ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 11. பஞ்சதந்மாத்ரஸாயகா (2) பதிவு 18

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

11 பஞ்சதந்மாத்ரஸாயகா(2)

பதிவு 18



காமன் என்று சொல்லும்போது அது மன்மதனைக் குறிக்கும். மன்மதனுடைய வில் கரும்பு வில்; மன்மதனிடம் உள்ள அம்புகள் மலர் அம்புகள்.

மன்மதனைப் பார்த்துவிட்டு, ஆதிசங்கரர் "என்ன ஆச்சரியம்!" என்று வியப்பார். 

சண்டைக்கு வருபவன் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தால் அவன் வெற்றி பெறுவான் என்று சொல்லலாம். 

ஒருவன் சண்டைக்குப் புறப்பட்டான். அவன் சண்டைக்குப் புறப்பட்டுவிட்டான் என்று சொன்னார்களேயொழிய அவன் எங்கிருக்கிறான் என்பதே கண்ணுக்குத் தெரியவில்லை! 

சாதாரணமாகச் சண்டைக்கு வரக்கூடிய வீரன் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம்? 

ஆஜானுபாகுவாக, ஆகிருதியாக, பார்த்தவுடனே போர் வீரன் என்று சொல்லும்படியாக இருந்தால், அவனால் ஜெயிக்க முடியும் என்று சொல்லலாம். 

நோஞ்சானாக இருந்தால் அவனால் எப்படி ஜெயிக்க முடியும்? 

இங்கே சண்டைக்கு வருபவனோ நோஞ்சானா என்பதுகூடத் தெரியவில்லை. 

ஏனென்றால் அவனுக்கு உருவமே இல்லை! சண்டைக்குப் புறப்பட்டான். அவனுக்குத்தான் உருவமில்லை, அவன் வரக்கூடிய தேருக்காவது பெரிய உருவம் உண்டா என்று பார்த்தால் அதுவும் இல்லை!

ராவணன் மிகப்பெரிய தேரில் வந்தால் அவன் வருவதைப் பார்த்தவுடனேயே எல்லாருக்கும் குலைநடுங்குமாம். 

திடீரென்று ஆழ்வார்பேட்டை சாலையில் ஒரு விஜயந்தா டாங்க் வந்தால் பயமாக இருக்குமா இராதா? 

அதைப்போல போர்ச் சாதனமாவது மிரட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு, அம்பு தொடுக்கப் புறப்பட்டு வரும் வில்லாளியோ, தென்றலை அதாவது மலையமாருதத்தைத் தேராகக் கொண்டு வருகிறான்! 

மன்மதனுக்கு அனுக்ரஹம் அவனும் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை; 

அவனுடைய தேரும் கண்ணுக்குத் தெரியவில்லை. கையிலுள்ள ஆயுதங்களோ புஷ்ப பாணங்கள். புஷ்பத்தைத் தூக்கிப் போட்டால் சிறிது தூரம்கூடப் போகாது, 

'பொத்'தென்று அந்த இடத்திலேயே விழும். கூர்மையே கிடையாது. இதைப்போல ஆயுதங்களுடன் இவன் எப்படி வெற்றிவாகை சூடப் போகிறான்? 

"பரமேசுவரியே! இவன், இந்த மன்மதன், வெற்றிவாகை சூடுகிறான். இதற்கு என்ன காரணம் தெரியுமா? உன்னுடைய அருள்தான் காரணம்" என்கிறார் ஆதிசங்கரர். 

"நீ அனுக்ரஹம் செய்கிறாய்; அதனால் அனங்கனாக உள்ள மன்மதனுக்கு, எந்த தேசத்துக்குப் போனாலும் வெற்றி" என்கிறார். 



தே ஆயுதங்களை அம்பிகை தன் கரத்திலேயும் தாங்கிக் கொண்டிருக்கிறாளே! 

மலர் அம்புகளையும் இக்ஷுகோதண்டத்தையும் வைத்துக் கொண்டு இருக்கிறாளே, 

என்ன பொருள்? 

அந்தப் பொருளை விளக்குவதற்காகத்தான் மனோரூபேக்ஷு கோதண்டா, பஞ்சதன்மாத்ர ஸாயகா என்ற நாமங்கள். 

ஞானேந்திரியங்கள் மனிதர்களுக்கு உள்ள இந்திரியங்களை வகைப்படுத்தும் போது கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்று கூறுவதுண்டு. 

நமக்கு இங்கே மிகவும் முக்கியம் கர்மேந்திரியங்கள்கூட அல்ல ; ஞானேந்திரியங்கள்தாம். 

காரணம் என்னவென்றால் கர்மேந்திரியங்களைச் செயல்படுத்தக்கூடியதே இந்த ஞானேந்திரியங்களாகும். 

ஞானேந்திரியங்கள் என்பவை, நமக்கு ஞானத்தைப் பெற்றுத் தரும் இந்திரியங்கள். '

ஞானத்தைப் பெற்றுத்தரும்' என்றால், நமக்கு அறிவைப் பெற்றுத்தரும் இந்திரியங்கள் என்று பொருள். 



ன்றைய 'ஸ்டைலில்' சொல்ல வேண்டுமானால் எந்தப் புலன்கள் நமக்கு 'இன்புட்ஸ்' பெற்றுத் தருகின்றனவோ அவையே ஞானேந்திரியங்கள்! 

உதாரணமாக, ஒரு பொருளைக் கண்கள் பார்க்கின்றன. விழித்திரையில் பதிவாகும் பிரதிபிம்பத்தை, தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. 

மூளையிலிருக்கும் செல்களில் (அல்லது நமது மனது என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் - 

உடனே ஒரு செயல்முறை நடக்கிறது, அதாவது பிராஸசிங். 'இந்தப் பொருளை எங்கேயோ இதற்கு முன்னே பார்த்திருக்கிறோம். 

இதற்குப் பக்கத்தில் போய் நின்று குரலை எழுப்பினால், இது ஒலியைப் பெருக்கும். 

இதற்கு 'மைக்' என்று பெயர்'. இவ்வாறு ஒரு தொடர் சிந்தனை 'உள்ளே' நிகழ்கிறது. 

இது உள்ளே நடக்க வேண்டுமானால், கண் முதலில் பிம்பத்தை உள்ளே எடுத்துக்கொண்டு போக வேண்டும். இவ்வாறு தகவலை எடுத்துக் கொண்டு போகும், 

ஞானத்தை எடுத்துக்கொண்டு போகும் இந்திரியம் அல்லது புலனுக்கு ஞானேந்திரியம் என்று பெயர். 

கண், மூக்கு, காது, நாக்கு, மேனி ஆகிய இந்த ஐந்து புலன்களும் தேவையான தகவல்களைத் திரட்டி மூளைக்குக் கொண்டு போவதால் (அல்லது அனுப்பித் தருவதால்) இவை ஞானேந்திரியங்கள்.

கர்மேந்திரியங்கள் இவற்றுக்குப் பிறகு வருபவை 

கர்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் உள்ளே எடுத்துச் செல்லும் தகவலின் அடிப்படையில் ஒரு பெரிய பிராஸசிங் நடக்கிறது. 

பிறகு 'கை இதைச் செய்ய வேண்டும்', 'கால் அவ்வாறு நடக்க வேண்டும்' என்றெல்லாம் மனம் (அல்லது மூளை) கட்டளையிட்டுச் செயல்கள் நடைபெறுகின்றன. 

கையும் காலும் தொழிலைச் செயல்படுத்துபவை. ஆகையால் அவற்றுக்குக் கர்மேந்திரியங்கள் என்று பெயர். 

நாக்கு இரண்டு செய்கைகளையும் செய்யும். சுவையை உணர்ந்து அறிவுக்குத் தெரிவிக்கும்போது ஞானேந்திரியமாகச் செயல்படும். 

பேசும்போது கர்மேந்திரியமாக மாறிவிடும். 

நாக்குக்கு மட்டும்தான் இரண்டு இந்திரியங்களாகவும் இயங்கும் சிறப்பு உண்டு! (கை, கால், நாக்கு தவிர, விசர்ஜன உறுப்புகளான மல, சிறுநீர் உறுப்புகளையும் கர்மேந்திரியங்கள் என்கிறோம்). 

கர்மேந்திரியங்களைக் காட்டிலும் ஞானேந்திரியங்கள் முக்கியமானவை. 

ஏனெனில் அவை செய்திகளைத் திரட்டித் தருகின்றன.



கவே செய்யாதே என்று மனித மனத்திடம் சொன்னால் அது கேட்காது. அப்படியானால்
புலன்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? 

கண் தகாத விஷயங்களைப் பார்க்கக்கூடாது; 

காது தகாத விஷயங்களைக் கேட்கக்கூடாது; 

நாக்கு தகாத விஷயங்களைச் சுவைக்கக்கூடாது; 

மேனி தகாத விஷயங்களைத் தீண்டக்கூடாது. 

இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது? 

"அம்மா! உன்னிடம் கொண்டுவந்து போட்டாயிற்று" என்று ஐந்து புலன்களையும் அவள் காலடியில் கொண்டுபோய் போட்டு விட்டால் போதும், அந்த ஐந்து புலன்களையும் ஐந்து அம்புகளாகத் தன் கரத்தில் எடுத்து வைத்துக் கொள்கிறாள். 

ஐந்து புலன்களுக்கும் மேலே உள்ளது மனம். மனிதர்கள் பிற உயிரினங்களை விட உயர்ந்தவர்கள் என்கிறோம். மனிதன் என்ற சொல்லே மனம் என்பதிலிருந்து வந்ததுதான். மனம் உள்ளவன் மனிதன். 

நாய்க்கோ பூனைக்கோ மனம் இருக்கிறதா? அவை சிந்திக்குமா? 

அவற்றுக்கு மனம் இருக்கலாம், அவை சிந்திக்கலாம். ஆனால் ஒரு வரம்புக்குட்பட்டு மட்டுமே சிந்திக்கும். 

ஆனால் மனிதனுக்கு உள்ள மனமானது இது சரியா? தப்பா? இது எப்போதோ என்றைக்கோ நடந்ததா? இது ஏன் நடந்தது? என்று பல விஷயங்களையும் சிந்தித்துப் பார்க்கும் தன்மையைக் கொண்டது. 

ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்துவது இந்த மனம்தான்!
 


ஏன் கரும்பு! 

ஒரு நல்ல விஷயம், ஒரு தீய விஷயம் இரண்டும் கையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 

"நல்ல விஷயம் வேண்டாம், தீய விஷயம்தான் பிற்பாடு பார்க்கக் கிடைக்காது. ஆகவே அதைப் பார்த்துக் கொண்டிரு" என்று எது நம்மை இயக்குகிறது? மனம்தானே! 

அப்படியானால், இயக்கத்தின் இறுதிக் கட்டுப்பாடு மனத்திடம்தான் இருக்கிறது. 

ஆனால் இந்த மனம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது! என்ன வடிவம்? என்ன நிறம்? இதயத்தில் இருக்கிறதா? மூளையிலா? நெஞ்சுக் கூட்டிலா? 

எதுவும் தெரியாது. சிந்திப்பது மூளை என்பது மட்டுமே இன்று விஞ்ஞானரீதியாகத் தெரிகிறது. 

ஆனால் இயக்கும் மனமோ, எங்கே இருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாமலேயே மனித இனம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. 

அந்த மனத்தைத்தான் அம்பாள் கரும்பு மாதிரி கையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பு? 

கரும்பை லேசாக வளைத்தாலே போதும். அது நன்றாக மடங்கி வளையும். அழுத்தி வளைத்தால் பட்டென்று உடைந்து போகும்! 

இந்த மனமும் அப்படித்தான். அதை வளைக்கவும் வேண்டும்; அதே சமயத்தில் சரியாகப் பயன்படுத்தவும் வேண்டும்.


ஆதிசங்கர பகவத்பாதர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் சௌந்தர்யலஹரியைப் பாடினார் என்று பார்த்தோம். 

பஞ்சதன்மாத்ர ஸாயகாவாக, மனோரூபேக்ஷு கோதண்டாவாக உள்ளவளிடம் நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஒரு விஷயத்தைச் சொல்வார். 

மிகவும் அழகான விஷயம் அது. "அம்மா! நான் என்னுடைய புலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய காலடியில் போடுகிறேன்" என்பார். 



நேரடியாகச் சொல்ல மாட்டார். 'ஷட்சரணதாம்' என்பார். 

"உன்னுடைய காலடியில் வந்து விழுகிறேன்" என்பார். 

பஜகோவிந்தம் பாடும்போது அவர் என்ன சொல்வார்? 'குரு சரணாம் புஜ' என்பார். 

குருவிடம் போய்ப் போடவேண்டும் என்பார். எதைப் போட வேண்டும்? அம்பிகைதான் குரு. பின்னால் வரப்போகும் நாமங்களில் இதைப் பார்க்கப் போகிறோம். 

ஆகவே அம்பாளிடம் போட்டாலும் சரி, அந்த அம்பாளிடம் நம்மை அழைத்துக் கொண்டு போகும் ஆசார்யர்களிடத்தில் போட்டாலும் சரிதான்.

"நான் வண்டாக வந்து உன் காலடியில் விழுந்துவிட்டேன்" என்பார் ஆதிசங்கரர். 

வண்டுக்கு ஆறு கால்கள். தமிழில் அதை அறுகாலி என்றே அழைப்பதுண்டு. 

இந்த விஷயத்தில் நாம் ஒரு கேள்வி கேட்கலாம். 

"வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளனவே, மனிதர்களுக்கு இரண்டு கால்கள்தாமே? 'நான் வண்டு மாதிரி வந்து விழுந்துவிட்டேன்' என்று அவர் சொல்வதில் என்ன அர்த்தம்? இது நியாயமா?" என்று நாம் கேட்கலாம். 

ஆனால் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். வண்டு என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை. 'பிரமரம்' என்று நேரடியாக வண்டைக் குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

ஷட்சரணதாம்' - அறுகாலி என்ற பொருளுடைய சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்! 

அந்தப் பெயரைப் பயன்படுத்த என்ன காரணம் என்றால், மனிதர்கள் ஆறு கால்களை உடையவர்கள் என்று அவர் உருவகப்படுத்துகிறார்.

இந்த ஆறு கால்கள் எவை? ஐந்து புலன்களும் மனமும்தாம் ஆறு கால்கள்!



                                          👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐





Comments

ravi said…
Agreed .. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பாடி ராம தரிசனம் பெற்றவர் இன்று இங்கே வருவது நான் செய்த பாக்கியம்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..
பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே, மூதாதைகளைத் ‘தென்புலத்தார்’ என்கிறார்.
இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞையாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போகும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான். வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
‘தென் புலத்தார்’ என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.
பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை ‘சீர்திருத்த’க்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.
(நாளை ஆடி அமாவாசை)
ravi said…
https://chat.whatsapp.com/CRtcxp74bB89eDfd3NNqG2

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வைக்கம் சிவன் கோவில் பற்றிய பதிவுகள் :*

ஒவ்வொருமுறை நடை சாத்தும்போதும் பகலிலும் , இரவிலும் கோவில் அர்ச்சகர் ஒருவர் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து
யாரும் பசியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு செல்கிறார்.

அப்படி யாரேனும் பசியாக உள்ளேன் என்று சொன்னால் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவிட்டு பின் தான் கோவில் நடையை சாத்த வேண்டும். இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் பின்பற்றுகின்றனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரிலுள்ள வைக்கத்தப்பன் கோவில் தான் அது. வேண்டுபவர்களுக்கு, விரும்பியதை வழங்கும் தலமாகக் இந்த கோயில் திகழ்கிறது.

வியாக்ரபாதர் முனிவர் இங்கு பூஜை செய்து, இறைவன் கார்த்திகை - அஷ்டமியன்று காட்சி கொடுத்தார் . இறைவன் காட்சி கொடுத்த திதி இன்றும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றுமட்டும் சூரிய ஒளி சிவலிங்க திருமேனி மீது மாலையாக படும்.

இந்தக் கோவில் கருவறையில் இரண்டு அடி உயரப் பீடத்தில், நான்கு அடி உயரமுடைய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது. மூலவரான இவரது பெயர் மகாதேவர் என்பதாகும். இருப்பினும் அனைவருக்கும் பரவலாக அறியப்பட்ட பெயர் வைக்கத்தப்பன் என்பதுதான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் ‘வியாக்ரபுரீசுவரர்’ என்றும் இத்தல இறைவனை அழைப்பதுண்டு.

இந்த ஆலயத்தில் அம்மனுக்கு என்று தனியாகச் சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
https://chat.whatsapp.com/CRtcxp74bB89eDfd3NNqG2

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் பற்றிய பதிவுகள் :*

1. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பே எழுந்து காலை 7 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது .

2.எள்ளுடன் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் அளிக்கப்பட வேண்டும் .

3.பித்ரு காரியத்துக்குள் தர்ப்பைப் புல் பயன்படுத்துவது நல்லது . தர்ப்பைப் புல்லில் சூரிய ஒளி ரூபத்தில் பித்ருக்கள் வந்து அமர்வதாக ஐதீகம் .

4. நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை சுவதாதேவி , தர்ப்பைப்புல் மூலம்தான் பித்ருலோகத்துக்கு எடுத்து செல்வதாக ஐதீகம் .

5. தர்ப்பணங்கள் எப்போதுமே நதிகளின் கரைகளில் அல்லது கடற்கரையில் செய்யப்படவேண்டும் .

6. நம் முன்னோர்கள் மரணம் அடைந்த நேரம் , திதியை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் . ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகுந்த பலன்களை தரும் .

7. தர்ப்பணம் செய்யும் போது தாய் , தந்தை வழியில் 6 தலைமுறைக்கு முன்பு மறைந்த முன்னோர்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும் .

8. அமாவாசை , சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணத்துக்கு மிக அதிக சக்தி உண்டு .

9. மறைந்த முன்னோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரி , கெட்டவர்களாக இருந்தாலும் சரி , மகாளயபட்ச நாட்களில் ஆசி வழங்க நம்மை நிச்சயம் தேடி வருகிறார்கள் . இதை புரிந்து கொண்டு அவர்களது ஆசிகளைப்பெற வேண்டியது நமது பொறுப்பாகும் .

10. பித்ருகளுக்கு நாம் செய்யும் தர்ப்பணமானது பல யாகங்களுக்கு சமமானது. கன்யா ராசியில் சூரியன் இருக்கும்போது செய்யப்படும் சிரார்த்தம் பித்ருக்களை ஓராண்டு காலத்துக்கு திருப்தி அடைய செய்யும்.

11. ஒரு ஆண்டில் ஒருவர் 96 தடவை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஆன்மீக பூர்வமாக விளக்கங்கள் தந்துள்ளேன் என்பது ஒரு புறம் இருந்தாலும் பித்ரு தர்ப்பணம் செய்வதால் நமது பூர்வீக வரலாறு காப்பாற்றப்படுகிறது என்பது எதார்த்த உண்மையாகும். அதாவது நாம் தர்ப்பணம் செய்யும்போது தாய் தந்தை குளம் கோத்திரத்தின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்வதோடு தாய் மற்றும் தந்தை வழி வழியில் 6 தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்கிறோம்.

இப்படி நாமும் நமது வாரிசுகளும் தொடர்ந்து செய்வதால் நமது மூதாதையர்களின் பெயர் வரலாறு மறக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு அடுத்தடுத்து தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் தொடர்ந்து செய்யடுவதால் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம் வரலாறு அழிவதுமில்லை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்துள்ளோம் என்று கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை ..

ராம பரிவார் தரிசனம் அயோத்தியில் இருந்து நேராக சக்திக்குள் சரயு நதி போல் பாய்கிறது

அனுப்பும் நபரும் சாதாரணமானவர் அல்ல ராமனின் தாயார் கௌசல்யா ... 🪷🪷🪷🪔🪔🪔💐💐💐
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 294*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
மஹாபெரியவா எல்லா கோயில் ஆதீனகர்த்தாள்லாம் வெச்சுண்டு ஒரு ஸதஸ் பண்ணா. அப்போ சாயங்காலம் சந்தியாவேளை வந்தபோது, ‘சிவாய நம:’ன்னு 11 தடவை சொல்லிட்டு, இந்த sessionஅ இன்னொரு 5 minutesல முடிச்சுட்டு எல்லாரும் அவாஅவாளுடைய பகவானுடைய ஆக்ஞையான அனுஷ்டானத்தைப் பண்றதுக்குப் போகலாம். அந்த 5 நிமிஷம் delayக்கு பெரியவா ஒரு பிராயஸ்சித்தமா, ‘சிவாய நம:’ன்னு 11 தடவை சொல்லலாம்னு publicலயே announce பண்ணியிருக்கார். ‘சிவாய நம:’ங்கிறது எவரும் ஜபிக்கலாம். அதே ‘பஞ்சாக்ஷரம்’ங்கிறது குருமுகமா உபதேசம் வாங்கிண்டு ஜபிக்கணும்னு ஸ்வாமிகள் சொல்வார். ‘சிவாய நம:’ அல்லது சிவ நாமம்.

‘சிவ சிவ என்கிலார் தீவினையாளர்….. சிவ சிவ என்னச் சிவகதி தானே’

அப்படீன்னு சிவநாமத்துக்கு அவ்வளவு மஹிமை.
ravi said…
*கந்தர் அலங்காரம் 17* 🐓🦚🙏

*அலங்காரம்-03:*

*கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!*

அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை,

அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்!

எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும்,

வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,

கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?
ravi said…
*அழித்துப் பிறக்க ஒட்டா* = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!

பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!

பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்!

அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்!

அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!

எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 291* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஈச்’வரோ *விக்ரமீ* தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
[27/07, 17:27] Jayaraman Ravilumar: *76. விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)*
[27/07, 17:29] Jayaraman Ravilumar: கம்சனைக் கண்ணன் வதைத்ததால், கம்சனின் மாமனாரான ஜராசந்தன் கண்ணன் மேல் கடும் கோபம் கொண்டான்.

கண்ணன் வாழும் மதுரா மீது பதினேழு முறை படையெடுத்துத் தோல்வி அடைந்த ஜராசந்தன்,

தென்கிழக்குத் திசையிலிருந்து
பதினெட்டாவது முறையாகத் தாக்க வந்தான்.

*காலயவனன்* என்ற யவன மன்னனைத் துணைக்கு அழைத்துக் கொண்டான்.

யது குலத்தில் பிறந்த யாராலும் காலயவனனைக் கொல்ல முடியாது என அவனது தந்தைக்குப் பரமசிவன் வரம் அளித்திருந்தார்.

அதனால் யது குலத்தில் பிறந்த கண்ணனால் காலயவனனை வெற்றி கொள்ளவே முடியாது எனக்கனவு கண்டான் ஜராசந்தன்.👍
ravi said…
🌹🌺"‘வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான்’’ என்ற கண்ணன் ....என்பதை விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------🌺🌹நான் கண்ணனைப் பார்க்காமல் அன்னம் உண்ணமாட்டேன் என்று சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே முற்றுலுமாக தவிர்த்து வந்தார் ஊத்துக்காடு வேங்கடகவி.

🌺இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. பிரதிக்க்ஷனம் செய்யக் கூட அவரால் முடியவில்லை.

🌺தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதிக் பிரதிக்க்ஷனம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை.

🌺தன் பிராணன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார். இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் 'அலைபாயுதே கண்ணா!' என்று பாட ஆரம்பித்துவிட்டார்.

🌺அந்த பாடல் முழுநிறைவு தருவாயை நெருங்கிவிட்டது. (நீங்கள் இனி எப்பொழுது இந்த பாடலைக் கேட்டாலும் இந்த உணர்வுடனே அந்த பாட்டில் வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர் பிரியும் தருவாயில் தான் பாடினார் என்று உங்களுக்கு புரிய வரும்.)

🌺ஆனாலும் கண்ணன் வரவில்லை. மெய்மறந்து தன் தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார் வேங்கடகவி.

🌺திடீரென்று ஜவ்வாது மனமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்தது. அச்சமயத்தில் அவர் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது. ஆனாலும் தான் பாடுவதை நிறுத்தவில்லை.

🌺முழு பலத்தைக் கூட்டி சங்கீதத்தைக் கூட பாட முடியவில்லை. தொடையில் தாளம் போட முடியாதபடி கை இடறியது. ஏதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்றியது. அப்பா யாரது?

🌺நான் கண்ணனைக் காண வேண்டுமென்று வேகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் குழந்தையிடமிருந்து பதில் இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார்.

🌺உடனே அந்தக் குழந்தை இதழ்களை பிரித்து பேசத் தொடங்கியது. வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றார்.

🌺கண்ணா! என்று விழவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லை. இப்பொழுது என் பலமும் மனபலமும் சோர்ந்தபிறகு வந்திருக்கிறாயே கண்ணா!

🌺உன்னை கையெடுத்துக் கூட வணங்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

🌺அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய்.

🌺அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார்.


🌺பாடல் 🌹

🌺அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

🌺அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

🌺நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் (அலைபாயுதே)🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "'Venkatasubhai! Whom did this sub-period sing about! He is me'" A simple story explaining that Kannan.... 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 Oothukkadu Venkatakavi had been completely avoiding eating food for some time saying that I will not eat swan without seeing Kannan.

🌺 Due to this, the body became thin, the eyes became swollen and the vision started to fade. He was not even able to reflect.

🌺He completed a replication through his knee with great difficulty. Unable to perform next projection.

🌺 He felt that his prana was parting with today. I thought for a while about what to sing and then without delay I said 'Alaipayuthe Kanna!' He started singing that.

🌺The song is nearing completion. (Whenever you listen to this song from now on, listen to the words that come from the bottle with this feeling. You will understand that he sang it on the verge of dying.)

🌺But Kannan did not come. Venkatagavi was singing while absentmindedly beating his thighs.

🌺Suddenly the mind of Javvadu, the fragrance of Nagalinga flower and the cold air started to hit his mane. At that moment his vision was completely lost. But he didn't stop singing.

🌺Couldn't even sing a hymn with full strength. The hand stumbled so that the drum could not be placed on the thigh. It felt as if a child was lying on one's lap. Who is the father?

🌺 I am singing fast to see Kannan. There was no response from the child, he asked again and again, somewhat embarrassed by the lack of response, he pushed the child down.

🌺Immediately the child began to separate the magazines and talk. Lord Venkatasubai! This sub period sings who wants to see! He's me, take a good look at me! said.


🌺 Brother! Seeing Kannan without the power to fall, you did not appear during the period when all my organs were functioning properly. Now you have come after my strength and mental strength are tired!


🌺 When he was saying that he could not worship you even by holding his hand, the life was leaving little by little from Venkatagavi's body.


🌺 May Krishna accept that life without leaving it, devotee! You spend your days for me that I will come all your life.


🌺 He took Venkatakavi with him and went to his abode, Vrindavana, saying that he will not let you, such a high devotee, die in the world.



🌺 Song 🌹


🌺Wander dear, my mind is very wandering

Your blissful desire is in it


🌺Wander dear, my mind is very wandering

Your blissful desire is in it


🌺Standing like a statue without name

Standing like a statue without a name


Muralithara is very strange without knowing the time

My mind (wavering)🌹🌺

-------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Bhuvana guruji VS said…
Sir
Excellent. Great job. Happy to be associated with you
Sindhu VS said…
Ok sir thankyou for putting us together,we surely practice well with patience and lets us make our gurudhakshanam greater to our guruji🙏🪷 Kudos to your effort and everyone 👏👏
Bhuvana said…
I Thanks to Sriman Narayanan for accepting our chanting. Good try from us all. Let us practice properly today and chant tomorrow. Thanks to Jayaraman sir for all his efforts
Keerthi VS said…
Thank you sir for arranging the meeting in short span.
ravi said…
*கந்தர் அலங்காரம் 19* 🐓🦚🙏

*அலங்காரம்-03:*

*கழுத்தில் சுருக்கு! கந்தவேள் முறுக்கு!*

அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை,

அன்பால்
எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்!

எரி மூண்டது என்ன,
விழித்துப் புகை எழ பொங்கும்,

வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,

கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?
ravi said…
*எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால் =*

வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு?

*கூற்று* =உறுதியாகக் கூறுதல்!

கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்!

பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!

*கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?

=அவன் கழுத்தில் சுருக்கிடும் போது,

*"மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி!*

நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்!

நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா?

அப்போது வாய் வருமா?

ஹா ஹா ஹா!

எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை!

ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!

அந்த Fixed Deposit கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு!

ஆனால்...
கந்த Fixed Deposit என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து!

அதற்கு...
அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!

அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!💐💐💐
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 296*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
எப்படி உடம்புல அழுக்கு சேரவிட்டாலோ, துணிகள்ல அழுக்கு சேரவிட்டாலோ வ்யாதிகள் வருமோ அப்படி உள்ள அழுக்கு சேர்ந்தாலும் சம்சார வ்யாதின்னு ஒண்ணு வந்துடும்.

அது ஜன்ம ஜன்மாவா நம்மளைப் பிடிச்சுக்கும்.

அதனால அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஒருநாள் கூட பகவானுடைய சரண த்யானம் பண்ணாமல் போகக்கூடாது.

இந்த இடத்துல பகவான் அவாஅவாளுக்கு ஏத்தமாதிரி வந்து, அவா அவாளுக்கு பிடிச்ச மாதிரி காட்சி கொடுக்கறார்.

அம்மையும் அப்பனுமா குருவா வர்றார். அதுல, அம்பாளுடைய சரணத்துல நம்ப மனசை நிறுத்துறது ரொம்ப சுலபம்.

मातुश्चरणारविन्दे यदि ध्यायेते तर्हि चित्तस्य शान्तिः धृततरा भवति |
‘மாதுஷ்சரணாரவிந்தே யதி த்யாயேதே தர்ஹி சித்தஸ்ய சாந்தி: த்ருததரா பவதி’ –

இந்த பெரியவாளுடைய அம்பாள் பக்தி அங்கங்க வெளிப்படறது.

அம்பாளுடைய சரண கமலத்தை த்யானித்தால் மனத்துல அதிகமான சாந்தி ஏற்படுகிறது.

அதனால अतः भगवान् जगज्जननीरूपं यद् गृह्णाति तादृशरूपं हृदीकृत्वा तच्छरणारविन्दयोः दृढां भक्तिम् आबध्य चित्तस्य प्रथमं शोधनं कार्यम् |

‘அத: பகவான் ஜகஜ்ஜனனி ரூபம் யத் க்ருஹனாதி தாத்ருஷ்ரூபம் ஹ்ருதீக்ருத்வா தச்சரணாரவிந்தையோ: த்ருடாம் பக்திம் ஆபத்ய சித்தஸ்ய பிரதமம் ஷோதனம் கார்யம்’ –

அதனால அம்பாளா லோகமாதாவாக, காமாக்ஷியாக, பகவான் வரும்போது அந்த ரூபத்தை மனசுல நிறுத்தி, அவருடைய சரணாரவிந்தங்களில் பக்தி பண்ணுவதுதான் மனசை சுத்தப்படுத்திக்கறதுக்கு முக்கியமான வழி
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 293* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*76. விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)*

ஈச்’வரோ *விக்ரமீ* தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;

தோரணப் பந்தரிலும்-பசுத்
தொழுவிலும்

சுடர்மணி மாடத்திலும்,

வீரர்தந் தோளினிலும்-

உடல்
வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்

பாரதி சிரத்தினிலும்-ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.🪷🪷🪷
ravi said…
ஆனால் நகரமே காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் காலயவனன்.

அப்போது கண்ணன் புல்லாங்குழல்
ஊதிக் கொண்டு ஆனந்தமாக எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

“ஏய், கிருஷ்ணா! நான் தான் காலயவனன்.

போர் புரிந்து உன்னை வீழ்த்துவதற்காக வந்துள்ளேன்,
வா, என்னுடன் போர் புரிய வா!” என்றழைத்தான்.

அவனைக் கண்டதும் கண்ணன் வேகமாக மதுராவை விட்டு ஓடத் தொடங்கினான்.

“ஏய் மாடு மேய்க்கும் கோழையே! போருக்கு அழைத்தால் புறமுதுகிட்டு ஓடுகிறாயே!” என்று கத்திக் கொண்டு
காலயவனன் கண்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.👍👍👍
ravi said…
[29/07, 07:46] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 298* 🙏🙏🙏started on 7th Oct 2021
[29/07, 07:48] Jayaraman Ravilumar: *தடித்* = மின்னல்

*லதா* = கதிர் -

*கிரணம் சம* = அதனையொத்த = சமமான

*ருசிர* = வெளிச்சம் - ஒளி

*107 தடில்லதா சமருசி:* = மின்னல் கிரணங்களுக்கு சமமான ஜோதி ஸ்வரூபமானவள் 🪔⚡⚡⚡⚡⚡⚡💥
[29/07, 07:49] Jayaraman Ravilumar: ஸ்ரீ லலிதாம்பாள் மின்னல் போல் ஜொலிப்பவள்.

குண்டலினி பழகும் யோகிகள், பக்தர்கள், சித்தர்கள், அதனால் தான் முதுகுத்தண்டு முழுதும் ஒளிவிடுவதை உணர்வார்கள்.

குண்டலினியை சிவனோடு சிவை இணைவதை ப்ரம்மம் மின்னலாக ஒளிர்வதாக உணர்வார்கள்.

கேநோபநிஷத் ப்ரம்மம் மின்னலாக ஒளிவிட்டது என்று இதைத்தான் சொல்கிறது.

மஹா நாராயண உபநிஷத் வித்யாலோக ஒளி என்கிறது.

நிர்குண ப்ரம்மனான சிவனை சகுண ப்ரம்மமான சக்தி சேர்வதால் மிளிரும் ஞானஒளி.🪔🪔🪔
[29/07, 07:52] Jayaraman Ravilumar: *தடில்லதா ஸமருசி: -*

மின்னல் போன்றவள். பிரம்மரந்திர சந்திர மண்டலத்தில், மின்னல் போன்று கண நேரம் காட்சி தருகிற குண்டலினியானவள்,

பின்னர் கீழிறங்கி, தன்னுடைய மூலாதாரத்தை அடைந்துவிடுவதாக ஐதிகம்.🙏🙏🙏
[29/07, 07:56] Jayaraman Ravilumar: பட்டர் என்ன சொல்கிறார் ?

பாடல் 91

மெல்லிய நுண் இடை *மின்னனையாளை*
விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனையாளை

புகழ்ந்து

மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு

பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே👌👌

*மெல்லிய நுண் இடை மின்னனையாளை -* மென்மையும் நுண்மையும் உடைய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளை💐💐💐
ravi said…
[29/07, 07:37] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 298* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[29/07, 07:40] Jayaraman Ravilumar: *79* *மெல்லிய இடையின் அழகு*

*ஸர்வஜனமோஹனம், இந்திரஜால வித்தை*

நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ

நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ

சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா

ஸமாவஸ்தா ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே
79🪷🪷🪷
[29/07, 07:42] Jayaraman Ravilumar: பெண்குலத்தின் திலகமான பார்வதியே !

இயற்கையாகவே மெல்லியதும் நகில்களின் பாரத்தினால் வருந்துவதும்

அதனால் வளைந்த வடிவுள்ளதும்

மெல்ல மெல்ல ஒடிந்து போவது போல் இருப்பதும்,

இடிந்து போன நதியின் கரையில் இருக்கும் மரத்திற்கு சமமான நிலையில் நிற்பதுமான இடைக்கு

நீண்டகாலம் க்ஷேமம் உண்டாகட்டும். 🙏

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத்

தன்னந் தனியிருப் பார்க்கிதுபோலும் தவமில்லையே —

*அபிராமியந்தாதி*
53
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்
பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிறபோது, அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காருமிடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல், பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது. அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது. அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.

தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள். அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை. சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது. சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்கிரமாக இருக்கிறது. புலி எப்படி தன் லக்ஷியமான இரையை ஒரே பாய்ச்சலில் பிடித்து விடுகிறதோ அப்படி நம் தியான லக்ஷியத்தை மனசு விடாப் பிடியாகப் பிடித்துக்கொள்வதற்கே வியாக்ராஸனம் விதித்திருக்கிறது. அதில் அமர்ந்து அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

சூரியனை ஞான ஸ்வரூபமாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் சூரியப் பிரகாசம் தாபம் உண்டாக்குகிறது. அதுவே சந்திரனில் பிரதிபலித்து பரம சீதளமாகிறது. சந்திரனுக்கு ஸ்வபாவமாக ஒளி கிடையாது. அம்பாள் சூரியனைப்போல் ஸ்வயம் பிரகாசமாகவும், சந்திரனைப்போல் சீதளமாகவும் இருக்கிறாள். தாபத்தைப் போக்கும்போதே ஞானப் பிரகாசமும் தருகிறாள். ஞானம் தருகிற குருமூர்த்தி அவளேதான். காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும். அம்பாளையோ குருவாகத் தியானிக்க வேண்டும்.
ravi said…
ராமரும் அபிராமி பட்டரும்* 🪷🪷🪷

*அபிராமி பட்டர் சொன்ன கீதை*🪔🪔🪔
ravi said…
ராமா*

என் (அபி) *ராமியும்* நீயே என் *ராமனும்* நீயே ...

இருள் சூழ்ந்த வானம் தனில் அன்று (ராம ) *சந்திரனாய்* வந்தவன் நீயன்றோ *ராமா*

அன்னையின் செவிகளில் *தாடங்கமாய்* ஜொலிக்கிறாய் ..

அவள் கருணை *தடாகம்* அதில் அரவிந்தமாய் ஆட்சி புரிகிறாய் 🪷🪷🪷

அவளோ உதிக்கின்ற செங்கதிர் ... 🪔🪔🪔

நீயோ மதிக்கின்ற மாணிக்கம் .. ✨✨

அவளோ மாதுளம்பூ..

குங்குமம் எனும் குழம்பில் தோய்த்தெடுத்த கரும்பு

*ராமா*

நீயோ புன்னகைக்கும் தும்பை பூ ...

உன் உள்ளம் கண்டு வெண்மையும் வெட்கப்படுமே

அவளோ அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி ..
அருமறைகள் பழகி சிவந்த பாதாம் புயத்தாள் ...

உன் அழகோ அன்றலர்ந்த தாமரை .. 🪷🪷🪷

வண்டுகள் வாசம் செய்யும் புல்லாங்குழல் 🎼

பிணியும் அவளே பிணிக்கு மருந்தும் அவளே ..

துணையும் நீயே தெய்வமும் நீயே பெற்ற தாயும் நீயே குருவும் நீயே

ஏகன் அநேகனாய் வருபவன் நீயன்றோ

கண்ணியது அவள் புகழ் நான் கற்பது அவள் நாமம்

பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து *ராமா*

*ராமா* ..

உணர்வுடையோர் உள்ளத்தில் வசிப்பாள் அவள் ...

உணர்வே இல்லா தூணிலும்🦁

சாபம் கொண்ட கல்லிலும் 🙈

தாய்மை கண்டவன் நீயன்றோ *ராமா*

ஐந்தெழுத்தும் எட்டு எழுத்தும் இரண்டு எழுத்தாய் ஆன விந்தை உன் நாமம் புரிந்த சிந்தை ...

அறிந்தோர்க்கு இல்லை இனி அகந்தை ...

*அபிராமி பட்டரே ..*

அந்தாதி பாடியே ஆழ் கடல் முத்தெடுத்தீர்..

எடுத்த முத்துக்கள் அதை கோத்த உங்கள் கரங்கள் என்றும் உயர்ந்தே இருக்கும் *காஞ்சி மகான்* போல் ..

நிலம் வாடலாம் நீர் வற்றலாம் .. யுகம் மறைந்து போகலாம் ..

மாறாது என் தங்கை அவள் கருணை ...

வற்றாது அவள் தினம் அணியும் புன்னகை ...

போற்றும் என் நாமம் என்றும் புகழ் சேர்க்கும்
அவள் தாள் பணிவோர்க்கே 🙏👣👣
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 20*🦚🦚🦚
ravi said…
சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதிலுஞ்

சிவனேநீ ரறிகிலீர்

காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்

ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே. 20🙏🙏🙏
ravi said…
காலம் தவறாது நான்கு வேதங்களையும்,

சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும்,
மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும்

சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள்.

தன் உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள்.

தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எங்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.🙏🙏
ravi said…
*அம்மையும் அப்பனுமாய் *சதுரங்கம்* விளையாடிய தலம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர்

ஸ்வாமி: *சதுரங்க வல்லபேஸ்வரர்*
அம்மை: *ஸ்ரீராஜராஜேஸ்வரி*

*Chennai 44th Chess Olympiad 28/07/2022*. * 🪷திருப்பூவனூர். 🪷

*சதுரங்க வல்லபநாதர்*
*Chess Champion*

தல வரலாறு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 166 வது தேவாரத்தலம் ஆகும்.

சாமுண்டீஸ்வரி: மைசூரிலுள்ள சாமுண்டி மலையை அடுத்து இத்தலத்தில் தான் சாமுண்டீஸ்வரி தனி சன்னதியில் வடக்கு நோக்கி பிரமாண்டமாக வீற்றிருக்கிறாள்.
இத்தலத்தில் இறைவனுக்கு சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது. தெண்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

இறைவன் அவர்களுக்கு அருள முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான்.

சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை *சதுரங்க* விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான்.

பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான்.

மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மனம் முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான்.

இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார். இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார்.

மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் வடக்கே இருந்து சுமார் 12 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து தெற்கே சுமார் 4.5 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும் சிவ சிவ. **என்றும் பக்திப்பயணத்தில் உங்களுடன் நான் சிவக்குமார்🙏🙏🌹💐*
ravi said…
பிரதமர் மோதி கொண்டாடிய செஸ் சாம்பியன்
=====================================
இன்று செஸ் ஒலிப்பியாட் போட்டிகளைத் துவக்கி வைத்த பிரதமர் மோதி தனது உரையில் திருப்பூவனூர் சதுரங்கவல்லப நாதர் திருக்கோயில் பற்றிக் குறிப்பிட்டார். பூவனூர் எங்கே இருக்கிறது? சதுரங்கம் ஆடிய ஈஸ்வரன் யார்? இங்கே பார்ப்போம்.

பார்வதி தேவி வசுசேனன் என்ற மன்னனுக்கு மகளாக இப்புவியில் அவதரித்தார். சகல கலையிலும் பாண்டித்யம் மிக்கவளாகத் திகழ்ந்த அம்பிகை சதுரங்க விளையாட்டில் யாராலும் வெல்லமுடியாதவளாக இருந்தாள். உடனே மன்னன் சதுரங்கப் போட்டியில் வெல்பவனுக்கு தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தான். எவராலும் அம்பிகையை வெல்ல முடியவில்லை.

சிவபெருமான் சித்தர் வேடம் பூண்டு அங்கு வந்தார். அம்பிகையுடன் சதுரங்கம் ஆடி ஜெயித்தார். சித்தருக்கு எப்படி தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பது என்று மன்னன் சிந்தனையில் ஆழ்ந்த போது சிவபெருமான் தனது சொரூபத்தைக் காட்டியருள, அவருக்கே தனது பெண்ணாகப் பிறந்த அம்பிகையைத் திருக்கல்யாணம் செய்துவைக்கிறான்.

இந்தத் தலம் மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. ஹரித்ராநதியில் சைக்கிளில் ஏறி மேலப்பாலம் தாண்டியதும் நாலு மிதியில் பூவனூர் வந்துவிடலாம். இருபுறமும் புளிய மரங்கள் நிழல் தர ரோடோரத்தில் பாமணி சலசலக்க ஓடி வரும். ஆற்றுப் பாலத்தைக் கடந்தால் ராஜகோபுர தரிசனம் கிட்டும். சுற்றிலும் பச்சை வயல்கள் சூழ்ந்த ரம்மியமானப் பிரதேசம். இறைவன் சதுரங்கவல்லபநாதர் சுயம்பு மூர்த்தி. மைசூருக்குப் பிறகு இறைவி இங்குதான் சாமூண்டீஸ்வரியாக தனி சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறாள்.

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் வேர் கட்டி நீராடி நலம் பெறுகிறார்கள்.

“பூவனூர் புகுவார் வினை போகுமே..” என்று அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.

வினை தீர பூவனூர் சென்று சதுரங்கவல்லபநாதர் - சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.


#சதுரங்கவல்லப_நாதர்!
🙏🙏🙏
ravi said…
*விவேகசிந்தாமணி*

*25. வாய்மையே வெல்லும்*

மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடும் மேலும் நன்மை, வையக மதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார், பொய்யதைச் சொல்வா ராகில் போசனம் அற்பம் ஆகும், நொய்யரி சியாகா தென்று நோக்கிடார் அறிவுள் ளோரே.

*பொருள்*

உண்மையைப் பேசுபவர்களுக்கு நன்மை உண்டாகும். உலகம் அவர்கள் வசப்படும் மனிதர்களுக்குள் உயர்ந்தவராகி தெய்வீக குணங்கள் பொருந்தியவர் ஆவார். மாறாக, பொய்மை பேசினால் உணவு கிடைப்பதும் கடினமாகும். நொய்யரிசி கொதிதாளாது குழைந்துவிடுவது போல, இவர்களிடம் பெருந்தன்மையைக் காணமுடியாது என்று அறிவுடையவர்களும் இவர்களைக் கவனியார்.

(ஆகவே உண்மை பேசு, பொய்மை தவிர்.)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் 29/07/2022*

🌹🌻🌹🌻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*விவேகசிந்தாமணி*

*25. வாய்மையே வெல்லும்*

மெய்யதைச் சொல்வா ராகில் விளங்கிடும் மேலும் நன்மை, வையக மதனைக் கொள்வார் மனிதரில் தேவர் ஆவார், பொய்யதைச் சொல்வா ராகில் போசனம் அற்பம் ஆகும், நொய்யரி சியாகா தென்று நோக்கிடார் அறிவுள் ளோரே.

*பொருள்*

உண்மையைப் பேசுபவர்களுக்கு நன்மை உண்டாகும். உலகம் அவர்கள் வசப்படும் மனிதர்களுக்குள் உயர்ந்தவராகி தெய்வீக குணங்கள் பொருந்தியவர் ஆவார். மாறாக, பொய்மை பேசினால் உணவு கிடைப்பதும் கடினமாகும். நொய்யரிசி கொதிதாளாது குழைந்துவிடுவது போல, இவர்களிடம் பெருந்தன்மையைக் காணமுடியாது என்று அறிவுடையவர்களும் இவர்களைக் கவனியார்.

(ஆகவே உண்மை பேசு, பொய்மை தவிர்.)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் 29/07/2022*

🌹🌻🌹🌻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
கவிஞர் வாலி அவர்கள் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய ஒரு கவிதை.

ஆயிரத்து இருநூறு
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை;

அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!

காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை;

திரு –
மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !

‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….

காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!

துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;

கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;

அரிசிப் பொறி
அருந்தி –
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை;

நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;

அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;

அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
– கவிஞர் வாலி.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 74*

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः

नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।

आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं

लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥

மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
ravi said…
இந்த இடத்துல ஸ்ரீதரஹ எங்கிறதுக்கு அப்படி ஏதாவது பகவான் இவன் ரொம்ப பாபின்னு உதாசீனம் பண்ணனும் நினைச்சா கூட தாயார் லக்ஷ்மி தேவி நமக்காக சிபாரிசு பண்ணி ‘இந்த குழந்தையை காப்பாத்துங்கோ. உங்க பேரைச் சொன்னானே ன்னு சொல்வாளாம்.

ஸ்ரீதரஹ லக்ஷ்மிபதியான ஸ்ரீயஹ்பதியான எம்பெருமா ன்னு சொல்றார்.

அடுத்த இரண்டு வரியும் ரொம்ப அழகு. ‘ *ஆலஸ்யம் வ்யபநீய பக்தி சுலபம்’* -இந்த பகவான் பக்திக்கு கட்டுப் படறான்.

‘ *த்யாஸ்வ நாராயணம்’ நாராயண:*

எங்கிறதுக்கு நரர்கள் அடைய வேண்டிய ஒரு பதம்ன்னு அர்த்தம்.

பகவானைத் தான் நாம அடையணும். அதை எப்படி அடையலாம்னா பக்தர்களுக்கு ரொம்ப சுலபமானவன் அவன்

– அவனை நீ ‘ *ஆலஸ்யம் வ்யபநீய*

’ உன்னுடைய சோம்பலை ஒழித்து ‘ *த்யாஸ்வ நாராயணம்’*

அவனோட தியானத்தை நீ பண்ணு.

சும்மா தூங்கிண்டு இருக்காதே.

இரண்டு ஆவர்த்தி சஹஸ்ரநாமம் சொல்.

இப்படி அவனோட பக்தியை நீ பண்ணினால் ‘ *லோகஸ்ய வ்யஸனாபனோத³னகர:’* – உலகத்துக்கு வர்ற கஷ்டங்களையே அவன் போக்குவான்.🙏🙏🙏
ravi said…
🌹🌺 ' *அர்ஜுனா* .... *நீ..சர்வம் புஷ்பம் சிவார்ப்பணம்* *என்று சொல்லி மானசீகமாக பரமனுக்கு அர்ப்பணம் செய்யும் பக்தனை பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹" கிருஷ்ணா, இந்த பூவுலகில் என்னைவிடச் சிறந்த சிவபக்தன் யாராவது இருக்க முடியுமா?

🌺எனது பக்தியையும் கடும் தவத்தையும் வீரத்தையும் மெச்சி சிவபெருமானே எனக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்துள்ளதே இதற்குச் சான்று அல்லவா? என்று கேட்டான் அர்ஜுனன்

🌺கிருஷ்ணர் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னார். அர்ச்சுனா, இந்தச் சந்தேகத்தை சிவபெருமானிடமே கேட்டுவிடுவோம். நாளைக் காலை கயிலாயம் செல்வோம் வா, எனது யோக மாயாசக்தியால் உன்னை நான் அங்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.

🌺மறுநாள் விடியற்காலையில், வெள்ளிப் பனிமலையின் மீது உதிக்கின்ற செங்கதிர் ஒளி படர்ந்து பரவி பசுமை புல்வெளியில் பனிபடர்ந்து பரவி கயிலாயம் பொன்மயமாக ஜொலிக்கிறது. அப்போது கிருஷ்ணரும் அர்ச்சுனனும் சிவபெருமானை வணங்கினர்.

🌺அப்போது சிவபெருமான் வா கிருஷ்ணா, நான் கூறியபடி நீ அர்ச்சுனனைத் தவமியற்ற வைத்தாய், நீ கேட்டுக்கொண்டபடி அவனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிவிட்டேன் என்று கிருஷ்ணரிடம் கூறினார்.

🌺அர்ச்சுனன் வியப்போடு! கிருஷ்ணா, எனக்கு சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அருள நீதான் காரணமா? எனக்குத் தெரியாமல் போயிற்றே! அறியாமல் நான் கூறியதற்கு என்னை மன்னித்துவிடு என்று வேண்டினார்.

🌺அப்போது, சிவபெருமான் நந்திதேவரை அழைத்து வந்தார்! கிருஷ்ணரிடம், கிருஷ்ணா, இன்னும் ஓர் அதிசயம் அர்ச்சுனனுக்காகக் காத்திருக்கிறது.

🌺நந்திதேவரை, அழைத்து திவ்ய புஷ்பாஞ்சலி தோட்டத்திற்கு இவர்களை அழைத்து சென்று காட்டுங்கள் என்று கட்டளையிட்டார்.

🌺நந்திதேவரும் சிவபெருமான் கட்டளைஏற்றுக்கொண்டு நந்திதேவர் புஷ்பாஞ்சலி தோட்டத்தை அர்ச்சுனனுக்குக் காண்பித்தார். கிருஷ்ணர் ஒன்றும் அறியாதவர் போல் அவன் பின்னே தொடர்ந்தார்.

🌺நந்திதேவர் அர்ச்சுனனிடம் அர்ச்சுனா, பூவுலகில் பக்தர்கள் பூஜித்து அர்ச்சிக்கும் வில்வங்கள், மலர்கள்யாவும் கயிலாயம் சேர்ந்துவிடும். அவரவர் அர்ச்சனைகளுக்கேற்ப பல்வேறு அளவுகளில் ஆங்காங்கே குவியலாக இருப்பதைப் பார்.

🌺இவற்றை இறைவன் தனது திருக்கண்களால் நோக்கி அர்ச்சித்தவர்களுக்கு அருள்புரிவார்.

🌺அர்ச்சுனா, இதோ, நீங்கள் பூஜை செய்த பூக்கள். இரு கைகள் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன பார் என்றார்.

🌺அப்போது தூரத்தில் புஷ்பங்களாலான பெரிய மலையைக் கண்டு அர்ச்சுனன் வியப்படைகிறான்.

🌺 அர்ச்சுனன் நந்திதேவரே பார்த்து, நந்திதேவரே, பெரிய மலை போன்று குவிந்திருக்கின்ற இந்த புஷ்பமலைக்கு உரியவர் யார்? அவர் எவ்வளவு உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்! என்று வினாவினார்.

🌺அதற்கு நந்திதேவர் அவர் வேறு யாருமல்ல, உன் அன்பு சகோதரர் பீமனே, இப்பூவுலகில் அவருக்கு இணையான சிவபக்தி வேறு யாருக்கும் இல்லை என்பதை அம்மையப்பன் அறிவார்கள் என்று கூறினார்.

🌺அர்ச்சுனன் அதை நம்பாமல் சிரித்தபடி யோசித்தான்.

🌺நந்திதேவரே, சிரித்ததற்காக மன்னியுங்கள், பீமன் அண்ணா எங்களுக்காக நாள் முழுவதும் பல்வேறு வேலைகள் செய்துவிட்டு இரவு முழுவதும் காவலும் காப்பார்.

🌺அவருக்குப் பூஜை செய்யவும் அர்ச்சிக்கவும் நேரம் எது? என்று கேட்டார்.

🌺பீமன் வேலைகள் செய்யும்போது நடக்கும்போதும் எல்லாக் காலத்திலும் நமசிவாய என்று எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பார்.

🌺எங்கேனும் மலர்த் தோட்டத்தையோ வில்வ மரத்தையோ கண்டால் உடனே அர்ஜுனா....நீ...சர்வம் புஷ்பம் சிவார்ப்பணம் என்று சொல்லி மானசீகமாக பரமனுக்கு அர்ப்பணம் செய்வார்.

🌺அவ்விதம் வந்து சேர்ந்தவையே இந்த மலர்களும் வில்வ தளங்களும் மானசீகமாக அர்ப்பணம் செய்வது என்று கூறி முடித்தார் நந்திதேவர். 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Arjuna....You..Sarvam Pushpam Shivarpanam' about a devotee who mentally offers to Paraman - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 “Krishna, can there be a better devotee of Shiva than me on this earth?

🌺Isn't it a proof of this that Lord Shiva has given me Pasupadastra in recognition of my devotion, penance and bravery? Arjuna asked

🌺Krishna thought for a while and answered. Archuna, let us ask this doubt to Lord Shiva. He said let's go to Kailayam tomorrow morning, I will take you there with my yogic magic.

🌺The next morning, the red light rising over the silver snow spread and spread across the snow-covered green meadows, making Kailayam shine golden. Then Krishna and Archuna worshiped Lord Shiva.

🌺Then Lord Shiva said to Krishna, come Krishna, as I told you, you made Archuna penance, and as you asked, I gave him Pasupadastra.

🌺Archunan be amazed! Krishna, are you the reason Lord Shiva has blessed me with Pasupadastra? I did not know! He asked me to forgive him for what I had said without knowing.

🌺Then Lord Shiva brought Nandidev! To Krishna, Krishna, one more miracle awaits Arjuna.

🌺He called Nandidev and ordered him to take them to Divya Pushpanjali garden and show them.

🌺Nandidevar accepted Lord Shiva's orders and showed Archuna the garden of Pushpanjali. Krishna followed him as if he knew nothing.

🌺 Archuna to Nandi Devar Arjuna, bows and flowers worshiped by the devotees in the Earthly world will be added to Kailayama. See them piled up here and there in various sizes according to their ordinations.

🌺 The Lord will bless those who look at these with His pious eyes.

🌺Archuna, here are the flowers you worshiped. See, both hands are capacious, he said.

🌺 At that time, Archuna was surprised to see a big hill with flowers in the distance.

🌺 Archuna Nandideva saw, O Nandideva, who is the owner of this Pushpamalai which is piled up like a big mountain? How high a devotee he must be! he asked.

🌺Nandidevar said that he is none other than your beloved brother Bhima, Ammaiyappan knows that there is no one else in this world who has equal devotion to Shiva.

🌺 Archuna thought laughing in disbelief.

🌺Nandideva, forgive me for laughing, Bhiman Anna will do various jobs for us all day and keep watch all night.

🌺What is the time to worship him? he asked.

🌺 Bhima always chanted Namashivaya while walking and doing work.

🌺Whenever you see a flower garden or a bow tree anywhere, Arjuna....You...Sarvam Pushpam Shivarpanam will immediately offer it to Paramaman.

🌺Nandidevar concluded by saying that these flowers and bows are offered mentally. 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
கௌசல்யா said…
Arpudham எங்கள் சக்தியின் பட்டரே. ..மிக அருமயாக சொற்களை இங்கு பத பிரயோகம் செய்து இருக்கிறீர்கள்....🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 299* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*ஷட்சக்ர* = ஆறு சக்கரங்கள்

*உபரி* = மேலே

*சம்ஸ்திதா* - இருத்தல் -நிலைபாடு

*108 ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா* =

ஆறு சக்கரங்களுக்கு மேலே நிலை கொண்டிருப்பவள்

(மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரக, அனாஹத, விஷுத்தி, ஆக்ஞா ஆகிய சக்கரங்கள்)
ravi said…
*ஷட் சக்ரோபரி ஸம்ஸ்திதா* - ஆறு சக்கரங்களிலும் நிலைத்திருப்பவள்.🪔
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 299* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*79* *மெல்லிய இடையின் அழகு*

*ஸர்வஜனமோஹனம், இந்திரஜால வித்தை*

நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ

நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ

சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா

ஸமாவஸ்தா ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே
79🪷🪷🪷
ravi said…
பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!,

இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,

ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி

மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது.

அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.🙏🙏🙏
ravi said…
சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும்.

அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி,

ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார்.

இதனை அபிராமி அந்தாதியில் ' *சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்'* என்று கூறியிருக்கிறார் பட்டர்.🪷🪷🪷🪔🪔🪔
ravi said…
பொன்னிலும் மணிகளிலும் -

நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,

கன்னியர் நகைப்பினிலும்-
செழுங்
காட்டிலும்

பொழிலிலம் கழனியிலம்,
முன்னிய தணிவினிலும்-

மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்

பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம்.🪷🪷🪷
ravi said…
Friendship Day

நண்பர்கள் தினம் ஸ்பெஷல்

நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?

தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !

தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !

ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !

அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !

அவ்வப்போது அரவணைத்துச்செல்ல சில நண்பர்கள் தேவை !

அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை !

துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை !

ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !

நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !

எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை !

* இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை*

அந்த சிலரை தேடுங்கள்... கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள்...
ravi said…
இறைவனுடைனான நமது நட்பு
~~~~~~~~~~~~~~~~~

நட்பு என்பது என்ன?
எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் நம் நண்பருக்கு உதவுவதும், அவர் துன்பத்தில் இருக்கும் போது ஓடி வந்து அவருக்கு ஆறுதல் கூறுவதும் அவர் வளர்ச்சி கண்டு நாம் பேரின்பம் கொள்வதுமே நட்பு எனப்படும்.

இறைவனுடன் நாம் நட்பு கொண்டால் தான் இத்தகைய நன்மைகள் கிடைக்கும். இறைவன் நமக்கு மிகச் சிறந்த நண்பன். இத்தகைய பெரிய உலகத்தையே நாம் அனுபவிக்க வழங்கிய அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை. மாறாக அவன் நமக்கு வழங்குவது ஏராளம்.
இறைவன் நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டால் நமது வாழ்க்கை வளமாக மாறும்.
ravi said…
அர்ச்சுனன் கண்ணன் நட்பு :

அர்ச்சுனன் கண்ணனை தனக்காக நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். கண்ணன்நல்ல நண்பன். நல்ல நண்பன் என்ன செய்வான்? தன்னுடைய நண்பன் செருக்குக் கொள்ளும்போது அவனைக் கண்டித்து திருத்துவான். கண்ணன் அர்ச்சுனனை அப்படித் திருத்தினான். அர்ச்சுனன் மனம் தளரும் போதெல்லாம் அவனுக்கு நல்ல ஆறுதல் வழங்கியவன் கண்ணன். இறைவனாகிய கண்ணனை நண்பனாக பெற்றதால் அர்ச்சுனன் பெற்ற நன்மைகள் கணக்கற்றவை.
ravi said…
சுந்தரர் சிவபெருமான் நட்பு:

அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானை தன் தோழராகவே எண்ணினார். அதனால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார். அவர் பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சுந்தரர் தன் மனைவி பரவையார் மீது கொண்ட ஊடல் காரணத்தால், தன் நண்பனுக்காக பரவையாரிடமே தன் ஊடலை தீர்க்க தூதுவனாக அனுப்பினார், நண்பனுக்காக இறைவனே பரவையாரிடம் தூதுவனாகச் சென்று ஊடலை தீர்த்து வைத்தார். இத்துடன் இல்லாது சுந்தரர் வேண்டும் போதெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்து இடர்களைந்தார். இந்து சைவ சமய மார்க்கத்தில் அவர் இறைவனிடம் கொண்டது சகமார்க்கம் என்பதாகும்.
ravi said…
நண்பன் என்பவன் நிஜத்தைத் தொடரும்நிழலைப் போன்றவன். நட்புக்கு கரும்பை உவமையாக சொல்கிறது நாலடியார்என்னும் நீதி நூல்,
கரும்பை நுனியிலிருந்து தின்றுபடிப்படியாக அதன் அடிப்பகுதியை சுவைப்பது போன்றதாகும். இது போன்றுதான் பெரியோர்களின் நட்பு.

இறைவனிடம் நாம் கொள்ளும் அன்பு என்னும் நட்பு அளவிடர்கரியது. நாம் வழங்கும் அன்பையே உணர்வான். இறைவன் அன்பே வடிவானவன். இதனால் வள்ளலார், இறைவனை ” அன்பெனும் பிடிக்குள் அகப்படும்மலையே என்றார்.
திருமந்திரம் தந்த திருமூலரும் ” அன்பே சிவம் ” என்றார்.
ravi said…
ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட நட்பு :

ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதல் எனும் நட்பு. ஆண்டாள் இறைவனுக்கு அனுதினமும் முதலில் தான் அணிந்து அழகு பார்த் பின்புதான் இறைவனுக்கு சார்த்தினார்.

கண்ணப்ப நாயனார் காளத்தி நாதர் நட்பு:

கல்லும் கரையுமாறு கனி தமிழில் திருவாசம் பாடிய மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனாரை வியந்த பாராட்டுகிறார், அவர் இறைவர்பால் நட்புக்கு ஈடு இணை இல்லை அவர் அளவிற்கு அன்பு செலுத்துவர் யாரும் இல்லை என்கிறார். அன்பில் உச்சியில் கண்ணப்பர் நிற்கின்றார், இதனை அவர் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் ” என்ற வரியில் பாராட்டுகின்றார். கண்ணப்ப நாயனாரை சமயக்குரவர் நால்வரும் நக்கீரர் முதலிய பெரும் புலவர்களும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கண்ணப்பர் தான் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை முதலில் தான் உண்டு, அது சுவையாக இருந்தால் மட்டுமே அதனை இறைவனுக்கு படைப்பார், தன்கு என்ன சாப்பிடப் பிடிக்குமோ அதனையே இறைவனுக்கு நிவேதனம் செய்தார் கண்ணப்பர், இவர் அன்புருவாகி இறைவன் மீது எல்லையற்ற அன்பைச் செலுத்தி ஆறு நாள் தொண்டு செய்து முக்தி பெற்றார்
ravi said…
குகன் இராமபிரான் நட்பு :

கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். உயர்ந்த அன்புக் கருவூலமாக விளங்கினான். இராமபிரானிடம் அன்பு செலுத்தியவர்கள் பலர். அனுமன், சுக்ரீவன், விபிஷணன், ஜடாயு,சபரி, சரபங்கர் பாரத்துவாசர் முதலியோர் ஸ்ரீராமரை நேசித்தார்கள்.
ஆனால் சிறுபயன்கூட கருதாமல் நேசித்தவன் குகன், நிஷ்காம்ய பக்தி செய்தவன், நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன். என்று குகனை சுக்ரீவன் வியந்து பாராட்டுமளவுக்கு சிறந்தவன் குகன். இராமனுக்கு சிறந்த நண்பனாக குகன் விளங்கினான். ஆசாரம், கல்வி, தகுதி முதலியஒன்றினாலும் உயர்வு இல்லாத வேடர் தலைவன் குகன். எனினும், அவனை தன் தம்பி என்று கூறி தழுவிக் கொண்டார் ஸ்ரீராமர். இவர்களுடைய நட்பை கம்பர் தன் பாடலில் ” பொய்யில் உள்ளத்தன்” என்றும், இலட்சுமணன் இராமபிரானிடம் குகனைப் பற்றி கூறுங்கால், ” சுற்றமுந் தானும் உள்ளந் தூயவன் தாயின்நல்லான் ” என்று குறிப்பிடுகின்றார்.
ravi said…
இத்தகைவர்களிடமெல்லாம் அன்பு கொள்ள ஒரு தகுதி வேண்டும். இங்கே நட்பு என்பது மேலானது. பொருத்தமானது, அவசியமானதும் கூட, வாழ்க்கையில் எத்தனையோ உறவு முறைகள் இருந்தும், அத்தனையும் கடந்து நிற்பது நட்பு மட்டுமே.
ஒருவர் தன் தாயிடம் சில விஷயங்களையும் தன் சகோதரிகளிடம் சில விஷயங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களிடம் தனிப்பட்ட சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவர் நண்பரிடத்தில் மட்டும் தான் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் இது நட்பின் தனிச் சிறப்பாகும்.
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்னும பழமொழி கூட நட்பின் சிறப்பை விளக்க எழுந்ததேயாகும்.
“நல்ல நண்பனைப் பெறாதவன்
அந்தஇடத்தை காலியாகவே
வைத்திருக்கிறான் என்பது பெரியோர்களின் ஆழமான கருத்து”
ravi said…
நட்பு என்பது எல்லாவற்றையும் கடந்தது.
எந்தவித பிணைப்பும் இல்லாதது.
இணைப்பது.
நட்பு, நிர்ப்பந்தத்திற்குள் உங்களைத் தள்ளாது.

கண்ணன் எல்லோரிடமும் அன்பு பூண்டொழிகினான். ஆனால் அர்ச்சுனனையும் குசேலரையும் மட்டுமே நண்பர்கள் என்றான். இதற்கு என்ன காரணம்?
நாம் அனைவரிடமும் பழக முடியும். பேச முடியும், ஆனால் ஓரிருவரை மட்டுமே நண்பராக கொள்ளமுடியும். அதுவும் தன்மேல் அளவு கடந்த அன்பு கொண்டோரிடம் மட்டுமே நாம் நட்பு கொள்ள முடியும். வள்ளலார் இறைவனிடம் வேண்டும் போது, நண்பர்கள் எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு ” உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலாவாமை வேண்டும் ” என்கிறார்.
ravi said…
கண்ணன் மேல் அளவு கடந்த பக்தியும நட்பும் கொண்டவன் அர்ச்சுனன். கண்ணனிடம் ஆலோசனை கேட்காமல் எந்த செயலையும் செய்வதில்லை.
அர்ச்சுனன் மனம் தளர்ந்தபோதெல்லாம் அவனுக்கு ஆறுதல் கூறி, அவனை மீண்டும் நல்ல நிலைக்கு உயர்த்தினான் கண்ணன்.
ravi said…
குசேலர் கண்ணன் நட்பு:

குசேலர் ஓர் ஏழைப் பிராமணர். கண்ணன் அவருடைய பாலிய இளம் உயிர் தோழன். இருவரும் ஒரு சாலை மாணவரகள். கண்ணன் குசேலரை அளவு கடந்து நேசித்தான். குசேலரும் அப்படியே.
குசேலர் கண்ணனை காண ஆடம்பர பொருள்கள் ஏதும் கொண்டு வரவில்லை. பாவம் ஏழை பிராமணரிடம் அதெல்லாம் ஏது? அவரே வறுமையின் கொடுமையால் வாடியவர் ஆயிற்றே.
வறுமையின் கொடுமை தங்காமல் அவருடைய மனைவி அவருடைய பால்ய நண்பனான கண்ணனைக் கண்டு வரும்படி ஏதாவது பொருள் பெற்று வரும்படி அவலை மட்டுமே அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். தன்னுடைய நீண்டநாள் நண்பரான கண்ணனை பார்க்க வெறும் அவலை மட்டுமே கொண்டு போகிறோமே என்று கலங்கினார் குசேலர். எனினும் தன்னுடைய நண்பன் கண்ணன் தான் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என்று பார்க்காமல், தன்னுடைய நட்பை மிகவும் போற்றுவான் என்ற மனவுறுதியில் குசேலர் கண்ணனைக் காணச் சென்றார். குசேலரைக் கண்ட கண்ணன் தாய் பசுவைக் கண்ட கன்றுபோல துள்ளினான். தன் இருக்கையை விட்டு எழுந்து விரைந்து சென்று குசேலரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
குசேலரிடம் நலம் விசாரித்தான் கண்ணன். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான்.குசேலர் உறங்கும் போது இந்த கால்கள் எத்தனை மலைகளைக் கடந்து வந்தனவோ என்று மனம் உருகி அந்தக் கால்களை இதமாக பிடித்து விடுகிறான் கண்ணன்.
எத்தனை ஆழமான நட்பு கண்ணனுக்கும் குசேலருக்கும் இருந்த நட்பு!.
ravi said…
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு ” என்கிறார் வள்ளுவர்

இந்த நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தான் கண்ணனும் அர்ச்சுனனும், கண்ணனும் குசேலரும்.
அனைத்து உறவுகளின் கதாபாத்திரத்தையும் நிறைவு செய்தான் கண்ணன்.

நண்பன் என்ற சொல் அன்பனாக மாறுகிறது. எல்லா உறவுகளுமே பின் விளைவை ஏற்படுத்தும், ஆனால் நட்பு அப்படியன்று.
மனித வாழ்க்கையில் உள்ள உறவுகள் அனைத்தும் இறுதியில் கடனாக மாறும் நட்பு அப்படியல்ல. என்றுமே இளமை குன்றாமல் இருக்கும்.
ravi said…
நெல்லின் உமியானது நீக்கி விட்டு, மீண்டும் அரிசியை அந்த உமியில் போட்டால் முன்பிருந்த உறுதி அந்த நெல்லுக்கு இருக்காது.
அது போல்,, நெருங்கி பழகிய இருவர், ஒரு நாளும் பிரியக் கூடாது. பிரிந்து மீண்டும் இணைந்தால் பழைய நட்பின் உறுதி இருக்காது.
நட்பாக இருப்பதற்கு வயதும் இனமும் பொருளாதாரமும் கல்வியறிவும் ஜாதியும் மதமும் ஓத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. இவை ஒன்று கூட இல்லாமல் இருந்தால் தான் நட்பு.

அப்பர் பெருமான் வயதென்ன?
ஞான சம்பந்தர் வயதென்ன?
ஒருவர் முதியவர், இன்னொருவர் இளையவர், இவர்களுடைய நட்புக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை. இருவரும் இணைந்தே பல சிவத்தலங்கள் சென்று பதிகங்கள் பாடினர்.
நட்பு வட்டம் மயமானது.
ravi said…
ஆன்மிகத்தில் கண்ணன் கடவுள். அர்ச்சுனன் மனிதன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவருடைய நட்புத்தான் எல்லா புராண இதிகாச, வேத, உபநிடத, சாஸ்திர சம்பிரதாய உறவுகளின்உயர்வாக ஆழமாக போற்றப்படுகிறது.

இறைவன் தன்னை அனபர்களுக்கு முன் எளிமையாக்கிக் கொள்ள பெரிதும் விரும்புகிறான்.
இறைவனை நோக்கி பக்தன் ஓர் அடி எடுத்து வைத்தால் பக்தனை நோக்கி இறைவன் பத்தடி எடுத்து வைப்பான்.
தன்னுடையஅன்பர்கள் செய்யும் செயலை இறைவன் பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறான். அன்புதான் அவனுக்கு முக்கியம்.
சாக்கிய நாயனார் மனதில் அன்பு கொண்டு சிவபெருமானுக்கு கல்லால் அர்ச்சனை செய்தார். அது சிவபெருமானுக்கு பூ மாலையாக ஆனது.
ravi said…
மன்மதன் மனதில் அன்பில்லாமல் மலரையே அம்பாக சிவபெருமான் மேல் எய்தான். அந்த மலர் சிவபெருமானை எரிச்சலூட்டியது.
உடனே அவர் தன் நெற்றிக் கண்ணால் எரித்தார்.
சிவலிங்கத்தில் இரத்தம் வடிவதைக் கண்ட கண்ணப்பர் தன்னுடைய காலை சிவலிங்கத்தின் மீது வைத்து தன்னுடைய கண்ணை தோண்டி அந்த சிவலிங்கத்தில் பொருத்தினார்.
கண்ணப்பர் அன்பினால் செய்த இச்செயல் சிவபெருமான் விரும்பி ஏற்புடையதாயிற்று
தன் மனைவி பரவையார் தன்னிடம்கொண்ட ஊடலை தவிர்ப்பதற்கு சிவபெருமானையே தூதாக அனுப்பினார் சுந்தரர். சிவபெருமானும் பரவையாரிடம் நண்பனுக்காக தூது சென்று பிணக்கை நீக்கினார்.
எனவே, அன்பர்களுக்கு எளிமையானவன் இறைவன்.
ravi said…
மகாபாரதப் போரில் கண்ணன்அர்ச்சுனனுக்கு தேர்ஓட்டும் சாரதியாக பணி செய்தான். இது அர்ச்சுனின் மேல் கொண்ட நட்பின் சிறப்பு, நட்பு மட்டுமே இது போன்று பணியாளராக இதைச் செய்யும்.

கடவுளை நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்
” உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும் “.
Hemalatha said…
நிச்சயமாக அனுப்புகிறேன் அம்மா🙏🙏ஆடி அமாவாசை அன்று 151 பேருக்கு வடை பாயாசத்துடன் முழு சாப்பாடு வழங்கினோம்.சரோஜா ஆச்சி மற்றும் ரவி சார் சார்ப்பில் 90 பேருக்கு தக்காளி சாதம் வழங்கினோம்.சாய்ராம். ரவி சார் திருவாசகம் குரூப்பில் பதிவுகள் போடுவாரே அவர் தான் பச்சை புடவைக்காரி என்ற பெயரில் போடுவார்🙏🙏🙏
Hemalatha said…
பதிவு அல்ல.பொக்கிஷம்.இதெல்லாம் புத்தகமாக வெளிவர அந்த பெரியவாளே அனுகிரகம் பண்ணணும் 🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 75*

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः

नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।

आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं

लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥

மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
ravi said…
அவதாரம் எடுத்து ராக்ஷதர்கள் கிட்டயிருந்து பூமியை காப்பாத்தினான்.

அப்படி உலகத்தோட கஷ்டத்தையே போக்கறவன் சர்வம் விஷ்ணுமயம் ஜகத்துனு சொல்ற மாதிரி.

அப்பேற்பட்ட பகவான் ‘ *தா³ஸஸ்ய கிம் ந க்ஷம:’* –

உனக்கு வர்ற கஷ்டத்தை போக்க மாட்டானா?

எப்படி மார்கண்டேயனுக்காக பரமேஸ்வரன் வந்த யமனை காலால உதைச்சாரே, அந்த மாதிரி நீ விஷ்ணு பக்தி பண்ணிண்டே வந்தால் யமனுடைய வாதனைகள் உன்னை ஒண்ணும் பண்ணாமல் அந்த விஷ்ணு பகவான் உன்னை தன்னோட பாதங்களில், மடியில ஏத்துப்பார்னு ஒரு அழகான ஸ்லோகம்.👍👍👍
ravi said…
சுவிசேஷ மாஃபியா கும்பல்களுக்கு மோடி தரும் அதிர்ச்சி டிரீட்மெண்ட்டுகள்!!உலகம் கவனித்துக் கொண்டு இருந்த ஒரு மேடையில் போகிற போக்கில் ஒரு சிறிய தமிழக கிராமம் பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயம் பற்றிப் பேசி நாடு முழுவதும், உலகம் முழுவதும் ஒரு திடீர் பேசு/தேடு பொருளாக்கி விட்ட மோடி.*

ravi said…
இந்துக்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி மட்டம் தட்டிக் கொண்டே இருக்கும் பேரன்பின் சுவிஷேச திராவிட கல்பிரிட்டுகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தின் பெருமைகளை மங்கவைத்து, மறக்க வைத்து, கோவில்கள் வருமானத்தை தடுத்து அவற்றை சிதைய வைத்து, குண்டுகள் வைத்து அச்சுறுத்தி இந்துக்களை மதமாற்றம் நோக்கி நகர்த்தலாம் என்ற எண்ணத்தில் விழுந்தது நமது அன்னை மண்.
ravi said…
சும்மாதான் சொன்னார்..."கடவுளே இறங்கி வந்து விளையாடிய ஆட்டம் இது சதுரங்கம்..!!". ஆனால் ஆதாரத்துடன் கோவிலின் பெயரையும் ஸ்வாமியின் பெயரையும் அழுத்திச் சொன்னார்.உடனே உலகம் முழுவதும் அந்த ரீச்...அடேயப்பா!!கோவில் ஸ்தலவரலாறு துல்லியமாக இந்த விளையாட்டை இறைவன் இறைவி விளையாடியதைக் கூறுகிறது. ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு கூட அப்படி கோவில் இருக்கிறதா..உடனே போகலாமே என்று தோன்றி இருக்கும்.ரஜினி கூட ஒரு திகைப்பாக கேட்டுக் கொண்டு இருந்தார்.ஏன் அங்கு இருந்த பல தமிழர்களுக்கும் கூட இது அரிய செய்தியாகத்தான் இருக்கும்.
ravi said…
மன்னார் குடி அருகே பாமணியில்(SCN104 - சோழநாடு காவிரி தென்கரையில் 104வது தேவாரத்தலம்) இருந்து சில கிமீ தொலைவில் இருக்கிறது திருப்பூவனூர் ஸ்ரீசதுரங்கவல்லபநாத சுவாமி ஆலயம் (SCN103 - சோழநாடு காவிரி தென்கரையில் 103வது தேவாரத்தலம்).சுக முனிவர் வணங்கிய திருத்தலம் ஆதலால் கோவில் முழுவதும் பச்சைக் கிளிகள் அங்குமிங்கும் என பறந்து திரிவது அழகு.இரண்டு அம்பாள் சந்நிதிகள்.ஸ்ரீராஜராஜேஸ்வரி தான் இறைவருடன் சதுரங்கம் ஆட அவதரித்தவள். ஸ்ரீகற்பகவல்லி ஈசனுடனுறைத் தெய்வம்.மேலும் இங்கு ஸ்ரீசாமுண்டீஸ்வரி கடுமையான விஷத்தையும் கூட இறக்கி காப்பாற்றும் அதிசய சக்தி படைத்தவள்.கருங்குஷ்டம் எனும் கடுமையான நோய்களை நீக்கும் 'கிருஷ்ண குஷ்டஹர' தீர்த்தம் இங்குள்ளது.எத்தனை மகத்துவம் கொண்டதாயினும் பாமர மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படாத திருக்கோவில். ஆனால் அது இன்று ஸ்விட்ச் போட்டாற்போல திடீரென மாறி விட்டது.நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே தேடு/பேசு பொருளாகி விட்டது ஒரு தமிழ்நாட்டின் கிராமத்தில் இருக்கும் ஒரு பழங்கால சிறப்புடைய ஆலயம் இன்று லோகப்பிரசித்தி.அவன் மட்டுமே அறிவான் எது எப்போது எப்படி யாரால் நடக்க வேண்டும் என்பதை!!ஒரு கூன் விழுந்த பிராமண இளைஞன் கோவிலை அதிசுத்தமாக அனுஷ்டானங்களுடன் பராமரிப்பது மனதுக்கு இனிமை தரும் விஷயம்.
ravi said…
ஆனால் இந்துமத எதிர்ப்புக்கு அத்தாரிட்டியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கோவில் பற்றிய சிறப்பை சரியான இடத்தில் பேசியதுதான் மேட்டரே.கோவில் இடிப்புகளுக்கு பெயர் போன சுவிஷேச திராவிட கும்பலுக்கு அல்லையில் ஆசிட் ஊற்றியது போல ஒரு எரிச்சல் இனி இருந்து கொண்டே இருக்கும்."எரியுதடி மாலா, பேன பண்ணெண்டுல வைடி...கததான்!! கவர்னரோ அண்ணாமலையோ வேறு யாருமே சனாதனம் பற்றி சின்னதாக பேசினாலும் உடனே கத்தி கூப்பாடு போடும் மதமாற்ற கும்பலுக்கு மோடி எந்த சாய்ஸும் விட்டு வைக்க வில்லை. அவன்களுக்கு இது ஒரு RSS பார்ப்பன சமஸ்கிருத ஆரிய சதி என்று உருட்டவும் எந்தவொரு முகாந்திரமும் இல்லை.மறுநாள் விடிந்த பிறகும் இதுவரை அவர்களால் சிறு முக்கல் கூட எழுப்ப முடியவில்லை.நமக்கு எழும் நமுட்டுச் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
ravi said…
அதுவும் உலகம் முழுவதும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கும் மேடையில் சர்வ சாதரணமாக சனாதனச் சிறப்பை எடுத்துச் சொல்லி விட்டது ஒரு ஆர்பரிப்பில்லாத இந்து மதச் சிறப்பு பற்றியதொரு முரசறிவிப்பு போலத்தான்!! ஆனால் நமக்கு என்று ஊடகங்கள் இல்லாத ஒரு குறை பெரிதாக தெரிவது இந்த மாதிரி சமயங்களில் தான்.அந்தக் குறை மிகை வெளிப்படையாகவே தெரிகிறது.இதனை ஒரு விவாதப் பொருளாக்கி வைரல் ஆக்கும் ஒரு அழகான வாய்ப்பை இழந்து நிற்பது கவலையாக இருக்கிறது. ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசரஸ்வதி ஸ்ரீஇராமர், ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீஸ்கந்தன்,ஸ்ரீநடராஜர்,ஸ்ரீபார்வதி, ஸ்ரீஐயப்பன் என்று கடவுளர்களையும் இந்து மத மந்திரங்கள்,ஆலயங்கள், ஸம்ப்ரதாயங்கள் என்று ஒன்றையும் விடாது மிகவும் அழுக்குமனத்துடன் தாக்கிக் கொண்டே இருந்த மதமாற்ற கூட்டத்துக்கு சரியான ஆப்பு.மேலும் அவர்களால் தமிழ் தமிழன் என்று உருட்டுவதும் கூட முடியவில்லை...தமிழக ஆலயம் பற்றியே பேசி விட்டதால்...!!!
ravi said…
தமிழக முதல்வர் பதவியில் இருப்பவர் பேசித் தட்டிக் கொண்டு போக வேண்டிய தமிழ்நாட்டின் பெருமையை ஒரு குஜராத்தி பிரதமர் பேசி அசால்ட்டாகத் தட்டிக் கொண்டு போய்விட்டார். சதுரங்கம் நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பதையும் அது தமிழ்நாட்டில் புராண கால விளையாட்டு என்பதையும் பொட்டில் அடித்தாற்போல ஆன்மீக வரலாறு கலந்து ஆதாரத்துடன் சொல்லி விட்டுச் சென்றார் பாரதப் பிரதமர் மோடி.யாராலும் இதுவரை மறுத்துப் பேச முடியவில்லை.
ravi said…
ஆனாலும் தனக்குச் சொந்தமே இல்லாத விளையாட்டின் கருப்பு வெள்ளை ராஜா காய்களின் மண்டையின் மேல் குறுக்குச் சட்டத்தை சொருகி வைத்தான் பாருங்கள் அங்கே நிற்கிறான் அந்த மதமாற்றக் கல்பிரிட்டுக் களவாணி! அதற்கும் மேல் "இது பாரத பூமியின், தமிழ் நாட்டில் பிறந்த விளையாட்டு ஆச்சே,,.இங்கே இவைகளை எப்படி,எவன் சொருகினான்" என்று இனி உலகத்தையே யோசிக்க வைத்து விட்டார் பாருங்கள் அங்கே இந்த காப்பியடிக்கும் சுவிஷேசக் கில்லாடிகளை(!) மண்டியிட வைத்தார் நமது அன்னை பூமியின் மைந்தன் நரேந்திர மோடி!!

*ஸ்ரீ'ஜூலை 22!!*
ravi said…
*சக்தி குழு அன்பர் களுக்கு ஒரு இனிய வேண்டுகோள்*

ஓவ்வொரு சனிக்கிழமையும் .. காலை 11 or 12 மணிக்கு ( எல்லோர் சௌகரியபடி மாத்திக்கொள்வோம்)ஒருமணி நேரம் சிறிய satsang பண்ணலாமா ... விஷ்ணு சஹஸ்ரநாமம் ....

இது ஒரு informal group .. நமக்குள்ளே தான் . அடியேன் satsang coordinator .

*Steps involved*

1. One whatsapp group will be created with interested and names given people

2. Slokam in audio will be sent to all to watch pronunciation . Also VS sloka pdf will be shared .. you may hv to take a print of it and use it for chanting .

3. Google meet link will be shared by satsang coordinator and also coordinator shall allocate sloka number to be chanted by each participant .

4. Mistakes are welcome but to be corrected in due course .

5. Seeing the progress we can increase the frequency of chanting .

நமக்காகவும் உலக க்ஷேமத்திற்காகவும் VS சேர்ந்து சொல்லுவோம் .

எல்லாம் தந்த இறைவனுக்கு வாரத்தில் ஒரு முறை ஒரு மணி நேரம் ஒதுக்க நம்மால் கண்டிப்பாக முடியும்.

வருங்கால சந்ததிகள் நன்றாக இருப்பார்கள்

நாளை 11மணிக்குள் உங்கள் விருப்பத்தை அடியேனுக்கு தெரிவிக்கவும் ..

என் வேண்டுகோள் is not a compulsory but for a compelling reason...

நன்றி ... Jai Sree Ram 🙏
ravi said…
🌹🌺"‘ *பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்ட பெருஞ்செல்வர்.... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர்.

🌺இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.

🌺பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது.

🌺பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.

🌺தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

🌺பட்டினத்தடிகளின் பாடல்🌹

🌺இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;

🌺பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்
மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள்

🌺பின்
ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார்

🌺நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு

🌺பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு

🌺சுற்றத்தை
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே...

🌺நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

🌺காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே🌹🌺

🌺தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இன்றும் காணலாம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
https://chat.whatsapp.com/CRtcxp74bB89eDfd3NNqG2

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய பதிவுகள் :*

சுவாமி எதிரே நிற்காதீர்! கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர்.

கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண்படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு.

அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

*கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்*

பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது

வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது

சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது

பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது

கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது

கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது

கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது

நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது

தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும்

ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது

மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது

கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது

கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது

பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் இறைவனை தவிர மற்றவரை வணங்க கூடாது

கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது

ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது

அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்

தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது

கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது

சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது

கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை அலம்பக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை அலம்ப வேண்டும்.

கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்

கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும்

ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ இடையுறு செய்யக் கூடாது.(உதாரணம்: கோவில் உள்ளே செல் போன் பேசுதல்)

*‌கோவில்களில் கடைப்பிடிக்க வேண்டியது :*

கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.

கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.

கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.

கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.

கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது.

பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🌹🪷🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

மஹாபெரியவா போதனையிலிருந்து எனக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஏற்ற அறிவுரை, மேற்கோள்கள் மற்றும் போதனைகள்.

* எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள்*

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது... உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்? இல்லையே.

இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை. மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது!

நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ! உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள்.


🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

https://chat.whatsapp.com/FR6Gkcf9ArIGlNzUSjKZDO

" அரே.அல்லா..!"

(எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள்.அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சர்யமில்லை.)

ஒரு முஸ்லிம் அன்பரின் பரவசம்.

சொன்னவர்-ஓர் அன்பர்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.
ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகாவினுள் அடங்கியுள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது.

அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டு மென்று அழைத்தற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள்.

அன்று மத்தியான வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார்.

அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம்.

அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன், காலையில் ரிக்‌ஷாவைப் பிடித்துக் கொண்டு போனபோது, 'பாபா' என்னைப் பார்த்தீர்கள். எனக்கு அல்லாவையே நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு தோன்றியது. மேலும் என்னுடைய தாய் பாஷையான உருது மொழியில் ஏதோ பேசிய மாதிரி தோன்றியது. வேலை முடித்து இப்போதுதான் வரமுடிந்தது. வீட்டில் என் மனைவியும் தரிசனம் செய்த விஷயத்தைச் சொன்னாள்."

இவ்விதம் சொல்லி வணங்கி எழுந்த அவருக்கு, பழங்கள் கொடுத்து அனுக்ரஹித்தார்கள்.

எல்லாவுமாயுள்ள மகாப் பெரியவாள். அல்லாவுமாகக் காட்சி தந்ததில் ஆச்சர்யமில் லை.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 300* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*மஹ* = விழா - கொண்டாட்டம்

*ஆசக்தி* = பிடித்தமான

*109 மஹாசக்தி* =

பண்டிகைக் கொண்டாட்டங்களில் விருப்பமுள்ளவள் ( சிவ தத்துவத்துடன் பராசக்தியின் ஐக்கியத்தின் விழா)

(மஹா அல்ல மஹ + ஆசக்தி என்று பொருளுணர வேண்டும்)
ravi said…
*109 மஹாசக்தி =*

பெரும் வலிமையும் மேன்மையும் மிக்கவள் -

ப்ரபஞ்சத்தின் உயர்ந்த காரணகர்த்தா

( 'மஹாசக்தி' என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருள் பிரித்து உணரலாம்)

பெரியவள். உற்சாகமும் தேஜஸும் நிரம்பியவள்.

அம்பாளுக்கு விசேஷங்கள் விமரிசைகள் பிடிக்கும்.

இங்கே விசேஷம் விமரிசையே காத்திருந்த காமேஸ்வரனோடு காமேஸ்வரி அம்பாள் ஐக்யமாவது தான்.

நம்மைப்போல் வெளியுறவு இல்லை.

குண்டலினியை வெளியே அறியமுடியாத உள்ளுறவு தானே. சிவை சர்வசக்தியும் பெறுவது.👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 300* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*79* *மெல்லிய இடையின் அழகு*

*ஸர்வஜனமோஹனம், இந்திரஜால வித்தை*

நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ

நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ

சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா

ஸமாவஸ்தா ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே
79🪷🪷🪷
ravi said…
தரை மடந்தை பரவு மங்கை

தன தடம் பொறாது நின்
திருமருங்குல் அற வளைந்து

சிறுகி மூவிரேகையாய்
வரை பிளந்தொர்

இடிகரைக்குள்
வாழ் மரத்தொடு

ஒத்ததால்
உரை கடந்து விடுமுன்

மற்றொர் உறுதி தேட நாடுமே🪷🪷🪷
ravi said…
மண்மகளாம் பூமி தேவி வணங்கும் பெண்ணாகிய அம்மையே!

உன் பென்னம் பெரிய திருமுலைகளின் பாரம் பொறுக்க இயலாது உன் திருமருங்குல் (இடை) ஒடிந்து விடுவதைப் போல் வளைந்து சிறுகி மூன்று மடிப்புகளுடன், பாறையைப் பிளந்து ஒரு ஆற்றின் இடிந்த கரையில் வளர்ந்திருக்கும் மரத்தை ஒத்திருக்கிறது.

சொல்ல இயலாத நிலையை அடைவதற்கு முன்னர் ஓர் உறுதி உன் திருமருங்குலுக்கு ஏற்படட்டும்.🙏🙏🙏
ravi said…
மண்ணினுட் கனிகளிலும்-மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,

புண்ணிய வேள்வியிலும்-உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும்-

நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,

நண்ணிய தேவிதனை-எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்
ravi said…
ராமரும் கபீர்தாசரும்* 🙏🙏🙏

*கபீர்தாசர் சொன்ன கீதை* 🪷🪷🪷
ravi said…
ராமா*🙏🙏🙏

நெசவு வேலை செய்தேன் ராமா ...

நெசவு என்ன; பாவு என்ன?

போர்வை நெய்யும் நூல்கள்தான் என்ன?

எட்டு கமலங்கள், ஈரைந்து ராட்டினங்கள்!

ஐந்து மூலப் பொருள்கள்.

மூன்று போர்வை குணங்கள்.

எல்லாம் சேர்த்து பரமன் போர்வை செய்ய பத்து மாதங்கள்"

என்றே உணர்ந்தேன் ...

உன் நாமம் என்னில் இடம் புகுந்ததே *ராமா*

குருவை தந்தாய்

உன் உரு கண்டேன் ..
என் திரு உயரக்கண்டேன்

மறு பிறவி இனி தரும் பிணி இல்லையே
*ராமா*

ஜபமாலையை உருட்டுகிறார் பலர்

நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்கிறார் சிலர்

கற்றைச் சடாமுடியைக் கட்டிக்கொள்கிறார் அலர்...
.
என்ன செய்தால் என்ன?

அவர் நெஞ்சில் ஈரம் இல்லா விடில்
அன்பு இல்லா விடில் .

விடியல் உண்டோ *ராமா* ?

உனை அடைவது சுலபமோ *ராமா* ?

ராம்--- ரஹீம்
கேசவன் --கரீம்

இவர்களுக்கு இடையே ஒரு மாறுபாடு உண்டோ *ராமா ?*

எனக்கு இருவரும் ஒன்றுதானே

‘ஏக மேநத்விதீயம்’- ஒன்றே உண்டு.

இரண்டாவது கிடையாது.

என் ராமன் ரஹீமே.

கரீம் கேவசன்.

*அல்லாவும் அதே ராமனே.*

ஐயத்தை ஒழித்தேன் *ராமா*

உலகத்தைத் தாங்குபவன் நீ ஒருவனே அன்றோ *ராமா*

*கபீர்தாசரே* ..

இறை என்று இரண்டு இல்லை .

இரை தேடும் மாந்தர்கள் இதை ஏனோ புரிந்து கொள்வதில்லை

மறை ஒன்றே .
வரை காணா அன்பு என்றும்
நரை தாண்டி நிற்கும் 👍

மதம் படைத்தவன் மதம் கொண்ட மனிதனே ..

ஐந்தறிவில் ஏதும் மதம் உண்டோ ?

அங்கே என் கடவுள் உன் கடவுள் என்றே பேதம் உண்டோ ..?

ஐந்தெழுத்தையும் எட்டழுத்தையும் சுருக்கி இரண்டு எழுத்தும் கூட சொல்லாமல் இருந்தால்

ரஹீமும் கரீமும் ராமனும் வருவதெங்கே ... ?

நெஞ்சில் ஈரம் இல்லாதவர் காய்ந்து போவதில் வியப்பென்ன ?

ஒன்று சொல்லி என்னை உயர வைத்தாய் *ராமா* ..

காஞ்சியில் பிறந்ததே மீண்டும் கேட்பேன் உன் காலடி ஓசை தனை ...

கலவையில் கலந்தே கவி புனைவேன் இன்னொரு ரகு வம்சம் தனை ... 💐💐💐
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 75*

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः

नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।

आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं

लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥

மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
ravi said…
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥

இந்த பாபங்கள் எல்லாம் பண்றதுக்கு ஒரு முக்யமான காரணம், இந்த உலகத்தில் இருக்கிறவர்களை என்னைச் சேர்ந்தவர்கள்னு நினைச்சு அவாளுக்குகாகத் தான் நான் பண்றேன்.

சம்பாதிக்க வேண்டாமா?

குழந்தைகளுக்காக சேர்த்து வைக்க வேண்டாமா?

இப்படியெல்லாம் நாம நினைச்சுக்கறோம்.

அதுக்கு அடுத்த ஸ்லோகத்துல பதில் சொல்றார்.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 22*🦚🦚🦚
ravi said…
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்

செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார்

விளங்குகின்ற மாந்தரே

எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே. 22🪷🪷🪷🪷🪷
ravi said…
தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது.

அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள்.

இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது.

நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம்

முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.🙏🙏🙏
ravi said…
🌹🌺 "Realizing the impermanence of material things, Perunjelvar, who attracted God's milk and became an ascetic.... A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------

🌺🌹He who is said to be Pattinathar and Pattinathadi was born during the Cholas period, AD. A monk who lived in the 11th century. His original name was Thiruvenkadar.

🌺He was a businessman who understood business in Cauverypoompattinam
He made a lot of money in sea trade.

🌺 Realizing the impermanence of material things, he is attracted to God and is an ascetic. He renounced Perunjelvam and is regarded as equal to Gautama Buddha in Tamil Nadu.

🌺 He is widely admired for his claim that no one gives up like a starving man.

🌺 There are many people who still shed tears listening to the song that their mother sang when she died before setting her body on fire.

🌺Song of Patnathadis🌹

🌺 My heart says that what is is a lie and is going away
Do not harm anyone;

🌺 Cotton trouble
To be who we are, dogs and foxes are devilish eagles
It is what it is
Bathe with ground turmeric in the evening
The work mankett is awake and burning
She gave birth, brought up, named, gave birth to
She will do it if she wants

🌺 After
There are a couple of gods and there is a lot of wealth
On that day, hungry people will face you

🌺Goodness and friendship
Good luck to us
The advice is the same for you forever mind
Believe in the feet of the two angels

🌺 Two evil bodies like puppets
The two circles are like a dense market crowd
Be a dense market crowd

🌺 Surroundings
Be like the flow of water that flows through life
Be like the flow of water that flows through life
My heart is the same for you...

🌺 Looking for new finance by telling falsehoods
Gathering Nariyar who knows nothing
Like a burst of lightning
You will have restless sons

🌺 You will protect and never give up
Stepping into the covered tree hole
Like a monkey shaking off danger
Agapattire Kitandushula Agapattire 🌹🌺

🌺 In his final days, Pattinathadigal came to Tiruvottiyur, where he covered himself with mud while playing with children on the beach and died. Only one lingam can be seen at the place where he disappeared 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*மதுரை மீனாட்சி அம்மன் கோவில்* *மேல சித்திரை வீதியும்,வடக்கு* *சித்திரை வீதியும் சந்திக்கும்* *மூலையில் (அதாவது மீனாட்சி* *அம்மன் கோவிலுக்கு வெளியே*
*வாயு மூலையில் )அருள் பாலிக்கும்*
*ஸ்ரீ பாதாள குபேர பைரவர்*!

மதுரைவாசிகள் எத்தனை பேருக்கு இப்படி ஒரு "குபேர பாதாள பைரவர் கோவில்" உள்ளது தெரியும்?

மதுரை வடக்கு கோபுர வாசல் மேற்கு கோபுர வாசல் சந்திக்கும் இடத்தில் பழைய பெமினாஜவுளி கோபி அய்யங்கார் கடை மூலையில் மீனாட்சி அம்மன் கோவில் பூந்தோட்ட வளாகத்தில் சரியாக தினமும் ராகு கால நேரத்தில் மட்டுமே திறந்து பூஜைகள் நடக்கும் அற்புத "குபேர பாதாள பைரவர் கோவில்"அமைந்துள்ளது

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு இருக்கும் பைரவர் குபேர பாதாள பைரவராக காட்சியளிக்கிறார்.

இப்படிபட்ட குபேர பாதாள
பைரவரை வேறு எந்த கோவிலிலும் காணமுடியாது

இந்த கோவிலில் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே
நடை திறக்கப்படும்

அதுவும் ராகு காலத்தில் நடை திறக்கப்பட்டு இராகு காலம் முடியும் நேரத்தில் நடை சாத்தப்படும்.

இராகு காலத்தில் மட்டுமே இந்த பைரவருக்கு பூஜைகள் நடைபெறும்.

திங்கள் 7.30 முதல் 9 மணி வரை

செவ்வாய் 3 முதல் 4.30 மணி வரை

புதன் 12 மணி முதல் 1.30மணி வரை

வியாழன் 1.30 மணி முதல் 3.00 மணி  வரை

வெள்ளிக்கிழமை 10.30 முதல் 12 மணி வரை

சனிக்கிழமை 9 முதல் 10.30 மணி வரை

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை 

மட்டுமே இந்த கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது

இந்த பைரவர் பாதாள குபேர பைரவராக காட்சியளிப்பதால் செல்வச் செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அது மட்டும் அல்லாது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள், சிக்கல்கள், பில்லி, சூனியம் என அனைத்தையும் விரட்டி அடிக்கிறார்.

ஒரு மனிதனுக்குத் தேவையான ஆயுள், ஆரோக்கியம், செல்வம், திருமணம், குழந்தைபேறு என அனைத்தையும் வழங்குகிறார்.

பக்தர்கள் வேண்டும் வேண்டுதலுக்கு உடனே செவிசாய்த்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

பூர்வ ஜென்ம பலன் இருப்பவரால் மட்டுமே இந்த பைரவரை தரிசிக்க முடியும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் மறக்காமல் இவரையும் தரிசித்து பலனடையுங்கள்!

 🙏திருச்சிற்றம்பலம்🙏

ஸ்ரீ பாதாள குபேர பைரவர் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் காணொளிக்காட்சி!👇🏻👇🏻
ravi said…
சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோவில் பால் பாயசமும்

கேரளத்திலுள்ள அம்பலப்புழா, ‘தென்னகத்து துவாரகை’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.

அம்பலப்புழா கிருஷ்ணர் கோயிலை தேவ நாராயணன் தம்புரான் என்ற மன்னன் கட்டியதாக வரலாறு.

மூலவர் இங்கு குழந்தை கிருஷ்ணராகக் காட்சி தருகிறார்.

திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூர் உற்சவ மூர்த்தியை இங்கு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கோயிலின் நைவேத்தியமான “அம்பலப்புழா பால் பாயஸம்” மிகவும் பிரசித்தி பெற்றது.

குருவாயூரில் காலையில் பால் பாயசம் சாப்பிடும் கண்ணன், மதியம் அம்பலப்புழாவிற்குப் பால் பாயசம் சாப்பிட வருவதாக ஐதீகம்.

அம்பலப்புழா பால் பாயஸத்தைப் பற்றிய சுவையான கதை ஒன்று உண்டு.

கண்ணனின் சதுரங்க விளையாட்டும் அம்பலப்புழா பால் பாயஸமும்:

முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார். அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு வேறென்ன தேவையாக இருக்க முடியும்? எனக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான். சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டு, அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது. முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 20-வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று. இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான்.
64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.

அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார். அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான்.

இன்றளவும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

'ஓட்டம் துள்ளல்' என்ற கலை இங்கிருந்து வந்தது என்கிறார்கள். துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள முன்னோடி. அவர் இங்கு தான் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை மலையையாளத்தில் மொழி பெயர்த்தார்.
மலையாள மீனம் மாதத்தில் அம்பலப்புழா ஆறாட்டு 10 நாட்கள் நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று ஆறாட்டு நடை பெறுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 47ல் ஆலப்புழாவிலிருந்து 14 கிமீ தொலைவில் தெற்கே உள்ளது. எர்னாகுளத்திலிருந்து 10 கி.மீ, தொலைவில் உள்ளது.
குருவாரூருக்கு அடுத்து புக்ழ் பெற்று விளங்குகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில்.

ராதே கிருஷ்ணா!

இனிய காலை வணக்கங்கள்!
ஜய் ஸ்ரீ ராம்!
ஜய் ஹிந்த்!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
இதோ நான் உட்கார்ந்து கொண்டிருக்கிற மணையைப் பார்த்தவுடன் இதைப் பண்ணின ஒருத்தன் இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறீர்கள். அதோ அங்கே, இதோ மரத்தால் ஆனதுதான் – ‘ஆனது’ என்ன? மரத்திலிருந்தே விழுந்ததுதான் – ஒரு கிளை கிடக்கிறது. அதைப் பார்த்தவுடன் ஒரு தச்சன் பண்ணியிருப்பதாக யாரும் நினைப்பதில்லை. ஏன்? இந்த மணையை ஒரு சீராக, ரெக்டாங்கிளாக (நீள் சதுரமாக) இழைத்திருக்கிறது. பூமியின் தூசு தும்பு படாதபடி, பூச்சி பொட்டு ஏறாதபடி இதிலே கீழே கட்டைகள் அடித்திருக்கிறது. இம்மாதிரி இதிலே ஒரு ஒழுங்கு ஏற்பட்டிருப்பதாலும், உட்கார உபயோகமாகணும் என்ற பர்பஸில் (நோக்கத்தில்) இந்த மணையில் இந்த ஒழுங்கை உண்டாக்கியிருப்பதாலும் இதற்கு ஒரு கர்த்தா இருக்கணும் என்று முடிவு செய்கிறோம்.
ravi said…
ஜடமான ஒரு மரப் பீஸ் தானாகத் தன்னை ரெக்டாங்கிளாக இழைத்துக் கொண்டு, கட்டை அடித்துக் கொண்டு மநுஷ்யாள் உட்காரணும் என்ற பர்பஸை ஃபுல்ஃபில் பண்ணும்படியாக (நோக்கத்தை நிறைவேற்றுவதாக) ரூபம் கொள்ள முடியாது என்பதால் புத்தியுள்ள ஒரு ஜீவன்தான் இதைச் செய்திருக்கணும் என்று தீர்மானிக்கிறோம்.

அங்கே கிடக்கிற கிளையோ முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. இந்த மணையில் இருக்கிற ‘ஆர்டர்’ அதில் இல்லை; அது எந்த பர்பஸையும் ஃபுல்ஃபில் பண்ணவுமில்லை. ஆகையால் அதிலே ஒரு ஜீவனின் புத்தி விலாஸத்தை நாம் நினைப்பதில்லை.
ravi said…
அந்த மரத்துக்கு அடியிலே மாவடு அது பாட்டுக்கு ஆர்டருமில்லாமல், பர்பஸுமில்லாமல் உதிர்ந்து கிடந்தால், யாரோ அதைக் கொட்டினதாக நாம் நினைப்பதில்லை. தானே விழுந்திருக்கிறது என்றே புரிந்து கொள்கிறோம். அதுவே, அந்த மாவடுவையெல்லாம் அங்கே குவித்து வைத்திருந்தால், குவிப்பு என்ற ஆர்டரில் மாவடுக்களை அமைத்த ஒருவன் இருந்தாகணும்; அவன் அதை வீட்டுக்குக் கொண்டு போவது, அல்லது விலைக்கு விற்பது, அல்லது ஃப்ரீயாக விநியோகிப்பது என்ற ஏதோ ஒரு பர்பஸுக்காக குவித்திருக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறோம்.

ஆர்டர் இல்லாமலேகூட பர்பஸ் இருப்பதுண்டு. ஒரு வீட்டில் துணிமணி, பாத்திரம், பண்டம், புஸ்தகம், கிஸ்தகம் எல்லாவற்றையும் வாரி இறைத்து ஒரே டிஸ்-ஆர்டராக இருந்தாலும் திருடி விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டும் என்ற பர்பஸுக்காகத் திருடர்கள் இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
ravi said…
மொத்தத்தில் ஆர்டரோ, பர்பஸோ, இரண்டுமோ இருந்துவிட்டால் அது புத்தியுள்ள ஒரு ஜீவ சக்தி பண்ணின காரியம்; ஜடமே பண்ணிக் கொண்டதில்லை என்று ‘இன்ஃபர்’ (அநுமானம்) செய்கிறோம்.

இப்போது யாரும் பண்ணினதாகத் தோன்றாத அந்தக் கிளை, அதற்கு மூலமான தாவர வர்க்கம் பற்றிக் கொஞ்சம் ஆலோசிக்கலாம். முண்டும் முடிச்சுமாயிருக்கிற அந்தக் கிளைக்குள், நமக்குள் ரத்தக் குழாய் ஓடுகிற மாதிரி பூமிக்குள்ளிருந்து ஜலத்தை உறிந்து எடுத்துக்கொண்டு போகிற அதி நுட்பமான குழாய்கள் ஆச்சரியமான ஒழுங்கோடு, அதாவது ஆர்டரோடு, நேற்றைக்கு அது மரத்தில் அங்கமாயிருந்த வரையில் வேலை பண்ணிக் கொண்டிருந்தன – மரம் வளர வேண்டும் என்ற பர்பஸுக்காக! இந்த இரண்டு முடிச்சிலே ஸில்க் மாதிரி துளர் உண்டாகிறது. இலையில் ஓடுகிற நரம்புகளில் எத்தனையோ ஆர்டர்; அது ‘க்ளோரோஃபில்’ என்கிற பச்சையான ஜீவஸத்தை உண்டுபண்ணும் பர்பஸையும் ஸெர்வ் பண்ணுகிறது. முண்டு முடிச்சிலேதான் பரம மிருதுவான புஷ்பம் உண்டாகிறது.
ravi said…
தாவர வர்க்கத்தில் பூச்செடி, பழமரம் என்று இரண்டு சொல்கிறோம். பூச்செடி பழம் கொடுக்கமலிருக்கலாம். ஆனால் பழ மரத்துக்குப் பூ இல்லாமலில்லை – அத்தி, பலா மாதிரி அபூர்வமான வனஸ்பதி ஜாதி தவிர.

இந்த பூச்செடி, பழமரம் என்ற இரண்டும் எத்தனை ஸாமர்த்தியமாக தங்கள் தங்கள் இனத்தை விருத்தி பண்ணிக் கொள்கின்றன என்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது. பூச்செடியில் அழகாகப் புஷ்பம் உண்டாகிறது. அதன் டிஸைன்களில் அலாதி ஆர்டர். அதுமட்டுமில்லை. பர்பஸும் இருக்கிறது. மநுஷ்யனின் ரஸிக உணர்ச்சியைப் பூர்த்தி செய்வதோடு செடிக்கே பயன் தருகிற பெரிய பர்பஸ்!இந்த அழகிலேதான் தேனீ வசீகரமாகி வந்து தேன் குடிக்கிறது. அதற்கு ஆஹாரம் கொடுக்கிற பர்பஸுக்குள்ளேயே ரஹஸ்யமாக, அதைவிடப் பெரியதான சொந்த பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது. தேனீ செய்கிற மகரந்த பரிவர்த்தனையினால்தான் இந்தச் செடி இனவிருத்தி பெறுகிறது. இப்படி இதிலே ஜட வஸ்து பண்ணவே முடியாததான, ரொம்பவும் புத்திபூர்வமான ‘ட்ரிக்’ இருக்கிறது!
ravi said…
இன்னொரு வேடிக்கை கூட: ரொம்புவும் வர்ண விசித்திரமில்லாத பூவாகச் சிலது உண்டாகின்றன;அவை தேனீயை ஆகர்ஷணம் பண்ணுவதற்காக ஏகப்பட்ட வாஸனையை வைத்துக் கொண்டிருக்கின்றன. ஸுகந்தம் நிறைய இருக்கிற மல்லிகை, மகிழ், சம்பங்கி, மனோரஞ்சிதம் மாதிரிப் புஷ்பங்களில் கலர் விசித்திரம் இல்லை. கலர் விசித்திரம் நிறைய இருக்கும் கனகாம்பரம், துலுக்க சாமந்தி, காகிதப்பூ வகைகள் முதலியவற்றில் வாஸனை இல்லை. தேனீயை இழுக்க ஏதோ ஒரு ட்ரிக் போதும், இரண்டும் வேண்டாம் என்று இதிலே ஒரு எகானமி (சிக்கனம்) வேறே! (ரோஜா மட்டும் விதி விலக்கு.) ஜடவஸ்து இப்படியெல்லாம் கெட்டிக்கார ப்ளான் போட்டு அதன் பிரகாரம் பண்ண முடியுமா?
ravi said…
இன்னொரு வேடிக்கை கூட! நேச்சர், இயற்கை என்று சொல்வதில் நிறைய ‘வெரைய்டி’, தினுசு தினுசாகப் பார்க்க வேணடும் என்கிற காவிய புத்தி யதேஷ்டமாகத் தெரிகிறது. வாஸனைப் பூ கலர்ப்பூ வித்யாஸம் போலவே கார்த்தாலே பூக்கிறது, ராத்திரி பூ என்று ஒரு வித்யாஸம். இதிலே ராத்திரி பூக்கிறதுதான் அந்த வேளையில் கண்ணுக்குத் தெரியவேண்டுமே என்பதால் வெள்ளை வெளேரென்று மல்லிகை ஜாதிகள், பன்னீர்ப் பூ ராமபாணம் என்கிற நில சம்பங்கி இப்படி இருக்கின்றன!
ravi said…
ஒரு அணுவுக்குள் மத்ய ந்யூக்ளியஸைச் சுற்றிப் பரமாணுக்கள் பஹு வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதிலிருந்து ஸூர்யனைச் சுற்றி க்ரஹங்கள் ஓடுகிறவரை ஒவ்வொன்றும் மாறுதலில்லாமல் விதி ப்ரகாரம் நடப்பதைப் பார்க்கும்போது வெறும் ஜட சக்தியான ஒரு இயற்கையால்தான் இதெல்லாம் ஆகிறதென்று தோன்றிவிடுகிறது. ஆனால் இப்படி அணுவிலிருந்து அண்ட கோளங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக, வெவ்வேறாகத்தானே விதிகள் ஏற்பட்டிருக்கின்றன? இப்படி எத்தனை வெரையட்டியான விதிகள்? அது மாத்திரமில்லை. ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரே விதி என்று இருக்கும்போது கூட, அதற்குள்ளேயே விதி விலக்கு என்று ஒவ்வொன்று மாறுதலாகவும் இருந்து விடுகிறதே! த்ருஷ்டாந்தமாக இப்போது சொன்ன வ்ருக்ஷவர்க்கத்திலேயே ஒரு மாறுதலாகப் பூ இல்லாமல் காய்க்கிற வனஸ்பதி வகையும் இருக்கிறதே! இதையெல்லாம் ஆலோசிக்கும்போது இயற்கை என்பது ஏதோ ஜட சக்தி இல்லையென்றும், ரஸ வைசித்ரியத்தில் குதூஹலிக்கிற ஜீவனுள்ள ஒரு மஹா பெரிய புத்தி சக்திதான் என்றும் தெரிகிறதோல்லியோ?………
ravi said…
பழமரம், பூச்செடி என்று இரண்டு சொல்லி, பூச்செடி எத்தனை ஸாமர்த்தியமாக ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிறதென்று சொன்னேன். பழமரத்தில் மநுஷ்யனுக்கு ருசியான பழம் கிடைக்கிறது. இது ஒரு பர்பஸ். இதற்குள் திரிசமனாக இன்னொரு பர்பஸ். இதே மாதிரிப் பழம் பின் ஸந்ததிக்கும் கிடைக்க வேண்டும் என்ற நம்முடைய ஸ்வய ஸம்பந்த லாபத்துக்காகப் பழத்துக்குள் இருக்கிற கொட்டையை நடுகிறோம்; இதிலேயே அந்த மரம் தன் ஸந்ததியை விருத்தி பண்ணிக் கொள்கிற அதன் ஸ்வய லாபமான பெரிய பர்பஸும் ஃபுல்ஃபில் ஆகிறது.
ravi said…
இப்படி ஆலோசித்துப் பார்த்ததில் என்ன தெரிகிறது? “ஜடவஸ்து தானாக order -ஐ (ஒழுங்கை) purpose -ஐ (நோக்கத்தை) ஏற்படுத்திக்கொள்ள முடியாது; அதனால் மரத்தை மணையாகப் பண்ண ஒரு தச்சன் இருக்க வேண்டும்” என்ற நம்முடைய premises -ன் (அடிப்படைக் கொள்கையின்) படியே, அந்த மரத்தைப் பண்ணவும் ஒரு மஹா பெரிய தச்சன் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது! நாம் பண்ணுவதைவிட இன்னும் பெரிய ஆர்டரோடு, இன்னம் பெரிய பர்பஸ்களுக்காக இந்த மரம் இருக்கிறதால், நம்மைவிட மஹா கெட்டிக்காரனான தச்சன் அவன் என்றும் தெரிகிறது! நாம் செய்கிறதையெல்லாம் அப்பட்டமாகக் காட்டி, டெமான்ஸ்ட்ரேட் பண்ணுகிறோமென்றால் நம்மைவிடப் பரமாத்புதங்களைப் பண்ணும் அவனோ இத்தனையையும் பரம ரஹஸ்யமாகப் பண்ணித் தன்னுடைய ஸூக்ஷ்மமான ரஸாநுபவத்தைக் காட்டுவதோடு, பண்ணுகிற தன்னையே ஒளித்துக் கொண்டு நம்முடைய கெட்டிக்காரத்தனத்தையெல்லாம் அசட்டுத்தனமாக்கி விடுகிறான்!
ravi said…
மநுஷ்யன் தின்னாத வேப்பம் பழம் என்றால் அதைத் தின்ன ஒரு காக்கா ஜாதியை அதோடு பிணைக்கிறான். அந்த காக்கா மநுஷ்யனைப் போலக் கொட்டையை நட்டு அந்த விருக்ஷத்தின் இன விருத்தியை செய்யாது என்பதால் அது எச்சமிட்டே கொட்டை வேறே இடத்தில் (இந்த மரத்தின் நிழலில் வாடாமலிருப்பதற்காக வேறே இடத்தில்) முளைக்கும்படிப் பண்ணுகிறான்.

நாம் வெளியே விடுகிற கார்பன்-டை-ஆக்ஸைடை மரம் உள்ளே இழுத்துக் கொள்வது; அது பதிலுக்குத் தருகிற தித்திப்புப் பழத்தை நாம் சாப்பிடுவது; அதையே நாம் எருவாக மாற்றி மறுபடி அதற்குத் தருவது என்றிப்படி பல இனங்களை, ஜீவ-சடங்களை, ஒன்றுக் கொன்று உபயோகமாகக் கோத்துக் கோத்து வைத்திருக்கிறான்.
ravi said…
இப்படியே எண்ணி முடியாத மர வர்க்கங்கள், மலைகள், ஸமுத்ரங்கள், லோகங்கள், நக்ஷத்ரங்கள், க்ரஹங்கள் எல்லாமும் அத்யாச்சரியமான ஒழுங்கோடு ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து ஏராளமான உத்தேசங்களைப் பூர்த்தி பண்ணிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால், இயற்கை, இயற்கை என்று ஜடமாகச் சொல்லப்படுவது ஜீவ சைதன்யமான ஈச்வர லீலைதான் என்று எப்படித் தெரியமால் போகும்?
ravi said…
*கந்தர் அலங்காரம் 20* 🐓🦚🙏

*அலங்காரம்-04:*
ravi said…
தேரணி இட்டுப் புரம் எரித்தான்,

மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு,

அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து,

அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! -

சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!
ravi said…
*தேரணி இட்டுப் புரம் எரித்தான்* =

எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!

*மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு* =

அவன் மகன் குமரவேள் கையிலே வேல்!

அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?

*அணுவாகி* = அணுவைப் பிளப்பது போல்;

*கிரௌஞ்சம் குலைந்து* =

கிரௌஞ்ச மலையைக் குலைத்தது!

அது தாராகாசுரன் என்னும் மாய மலை!
அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!

*சூர் பேரணி கெட்டது =* சூரனின் பேரணி கெட்டது!

*தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே* =

இந்திர லோகம் பிழைத்ததுவே!

சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்!

யானை முகத்தவன்!

அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது!

போரில் அவன் தான் முதல் பலி!

அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்!

தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 297*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
நாம மனுஷாளா பொறந்திருக்கோம்.

அதிக இந்திரிய சக்தியும், புத்தி சக்தியும் கொடுத்திருக்கு. அதைக்கொண்டு, விலங்களுக்கு மேலான அதிக சுகத்தை அடையணும்னு முயற்சி பண்றோம்.

ஆனா இப்போ நாம நினைக்கிற மாதிரி, அந்த இந்திரிய சுகங்கள் அதிகமா, மிருகங்களைவிட ஜாஸ்தியா, விசேஷமா சமைச்சு சாப்படறது மட்டும் கிடையாது. எதுக்கு மேலான சுகமில்லையோ, அந்த சுகத்தை நாம ஆசைப்படணும்.

அந்த சந்துஷ்டிங்கிறது சாந்தத்துலதான் கிடைக்கும்.

அந்த சாந்தி நமக்கு, शान्तिरेव परमं न: सुखम् | तादृश शान्तिः मातुः परमाणुग्रहेण एव भवति |

‘சாந்திரேவ பரமம் ந சுகம். தாத்ருஷ சாந்தி: மாது: பரமாணு க்ரஹேண ஏவ பவதி👍👍👍
ravi said…
*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
*இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்.
Oldest Older 201 – 317 of 317

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை