ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 25 : சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா.. பதிவு 32

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 32

25  சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா


சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்ஜ்வலா

கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா 10

( 25 -26)💐


25 शुद्धविद्याङ्कुराकारद्विजपङ्क्तिद्वयोज्ज्वला -சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா 

அவள் பதினாறு அக்ஷரங்களை கொண்ட ஸ்ரீ வித்யா அல்லவா. 

அவள் பற்கள் அவ்வளவு தூய சாஸ்திரங்களின் சத்ய ஞான வெண்மை கொண்டவை.💐💐💐

ஷுத்த= தூய ; 

வித்யா = மெய்யறிவு 

ஆகார் = தோற்றம் / வெளிப்பார்வை 

த்விஜ = பற்கள் 

பக்க்தி= அணி / வரிசை 

த்வய= ஜோடி 

உஜ்வலா = மின்னுதல் 

ஒளிரும் பல்வரிசைகள் இரண்டும், ஞான மொட்டுகள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.👍👍👍👍👍👍👍👍👍👍

16 பற்கள் மேல் வரிசையில் 

16 பற்கள் கீழ் வரிசையில் .. 

ஒன்றுக்கு மேல் ஒன்று இல்லை . 

உள் புறம் வளரும் பல்லும் இல்லை .. 

There is no need for root canal , nil cavity , nil cosmatic surgery ... 


யானையின் தந்தங்கள் போல் மயிலின் சிறகுகளில் இருக்கும் மூரலை போல 

கடலில் இருந்து கிடைக்கும் வெண் சங்கையும் , வெண் முத்துக்களையும் போல் வெண்மை உடையது .. 

அஷ்டமி சந்திரன் போல் அழகு கொண்டது .. 

🦋🦋🦋🦋🦋👍👍👍👍

நான் மட்டும் வெண்மை அல்ல என் உள்ளமும் வெண்மை என்று அம்பாளின் ஓவ்வொரு பற்களும் சொல்கின்றதாம் .. 

முத்துக்கள், பவழங்கள் கோமேதங்கள் அம்பாளின் பற்கள் நடுவே சிக்கி அம்பாள் சிரிக்கும் போது டமால் என்று கீழே குதித்து தெறித்து ஓடுகின்றதாம்... 


மேல் வரிசை 16 பற்களும் தன்னை வணங்குபவர்களுக்கு 

1. கலையாத கல்வி 

2. குறையாத வயது 

3. ஓர் கபடு வாராத நட்பும்

4.கன்றாத வளமையும் 5.குன்றாத இளமையும்

6.கழுபிணியிலாத உடலும்

7.சலியாத மனமும் 8.அன்பகலாத மனைவியும்/ கணவரும்

9.தவறாத சந்தானமும்

10.தாழாத கீர்த்தியும் 11.மாறாத வார்த்தையும்

12.தடைகள் வாராத கொடையும்

13.தொலையாத நிதியமும் 

14.கோணாத கோலும் 15.ஒருதுன்பமில்லாத வாழ்வும்

16துய்ய அவள் பாதத்தில் அன்பும்

தருகிறது

கீழ் வரிசை பற்கள் ....

என்றும் மனமும் குணமும் மார்கண்டேயனை போல் 16 வயது இளமையாக இருக்க அருள் செய்கிறது ... 

32 பற்களும் இணைந்து சூரிய சந்திரனுக்கு ஒளி தருவதைப்போல் நம் வாழ்க்கையிலும் நிறைந்த ஞானம் எனும் வைராக்கிய ஒளியை அள்ளி வீசுகிறது .. 


நாம் தான் அவள் பாதங்களை கெட்டியாக  பிடித்துக்கொள்ள வேண்டும் .. 

அவள் நமக்கு அளிப்பது எல்லாமே Sixers தான் ... 🥎🥎🥎🥎🥎🥎🪔🪔👏

செக்கச்சிவந்த உதடுகளுக்கு உள்ளாக வெள்ளைவெளேரென்ற பற்கள் - 

சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா

வித்யாங்குராகார என்பதை வித்ய + அங்குராகார என்று பிரிக்க வேண்டும். 

சுத்த வித்யையின் புத்தம் புதிய துளிர்கள் போன்ற பல் வரிசைகளோடு சோபிப்பவள். 

இது ரொம்பவும் தத்வார்த்தம் கொண்ட திருநாமம். 'த்விஜ' என்பது இரண்டு முறை பிறப்பதற்குப் பெயர். பல், பறவை, அந்தணன் ஆகியவை அல்லது ஆகியவர்களை இருபிறப்பாளர்கள், த்விஜர்கள் என்பார்கள். 

முதலில் தோன்றும் பால்பற்கள் விழுந்து அடுத்து வருவதால், பற்களுக்கு த்விஜம் எனப்பெயர். 

முட்டைக்குள் பிறந்து, பின்னர் குஞ்சு பொரிக்கும்போது, இன்னொரு முறை பிறப்பதால், பறவைகளும் த்விஜம்

தாய் தந்தையர்க்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் உபநயன காலத்தில் ஆசானுக்குப் பிள்ளையாக, ஞானத் தந்தைக்குப் பிள்ளையாவதால், அந்தணர்க்கும் த்விஜர்கள் என்றே பெயர். அம்பாளின் த்விஜங்கள் (பற்கள்) பளீரிடுகின்றன. பார்த்தால், சுத்த வித்யை என்னும் தாவரத்தின் அங்குரங்கள் (முளைகள்) போல் இருக்கின்றன. 



அம்பாளின் புன்சிரிப்பே நமக்கு வித்தையை உபதேசிக்கும். மிக முக்கியமான ஸ்ரீ வித்யை மந்திரம், ஷோடசீ என்பதாகும். 

இதற்குப் பதினாறு அக்ஷரங்கள் உள்ளன. இடது, வலது, கீழ், மேல் என்று எல்லா நிலைகளிலும் பதினாறு பதினாறாக, சுத்த வித்யை கிட்டுகிறது. 

அம்பாளின் த்விஜ அனுக்ரஹத்தால் அனைவருமே த்விஜர்களாகலாம் (ஞானம் பெறுவது தானே இரண்டாவது பிறப்பு).

       ==========================================================



Comments

ravi said…
சரி, ஆனால் எத்தனை வயசுக்கு மேல் இப்படி குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்யையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாசம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால், இவன் ஏழெட்டு வயஸுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கான‌வற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்கவேண்டியதை போதிக்கவும் முடியும்?
ravi said…
குணம் form ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இள வயசு முழுதும் பலபேர் தொழிலை தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்குப் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும் போதும் ஸமூகத்திற்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம் கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?

ravi said…
அப்படியானால் அவர் ‘தியரி’யில் [கொள்கையளவில்] குணப்படித் தொழில் என்றாலும், ‘ப்ராக்டிஸில்’ [நடைமுறையில்] பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா?” என்றால், பாலிடீஷியன்கள் [அரசியல்வாதிகள்] போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

ravi said…
சரி, அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம். “நான் யுத்தம் பண்ண மாட்டேன். பந்து மித்ரர்களின் ரத்தத்தைத் சிந்தி ஸாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்” என்று சொல்லிக்கொண்டு தேர்த்தட்டில் உட்கார்ந்து ஸத்யாக்ரஹம் பண்ணி விட்ட அர்ஜுனனிடம் அவர் சொன்னார் “நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன்.
ravi said…
யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை போடு சண்டையை” என்றுதான் அவனை விடப் பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

இங்கேயாவது ஒரு மாதிரி ஸமாதானம் சொல்லலாம். “அர்ஜுன‌ன் மஹாரதன், மஹாவீரன். ஆனதால் அவனுக்கு பந்து மித்திரர்களைக் கொல்ல‌ வேண்டியிருக்கிறதே என்ற பாசத்தால் Momentary -ஆக [தற்காலிகமாக] த்தான் யுத்தத்தில் வெறுப்பு உண்டாயிற்று. உள்ளூர அவனுடைய குணம், மனோபாவம், தன்னுடைய வீரத்தைக் காட்டுவதில்தான் இருந்தது.
ravi said…
அதனால்தான் பகவான் யுத்தத்திலேயே தூண்டிவிட்டார். ஆனபடியால் அவர் ஸ்வதர்மம் என்று சொன்னது ஜாதி தர்மம் என்று ஆகாது. அவனுடைய சொந்த குணத்தை, இயற்கையான மனோபாவத்தைத்தான் ஸ்வதர்மம் என்று சொல்லி, அவனுக்கு எடுத்துக் காட்டினார்” — என்று சுற்றி வளைத்து அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

ravi said…
அப்படியானால் தர்மபுத்ரர் விஷயம் என்ன? சண்டையே கூடாது. ஸமாதானமாகவே போய்விட வேண்டும் என்றுதானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்? தங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து வீடு கொடுத்து விட்டால் கூடப் போதும், ராஜ்ஜியத்தில் பாதி தர வேண்டும் என்று இல்லை என்கிற அளவுக்கு ஒரேயடியாக இறங்கிவந்து விட்டார் அல்லவா அவர்? அவரையும் அவருக்காக தூது போன பகவானே யுத்தத்தில்தானே இழுத்து விட்டார்? இதற்கு முந்தியும் தர்மபுத்திரரை எல்லா சிற்றரசர்களையும் வென்று, ஸார்வபெள‌மராகும்படி பண்ணி, அவருடைய ராஜஸூய யாகத்தை பகவான்தானே முன் நின்று நடத்தி வைத்தார்? தர்மபுத்ரர் இதற்கெல்லாமா ஆசைப்பட்டவர்? அவருடைய குணம், மனோபாவம் ஆகியன கொஞ்சங்கூட இந்த யுத்தம், ஸார்வபெள‌மப் பதவி இவற்றுக்கு ஆசைப்படாததுதானே? அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் ஸ்வதர்மம் என்கிற போது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று அர்த்தமாகும். பிராம்ம‌ணராகப் பிறந்ததும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் அவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகப் குத்திக் காட்டிப் பேசிய போதெல்லாம் பகவான் ஆக்ஷேபித்ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகின்ற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. “அப்படியானால் ஏன் குண கர்ம விபாகச: என்றார்?” என்றால்–
ravi said…
பட்டினத்தார் சொன்னது...

உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.

அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.

நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா?
அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்.
நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்...
ravi said…
பாதாரவிந்த சதகம் !

21.நமஸ்யாஸம் ஸஜ்ஜன் நமுசி பரிபந்தி ப்ரணயிநீ
நிஸர்க ப்ரேங்கோலத் குரல
குலகாலாஹி சபலே
நகச்சாயா துகத்தோததி பயஸி தே வைத்ரும ருசாம்
ப்ரசாரம் காமாக்ஷி ப்ரசுரயதி பாதாப்ஜ ஸுஷமா |

காமாக்ஷி ! உன் திருவடித்தாமரைகளின் அழகு, பவழத்தின் செந்நிற ஒளியின் பரப்பை, உன்னை வணங்குவதில் ஈடுபட்ட (நமுசியின் எதிரி) இந்திரனின் மனைவியின் அலைபோல் அசைந்தாடுகிற கூந்தல் கற்றையாகிற கருநாகங்களின் மீதுள்ள ரத்தினம் பதித்த சூடாமணி முதலியவற்றின் ஒளிச்சிதறலால், பல நிறக்கலவை கொண்ட நகஒளியாகிற பாற்கடலில்
அதிகப்படுத்துகிறது. இந்திராணி, தேவியை வணங்க, அவளது கேசம் திருவடிமுன் விரிந்தாடுகிறது. அதன் ஒளி கருநாகத்தின் தலையிலுள்ள நீலரத்னஒளிபோல் பாதங்களின் மீது படர்கிறது. நக ஒளி பாற்கடல் போல் வெண்மையுடன் நடுவே ஒளிர்கிறது. தேவியின் திருவடி பவழம் போல் சிவந்து காண்கிறது. ஒவ்வொன்றும் தனித் தனியே தம் தம் ஒளியைப்பரப்புகின்றன, அந்த ஒலிச் சிதறல் மிக அழகியது.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🪷 *தினம் ஒரு திவ்ய பிரபந்தம்* 🪷

*திருப்பல்லாண்டு*

பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) பாடிய இந்தப் பிரபந்தம் தனிச் சிறப்பு வாய்ந்தது. வேதங்களை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும்போதும் “ஓம்” என்று சொல்வது போல் இந்தத் திருப்பல்லாண்டும் பிரபந்தம் வாசிக்கும்போது ஆரம்பத்திலும் முடிவிலும் சொல்வது வழக்கம்.

பெரியாழ்வார் பாண்டிய மன்னனுக்கு (ஸ்ரீவல்லபன்) மகா விஷ்ணுவே பரம்பொருள் என்று நிறுவிய பின் அவருக்குக் கிடைத்த பொற்கிழியுடன் யானை மேல் ஏற்றி ஊர்வலம் செல்லும் போது அந்த அழகைக் கண்டு களிக்க ஸ்ரீமன் நாராயணனே வர, அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலைப் பட்டு ஆழ்வார் அவருக்கு நீடூழி வாழ்க என்று மங்களாசாசனம் செய்கிறார்.

இந்தத் திருப்பல்லாண்டை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்:

1,2 – ஆழ்வார் தாமே மங்களாசாசனம் செய்வது.

3,4,5 – மூவகையானவர்களை பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய அழைக்கிறார். யார் இந்த மூவகையானவர்கள்? பகவல்லாபாரதி என்பவர்கள் பெருமானையே அடைய முயல்பவர்கள்; கைவல்யார்த்திகள் என்ற ஆத்மாவையே அனுபவிக்கும் நபர்கள். இவர்களுக்கு பூலோகமும் வேண்டாம், வைகுந்தமும் வேண்டாம். மூன்றாமவர் நம்மைப் போன்ற ஐஸ்வர்யார்த்திகள். இவர்களுக்கு ஐம்பொறிகளினால் கிடைக்கும் இன்பமே போதும்.

6,7,8 – மேற்சொன்ன மூவரும் வந்து விட்டார்கள்.

9,10,11 – மூவரும் ஆழ்வாருடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்கின்றனர்.

12- இந்த பிரபந்தத்தைச் சொல்லுவதால் என்ன கிடைக்கும் என்று சொல்லும் “பலச்ருதி” பாடல்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்

செவ்வடி(சேவடி) செவ்வி திருக்காப்பு

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

மாபெரும் மல்லர்களைத் தோற்கடித்த வலிமையான தோள்களையும் சிவந்த திருவடிகளையும் உடைய மணிவண்ணா!

பல்லாண்டென்ன, பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் உனக்கு பாதுகாப்பு உண்டாகட்டும்.

இந்தச் செய்யுளுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவர்கள் இந்த ஆயிரக் கணக்குகளுக்கு சிறப்பான பொருள் கூறுகிறார்கள்.

முதலில் வரும் ஆயிரம் மனித ஆண்டுகளாகும்.

இரண்டாவதாக வரும் ஆயிரம் தேவர்களின் வருஷக் கணக்கைக் குறிக்கிறதாம். நம் மனித வருடம் தேவர்களுக்கு ஒரு நாள்.

மூன்றாவதாக வரும் ஆண்டு பிரம்மாவின் ஆண்டைக் குறிக்கிறதாம். நான்கு யுகங்கள் சேர்ந்து 4,32,000 ஆண்டுகள். 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது! அப்படியே கணக்குப் போட்டால் தலை சுற்றிவிடும்.

நான்காவதாக வரும் பலகோடி நூறாயிரம் பல்லாயிர பிரம்மாக்களின் காலத்தைக் குறிக்கிறது. ஈரேழு பதினான்கு உலகங்களுக்கு ஒரு பிரம்மா. இப்படி அண்ட சராசரங்களில் பல பிரம்மாக்கள்.

💢💢💢💢💢💢💢💢💢

விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com

Google search 🔍 Sri mahavishnu info
விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்
ravi said…
🌹🌺" *கோகுல மைந்தனின் சில செல்லப்பெயர்கள்......!.. விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹 கோகுலம் மைந்தனின் சில செல்லப்பெயர்களை படித்து ஆனந்தம் அடைவோமே...

🌺யசோமதீ நந்தனர்....அன்னை யசோதாவின் அன்புக்குரிய மகன் ஸ்ரீகிருஷ்ணர்

🌺வ்ரஜ வர நாகரர்..விரஜ பூமியில் வசிப்பவர்கள் உடைய தெய்வீக காதலர்

🌺கோகுல ரஞ்ஜனர்... கோகுல மக்களை வசீகரிப்பவர்.
செல்லப் பெயர் ...கானர்

🌺கோபி பரானா தனர்... கோபியர்களின் உயிருக்கு உயிரான செல்வம்..

🌺மதன மனோகரர் .. மன்மதனின் மனதையும் மயக்குபவர்.

🌺காளிய தமன விதானர்... காளியனை தண்டித்தவர்

🌺விபின புரந்தரர்.. கோகுலத்தின் 12 காடுகளுக்கு எஜமானர்

🌺நவீனர் ....என்றும் இளமையானவர்

🌺நாகர வரர்...கதலர்களின் தலை சிறந்தவர்..

🌺வம்சி வதனர்..எப்போதும் புல்லாங்குழல் வாசிப்பவர்

🌺ஸுவாஸா...அற்புதமாக உடை உடுத்துபவர்..

🌺விரஜ ஜன பாலனர்..... கோகுல ஜனங்களை பாதுகாப்பவர்

🌺அசுரகுல நாசர்.. பல்வேறு அசுரகுலங்களை அழிப்பவர்.

🌺நந்த கோதன ராகவாலா... நந்தகோபரின் சிறப்பான பசுக்களை மேய்ப்பவர்.

🌺கோவிந்தர் ...பசுக்கள் நிலம் ஆன்மீக புலன்கள் ஆகியவற்றுக்கு இன்பம் அளிப்பவர்..

மாதவர்... செல்வத் திருமகளின் கணவர்.

🌺நவநீத தஸகரர்..வெண்ணை திருடர்

🌺சுந்தர நந்தகோபாலா... நந்த மகாராஜாவின் அழகிய கோபாலர்..

🌺யமுனா தடசரர் ...யமுனைக் கரையில் உலாபுவர் ஸ்ரீ கிருஷ்ணர்..

🌺கோபி வசன ஹரர் ..யமுனையில் நீராடிய இளம் கோபியர்களின் ஆடைகளைத் திருடியவர்..

🌺ராஸ ரசிகர் .ராஸ நடனத்தின் சுவையில் திளைத்தவர்.

🌺கிருபா மோயர் ...கருணையே வடிவானவர்

🌺ஸ்ரீ ராதா வல்லபர்... ஸ்ரீமதி ராதாராணிக்கு மிகவும் பிரியமானவர்.

🌺விருந்தாவன நடவர் ...விருந்தாவனத்தின் தலை சிறந்த நாட்டிய காரர்..

🌹🌺வாழ்க வையகம் 🌹🌺 வாழ்க வையகம்🌹🌺 வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "Some Nicknames of gogula Krishnan......!.. A simple story explaining 🌹🌺 -------------------------------------------------- -----
🌺🌹 Let's read some nicknames of Gokula Mindan Sri Krishna and enjoy...

🌺 Yasomati Nandanar....Srikrishna was the beloved son of Mother Yasoda

🌺 Vraja Vara Nagara..Divine Lover of the inhabitants of Vraja Bhoomi

🌺 Gokula Ranjanar... the charmer of Gokula people.
Pet name ...Connor

🌺 Gopi Parana Tanar... Living wealth for the lives of Gopis..

🌺 Madana Manohar .. the one who enchants the mind of Cupid too.

🌺Kaliya Tamana Vidhanar... who punished Kalyan

🌺 Vipina Purandara.. Lord of 12 forests of Gokulam

🌺Naviner....ever young

🌺 Nagara Varar... the head of the Kathalars is the best..

🌺Vamsi Vatanar..always plays the flute

🌺 Zwaza...a wonderful dresser..

🌺 Viraja Jana Palanar..... Gokula is the protector of the people

🌺 Asurakula Nasar.. Destroyer of various Asurakula.

🌺 Nanda Godana Raghavala... the great cowherd of Nandagopar.

🌺 Govinder ...the giver of pleasure to cows, land and spiritual senses..

Madhavar... Husband of Selva Thiruma.

🌺Navaneetha Dasakar..butter thief

🌺 Sundara Nandagopala... Nanda Maharaja's beautiful Gopala..

🌺Yamuna Tadasarar...Shri Krishna strolled on the banks of the Yamuna..

🌺 Gopi Vaana Harar ..the one who stole the clothes of the young Gopis who bathed in the Yamuna..

🌺Rasa fan.Immersed in the taste of Rasa dance.

🌺Kripa Moir ...is shaped like mercy

🌺 Sri Radha Vallabh... is very dear to Srimati Radharani.

🌺Vrindavan Nadavaar...The head of Vrindavan is the best dancer..

🌹🌺 Vazhga Vayagam 🌹🌺 Vazhga Vayagam🌹🌺 Vazhga valamudan 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
வைணவ ஆச்சார்யர் பகவத் ராமானுஜர் விரும்பி சில காலங்கள் வாசம் செய்த தலம் மேல்கோட்டை. மேலும் இத்தல மூலவரும் உற்சவ மூர்த்தியும் அவர் திருக்கரங்களினாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பு உடையது.

பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன

1. தெற்கு திசை ஸ்ரீரங்கம்-(தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
2. கிழக்கு திசை – காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.
3. வடதிசை-திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
4. மேற்கு திசை-மேல் கோட்டை- திருநாராயணபுரம்

திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தை – போக மண்டபமென்றும், திருமலையை புஷ்ப மண்டபமென்றும் பெருமாள் கோயிலை – தியாக மண்டபமென்றும் திருநாராயணபுரத்தை – ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.
திருநாராயணன்
திருத்தாள்கள் போற்றி.

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

ravi said…
*சிஷ்டக்ருததாய நமஹ*
*சுசிராய நமஹ*
தன்னை சார்ந்தவர்களை தூய்மையாக்குபவர்
தான் எப்போதும் தூய்மையுடன் இருப்பவர
ravi said…
நிர்னாஶா ம்ருத்யுமத²னீ நிஷ்க்ரியா *நிஷ்பரிக்ரஹா*🙏

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதவள்
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
❖ *22 தாடங்க யுகலீபூத தபநோடுப மண்டலா* =

சந்திரனையும் சூரியனையும்
இரு காதணிகளாக்கியிருப்பவள்.
ravi said…
அம்மா

எட்டு திக்கையே ஆடை என அணியும் உன் பதியும்

வாம பாகம் வவ்விய நீயும் சேர்ந்து இங்கு வந்தாய்

சூரியனும் அக்னியும் சந்திரனும் மூன்று கண்களாய் கொண்டே பஞ்ச பூதங்கள் தனை படைத்தாய் .

எண்ணிறந்த தேவர்கள் இறங்கி வந்தாலும்

வாசம் செய்யும் வாக் தேவிகள் வாசல் தடுத்தாலும்

ஓடி வந்து அணைக்கின்றாய் ஓராயிரம் முத்தங்கள் பொழிகின்றாய் ...

என் தவம் செய்தேன் உணர்வு கொண்டேன் உனை மதிக்கின்ற மாணிக்கம் என்றே எனை மாற்றி விட்டாயே ....🙏🙏💥🌝
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 125*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மின்னெழுந்து மின்பரந்து

மின்னொடுங்கு வாறுபோல்

என்னுள்நின்ற வென்னுளீச னென்னுளே யடங்குமே

கண்ணுநின்ற கண்ணில்நேர்மை கண்ணறி விலாமையால்

என்னுண்ணின்ற வென்னைநானி யானறிந்த தில்லையே. 125
ravi said…
மின்னல் வானில் தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது.

அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள ஈசன் நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான்.

கண்ணிலே நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால்

கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.🙏
ravi said…
#படித்ததில் மனதை நெகிழ செய்தது .‌..

என்னுடைய தாத்தா பெரும்பாலும் வெளியூர் சென்று தங்கியதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வேலையாக பென்னாகரம் சென்றார்.

இரண்டொரு நாளில் வந்துவிடலாம் என போனவர் ஆறேழு நாளாய் வரமுடியவில்லை.

அந்த சமயத்தில் அவர் வளர்த்த மாட்டிற்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தண்ணீர் குடிக்கவில்லை ,தீனி சாப்பிடவில்லை ,சாணமும் போடவில்லை, கால்நடை மருத்துவர் வந்து வைத்தியம் செய்தும் எந்த பலனும் இல்லை.

அடுத்த நாள் மாட்டால் தலையையே தூக்கமுடியவில்லை. தொடர்ந்து இரண்டு நாளாய் தீனி சாப்பிடவில்லை. மீண்டும் மருத்துவர் வந்து குளுக்கோஸெல்லாம் போட்டு பார்த்தார்.எந்த முன்னேற்றமும் இல்லை.

மருத்துவர் சொன்னார் “இனிமே மாடு பொழைக்காது இப்பவே குடுத்தீங்கனா கறி போடறவங்க வாங்கிக்குவாங்க இல்லனா வீணா தான்எடுத்து பொதைக்கனும்” என்று.

தாத்தா பாசமுடன் வளர்த்த மாடு அவரே வந்து முடிவு செய்யட்டும் என்று அவருக்கு தகவல் சொன்னோம்.

அவரும் அவசரமாக புறப்பட்டு வந்தார்,தலையை தரையில் வைத்து கிடந்த மாடு அவரை தூரத்தில் பார்த்ததும் “ம்ம்ம்ம்மாஆஆஆ”என கத்திக்கொண்டு எழுந்து நின்றது.

எங்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. அவர் அருகில் வந்து “என்னாச்சு ஒனக்கு யா தீனி திங்க மாட்டங்கறயாம்”என்றார்.

மாடு நாவால் நக்கி கொடுத்தது, தாத்தா தாழியில் தண்ணீரை மொண்டு வைத்து “எனக்கு என்னமோ ஆயிருச்சுனு நெனச்சயா எனக்கு ஒன்னும் ஆகல ஊருக்கு போயிருந்தேன்”என்றார்.

அவர் வைத்தவுடன் மாடு 3 நாட்களுக்கு பிறகு தண்ணீரை குடித்தது. பிறகு தீனி தின்றது.

வளர்த்தவர் இறந்து போன பிறகு ஒரு சில நாய்கள் தானும் செத்து போயிருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் தாத்தாவை காணாததால் அந்த மாடு ஏதோ நினைத்து சாகும் நிலையை எட்டி இருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

ஒரு நாளைக்கு நல்ல விலை வந்தால் விற்க்கப்பட்டு விடும் அந்த மாட்டின் காலடியில் மனித பாசங்கள் மிதிபட்டுக் கிடப்பதை போல் உணர்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 401* 🙏🙏🙏started on 7th Oct 2021

*154*
ravi said…
*154 निरुपाधिः - நிருபாதி -*

இது தான் ஆதாரம் என்று எதுவுமே இல்லாத பரம்பொருள்

பரமேஸ்வரி. எல்லையற்றவள்.🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 400* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

102
ravi said…
ஸமுத்பூத ஸ்த்தூல ஸ்தனபர முரச் சாருஹஸிதம்

கடாக்ஷே கந்தர்ப்பா: கதிசன கதம்பத்யுதி வபு:

ஹரஸ்ய த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா

பவத்யா யே பக்தா : பரிணதி ரமீஷா மிய முமே
ravi said…
*பவானீ த்வம்* *தாஸே மஹி* என்று ஒருவர் சொல்ல வர

தடுமாறி *பவானீத்வம்* தாஸே மஹி என்று சொல்லி விட

தனதாகவே அவனை மாற்றினாள் அம்பாள் .

அதீத கருணை கொண்டவள் என்று சொல்ல இதற்கும் மேலே உவமை உண்டா ?

அதே தாத்பரியத்தை இந்த ஸ்லோகத்திலும் வைத்திருக்கிறார் கவி ...

அம்பாளை வணங்கினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று பட்டியல் போட முயன்று

அதில் தோல்வி கண்டு

எதுவெல்லாம் கிடைக்காது என்று ஒருவர் பட்டியல் போட முயன்றார் ..

கடைசியில் அவரால் ஒன்றுமே கண்டு பிடிக்க முடியவில்லை

வெறும் வெள்ளைத் தாள் மட்டுமே அவருக்கு துணையாய் இருந்தது ...

ஆனால் அதை வைத்தே ஒரு கவி இயற்றினால்

வெள்ளை மனமும் பிள்ளை குணமும் ஓர் உருவாய் வந்தவளே !!

யாழும் குழலும் ஒன்றி உறவாட

வேதம் அங்கே துள்ளி விளையாட

தாகம் எடுக்கும் சமயமதில் கங்கை அங்கே கொஞ்சி விளையாட

கச்சி அப்பனும் காசி அப்பனும் பாதங்களில் கொலுசு அணிவிக்க !

உச்சி முகர்ந்த சோமனும் ஆதவனும் ஓடி வந்து குடை பிடிக்க ...

உன் அருள் கார் மேகம் கிழித்தே மழை என பொழிய

குடை பிடித்த கதிரவனும் திங்களும் விழி பிதுங்க

வேலை இல்லா பட்டதாரி ஆயினரே 🙏🙏🙏
ravi said…
SLOW LIFE



· A slow life consists of:

- Getting up when you want.

- Working as much as you want.

- Taking 30 mins to finish your lunch.

- Brewing your own Coffee.

- Going to places where the weather is good.

Slow life is good life.

Everyone gets it!



· But, there is always an internal debate:

- Should I do more?

- Am I optimising my potential?

- Am I making the best use of the opportunities around.



· And, the world convinces me that the "slow life" is probably bad:

- They say: move to XYZ location, work options are great.

- Earn a million by 30, it is super cool.

- Hustle or perish.



· May be we need a more practical rat race:

- Work hard upto a point.

- Be efficient & skilled.

- And, get to enjoy a slow life for a significant period.



· But, it is tough, not because it demands efforts, but because it demands restraint:

- Knowing when is enough

- And, discovering your own meaning of life is something even the wisest philosophers have struggled with.


As I write my book on Curated Minimalism, I am dedicating a chapter on why living a slow life makes sense.



I have chosen to live a slow life from April 2020 and I am enjoying it and how.
ravi said…
*கண்ணா*

வராக அவதாரமெடுத்து

உலகத்தை (ஆழத்திலிருந்து) தோண்டி (மீட்டெடுத்த) என் அப்பனே

கண்ணனே! எப்போதும் என் தலைவனாக என்னை ரட்சிக்கும்

தேவர்களின் அரசனே

நீலமணி சோதி வடிவானவனே

தேன் நிறை மாம்பழத் தோப்புகள் நிறைந்த

குளிர்ச்சியான சிரீவரமங்கலத்தில் வாழும் மாந்தர்
கை கூப்பி வணங்குவதற்காகவே (இங்கு) நிலை பெற்றுள்ள

விண் முட்டும் பெருமலைக்கு ஒப்பான புகழ் மிக்கவனே

அடியேன் தொழ வந்தருளே -👌👌👌
ravi said…
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை

வானநாயகனே மணிமாணிக்கச் சுடரே

தேனமாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழவுறை

வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே!

— திருவாய்மொழி
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 8 started on 6th nov
ravi said…
*பாடல் 3 ... வானோ? புனல் பார்*

(ஆறுமுகமான பொருள் எது?)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?

ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?

யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ?

பொருளாவது சண்முகனே..🙏
ravi said…
இந்தப் பாட்டில் பர தத்துவத்தை நிர்ணயம் செய்கிறார்.

எது மெய்ப்
பொருள்?

நித்ய வஸ்து எது? என்று நிர்ணயம் செய்யும்போது ஒன்று
ஒன்றாக விலக்கி இறுதியில் முருகனே பர தத்துவம் என்று
முடிவுகட்டுகிறார்.

நித்ய வஸ்து என்பது யாது?

தனக்கென்று ஆதி
அந்தம் இல்லாததாய், யாவற்றிக்கும் ஆதாரமாய் வேதம் கூறுவதுபோல்
.. எதினின்றும் இவை எல்லாம் தோன்றினவோ, தோன்றியவை எல்லாம்
எதனால் வாழ்கின்றனவோ, முடிவில் யாவும் எதில் ஒடுங்குகின்றனவோ
அதுவே நித்ய வஸ்து ..

அது எது?

வானோ? ஆகாசம் என்பது சூன்யம்.

இதுவே பிரபஞ்ச தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணம் என்பது
சூன்யவாதிகளின் சித்தாந்தம்.

பானையில் இருக்கும் காற்று, பானை
உடைந்தவுடன் வெளிக் காற்றோடு கலந்துவிடுவதுபோல்

உடலில்
இருக்கும் ஆகாசம் உடல் அழிந்தவுடன் வெளி ஆகாசத்தில் கலந்துவிடும்.

இறந்த உடல் மீண்டும் பிறப்பதில்லை என்பது இந்தச் சித்தாந்தம்🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 389* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*91. அஹ்நே நமஹ (Ahney namaha)*
👍👍👍

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
*அஹ* :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*92. ஸம்வத்ஸராய நமஹ (Samvatsaraaya namaha)*
ravi said…
ஸ்ரீ பிள்ளை லோகாசிரியர் என்னும் ஸ்ரீ வைணவ ஆச்சாரியர், தம்முடைய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலில்
ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலுள்ள ஒரு கதையை மேற்கோள் காட்டியுள்ளார்.

காசியின் அரசனான காசி ராஜனுக்கு முந்நூறு மனைவிகள். அவர்களுள் லலிதா என்பவள் பட்டமகிஷியாகத் திகழ்ந்தாள்.

அவள் அரசனின் மற்ற மனைவிகளைக் காட்டிலும் அழகு, பொலிவு, நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவளாக விளங்கினாள்.

பகலிரவு பாராமல் எப்போதும் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ இறைவனுக்குத் தொண்டு செய்தபடி தன் வாழ்வைக் கழித்து வந்தாள்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 388*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
மூக பஞ்சசதிலயும் நிறைய ஸ்லோகங்கள் அம்பாளேட கடாக்ஷத்தை வண்டுன்னு வரும்.

எப்பவும் அம்பாள் பரமேச்வரனையே பார்த்துண்டு இருக்கார்ங்கறதுனால.

பரமேச்வரனுடைய உடம்பு என்கிற தாமரைக் காட்டில் வண்டு ரீங்காரம் பண்ணிண்டு எப்பவுமே சுத்திண்டு இருக்கு அப்படினு நிறைய வண்டு சம்பந்தப்படுத்தி ஸ்லோகங்கள் இருக்கு.
ravi said…
*விஷ்ணுபதி* *புண்யகாலம்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*கடுமையான கஷ்டமா?*

*கொடுமையான வாழ்க்கையா?*

*மன நிம்மதி இல்லையா?*

*தொழிலில் வளர்ச்சி இல்லையா?*

*பெரும் நஷ்டமா?கடனா??*

*திருமணம் சம்பந்தமான சங்கடங்களா?*

*குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனையா?*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*வழிபடுங்கள்*

*விஷ்ணுபதி புண்ய காலத்தில்*

*சுபகிருது வருடம்*

*கார்த்திகை - 1*

*17 - 11-2022*

*வியாழக்கிழமை*
*1 :30- AM முதல்- 10;30.am வரை*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷


*பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஷ்காரம் செய்து*

*27 பூக்களை கையில் வைத்து கொண்டு*

*27 முறை கோவில் பிரகார வலம் வாருங்கள்*

*ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை*
*கொடிமரத்திற்கு முன் வைத்து பக்தியுடன் வணங்குங்கள்*

*27 சுற்று முடித்த பின்பு*
*மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்து தியானியுங்கள்*

*கொடிமரம் இல்லாத பெருமாள் கோவில்களில் பிரகாரம் வலம் வந்தாலே போதும்*

*பின்பு*

*தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிரார்த்தனையை மனமுருகிச் சொல்லுங்கள்*

*தங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த* -

*மூன்று விஷ்ணுபதி காலம்* *முடிவடைவதற்குள்*

*நிறைவேறியே தீரும்*

*நிறைவேறியே தீரும்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*கோவிலுக்குச் செல்ல வாய்ப்பில்லாதவர்கள்* -

*வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து-*

*மேலே சொன்ன முறையில் கொடிமர நமஸ்காரம் செய்வது போலவும்*

*கோவில் பிரகாரம் வலம் வருவதைப் போலவும்*

*மானசீகமாக மனதினிலே* *தியானித்து* *பெருமாளை வழிபாடு செய்யலாம்*

*அல்லது வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்க்கு முன் விளக்கேற்றி அதை 27 முறை சுற்றி வரலாம்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*துன்பத்தில் -துயரத்தில்*-
*வாழும் மக்களுக்காக*

*விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்*
👇👇👇

ravi said…
வைணவ ஆச்சார்யர் பகவத் ராமானுஜர் விரும்பி சில காலங்கள் வாசம் செய்த தலம் மேல்கோட்டை. மேலும் இத்தல மூலவரும் உற்சவ மூர்த்தியும் அவர் திருக்கரங்களினாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பு உடையது.

பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன

1. தெற்கு திசை ஸ்ரீரங்கம்-(தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
2. கிழக்கு திசை – காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.
3. வடதிசை-திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
4. மேற்கு திசை-மேல் கோட்டை- திருநாராயணபுரம்

திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தை – போக மண்டபமென்றும், திருமலையை புஷ்ப மண்டபமென்றும் பெருமாள் கோயிலை – தியாக மண்டபமென்றும் திருநாராயணபுரத்தை – ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.
திருநாராயணன்
திருத்தாள்கள் போற்றி.

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
👇👇👇
http://www.srimahavishnuinfo.blogspot.com

Google search 🔍 Sri mahavishnu info
விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம்
ravi said…
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் பற்றி ஒரு செய்தி ..... இக்கோவிலில் சிலையின் மறுபக்க சுவரில் ஒரு துர்க்கை அம்மன் சிலை உள்ளது ...... இதில் என்ன சிறப்பு என்றால் 4 கரங்களுடன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அதில் ஒரு கை இடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது, அக்கரத்தில் ஒரு கிளி அமர்ந்துள்ளது போல் வடிவ அமைக்கப் பட்டிருக்கிறது .... இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் இந்த துர்க்கையிடம் தத்தமது குறைகளை சொல்லி பிரார்த்தனை செய்தால் இந்த கிளி பறந்து போய் லலிதாம்பாள் சந்நதிக்கு எதிரில் இருக்கும் கொடி மரத்தில் போய் அமர்ந்து கொண்டு சத்தமிடுமாம் அதாவது நமது கோரிக்கையினை நமக்காக அம்பாள் காதுகளில் சொல்லி நிறைவேற்றி தருமாம் .... இது இன்றளவும் நாம் காணமுடியுமாம்...
ravi said…
*ஸ்ரீபைரவாஷ்டமி பதிவு:*

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.

மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவ மூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.

காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும்.

அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை, வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வணங்கலாம். எதிர்ப்புகளையெல்லாம் அழிப்பார். தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருவில் நாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
ravi said…
Om Namo Venkateshaya 🙏
Namaskaram to all 🙏
Those who have missed Thirupaavai Classes so far can watch in our VISVAS YouTube Channel. We have given the link 👇

Pls like share and subscribe the VISVAS YOUTUBE channel to watch the videos 🙏

Day 1

https://youtu.be/XrQdJsTr270

Day 2

https://youtu.be/Du3OAs-6hEA

Day 3

https://youtu.be/ZchxvlqF-Pw

Day 4

https://youtu.be/ROXcxNV77Jg

Day 5

https://youtu.be/6A-CljpC_xw

Day 6

https://youtu.be/y2Vi_SPu4Ho

Day 7

https://www.youtube.com/live/tHtQcZQw6Z0?feature=share

Day 8

https://youtu.be/oFHuv7JBARQ

Day 9

https://youtu.be/UZHyvZoPdDk

Day 10

https://youtu.be/wboxO0RVifg
ravi said…
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர்
🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர்
🌹 🌿 திருவையாறில்ஐயாறப்பர்
🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார்
🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்
🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்
🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்
🌹 🌿 திருச்சியில் தாயுமானவர்
🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்
🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர்
🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்
🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர்
🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்
🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர்
🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர்
🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.
🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில் கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.
🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.
🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.
🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.
🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.
🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். .
🌹🌿நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் அரன் நாமம் சூழ்க
🌹 🌿 படித்ததை பகிர்ந்தேன் 🙏 நன்றி வணக்கம்💐🙏🏻💐🪷🔱🕉️🔯✡️⚛️
ravi said…
The trouble with the family is that children grow out of childhood,
but parents never grow out of their parenthood !
Man has not even yet learned
that parenthood is not something that you have to cling on to it forever.
When the child is a grown-up person your parenthood is finished.
The child needed you – he was helpless.
He needed the mother, the father, their protection;
but when the child can stand on his own,
the parents have to learn how to withdraw from the life of the child.
And because parents never withdraw from the life of the child
they remain a constant anxiety to themselves and to the children.
They worry, they create guilt ; but
they can't help beyond a certain limit.

To be a parent is a great art.
Something extraordinary.
ravi said…
ஸஹாரா – ஸாகரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாலைவன விஷயமாக என் ‘ரிஸர்ச்’ ஒன்றைச் சொல்கிறேன். இப்போது ஸஹாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்ரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக்காரர்கள் சொல்கிறார்கள்.

உங்களுக்கு ராமாயணக் கதை தெரிந்திருக்கலாம். ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள் தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்ரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது.

ஸகர புத்ரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்ரத்துக்கு “ஸாகரம்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஸாகரம் என்பதுதான் மருவி ‘ஸஹாரா’ என்றாயிருக்கிறதென்று நினைக்கிறேன்.

இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட ஒரு பாலைவனமாகத்தான் இருக்கிறது பாலைவனத்துக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘மருவாடிகா’ என்று பெயர். இதனால்தான் ராஜஸ்தான்காரர்களை நாம் ‘மார்வாடி’ என்று சொல்கிறோம்.

ஒரு காலத்தில் உயிரையும் செழிப்பையும் ஊட்டுவதான ஜலம் ஸமுத்ரமாக இருந்த இடமே இப்போது பாலைவனமாக இருக்கிறது என்கிற மாதிரி, இந்த லோக வாழ்வான பாலைவனமும் உயிருக்கு ஸாரமான பரமாத்மாவிடமிருந்து வந்ததுதான்!

ஆனால் அதிலே இப்போது ஆத்மாவை வளர்க்கிற ஸாரம் இல்லை. காமம், க்ரோதம் முதலான கானல் நீரோட்டம்தான் நம்மை இழுக்கடித்து, அலையாக அலைய வைத்து, நாசம் பண்ணுகிறது. இதைத்தான் ஆசார்யாள் “விஷய ம்ருக த்ரஷ்ணா” என்றார்.

முதலில் விநயத்தை, எளிமையை வேண்டினார். பிறகு மன அடக்கத்தை ப்ரார்த்தித்தார். அப்புறம் இந்த்ரியங்கள் பலவிதமான ஆசைக் கானல் நீரை நோக்கி ஒடாமல் இருக்கும்படி அவற்றின் தாஹத்தை அடக்கச் சொல்கிறார்
ravi said…
ஒரு சமயம் மனஸுக்கும் வாக்குக்கும் இடையே பெரிய சண்டை வந்தது. வாக்கு மனஸைக் கேட்டது. "சதா என்னை சச்சரவு பண்றயே... கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்.. நான் இல்லைன்னா உனக்குப் பிரயோசனம் உண்டா? என் உதவியினால்தானே நீ வெளியில் வரமுடிகிறது! ". வாக் தேவதை இல்லாத மனத்தினாலே பிரயோஜனமில்லை என்று வேதமே சொல்கிறது. இன்னொரு இடத்தில் மனிதர்கள் ஒருத்தரோடு ஒருத்தர் தொடர்பு கொண்டு எதனாலே மேன்மையுறுகிறார்கள் என்றால் வாக்கினாலேதான் என்கிறது வேதம்.

உலகிலே மனிதர்கள் வாக்கினால் பறிமாறிக் கொண்டு தான் உறவு முறையை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற கர்வத்தினால் வாக்கு மனஸோடு சண்டையிட அதற்கு மனஸு சொன்னது, "நான் மட்டும் இல்லாவிட்டால் நீ தனியாகப் பேசிவிட முடியுமா? நான் விஷயதானம் பண்ணினால்தானே நீ பேச முடியும்?"

வாக்கு வாதம் தொடர்ந்தது. ஏகமாய்ச் சண்டை. கடைசியில் இரண்டுமே பிரஹ்மாவிடம் போய்க் கேட்போம் என்று நியாயம் கேட்க கிளம்பிப் போயின.

வாதி-பிரதிவாதி இரண்டும் பிரஹ்மாவிடம் போய் நின்றன. "எங்களுள் யார் பெரியவன்?" என்று கேட்டன. இந்த பிரஹ்மா பாவம்! லெளகீகமே தெரியாதவர். உலகம் முழுவதையும் படைக்கிறவர் என்றாலும் அவருக்கு லெளகீகம் தெரியவில்லை.

"என்னுடைய படைப்பைச் சொல்கிறேன். எப்படி படைத்தேன் என்று சொல்கிறேன். நீங்கள் சண்டை போடக்கூடாது" என்றார். "மனதை முன்பு ச்ருஷ்டி பண்ணினேன். வாக்கை பின்பு ச்ருஷ்டி பண்ணினேன். பிராணனை முன்பு ச்ருஷ்டி பண்ணினேன். அபானனை பின்பு ச்ருஷ்டி பண்ணினேன். ஆகவே மனஸுதான் பெரிசு. வாக்கு சிறியது. ஏ வாக்கே! மனஸுடன் சண்டை போடாதே என்று சொல்லி விட்டார்.

வாக்குக்கு ஏகமாய்க் கோபம். "என்னையும் படைத்து, மனஸையும் படைத்து இப்படி மத்யஸ்தம் கேட்க வந்த நேரத்தில் என்னை மட்டம் என்று சொல்லிக் விட்டாரே! அதுவும் அந்த மனஸைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே சொல்லி விட்டீரே! என்னால் உமக்குப் பிரயோஜனமே இல்லாமல் போகக்கடவது" என்று சாபமே கொடுத்து விட்டது வாக்கு.

இந்த சாபம் காரணமாகத்தான் பிரஹ்மாவுக்கு எந்த மந்த்ரம் சொன்னாலும் உரக்கச் சொல்லக்கூடாது என்று வழக்கம் ஏற்பட்டுள்ளது. உரக்கச் சொல்லப்படும் மந்த்ரம் பிரஹ்மாவுக்குப் போய் சேரவே சேராது.

சபித்துவிட்டுப் போன வாக் தேவதை அதோடு விட்டுவிடவில்லை. கோபத்துடன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதது. இந்த மனஸு சும்மாயிருக்கலாம் அல்லவா! அதுதான் இல்லை. அங்கேயிருந்து வந்து வாக் தேவதையை முதுகிலே ஒரு தட்டு தட்டியது. "பெரிசா பேசினயே! பிரஹ்மா என்ன சொன்னார் பார்த்தியா? அதுக்கப்புறமும் உனக்கு தெளிவு வரலை. இப்படி விசாரப்பட்டுக் கொண்டு அழுதுகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே! என்னைப் பெரியவன் என்று ஒப்புக் கொள்வதில் உனக்கென்ன கஷ்டம்?" என்று கிண்ட ஆரம்பித்தது.

"சரி.. பிரஹ்மா சொன்னதை விட்டுவிடு.‌ இப்போ உனக்கும் எனக்கும் போட்டி. நான் பரப்ரும்மத்தைப் பார்க்கப் போகிறேன். உனக்கு சக்தி இருந்தால் ஓடி வா பார்ப்போம் "என்று மேலும் சொல்லி விட்டு மனஸு குடுகுடுவென்று ஓட ஆரம்பித்து விட்டது.

வாக்குக்கு அந்தக் கணத்தில் பெளருஷம் வந்து விட்டது. அப்படியா சங்கதி! நானும் வருகிறேன் என்று மனஸோடு சேர்ந்து ஓடியது. மனஸு ரொம்ப ரொம்ப வேகமாகப் போயிற்று. அந்த வேகத்தில் போகமுடியாமல் வாக்கு ஏதோ தன் வேகத்திலே ஓடிப்போனது. ஆனால் இரண்டும் எத்தனை வேகமாய்ப் போய்த் தேடியும் அந்த பரப்ரும்மத்தைக் காணமுடியவில்லை.

வேகமாய் வந்து கொண்டிருந்த வாக்கு திரும்பி ஓடி வந்து கொண்டிருந்த மனஸைப் பார்த்துக் கேட்டது.‌ "ஏ மனஸே! என்னைக் காட்டிலும் அதிவேகமாய் ஓடினாயே! அந்த பரப்ரும்மத்தைக் கண்டாயா?"

"இல்லை" என்று கையை விரித்து விட்டது மனஸு. மனம் ஓடியதையும், வாக்கு ஓடியதையும் அட்டவணைப் போட்டுப் பார்த்த்தால் , மனம் ஓடிய தூரம் ரொம்ப அதிகம்.‌ ஆனால் வாக்கு, மனம் இரண்டுக்கும் வாய்த்தபலன் ஒன்றுதான்.‌ ஓடிய தூரம்தான் வேறுபட்டது.

#மனத்திலோர்_தூய்மையில்லை என்றாரல்லவோ தொண்டரடிப்பொடி ஆழ்வார்.‌ ஆழ்வாரே அப்படி தம்மைக் கூறிக் கொள்கிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? அவனையடையும் மனதை அவனே கொடுத்தால்தான் உண்டு. மனமார பிரார்த்தித்தால் கட்டாயம் தருவான் என்பதில் சந்தேகமேயில்லை.‌

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்த ஜாதி தர்மமேதான் உள்ளூர அவரவருக்குப் பாரம்பரியமாக ஏற்பட்ட குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான், ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கின்ற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.

ravi said…
பரசுராமர், த்ரோணாசாரியார் இவர்கள் பிராம்மணராயினும் க்ஷத்ரிய குணத்தோடு இருந்தார்களே; தர்ம புத்ரர் க்ஷத்ரியராயினும் பிராம்மண குணத்தோடு இருந்தாரே; விச்வாமித்ரர் புஜபல பராக்ரமத்தோடும் ராஜஸ குணத்தோடும் இருந்துவிட்டே அப்புறம் பிரம்மரிஷி ஆனாரே என்றால் இதெல்லாம் கோடியில் ஒன்றாக இருந்த exceptionகள் (விதிவிலக்கு) தான். எந்த ரூலானாலும் எக்ஸப்ஷன் உண்டோ இல்லையோ? பொதுவாக வெளிப்பட வேறு குணம் தெரிந்த போது கூட உள்ளூரப் பிறப்பாலான ஜாதித் தொழிலுக்கேற்ற குணந்தான் இருக்கும் என்ற அபிப்ராயத்திலேயே பகவான் காரியம் பண்ணினதாகத்தான் தெரிகிறது.

ravi said…
அதெப்படி பிறப்பே குணத்தைத் தொழிலுக்கேற்றதாக அமைத்துக் கொடுத்த‌து என்றால், Individuality-யுடன் [தனித்தன்மையுடன்] heredity[பாரம்பரியம்] என்பதும் சேர்ந்தேதான் ஒரு மனுஷனை உருவாக்குகிறது என்று இக்கால ஸைக்காலஜியும் சொல்கிறதல்லவா? ஒருத்தனின் குணம் உருவாகும் முன்பே அவன் தலைமுறை தத்வமாக வந்த ஒரு தொழிலின் சூழ்நிலையிலேயே வளர்ந்து தானாகவும், கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொண்டும் அந்தத் தொழிலை எடுத்துக் கொண்டதால் குணமே தொழிலை அநுஸரித்து ஏற்பட்டது. ‘நமக்கு என்று ஏற்பட்ட தொழில் இது’ என்று அவரவரும் துராசையோ, போட்டியோ இல்லாமல் நிம்மதியாகப் பிரிந்திருந்து தொழில்களைச் செய்து கொண்டு மொத்த ஸமூஹம் ஒற்றுமையாக இருந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து, அதிபால்யத்திலேயே அந்தத் தொழிலைப் பார்த்து அதிலே ஒரு பற்று, aptitude உண்டானதால், பிறப்புப்படி செய்வது குணப்படி செய்வதாகவும் ஆயிற்று. இப்போது சீர்திருத்தவாதிகள் என்ன சொன்னாலும், பழைய ஏற்பாட்டில்தான் திறமை, குணம் இவையும் தொழிலோடு அநுஸரணையாகக் கலந்து இருந்தன. ஒருத்தன் தன் குணத்துக்கு அநுஸரணையாகத் தொழிலைச் செய்தான் என்றால் அது பழைய தர்மப்படி செய்த போதுதான் இருந்தது என்பேன். இப்போது இதைத் தலைகீழாக மாற்றித் திரித்துப் பேசுகிறார்கள்.

ravi said…
இப்போது மனோதத்துவத்தை ரொம்பவும் ஆராய்ச்சி செய்கிறவர்கள்கூட என்ன சொல்கிறார்கள்? ஒருத்தனின் குணத்தை, திறமையை, மனோபாவத்தை நிர்ணயம் பண்ணுவதில் heredity -க்கும் [பாரம்பரியத்துக்கும்] அவன் இருக்கிற environment -க்கும் [அதாவது] சுற்று வட்டாரத்துக்கும் மிகுந்த முக்யத்துவம் இருக்கிறது என்கிறார்கள். பழைய நாளில் பாரம்பரியப்படிதான் அப்பன், பாட்டன், முப்பாட்டன் தொழிலை ஒவ்வொருவனும் பண்ணினான். இரண்டாவதாக, ஒவ்வொரு தொழில்காரரும் ஒரே கிராமத்தில், அக்ரஹாரம், பண்டாரவாடை, சேரி, சேணியர்தெரு, கம்மாளர் தெரு என்று, தனித்தனியாக, ஒவ்வொரு சமூகமாக வசித்தபோது என்வைரன்மென்டும் [சுற்றுச் சூழ்நிலையும்] ஸாதகமாக இருந்தது. இந்த இரண்டு அம்சங்களும் அழுத்தமான விதத்தில் ஒருத்தனுடைய குணத்தை அவனுடைய பரம்பரைத் தொழிலுக்கு மிகவும் ஏற்றதாகச் செய்து வந்தன.

ravi said…
இந்த விஷயத்தை நான் சொல்வதைக் காட்டிலும் காந்தி சொன்னதை எடுத்துக் காட்டினால் சீர்திருத்தக்காரர்கள் ஒத்துக் கொள்வீர்கள். காந்தி இப்படி சொல்கிறார்.

“கீதையானது குணத்தையும் கர்மாவையும் பொறுத்தே ஒருத்தனின் வர்ணம் (ஜாதி) அமைகிறது என்று தான் சொல்கிறது. (அதாவது பரம்பரையால், பிறப்பால் அமைகிறது என்று சொல்லவில்லை) ஆனால் குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே”*

ravi said…
ஆகையால் கிருஷ்ண பரமாத்மா கொள்கை ஒன்று, காரியம் வேறொன்று என்று முரணாகப் பண்ணவில்லை யென்பது சீர்திருத்தவாதிகள் எல்லோரும் தலைவராக ஒப்புக்கொள்ளும் காந்தியின் வார்த்தையாலேயே உறுதியாகிறது. நவீனக் கொள்கைக்காரர்கள் தங்கள் இழுப்புக்கு வேத சாஸ்திரங்களையும் கிருஷ்ண பரமாத்மாவையும் இழுத்து வளைக்கக்கூடாது.

ravi said…
கிருஷ்ணர் “நான் சொல்கிறேன்; நீ கேள்” என்று அடித்துப் பேசுகிறவர்தான். ஆனால் அவரே ஜனங்கள் எப்படி காரியம் பண்ணவேண்டும் என்கிறபோது “நான் இப்படிச் சொல்கிறேன் என்று சொல்லாமல் சாஸ்திரம் எப்படிச் சொல்கிறதோ அதுவே பிரமாணம்” என்று அழுத்திச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத, விஷ்ணு புராணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது. பிறப்பால் ஜாதி என்கிற சாஸ்திரங்களே கிருஷ்ணர் காலத்துக்குப் பிறகுதான் வந்தது என்றுகூட இக்கால ‘ரிஸர்ச்’காரர்கள் சொல்லக்கூடுமாதலால் இவ்விஷயத்தைச் சொல்கிறேன். கிருஷ்ண பரமாத்மாவின் காலத்தில் வர்ணாச்ரம விபாகங்களைச் சொல்கிற சாஸ்திரங்கள்தான் தர்மப் பிரமாணமாக இருந்தன என்று பாரத, பாகவத, விஷ்ணு புராணாதி க்ரந்தங்கள் ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் சொல்கின்றன. இவ்வாறாக பிறப்பின்படியே வர்ணவிபாகம் செய்யும் சாஸ்திரங்கள் அநுஷ்டிக்கப்பட்ட காலத்தில்தான் பகவான் ஸ்ப‌ஷ்டமாக,
ravi said…

ய: சாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:|

ந ஸ ஸித்திம் அவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் ||

தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதெள‌ |

ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்துமிஹார்ஹஸி ||

“எவன் சாஸ்திர விதியை மீறி சொந்த ஆசைகளின் வசப்பட்டு தொழிலை எடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு ஸித்தியில்லை, ஸுகமில்லை, கதி மோக்ஷமும் இல்லை. எந்தத் தொழில் செய்யலாம். எது கூடாது என்று வரையறுத்துக் கொள்வதற்கு சாஸ்திரம்தான் பிரமாணம். இப்படி சாஸ்திரோக்தமான வழியை உணர்ந்து அதன்படி தொழில் செய்வதற்கு உரியவனாகவே இருக்கிறாய்” என்று சொல்லியிருக்கிறார்**.
ravi said…
இதனால் அவர் பிறப்புப்படி ஜாதி என்பதைத்தான் நிர்த்தாரணம் பண்ணுகிறார் [வலியுறுத்தி நிலைநாட்டுகிறார்] என்பதில் லவலேசமும் ஸந்தேஹமேயில்லை.
ravi said…
🪷 *தினம் ஒரு திவ்ய பிரபந்தம்* 🪷

இன்னைக்கு நாம சேவிக்கும் பாசுரம் திருப்பல்லாண்டு பாசுரம் 2 மற்றும் 3

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே


பொருள்

என்னைப் போன்ற அடியார்களுடன் நீ எப்போதும் பிரிவின்றி இருக்க வேண்டும்.

உன்னுடைய வலது மார்பிலே வாழ்கின்ற திருமகளுக்கும், உன் வலது கரத்திலே இருக்கும் சுடர் விடும் சுதர்சனச் சக்கிரத்துக்கும், நீ போருக்குச் செல்லும் போது முழங்கும் பாஞ்ச சன்னியத்துக்கும் மங்களாசாசனம் செய்கிறேன்.

அடுத்த பாசுரம்

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை

பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பொருள்

சாப்பாட்டுப் பிரியர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் எங்கள் மண் சுமக்கும் கைங்கரியத்தில் பங்கு கொள்ளுங்கள்; பெருமை அடையுங்கள். நாங்கள் ஏழு தலைமுறைகளாக இந்தச் சேவையைச் செய்து வருகின்றோம். வானரர் சேனை கொண்டு இலங்கை அரக்கர்களுடன் போர் செய்து வென்ற ராம பிரானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.

நாளை அடுத்த பாசுரங்களை சேவிக்கலாம்

💢💢💢💢💢💢💢💢



ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🛕🔔🙏

*நமசிவாய வாழ்க.*


ஆதிமூலம் - அநாதி மூலம்.

1992ம் ஆண்டு.
காஞ்சி பெரியவர் தலைமையில் நடைபெறும் சதஸ் எனும் சத்சங்கம்.

சைவ, வைணவப் பெரியோர்கள் நிறைந்த அவை.

நடுநாயகமாக காஞ்சி காமகோடி பீடாதிபதி அமர்ந்திருக்க,

தத்தம் சமயம் உயர்ந்ததென்ற கொள்கையை நிறுவ, ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அடுத்ததாக *ஸ்ரீவில்லிபுத்தூர் அலங்காரப்பட்டர் எனும் வைணவப் பெரியவர். திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்த்தான வித்வான். சுருக்கமாக வைணவர்களின் ஜாம்பவான்.*

பல்வேறு கருத்துக்களை எடுத்து உரைத்தவர், *இறுதியில் ஆதிமூலமே என்று அழைத்தவுடன் எங்கள் பெருமாள் தான் வந்து யானையைக் காப்பாற்றினார். அவரே முழுமுதற் கடவுள்* அவரைத் தலைவராகக் கொண்ட வைணவமே தலைசிறந்த சமயம் என்று முழங்க,

அவையில் இறுக்கமான சூழல்.

காஞ்சிப் பெரியவர் சைவசமயப் பெரியோர்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்க, அவர்கள் திகைத்த நிலையில் இருந்தனர்.

காஞ்சிப் பெரியவர் அருகில் இருந்த, அப்போது தான் பாடசாலை படிப்பு முடித்த, *மிகவும் இளவயது வித்யார்த்தியை பார்க்க, அனைவரது கவனமும் அங்கு செல்கிறது.*

இதுவரை *அந்த வித்யார்த்தியை காஞ்சிப் பெரியவர் மடியில் அமர்த்தியது போல் நெருக்கமாக அமர்த்தி யிருந்தார். அந்த சிறுவனின் பார்வையும் தீட்சண்யமும் தேஜஸூம், திருப்பெருந்துறையில் ஸ்ரீ மாணிக்க வாசகரை ஆட்கொள்ள வந்த ஸ்ரீ ஆலவாய் சொக்கநாதரைப்* போன்றே இருந்தது. அனைவரது பார்வையும் அந்த சிறுவனை நோக்கி.

காஞ்சிப் பெரியவரும், நோக்க,

அந்தச் சிறுவன் திருவாய் மலர்ந்து, *ஸ்ரீவில்லிபுத்தூர் அலங்காரப்பட்டர் சுவாமிகள் சொன்னது உண்மைதான், அது நடந்த வரலாறு யாரும் மாற்ற முடியாது.*

*ஆதிமூலமே என்று அழைத்தவுடன் பெருமாள் வந்தார்.*

அவர் *அநாதி மூலம் என்று அழைத்திருந்தால் எங்கள் சிவபெருமானே நேரடியாகவே வந்து அருள் செய்திருப்பார், அவர் ஆதி எங்கள் சுவாமி அநாதி மூர்த்தி என்று என்று எளிமையாக* (அதிட்டித்தும் அவர் தான் அருள் செய்தார் என்ற உட்பொருள் விளங்க)

திருவாய் மொழி மலர்ந்து அருள ஆர்ப்பரித்த கூட்டத்தில் காஞ்சிப் பெரியவர் இறுதியாக, இதுதான் தொன்மையான பாரம்பரியத் தோன்றலான சுவாமிகளின் அருளுரை. சுவாமிகள் கருத்துடன் சதஸ் நிறைவுற்றது என்று அறிவிக்க வந்திருந்த சிவாச்சாரியார் பெருமக்களும், இளவயது சிறுவனாகப் பார்த்தவரை, *ஆதீன வழித் தோன்றலாகப்* பார்த்து அளவலாவி பிரமித்தனர்.

அந்த *இளைஞர் நமது 57வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ இராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள்.*

அதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் காஞ்சிப் பெரியவர் ஒவ்வொரு சதஸின் போதும், அப்போது இளவரசாக இருந்த நமது சந்நிதானங்களை அழைத்து மகிழ்வார்கள்.

*நமசிவாய வாழ்க.*

ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 390* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ *ஸம்வத்ஸரோவ்யால* :
ப்ரத்யய: ஸர்வதர்ச’ன: ||10
ravi said…
*92. ஸம்வத்ஸராய நமஹ (Samvatsaraaya namaha)*
ravi said…
ஸ்ரீ மைத்ரேய ரிஷியின் அருளால் என் முன் பிறவியைப் பற்றிய செய்தியை நான் அறிந்து கொண்டேன்.

அதைச் சொல்கிறேன்! கேளுங்கள்!”

என்று சொல்லித் தன் முன் ஜென்ம வரலாற்றைக் கூறலானாள்.

ஸ்ரீ சௌவீர மன்னர், ஸ்ரீ திருமாலுக்கு ஒரு கோயில் கட்ட விரும்பினார்.

தனது புரோகிதரான ஸ்ரீ மைத்ரேயரைக் கொண்டு,
ஸ்ரீ தேவியாற்றங்கரையில் சிறப்பாகக் கோயிலைக் கட்டி முடித்தார்.

அதன் அருகிலேயே தனது அரண்மனையையும் அமைத்துக் கொண்டு
தினமும் இறைவனுக்கு மலர்கள், தூபம், தீர்த்தம் முதலியவற்றைக் கொண்டு வந்து சேர்த்து தொண்டு செய்தார்.
ravi said…
*கந்தர் அநுபூதி*

பதிவு 6 started on 6th nov

*பாடல் 2 ... உல்லாச, நிராகுல*

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?

எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய்,

முருகா சுரபூ பதியே
ravi said…
*புனல் பார் கனல் மாருதமோ?*

அடுத்தபடி நிலம், நீர், தீ, காற்று என்ற நான்கு தத்துவங்கள். இவையா
நித்தியம்?

இவற்றின் பலவித சேர்க்கையினால்

"Permutation and Combination"

... ஆனது தானே இந்தப் பிரபஞ்சம்.

உடம்பு அறிவு எல்லாம் வெறும்
தோற்றமே.

உடம்புக்கு தனியாக ஆன்மா என்று இல்லை.

வினை
கிடையாது.

வினைக்கு ஈடாக உயிரை உடலோடு கூட்டுவதற்கு கடவுள்
என்ற தத்துவம் உண்டு என்பது கட்டுக்கதை.

இது சார்வக மதம்.

*ஞானோதயமோ?*

ஞானோதயமோ என்கிற கேள்வியில் பெளத்த மதம் குறிப்பிடப்படுகிறது.

ஞானம்தான் ஆன்மா. இந்த ஞானம், ஒவ்வொரு கணமும் தோன்றித்
தோன்றி அழியும். முன்பு அழிந்த ஞானத்தின் வாசனை பிற கணத்தில்
தோன்றும் ஞானத்தில் தென்படுகிறது.

இந்த தொடர்ச்சியின் வாசனை
அழிவதே முக்தி.

*நவில் நான் மறையோ?*

நவில் நான் மறையோ என்பதில் 'மீமாம்ச' மதம் குறிப்பிடப்படுகிறது.

வேதம் அனாதி. அவற்றில் குறிக்கப்பட்டுள்ள யாகம் யக்யங்களை செய்து
வந்தாலே முக்தி கிடைக்கும்.

இதற்கென்று கடவுள் தேவையில்லை.

உலகம் நித்யமானது. வேதத்தில் கரும காண்டமே இதற்கு பிரமாணம்.

*யானோ? மனமோ?*

இத்தனை ஆராய்ச்சிகள் செய்யும் நான் என்பதுதான் நித்ய வஸ்துவா?

இது அடுத்த கேள்வி.

இது ஆன்ம வாதம்.

மனமே ஆத்மா. இறைவன்
கிடையாது.

மூலப் ப்ரகிருதியின் பரிணாமமே இந்தப் பிரபஞ்சம். இதுவே
சாங்கிய மதம்.

*எனை ஆண்ட இடம்தானோ?*

கடைசியாக என்னை ஆண்ட இடம்தானோ? என கேட்கிறார்.

இடம்
என்றால் நிலை.

ஜீவாத்மாவின் பக்குவ நிலையை அறிந்து, ஆண்டவன்
எழுந்தருளி ஆட்கொள்ளும் அந்த கருணை நிலைதான் மெய்த் தத்துவம்
என்பதுதான் அருணை முனிவரின் முடிவான துணிவு. ' *தானோ* ' என்கிற
பதம் சேர்ந்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் விலக்கிவிட்டு இதுவே
மெய்ப் பொருள் என்பது அருணகிரியார் சுட்டிக் காட்டும் உண்மை
விளக்கம்.🙏🙏🙏
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 389*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

*சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை*
ravi said…
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।

सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥

ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-

ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।

ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-

ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
ravi said…
அம்ப காமாக்ஷி கோமலருசி:” – கண்ணுக்கு இனிமையான காந்தியோடு கூடியதான

“த்வத் அபாங்க3மாலா” – உங்களுடைய கடாஷங்களோட வரிசையானது,

” ஸ்மரப்ரதிப4டஸ்ய” – ‘ஸ்மர:’னா மன்மதன். மன்மதனோட யுத்தம் செய்யும் பரமேச்வரனுடைய,

“மனோஜ்ஞம் வபு:” – ரொம்ப மனசுக்கு சந்தோஷம் கொடுக்க கூடிய அவருடைய அந்த “வபு:” மார்புனு வச்சுகலாம். அவருடைய உடம்பு, ரூபம் என்ற

“அம்போ4ஜகானனம்” – அது ஒரு தாமரைக் காடு மாதிரி இருக்காம்.
ravi said…
அனைவருக்கும் வணக்கம்,VBSM,தலைவர் சேகரண்ணா,மற்றும் தலைமையின்,""மந்திர கோஷம்"",,""27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்""".
VBSM.
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனனம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.எப்பொழதெல்லாம் மன அழற்சி(STRESS)உண்டாகிறதோ,எப்பொழதெல்லாம் தோல்வி,என நினைக்கின்றீர்களோ,அப்பொழதெல்லாம் கூறுங்கள்,வெற்றி உங்களதே!!!VBSM

1.அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்vbsm

2.பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்vbsm

3.கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்vbsm

4.ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்vbsm

5.மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்vbsm

6.திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்vbsm

7.புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்vbsm

8.பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்vbsm

9.ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்vbsm

10.மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்vbsm

11.பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்vbsm

12.உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்vbsm

13.அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்vbsm

14.சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்vbsm

15.சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்vbsm

16.விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்vbsm

17.அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்vbsm

18.கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்vbsm

19.மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்vbsm

20.பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்vbsm

21.உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்vbsm

22.திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்vbsm

23.அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்vbsm

24.சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்vbsm

25.பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்vbsm

26.உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்vbsm

27.ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்vbsm(ஒவ்வொரு நட்சத்திர காயத்ரி அவரவர்,சொன்ன பின்பு)கீழ் வரும் மஹா ஶ்ரீகாயத்ரி மந்திரமான,""ஓம் பூர்பூவஸ்ஸுவஹ!! தத்ஸவிதுர்வரேண்யம்!!பர்கோ தேவஸ்ய தீமஹி!!தீயோயோனப்ரஜோதயாத்!! எனசொல்லி முடிக்கவும்,வெற்றி சாத்தியம்,,ஜெயம் உங்களுக்கே,,வாழ்க வளமுடன்...வாசுதேவன்,VBSM.(9597180623)..இன்னும் வரும்,....
ravi said…
முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்?

व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं

दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् ।

भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं

श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥

வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் முனிமனோவ்ருʼத்திப்ரவ்ருʼத்த்யௌஷத⁴ம்

தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபுவநீ ஸஞ்ஜீவனைகௌஷத⁴ம் ।

ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனைகௌஷத⁴ம்

ச்ரேய:ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன: ஸ்ரீக்ருʼஷ்ணதி³வ்யௌஷத⁴ம் ॥ 24 ॥

ன்னு சொல்றார்
ravi said…
அப்படி இந்த ஸ்லோகத்துல நல்ல கார்யங்கள் பக்தியோடு பண்ணனும். வேதத்தைக் குறைக்கறதா அர்த்தம் இல்ல. அந்த நாராயண ஸ்ம்ருதி, பகவானை தியானம் பண்ணாமல், இதெல்லாம் பண்ணா பயனில்லாம போயிடும்ங்கிறதுதான் இந்த ஸ்லோகத்துல முக்கியமா சொல்றார். ஆச்சார்யாள் கூட குரு அஷ்டகம்னு ஒரு ஸ்லோகம் பண்ணியிருக்கார்.

அதுல விதேசேஷு மான்ய:ஸ்வதேசஷு தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷு மத்தோ ந சான்ய: I
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் II
ravi said…
🌀 *திருப்பம் தரும் திருவல்லம் பரசுராமர்!* 🌀

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமருக்கு கேரளாவில் அமைக்கப்பட்ட பழைமையான ஆலயம்; திரிவேணி சங்கமத்தில் அமைந்த தலம்; பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கும் தனித்தனி சந்நிதிகள் கொண்ட கோயில்; பிற்காலப் பாண்டியர்கள் எழுப்பிய ஆலயம்; முழுவதும் கருங்கல்லினால் அமைந்த திருக்கோயில்; ஆதிசங்கரர் வழிபட்ட தலம்; முன்னோர்கள் முக்திக்கான பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள, திருவல்லம் பரசுராமர் திருக்கோயில். கர்மனாறு, கிள்ளியாறு, பார்வதிபுரத்தாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
வல்லம் என்பதற்குத் தலை என்ற பொருள் கூறப்படுகிறது. அந்தவகையில், அனந்தபத்மநாப சுவாமிக்குத் தலைப்பகுதியாகத் திருவல்லம் திகழ்கின்றது. அனந்தகாடு எனும் திருவனந்தபுரம் உடலாகவும், திருப்பாதபுரம் என்பது பாதமாகவும் போற்றப்படுகிறது.
பரசு என்பதற்கு கோடாலி என்பது பொருள். கடுந்தவத்தினால் சிவபெருமானிடம் கோடாலி பெற்றவர் பரசுராமர். இவர், தன் கோடாலியால் மேற்குக் கடற்கரையில் உருவாக்கிய தேசமே கேரளா.
இவர் குறித்த புராணக் கதை: ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா, கற்புக்கரசியான இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. கங்கைக் கரையோரம் வசித்து வந்த இவர், நாள்தோறும் கங்கையில் நீராடி, மண் எடுத்து பானை செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு சமயம், இவ்வாறு கங்கைக்குச் சென்றபோது, தண்ணீரில் அழகிய ஆண்மகனின் உருவம் தெரிய, அவன் அழகில் நிலை தடுமாறினாள். மன மயக்கத்தில் பானை செய்ய முடியாமல் தவித்தாள். அனைத்தையும் குறிப்பால் உணர்ந்த முனிவர், அவளின் மீது கோபங்கொண்டார். தன் புதல்வர்களை அழைத்து, அவளை வெட்டி விட்டு வரும்படி ஆணையிட்டார்.
நான்கு புதல்வர்கள் மறுக்க, ஐந்தாவது மகனான பரசுராமன் தன் தாயின் தலையை கோடாலியால் வெட்டி, தந்தைக்குச் சமர்ப்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த முனிவர், வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பரசுராமர் தன் தாயை மீண்டும் உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்றார். பரசுராமனின் தாயன்பைக் கண்டு பெருமை கொண்டு, அதன்படியே ரேணுகா உயிர்ப்பெற்றாள் என புராணம் கூறுகிறது.
தாய் மீதும், தந்தை மீதும் அளவற்ற அன்பு கொண்ட பரசுராமர், அட்சயதிரிதியை அன்று அவதரித்தார். இவரது கதை ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் கூறப்படுகிறது. கொங்கன் பிரதேசம், பரசுராமரின் தலமாக இன்றும் போற்றப்படுகிறது.
பரசுராமருக்கென கேரள மாநிலத்தில் அமைந்த தனிச்சிறப்பு கொண்ட திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இதுதவிர, அருணாசல பிரதேசத்தில் லோகித் மாவட்டத்தில், பரசுராமர் குண்ட் என்ற தலம் அமைந்துள்ளது. சென்னையில் பரசுராமேஸ்வரர் திருக்கோயில், அயனாவரத்தில் அமைந்துள்ளது.
திருவல்லத்தில் உள்ள இவ்வாலயம், பிற்காலப் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. ஆலயம் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலின் தொன்மையைக் கருத்தில்கொண்டு, தொல்லியல்துறை பராமரித்து வருகின்றது. கிழக்கு, வடக்கு என இருவாயில்களும், இரு கொடிம ரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு வாசலில் சிவபெருமான், வடக்கு வாசலில் பரசுராமர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் வாழும் ஆலயமாக இது திகழ்கின்றது. விநாயகர், முருகர், கிருஷ்ணன், பத்ரகாளி, வியாச முனிவர், மத்திய முனிவர், நாகர்கள் சந்நிதிகளும் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன.
பரசுராமர் வடக்கு முகமாக அனந்தபத்மநாப சுவாமியின் ஆலயத்தினை நோக்கி நின்ற கோலத்தில் எழிலாகக் காட்சி தருகிறார். அலங்காரத்தில் உயிரோட்டமாக நமக்கு காட்சிதருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது. இத்திருக்கோயிலில், பரசுராமரின் பாதம் வணங்கப்படுகிறது. இதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது.
திருவனந்தபுரம்-கோவளம் வழித்தடத்தில், திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருவல்லம் ஊரில் இக்கோயில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருவல்லம் உள்ளது.

ravi said…
பாதாரவிந்த சதகம் !

22.கதா தூரீ கர்த்தும் கடுதுரித காகோல ஜனிதம்
மஹாந்தம் ஸந்தாபம் மதந பரிபந்த்தி ப்ரியதமே !
க்ஷணாத்தே காமாக்ஷி த்ரிபுவன பரீதாப ஹரணே
படீயாம்ஸம் லப்ஸ்யே பதகமல ஸேவாம்ருத ரஸம் ||

மன்மதனின் எதிரியின் மிகவும் இனியாளே காமாக்ஷி ! கொடும்
பாபமாகிய விஷத்தால் ஏற்பட்ட பெருந்தாபத்தை அகற்றுவதற்காக, மூவுலகின் துயரையும் ஒருநொடியில் போக்க மிகவும் வல்லதான உள் திருவடித்தாமரையின் ஸேவை எனும் அமுதபானத்தை என்று பெறுவேன் ?

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று காட்டுவோம் - விளக்கும் எளிய கதை*
--------------------------------------------------------
கண் பார்வை இல்லாத கணேசன் வீதியில்
அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே
" நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.

🌺அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை.

🌺அந்த வழியை கடந்த ஸ்ரீ கிருஷ்ண பக்தன் ரோகித் , அவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.

🌺பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான் ரோகித்.

🌺அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. அவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

🌺வாசகத்தை மாற்றி அமைத்த ஸ்ரீ கிருஷ்ண பக்தன் ரோஹித், ஏதேனும் மாற்றம் உண்டா? என்று பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நன்றிகள் என மனதார வேண்டிக் கொண்டான் ரோஹித்.

🌺கண் பார்வை இல்லாத கணேசன், அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.

🌺அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் பிச்சை இட்டனர்.

🌺இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.

🌺இரண்டு வாசகங்களுமே கணேசன் குருடன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் அவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது.

🌺இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

🌺உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று காட்டுவோம் .

🌺எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.
----------------------------------------------------------
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ravi said…
*இன்னா நாற்பது*

பாடல் - 09

கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. . . . .[09]

விளக்கம்:

கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே சேணம் இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
🌹🌺 "“ *தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால் மட்டுமே தான் எழுந்திருப்பதாககூறிய மகாவிஷ்ணு இரங்கும் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺108 திவ்ய தேசங்களுள் ..!!56 வது திவ்ய தேசம் 🌺 *வைகுண்டநாதர் கோவில்* 🌹
: 1000-2000 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்டது
மாவட்டம் : காஞ்சிபுரம்

🌺ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர்.

🌺மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர்.

🌺அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது. வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்குழந்தைக்கு "பரமேச்சுரவர்மன்' என பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார்.

🌺கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதி காலமும் நெருங்கிவிட்டது.
அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார்.

🌺எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலைவைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர்.

🌺மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகை காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?. அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான்.

🌺அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாககூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றுவிட்டான்.

🌺🌹 *வாழ்க வளமுடன்*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
👇👇👇👇👇
*தாயிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உனக்கு செய்யும் அனைத்தும் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே..!

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா

*அம்மாவிடம் தோற்று போ*
அன்பு அதிகரிக்கும்..

*அப்பாவிடம் தோற்று போ*
அறிவு மேம்படும்..

*துணையிடம் தோற்று போ*
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

*பிள்ளையிடம் தோற்று போ*
பாசம் பன்மடங்காகும்..

*சொந்தங்களிடம் தோற்று போ*
உறவு பலப்படும்..

*நண்பனிடம் தோற்று போ*
நட்பு உறுதிப்படும்..

*ஆகவே தோற்று போ*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...

*அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்.*

படித்ததில் பிடித்தது
👆👆👆👆👆👆
.
ravi said…
*கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழா கொண்டாடும். அது எந்த ஊர் தெரியுமா?*

நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக நரஸிம்மரை தரிசிக்காமல் இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் தொல்லையை கடந்து யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம். அதுவும் கார்த்திகை மாதத்தில் அங்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்தால் ஒரு வித தைரியம் மனதிற்குள் உண்டாவதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் 11 மாத காலம் யோகத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் கண்களை திறந்து பார்ப்பதாக ஐதீகம். அதனால் தான் கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். கார்த்திகை சனி, ஞாயிறு என்றால் ஊரே அமளி துமளி தான்.

1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை தரிசித்து உள்ளே சென்றால் முதலில் நாம் தரிசிக்க இருப்பது தாயார் அமிர்தபலவள்ளியை. பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும் தாயாரை காண கண் கோடி வேண்டும். தாயாரை பார்த்த உடன் விடுமுறைக்கு வரும் குழந்தை கடந்த வருடம் விடுமுறை முடிந்து கிளம்பிய நாள் முதல் இன்று வரை நடந்த விஷயங்களை தனக்கு நடந்த சுக, துக்கங்களை எல்லாம் ஒன்று விடாமல் அம்மாவிடம் கூறுவது போல் அமிர்தபலவள்ளித் தாயாரிடம் கூறத் தோன்றும். அம்பாளின் புன்னகை ததும்பும் முகம் என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வது போல் தோன்றும். பிரிய மனமில்லாமல் தாயாரை தரிசித்து உள்ளே சென்றால் பிரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், பிரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தி யோக கோலத்தில் வீற்றிருப்பதை காணலாம்.

எந்தக் குழந்தையுமே அம்மாவிடம் பேசும் அளவிற்கு தந்தையிடம் பேசுவது கிடையாது. இங்கும் அது போலத்தான் நினைக்கத் தோன்றும். நரசிம்மரை தரிசிக்கும் போதே என்னடா அங்க எல்லாம் ஒப்பிச்சிட்டு வந்துட்டியா என்று நம்மை பார்த்து நரசிம்மர் கேட்பது போன்ற உணர்வு தோன்றும். உட்கார்ந்திருக்கும் அழகு அதற்கும் மேல்.. பிரம்மாண்ட உருவம். பத்மாசனத்தில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்த கோலம்.
மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே

விளக்கம்: சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும்,  கடிகை என்னும் பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன்  என்று இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றுள்ளது.

இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது. ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன்.

ravi said…
பகவத்கீதையை முதன்முதலில் உருது மொழியில் மொழிப்பெயர்த்தவர் "முகமது மெஹருல்லா"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்.

பகவத்கீதையை முதன்முதலில் அரபிக் மொழியில் மொழிப்பெயர்த்தவர் பாலஸ்தீனரான "எல் படேக் கமான்டோ"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இஸ்கான் அமைப்பில் இனைந்து ஜெர்மனி நாட்டின் இஸ்கான் அமைப்பின் தலைவரானார்.

பகவத்கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் "சார்லஸ் விலிக்னோஸ்"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்."Only Hinduism will survive in the world"என்ற உலக புகழ் பெற்ற வாக்கியத்தை சொன்னவர் இவரே.

பகவத்கீதையை முதன்முதலில் ஹீப்ரூ மொழியில் மொழிப்பெயர்த்தவர் இஸ்ரேலியரான "பெஷாசிஷன் லே பனாஹ்"பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இந்தியாவுக்கு வந்து தனது வாழ்நாள் இறுதி காலங்களை வாரணாசியிலேயே கழித்தார்.

பகவத்கீதையை ரஷிய மொழியில் மொழிப்பெயர்த்தவர் "நோவிகோவ்".இவரும் பிறகு இந்துமதம் தழுவி அதிதீவிர ஸ்ரீகிருஷ்ண பக்தரானார்.
இதுவரை மொத்தம் 283 மொழியறிஞர்கள் பகவத்கீதையை பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். அவர்கள் அத்தனை பேருமே பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி உலக அளவில் இந்து ஆன்மீக சேவை செய்தார்கள் என்பதே இந்து மதத்தின் மகிமை.!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
ravi said…
*தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும் !*

http://www.srimahavishnuinfo.blogspot.com

திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

ravi said…
ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும். இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள்.

ravi said…
ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர். மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி. கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது.

ravi said…
நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது. அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

ravi said…
அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று கேட்டார் ராமானுஜர். மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள். ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது. ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள். வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்… அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள்.

ravi said…
அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

ravi said…
ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.

ravi said…
ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார். “அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை.

ravi said…
மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. “சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். “இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.

ravi said…
இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர்.
மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள். “சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். ‘நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள்.

ravi said…
மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார்.

பின்னே… ஒரு கடிதம் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே! அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். ‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர். எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?! தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்.

அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர். ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?
உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது!
தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகளே சரணம்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 402* 🙏🙏🙏started on 7th Oct 2021

*154*
ravi said…
*154 निरुपाधिः - நிருபாதி -*

இது தான் ஆதாரம் என்று எதுவுமே இல்லாத பரம்பொருள்

பரமேஸ்வரி. எல்லையற்றவள்.🙏🙏🙏

உபாதிகள் இல்லாதவள் . உப+ ஆதி = சமீபத்தில் இருப்பதை தருவது ...

ஒரு கண்ணாடி இருக்கிறது அதன் எதிரே ஒரு பூவை வைத்தால் பூவின் வர்ணம் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கின்றது அதே போல ஸ்படிக லிங்கம்

ஜீவனும் ஒரு ஸ்படிகம் தான் ஜகத்தில் வடிவம் எடுத்து விட்டால் இங்கு இருப்பதை எல்லாம் பிரதிபலிக்கின்றது ...சொந்தம் , உறவு , நட்பு , ஆசை , பாசம் என்று பலவற்றை பிரதிபலிக்கின்றது .. உபாதி அடைகின்றது ...

இப்படிப் பட்ட உபாதிகள் எதுவும் இல்லாதவள் அம்பாள் 💥💥💥
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 401* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

🪷🪷🪷🪷🏵️🏵️🏵️🏵️

103
ravi said…
நிதே நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே

நிராகாடஜ்ஞானே நியம பரசித்தைக நிலயே

நியத்யா நிர்முக்தே நிகிலநிகமாந்த ஸ்துதபதே

நிராதங்கே நித்யே நிகமய மமாபி ஸ்துதிமிமாம்

103
ravi said…
செல்வமே !

என்றும் மகிழ்ச்சி பொங்கும் முகமுடையவளே !

எல்லையற்ற குணநிதியே !

நீதியில் வல்லவளே !

குறைவில்லாத ஞானம் உள்ளவளே !

சித்தத்தை அடக்கியவர்களிடம் உறைபவளே !

கட்டுப்பாடு அற்றவளே !

உபநிஷதங்கள் எல்லாம் போற்றும் உயர் நிலையே !

பௌஅம் அற்றவளே ! நித்தியம் ஆனவளே !

என்னுடைய இந்த ஸ்துதியையும் ஏற்றருள்வாய் !💥💥💥
ravi said…
நாமெல்லாம் கூறிக் கொள்கிறோமே நாமே தான் எல்லாம் செய்வது போல……
அது சாத்தியமா?
என்றால் இல்லை என்பது புரிந்து கொள்ள பகவானின் கிருபை/ அருள் இருந்தாலன்றோ முடியும்….. இதை மிக அழகாக புரிய வைக்கும் பாசுரம் 🙏
ravi said…
*கண்ணா*

தேவர்கள் அறிவரோ உன்னை இல்லை நித்ய சூரிகள் புரிந்து கொள்வரோ உன்னை

தூணை பிளந்து வந்தாய் ஒரு நாள் ..

தூற்றி இகழ்ந்தோர் கர்வம் களைந்தாய் ஒருநாள் ...

மீனாய் வந்தாய் ஒருநாள் வேதம் பிழைக்க

கோரை பற்கள் கொண்டே பூமி காத்தாய் மறுநாள்

மேருவை சுமந்தாய் ஆமையாய் ஒரு நாள் ...

மூன்றடியில் எல்லாம் அடங்கும் என்றே சீரடி வந்தே சிரிக்கின்றாய் எந்நாளாய் ..

பரசு சுமந்தே பந்தம் அருத்தாய் ...ஒரு நாள்

வில்லெடுத்து வேள்வி செய்தாய் ஒரு நாள் ...

கலப்பை கொண்டே கருணை உழுதாய் ஒரு நாள்

கண்ணனாய் என் மன்னனாய் ஆட்சி செய்கின்றாய் என்றும் என் திருநாளாயாய்

முதலை வாயை பிளந்தே யானை தனை மிட்டாய் நாராயணா என்றே அழைத்த வுடன் ஒருநாள்

நாளும் சொல்கிறேன் உன் நாமம் ..

வருவதற்கு ஏனோ தயங்குகிறாய் இது நியாமோ *கண்ணா*???💐
ravi said…
*அம்மா*

*வைரம்* போன்ற நெஞ்சம்

அங்கே வழிந்தோடும் கருணா ரஸ ஸாகரம்

*நீலம்* கொண்ட கண்டம் அதில் பாதி உன் அண்டம்

*முத்து* தோற்கும் பற்கள் அங்கே குடி கொள்ளும் சோமனும் ஆதவனும்

*பவளம்* போன்ற மேனி அதில் பழுத்த செவ்வாய் அதரம் அங்கே பிரவாகம் எடுப்பதோ மதுரம்

*மாணிக்கம்* என மின்னும் உன் அங்கம் உறைவதோ உணர்வுடையோர் மதிக்கின்ற நெஞ்சம்

*மரகதம்* இழைத்த மேனி அவள் ஆள்வதோ மீன்கள் கொஞ்சும் சங்கம்

*கோமேதகம்* கொட்டும் பார்வை அங்கே கொப்பளிப்பதோ உயர ரகம் கொண்ட புன்னகை

புஷ்பங்கள் தினம் பாடும் ராகம் *புஷ்பராகம்*

*வைடூரியம்* என்றே வந்தாள் நவரத்தின மாலை தனில்

அந்தி மயங்கும் மாலை தனில்

சந்தி சேர பாதம் பிடித்தேன் ...

எனக்கே சொந்தம் என்று அளித்தாள் வேதம் தேடும் அவள் திருவடிகளை 👣👣
Kousalya said…
மிகவும் அருமைான நவரத்ன மாலை அற்புதமாக அமைந்த சரம்...👍👍👏👏👌👌🙏🙏🪷🪷
Savitha said…
🙏🏻அருமை
ravi said…
👌🙏🌹🪷🙏
ravi said…
*❖ 23 பத்மராக ஷிலாதர்ஷ பரிபாவி கபோலபூ: =* பத்மராக ரத்தினத்தை போல ஜொலிக்கும் கன்னங்கள் கொண்டவள்💥💥💥
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 126*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
இருக்கலா மிருக்கலா மவனியி லிருக்கலாம்

அரிக்குமால் பிரமனு மகண்ட மேழு மகற்றலாம்

கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலே

நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் மீசனே. 126
ravi said…
இந்த அவனியில் தியான தவத்தை மேற்கொண்டு அதனால் சித்தி பெற்று சித்தர்களைப் போல் எப்போதும் இருக்கலாம்.

அரண், அரி, பிரமன் என்ற மூவர்களையும் கண்டு வணங்கி அண்டங்கள் எழும் சுற்றி வரலாம்.

ஐந்தாவது யோனியில் பிறந்து அது கருக்கொளாத குழி, நாற்றமில்லா யோனி என்பதை உணர்ந்து புருவமத்தி எனும் மூன்றாவது கண்ணில் சுழுமுனை தாளைத் திறந்து நெருப்பாற்றைக் கடந்து சோதியில் கலந்து பின்பு நீயும் ஈசனே என்று அறிந்து கொள்ளலாம்.
ravi said…
முகுந்தமாலா 28, 29 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம்.

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
நாராயணாக்யம்’ பகவானுடைய திரு நாமங்களில் நாராயணா என்ற இந்த நாமத்தை ‘ஸ்ரீமன் நாம:’ ங்கிறதுக்கு விஷ்ணுவினுடைய பெயர்ன்னு ஒரு அர்த்தம்.

அதுக்கு ஸுமங்கள நாமம்ன்னு பரம மங்களமான இந்த நாராயண நாமத்தை ஸ்ரீமன் நாம ப்ரோச்ய – அந்த நாராயண நாமத்தை சொல்வார்கள் எனில் *ப்ராபுர்வாஞ்சி²தம்* – இஷ்டப்பட்டதை அடைவார்கள்.

யார்? ‘ *பாபிநோபி* ’ பாபம் பண்ணினவர்களா இருந்தா கூட இந்த நாராயண நாமத்தை சொல்றதுன்னு வெச்சுண்டா அவா இஷ்டப்பட்டதைப் பெறுவார்கள்.

ஆனால் நான் இந்த நாராயண நாமத்தை போன பிறவியில சொல்லலேன்னு தெரியறது.

முன்னமே அவரிடத்துல பக்தி வெச்சு, நாராயண நாமத்தை சொல்லியிருந்தேன் எனில் நான் இந்த கர்ப்பவாஸாதி துக்கத்தை இன்னொரு வாட்டி அனுபவிச்சிருக்க மாட்டேன்.

வந்து இப்படி ஒரு தாய் வயிற்றில் பிறந்து இந்த பிறவிக் கடலில் விழுந்து அவஸ்தை படமாட்டேன்னு சொல்றார்.

இந்த நாராயண நாமத்தை இப்போதாவது சொல்லி இந்த ஜன்மத்துல கரையேறனும்கிறது தாத்பர்யம்.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🪔🌹🕉️🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉🕉️🛕🔔🙏

"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்

(கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய

எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்)

சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-- குமுதம் லைஃப்

-

ravi said…
காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும் என்கிற பக்தி உணர்ச்சியெல்லாம் சிறிதும் இல்லை. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு பால் கொண்டு போய் தருகிறோம் என்று உணராத மனநிலை.

ravi said…
இந்த சமயத்தில் ஒருநாள்,அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண், ஒரே வாரத்தில் நிற்க முடியாமலும்,நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை.

ravi said…
பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்தபின், அப்பெண்ணுக்கு ஒருவிதமான கேன்சர் நோயினால் வெகுவாகப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும்,இனி எந்த வைத்யமும் அப்பெண்ணைக் காப்பாற்ற முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

மனதில் கவலை நிறைந்து வாட்டினாலும் தொடர்ந்து மகானின் முகாமுக்குப் பால் கொண்டு வந்து கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

ravi said…
வழக்கத்துக்கு மாறாக பால்காரர் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்ட மடத்தின் ஊழியர்கள் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க,பால்காரர் தன் மனைவியின் உடல்நிலை மோசமாகி இருப்பது பற்றி சொன்னார்

அதோடு,தன் மனைவிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று அந்தப் பால்காரர் மருத்துவரிடம் விசாரித்தபோது, அப்பெண் பிழைத்திருப்பதோ இன்னும் கொஞ்ச காலம் தான் .அதனால் அவள் விருப்பம் என்னவோ அந்த ஆகாரத்தை தரலாம் என்று கூறிவிட்டதையும் சொன்னார்.

ravi said…
அப்பெண்ணோ எதுவும் ஆசைப்பட்டுக் கேட்கவில்லை பச்சை மிளகாயை அப்படியே பதம் செய்து தின்பதில் தான் அவளுக்கு விருப்பம் அதிகம்.அதை மனைவிக்குக் கொடுப்பது ஆபத்து நிறைந்த விஷயம் என்பது நன்கு தெரிந்தும்,அதையே மனைவிக்குத் தயாரித்து அளிப்பதாகவும் கூறினார்.வேதனையோடு.

தினமும் வரும் அந்தப் பால்காரரின் பரிதாபத் தோற்றம் சிப்பந்திகளின் மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்த, பால்காரரைப் பற்றி மகா பெரியவாளிடம் சொல்லி ஆறுதல் தேட முடிவு செய்து,அத்தெய்வ சன்னதியில் போய் நின்றனர்.

ravi said…
அவர்களில் ஒருவர், "பெரியவா தினமும் மடத்துக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கிறானே அந்தப் பால்காரன்.." என்று ஆரம்பிப்பதற்குள், மகானே பேச ஆரம்பித்தார்.

"ஆமாம்..அவன் ஆத்துக்காரிக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கள் கேன்சர்னு சொல்லி,இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பா. அவளுக்கு இஷ்டப்பட்டதைக் குடுனு இவன்கிட்ட சொல்லிட்டா இல்லையா?அவனும் அதைத்தானே செஞ்சுண்டு இருக்கான்! இதைச் சொல்லத் தான் இங்கே வந்தேளா...?" என்று அவர்களிடம் கேட்க அசந்து போனார்கள் எல்லோரும்! மகானுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பதை எப்படி மறந்துபோனோம்! என்று திகைத்து நின்றார்கள்.

https://chat.whatsapp.com/HhX5C8DK7pp2N7IGFkrDhq
அவர்களுக்கு அப்போதுதான் மனதில் உறைத்தது. - பால்காரனின் கஷ்டம் மகாபெரியவாளுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அதைவிட வேறு அனுகிரகம் என்ன வேண்டும்? என்று அவர்கள் மனதில் ஒருவித நிம்மதி ஏற்பட்டது.

எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம் அமைதி யாக இருக்குமா? அவரது அனுகிரகம் உடனே செயல்பட ஆரம்பித்தது.

அடுத்த சில தினங்களில் பால்காரனின் மனைவி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். பின் மெதுவாக எழுந்து நின்றாள். இது ஆரம்பம்.பிறகு சில தினங்களில் பழைய நிலைக்குத் திரும்பி மிகவும் ஆரோக்கியமாக நடமாட ஆரம்பித்து விட்டாள்.

அதனால் மிகவும் ஆனந்தமடைந்த அந்த பால்காரர் தன் மனைவியை டாக்டரிடம் மீண்டும் அழைத்துப் போய் காட்டினார்.நன்கு பரிசோதித்தபின் முடிவுகளைப் பார்த்த டாக்டர் முதலில் தன்னையே நம்பவில்லை. ஏனெனில், அப்பெண்ணிடம் நோயின் சுவடே இல்லை.

வியப்போடு டாக்டர் கேட்டார்;

"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்? இது முத்தின நோய்.இதுவே இப்படி குணமாகி விட்டதே அந்த டாக்டர் கொடுத்த மருந்தை நான் மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்றுதான் கேட்கிறேன்"

பால்காரருக்கு எதுவுமே சொல்லத் தோன்ற வில்லை. மகா பெரியவா என்னும் பெரும் தெய்வமே தன் மனைவியை குணப்படுத்தியது என்று அவருக்குத் தெரியுமா என்ன?

அடுத்தநாள் அந்த சந்தோஷத்தை மடத்து சிப்பந்திகளிடம் வந்து சொன்னபோது,அது அவர்களுக்குக் கொஞ்சமும் ஆச்ச்ரியத்தை தரவில்லை. காரணம் மடத்து ஊழியர்கள் எல்லோருக்குமே மகாபெரியவாளின் அருட்பார்வையின் அற்புதம் நன்றாகத் தெரிந்த விஷயம் அல்லவா!

🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏

Oldest Older 201 – 317 of 317

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை