்மானஸகாயமானபடலீமாக்ரம்ய நிஷ்கல்மஷா*

*நித்யாபீ⁴ஷ்டப²லப்ரதா³ ப⁴வது மே*
*ஸத்கர்மஸம்ʼவர்தி⁴தா .. 49..**

*சரணம்* எனும் பந்தல் இட்டு *பக்தி* எனும் கொடியை *சித்தம்* எனும் கொம்பில் படரவிட்டு *உயர்ந்த ஆன்மீக எண்ணங்கள்* எனும் உரம் , தண்ணீர் ஊற்றி *ஆனந்ததுடன்* பக்தி எனும் செடியை வளர்த்தால் அது *முக்தி* எனும் மலர்களையும் பழங்களையும் *சிவானந்தம்* எனும் நிழலையும் தரும் என்கிறார் மிகவும் அழகாக ஆச்சரியாள் 🪴🎍🍀☘️🍊🍊🍋🍋🍎🍎🍏🍏🍋🍌🍉🍇
Kousalya said…
மிகவும் அருமையான விளக்கம். .unconditional premai, அன்பு...எப்படி இருக்கும் என்ற விளக்கம் மிக அற்புதம்...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔🪔
Moorthi said…
அற்புதம் 🙏🙏
ravi said…
🌹🌺 "“ *ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

🌺90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனதுஎன்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள்.

🌺ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.

🌺அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்காலம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.

🌺ஏனெனில் அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 ""A simple story to explain that Paramashiva who ate the poison of Aala Kala kept the poison in his neck to protect the world 🌹🌺 -------------------------------------------------- ------

🌹🌺 If a cow eats any poisonous food, the scientists were shocked to see if we can get that poison if we drink the milk from it.

🌺 They gave the poison to the cow every day for 90 days and examined its milk. There was no trace of poison in that milk.. Well, when they investigated where the poison had gone, they were surprised.

🌺 The history is that Paramashiva who ate the poison of Aala Kala kept the poison in his neck to protect the world.

🌺Similarly cow also keeps the poison in her neck. That's why we give agathik green to the cow.

🌺Because agave has the ability to break poison.🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இந்த வாயழகிலே கோதை நாச்சியாரும் ஈடுபட்டிருக்கிறாள்.

அவள் அரங்கனின் அத்தனை அழகையும் ஒரே பாசுரத்திலே சொல்லிவிடுகிறாள்

எழிலுடை அம்மனையீர்!

எனனரங்கத்து இன்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர், எம்மானார்

என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினாரே

என்று அரங்கனின் சௌந்தர்ய சோபையில் ஈடுபடுகிறாள்🙏🙏🙏
ravi said…
கண்ணா*

சுழியை உடைய சங்கையும் அனல் கக்கும் சக்கரத்தையும் உன் கரங்கள் ஏந்தி உள்ளதே

உன் மேனி நீண்ட மலை போல அன்றோ உள்ளது *கண்ணா*

மணம் கமழும் துளப மாலைகள் உன் நீண்ட முடியை அலங்காரம் அன்றோ செய்கின்றது

கண்ணா திருவனந்தாழ்வான்மேல் சயனிப்பவன் அன்றோ நீ

கண்ணா மாயன் நீ உன் சிவந்த திருவாய்,

ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்!

அந்தச் சிவந்தவாய் என்னை, என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே!
கண்ணா

பெண்களின் கொவ்வைச் செவ்வாயில் ஈடுபட்டிருந்த என்னைத்

தன்பக்கம் ஈர்த்துக் கொண்டதே கண்ணா

என் சொல்வேன் என் புண்ணியம் அதையே
ravi said…
*7. திருவாயழகு*

கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார்,

துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார்,

அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய்

ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே🙏🙏🙏
ravi said…
🌹 *இனியவை நாற்பது*🌹

பாடல் - 39

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. . . . .[39]

விளக்கம்:

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🙏🏻🙏🏻🌹🌻🌹🌻🌹🌻
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 115*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மண்கிடார மேசுமந்து மலையுளேறி மறுகுறீர்

எண்படாத காரியங்க ளியலுமென்று கூறுறீர்

தம்பிரானை நாள்கடோறும் தரையிலே

தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தெங்ஙனே. 115
ravi said…
மண்பாண்டமாகிய இவ்வுடலைச் சுமந்து

ஏறாத மலையிலேல்லாம் ஏறி துன்புறுகின்றீர்கள்.

என்னால் ஆகாத காரியங்கள் யாவையும் செய்ய முடியும் என ஆணவத்தோடு கூறுகின்றீர்கள்.

தமக்குள்ளே இருக்கும் ஈசனை அறிந்து கொள்ளாமல் இருந்தாலும்,

கோயிலில் சென்று நாள்தோறும் இறைவனை தரிசித்து தரையில் தலைப்பட வனாகவும் மாட்டீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களோடு எப்படி என்னால் சேர்ந்து வாழ முடியும்.??😢😢
ravi said…
*❖ 12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா* =

அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிற ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள்💥💥💥
ravi said…
அம்மா* ...

*அச்சச்சோ*

உதிக்கின்ற செங்கதிர் உன் உச்சித் திலகம் அன்றோ?

அச்சச்சோ அது ஜொலிக்கும் அழகை என் சொல்வேன் ?

உன் நக காந்திகள் வானை வெட்டும் மின்னலோ ?

அச்சச்சோ அது ஜொலிக்கும் அழகை என் சொல்வேன் ?

பொழியும் கருணை கதிரவன் அணைக்கும் ஆயிரம் கரங்களோ ?

அச்சச்சோ அவை ஜொலிக்கும் அழகை என் சொல்வேன் ?

எந் நகைக்கும் ஈடில்லா உன் புன்னகை பூத்துக் குலுங்கும் விண் மீன்களோ ?

அச்சச்சோ அவை ஜொலிக்கும் அழகை என் சொல்வேன் ?

காரணம் இன்றி கடல் போல் உன் காரூண்யம் ... நெய் வார்த்த தீப்பொறிகளோ

அச்சச்சோ அவை ஜொலிக்கும் அழகை என் சொல்வேன் ?

அச்சச்சோ என் சொல்வேன் எதையும் சொல்லமுடியா சுந்தரி நீ அன்றோ 🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 393* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*147*
ravi said…
*147 निराश्रया - நிராச்ரயா -*

எந்த ஆதரவும், துணையும், தேவையும், எதிர்பார்ப்பும் அற்றவள்.

தைத்ரிய உபநிஷத் '' *அநிலையனே* '' '' என்பது எதன் சார்பும் துணையும் அற்ற,

எதையும் யாரையும் சார்ந்து இல்லாத.. என்ற இந்த நிலையை தான்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 391* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
In this manner, the identity of the Sri-chakra with the Kamalas serving as palaces for the Devi may be seen.

This identity, known as that of the Naadaa and the Bindu, should be preserved as a profound secret and has to be divulged only by the Guru for the benefit of the disciple.

🙏🙏🙏
ravi said…
LAW OF NATURE



Lord Vishnu mounted on Garuda and went to Mount Kailash. Leaving Garuda at the door, he went inside to meet Shiva. Garuda was mesmerized to see the beauty of Kailash, when his eyes fell on a beautiful little bird.



The bird was so beautiful that all of Garuda's thoughts began to be drawn to it. Meanwhile, Yama Dev came to Kailash and before going inside, he looked at that little bird with surprise.



Garuda understood from that look, that the bird's end was near and Yama Dev would take it with him to Yamlok when he leaves Mount Kailash.



He felt pity and could not bear to see such a small and beautiful bird dying. So he caught the bird in his claws and left it atop a rock in a forest thousands of miles away, and returned to Kailash.



Finally, when Yama came out, Garuda asked, "Why did you look at that bird with such a surprised look?"
ravi said…
Yama Dev said, "Garuda, when I saw the bird, it came to my knowledge that in a few moments, it would be eaten by a serpent thousands of miles away. I was wondering how she would go so far so soon, but now that she's not here she must be dead."



Garuda now understood, "Death cannot be averted, no matter how clever you are."



That's why Lord Krishna says -You do what you want... But what happens is actually that which I want. Do what I want... And then, whatever you want will happen.
ravi said…
This world is the world of possibilities. There is, of course, every possibility of a possible event, but the most wonderful thing is that there is also the possibility of an impossible event becoming possible."
ravi said…
*🙏🌹சுதர்சன சக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவுகள் :*

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம்.

மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.

நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.

இது போன்ற விஷ்ணுவின் ஆன்மீக தகவல்களை எப்போதும் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
🌹🌺" *உலக சிறப்புமிக்க சிவனாலயம் - வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம்..!.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க இந்த நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

🌺தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.

🌺பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

🌺இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது.

🌺தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

🌺பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.

🌺நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புவது இக்கோவிலின் தனிச்சிறப்பு🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌺 "The World's Greatest Shiva Temple - A Shiv Sthalam which must be visited at least once in a lifetime..!.. A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹 Beach Kolyak near Bhav Nagar, Gujarat. The world famous Nishkalangeshwar Shiva Temple is located here in the sea. The temple is located about one kilometer from the beach.

🌺Every day from one o'clock in the day to ten o'clock at night, the sea absorbs and makes way for worshiping Lord Shiva in the sea.

🌺 In memory of the worship of the Pandavas... there are five Shiva Lingams in this temple.

🌺 The stone flagpole (about twenty to thirty feet high) of this temple has remained undamaged by the storms so far.

🌺Every day for one hour the sea water level touches the top of this vine tree.

🌺Then slowly the water level of the sea starts to decrease and the sea moves away from both sides making way for worshiping Lord Shiva.

🌺 As the water level decreases, people slowly go into the sea to worship Lord Shiva and return to the shore again.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*🙏 ஓம் சிவாய நமஹ 🙏சனீஸ்வரர் வாகனமான காகம் சனிக்கிழமையான இன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சி*

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ள அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான் கோயிலில் சித்தர் வடிவில் வரும் காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் அற்புதக்காட்சி. தினமும் நடைபெறும் அற்புத காட்சி.🙏 ஓம் சனீஸ்வராய நமஹ 🙏
ravi said…
*"ஏக சம்பத்துக்காரன் நீ.. எது உனக்கு சாஸ்வதமாக வேண்டும்? தன சம்பத்தா? புத்திர சம்பத்தா என்பதை நீயே முடிவு செய்து கொள்"* - பெரியவா.

கடலூரில் சிவானந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேஷய்யர். 'சிவானந்தபுரம் சேஷய்யர்' என்றால் அந்தப் பகுதியில் அவ்வளவு பிரபலம். ஓ.டி.என்று சொல்லப்படும் ஓல்டு டவுண் ஏரியாவில் ஒரு பகுதி தான் சிவானந்தபுரம். பெரியவா மேல் மிகுந்த பக்தி கொண்டவர் இவர். பெரியவாளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் வேறு எதுவும் இவருக்குத் தேவை இல்லை. அந்த அளவுக்கு ஒரு பக்தி.

ravi said…
அப்படிப்பட்ட பெரியவாளின் பக்தரான சேஷய்யருக்கும் ஒரு பிரச்சினை இருந்தது. செல்வம் ஏகத்துக்கும் இருக்க வாரிசுகள் மட்டும் வீட்டில் இல்லை. தினமும் மருகிப் போனார்.

மகாபெரியவாளுக்கு விசுவாசமான பக்தராக இருந்தவருக்கே பிரச்சினையா? என்று கேட்கிறீர்களா?

ravi said…
சேஷய்யருக்குத் திருமணம் ஆகிப் பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைச் செல்வம் இல்லை. இது அவரது மனதை ரொம்பவே உறுத்தச் செய்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் மழலைகள் கூடிக் குதூகலித்து விளையாடுவதைப் பார்க்கும் போது எந்தத் தகப்பனுக்கு - தாய்க்கு குழந்தை ஆசை வராது? இத்தனைக்கும் மகாபெரியவாளின் அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்ற பக்தர் இவர். எப்படியும் தன் மனக்குறையை மகாபெரியவாளிடம் ஒருமுறை நேரில் சொல்லி, ஆசி பெற வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்.

ravi said…
மகாபெரியவா கடலூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள திருவதிகை, விழுப்புரம், மங்கலம் போன்ற எந்த ஊருக்கு வந்தாலும், வலியச் சென்று தொண்டுள்ளத்தோடு உதவி செய்யும் உள்ளம் கொண்டார் சேஷய்யர். அதில் ஒரு ஆத்ம திருப்தி கொள்வார். 'பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்வது முற்பிறவியில் தான் செய்த புண்ணியம்' என்று மற்றவர்களிடம் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வார்.

ravi said…
சேஷய்யரின் நல்ல நேரம்... அடுத்த சில வாரங்களுக்குள் மகாபெரியவா கடலூருக்கு வருவதாக ஸ்ரீமடத்தில் இருந்து தகவல் வந்தது. கடலூருக்கு வந்தால் சேஷய்யரின் வீட்டில் தான் பெரியவா தங்குவது வழக்கம். எனவே, இந்த முறையும் அவரது வீட்டில் தங்க இருப்பதாக மடத்து அதிகாரிகளால் தகவல் தரப்பட்டது. மனம் குதூகலித்த சேஷய்யர், ஆச்சார நெறிமுறைகளோடு பெரியவா தன் வீட்டில் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை துரித கதியில் துவங்கினார். தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாட்டுத்தொழுவம் மற்றும் குதிரை லாயங்களைச் சுத்தப்படுத்தினார். பெரியவா அங்கே தங்குவதற்கு கிணற்றடி அருகே ஒரு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டது. காஞ்சி மடத்தில் இருந்து வரும் ஊழியர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம் ஏற்படுத்தப்பட்டது.

ravi said…
பெரியவா கடலூருக்கு வந்த தினத்தில் ஊரே திமிலோகப்பட்டது. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் திரண்டு வந்து பெரியவாளைத் தரிசித்து சென்றனர். இதற்கெல்லாம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் சேஷய்யர். கூட்டம் சற்றுக் குறைந்த வேளையில் பெரியவாளை நெருங்கிய சேஷய்யர், தன் நெடுநாள் மனக்குறையைச் சன்னமான குரலில் சொல்லி இருக்கிறார்.

'
ravi said…
ஏக சம்பத்துக்காரன் நீ.. எது உனக்கு சாஸ்வதமாக வேண்டும்? தன சம்பத்தா? புத்திர சம்பத்தா என்பதை நீயே முடிவு செய்து கொள். எதுவாக இருந்தாலும் அதற்கு பகவான் உதவுவார்' என்று சொல்லி அவரை ஆசிர்வதித்தார் பெரியவா.

தன சம்பத்தா? புத்திர சம்பத்தா?

தனம் - அதாவது செல்வம் இருந்தால் சௌகரியமாக வாழலாம். தலைமுறை வசதியாக வாழலாம். ஆனால் தலைமுறை செழிப்பதற்கு புத்திரசம்பத்து தானே வேண்டும்?

ravi said…
யோசித்த சேஷய்யர் ஒரு முடிவுக்கு வந்தார். செல்வத்தைக் கஷ்டப்பட்டாவது சம்பாதித்து விடலாம். அதை இப்போது இழந்தாலும் பரவாயில்லை. எதாவது ஒரு கட்டத்தில் சம்பாதித்து விடலாம். தற்போதைய தேவை புத்திர சம்பத்து தான். இப்படி இவர் முடிவெடுத்த அடுத்த கணத்தில் இருந்தே இவர் ஆச்சரியப்படும் படியான சம்பவங்கள் நடந்தேறின. அதாவது சேஷய்யரின் தம்பிக்குத் திருமணம் முடிப்பதற்கென்று ஓரிடத்தில் பெண் பார்த்து நாளும் குறித்து விட்டார்கள். ஆனால் பாருங்கள்....அந்தத் தம்பிக்குத் திடீரென திருமணத்தில் இஷ்டம் இல்லை. அதாவது இல்லறத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. துறவு அவரை அழைத்தது. எனவே சந்நியாசி ஆகி வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

ravi said…
தம்பிக்கென நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டார், விஷயம் கேள்விப்பட்டுப் பதறிப் போனார்கள். 'ஐயையோ எங்கள் பெண்ணை இனி யார் திருமணம் செய்து கொள்வார்கள்? இப்படி திடுதிப்பென கல்யாணம் நின்று போய்விட்டதே... என்று சேஷய்யர் வீட்டாரிடம் புலம்பினார்கள். அவர்களுக்கும் மனம் சங்கடப்பட்டது. 'தம்பி இப்படிச் செய்து விட்டானே' என்று எல்லோரும் கொதித்துப் போனார்கள். சாதாரணமான ஒரு தினத்தில் இப்படிச் சொல்லிவிட்டுப் போயிருந்தார் என்றால் கூட யாரும் ஏதும் சொல்ல மாட்டார்கள். இப்போது இன்னொரு குடும்பத்தின் பெண்ணையும் நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டானே என்று தான் எல்லோரும் கவலைப்பட்டனர்.

ravi said…
இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்காக இரண்டு குடும்பத்து உறுப்பினர்களும் உட்கார்ந்து பேசினர். இறுதியில் ஒரே முடிவு தான் எடுக்கப்பட்டது. அதாவது பெண் வீட்டாரின் கௌரவம் காப்பாற்றப்படுவதற்கு சேஷய்யரே இந்தப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள். முதலில் சேஷய்யர் சம்மதிக்கவில்லை என்ராலும் பிற்பாடு சமாதானம் பேசி சேஷய்யரையும் அவரது மனைவியையும் இதற்கு உடன்பட வைத்தனர். முதல் மனைவி சேஷய்யரை விட பத்து வயது இளையவர். இரண்டாவது மனைவியோ சேஷய்யரை விட இருபது வயது இளையவர் (சேஷய்யர் பிறந்த வருடம் 1892) சேஷய்யருக்கும் முதல் மனைவிக்கும் திருமணம் நடந்தது - 1915ம் ஆண்டு. இரண்டாவது மனைவியுடன் திருமணம் நடந்தது - 1925ஆம் ஆண்டு.

ravi said…
இரண்டாவது திருமணம் செய்து ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன. இந்த மனைவிக்கும் மணி வயிறு வாய்க்கவில்லை. சேஷய்யர் மனம் கலங்கினார். 'ஏக சம்பத்துதான் உனக்கு என்று மஹாபெரியவா கூறினாரே... ஒருவேளை தனம் சேர்ப்பதில் எனக்கு நாட்டம் இருப்பதால், புத்திர சம்பத்து தடைபடுகிறதோ? என்று யோசித்தார் சேஷய்யர். இந்த வேளையில் அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு மகா பெரியாவா திடீரென விஜயம் செய்தார். அங்கே சென்று அந்த மகானைச் சந்தித்து மீண்டும் தன் மனக்குறையைச் சொல்ல முடிவெடுத்தார் சேஷய்யர்.

'
ravi said…
பெரியவா...சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு இரண்டாவது திருமணமும் என் விருப்பம் இல்லாமலேயே நிறைவேறியது. சரி, புத்திர பாக்கியத்துக்காக இறைவன் நடத்தும் லீலை இதுவோ என்று நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது மனைவிக்கும் புத்திர பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை. தங்களின் ஆசிர்வாதம் வேண்டி இங்கு வந்துள்ளேன்' என்றார் சேஷய்யர் பவ்யமாக.

ravi said…
பெரியவா புன்னகைத்தார். அவருக்குச் சில பழப் பிரசாதங்களைக் கொடுத்து 'உன் இரண்டாவது மனைவியிடம் இதைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்' என்றவர் கார்த்திகை தீபம் நேரத்தில் திருவண்ணாமலை போய் கொப்பரையில் நெய் தீபம் ஏற்று' என்று சொன்னார்.

'அப்படியே ஆகட்டும் பெரியவா' என்று சந்தோஷமாக அந்த அருட்பிரசாதங்களை வாங்கிக் கொண்டு கடலூர் சிவானந்தபுரம் வந்த சேஷய்யர் தன் இரண்டாவது மனைவியிடம் அவற்றைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அதே சூட்டோடு கார்த்திகை தீபத்திருநாளும் வந்தது.

ravi said…
திருவண்ணாமலை புறப்பட்டார். கொப்பரையில் நெய் தீபம் ஏற்றினார். இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். ரமணாஸ்ரமம் போய் ரமண மகரிஷியையும் பார்த்து ஆசி வாங்கிக் கொண்டு வருவோம்' என்று திருச்சுழி மகானின் தரிசனம் வேண்டி அவரது குடிலுக்குள் சென்றார்.

பகவான் ரமணரை சேஷய்யர் சந்தித்த போது அவர் கேட்டார்: 'ஏக சம்பத்தா? எது தேவை என்று முடிவு செய்து விட்டாயா? தன சம்பத்தா? புத்திர சம்பத்தா?

சேஷய்யர் விதிர்விதிர்த்துப் போய்விட்டார். கடலூரில் காஞ்சி மகான், தன் ஒருவனிடம் மட்டும் கேட்ட அதே கேள்வியை இவரும் கேட்கிறாரே? இதைத்தான் ஞான திருஷ்டி என்கிறார்களா?

ரமணர் மீண்டும் கேட்டார்: 'என்னப்பா.. என்ன சம்பத்து தேவை என்று முடிவு செய்து விட்டாயா? பரவாயில்லை.. எதுவாக இருந்தாலும் திடமாக முடிவெடு.'

திக்பிரமை அகலாமல் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் அவர் எடுத்த முடிவு தான் - புத்திர சம்பத்தே எனக்குப் போதும்'

இதன் பிறகு நடந்ததை அதிசயம் என்று சொல்வதா? அருள் என்று சொல்வதா? அடுத்து வந்த சில நாட்களுக்குள்ளேயே சேஷய்யருக்கு அவரது இரண்டாவது மனைவியிடம் இருந்து அந்த இன்பச் செய்தி கிடைத்தது. அவள் கருவுற்றிருக்கிறாளாம். பத்து மாதங்களில் வீட்டில் 'குவா குவா சத்தம். அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

ஒன்றல்ல....இரண்டல்ல... அடுத்தடுத்து பத்துக் குழந்தைகளுக்குத் தாய் ஆனார் அந்த இரண்டாவது மனைவி. மழலைகள் சத்தம் வீட்டில் பெருகப் பெருக மஹா பெரியவாளின் வாக்கும் பலித்தது. தனம் இருந்தால் புத்திர பாக்கியம் இருக்காது. புத்திர பாக்கியம் இருந்தால் தனம் இருக்காது.

அந்த மகானின் வாக்குதான் எத்தனை சத்தியமான உண்மை. பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கித்தான் போனார் சேஷய்யர். பிற்காலத்தில் தான் இந்தக் குடும்பம் சற்றுத் தலை எடுத்தது.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.

*kn*
ravi said…
திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம் பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னாள் வழிகாட்டி கொண்டு செல்லுவார்.

அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது காரணம். அந்தகாலம் சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இருட்டாக தான் இருக்கும் அதுவும் திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதி.

ravi said…
மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும். தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமலையாண்டான்

இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை
(அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

ravi said…
திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை
"சுந்தரராஜா" - ன்னு அழைத்தார்.

உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து
"ஸ்வாமின் அடியேன்" வந்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமலையாண்டான் திருமாளிகை வந்த உடன் அவரிடம் ஸ்வாமி "அடியேன் திரும்பி செல்ல நியமம் வாங்கிக்கின்றேன்" என்று சொல்லி திரும்பிவிட்டார்

ravi said…
மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான் திருமாளிகைக்கு சாஷ்டாங்கமாக அவரை சேவித்து "ஸ்வாமின் அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சாரம் செய்துவிட்டேன்" தயவுகூர்ந்து அடியேனை மன்னித்து அருள வேண்டும் என கூற. திருமலையாண்டான் "என்ன சொல்கிறாய் ? என்ன அபச்சாரம் செய்தாய்?என்று கேட்க,

"
ravi said…
ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு திருவடி பந்தம் பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர முடியவில்லை."
"ஸ்வாமி தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில் விளக்கு இல்லாமல் எப்பிடி இந்த திருமாளிகைக்கு எழுந்தருளினீர்" என சுந்தரராஜன் கேட்க "நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்" - என்று சொல்ல "ஸ்வாமி அடியேன் வரவேயில்லை" என்று சுந்தர்ராஜன் மறுக்க

அப்போதுதான் திருமலையாண்டான் க்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து உடனே திருமாலிருந்சோலை சென்று "ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர்..." என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம்

திருமலையாண்டான் சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார்

ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு

மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலையாண்டான் பரம்பதித்த நாளன்று

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம் தென்திருப் பேரே

அழகர் திருவடிகளே சரணம் சரணம் !!🙏🙏🙏
ravi said…
பாதாரவிந்த சதகம் !

13.பவானீ த்ருஹ்யே தாம் பவ நிபிடிதேப்ப்யா மம முஹு:
தமோ வ்யாமோஹேப்ய: தவ ஜநநி காமாக்ஷி சரணௌ
யயோர் லாக்ஷாபிந்து ஸ்புரண
தரணாத் தூர்ஜடி ஜடா
குடீரா சோ'ணாங்கம் வஹதி வபுரேணாங்க கலிகா

பவனின் மனைவியே ! தாயே ! காமாக்ஷி ! உன் திருவடிகள் செம்பஞ்சுக்குழம்புப் பூச்சை ஏற்பதால், சிவனது சடையைக் குடியிருப்பாகக் கொண்ட சந்திரனின் கலை சிவப்புநிறமுள்ள உடலைக் கொண்டுள்ளது. அவை அடிக்கடி பிறவியைத் திணிக்கின்ற என் அஜ்ஞான மயக்கங்களுக்குத் துரோகம் விளைவிக்கட்டும்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🕉️🛕🔔🙏

*வயதான தம்பதிகளுக்கு மஹா பெரியவா சொன்ன அறிவுரை,...* சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(ஒரு மறுபதிவு)

வயதான தம்பதிகள், மனம் உடைந்து
போயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும்
போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும்.

பெரியவாள் மௌனம் மேற்கொண்டிருந்த சமயம்

காஞ்சீபுரத்திலேயே தங்கி பெரியவாளிடம் பேசிவிட்டுத் தான் போவது என்று தீர்மானித்துக்
கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது.

மூன்றாவது நாள், அவர்கள் கண்களில் கண்ணீரைக்கண்டதும், பெரியவாளின் மனம் உருகிவிட்டது.
அவர்கள் இருவரையும் அருகில் அழைத்து

உட்காரச் சொன்னார்கள். அவர்களுக்காக
மௌனத்தைக் கைவிட்டார்கள்.

"ஒரே பையன் மூணு வருஷமாக அமெரிக்காவில்
இருக்கான். எங்களிடம் கொள்ளை ஆசை..."

"அப்புறம் என்ன?"

"இப்போ லீவில் வந்திருக்கான். ஒரு வெள்ளைக்காரியோடு
கூட...! அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே."

"அந்த வெள்ளக்காரி யைக் கல்யாணம் பண்ணிக்கபோறா னாமா?"

"இல்லை என்கிறான். அந்த மார்கரெட் ரொம்ப
உயர்ந்த சிந்தனை உடையவள். இந்தியப் பண்பாடு,கலாசாரம், சமயச் சடங்குகள், ஆசாரிய புருஷர்கள்,
புண்ணிய நதிகள், பெரிய கோவில்கள்
எல்லாவற்றைப்பற்றியும் நிறையத் தெரிந்து
கொண்டிருக்கிறாள். நேரில் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வத்தால், கொஞ்சம்,கொஞ்சமாகப்
பணம் சேர்த்துக் கொண்டு சிக்கனமாக
வந்திருக்கிறாள். ஒரு மகானிடம் தத்துவோப தேசம் பெறவேண்டும் என்று ஆசை என்று சொல்கிறான்."
"அப்படியானால் ஏன் கவலைப்படுகிறீர்கள்?"

முதியவர்களிடம் தயக்கம்."அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை;
நம்பாமலும் இருக்க முடியவில்லை...
பெரியவாள் அனுக்கிரகத்திலே...."

"சரி,சரி, உன் பையன் ரொம்ப நல்லவன்.
சொன்னால், கேட்பான். கேரளாவில் ஒரு ஆசிரமம்இருக்கு. அங்கே கிருஷ்ணமேனன் என்று ஒருசந்யாசி இருக்கிறார். ரொம்ப இங்கிலீஷ் படிச்சவர்.மார்கரெட் மாதிரி இங்கே வருகிற வெளிநாட்டுக்காரர் எல்லாரும் அங்கே போய்த் தங்குவதுதான் வழக்கம்.

அந்த ஆசிரமத்துக்கு இவளையும் அனுப்பி விடச்சொல்லு. அவள் அங்கே போய், ஒரு மூணு மாசம்,இங்கிலீஷ் கீதை, இங்கிலீஷ் பிரும்ம சூத்ரம், இங்கிலீஷ் அத்வைதம் எல்லாம் படிக்கட்டும்..."

அவ்வாறு நடந்தது. கேரள ஆசிரமத்துக்குச்
சென்றவள், மார்க்கம் கெட்டுப்போகாமல்,
செம்மையான ஞானம் பெற்று ஊருக்குப்
போய்ச் சேர்ந்தாள்.

இம்மாதிரி வினோதமான ஐடியாக்கள் எல்லாம்
பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!


ravi said…
*🙏ஸத்கர்த்தரே நமஹ*🙏
அடியார்களை கௌர விப்பவர
ravi said…
நிஸ்ஸம்ஶயா ஸம்ஶயக்⁴னீ *நிர்ப⁴வா* ப⁴வனாஶினீ🙏🙏

துன்பங்களை அழிப்பவள்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எல்லாக் கார்யங்களையும் கவனித்துப் பலன் தருபவன் ஈச்வரன்தான் என்று சொன்னேனல்லவா? அவன் இந்த நிதித்யாஸனமாகிய நினைப்புக் கார்யத்தையும் கவனித்துக் கொண்டேயிருப்பான். விடாமல் அதை நாம் தொடர்ந்து கொண்டே போனால், ‘தன்னுடைய பழைய கர்மா பாக்கி முழுவதையும் தீர்த்துக் கட்டி விடுகிற அளவுக்கு இவன் இந்த நிதித்யாஸன கர்மாவைப் பண்ணி விட்டான்’ என்று அவன் தீர்ப்புப் பண்ணி, நம்முடைய தனி மனஸை — நாம் ப்ரஹ்மத்திற்கு வேறான ஜீவன் என்று நம்மை தனிப்படுத்திக் காட்டும் மனஸை — இல்லாமல் போய்விடும்படியாக அநுக்ரஹம் பண்ணுவான்.

ravi said…
இதைத்தான் ஈச்வராநுக்ரஹம் ஏற்பட்டு ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கும் என்று சொன்னது. நம்முடைய ஜன்மாந்த்ர கர்மா எல்லாம் தீர்கிற அளவுக்கு கணக்குத் தப்பாமல் நாம் ஸாதனை பண்ணினால்தான் அநுக்ரஹிப்பான். என்றில்லை. அப்படி துல்லியமாகக் கணக்குப் பார்த்துத்தான் அநுக்ரஹிப்பது என்றால் அதற்கு அநுக்ரஹம் என்றே பேர் சொல்லப்படாது! மெகானிகலாக கணக்கு ஸரி பார்த்து ஒரு வியாபாரி அல்லது அக்கவுன்டன்ட் பண்ணுகிற மாதிரிச் செய்வதற்கு அநுக்ரஹம் என்ற பேர் ஸரியில்லை. ப்ரேமை, கருணை, மன்னிக்கிறது, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் போனால் போகிறதென்று தூக்கிப் போடுகிற தாக்ஷிண்யம் இதெல்லாம் சேர்ந்திருப்பதுதான் அநுக்ரஹம்.

ravi said…
அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘அநு’ என்பது ‘அநுஸரித்து’, அதாவது ‘தொடர்ந்து’ போவது என்று அர்த்தம் கொடுக்கும். ‘க்ரஹம்’ என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈச்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈச்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் ‘அநுக்ரஹம்’! அவனைப் பிடிப்பதில் ஒரு குறியாக இல்லாமல் இந்த மனஸ் மறுபடி எங்கேயாவது ஓடும். ஆனாலும் அவன் அதைத் தொடர்ந்து, அதாவது துரத்திக் கொண்டே வந்து பிடித்து, அது தன்னைப் பிடிக்கும்படிப் பண்ணுவதுதான் ‘அநுக்ரஹம்’. தன்னை என்றால் மாயையோடு கூடிய நிலையிலுள்ள ஈச்வரனையுந்தான்; மாயா ஸம்பந்தமில்லாத ப்ரஹ்மத்தையுந்தான். ஏனென்றால், நம் மாதிரி ஈச்வரனும் மாயா ஸம்பந்தமுள்ளவன்தான் என்றாலும் நாம் மாயைக்கு அடிமைப்பட்டு மதியிழந்து ஆத்மஸ்வரூபத்தை மறந்திருப்பது போல இல்லாமல் அவன் மாயையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, இத்தனை மாயா கார்யம் பண்ணுகிற போதிலும் பூர்ணமான ப்ரஹ்மாநுபவத்துடன் இருப்பவன். ஆகையால் அவனை மாயா ஸஹித ஈச்வரனாகவே நாம் பிடித்தாலும் அவன் மாயா ரஹித ப்ரஹ்மமாக நம்மைத் தன்னோடு ஐக்யம் பண்ணிக் கொள்வான்.

ravi said…
மாறி மாறி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் ‘ரன்னிங் ரேஸ்’ எப்படி நடக்கிறதென்றால்: இவன் [ஜீவன்] அவனைப் பிடிக்க முயற்சி பண்ணுகிறபோது அவன், ‘ஏகப்பட்ட கர்மா பாக்கி உள்ள இவனுக்கு நாம் அத்தனை ஸுலபத்தில் எல்லா ஸம்பத்துக்களுக்கும் மேற்பட்ட ஸாக்ஷாத்காரதைக் கொடுத்தால் தர்ம நியாயமே இல்லை’ என்று பிடிபடாமல் ஓடுவது; அதனால் ஜீவ மனஸு, “அவன்தான் பிடிபடலையே!” என்று அலுத்துப் போய் தனக்குப் பிடிபடுகிற கண்ட கண்ட விஷயங்களில் ஓடுவது; அப்போது ஈச்வரன் கருணையோடு அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்து பிடித்துத் தன்னை அவன் பிடித்துக் கொள்ளும்படி பண்ணுவது; ஆனாலும் இதை ஒரே வீச்சில் ரொம்ப ‘லீனியன்டா’கச் செய்வது கர்ம தர்மத்திற்கு ஏற்றதில்லை என்பதால், தான் தொடருவதையும் பிடித்துக் கொள்வதையும் ஜீவன் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அத்தனை ஸூக்ஷ்மமாகச் செய்து மனஸை அப்பப்போ ஆத்ம விஷயத்தில் ஈடுபடும்படி (அது தான் அவனைப் பிடித்துக் கொள்வது — ஆனாலும் ரொம்ப லேசாகத் தொடுவது; அப்படிச்) செய்வது; லேசான பிடிப்பை ஜீவன் இறுக்கப் பண்ணிக் கொண்டு அதற்கான காலம் வருவதற்கு முன்னாடியே விடுபட்டுவிடாமல் ஸமயத்திலே அவனிடமிருந்து நழுவி விடுவது; ஜீவன் மனஸைத் தறிகெட விடுவது; அப்புறம், ‘அதற்குள்ளே இவன் அம்ருதத்திலே முழுகக் கூடாது என்று நாம் விலகிக் கொண்டால், இவனானால் ஜலத்திலேகூட முழுகாமல் சாக்கடையில் போய் விழுகிறானே!’ என்று ஈச்வரன் பரிதாபப்பட்டு மறுபடி கொஞ்சம் பிடிபடுவது — என்றிப்படி இழுத்தடிக்க வேண்டிய மட்டும் இழுத்தடித்து விட்டு, கால க்ரமேண ஜீவன் நன்றாகவே மனஸ் முழுதையும் லக்ஷ்யத்தில் முழுக்கும்படிப் பண்ணி அப்போது ஈச்வரன் ஒரே துரத்தாகத் துரத்தி ஒரே பிடியாகப் பிடித்து, அதாவது ‘அநுக்ரஹம்’ என்பதைப் பூர்ணமாகச் செய்து ஸாக்ஷாத்காரத்தில் சேர்ப்பது என்று நடக்கிறது.

ravi said…
கர்ம பல தாதா என்பவன் ஒரு நியாயாதிபதியின் கார்யத்தைச் செய்வதால் ரொம்பக் கண்டிப்புடனேயே கணக்குப்படி பலன் தரவும் உரிமை பெற்றவன். அவன் அப்படிச் செய்தால் நியாயமில்லை என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனாலும் பரம கருணையோடு அவன் கர்ம பலனை எவ்வளவோ குறைத்து ‘கன்டோன்’ பண்ணியே அநுக்ரஹம் செய்கிறான். ஒரே ஸ்டிரிக்டாக இல்லை என்பதற்காக ஒரே லீனியன்டாகவுமில்லை. உச்சத்திலெல்லாம் உச்சமான ஒரு நிலையை சாச்வதமாகக் கொடுக்கும்போது ரொம்பவும் தகுதியே பார்க்காமல் பண்ணினால் ஸரியில்லைதானே? பத்து வருஷம் ஜெயில் தண்டனை பெற வேண்டியவனுக்கு ஒரு வருஷம், இரண்டு வருஷம், மிஞ்சினால் ஐந்து வருஷம் வரை குறைத்து சிக்ஷைக் காலத்தை பாதியளவு வரை பண்ணுவதை வேண்டுமானால் “Justice tempered by mercy” [கருணையால் கனிவிக்கப்பட்ட நீதி] என்று சொல்லலாம். அதற்கும் ஜாஸ்தி குறைத்தால் ‘நீதி நியாயமே கிடையாதா?’ என்று தானே கேட்கத் தோன்றுகிறது? இங்கேயோ தண்டித்து — கர்மா என்ற குற்றத்தைத் தண்டித்து — தீர்ப்பதோடு விஷயம் முடியவில்லை. கர்ம நாசம், மனோ நாசம் (கர்மத்திற்கு காரணமான மனஸின் நாசம்) இவைகளோடு கதை முடியாமல், ரொம்பப் பெரிய வெகுமதியாக ஸாக்ஷாத்காரம் என்பது வேறு கிடைக்கிறது என்னும் போது, ஒரு அளவுக்குத்தான் ஈச்வரன் மன்னிக்க முடியும் என்று தெளிவாகும்.
ravi said…
*8.கண்ணழகு* 👀

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப்,

புடைபரந்து, மிளிர்ந்து,

செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள்

என்னைப் பேதமை செய்தனவே🙏🙏🙏
ravi said…
கண்ணா*

இரணியனின் குடலைத் தன் நகங்களால் கிழித்த நரசிங்கன் நீ அன்றோ ?

பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அனுபவிக்கவும் அரியவனாக இருக்கும் ஹரியும் நீ அன்றோ ?

எல்லோருக்கும் முன்னால் முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள்
நீயே அன்றோ ?

அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன் நீ அன்றோ ?

உன் திருமுக மண்டலத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும்,

செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் எனையும் பித்தேறும்படி செய்து
விட்டனவன்றோ?

கல்நெஞ்சனான எனையும் உன் கண்கள் உன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டது என்றும் ஆச்சரியம் அன்றோ *கண்ணா* ?🙏
ravi said…
இந்தக் கண்களின் அழகிலே ஈடுபட்ட நம்மாழ்வாரும் நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாகி

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன்

ஆழியங் கண்ணபிரான் திருக் கண்கள்கொலோ அறியேன்

இவை திருக் கண்களா அன்றி மங்கையர்களின் உயிரைக் கவரும் கூற்றமா?

தெரியவில்லையே! என்று அக்கண்களின் அழகிலே ஈடுபடுகிறார்.👀👀
ravi said…
*கந்தர் அலங்காரம்*
*98* 🐓🦚🙏
ravi said…
கந்தர் அலங்காரம் = வந்து, அருளி, கைப்பிடித்து, கொண்டே போய் விட்டான்! கொண்டே போய் விட்டான்!
அவள் கையை அவன் பிடித்தே விட்டாள்! கையும் "உண்டு"! எனக்கு ஒரு மெய்த்துணையே என்ற இறுதி அடி! அவன் கையை “உண்டு” என்று காட்டி, “மெய்த்துணையே” என்று அவன் கையைத் துணையாகப் பிடித்து நிறைகிறது!//

வேலும் மயிலும் எப்போதும் உண்டே துணை. முருகனருள் முன்னிற்கட்டும்.

ஓம் சரவணபவ
ravi said…
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 380* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*90 ப்ரஜாபவ*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: *ப்ரஜாபவ* : |
அஹ:‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
புன்னகைத்தான் சகதேவன். “பீமா! உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.

கம்சன் கண்ணனை வெறுக்கவே இல்லை.
கம்சன் தன் படுக்கை அறையில் ஒரு பெட்டி வைத்திருந்தான்.

அந்தப் பெட்டிக்குள் அழகான கிருஷ்ண விக்கிரகம் ஒன்றை வைத்திருந்தான்.

எப்போதும் அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டே இருப்பான்.

இப்படி உள்ளூர அவனுக்குப் பக்தி இருந்தாலும்,
வெளி உலகில் கண்ணனுக்கு எதிரானவன் என்ற பிம்பத்தைத் தானே கட்டமைத்துக் கொண்டு விட்டதால்,
தன் பக்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணனை வெறுப்பது போல நடித்தானே தவிர,

உலகனைத்துக்கும் தந்தையான கண்ணனை யாராலும் எந்நிலையிலும் மனதார வெறுப்பது என்பது முடியவே முடியாது.👏👏👏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 381*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*50*
ravi said…
ஸந்த்⁴யாரம்ப⁴விஜ்ருʼம்பி⁴தம்ʼ
ஶ்ருதிஶிரஸ்தா²னாந்தராதி⁴ஷ்டி²தம்ʼ

ஸப்ரேமப்⁴ரமராபி⁴ராமமஸக்ருʼத்
ஸத்³வாஸநாஶோபி⁴தம் .

போ⁴கீ³ந்த்³ராப⁴ரணம்ʼ ஸமஸ்தஸுமன꞉பூஜ்யம்ʼ

கு³ணாவிஷ்க்ருʼதம்ʼ
ஸேவே
*ஶ்ரீகி³ரிமல்லிகார்ஜுனமஹாலிங்க³ம்ʼ ஶிவாலிங்கி³தம்ʼ* .. 50..
ravi said…
50 வது ஸ்லோகம் மிகவும் அருமையான ஸ்லோகம்

பெரியவா க்கு பிடித்த ஸ்லோகம் .

ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுன சுவாமி மீது பாடப்பட்ட ஸ்லோகம் .

51வது ஸ்லோகமும் இதே மாதிரி தான் .. ஆதி சங்கரர் இங்கு விஜயம் செய்து இரண்டு நாட்கள் இங்கு தங்கி இருந்து சொன்ன ஸ்லோகங்கள் என்பார்கள் ☘️☘️☘️

சுவாமியையும் மல்லிகை பூக்களையும் சேர்த்து ஸ்லேடையாய் பாடிய ஸ்லோகம் .

இன்று சனி பிரதோஷம் அன்று சொல்வது எல்லா பாவங்களையும் போக்கடிக்கும்.... 🙏🙏🙏
ravi said…
*ஸந்த்⁴யாரம்ப⁴விஜ்ருʼம்பி⁴தம்ʼ*

சந்தியா காலத்தில் பூத்துக் குலுங்குவது மல்லிகை நல்ல சுகந்தத்துடன்

அதே போல் பிரதோஷம் அன்று மாலை நேரத்தில் பரமேஸ்வரன் மிகவும் வெண்மையாகவும் நல்ல நறுமணங்கள் நிறைந்தவராகவும் பூத்துக் குலுங்குகிறார் ...

மல்லிகை அழகிய மாந்தர்கள் கூந்தலை அலங்கரிக்கும் ..

அதே போல் வேதங்கள் உபநிஷதங்கள் தங்கள் சிரசில் சூடிக்கொள்வதும் பரமேஸ்வரன் ஒருவனையே....

மல்லிகையை வண்டுகள் மொய்த்துக்கொண்டே இருக்கும் ...

தங்கள் அணைப்பை எப்பொழுதும் விடாது .

அதே போல் ஈசனை மொயித்துக்கொண்டும் அணைத்து க்கொண்டும் இருப்பவள் அம்பிகை

நல்ல நறுமணம் தருவது மல்லிகை சம்புவின் தியானத்தால் நறுமணம் காண்பது ரிஷிகள் சாதுக்கள்

மல்லிகையை உடல் எங்கும் சூடிக்கொள்வதைப்போல் பரமேஸ்வரன் பாம்புகளை அணிந்துள்ளான் . மல்லிகைக்கு பாம்புகள் வரும் .. பரமேஸ்வரனை நாடி தேடி வருவதும் பாம்புகளும் தான் ...

எல்லா பூக்களும் கொண்டாடுவது மல்லிகையை

எல்லோரும் கொண்டாடுவது பரமேஸ்வரனை
*ஶ்ரீகி³ரிமல்லிகார்ஜுனமஹாலிங்க³ம்ʼ ஶிவாலிங்கி³தம்ʼ* .. 50..
ravi said…
A meaningful life is not being rich, being popular, being highly educated or being perfect. It's about being real, humble and touching the lives of others.



Achieving our goals does not require massive but consistent action.



Time always comes in a standard format. It is only our attitude and behaviour that makes it difficult or pleasant.



The loveliest day comes when you wake up and find that life still colors your world through people who truly care and never fail to remember you.



A mistake that makes you humble is better than an achievement that makes you arrogant.



Destiny is not a matter of chance, but a matter of choice. It is not a thing to be waited for, it is a thing to be achieved.



Good thoughts precede great deeds, great deeds precede success.
ravi said…
GOD SPEAKS TO US



A young man had gone to a Wednesday night Bible Study where the Pastor had shared about listening to God and obeying the Lord’s voice.



The young man couldn’t help but wonder, “Does God still speak to people?”



After the service, he went out with some friends for coffee and pie and they discussed the message.



Several different people talked about how God had led them in different ways. It was about 10 pm when the young man got in his car to drive home. Sitting in his car, he prayed, “God, if you still speak to people, speak to me. I will listen. I will do my best to obey.”



As he drove down the main street of his town, he had the strangest thought: “Stop and buy a gallon of milk.”



He shook his head and said out loud, “God is that You?”



He didn’t get a reply and continued on toward home. But again, the thought came: Buy a gallon of milk.



“Okay, God, in case that is You, I will buy the milk.”



It didn’t seem like too hard a test of obedience. He could always use the milk anyway. He stopped and purchased a gallon of milk and once again headed off toward home.
ravi said…
As he passed 7th Street, he again felt an urge: Turn down that street. This is crazy, he thought and he drove on past the intersection. But once again, he felt that he should turn down 7th Street, so at the next intersection, he turned back and then headed down 7th. Half-jokingly, he said out loud, “Okay, God, I will.”



He drove several blocks, when suddenly he felt that he should stop. He pulled over to the curb and looked around. He was in a semi - commercial area of town. It wasn’t the best neighborhood, but it wasn’t the worst either. The businesses were closed and most of the houses looked dark, like the people were already in bed. Again, he sensed something:
ravi said…
Go and give the milk to the people in the house across the street.



The young man looked at the house. It was dark and it looked like the people were either gone or were already asleep. He started to open the car door and then sat back in the car seat.



“Lord, this is insane. Those people are asleep and if I wake them, they are going to be angry and I will look stupid.”



Again, he felt like he should go and give them the milk.



“Okay, God, if this is You, I will go to the door and I will give them the milk. If you want me to look like a crazy person, okay. I want to be obedient. I guess that will count for something, but if they don’t answer right away, I am out of here.”



He walked across the street and rang the bell. He could hear some noise inside. A man’s voice yelled out,



“Who is it?

What do you want?”
ravi said…
Then the door opened before the young man and a man was standing there in his jeans and a t-shirt. He looked like he just got out of bed. He had a strange look on his face and he didn’t seem too happy to have some stranger standing on his doorstep.



“What is it?”



The young man thrust out the gallon of milk, “Here, I brought this for you.”



The man took the milk and rushed down a hallway speaking loudly in Spanish.



Then from down the hall came a woman carrying the milk with the man following her holding a baby.



The baby was crying. The man had tears streaming down his face. Half crying, the man said:



“We were just praying. We had some big bills this month and we ran out of money. We didn’t have any milk for our baby. I was just praying and asking God to show me how to get some milk.”
ravi said…
His wife who was in the kitchen yelled out, “I ask Him to send an Angel with some milk …. are you an Angel?”



The young man reached into his wallet and pulled out all the money he had on him and put it in the man’s hand. He turned and walked back toward his car, tears streaming down his face. Now he knew the answer to his question.



God still answers prayer and God still speaks to us.



Beware of your own thoughts because all of our thoughts and actions have a ripple effect that send out vibrations throughout the world.



We can find joy by being God’s instruments
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 393* 🙏🙏🙏started on 7th Oct 2021

(நிர்குண உபாசனை) (132-151)

*147*
ravi said…
*147 निराश्रया - நிராச்ரயா -*

எதையும் ஆச்ரயத்து இல்லாமல் இருப்பவள் . தானாக இருப்பவள் ..
எல்லாமும் எல்லோரும் அவளை ஆச்ரயிக்கின்றோம் ஆனால் அவள் எதையும் எவரையும் ஆச்ரயிக்க வேண்டியதில்லை🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 392* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️
ravi said…
This magic key is "Concentration". It is a 13 lettered word. Very simple but powerful. It has a tremendous power that transforms life like a tornado in action. Concentration has been defined as "the ability to direct one's thinking in whatever direction one would intend". Success and failures are part of the progress in life. However success and failures have to be handled differently. It is also to be observed that despite the differences in the way the two are to be handled, there are some aspects, which one needs to consider which are common to both. One of the key common factors for both success and failure is Concentration. Successive failures sometimes makes one to think of the failures there by preventing one from bringing back the focus to the task.
ravi said…
This can be amply seen in our cricketing world, which most of us are familiar. There have been several instances, when batsmen after achieving a milestone like having scored a century, a double hundred, tend to throw away their wicket. This is due to the sudden shift in the focus from continuing the task, to the happiness of success. Similarly, the failures of capable batsmen were mainly due to the lack of concentration and letting their thoughts drift to those aspects not relevant to the game or failures that have gone behind. Few months back I had the opportunity to attend a workshop conducted by "Custommerce", on ' strategies for a customer-driven economy ' at Hotel Leela Kempinski, Kovalam. One of the Speakers was the eight-time world Billiards Champion Geeth Sethi who talked about concentration drawing an example from the world of sport to illustrate the power of concentration. It is indeed an inspiring story and let me share it with you.
ravi said…
Ever heard of James Wattana? He was the former billiards champion from Thailand nicknamed 'Thai-Phoon'. It was the 1991 NEC England World Billiards Championship final. Wattana, just 16 and half years old, is playing Jimmy White of the United Kingdom. The Thai is playing brilliantly and is leading seven frames to one, supremely confident. Suddenly his game drops and before you know it Jimmy White has stormed back to level with Wattana. In the last frame, Wattana just falls apart and White wins the championship 8-7! Asked later what happened, Wattana said that his mind wandered to a particular street in Bangkok and of a £200,000 house he wanted to buy for his mother
ravi said…
So, here he was, in the finals, but his mind was several thousand miles away. By the time he regained his focus it was too late,” explains Geeth Sethi. But the young Wattana went back and put in continuous practice for next five years. .
ravi said…
During 1997, the same Wattana, ready for another final at British Open, is told just before he is to play that his father has been shot dead in Bangkok! Wattana goes on to play, all focus and concentration, emotions in check; he demolishes his opponent in just one hour, that too five frames to nil and then gives vent to his feelings! That's the power of concentration. James Wattana, says Sethi, constantly reined in his mind. “You need to rein in your mind even when the pressure is on, even though you heard disturbing news; you need to concentrate on what you need to do. The mind is a funny thing, it has a mind of its own and needs control by constant training. At the moment of truth you need to be there "
ravi said…
This tells us, concentration can improve with constant habits and training. Concentration will be required to retain ones focus while reaping success and also to bring back the lost focus due to failures. We all have the ability to concentrate. But at times our thoughts are scattered, and our minds race from one thing to another.
ravi said…
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.

ஆன்மீக கதைகள் பெருமாளை பற்றிய அனைத்து தகவல் படிக்க லிங்கை அழுத்தி படிக்கலாம்
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
https://chat.whatsapp.com/HTSlXCqETutI9Az4MkEV5T

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அக்னி தேவன் வழிபட்ட அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :*

உலகுக்கே வெப்பத்தை வழங்கும் அக்னி தேவனுக்கே இழந்த சக்தியை மீண்டும் கொடுத்த தலம் என்பதால் இங்கிருக்கும் இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 125 வது தேவாரத்தலம் ஆகும். கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று அங்கிருந்து வடக்கே 3 கி.மி. பயணம் செய்தால் இத்தலத்தை அடையலாம்.

சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து, தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான்.

அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், இத்தலம் வந்து இலிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து, சாபம் நீங்க பெற்றான்.

வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் “அன்னியூர்” ஆனது. இறைவன் “அக்னிபுரீஸ்வரர்” ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.

சிறிய கோயில், சிறிய ராஜகோபுரம் உள்நுழைந்து வலமாக வரும் போது கருவறை சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால் சொறிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னிதிகளும், தலமரம் வன்னியம் உள்ளன.

முன் மண்டபத்தில் நால்வர் சன்னிதி. வலப்பால் அம்பாள் தரிசனம் சிறிய திருமேனி. நேரே உள்சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் பின்புற விளக்கு வரிசையுடன் மிகவும் பிரகாசமாக காட்சியளிக்கிறார். இங்குள்ள ஸோமாஸ்கந்தர், நடராஜர் திருமேனிகள் மிக்க அழகுடையவை.

வைகாசி விசாகம், மாசி மகம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொஹண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால் தடையின்றி கட்டலாம் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘 ஓம் நமசிவாய 🙏*
ravi said…
ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

🌹🌺 " “ *ராம நாமாவை' சொல்ல சொல்ல .........நாம் பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹“. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

🌺 நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே
மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

🌺 எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.'

🌺. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது.

🌺 காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.'

🌺' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும்.

🌺 எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

🌺 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .

🌺. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

🌺. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

🌺. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

🌺 நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

🌺காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
.

🌺'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

🌺சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம்.

🌺'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

'🌺ராம நாம அதிர்வு ...சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)

🌺'ராம நாமா' சொல்ல சொல்ல .........நாம் பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பக்தி என்றால் ‘பரமாத்மாவை ஸகுணமான, ஸாகாரமான [உருவம் கொண்டதான] ஒரு தேவதா மூர்த்தியாக நினைத்து அன்பு செய்வது’ என்பதே பிரஸித்தமான பொது அபிப்பிராயம். சும்மா மானஸிகமாக அன்பு செய்வதென்றால் முடியவில்லை என்பதால் பூஜை, ஆலய தர்சனம், ஸ்தோத்ர பாராயணம் என்றெல்லாம் கார்யத்தைச் சேர்த்துச் செய்வது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஸரிதான்; தப்பென்று சொல்ல முடியாது. ஆனாலும் ஹையர் க்ரேடில் நினைக்கிறபோது ஸாகாரமாக,
ravi said…
அதாவது உருவமாக பரமாத்மாவை ஒரு தேவதையாக நினைத்தால்தான் அன்பு செய்ய முடியும் என்றில்லாமல், நிராகாரமான – அருவமான – பரமாத்மாவாக அவன் இருக்கும்போதும் அன்பு செய்யப் பழகி அதில் தேறவேண்டும். ஸாகாரமாயுள்ளபோது இப்படியிப்படி கண்ணு, மூக்கு, கை – நாலு கை, எட்டு கை – இப்படியிப்படி வஸ்த்ர பூஷணங்கள் என்று கண்ணுக்குத் தெரிவதாலும், அந்த மூர்த்தியின் குண கணங்களையும் மஹிமைகளையும், பரம கருணையையும் புராணங்கள், ஸ்தோத்ரங்கள் முதலியவை தெரிவிப்பதாலும் அப்படிப்பட்ட ஒரு மூர்த்தியிடம் அன்பு வைக்க முடிகிறது. அன்புதான் பக்தி.
ravi said…
பல தினுஸான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈச்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம், மனஸுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட ஸகுண மூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் ஸுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது, மனஸுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.

ravi said…
நம் நிலையில் அது முடியாமல் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். நமக்குண்டான மட்டில் ஒரு ஸாகாரமூர்த்தி, பூஜை, க்ஷேத்ராடனம் என்று பண்ணிவிட்டுப் போவோம். ஆனால் ஸாதன சதுஷ்டயத்தில் முன்னேறி ஸம்ஸ்க்ருதமான – அதாவது, refined , [சற்று யோசித்து] பண்பட்ட (பண்பட்ட என்பது நல்ல வார்த்தை; யோசித்தால்தான் வருகிறது! பண்பட்ட) ஸாதகர்களால் நிராகாரத்திடமும் நிர்குணத்திடமுங்கூட அன்பு வைக்க முடியும். ஏனென்றால் அந்த ஸ்டேஜில் எதனிடம் அன்பு என்றோ –
ravi said…
அந்த எதுவோ ஒன்றிடம் நல்ல ரூபம், குணம், லீலை என்றெல்லாம் இருப்பதே அதனிடம் நமக்கு அன்பை உண்டாக்கும்; இப்படி ஒன்று வெளியில் இருந்தாலே அதன் பொருட்டாக நம்மிடம் அன்பு உண்டாகும்; இல்லாவிட்டால் இல்லை என்றோ – விஷயம் போகாமல் தானாகவே ஸ்வாபாவிகமாக அன்பு உண்டாக முடியும். முடியக்கூடிய அதை வாஸ்தவமாகவே ஸாதிக்காவிட்டால் அந்தப் பண்பட்ட நிலையிலேகூட அத்தனை ஸாதனையும் அஹங்காரத்தில் போய் முட்டிக் கொண்டு முடிந்து விடும். செய்த ஸாதனைக்காக மோக்ஷ ஸித்தி கிடைக்குந்தான் என்றாலும் அது இப்போது என்றில்லாமல் எப்போதோ கோடி, கோடி வருஷத்திற்கப்புறம் ஏற்படக்கூடிய ஆத்யந்திக ப்ரளயத்தின் போதுதான் கிடைக்கும்படியாகத் தள்ளி, ரொம்பத் தள்ளிப் போவதாக ஆகிவிடும்! இப்போது நான் சொன்ன ‘அஹங்காரம்’ என்ன, ‘ஏதோ ஒரு ப்ரளயம்’ என்ன என்பதற்கு அப்புறம் வருகிறேன்! முதலில் அன்பு என்னவென்று தெரிந்து கொள்வோம்.
Oldest Older 201 – 307 of 307

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை