ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 36 -பதிவு 43

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 43



36.स्तनभारदलन्मध्यपट्टबन्धवलित्रया - ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா -

அம்பாளின் இடையில் வயிறு பாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக் கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம்.

அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம்

ஸ்தனபார = கனக்கும் மார்பகங்கள்

தலன் = ஒடிவது

மத்ய = வயிற்றுப்பகுதி -

இடை பட்டபந்த = ஒட்டியானம்

வலித்ரயா = மூம்மடிப்புகள் ❖

36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா = கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.

ஸ்தனங்களின் அழகையும் பாரத்தையும் குறிப்பிடும் இடங்களில் பிரபஞ்சத்திற்கே அமுதூட்டும் கனத்த மார்பகத்தின் அழகை, உலகன்னையின் பரந்த அன்பின் அம்சமாகக் காணலாம்.




பதிவு 44

37. அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ;




இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள் 🌷🌷🌷 என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று
சிந்தூ அருண விக்ரஹாம் இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம் . சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம். இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான். அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள். ஏன் உருவத்தோடு தோன்றினாள். அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.



ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? "

"தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் " என்கிறது துர்கா ஸூக்தம். அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.🔥

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும்.?? மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்" அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள். அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்" என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."



ரக்தவர்ணா, சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள். ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில் *"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா". இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். என்று சொல்கிறார் ... அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. ?? நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் *V(நீலீ)* ஆரம்பித்து சிகப்பில் *R* முடிக்கிறோம் .

பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்🙏🙏🙏

*அருணருண* = உதயசூரியனின் சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு *கௌசும்ப* = கௌசமபப்பூவின் இளஞ்சிவப்பு (safflower) *வஸ்த்ர* = ஆடை *பாஸ்வத்* = மிளிரும் *கடி* = இடை *தடீ* = இடைச் சரிவு 37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ ; = இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்...👍



💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌



Comments

ravi said…
*❖ 92 குலாங்கனா =* குலத்திற்கு பெருமை சேர்க்கும் உயர்ந்த பதிவ்ரதை
ravi said…
தமிழுக்கு பெருமை அதன் உயிர்மெய்

தக தக ஜொலிக்கும் தங்கத்திற்கு பெருமை அங்கத்தில் அணியும் ஆபரணம்

முத்துக்கு பெருமை முத்தாடி முங்கி மூச்சு முட்டி எடுக்கும் சிப்பிகள்

காற்றுக்கு பெருமை நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடக்கும் அருமை

சுடும் தீக்கு பெருமை பசி போக்கும் பண்டங்கள்

பார் வேந்தனுக்கு பெருமை குடை கொடை செய்து வாழுதல்

குற்றமில்லா என் அன்னைக்கு பெருமை

நஷ்டமில்லாமல் அவள் நாமம் நாடும் நல்லோர்களை சுமந்து பெற்றதாலே...
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 64*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
[24/01, 20:30] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 68 started on 6th nov

*பாடல் 23* ...💐💐💐
[24/01, 20:30] Jayaraman Ravilumar: *பாடல் 23 ... அடியைக் குறியாது*

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
ravi said…
நாம், நம் வாழ்க்கையில் எந்நிலையிலும் என்ன செய்தாலும் அடிப்படை
லட்சியமாக இறைவனின் திருவடியை நினைத்துக் கொள்ளவேண்டும்.

எந்தக் காலத்திலும் மாறாமல் துணையாக நிற்பது அவனுடைய
சேமக் கோமள பாதத் தாமரையே'. அதையே நமது லட்சியப் பொருளாக
வைத்துக்கொண்டால் எதற்கும் அஞ்சாத மனோநிலை கிடைக்கும்.

அவன் திருவடிகளையே குறிக்கோளாக வைத்து எல்லா முயற்சிகளையும்
செய்வதால்தான் அவர்கள் 'அடியார்கள்' எனப்படுகிறார்கள்.

இந்த லட்சியம் இல்லாதவர்களின் வாழ்க்கை எந்தப் பயனுமின்றி
விருதாவிலே அடியோடு கெட்டுவிடும்.

இத்தகைய முடிவு எனக்கு
வருவது என்னுடைய ஆன்ம சொரூபத்திற்கு பொருந்தாது.

அது உன்
கருணைக்கும் தகாது. இதைக் குறிக்கவே 'முறையோ முறையோ' என்று
ஓலமிடுகிறார்.
ravi said…
*தினமும் ஒரு திருவாசகம்* 🪷🪷🪷
ravi said…
*மூங்கிலுக்குள் ஈரம்*

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்

அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால்

திணி ஆர் மூங்கில் அனையேன்

வினையைப் பொடி ஆக்கித்

தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே!

*நூல்: திருவாசகம்* *(ஆனந்த பரவசம் #89)*

*பாடியவர்: மாணிக்க வாசகர்*💐💐💐💐💐
ravi said…
பொய்யான மாயைகளை விலக்கி மெய்யான இன்பம் தருகிறவனே,

உன்னை வணங்குகிற அடியவர்களுக்கு உன்னுடைய அழகான திருவடியைக் கொடுத்து அருளுகிறாய்,

உனது திருவருள் மிகவும் அரிதானதுதான்!

ஆனால், என் மனமோ வலிமை பொருந்திய மூங்கிலைப் போன்றது.

நான் செய்த பிழைகளும் நிறைய.

எனக்கும் உன் கருணை கிடைக்குமா?

விரைவாக வா, என்னுடைய தவறுகளை உடைத்துப் பொடிப்பொடியாக்கிக் குளிர்ச்சியான உன்னுடைய பாதங்களைக் கொடுத்து அருள் செய்!

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
கல் போன்ற மனம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இங்கே மாணிக்கவாசகர் ‘மூங்கில் போன்ற மனம்’ என்கிறார்.

இதன் அர்த்தம், ’கொஞ்சமும் ஈரப்பசை (அன்பு) இல்லாத, கடினமான மனத்தைக் கொண்டவன் நான், எனக்கும் நீ அருள் செய்வாயா?’

நிச்சயம் செய்வான், ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள் ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே!
ravi said…
[24/01, 20:25] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
[24/01, 20:25] Jayaraman Ravilumar: ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ

தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ

க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .

தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ

ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ

வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
[24/01, 20:28] Jayaraman Ravilumar: *ஶீதாவ்ருʼத* : – குளிரினால் பீடிக்கப்பட்டவன்

*ஶிகி²னம்ச* – ஒரு நெருப்பு கிடைத்தால், குளிர் காயலாமே என்று எப்படி விரும்புவானோ

*ததா* ² – அப்படி

*சேத* : – என் மனமே

*த்வம்* – நீ

*ஸர்வ ப⁴யாபஹம் –* எல்லா பயத்தை போக்குவதும்

*ஸுக²ம்ʼ –* சுகத்தை அளிப்பதுமான

*ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்*

–ஶம்புவினுடைய திருவடி தாமரையை

*வ்ரஜ* – விரும்பி அடைவாயாக!
[24/01, 20:28] Jayaraman Ravilumar: இந்த ஸ்லோகத்தில் நிறைய, உதாரணங்கள் கொடுத்து எப்படி பயத்தில் இருப்பவன் பயத்தை போக்கி கொள்ள தவிப்பானோ,

தன்னுடைய கஷ்டத்திலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த தவிப்பு desperate னு Englishல சொல்லுவா, அந்த மாதிரி, நம்பிக்கையே இல்லை, ஏதாவது பற்றுகோடாக ஏதாவது கிடைக்காதா?

அப்படினு நினைக்கின்ற மாதிரி, ஶம்புவினுடைய பாதங்களை பிடித்து கொள்ள வேண்டும், அப்படினு மனசு கிட்ட சொல்றார் .

மனசு கிட்ட சொல்றா மாதிரி, நம்மகிட்ட எல்லாம் சொல்றார். ஏன் என்றால் ஆச்சார்யாளுக்கு ஒரு பயமும் கிடையாது,
ravi said…
[24/01, 19:58] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 450* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[24/01, 19:58] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[24/01, 20:00] Jayaraman Ravilumar: வரதன் பேசினான் ...

ஆசுகவியே கேளுங்கள்

கபீந்த்ரம் ஆதௌ பரிதாப பாஜம்

நாபாலயம் வத்ஸ தினே பரஸ்மின்

விஹத்ய சத்ரும் யதபாலயம் தம்

கவீந்த்ர தச்சிந்தய தத்த்வமந்த:




कपीन्द्रं आदौ परितापभाजं

नापालयं वत्स दिने परस्मिन्।

विहत्य‌ शत्रुं यदपालयं तं

कवीन्द्र तच्चिन्तय तत्त्वमन्तः॥
[24/01, 20:06] Jayaraman Ravilumar: கபிகளுக்கு அரசன் வாலியின் தம்பி சூரிய புத்திரன் சுக்ரீவன் அவன் என் உதவியை நாடினான் ... அவனுக்கு இழந்த ராஜ்யத்தை பெற்றுத் தந்தேன் ... இழந்த மனைவியையும் அவன் திரும்ப பெற்றான் ...

அவன் கபிகளுக்கு தலைவன் நீயோ கவிகளுக்குத் தலைவன் என்னைப்பற்றி எவ்வளவோ பாடல்கள் எழுதி உள்ளாய் ... உன்னை கை விட்டு விடுவேனா ?

இது ஒரு சின்ன நாடகம் . எல்லாம் நன்றாக நடக்கும் ... 🙏🙏🙏
ravi said…
[24/01, 14:38] Jayaraman Ravilumar: இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
[24/01, 14:40] Jayaraman Ravilumar: இந்த முகுந்தமாலை, இந்த ஒரு ஆவர்த்தி படிச்சு, இதை ஸ்மரிச்சதுல, இந்த குலசேகராழ்வாருக்கு பகவானோட நாமங்கள்ல எவ்வளவு பக்தின்னு தெரிஞ்சுது.

அப்படி ஒவ்வொரு ஸ்லோகத்துலயும் அந்த நாமத்தோட மஹிமையை சொல்லி இந்த கடைசி, பூர்த்தி ஸ்லோகத்துலயும், இப்பேற்பட்ட பாக்கியம் என் கிட்ட இருக்கு. கெட்டுப் போகாத உணவு என்கிட்ட இருக்கு.

இதை எடுத்துண்டு இந்த லோகயாத்திரையை நான் ஸுகமா கழிச்சுடுவேன்னு சொல்லி, நாமத்தோட மஹிமையை சொல்லி முடிக்கிறார்.

இந்த நாமத்தை மஹான்கள் ஏன் ரொம்ப stress பண்ணி சொல்றான்னா, நம்மோட உலக யாத்திரைக்கு பல விஷயங்களை நம்பறோம்.
கௌசல்யா said…
தாங்கள் முகுந்தமாலை பதிவு மூலமாக மிகவும் அருமையாக எங்கள் அனைவருக்கும் இந்த பரந்தாமனின் நாம மகிமையை ஒவ்வொரு நாளும் பூரணமாக உணர்தியதற்கு மிக்க நன்றிகள்... நாராயணனை நாள்தோறும் வணங்கி, பூஜித்து, அவன் நாமங்களை பல ஆவர்த்தி ஜபித்து , அவனையே நினைந்து வாழும் வாழ்க்கையை அளிக்க வேண்டும் நாராயணா....நாராயணா..நாராயணா..நமோ நமோ நமோ...🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷...
ravi said…
தமிழுக்கு பெருமை அதன் உயிர்மெய்

தக தக ஜொலிக்கும் தங்கத்திற்கு பெருமை அங்கத்தில் அணியும் ஆபரணம்

முத்துக்கு பெருமை முத்தாடி முங்கி மூச்சு முட்டி எடுக்கும் சிப்பிகள்

காற்றுக்கு பெருமை நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடக்கும் அருமை

சுடும் தீக்கு பெருமை பசி போக்கும் பண்டங்கள்

பார் வேந்தனுக்கு பெருமை குடை கொடை செய்து வாழுதல்

குற்றமில்லா என் அன்னைக்கு பெருமை

நஷ்டமில்லாமல் அவள் நாமம் நாடும் நல்லோர்களை சுமந்து பெற்றதாலே...
ஹேமலதா said…
இந்த பதிவை எழுத தாங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா
Hemalatha said…
Evlo great sir.consistency sir.no words .
Hemalatha said…
All rounder sir neenga
ravi said…
*ஸ்ரீராமஜெயம்*

*சொர்க்கம் யாருக்கு...* 🌹

விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன் அஸ்வமேத யாகம் செய்தான்.

யாகத்தில் மன்னர்கள், ரிஷிகள் பங்கேற்றனர். யாகத்தின் முடிவில் மன்னன் தன் நண்பர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி மற்றும் நாரத மகரிஷி ஆகியோருடன் தேரில் உலா சென்றான்.

நாரதரிடம் அஷ்டகன், “மகரிஷி! நாங்கள் நால்வரும் புகழ் பெற்ற அரசர்கள்.

தாங்களோ தலைசிறந்த ரிஷி. இப்போது நம் ஐவரில் நால்வர் மட்டுமே சொர்க்கத்துக்கு செல்லலாம் என்றால் தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?” என்று கேட்டான்.

ravi said…
நாரதர் அவனிடம், ''நீ தான்” என பதிலளித்தார்.

உடனே அஷ்டகன், ''ஏன் என்னை இறங்கச் சொல்வீர்கள்?'' என கேட்டான்.
“அஷ்டகா! யாகத்தின் போது நீ ஆயிரக்கணக்கில் பசு தானம் செய்தது பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசினாய்.

கொடுத்ததை
சொல்லி பெருமைப்படுபவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாது,” என விளக்கினார்.

அடுத்து, ”மூவர் மட்டும் தான் சொர்க்கத்துக்கு செல்ல முடியும்
என்றால் நம் நால்வரில் யாரை இறக்குவது?” என மற்ற அரசர்கள் நாரதரிடம் கேட்டனர்.

அதற்கு நாரதர், “இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சென்று கொண்டிருந்தேன். மூன்று வயோதிகர்கள் வந்தார்கள்.

அவர்கள் மூன்று குதிரைகளையும் தானமாக பெற்றுச் சென்றனர்.

இழுப்பதற்கு யாரும் இல்லாமல் தானே தேரை இழுத்தான். ஆனால் மனதுக்குள், ”இந்த பெரியவர்களுக்கு சிறிதும் அறிவில்லை.

எதைத் தான் தானமாக கேட்பது என்கிற தெளிவுமில்லை என குமைந்து கொண்டான். தானம் தந்து விட்டு நொந்து கொள்பவனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை“ என்றார்.

“மூவரில் இருவருக்கு தான் சொர்க்கம் என்றால் யார் இறங்க வேண்டும்?” என மன்னர்கள் அடுத்த கேள்வியை தொடுத்தனர்.

'வசுமனஸ்” என்ற நாரதர்,
இவன் பெரிய ரதம் வைத்திருந்தான். அதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அதன் மீது தனக்கு உரிமையில்லை என்றும் சொன்னான். ஆனால், யாருக்கும் அதை தானம் அளிக்கவில்லை. தானும் பயன்படுத்தவில்லை. வெறும் வார்த்தை சொர்க்கத்தை தராது,'' என விளக்கினார்.

“சரி! சிபியும் நீங்களும் மட்டுமே தேரில் இருப்பதாக வைப்போம். சொர்க்கத்தில் ஒருவருக்கே இடம் இருக்கிறது எனில் இப்போது யார் இறங்குவது?” என மன்னர்கள் வினா எழுப்ப, 'நான் தான்” என்ற நாரதர், “மன்னன் சிபி புகழுக்காகவோ, புண்ணியத்துக்காகவோ தானம் செய்ததில்லை.

இல்லாதவர்களுக்கு உதவவே தன்னிடம் செல்வம் இருப்பதாக கருதினான்.

எனவே சொர்க்கத்துக்கு செல்லும் தகுதி அவனுக்கு இருக்கிறது, ” என்றார்.🌹
ravi said…
ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும்

ஆதி சங்கரரும் அபிராமி பட்டரும் மிகச் சிறந்த தேவி உபாசகர்கள். நம்மை வாழ்விக்க வந்த மகான்கள்.
வாழ்ந்த காலம் வெவ்வேறாயினும், உணர்வால் ஒன்றுபட்ட இவ்விரு மகான்களும் தாங்கள் மனக் கண்ணால் கண்ட அம்பிகையின் திவ்ய ரூபக் காட்சியை ஒரேமாதிரியாக வர்ணித்திருப்பதைப் பார்க்கலாம்

ravi said…
க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா
(சௌ.ல.7)

'தேவி,சிறிய மணிகளை உடைய ஒட்டியாணம் தரித்தவள். யானையின் மத்தகம் போன்ற ஸ்தன பாரத்தால், சற்றே வணங்கின தோற்றமுடையவள். சிறிய இடையுள்ளவள். அவள் முகமே பூர்ண சந்திரன். கைகளில் கரும்பு வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் முதலியவற்றைத் தரித்தவள். இத்தகைய பரதேவதை, எங்கள் எதிரில் எப்போதும் நின்று காட்சியளிக்கட்டும்' என்பது இதன் பொருள்.

ravi said…
இதே பொருளை, அந்தாதியின், 100வது பாடலிலும் காணலாம்.

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே

ravi said…
சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய:
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம். (சௌ.ல.32)

இதில், 'ஸ்ரீமத்பஞ்சதசாக்ஷரீ' எனும் மந்திரத்திலமைந்த, சிவன், சக்தி, காமன், ப்ருத்வி, சூரியன், சந்திரன், ஆகாசம், இந்திரன், ஹரி போன்ற தெய்வங்களின் பீஜங்களும், மூன்று ஹ்ரீம்காரங்களின் பீஜங்களும், ரகசியமாக விளக்கப்படுகின்றன. குருமுகமாக உபதேசம் பெற்ற பின்பே இவைகளை ஜபிக்க இயலும். மேலோட்டமாகப் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தேவதைகள் யாவரும், அம்பிகையின் திருநாமத்தின் உறுப்புகளே என்ற பொருள்தான் தோன்றுகிறது.

ravi said…
இதைப் போல், அபிராமி அந்தாதியில்

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது உண்பது படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர்,

ravi said…
ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
(சௌ.ல.27)

என்ற ஸ்லோகத்தில் பிரார்த்திக்கிறார்.

அபிராமி பட்டரும், இதையே,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! (பாடல்:10)

என்ற பாடலில் வெளிப்படுத்துகிறார்
ravi said…
_*இதுவும் கடந்து போகும்....*_

இந்த வார்த்தை தான் எதையும் கடந்து போகச் செய்யும் எத்தனை பெரிய நம்பிக்கை தருகிறது...

இந்த நிலை நிரந்தரமில்லை என்ற தெளிவு இருந்தால் எப்பொழுதும் நிம்மதி ....

வாழ்க்கையில் இன்பமும், சந்தோஷமும், வெற்றியும், புகழும் ஏன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையும் கடந்து போய்விடும்...

அப்படி இருக்கையில் துன்பம் மட்டும் எப்படி நிலைத்திருக்கும். இதுவும் கடந்து போகும்...

பறவையைப் பாருங்கள், அது விதைப்பதில்லை, அறுப்பதுமில்லை...

அவை நிகழ்கால வாழ்வினை அழகாக வாழ்கின்ற உயிரினங்கள்...

மனிதர்கள் மட்டும் ஏதோ ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே வாழ்கிறார்கள்...

இன்று உன்னுடையது நாளைவேறொருவருடையதாகிறது என்கிறது பகவத் கீதை ...

இன்றைய நமது இன்ப துன்பங்களும் அவ்வாறே...

தோல்வி வரும் போது தைரியமாக சொல்லுங்கள், இந்த தோல்வியைக் கடந்து போவேன் என்று....

பிரியமானவர்களின் இழப்பு என்பது கூட அப்படியானதே.
அந்த நிகழ்வுகளிலேயே நிலைத்துஇருக்காமல், அடுத்தகட்ட நகர்தலை நோக்கி பயணியுங்கள் ...

இதுவும் கடந்து போகும் என நினையுங்கள் ...

கஷ்டங்கள் கடந்து போகும்...

சந்தோஷம் கடந்து போகும்...

துயரம் கடந்து போகும்....

போதை கடந்து போகும்...

பயம் கடந்து போகும்...

சங்கடம் கடந்து போகும்...

தற்பெருமை கடந்து போகும்...

துரோகம் கடந்து போகும்...

அவநம்பிக்கை கடந்து போகும்...

புகழ் கடந்து போகும்...

எந்தச் சூழ்நிலையும்
நிரந்தரமானது அல்ல...

இறுதியாகவும்
உறுதியாகவும்
எதுவும் மறைந்து போகும்...

இதுவும் கடந்து போகும்...

வலிமையும், நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டு வாழ்க்கையை வாழ்வோம் அழகாக...

🌷🌷
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*நியாயங்கள் நம் பக்கம் இருந்தாலும்,*

*புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாமல்,*

*சில நேரங்களில் நாம் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது..!*


*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
பாதாரவிந்த சதகம் !

72.ததானை: ஸம்ஸர்கம் ப்ரக்ருதி மலினை: ஷட் பத குலை:
த்விஜா தீச'ல்லாகா விதிஷு விததத்பி: முகுலதாம் |
ரஜோமிச்'ரை: பத்மை: நியதம் அபி காமாக்ஷி பதயோ:
விரோதஸ்தே யுக்தோ விஷமச'ரவைரி ப்ரியதமே

ஒற்றைப்படை (5) எண்ணுள்ள அம்புகளைக் கொண்ட மன்மதனின் எதிரியின் மிக்க அன்புக்குரியவளே ! காமாக்ஷி ! இயல்பாலேயே அழுக்கு மிகுந்த வண்டுக் கூட்டத்துடன் தொடர்பு கொண்டவையும், அந்தணர் தலைவரை (சத்திரனை)ப் பாராட்டுவதில் மொட்டுபோல் ஈடுபாட்டின்மையை வெளிப்படுத்துபவையும், தூசி கலந்தவையுமான தாமரைகளுடன் உன் திருவடிகளுக்கு விரோதம் பொருத்தமானதே.

தாமரை அழுக்குமிக்க வண்டுக்கூட்டம் தன்னை மொய்ப்பதை விரும்பும். சந்திரனை வெறுக்கும். மகரந்தத்தூள் படிந்தது, திருவடியோ அப்பழுக்கற்றது. நல்லோரை விரும்புவது, தூய்மை மிக்கது. இரு மாறுபட்ட இயல்புள்ளவரிடம் பகையுணர்வு நிலவுவது இயல்பே. துவிஜாதீச - அந்தணர் தலைவன் சந்திரன் என்ற இருபொருள் கொண்டது. தாமரை சந்திரனிடம் பகையுணர்வு கொண்டது. நடைமுறையில் உத்தமரான அந்தணர் தேவியிடம் பக்தியுணர்வு கொண்டவர்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.

ravi said…
யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?

ravi said…
ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)

லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான்.

சித்தம் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையைவிட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக ஸித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்துகொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூரணமாக ஈடுபடப் பழகினால், அப்போது சித்தம் கூடியமட்டும் அழுக்குப் படாமல் இருக்கும். சித்தத்தை நேராக அடைக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாதிசையும் பாயத்தான் செய்யும். எனவே சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டுவிட்டால் அப்போது சித்தத்துக்கு சஞ்சலிக்க இடம் குறைந்து போகும்.

பழைய நாளில் அரிகண்டம் என்று போட்டுக்கொள்வார்கள். படுக்காமலே நியமமாக இருக்கவேண்டும் என்பதற்காக கழுத்திலே பெரிய கம்பி வளையம் போட்டுக் கொள்வார்கள். அதற்கு அரிகண்டம் என்று பெயர். ஒருத்தர் இதைப் போட்டுக் கொண்டபின் இஷ்டப்பட்டால்கூட படுக்க முடியாது. அந்த மாதிரி, நம் சித்தத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போகாதபடி செய்வதற்கு அரிகண்டம் மாதிரி, ஸத் காரியங்களில் பூரணமாக தலையைக் கொடுக்க வேண்டும்.

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாக்கப் பழக்குவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம்.

முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக்கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ — அந்தக் கழக்கோடி மேல் நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஓடும் — அப்படி எந்த இன்ப துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஓடி அவரைச் சேர்ந்துவிடுவோம். இந்தச் சேர்க்கைதான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிப் போயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்கவேண்டும்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 467* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*197 सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-*

கருணா சமுத்திரம் காமேஸ்வரி.

நாம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தானாகவே பத்து அடி எடுத்து நம்மை அணுகி வந்து ரட்சிக்கும் தாய் அல்லவா ?

பிரபஞ்சத்தின் தாயாயிற்றே.

அவள் கண்கள் தயை, அன்பு, காருண்யம் இவற்றால் நிரம்பியவை. எல்லையற்றவை.👏👏👏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 65*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
48. Shiva shiva pasyanthi samam Sri Kamakskshi kadakshitha purusahaa,

Vipinam bhavana
mithram loshtam cha yuvathi bimbhoshtam.

ஶிவ ஶிவ பஶ்யன்தி ஸமம் ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதாஃ புருஷாஃ |

விபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம் ||48||
ravi said…
அம்பாள் காமாக்ஷி தேவியின் கடாக்ஷம் ஒரு பக்தனுக்கு கிடைத்துவிட்டால் அவன் முற்றிலும் மாறிவிடுகிறான்.

காடு வீடாகிறது. எதிரி, சத்ரு நண்பனாகிறான்,

பெண்கள் கவர்ச்சி அவனை துளியும் ஈர்க்காமல் ஏதோ ஒரு ஓட்டாஞ்சல்லியை பார்ப்பது போல் பண்ணிவிடுகிறது என்கிறார் மூகர் . 🙏🙏🙏
ravi said…
அத்தியூர் எனும் திருக்காஞ்சியில் எழுந்தருளி இருப்பவனும்

கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்டு உலா வருபவனும்

அழகார்ந்த மணிகளுடன் கூடிய
துத்திசேர் நாகத்தின் மேல் - அறிதுயில் (யோக நித்திரை) புரிபவனும்

யாகத்தில் மூன்று வகை நெருப்புகளாக தோன்றுபவனும்.

நால் வேதங்களுக்குப் பொருளானவனும்

மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் -
தோழனவன்

நாங்கள் பூசிக்கும் தலைவன் அத்தி வரதன் ஒருவனே அன்றோ 🪷🪷🪷
Moorthy said…
ஆஹா என்ன அழகான கோர்வையான வரிகள்.... 👌👏🙏
ravi said…
*❖ 93 குலாந்த:ஸ்தா = சர்வ வியாபி-*

அனைத்திலும் உள்ளுறைபவள்- அனைத்து வித்யைகளிலும் உள்-உறைபவள்
ravi said…
அம்மா ...

தீயுனுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ

கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைநீ

அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ

வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ

வெஞ்சுடர் ஒளியும்நீ திங்களுள் அளியும் நீ

அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ

தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி மோகன புன்னகையும் உதிர்ப்பவளும் நீ

உடம்பிலே உயிராகி உயிருக்குள் கருவாகி கருவிற்கும் உயிர் தந்து காக்கும் கர்பகாம்பிகையும் நீ

நீ இன்றி உலகேதம்மா ...

நான் நீ என்றே நலிந்து போகும் ஈக்கள் கூட்டம் நாங்கள் ..

நன்றி மறவாமல் இருக்க செய்வாய் நாயகியே

உன் திருநாமம் மறந்து போனால் அன்றே என் உயிர் உதிர்ந்து போகட்டும் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

51 –
தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாசலா (அ)
ravi said…
அருணாசலா உன் கரங்களில் நாகங்கள் , மழு , மான் அக்னி, உலுக்கை

அடர்ந்த சடையில் இருண்ட கேசம் ...

அந்த கரு மேகங்களின் நடுவே மூன்றாம் பிறை ...

உடம்பில் புலித்தோல் உள்ளம் எங்கும் வெளி பூசிய வெண்மை ...

பெண்மை சரிபாதி ...

தூக்கிய பாதம் ... துளிர் நடை ...

அண்டங்கள் அலரிடும் அரக்கன் காலடியில் ...

திரிசூலம் மூன்றாவது கண் ... எல்லாம் இருந்தும் எங்களுக்கு பயம் இல்லை அருணாசலா ...

ஏன் தெரியுமா நீ கரம் கொடுத்து அணைக்கிறாய்...

அது இல்லை எனில் என்றோ நாங்கள் அழிந்திருப்போம் அருணாசலா ... 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*_✍️ 25, Wednesday, Jan., 2023_*

*🔹🔸இன்றைய சிந்தனை..*

*🧿"சந்தேகம் என்னும் நோய்...!"*

*♻️உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால்!, மனதில் ஏற்படும் "சந்தேகம் என்னும் நோய்" தீர்க்க முடியாத ஒன்று. ஒரு முறை சந்தேகம் வந்து விட்டால் அது பல உறவுகளுக்கு கொள்ளிக்கட்டையாக அமைந்து விடும். நீங்கள் நூறு விழுக்காடு அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்...!*

*♻️இது காதலுக்கும் ,நட்புக்கும், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி, தொழிலாளி உறவுகளுக்கும் பொருந்தும்...*

*♻️எப்போதும் எல்லோரிடமும் நூறு விழுக்காடு அன்பை காட்டுங்கள். சந்தேகம் ஒன்று வந்து விட்டால் நிம்மதி போய்விடும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது...*

*♻️ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது...*

*அந்த பையன் சொன்னான்,*

*♻️''எம்மிடம் இருக்கின்ற பொம்மைகள் அனைத்தையும் உனக்கு தருகிறேன். பதிலாக நீ வைத்திருக்கிற இனிப்புகள் எல்லாவற்றையும் எனக்கு தருகிறயா...? என்று கேட்டான்...*

*♻️குட்டி பெண்ணும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தாள்.அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்து விட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்...*

*♻️குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்...*

*♻️அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை...*

*♻️அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் கொடுத்திருப்பாளா...? இல்லை!, நாம் ஒளித்து வைத்ததுபோல் அவளும் ஏமாற்றி இருப்பாளா...? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவதியுற்றான்...*

*♻️சந்தேகம் ஒருவர் மனதை பற்றிக்கொண்டால், அது மன நோயாக மாறிவிடுகிறது...*

*😎ஆம் நண்பர்களே...!*

🏵️ *சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள், தன்னால் அதை செய்ய முடியமா...? இதை செய்ய முடியுமா...? என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்...!*

⚽ *ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால், மகிழ்ச்சி பின் வாசலால் போய்விடும் என்பார்கள்...!!*

🏵️ *ஆம்!, இன்று சந்தேகம் என்ற மனநோய் சமூகத்தில் நிலவி வரும் ஒரு நச்சுக் கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்று விடும்...!!!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝

https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
🌹🌺" Andal's request after two hundred years
A simple story to explain about the selfless Perumal charity performed with devotion 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 About 1000 years ago, Perumal Thondan Sri Ramanujar involved women in temple administration and gave many religious responsibilities to women as the society knows.

🌺Atchuhai, Andal, Ponnachi,
Devaki, Ammanki,
Cotton Mill Amal,
Tirunaraiyur Ammal,
How many women in his theater group are called opposite Valli!
He was the female clan of Sri Perumbhudur Mamuni.

🌺 Pujas at a Hindu temple for a Muslim woman!
Tulukka Nachiyar Pratishtai at the feet of Arangan. Can you even dream? And that was about a thousand years ago? A society where women were treated as equals back then

🌺If you write for today's age of science, many people will not like it! Is that just a thousand years ago?
Jumping to the stage and making bread! In which Shastra?
In which agaam is it?
Samarasa sanmarka valal, which also celebrated Tulukka Nachiyar.

🌺A song that Andal once sang...“Hundo Tada Akara Atisil
I was speechless”
That wish would not have been fulfilled and would have ended with just a song!

🌺 "Gotha has lied!
She just prayed! "The request was not fulfilled!" will not come. To avoid that, the brother took care of the request!

🌺Has anyone got the idea to fulfill Andal's wish?

🌺 After two hundred years, Andal's prayer is not seen as just a song
His is the soul that breathes it with devotion…

Sri Ramanujan Thiruvadi take refuge!

*One way to apply| Owner Thiruvadi||*

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *இருநூறு* *வருடங்களுக்குப் பிறகு ஆண்டாளின் வேண்டுதலை*
*பக்தியோடு நிறைவேற்றிய* *தன்னிகரில்லா பெருமாள் தொண்டன் பற்றி* - *விளக்கும் எளிய* *கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்த பெருமாள் தொண்டன் ஸ்ரீ ராமானுஜர் .

🌺அத்துழாய், ஆண்டாள்,பொன்னாச்சி,
தேவகி,அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிகள்.

🌺ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு? பெண்களை அன்றே சரிசமமாக பார்க்கப்பட்ட சமூகம்

🌺அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
அரங்கனுக்கு லுங்கி கட்டி, ரொட்டி நைவேத்தியம் செய்வித்தாரே! எந்த சாஸ்திரத்தில் உள்ளது?
எந்த ஆகமத்தில் உள்ளது?
அவர் துலுக்க நாச்சியாரையும் கொண்டாடிய சமரச சன்மார்க்க வள்ளல்.

🌺எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
அந்த வேண்டுதல் நிறைவேறாமல் வெறும் பாட்டோடு முடிந்து போயிருக்கும்!

🌺"கோதை பொய் சொல்லி விட்டாள்!
சும்மா வேண்டிக் கொண்டாள்! வேண்டுதலை நிறைவேற்ற வில்லை!" என்ற பேர் வராது. அதைத் தவிர்க்க அண்ணன் பொறுப்பில் அந்த வேண்டுதலைக் காத்துக் கொடுத்தார்!

🌺ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை யாருக்காவது தோன்றிற்றா?

🌺வெறும் பாட்டாக மட்டும் பார்க்காது இருநூறு வருடங்களுக்குப் பிறகு ஆண்டாளின் வேண்டுதலை
அதை பக்தியோடு சுவாசிக்கும் உள்ளம் அவருடையது...

ஸ்ரீ இராமனுஜன் திருவடிகளே தஞ்சம்!

*உய்ய ஒரு வழி| உடையவர் திருவடி||*

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
இந்த நாமத்தை மஹான்கள் ஏன் ரொம்ப stress பண்ணி சொல்றான்னா, நம்மோட உலக யாத்திரைக்கு பல விஷயங்களை நம்பறோம்.

படிப்பை நம்பறோம். என் கிட்ட இந்த வித்தை இருக்கு. இதைக் கொண்டு ஏதோ சம்பாதிப்பேன்.

அதைக் கொண்டு என் காலத்தை தள்ளுவேன்னு நாம நினைக்கறோம்.

ஆனா படிப்பு மறந்து போயிடறது. மறதின்னு படிப்புக்கு எதிரி ஒண்ணு இருக்கு.

அதே மாதிரி என் உடம்பு. நான் ஸ்வஸ்தமா excercise லாம் பண்ணி வெச்சிண்டிருக்கேன். என் உடம்பு நான் சொன்னா கேட்கும்னு நினைக்கிறோம்.

ஆனா முதுமைன்னு ஒண்ணு வந்து தான் தீரர்து.

எவ்ளோ நாம பார்த்துண்டாலும் முதுமை வர்றது.

என்னுடைய 41 வயசுல வெள்ளெழுத்து கண்ணாடி போட வேண்டியிருந்தது.

அந்த கண்ணாடி கடைக்காரர் கிட்ட நான் சொன்னேன்.

‘எனக்கு ரொம்ப நன்னா கண்ணு தெரியும். தூரத்துல இருக்கறது எல்லாம் கூட நன்னா தெரியும். ரொம்ப அதைப் பத்தி நான் பெருமையா இருந்தேன்.

இப்ப என்னடான்னா எனக்கே வெள்ளெழுத்து வந்துடுத்து. எனக்கே பக்கத்துல இருக்கறதை கூட படிக்க முடியல’ன்னேன்.

அவர் ரொம்ப விவேகத்தோட இருக்கற கடைக்காரர்.

அவர் ‘அந்த 40 வயசுல பகவான் அந்த மணி அடிக்கணும். இல்லேன்னா மனுஷா ரொம்ப ஆடுவா’ ன்னு சொன்னார்.

எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. அது மாதிரி அந்தந்த வயசுல பகவான் மணி அடிச்சுடுவார்.

அதுக்கு தயாரா இருக்கணும்ங்கிறதை அழகா அவர் சொல்லிக் கொடுத்தார்.

அப்படி எவ்ளோ நாம சுக்காட்டம் உடம்பை வெச்சுண்டு இருந்தாலும் முதுமைன்னு ஒண்ணு வர்றது.

அதனால இந்த உடம்பை நாம நம்ப முடியாது.
Kousalya said…
அதி அற்புதமான வேண்டுகோள்...மிகவும் அருமையாக உள்ளது...அனாத ரக்க்ஷகி ஶ்ரீ காமக்ஷி தேவியே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
[25/01, 19:27] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 69 started on 6th nov

*பாடல் 23* ...💐💐💐
[25/01, 19:27] Jayaraman Ravilumar: *பாடல் 23 ... அடியைக் குறியாது*

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
[25/01, 19:28] Jayaraman Ravilumar: அடி' என்பதற்கு ஒரு விஷேசப் பொருளும் கொள்ளலாம். 'அடி'
என்பதற்கு 'ஆதி, மூலம், இறைவன்' என்று பொருள் உண்டு.

ஆன்மா
தன்னை அறிவதில்லை. தனக்கு அடியான ஆதியான முதல்வனையும்
அறிவதில்லை.

இது 'அவித்தை' எனப்படும். அஞ்ஞானத்தால் ஏற்படுவது
இந்த அவித்தை. இதை மாற்றுவதற்கு நீ ஞான சக்திதரனாக
வரவேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும் விதத்தில் அவனை 'வடி விக்ரம
வேல் மகிபா' என அழைக்கிறார்.

தன் உண்மைச் சொரூபத்தை அறியாமல் 'வேடர்களுடன் இருந்த
வள்ளியை ஆட்கொண்டு, அவளை உன்னுடன் சேர்த்துக்கொண்டு
ஞான வாழ்வு அளித்தவன் நீதானே' என்று அதையும் அவனுக்கு
ஞாபகப்படுத்துகிறார்.
ravi said…
சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
ravi said…
[25/01, 19:23] Jayaraman Ravilumar: ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ

தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ

க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .

தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ

ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ

வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
[25/01, 19:25] Jayaraman Ravilumar: शिव शिव पश्यन्ति समं, श्रीकामाक्षीकटाक्षिता: पुरुषा: ।
विपिनं भवनं, अमित्रं मित्रं, लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥

ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம், ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: ।
விபிநம் ப⁴வநம், அமித்ரம் மித்ரம், லோஷ்டம் ச யுவதிபி³ம்போ³ஷ்ட²ம் ॥

அப்படினு மூக பஞ்ச சதியில் சொன்னா மாதிரி,

மஹான்கள் காமாக்ஷி கடாக்ஷத்தினால் கோபம், பயம், எல்லாத்திலிருந்து விடுபட்டவர்கள்.

ஆனால் நம்மள மாதிரி இருப்பவர்களுக்காக, நீ ஒவ்வொன்றுக்கும் பயப்படறயே, அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உபாயத்தை தேடுகிறாய். ஸர்வ பயாபகம், எல்லா பயத்தையும் போக்க கூடியது, பரமேஸ்வரனுடைய பாத தாமரை, அதை நீ அடைந்தால், உனக்கு ஒரு பயமும் இருக்காது.

மேலான சுகம் கிடைக்கும். அப்படினு சொல்லி கொடுக்கிறார். வள்ளுவர் கூட,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அப்படினு சொல்றார்.
ravi said…
[25/01, 19:15] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 451* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[25/01, 19:15] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ *ஸர்வாதிரச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[25/01, 19:19] Jayaraman Ravilumar: அடுத்தநாள் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வந்தனர் .. பையனின் பெற்றோர் கேட்ட வரதக்ஷிணை வேண்டாம் என்றும் கலியாண செலவு முழுவதும் அவர்களுக்கு சொந்தம் என்றும் சொல்லி ஆசு கவியை ஆச்சரியத்தில் திக்கு முக்காட வைத்தனர் . திருமணம் ஜாம் ஜாம் என்று வரதன் அருளால் வரதக்ஷிணை இல்லாமல் நன்கு நடந்தது . கேட்பதை கொஞ்சமும் குறைவில்லாமல் தருவதால் அவன் ஸர்வாதிரச்யுதன் என்று அழைக்கப்படுகிறான் .. 🙏🙏🙏
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*_எல்லாவற்றையும் எல்லாரிடமும்_*
*_சொல்லாதே.._*

*_சிலரிடம் கேட்பதற்கு_*
*_காதுகள் இருக்கும் புரிந்து_*
*_கொள்வதற்கு மனங்கள் இருக்காது..!_*


*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺 "Each of us should turn every moment and every opportunity we get by chanting Sri Krishna Naam and turn it into success - A simple story to explain 🌹🌺-------------------------------------------------- ------

🌹🌺 A domesticated dog lost its way and went into the forest near the village.
He had to remain in the forest without knowing the way to return home from the forest.

🌺 Then the dog saw a tiger coming from a little distance, thinking that the tiger would kill him anyway and thinking how to escape, he happened to see some pieces of bone near it.

🌺Immediately turned his back to the tiger and pretended to eat those pieces of bone, *The meat of this tiger is good.

🌺He thought to himself that it would be good to get another tiger's meat like this.*

🌺 Hearing this, the tiger, fearing that this might be a terrible animal, went back the way it had come.

A monkey on top of the tree noticed this. It came down and chased away the tiger and explained the trick of the dog in order to gain a good name from the tiger.

🌺 On hearing this, the tiger rushed towards the dog with the monkey on his back saying, "Look what I am singing to the dog."

🌺 Seeing this, the dog tells the monkey tiger something about himself;

🌺 Thinking that it would be difficult for us to escape, he did not notice that the tiger and the monkey were coming together.

🌺Quick and smart thinking will always help you to protect from danger, it is true that this world is full of competition and people can cheat each other.

🌺But each of us should convert every moment and every opportunity we get into a success by chanting the name of Sri Krishna.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*197 सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-*

கருணா சமுத்திரம் காமேஸ்வரி.

இந்த நாமம் நதிகள் எல்லாம் சேர்ந்து கடலில் சேருவதை போல்

பல பல தெய்வங்கள் நாம் உண்டு என்று நம்பி வணங்குகிறோம்

கோரிக்கைகள் விடுகிறோம்

அவை சிறு சிறு நதிகள் போல் நம் வேண்டுதல்களை தாங்கிக் கொண்டு பெரிய அதாவது அம்பாள் எனும் பெருங்கடலில் கொண்டு போய் சேர்க்கின்றன

அங்கே நிலவுவது பேரீரைச்சல் அல்ல

நிம்மதி மௌனம் சாந்தம் அமைதி... சும்மா இருத்தல் ...

ஆசைகளை வெட்டி சாய்த்து அதில் கிடைத்த விறகுகளால் அன்னை நமக்கு முக்தி எனும் வீடு கட்டி தருகிறாள் ..

மரத்தால் ஆனாலும் அந்த சௌந்தர்ய வீட்டிற்கு அழிவே இல்லை ...

இன்னொரு நாமம் கடல் நதிகளை தேடி வருவதைப்போல ...

*கடல் நதிகளை தேடி வருமா ?*

வரும் .. அவள் கருணா ரஸ ஸாகரம் ..

அவள்

கருணை வேண்டும் தெய்வங்களில் புகுந்து அருளை அள்ளி வழங்குகிறாள்..

எப்படி பார்த்தாலும் அவள் கருணை

கடல் போல் ஆழமானது

வானம் போல் விரிந்து பரந்து உள்ளது ...

காற்றை போல் உணரக்கூடியது ..

நிலம் போல் மண் வாசனை கொண்டது ..

தீயைப் போல் பசி அடங்காமல் தந்து கொண்டே இருப்பது

கதிரவன் போல் ஆயிரம் கரங்கள் கொண்டு ரக்ஷிப்பது

நிலவு போல் அமுதமானது

நட்சத்திரங்கள் போல் மின்னுவது .... 🪷🪷🪷
ravi said…
*197 सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-*

கருணா சமுத்திரம் காமேஸ்வரி.

இந்த நாமம் நதிகள் எல்லாம் சேர்ந்து கடலில் சேருவதை போல்

பல பல தெய்வங்கள் நாம் உண்டு என்று நம்பி வணங்குகிறோம்

கோரிக்கைகள் விடுகிறோம்

அவை சிறு சிறு நதிகள் போல் நம் வேண்டுதல்களை தாங்கிக் கொண்டு பெரிய அதாவது அம்பாள் எனும் பெருங்கடலில் கொண்டு போய் சேர்க்கின்றன

அங்கே நிலவுவது பேரீரைச்சல் அல்ல

நிம்மதி மௌனம் சாந்தம் அமைதி... சும்மா இருத்தல் ...

ஆசைகளை வெட்டி சாய்த்து அதில் கிடைத்த விறகுகளால் அன்னை நமக்கு முக்தி எனும் வீடு கட்டி தருகிறாள் ..

மரத்தால் ஆனாலும் அந்த சௌந்தர்ய வீட்டிற்கு அழிவே இல்லை ...

இன்னொரு நாமம் கடல் நதிகளை தேடி வருவதைப்போல ...

*கடல் நதிகளை தேடி வருமா ?*

வரும் .. அவள் கருணா ரஸ ஸாகரம் ..

அவள்

கருணை வேண்டும் தெய்வங்களில் புகுந்து அருளை அள்ளி வழங்குகிறாள்..

எப்படி பார்த்தாலும் அவள் கருணை

கடல் போல் ஆழமானது

வானம் போல் விரிந்து பரந்து உள்ளது ...

காற்றை போல் உணரக்கூடியது ..

நிலம் போல் மண் வாசனை கொண்டது ..

தீயைப் போல் பசி அடங்காமல் தந்து கொண்டே இருப்பது

கதிரவன் போல் ஆயிரம் கரங்கள் கொண்டு ரக்ஷிப்பது

நிலவு போல் அமுதமானது

நட்சத்திரங்கள் போல் மின்னுவது .... 🪷🪷🪷
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 66*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
कामपरिपन्थिकामिनि कामेश्वरि कामपीठमध्यगते ।

कामदुघा भव कमले कामकले कामकोटि कामाक्षि ॥ ४९॥

49. Kama pari pandhi kamini Kameswari Kama peeta madhya gathe,

Kamadughaa bhava kamale Kamakale kama koti kamakshi.

காமபரிபன்திகாமினி காமேஶ்வரி காமபீடமத்யகதே |

காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி ||49||
ravi said…
அம்பாள் சிதாக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டது, தேவர்களுக்கு கவலை வந்துவிட்டது,

இவளுக்கு யார் தகுந்த கணவனாகமுடியும் என்றபோது தான்

காமேஸ்வரனாக பரமேஸ்வரன் தோன்றுகிறான்.

பரமேஸ்வர நாயகியும், காமராஜ பீடத்தன் மத்தியில் உள்ளவளும், காமகோடி என்ற பெயரை அடைந்தவளுமான, மஹா லட்சுமி ஸ்வரூபியே, காமாக்ஷி தேவி, என் விருப்பங்களை அனுகிரஹித்து அருள் புரியவேண்டும்.

காஞ்சி யில் உள்ள பிலத்துக்கு காமகோடி என்று பெயர்.

ஸர்வ தீர்த்தத்துக்கு மூன்று அம்சம் தள்ளி, ஈசான்ய பாகத்தில், காமாக்ஷி ஆலயத்தில் உள்ளது.

அதற்கு காமகோடி என்பதைத் தவிர பல வேறு பெயர்களும் உண்டு.

காஞ்சியில் பெரிய பிரதேசம் *காமகோஷ்டம்* எனும் காமகோடி. ருத்ர சாலைக்கும் விஷ்ணு சாலைக்கும் நடுவே பெரிய அளவில் உள்ளது.

பஞ்சபாண நிகேதனம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சியின் நடுவே, மத்ய , பிரதேசம். காமாக்ஷி ஆலயம் உள்ள இடம்.

இங்கு யார் தங்கள் இஷ்ட தேவதையின் மந்த்ரங்களை ஜெபிக் கிறார்களோ அவர்கள் எதை விரும்பினாலும் பெறுவார்கள்.

காமகோடி என்ற பதமே மோக்ஷத்தை தருவது.

மோக்ஷத்தை குறிப்பிடுவது.

அந்த பெயரே அங்கு குடியிருக்கும் காமாக்ஷிக்கும் ஆகிவிட்டது. 🙏🙏🙏
ravi said…
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,

புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,

திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்
ravi said…
ஒரு நேர்க்கோட்டில் நின்ற ஏழு மரங்களை
அன்று

அம்பெய்த திறமையான வில்லாளனே !

பிணைந்து (இரட்டை மருத மரமாக) நின்ற இரு மரங்களுக்கு
இடையே (உரலை இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !

நீருண்ட கனம் மிக்க மேகங்களை ஒத்த
களிறு சேரும் திருவேங்கடத்தானே -

வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய
உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? -
ravi said…
[26/01, 09:54] Jayaraman Ravilumar: *ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

💐💐💐
[26/01, 09:55] Jayaraman Ravilumar: ❖ *94 கௌலினி = கௌலினி வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவள்*
ravi said…
அம்மா

ஈசனிடம் கொண்டு சேர்ப்பவளே ஈசனின் உணர்வாய் இருப்பவளே ...

அசையா பிரம்மத்தை அசைத்தே புவி ஏழும் படைத்தவளே

அசையும் உயிர்களில் ஆசை எனும் மாயம் விதைப்பவளே..

விதைத்த விதைகள் மரமானால் கோடாலி கொண்டே சிதைப்பவளே

சிதைந்த உள்ளங்கள் கண்ணீர் கண்டு துடிப்பவளே

துடிக்கும் உயிர்களுக்கு வடிகாலாய் வந்தே வறுமை தீர்ப்பவளே

என்னவளே என்னுயிரே

இமை மூடும் முன்பே விழி வந்து சதி செய்யும் காலனை கதி கலங்க வைப்பாயே 🙏🙏🙏
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

52 –
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா (அ)
ravi said…
குறை ஒன்றும் இல்லாதவனே அருணாசலா

நிறை ஒன்றை கண்டே நித்யம் அருள்பவனே அருணாசலா

மறை தேடும் மகாதேவா

மாசு கொண்டோர் மனம் உன் வசம் கண்டே

நிஜம் நீ ஒன்றே என்றே அறிந்து கொண்டதே !!!

கரை கண்டேன் என்றே பிதற்றுவோர் நடுவில்

தரையில் என் கால் படிந்தே இருக்க அருள்வாயே !!!

வரை கண்டதில்லை இது வரை உன் கருணை ...

புரை தட்டினாலும் நரை ஈன்றாலும்

நாடுவது நமசிவாய எனும் நாமம் ஒன்றே *அருணாசலா*

குற்றம் இல்லா நீ குற்றம் மட்டுமே புரியும் என்னுள் புகுந்தே ஆட்கொள்வாயோ *அருணாசலா* ? 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
To be successful in life, what you need is education, not literacy and degrees. Munshi Premchand



Miracles are not contrary to nature, but only contrary to what we know about nature. Saint Augustine



Humility enables one to serve others.



Truth & patience are those rides, which never let their riders fall; neither at anyone's feet not in anyone's eyes.



Determination gives you the resolve to keep going in spite of the roadblocks that lay before you. Denis waitley



Being a winner is much different from having the potential to win. Everyone has potential; it's what you do with that potential that really matters. Zig Zaglar



Simplicity enables one to become an example.
ravi said…
[26/01, 07:30] +91 96209 96097: *அபாம் நிதயே நமஹ*🙏
திருப்பாற்கடலை தாங்கி நிலை நிறுத்துபவர்
[26/01, 07:30] +91 96209 96097: த்⁴யானத்⁴யாத்ருத்⁴யேயரூபா *த⁴ர்மாத⁴ர்மவிவர்ஜிதா* |🙏
இயல்பு இயல்பற்ற நிலைகளை கடந்தவள்
ravi said…
26.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 14)

Sanskrit Version:

ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः।।1.14।।

English Version:

tatah shvetairhayairyukte
mahati syandane sThitau |
maaDhava: panDavaschaiva
shankau pradaDhmatuh: ||

Shloka Meaning

Krishna and Arjuna were seated in a magnificient chariot that was drawn by white horses.
Then Krishna and Arjuna blew their conches. Their conches were not normal conches,
Vyasa describes them as divine conches.

Krishna and Arjuna get introduced in the Gita from this shloka onwards.

Additional details:

Let us learn a bit of sanskrit here.

Shveta means white. From this word only, the popular name Shvetaa is derived!!!
Divya means divine. From this word only, the popular name Divyaa is derived!!!

(Goes to show much females were revered in ancient India)

Here, the colour of the horse is white and white indicates sattva guna and reflects dharma.

The magnificient chariot and the great bow Gandiva was given to Arjuna by the God of Fire
after the burning of the Khandava forest. They were of exceptional power.

The four white horses where among the hundred presented to Arjuna by Chitraradha,
the king of the Gandharvas. They had the capability to move any where on the earth and sky.

In the opinion of some commentators, the four horses represent the four vedas,
Krishna is the paramatma and Arjuna the jivatma.

Here, Krishna is referred to Madhava. Ma means Lakshmi and Dhava means husband.
Madhava means the husband of Lakshmi, the divine Vishnu himself.

Bhishma blew the conch on behalf of Kauravas and
Krishna blew the conch on behalf of Pandavas

Two collosal giants on either side of the dharma divide!!!!
Jai Shri Krishna 🌺
ravi said…
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்...அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒரு துளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்று விட்டான் ஒருவன்...அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்.

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்...அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்.

தென்னை இளநீருக்குள்ளே,
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்.
அவனைத் தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து, கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன்...
அவனை உணர்ந்து கொண்டால் அவன் தான் இறைவன்...

வான வெளிப் பட்டிணத்தில்
வட்ட மதிச் சக்கரத்தில்
ஞான ரதம் ஓட்டி வரும் ஒருவன் ...அவனை
நாடி விட்டால் அவன் தான் இறைவன்..

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன்... அவனை
நினைத்துக் கொண்டால் அவன் தான் இறைவன்...

கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன்...
அவனைப் பின் தொடர்ந்தால் அவன் தான் இறைவன்...

பஞ்சுபடும், பாடுபடும்,
நெஞ்சுபடும், பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்து வைப்பான் ஒருவன்..
அவன் தான் ஆறுதலைத் தந்தருளும் இறைவன்....

கல்லிருக்கும் தேரையை கண்டு,
கருவிருக்கும் பிள்ளையை கண்டு,
உள்ளிருந்து ஊட்டி வைப்பான் ஒருவன்...
அவனை உண்டு களிப்போர்க்கு அவனே இறைவன்..

முதலினுக்கு மேலிருப்பான்,
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடி வரும் ஒருவன்.. அவனை
உணர்ந்து கொண்டால் அவன் தான் இறைவன்..

நெருப்பினில் சூடு வைத்தான்,
நீரினில் குளிர்ச்சி வைத்தான்.
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன்...அவனை
கனிந்து கண்டால் அவன் தான் இறைவன்...

உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக்குள்ளே அடங்கி
உண்டென்று காட்டி விட்டான் ஒருவன்...
ஓர் உருவமில்லாத அவன் தான் இறைவன்....

கோழிக்குள் முட்டை வைத்து,
முட்டைக்குள் கோழி வைத்து,
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்...
அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்...

சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மை மறந்தே இருக்கும் ஒருவன்...
அவனைத் தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்....

தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்லும் ஒருவன்... அவன் தான்
நாடகத்தை ஆட வைத்த இறைவன்!
ravi said…
[26/01, 19:50] Jayaraman Ravilumar: ரோத⁴ஸ்தோயஹ்ருʼத꞉ ஶ்ரமேண பதி²கஶ்சா²யாம்ʼ

தரோர்வ்ருʼஷ்டிதோ
பீ⁴த꞉ ஸ்வஸ்த²க்³ருʼஹம்ʼ

க்³ருʼஹஸ்த²மதிதி²ர்தீ³ன꞉ ப்ரபு⁴ம்ʼ தா⁴ர்மிகம் .

தீ³பம்ʼ ஸந்தமஸாகுலஶ்ச ஶிகி²னம்ʼ

ஶீதாவ்ருʼதஸ்த்வம்ʼ ததா²
சேத꞉ ஸர்வப⁴யாபஹம்ʼ

வ்ரஜ ஸுக²ம்ʼ ஶம்போ⁴꞉ பதா³ம்போ⁴ருஹம்
[26/01, 19:50] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 60வது 61வது ஸ்லோகம் பொருளுரை

60
ravi said…
அந்த மாதிரி உத்தம பக்தியை ஆச்சார்யாள் சொல்றார்.

அதுக்கு இந்த ஒவ்வொரு உதாரணம்ல சொல்லி இருப்பது மாதிரி,

பசியோடு இருப்பவன் ஒரு கிரஹஸ்தன் வீடு கண்ல படாதா?

கூப்பிட்டு சாப்பாடு போட மாட்டாளா?

அப்படினு நினைக்கிறா மாதிரியும்,

குளிரில் நடுங்குகிறவன் எங்கயாவது கொஞ்சம் ஒரு நெருப்பு கிடைச்சா கொஞ்சம் குளிர் காயலாமே, அப்படினு நினைக்கிறா மாதிரி,

எல்லாம் அந்த அவ்ளோ ஆவலோட நம்ம பகவானோட பஜனத்தை பண்ணனும். அவனுடைய பாதத்தை பற்றி கொள்ள வேண்டும்.

பகவத் பாத: மஹான்கள் தான்.

மஹான்களை த்யானம் பண்ணனும். அவாளுடைய உத்தம சரித்திரத்தையும், அவாளுடைய வாக்கையும், இந்த சிவானந்த லஹரி மாதிரி ஸ்தோத்திரங்களை திரும்ப திரும்ப படிக்கணும்.

அப்போ ஒரு நாள் நமக்கு அந்த உத்தம பக்தி ஏற்படும்.

அப்புறம் எந்த பயமும் கிடையாது,

மேலான சுகத்தை பேரின்பத்தை அனுபவிக்கலாம்.
ravi said…
[26/01, 19:47] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 70 started on 6th nov

*பாடல் 23* ...💐💐💐
[26/01, 19:47] Jayaraman Ravilumar: *பாடல் 23 ... அடியைக் குறியாது*

அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.
[26/01, 19:49] Jayaraman Ravilumar: வல்லி' என்றால் கொடி.

அதற்கு தாவிப் படர ஒரு கொழு கொம்பு தேவை.

சுரந்திரமற்ற ஆன்மா இறைவனையே பற்ற வேண்டும்.

சுருங்கச்
சொன்னால் அஞ்ஞானம் சூழ்ந்த ஆன்மா தனது ஆதாரத்தை உணராது
அழியும் என்பதையும் 'முருகனின் வேலாயுதத்தைச் சொன்னதினால்
அஞ்ஞானத்தை அழியச் செய்து, மெய் ஞானத்தைத் தந்தது'

என்பதையும்
மின் கொடியைப் புணரும்' என்பதனால் பக்குவப்பட்ட ஆன்மாவை
அவனே வலிய வந்து ஆட்கொள்ளும் கருணையையும், ' *குணபூதரன்* '
என்பதினால் முருகனின் அருட் குணங்களாகிய எட்டு குணங்களையும்
கூறுகிறார்.

அவர்கள் காலபாசத்தை வென்று இருப்பார்கள்.

இந்த
சூட்சுமத்தை அறியாத கரும மார்க்கிகள் மீண்டும் மீண்டும் பிறந்து
இறந்து உழல்வார்கள்.
ravi said…
[26/01, 19:30] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
*அச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[26/01, 19:31] Jayaraman Ravilumar: *101 அச்யுத:*👌👌👌

பக்தர்களை நழுவ விடாமல் பாதுகாப்பு தருபவர் 🙏🙏🙏
ravi said…
ராமாநுஜரின் சிஷ்யர் கூரத்தாழ்வார் அவர் மகன் பராசர பட்டர் ... ஒரு சமயம் ஒரு காட்டுப்பக்கம் சென்றார் அவர் சீடர்கள் வெகு தூரத்தில் அவரை பின்பற்றி வந்து கொண்டிருந்தனர்

பராசர பட்டர் ஒரு உணர்வு பூரணமான காட்சியை பார்த்து விட்டு மயங்கி கீழே விழுந்து விட்டார் .. பின் தொடர்ந்த வந்த சிஷியர்கள் பதறி போய் அவரை ஆசுவாதப்படுத்தி மயங்கி விழுந்ததன் காரணம் கேட்டனர் ... எதையாவது பார்த்து பயந்து விட்டீர்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்துக்கொண்டே என் ரங்கன் இருக்க நான் எதைக்கண்டு பயப்படவேண்டும் .. நான் கண்ட ஒரு காட்சி என்னை பரவசப்படுத்தியது ... அதன் உச்சம் என்னை மயங்க வைத்தது .

எல்லா சிஷியர்களும் அவரை வேண்டினர் அந்த காட்சியை தங்களுக்கும் சொல்லும்படி 🪷🪷🪷
ravi said…
*தினமும் ஒரு திருவாசகம்* 🪷🪷🪷 4
ravi said…
*பொற்பாதம்*

போற்றி, அருளுக நின் ஆதியாம் பாதமலர்,

போற்றி, அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,

போற்றி, எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,

போற்றி, எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,

போற்றி, எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,

போற்றி, மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,

போற்றி, யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,

போற்றி, யார் மார்கழி நீர் ஆட ஏல் ஓர் எம்பாவாய்

🪷🪷🪷🪷🪷
ravi said…
*நூல்:* *திருவெம்பாவை (#20*)

*பாடியவர்* : *மாணிக்கவாசகர்*💐💐💐
ravi said…
எம்பெருமானே, உன்னை வணங்குகிறோம்,

எல்லாவற்றுக்கும் தொடக்கம்,

உன்னுடைய பாத மலர்கள்,

எல்லாவற்றுக்கும் முடிவு,

அதுவும் சிவந்த தளிர் போன்ற உன்னுடைய பாதங்கள்தான்.

அவற்றை நாங்கள் வணங்குகிறோம்,👣👣

எல்லா உயிர்களும் உண்டாகக் காரணமாக இருந்த உன்னுடைய பொன் பாதங்களை வணங்குகிறோம்,

அனைத்து உயிர்களையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் கழல் அணிந்த உன்னுடைய திருவடிகளை வணங்குகிறோம்,

எல்லா உயிர்களுக்கும் முடிவு கொடுக்கும் உன்னுடைய இரண்டு பாதங்களை வணங்குகிறோம்,

திருமாலும் பிரமனும் பார்க்கமுடியாத தாமரைப் பாதங்களை வணங்குகிறோம்,

எங்களுக்கு நல்வாழ்க்கையை அருள்கின்ற அந்தப் பொன் மலர்ப் பாதங்களை வணங்கி

நாங்கள் மார்கழி நீராடுகிறோம்!🇨🇮🇨🇮🇨🇮
Kousalya said…
அற்புதம் ...பொற்பாதம்...🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
ravi said…

பழனிக் கடவுள் துணை -26.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-40

மூலம்:

மருமலிந்த செச்சை வனம்போலும் மேனித்
திருவொருக்காற் றோற்றநல்காய் சேவை – குருமரபின்
மூத்தவர்க்கோர் மாற்றம் மொழிந்தாய்! முனிவர்சொல்பேர்
ஆற்றல்வய லூர்க்குமரப் பா (40).

பதப்பிரிவு:

மரு மலிந்த செச்சை வனம் போலும் மேனித்
திரு ஒருக்கால் தோற்ற(ம்) நல்காய்! சேவை – குருமரபின்
மூத்தவர்க்கு ஓர் மாற்றம் மொழிந்தாய்! முனிவர் சொல்பேர்
ஆற்றல் வயலூர்க் குமரப்பா!! (40).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

தோற்றம் - புகழ்; உயர்ச்சி;

பழனிச் சேயோனே! முழுதும் செய்யோய்! செக்கச் சிவந்த வெட்சிப் பூக்களின் வனக்குவியல் போல் சிவந்த திருமேனியையுடைய பழனாபுரிப் பெருமாளே! உன் சிவந்த திருமேனி அழகால் எனக்குக் காட்சி தந்து, உயர்ச்சி நல்கி, புகழ் நல்காய்! தொன்று தொட்டு வரும் சேவை குருமரபின் மூத்தவரான சிவபெருமானுக்கு ஓர் ஒப்பற்ற உபதேசம் மொழிந்தாய்! முனிவரர்களுக்கு சொல் பேராற்றல் நல்கும் பழன வயல்கள் நிறை பழனி வயலூர்க் குமரப்பா! எனக்கும் அருள் நல்காய்!

ஆய் ஊய் என்று என்னை மிரட்டும் மாய வினையே! நான் பழனித் தாயின் சேய்! என்னை நீ ஒன்றும் செய்ய முடியாது மாய்!ஓய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

இங்கே
எத்தனை கோடி மனிதர்கள்
இருக்கிறார்களோ...

அத்தனை கோடி நியாயங்கள்
இருக்கும்.

ஆனால்...
தர்மம் ஒன்றுதான்...!!!

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 38*

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்

*பொருள்*

நல்லது இது என்றும், கெட்டது எது என்றும், இதை செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்து இன்று என்றும் அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை பேதம் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லை கயிறாக பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல், இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
[27/01, 07:23] +91 96209 96097: *அதிஷ்டானாய நமஹ* 🙏
மந்திர மலையை தன் முதுகிலே தாங்கி நின்றவர், நம்முடைய பாரங்களையும் சேர்த்து
[27/01, 07:23] +91 96209 96097: *விஶ்வரூபா* ஜாக³ரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா 🙏
உலகின் எல்லாப் பொருள் ஆகவும் திகழ்பவள்
ravi said…
🌹🌺" *ஒரு சிறு காயிலும் கனியிலும்கூட எத்தனை வேலைப்பாடுகள் உள்ளன* !
*அதன் காரணம் பற்றி...... விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கிருஷ்ணர் பகவத் கீதையில் (10.8) கூறுகிறார், அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே,

🌺“நானே அனைத்திற்கும் மூலம்; என்னிலிருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.”

🌺நீங்கள் அனைத்தையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். ஓர் இலையைக்கூட ஆராய்ந்து பாருங்கள்; எத்தனை நுண்ணிய நார்கள், நரம்புகள் ஒன்றோடொன்று பின்னி நிற்கின்றன.

🌺ஒரு சிறு காயிலும் கனியிலும்கூட எத்தனை வேலைப்பாடுகள் உள்ளன! அவை தற்செயலாக வந்தன என்று சொல்வது தவறு. அதன் பின்னால் ஒரு மூளை வேலை செய்கிறது என்பதை உணர வேண்டும்.

🌺அந்த மூளைக்குப் பின்னால் இருக்கும் மூளை யார்? அந்த மூளைக்குப் பின்னால் யார்?

🌺அதற்கு பின்னால், அதற்கு பின்னால், அதற்கு பின்னால்… பஹுனாம் ஜன்மனாம் அந்தே, அந்த மூளை எது என்று பல பிறவிகளாகத் தேடி, வாஸுதேவ: ஸர்வம் இதி என்ற முடிவிற்கு வருகிறார்கள்.

🌺கிருஷ்ணரே அனைத்திற்கும் காரணமானவர் என்ற முடிவிற்கு வருகிறார்கள்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை.*

*_✍️ 27, Friday, Jan., 2023_*

*🧿''கூட்டு முயற்சிதான்"*

*♻️பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர்.*

*♻️எல்லாம் தங்களால்தான் நடந்ததாக நினைக்கின்றனர்'. ஆனால் மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அந்த வேலை முடிந்து இருக்காது.*

*♻️ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப் படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது.*

*♻️ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது குழுவிலில இருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத்தன்மை, பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.*

*♻️கோடை காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்க விடுவதைக் கண்டார்.*

*♻️அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது.*

*♻️அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது.*

*♻️பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர்.*

*♻️இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்டார் மேயர்.*

*♻️நான் தான்” என்றான் ஒரு சிறுவன்..“நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன்.. நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்.*

*♻️ஆனால் காற்றோ நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது.*

*♻️நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்து இருக்க முடியாது. எனவே, நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.*

*♻️இல்லை நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால்.*

*♻️நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி தரையில் விழுந்திருக்கும்..*

*♻️அதை அந்த பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.*

*♻️இப்போது, உங்களைப் பொறுத்தவரை யார் உண்மை யில் காற்றாடியை பறக்க வைத்தவர்கள்.?*

*😎ஆம்.,நண்பர்களே..,*

*🏵️எந்த ஒரு செயலையும் "நான் தான் செய்தேன்", என்னால்தான் அந்த செயல் செய்யப் பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ள வேண்டாம்.*

*⚽நமது அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம்" அல்லது, "செய்யப் பட்டது"போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்...*

*🏵️இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே மற்றவர்களையும் எப்போதும் நினைவில் வையுங்கள்!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝

https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 469* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*197 सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-*

மூகர் கடாக்ஷ சதகத்தில் 100 ஸ்லோகங்கள் அம்பாளின் கருணைக்கு உதாரணம் காட்டுகிறார் ...

அவரே இப்படி சொல்கிறார் ...

அம்மா ஒரு பெரிய பனிக்கட்டி கொண்ட மலையில் ஒரு சிறுத் துளியை எடுத்து உன் கருணையை வர்ணித்துள்ளேன் ...

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி கூடபொய்த்து விடும் ..

உன் கருணை கோடி பானைகளுக்கு பல கோடி சோறு பதங்கள் காட்டினாலும் திருப்தி வரவில்லையே அம்மா ...

என்ன செய்வேன் ...

மீண்டும் மீண்டும் பிறவி வருகிறதே என்று பலர் புலம்புகிறார்கள் ..

இது சாபம் அல்ல ஒரு மாபெரும் வரம் ...

உன் நாமத்தை பாராட்ட ஒரு பிறவி எப்படி போதும் தாயே ...🙌🙌🙌🙌
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 67*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
मध्येहृदयं मध्येनिटिलं मध्येशिरोऽपि वास्तव्याम् ।

चण्डकरशक्रकार्मुकचन्द्रसमाभां नमामि कामाक्षीम् ॥ ५०॥

50. Madhye hrudayam madhye nitilam madhye siro aapi vasthavyam,

Chanda kara sakra karmuka chandra samaabhaam namami kamakshim.

மத்யேஹ்றுதயம் மத்யேனிடிலம் மத்யேஶிரோ‌உபி வாஸ்தவ்யாம் |

சண்டகரஶக்ரகார்முகசன்த்ரஸமாபாம் னமாமி காமாக்ஷீம் ||50||
ravi said…
உண்மையான பக்தனின் சரீரத்தில் காமாக்ஷி உறைகிறாள்.

ஹ்ருதயத்தில் மத்தியில் சூர்யன் போலவும், ,

நெற்றியின் நடுவே இந்திரனின் வில், தனுசுவைப் போலவும்,

சிரசின் நடுவே சந்திரன் போல

காந்தி யுடையவளாகவும் உள்ளவளே ,

காமாக்ஷி தேவி, உன்னை நமஸ்கரிக்கிறேன்.🙌🙌🙌
ravi said…
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலமெல்லாம்

சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே!

சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!

ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே.

--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ravi said…
கொடிய, வலிமை மிக்க அரக்கர்களின் கூட்டங்கள் அனைத்தும்

பல துண்டுகளாயும், பின் சாம்பலாயும்

பின் மண்ணில் (தேய்ந்து அழிந்து) போகும்படிச் செய்கின்ற

சீறி(யும்) அடங்காது பாய்கின்ற

திருச்சக்கரத்தை வளைக்கையில் தரித்தவனே

தெய்வக் கோமானே! -

கடவுளர்க்கெல்லாம் தலைவனே

சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கள்

நெருப்பைப் போல சிவப்பாகப் பூக்கின்ற

திருவேங்கடத்தானே!

ஆறா அன்பில் அடியேன் -

உன் அடி சேர்

வண்ணம் அருளாயே 🪷🪷🪷🪷👣👣👣👣
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

52 –
தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாசலா (அ)
ravi said…
குறை ஒன்றும் இல்லாதவன் நீ குறையை நிறையாக கொண்டவன் நான்

குற்றம் ஏதும் இலாதவன் நீ .. குற்றம் ஒன்றே சொத்து என வாழ்பவன் நான் ..

மெய்யான பிரம்மம் நீ பொய்யான மேனி தனில் மெய்யான உனை தொலைத்தவன் நான்

*சரண்* என்று வந்ததில்லை *கதி* என்று கதறியதும் இல்லை ...

நான் செய்யும் சேட்டைகள் *சரணாகதி* என்றே சடுதியில் சங்கடம் தீர்க்க வந்தனையோ அருணாசலா ... 🪷🪷🪷
ravi said…
27.01.2023:

"Gita Shloka (Chapter 1 and Shlokas 15, 16, 17 & 18)

Shlokas 15, 16, 17 & 18 describe the conch sounds of the various warriors of the Pandava army

Sanskrit Version:

पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनंजयः।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः।।1.15।।

English Version:

Paanchajanyam hrshikeshah
devadattam Dhananjayah: |
paundram dadhmau mahaashankam
Bhimakarma vrkodarah ||

Shloka Meaning:
The conch of Lord Krishna is named as paanchajanjam
Arjuna's conch is named as Devadatta
The conch of Bhima was named as Paundram.
_____________________

Sanskrit Version:
अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ।।1.16।।

English Version:

anantavijayam raja
kuntIputro yuDhistirah |
nakulah sahaadevasscha
suGoshamaNipushpakau ||

Shloka Meaning

Yudishtirah, the son of Kunti, also called Dharmaraja. His conch is named as Anantavijayam.
(Ananta in sanskrit means the one that has no end. Anantavijaya means one who wins endlessly).

The conches of Nakula and Sahadeva are as follows

Nakula - SuGoshah
Sahadeva - Manipushpaka
--------------------------------
"Gita Shloka (Chapter 1 and Shloka 17)

Sanskrit Version:

काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः।।1.17।।

English Version:

kaashyashcha parameshvaasah:
shiKhanDi cha mahaaraThah |
drushtadhyumno viraaDascha
saatyhakischaparaajitah ||

Shloka Meaning:

The King of Kashi an excellent archer.
Commander supreme Shikhandi
And the unconquerable warriors Dhrustadhyumna, Viraatah and Saatyaki

They all blew their conches to signal their war cry.
---‐----------------------------

"Gita Shloka (Chapter 1 and Shloka 18)

Sanskrit Version:

द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्।।1.18।।

English Version:

Drupado Draupadeyaashcha
sarvashah prthvIpate |
sauBhadrashcha mahaabahuh
shankhaandaDhmuh praThakpraThak ||

Shloka Meaning:

Drupada, the sons of Draupadi, Saubhadrah and Abhimanyu all blew their conches separately

Panchajanyam - The conch of Shri Krishna was made from the bones of a demon named Panchajan,
hence called as Panchajanyam

Hrishikesha - Hrishika means sense organs. Esha means ruler. Hrishikesha means the ruler of the sense organs.
Hrishikesha also means th e source of all bliss.

Dhananjaya - Dhanam means wealth. He won wealth from all kings by performing Rajasuya Yaga

Vrukodarah - Vruka means wolf. So the word means wolf bellied. The name also means the one
who has fire 'Vrika' in his stomach and capable of consuming anything

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -27.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-41

மூலம்:

குமர குருபரனைக் கொற்றவைவே லானைச்
சமர்விழையும் சேவலுளான் தன்னை – நமரறிவார்
எம்மை அவனறிவான், என்றகவு மாரருக்கே
செம்மையதா கும்பழனிச்சீர் (41).

பதப்பிரிவு:

"குமர குருபரனைக் கொற்றவை வேலானைச்
சமர் விழையும் சேவல் உளான் தன்னை – நமர் அறிவார்
எம்மை அவன் அறிவான்"!! என்ற கவுமாரருக்கே
செம்மை அது ஆகும் பழனிச் சீர்!! (41).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

பழனித் திருவாயிரத்தின் மகுட வெண்பாக்களில் இதுவும் ஒன்று. எங்கள் தெய்வம், என் முதலாளி பழநியாண்டவனையே நம்பும், வழிபடும் நமர் குழுமத்திற்காக, நமர் குழுமத்தின் முன்னோடி நமது தண்டபாணி சுவாமிகள், அவன் அருளால், வாய்மொழிந்த மிக அற்புதமான வெண்பாக்களில் இதுவும் ஒன்று. இது "நமர் குடும்பப் பாடல்" என்றே அடியேன் கொள்கிறேன்.

எங்கள் தெய்வம், பழனாபுரிப் பெருமாள் அமர் பழனிக்கோவிலின் இன்று குடமுழுக்கு நாள்*. இந்த நன்னாளில் நமர் குடும்பத்திற்கு எம் பெருமான் அளிக்கும் அருள்மழை தான் இன்று இந்தப் பாடலுக்கு அடியேன் உரை எழுதுவதும், உலக முருகன் அடியார்கள் எல்லாம் இன்று இந்தப் பாடலைத் துதி செய்து அவன் திருத்தாளில் சமர்ப்பிப்பதும். பழனி ஆண்டவனே! என்னே உன் கருணை!

இந்தப் பாடலில் சாரம்- "எல்லாம் வல்ல எம் பெருமான் பழநியாண்டவனை நாங்கள் அறிவோம், நமர் எங்களை அவன் அறிவான்!" வேறு என்ன வேண்டும்? வேறு எதற்கும், யாருக்கும் அஞ்சோம்! அவன் அன்றி வேறு அறியோம் நாம்.

"குமர குருபரனை, வெற்றிக்கு உரியவள் ஆன கொற்றவையின் சேயான வெற்றிவேலானை, முருகவேளின் அடியார்களுக்காக ஏவல், பில்லி, சூன்யம், நோய்கள் முதலியவற்றுடன் சண்டை செய்து பொருதி, வெற்றிவேல் பெருமாளின் அடியார்களைக் காக்கும் சேவலைக் கொடியாகக் கொண்டப் பழனிமலை அரசனை, கருணாச்சல மூர்த்தியை, கருணாசாகரத்தை, நம்மவரான அன்பர்கள்,"நமர்" அறிவார். அவனையே நம்பி வாழும் எம்மை அவன் அறிவான்" என்ற உறுதியான கொள்கையை உடைய கவுமாரருக்கே, பெருமையையே உடைய பழனிச் சீர், எண்ணிய பொழுதில், துதித்த மாத்திரத்தில் எல்லா நலனையும், வளமையும் பயக்கும். அவனை நம்பினோர் கெடுவதில்லை- பழநியாண்டவனை மனதார நம்பினோரை அவன் அருள் நிச்சயம் முன்னின்று காக்கும்.

குடமுழுக்கு நாயகனே! எங்கள் மனத்திடம் உயர அருள் கூர்! நமரின் பழனி அமர் பெருமாளே! கருணையின் எல்லையே! உன் போல் கடவுளே இல்லையே!

*- 27.01.2023- பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் குடமுழுக்கு நாள்.

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
Kousalya said…
அதி அதி அற்புதமான சரணாகதி... என் அனைத்து குறைகளையும் நிறையாய் எண்ணி எமக்கு சரணாகதி அருளவேண்டும் அருணாச்சலப் பெருமானே🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷🌼🌼
ravi said…
குறையை நிறையாக கொண்டவன் நான் என்று எழுதும் போது என்னுள் குறை மட்டுமே நிறைந்து உள்ளது என்ற அர்த்தத்தில் சொல்ல விரும்பினேன் .

அதை அருமையாக புரிந்து கொண்டு பதில் பதிவு போட்டதற்கு மிக்க நன்றி
ravi said…
*❖ 95 குலயோகினி = யோகத்தின் மூல-வடிவானவள்*🙏🙏🙏
ravi said…
வேழத்தின் மூலமே வேதத்தின் விழுப்பொருளே

யோகத்தின் உட்பொருளே யாகத்தின் ஆணி
வேரே

பாகத்தில் சரிபாதி கொண்டே

மேகத்தின் மதி சூடி

வேகத்தில் வேங்கையாய்

விவேகத்தில் *பருக்கள் இல்லா வானமாய்* வடி வெடுப்பவளே

வண்டார் குழலி அம்மையே வண்டுகள் தேன் எடுக்கும் வண்ண மலரே

வாடி போகும் உயிர்களுக்கு தேடிப்போய் தெவிட்டாய் அமுதம் தருபவளே ...

தீயின் சுவையே காற்றின் பரிசமே

வானத்தின் இசையே நீரின் சுவாசமே

நிலத்தில் நின்று வாடுகிறோம் உன் வரவை எதிர்பார்த்தே 🙌🙌🙌

*பருக்கள் இல்லா வானமாய்* = நட்சத்திரங்கள் இல்லா வானம் 🙏
ravi said…
இன்னிக்கு 45ஆவது ஸ்லோகத்துல

अयाच्यमक्रेयमयातयामं अपाच्यमक्षय्यं अदुर्भरं मे |

अस्त्येव पाथेयमित:प्रयाणे श्रीकृष्णनामामृतभागधेयम् ॥ ४५ ॥

அயாச்யம் அக்ரேயம் அயாதயாமம் அபாச்யம் அக்ஷய்யம் அதுர்பரம் மே |

அஸ்த்யேவ பாதேயமித: பிரயாணே ஸ்ரீகிருஷ்ண நாமாம்ருத பாகதேயம் ||
ravi said…
இந்த ஊர் எனக்குப் பிடிச்ச இடம். beach ஓரமா இருக்கேன். தினம் sea breeze வர்றது.

சௌக்யமா இருப்பேன் நான் ன்னு நினைச்சா transfer பண்ணிடுவான்.

இந்த ஊரு, இங்க நான் நல்ல பேரு வாங்கியிருக்கேன்.

இதுனால என்னை இங்க வேலையிலிருந்து எடுக்க மாட்டான்னு சொன்னா, புது boss வந்தா எவ்ளோ நல்ல பேர் வாங்கியிருந்தாலும், அவனுக்கு வேண்டிய ஆளைப் போட்டுட்டு நம்மளை எடுத்துடுவான்.

இதுக்கெல்லாம் மேல இந்த காலத்துல ஜனங்கள் பணத்தை ரொம்ப நம்பறா.

பணத்தை நம்பவே முடியாது.

பணம் இருந்தா எல்லாம் சௌக்யமா இருக்கப் போறோம்னு நினைச்சுக்கறா. அதுவும் உண்மையில்லை.

‘ *அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்* ’ ன்னு மஹான்கள் சொல்லி கொடுக்கறா.
ravi said…
*பருக்கள் இல்லா வானம் ....*

பருவம் அடைந்தும் பருக்கள் இல்லை முகத்தில்

நீரை உறிஞ்சும் வேகத்தில் வந்த முத்துக்கள் அவள் பற்களில் பள்ளி கொண்டன

வளைந்து நெளிந்து சென்ற நதிகள் அவள் கன்னத்தில் குழி எழுப்பின

அதில் சிற்பிக்குள் இருக்கும் முத்து போல் புன்னகை பூத்து குலுங்கின ...

வேடிக்கை பார்க்க வந்த கரு மேகங்கள் அவள் கேசம் அதில் குடி புகுந்தன ..

சிதறி தெளித்த கருமை அவள் புருவம் அதில் புது மனை விழா நடத்தின

வானம் கொஞ்சம் வளைந்தே அவள் புருவத்தில் வில்லாயின ...

விழி இரண்டும் வேலாகி வரும் படை தனை தகர்த்தின

விண்ணவளோ அவள் இல்லை என்னவளோ நானறியேன் ...

நெஞ்சில் தைத்த அம்பு நினைவில் கலந்து அமுது எனும் விஷமதை தினம் தினம் பருக தருகின்றதே ...

அம்மா!! உன் பார்வை யின் அம்பு பட்ட இடம் எங்கும் தாமரைகள் பூத்து குலுங்குவத்தின் மர்மம் என்ன ?
ravi said…
இங்கே விஷம் என்பது அளவுகோல் .. அமுதம் உண்டு உண்டு அதிக அளவில் போய் விஷமானது ... நிஜ விஷமில்லை . ஒரு உவமையின் உச்சம்
Rudram amma said…
Noooooo ji
Rudram amma said…
Accept Devis anugraha ji...
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் :*

காசிலிங்கம் :

ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்கும், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார். ராமபிரானின் ஆணைக்கிணங்க காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம். இந்த லிங்கம் இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ளது.

மணல் லிங்கம் :

காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம். இது தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.

உப்பு லிங்கம் :

மற்றொன்று பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் உருவாக்கிய உப்பு லிங்கம். ஒருமுறை கோயிலில் உள்ள மணல் லிங்கம், மணலால் செய்யப்பட்டிருக்க முடியாது. மணலால் செய்யப்பட்டிருந்தால் அபிஷேகம் செய்யும் போது அது கரைந்து போயிருக்கும் அல்லவா என்ற தர்க்கம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்திருந்த அம்பாள் பக்தர் பாஸ்கரராயர் என்பவர், இல்லை மணலால் தான் செய்யப்பட்டது என வாதம் செய்தார்.
மற்றவர்கள் நம்ப மறுத்ததால், நான் இப்போது ஒரு உப்பு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்து காண்பிக்கிறேன் என்றார்.

அவர் சொன்னதுபோலவே ஒரு உப்பு லிங்க செய்து அபிஷேகம் செய்தார். லிங்கம் கரையவில்லை. அம்பாள் பக்தனாகவும், சாதாரண மனிதனாகவும் இருக்கக்கூடிய நான் செய்த உப்பு லிங்கமே அபிஷேகம் செய்யும் போது கரையவில்லை என்றால், எம்பெருமான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானின் மனைவியான சீதாதேவி செய்த மணல் லிங்க கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது. இந்த உப்பு லிங்கத்தை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர்.

இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத்திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்.

ஸ்படிக லிங்கம் :

ராமேஸ்வரம் கோயில் கர்ப்ப கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
🌹🌺 "How many works are there in even a small leaf and fruit!
A simple story that explains about its reason 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹Krishna says in Bhagavad Gita (10.8), aham sarvasya prabhao madha: sarvam pravardate,

🌺 “I am through all things; Everything emanates from Me.”

🌺You should research everything. Examine even a single leaf; How many fine fibers and nerves intertwine with each other?

🌺How many designs are there even in a small leaf and fruit! It would be wrong to say that they came by chance. One must realize that there is a brain working behind it.

🌺Who is the brain behind that brain? Who is behind that brain?

🌺Behind that, behind that, behind that... bahunam janmanam anthe, searching for that brain for many births, they come to the conclusion Vasudeva: sarvam iti.

🌺 They come to the conclusion that Krishna is the cause of everything.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Hemalatha said…
உங்கள் பதிவுகள் போல் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு விஷயமும் ......சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏
ravi said…
*கோலம்*

108 புள்ளிகள் வைத்தேன்

விண்ணில் பறந்த மேகங்கள் நடுவே ...

மண்ணில் போடும் கோலங்கள் மறைந்து விடும் என்பதாலே

கோடுகள் இங்கும் அங்கும் ஓட கோலம் கோகுலத்தில் கண்ணன் போல் சிரித்தது ...

இரண்டு புள்ளி சேராமல் வேதனை தனை தந்தது ..

வேண்டி நின்றேன் காஞ்சி பெரியவாளை ...

சிரித்த பெரியவா சொன்னார்

கோலம் என்ன அர்த்தம் தெரியுமா? என்றே ...

என் கோலம் சிதைந்து நிற்க

மா கோலம் ஏன் என்ற கேள்வி மண்டை தனை கொக்கி போட்டு இழுத்தது ..

பெரியவா சொன்னார் ...

போடும் புள்ளிகள் வாழ்வில் உன் உறவுகள் ...

அன்பு எனும் கோடால் சேர்த்து விட்டால் எழிலாய் கோலம் வந்து விடும் ...

கோணல் மாணலாய் உறவு இருந்தும் இணைக்கும் கோடு உறுதி தரும் ...

இடை பிரியேன் என்றே வரை வகுக்கும் ...

எல்லா புள்ளிகளும் சேர்ந்தால் உன் வாழ்வும் பூரணமாகும் ..

ஒரு புள்ளி தொலைந்தால் வாழ்வின் அர்த்தமும் தொலைந்து போகும்

சரி கோலமதில் செம்மண் இடுவதேன் ?

இதுவும் தெரியாதா ? சரி சொல்கிறேன் என்றார்

ரத்தம் சிந்தி வளர்த்த சந்ததிகள் அரண்மனை மதில் சுவர் போல் ...

சுற்றி நின்றே உனை காக்கும் ...
மறைந்து போன உன் தலை முறைகள் ...

முறை தவறி நடந்து கொண்டால் முடிந்து போகும் உன் கோலம் ..

முடிவுரை ஒன்றும் இல்லாமலே

காணாமல் போன இரண்டு புள்ளிகள் பெரியவா..... இழுத்தேன்

என் காலடிகள் ... குருவின்றி வாழ்வில் நிறை கொண்ட குறைகள் குறையுமோ ... ?

வரை இன்றி அருள் தந்திட கோலமதில் நான் இருக்கிறேன் ... க்ஷேமாய் நீ வாழ்ந்திடவே !!

கண்ணில் நீர் பள பளக்க கோலம் முடித்தேன் ...

என் அலங்கோல வாழ்க்கை ஆயிரம் அர்த்தம் கொண்டு சிரித்ததே 🙏🙏🙏
Kousalya said…
தங்களின் இந்த கோலம் என் கோலத்தை வரி வரியாக விவரித்தது...புரிந்தது எனக்கு ஏன் இந்த கோலம் இன்று என்று...விழி நீர் மறைத்தாலும் மிக தெளிவாக.....
Rudram amma said…
Super ji
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு வருவதில்லை.....

ஆனால்
வந்த எதுவும்....

எதையும்
சொல்லிக் கொடுக்காமல்
விடுவதில்லை...!


*இரவு இனிதாகட்டும் 😴*


*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
[28/01, 07:31] +91 96209 96097: விஶ்வரூபா *ஜாக³ரிணீ* ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா 🙏
உலக அறிவின் விழிப்புணர்வை வழங்குபவள்
[28/01, 07:31] +91 96209 96097: *அப்ரமத்தாய நமஹ*🙏🙏
அடியார்களை காப்பதில் கவனம் மிக்கவர்

பிரமாதம் = கவனக்குறைவாக
ravi said…
*தமிழ் இலக்கியம்*

*நல்வழி : 39*

முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

*பொருள்*

ஒருவன் எத்தனை தான் கல்வி கற்றாலும், அவனது முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும் மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன் படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பு இருப்பது போல், அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன் படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் ஒரு பயனும் இல்லை.


*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…

பழனிக் கடவுள் துணை -28.01.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-42

மூலம்:

சீரும் தளையும் தெளியாச் சிறுபுலவர்
ஆரும் பகர்தல் அரிதன்றோ _ சூருடலம்
கீற்றுருவ மாகவெல்லும் கெம்பீரம் சொல்லிஅண்டர்
போற்றும்வய லூரான் புகழ் (42).

பதப்பிரிவு:

சீரும் தளையும் தெளியாச் சிறு புலவர்
ஆரும் பகர்தல் அரிது அன்றோ?- சூர் உடலம்
கீற்று உருவமாக வெல்லும் கெம்பீரம் சொல்லி அண்டர்
போற்றும் வயலூரான் புகழ்!! (42).


பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சூரன் உடலை இரு பிளவாக வெல்லும் கம்பீரம் உடைய எங்கள் பழனிப் பெருமானின் பெரும் புகழை, தேவர் எல்லோரும் துதித்துப் போற்றும் பழனி வயலூரனின் புகழ், யாப்பிலக்கணமுறைப்படி சீரும் தளையும் தெளிந்து உணராத, அறியாத சிறு புலவர் கூட்டத்தில் உள்ள யாரும் பகர்தல் அரிது. எல்லோரும் எம் பெருமான் புகழைப் பாடி விட முடியாது. எம் பழனிப்பெருமான் பெரும்கருணைக்கு ஆளனானவர்க்கே வாய்த்த சித்தி அது என்று தெளிக!

ஆரும் அற்றவன் என்று என்னை யாரும் மோதித் தள்ளி விட முடியாது! பாருக்கேப் பெரும் தலைவன், சீரும், பேறும் மிக்க, மிகப் பெரும் பழனிப் பெருமான் உண்டு எனக்குத் துணையாக!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
*🔹🔸இன்றைய சிந்தனை..*

*_✍️ 28, Saturday, Jan., 2023_*


*🧿''கவலை...! கவலை...!! கவலை...!!!"*


*♻️மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை". இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா...?*

*♻️எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை...*

*உதாரணமாக:*

*♻️பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவனைப்பும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️இளைஞர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள்...*

*♻️நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், இப்படி பல. நன்கு படித்து தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கபோகும் என்ற கவலை...*

*♻️கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாக சேமித்து வைப்பது என்ற கவலை...*

*♻️திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா...? கிடைக்காதா...? என்ற கவலை...*

*♻️வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா...? மாட்டார்களா...? என்ற கவலை...*

*♻️இப்படியாக கருவரை முதல் கல்லறைக்கு பின்னும் மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக!, ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலையுற்றுதான் இருக்கிறோம்...*

*😎ஆம் நண்பர்களே...!*

🏵️ *ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டிருக்கின்றது. ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது...!*

⚽ *எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும்தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, கவலையில்லாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்...!!*

🏵️ *கவலையுறுமாறு ஏதேனும் நடந்துவிட்டால், உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றிகொள்ள தம்மைத் தயாராக்குபவரே அறிவாளி. நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்...!!!*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
https://srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*❖ 96 அகுலா = குலத்திற்கு அப்பாற்பட்டவள் -*

அனாதியானவள் (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) -

வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள்

(குலம் என்பது வேத சாஸ்திரத்தை குறிப்பதாகவும் பொருள்படும்) 🙏
ravi said…
அம்மா நாட்புறமும் சுவர் எழுப்பி

நாவிரண்டு கதவு வைத்து

நல்லதொரு மனை செய்தேன் ... 🏠

நான்கு வேதங்கள் அதில் குடி வைத்தேன் ..

உபநிஷதம் எனும் சுவர்கள் சுற்றி நின்று மனை காக்க

மாசற்றவளே மாக்கோலம் போட்டே

செம்மண் கொஞ்சம் சிந்தி

வாசல் எல்லாம் பூக்கோலம் போட்டு

பொன் மகளே

நீ வரவேண்டி தவம் இருந்தேன் ....

கொஞ்சும் சலங்கை

தங்கமென மின்னும் சிலம்பு

இல்லா இடைக்கு உடை போடும் ஒட்டியாணம்

கேசத்தில் தேசத்தில் இருக்கும் பூஷ்ப்பங்கள்

நெற்றி தனில் தாழம்பூ

தவமிருந்து ஈன்ற குங்குமம்

தாம்பூலம் நிறைந்த தேன் சிந்தும் அதரம் ,

சிவந்த முகத்தில் சிந்தாமணி கொஞ்சும் புன்னகை

காஞ்சி பட்டு காஷ்மீர் குங்கும பூ

சிந்தூர நெற்றியில் நடம் இடும் ரத சப்தமி

அம்மா சர்வ அலங்கார ஸ்வரூபிணியாய் நீ வந்தாய் ...

சிந்தையில் நிறைந்தாய் ...

சீர்தூக்கி பார்க்கிறேன் வாழ்க்கை இதை

நிறைந்த வாழ்வை நீ தந்தபின் இனியும் வேண்டுவேனோ இதை தா அதை தா என்றே தாயே !!
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

53 –
நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா (அ)
ravi said…
கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பு கொண்டவனே !!

உன் நகைக்கும் இடம் வந்தும் உனை

வேண்டிலேன் கண்டிலேன் போற்றிலேன் புகழ்திலேன் ...

புழுவாய் பிறந்தும் புண்ணியம் ஏதும் சேர்த்திலேன் ...

நகைக்கு இடமானேன் ...

நகை கொண்ட ஆசை நீங்கிலேன் ...

*அருணாசலா*

உன் புன்னகை கொண்டே என்னை ஒரு முறை பார்த்தால்

என்னை நகைப்போர் யாவரும் துதிப்போர் அன்றோ ?💐💐💐
ravi said…
🌹🌺" On this auspicious day of Rathasaptami let us bow down to Lord Surya, pray to him and be blessed and enjoy. - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Rishi Kashyap's wife Aditi Purana Garbhavati. One day when she was serving food to her husband, someone knocked on the door, to see who she was, a Brahmin asked, "I'm hungry, give me something to eat." Aditi said, "I'll bring you two." She gave

🌺''Why did you come late and give me food? You made me indifferent. "The child growing in your womb will die," he cursed angrily.

🌺 Shocked to hear the brahmin's curse, Aditi told Kasyabar about the matter, "Don't you regret all this,

🌺 From the world of amrita we will get an indestructible son.''

🌺 Saptami fast is observed on the seventh day of Tithis as the Sun travels around the world in a chariot with seven horses.

🌺Rathasaptami 🌞 The special Rathasaptami is today, 28th day of January this year.

🌺 The sun incarnated as Aditi's son. Didi Saptami incarnated by him. Every Saptami is suitable for Surya worship. Shastra says that if you worship the sun, you will get all the wealth.

🌺 The dharma done on the day of Rathasaptami has many blessings. Businesses started on this day will flourish.

🌺 On this holy day let's bow down to Lord Surya and pray to him saying 'Om Namo Adityaya: Life, Health, Puthir Balam Dehime Sada' and get blessings and enjoy.
Let's all worship the sun and get grace.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *புனிதமான இந்த ரதசப்தமி நாளில் சூரிய பகவனை வணங்கி, அவரைப் பிரார்த்தித்து வழிபட்டு வரம்பெற்று மகிழ்வோம். - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺 ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு'' என்று கேட்க, '' இரு கொண்டுவருகிறேன்'' என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .

🌺''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்'' என கோபித்து சாபமிட்டான்.

🌺பிராமணனின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ''நீ இதற்கெல்லாம் வருந்தாதே,

🌺அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான்.

🌺ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

🌺ரதசப்தமி 🌞 சிறப்பு மிகுந்த ரதசப்தமி இந்த வருடம் ஜனவரி மாதம் 28 நாள் சனிக்கிழமையான இன்று

🌺சூரியன் அதிதிக்கு மகனாக அவதரித்தார். அவர் அவதரித்த திதி சப்தமி. ஒவ்வொரு சப்தமியுமே சூரிய வழிபாட்டுக்கு உகந்தது. சூரியனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

🌺ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும்.

🌺புனிதமான இந்த நாளில் சூரிய பகவனை வணங்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய: ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று அவரைப் பிரார்த்தித்து வழிபட்டு வரம்பெற்று மகிழ்வோம்.
அனைவரும் சூரியனை வணங்கி அருள் பெறுவோம்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
ஜடாயு பறவை உண்மையாகவே உள்ளது என்று நிரூபிக்கும் வகையில் இந்த பறவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இந்த தருணத்தில் ஹிமாலயத்தில் இருக்கும் இப்பறவை தற்சமயம் கான்பூரில் அருகில் காணப்பட்டது . நாம் திரைப்படம் மற்றும் ராமாயணம் சீரியல் பார்த்த ஜடாயு பறவை மாதிரியே உள்ளது. 15நாட்களுக்கு Vet hospital லில் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளது. ஜடாயு என்ற பறவை கற்பனை என்பதை முறியடிக்கும் விதமாக உண்மையில் இருக்கிறேன் என்று வந்திருப்பதாக ராம பக்தர்கள் எண்ணுகிறார்கள். இதைப்பற்றி நம் சானல்கள் எதிலும் வரவில்லை.🙏
ravi said…
[28/01, 10:39] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 68*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[28/01, 10:43] Jayaraman Ravilumar: अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमयैः ।
अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः ॥ ५१॥

51. Adhikanchi keli lolai akhilaagama yanthra manthra thanthra mayai,.

Athi seetham mama maanasam sasama saradrohi jeevanopayai

அதிகாஞ்சி கேலிலோலைரகிலாகமயன்த்ரதன்த்ரமயைஃ |

அதிஶீதம் மம மானஸமஸமஶரத்ரோஹிஜீவனோபாயைஃ ||51||
ravi said…
அம்பாள் காமாக்ஷிக்கு காஞ்சிபுரம் என்றால் ரொம்ப பிரியம்.

அந்த இளைய குழந்தை, பாலை, (BAALA ) அங்கே விளையாட மிகவும் விருப்பமானவள்.

அவளே மிகச் சிறந்த மந்த்ர, தந்த்ர, யந்த்ரங்களாகவும், ஸர்வ வேத சாஸ்த்ர பொருளாகவும் காமத்தை எல்லோர் மனத்திலும் புகுத்தும் மன்மதனை எதிர்ப்பவரான பரமேஸ்வரனின் ப்ராண மூச்சாகவும் உள்ளவள் காமாக்ஷி தேவி.

அவளை நினைக்கும்போதே என் மனம் ஆனந்தமாக குளிர்கிறது. 🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 470* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
இந்த நாமத்தை விட்டு நகரவே முடியவில்லை .. கட்டி போட்டு விட்டது ...
ravi said…
*197 सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-*

மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பாடல் ஒன்று இந்த நாமத்தை இன்னும் சிறப்பாக விவரிக்கின்றது ....

வானில் கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டுகிறது,

இடி இடிக்கிறது,

மழை பொழிகிறது,

வானவில் தோன்றுகிறது,

அதைப் பார்த்துப் பாடுவதுபோல் இந்தப் *பா* வை அமைத்துள்ளார் மணி வாசக பெருமான்

மேகமே,☁️☁️☁️☁️☁️

நீ முதலில் இந்தக் கடலைக் குடித்துச் சுருக்கினாய்,

பிறகு மேலே எழுந்தாய்,

உமையின் நிறத்தைப் பெற்றுத் திகழ்ந்தாய். (கருமேகம்)

அடுத்து,எங்களை ஆளும் உமையின் சின்ன இடையைப்போல் அழகிய மின்னல்களை வெட்டினாய்.

உமையின் பாதங்களில் உள்ள தங்கச் சிலம்பைப்போல் இடிச் சத்தம் செய்தாய்.

நீ வரையும் பல வண்ண வானவில்,

உமையின் அழகிய புருவத்தைப்போல் தோன்றுகிறது.

எங்களை ஆட்கொள்ளும் அந்த உமையவளை

எப்போதும் பிரியாதவன் சிவபெருமான்.

அந்தச் சிவனுடைய அன்பர்கள் கேட்பதற்கு முன்பாகவே

உமை அள்ளி அள்ளித் தருகின்ற அருளைப்போல,

நீயும் மழையாகப் பொழிகிறாய்!🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
ravi said…
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே,

கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே,

செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே,

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே

-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)
ravi said…
அடியவனான நான் அணுகி அனுபவிக்கும் அமுதமே

இமையோர் அதிபதியே

உன் திருக்கொடியாக (பகையை) அழிக்கும்/பொசுக்கும் கருடனைக் கொண்டவனே

கோலக் கனிவாய்ப் பெருமானே

செடி போல (அடர்ந்து வளரும்) பாவங்களை ஒழிக்கும் மருந்தானவனே

திருவேங்கடத்து எம்பெருமானே -

உன் திருவடியைக் காண்பதற்காக

ஒவ்வொரு நொடிப்பொழுதும்

நோன்பு எதுவும் மேற்கொள்ளாத நான், பொறுக்க மாட்டாது தவிக்கிறேனே🪷🪷🪷
ravi said…
[28/01, 13:12] Jayaraman Ravilumar: சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"
[28/01, 13:12] Jayaraman Ravilumar: லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"
ravi said…
Saturday Reflections: Tadpoles, Frogs: a New Perspective


When an acquaintance went to get an aquarium full of tadpoles, she was instructed by the Pet Store Salesman to be sure to "put a big rock right in the middle of the aquarium." He explained that "The tadpoles must have this obstacle to give them the incentive to climb up and thus split their little wiggly tails so that their legs can begin to develop. If they have no rock or obstacle to climb up on, they will never turn into frogs. They cannot learn how to hop by just swimming around in water. They must have something causing resistance to give them the incentive to leap forward”. Till this time, this acquaintance did not know that a tadpole will remain a tadpole unless it faces some obstacle or barrier that forces it to row.

Such examples from the nature, and learning through others’ experiences makes us to get a better inkling on why obstacles and barriers in life need to be looked at with different perspective(s). Perhaps the barriers are to cause us to grow. It is not so much what the object is in front of each one of us that matters as much as it is our attitude towards it. If we realise that the obstacle we are facing is really a gift that has come our way to help us grow and mature, we will be much more likely to face it in a positive manner.

View the obstacles in your path as stepping stones to help you leap forward in whatever situation you are…


Have a Saturday filled with Serendipity.

ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம்.
ravi said…
நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.
பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள்.
ravi said…
உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?
ravi said…
இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.
ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும்.
ravi said…
கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
ravi said…
ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.
ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.
ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.
‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

காமேச்வரி என்றால் காமேச்வரனையும் கூடக் காட்டி, அவனுடைய இடது மடியிலே அம்பாள் இருப்பது போல வர்ணனை இருந்தால்தான் முழுக்க ஸரி. ஆனால் சில்ப, சித்ரங்களில் அப்படிப் பண்ணுவது ரொம்பவும் அபூர்வமே! ஸ்தூலமாக அந்த மாதிரிப் பண்ணிக் கண்ணால் பார்த்தால் அம்பாளுக்கு முழு முக்யத்வமில்லாமல் பாதி ஸ்வாமிக்குப் போய்விட்டாற்போலத் தோன்றுவது காரணமாயிருக்கலாம். காஞ்சீபுரத்திலேயே அம்பாள் தான் மட்டுந்தானே தனியாயிருக்கிறாள்?
ravi said…
அதற்கு வேறே காரணமுமுண்டு என்றாலும்1 காமேச்வரன் என்று ஒருத்தனை நடு நாயகமாக உட்கார்த்தி வைத்து அவனுக்கு வாமாங்கத்தில் அம்பாள் என்றால் அவளுடைய இம்பார்டன்ஸ் தெரியாமல்தான் போகும். அதனால்தான் பொதுவாக ரவிவர்மாவின் ராஜராஜேச்வரி உள்பட, லலிதாம்பாள் பிம்பம் என்றால் அவளை மட்டும் காட்டுவதாகவே இருக்கிறது.
ravi said…
ஒரு ‘சேஞ்சு’க்குக் காமேச்வர ஸஹிதையான காமேச்வரியாக யாராவது போட்டுப் பார்க்கமாட்டோமா என்றுகூட இருக்கிறது2!  இரண்டு பேர் நெருக்கியடித்துக் கொண்டு ஒரே மாதிரியான நான்கு ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும்போது இரண்டு தநுஸ், இரண்டு பாணம் என்றெல்லாம் பார்க்கிறவர்கள் குழம்பாதபடி சில்பம் பண்ணுவது, சித்ரம் போடுவது கஷ்டந்தான். அந்தக் கஷ்டத்தை சமாளித்து அழகாகப் பண்ணிக் காட்டுவதில்தான் கலைஞன் என்கிறவனின் ஸாமர்த்யம் இருக்கிறது!
ravi said…
காமேச்வரி’ என்ற பெயரைச் சொன்னால் உடனே காமேச்வரன் நினைப்பும் வந்துவிடுகிறது! ஒருத்தியாகக் காட்டிவிட்டு அந்த பேரைச் சொன்னால் ஸரியாயில்லை என்பதால்தானோ என்னவோ காமாக்ஷி, ராஜராஜேச்வரி, லலிதாம்பா, த்ரிபுரஸுந்தரி, வடிவுடையம்மன் என்றே பெயர்களும் சொல்வதாயிருக்கிறது! ரொம்ப நுணுக்கமாக மந்த்ர சாஸ்த்ரத்தைப் பார்த்தால் ராஜராஜேச்வரிக்கு தநுர்-பாண-பாச-அங்குசங்களோடு, இன்னும் நாலு கைகளில் புஸ்தகம்-அக்ஷரமாலை-வரம்-அபயம் ஆகியவையும் உண்டு. அதோடு மார்[பு] மேலே வீணையைச் சார்த்திப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ravi said…
லலிதா த்ரிபுரஸுந்தரி இரண்டு காலையும் மடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், ராஜராஜேச்வரி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கப்போட்டுக் கொண்டிருப்பதாகவும் பாவிக்கிறது ஸம்பிரதாயம். காமேச்வரனுடைய வாமாங்கத்தில் காமேச்வரியாக உள்ளபோது [தநுர்-பாண-பாச-அங்குசங்களை தரித்த] நாலே கை, ஆனால் இதே போல வலது காலை மடித்து, இடதைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருப்பதாக பாவிக்கிறது. ஸ்வாமி வலது காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு இடதை மடித்துக் கொண்டிருப்பார். மடித்துக் கொண்ட மடியில் — இரண்டு ‘மடி!’ — அந்த மடியில்தான் அம்பாள் உட்கார்ந்திருப்பது.
த்யான ச்லோகம் என்று பார்த்தால் லலிதா [மஹா] த்ரிபுரஸுந்தரி, ராஜராஜேச்வரி இரண்டு பேரையுமே பதியின் வாமாங்கத்தில் [இருப்பதாகச்] சொல்லாமல், தனி மூர்த்தியாகத்தான் சொல்லியிருக்கிறது. மந்த்ரத்தின் அதி தேவதை என்று வைத்து நிறைய நாழி த்யானம், ஜபம் என்று மனஸை ஒருமுகப்படுத்த வேண்டியபோது இரட்டை மூர்த்தியாகச் சொல்வதே ‘இரண்டுமுக’ப் படுத்துகிறதாகத்தானே ஆகும்?
அம்பாளை மாத்திரம் ஏகமூர்த்தியாகச் சொல்வதற்கு ஸெளந்தர்ய லஹரியிலேயே ஆசார்யாள் யுக்தியாக நியாயங்காட்டி ஒரு ச்லோகம் [23] கொடுத்திருக்கிறார். ஒரே மூர்த்தியான அர்த்த நாரீச்வர ரூபத்தில் பதியின் இடது பக்கத்தைத் திருடிக் கொண்டது மட்டும் அம்பாளுக்குத் திருப்தி தரவில்லையாம். அதனால் அவருடைய வலது பக்கத்தையும் அவளே கவர்ந்து கொண்டு விடுகிறாளாம். அதனால்தான் ஏக மூர்த்தியாகத் தன்னுடையதான அருணச் சிவப்பு நிறமாகவே இருந்து கொண்டு, ஆனால் ஈச்வர லக்ஷணமாக நினைக்கப்படும் லலாட நேத்ரம் [நெற்றிக்கண்], சந்த்ரகலை ஆகியவற்றையும் தரித்துக்கொண்டு காட்சி கொடுக்கிறாளாம்!
அம்பாளுடைய உபாஸனா மார்க்கங்களில் ஒன்றில் (உத்தர கௌலம் என்பது), ‘ஈச்வரனுக்குத்தான் ஸ்வதாவாக [ஸ்வயமாக] ரூபம் கிடையாதே! கார்யமும் கிடையாதே! அவை அம்பாள் கொடுத்துத்தானே அவனுக்கு ஏற்பட்டவை? ஆகையால் அவளுக்கு வேறாக அவன் என்று பூஜை பண்ண ரூபம் ஏது? பூஜையை ஏற்றுக்கொண்டு அநுக்ரஹம் என்ற கார்யம் பண்ணவுந்தான் ஆஸாமிக்கு சக்தி ஏது? அதனால் அவனைச் சேர்க்கவே வேண்டாம். ரூபமும் கார்யமும் இருக்கிற அவளுக்கு மட்டுமே பூஜை பண்ணலாம்’ என்று வைத்திருக்கிறது.
இப்படிப் பலவித அபிப்ராயங்கள் இருப்பதை அநுஸரித்தே த்யான ச்லோகத்தின் ஸ்தானத்தில் ஆசார்யாள் ஒன்று பண்ணும்போது அம்பாளை மாத்திரம் (காமேச்வர ஸஹிதையாக இல்லாமல்) வர்ணித்துப் பண்ணியிருக்கிறார்.
சிவ-சக்தி என்று இரண்டு மூர்த்தியாகத்தான் ஸ்தோத்ரத்தை ஆரம்பித்தார். ஆனாலும் சிவனின் சக்தியாக இருக்கப்பட்ட ஒரு மூர்த்தியை ஸ்துதிப்பதுதான் லக்ஷ்யம். ஆகையால், அம்மா, அப்பா என்று ஜோடியாகச் சொல்லி ஆரம்பிக்கணும், அவளுடைய ஸெளமாங்கல்யம் தெரியும்படி பதியைச் சொல்லி ஆரம்பிக்கணும், அவளுடைய பாதிவ்ரத்யம் தெரியும்படி பதியை முதலில் சொல்லி அப்புறம் அவளைச் சொல்லணும் என்றெல்லாம் நினைத்து முதல் ச்லோகம் செய்தாலும், அப்புறம் ‘இம்பார்டன்’ஸை அவர் ‘ஷேர்’ பண்ணிக் கொள்ள விடப்படாது என்று அவளை மாத்திரம் வர்ணித்து ச்லோகம் கொடுத்திருக்கிறார் — சிவ, சக்தி என்ற இரண்டு பேராயில்லாமல், சிவசக்தியான ஒருவரை மட்டும் சொல்லி.
ravi said…
Importance of Siblings in Families

We only realise that brothers & sisters are the most precious gifts left behind by our parents when we are old.

When we were small, brothers & sisters were our closest playmates.
Everyday, we were chasing & frolicking noisily, & spending a good childhood time together.

When grown up, we started our own families, leading our own separate lives & usually rarely meet.
Our parents were the only link which connected us all.

Waiting till we slowly turn old, our parents having left us already & the number of relatives around us becoming less & less, only then do we gradually realise the value of affection.

I recently saw a video on the internet, in which a 101 year old elder brother went all the way to visit his faraway 96 year old younger sister. After a brief reunion when the two were about to separate, the younger sister chased after the car & passed 200 yuan to her brother, asking him to buy something nice to eat. Before she could finish uttering her words, both of them were bursting in tears.

There were netizens who commented that it’s really very fortunate to still have brothers & sisters at such an old age.

Yes, only after we are old do we realise how important it is to have someone related to us by blood, in this world.

When you are old & your parents have both gone, your brothers & sisters are the closest people in this world.

Friends can go away, children will grow up but except for your partner by your side, there are only your brothers & sisters who can keep you company enough to finish the later half of your life.

It is a type of great happiness for brothers & sisters to still be able to gather together when we are old.

With them by our side in company, we will not be lack of warmth. With them by our side in company, we will not be afraid of any difficulties. Reaching old age, please be kind to your brothers & sisters.

No matter what may have been unpleasant in the past, brothers & sisters should be more tolerant & forgiving to each other.

There’s no knot which cannot be untied between brothers & sisters. No shield which cannot be removed.

Brothers & sisters should never go over old accounts nor hold old grudges. With a bit more mutual dependence & mutual cherishing, relationship will get better & better bcos they are the most precious gifts our parents have left behind in this world.

🪷🪷🪷
ravi said…
வேண்டத் தக்கது அறிவோய் நீ,

வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ

வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய்,

யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,

அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

*நூல்: திருவாசகம்* *(குழைத்த பத்து #6)*

*பாடியவர்: மாணிக்கவாசகர்*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*இறைவா* ,

எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும்.

அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.

பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள்.

ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை.

எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.

நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல்.

நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.

’ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, நீயாக எதையாவது கேள்’ என்கிறாயா?

நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான் எதைக் கேட்பேன்?

அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?🪷🪷🪷
ravi said…
சமீபத்தில் சிவசமுத்ரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தோம்.

அங்கே ஒரு சிறு கோயில். சிவபெருமான் சன்னிதி.

மேலே ஒரு மீனின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

அதைச் சுட்டிக்காட்டிய அர்ச்சகர் ‘இந்த மீனுக்குக் கீழே நின்று நீங்கள் எதை வேண்டினாலும் அப்படியே கிடைக்கும், வேண்டிக்கொள்ளுங்கள்’ என்றார்.

நாங்களும் நின்றோம்.

ஆனால் அந்த விநாடியில் எதையும் கேட்கத் தோன்றவில்லை.

எத்தனையோ விருப்பங்கள் இருந்தும், ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை.

‘எங்களுக்கு எது சரி என்று நினைக்கிறாயோ அதைச் செய்’ என்றுதான் சொல்லத் தோன்றியது

மாணிக்கவாசகரின் இந்த அற்புதமான பாடலைப் படித்தவுடன் அந்த மீன் பொம்மைதான் ஞாபகம் வந்தது.

நாம் என்ன வேண்டவேண்டும் என்று தீர்மானிக்கிறவன் இறைவன்.

நாம் சரியானதைக் கேட்டால் உடனே தந்துவிடுவானாம்,

அதுவும் குறை வைக்காமல் முழுசாகத் தந்துவிடுவானாம்

ஒருவேளை அவன் விரும்பாத ஒன்றை நாம் கேட்டால்?

இறைவன் தரமாட்டானா? அவனால் முடியாதா?
முடியும்.

ஆனால் தரமாட்டான். பாலோ சாப்பாடோ கேட்கும் குழந்தைக்கு உடனே தரும் தாய், சாக்லெட் கேட்டால் மறுப்பதுபோலதான், ஃப்ரிட்ஜுக்குள் டப்பா நிறைய சாக்லெட் இருந்தாலும்கூட அவள் மறுப்பது ஏன்?

அதே லாஜிக் இங்கேயும் 🙂

அயன் (பிரமன்), மால் (திருமால் / விஷ்ணு) ஆகியோருக்கு அரியோய் நீ என்ற வரியில் ஒரு பிரபலமான கதை இருக்கிறது.
கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒருவேளை தெரியாது என்றால் சுருக்கமாக இங்கே:

பிரமனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர் என்கிற சர்ச்சை, அதைத் தீர்த்துவைப்பதற்காகச் சிவன் ஒளிப்பிழம்பாகிறார்,

அவரது முடியைத் தேடிப் பிரமன் அன்னப்பறவையாகப் பறக்கிறார்,

காலடியைத் தேடித் திருமால் பன்றி உருவெடுத்துக் கீழே செல்கிறார்,

ஆனால் இருவருக்கும் சிவனின் அடி, முடி தென்படவில்லை.

கர்வம் கலைகிறது

இப்படி பிரமனுக்கும் திருமாலுக்கும் தண்ணி காட்டிய சிவன்,

இங்கே மாணிக்கவாசகரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவனே விரும்பி வருகிறான். *பக்தர் பெருமை!*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
சமீபத்தில் சிவசமுத்ரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தோம்.

அங்கே ஒரு சிறு கோயில். சிவபெருமான் சன்னிதி.

மேலே ஒரு மீனின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

அதைச் சுட்டிக்காட்டிய அர்ச்சகர் ‘இந்த மீனுக்குக் கீழே நின்று நீங்கள் எதை வேண்டினாலும் அப்படியே கிடைக்கும், வேண்டிக்கொள்ளுங்கள்’ என்றார்.

நாங்களும் நின்றோம்.

ஆனால் அந்த விநாடியில் எதையும் கேட்கத் தோன்றவில்லை.

எத்தனையோ விருப்பங்கள் இருந்தும், ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை.

‘எங்களுக்கு எது சரி என்று நினைக்கிறாயோ அதைச் செய்’ என்றுதான் சொல்லத் தோன்றியது

மாணிக்கவாசகரின் இந்த அற்புதமான பாடலைப் படித்தவுடன் அந்த மீன் பொம்மைதான் ஞாபகம் வந்தது.

நாம் என்ன வேண்டவேண்டும் என்று தீர்மானிக்கிறவன் இறைவன்.

நாம் சரியானதைக் கேட்டால் உடனே தந்துவிடுவானாம்,

அதுவும் குறை வைக்காமல் முழுசாகத் தந்துவிடுவானாம்

ஒருவேளை அவன் விரும்பாத ஒன்றை நாம் கேட்டால்?

இறைவன் தரமாட்டானா? அவனால் முடியாதா?
முடியும்.

ஆனால் தரமாட்டான். பாலோ சாப்பாடோ கேட்கும் குழந்தைக்கு உடனே தரும் தாய், சாக்லெட் கேட்டால் மறுப்பதுபோலதான், ஃப்ரிட்ஜுக்குள் டப்பா நிறைய சாக்லெட் இருந்தாலும்கூட அவள் மறுப்பது ஏன்?

அதே லாஜிக் இங்கேயும் 🙂

அயன் (பிரமன்), மால் (திருமால் / விஷ்ணு) ஆகியோருக்கு அரியோய் நீ என்ற வரியில் ஒரு பிரபலமான கதை இருக்கிறது.
கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒருவேளை தெரியாது என்றால் சுருக்கமாக இங்கே:

பிரமனுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவர் என்கிற சர்ச்சை, அதைத் தீர்த்துவைப்பதற்காகச் சிவன் ஒளிப்பிழம்பாகிறார்,

அவரது முடியைத் தேடிப் பிரமன் அன்னப்பறவையாகப் பறக்கிறார்,

காலடியைத் தேடித் திருமால் பன்றி உருவெடுத்துக் கீழே செல்கிறார்,

ஆனால் இருவருக்கும் சிவனின் அடி, முடி தென்படவில்லை.

கர்வம் கலைகிறது

இப்படி பிரமனுக்கும் திருமாலுக்கும் தண்ணி காட்டிய சிவன்,

இங்கே மாணிக்கவாசகரின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவனே விரும்பி வருகிறான். *பக்தர் பெருமை!*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
[28/01, 17:33] Jayaraman Ravilumar: ஸ்லோகம்:

अङ्कोलं निजबीजसन्तति:, अयस्कान्तोपलं सूचिका,

साध्वी नैजविभुं, लता क्षितिरुहं, सिन्धुः सरिद्वल्लभम् ।

प्राप्नोतीह यथा तथा, पशुपतेः पादारविन्दद्वयं,

चेतोवृत्तिरुपेत्य तिष्ठति सदा, सा भक्तिरित्युच्यते ॥

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததிரயஸ்காந்தோபலம்ʼ

ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ

லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் .

ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம்ʼ
சேதோவ்ருʼத்திருபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே

இது சிவானந்தலஹரியில் 61வது ஸ்லோகம்,
பக்தினுடைய லக்ஷணம்.
[28/01, 17:35] Jayaraman Ravilumar: *ஐயஸ்காந்தோபலம்* அப்படினா காந்த கல், அந்த காந்த கல்,

*ஸூசிகானா* ஊசி, எப்படி காந்த கல்லை போய்சேருகிறதோ

*ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்* பதிவ்ரதையான ஒரு ஸ்த்ரீ, எப்படி தன்னுடைய கணவனிடத்திலேயே மனஸை வைத்துஇருப்பாளோ, இந்த இடத்தில் ‘ *விபு* ⁴ம்’ங்கறதுக்கு எங்கும் நிறைந்ததுனு அர்த்தம்.

பெரியவா சொல்றா, ஒரு பதிவ்ரதையான ஸ்த்ரீக்கு எங்கும் எதை பார்த்தாலும் தன் கணவனுடைய ஞாபகமே வரும். அந்த மாதிரி, அங்கேயே மனசு போயிண்டே இருக்கு
ravi said…
க்ஷிதிருஹம் – அப்படினா மரம், லதான கொடி. ஒரு கொடியானது எப்படி மரத்தை பற்றி கொள்கிறதோ, சுற்றி கொள்கிறதோ

ஸிந்து⁴꞉ ஸரித்³வல்லப⁴ம் ஒரு நதியானது சமுத்திரத்தை போய் அடைகிறதோ, இப்படி

ப்ராப்னோதீ நாடி அடைகிறதோ

ததா² அப்படி

சேதோவ்ருʼத்தி: என் மனத்தினுடைய வ்ருʼத்தியானது, என் மனத்தினுடைய நாட்டமானது
பஶுபதே꞉ பாதா³ரவிந்த³த்³வயம் பசுபத்தினுடைய இரு பாதாரவிந்தங்களை, திருவடி தாமரைகளை

உபேத்ய அடைந்து

ஸதா³ திஷ்ட²தி அங்கேயே நிலைபெற்று இருக்கணும்.
ravi said…
[28/01, 17:26] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 72 started on 6th nov

*பாடல் 24* ...💐💐💐
[28/01, 17:26] Jayaraman Ravilumar: *பாடல் 24 ... கூர்வேல் விழி*

(மங்கையர் மோகம் கெட, திருவருள் கூட)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன்,

அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர் வேல, புரந்தர பூபதியே.
ravi said…
*சூர் வேரொடு ...* சூரபத்மன் குலம் முழுவதையும்,

*குன்று தொளைத்த ...* அவனுக்கு காவலாய் இருந்த கிரவுஞ்ச
மலையை ஊடுருவிச் சென்ற

*நெடும் போர் வேல ...*

கொடிய கொலை புரியும் வேலாயுதத்தை
திருக்கையில் தாங்கிக் கொண்டிருப்பவனே,

*புரந்தர பூபதியே ...*

இந்திரனுடைய நகரத்திற்கு அரசனே,

*கூர் வேல் விழி ...* கூரிய வேல் போன்ற கண்களை உடைய,

*மங்கையர் கொங்கையிலே* ... மாதர்களுடைய தனபாரங்களை,

*சேர்வேன்* ... சேர விருப்பங்கொண்ட அடியேன்,

*அருள் சேரவும் எண்ணுமதோ ...*

உனது திரு அருள் பேற்றை
பெற நான் நினைக்க மாட்டேனோ?
ravi said…
[28/01, 17:14] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
*அச்யுத* : |

வ்ருஷாகபிரமேயாத்மா
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[28/01, 17:14] Jayaraman Ravilumar: *101 அச்யுத:*👌👌👌

பக்தர்களை நழுவ விடாமல் பாதுகாப்பு தருபவர் 🙏🙏🙏
ravi said…
இதில் என்ன விசேஷம் உள்ளது ...ஒரு சிஷ்யர் கேட்டே விட்டார்

பராசர பட்டர் சொன்னார் ..இந்த சம்பவத்தில் சரணாகதி தத்துவமே அடங்கி உள்ளது ... முயலுக்கு சரணாகதி பற்றி ஒன்றும் தெரியாது வேடனுக்கும் பழக்கமில்லை ... முயல் வேண்டி நின்றது வேடன் புரிந்து கொண்டான் ... இனி நீ தான் என் கதி எனும் பாவனை ... சரி என்னை சரணடைந்து விட்டாய் உன்னை காப்பாற்றுகிறேன் எனும் வேடன் செய்த செயல் ...

இப்படித்தான் என் அரங்கனும் .. நீ தான் கதி என்று அவன் தாள் பற்றிக் கொண்டால் அவன் எல்லா பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்கிறான் ...

அரங்கன் சயனம் பார்த்திருக்கிறீர்களா சிரசில் கீரிடம் அதை தொட்டப்படி ஒரு கரம் ... நான் தான் பெரியவன் என்பதை காட்டுகிறது இன்னொரு கரம் அவன் திருவடியை காட்டுகிறது .. என்னை சரண் புகுந்து கொள் உனை காப்பது என் கடமை.. என்கிறான் .

அசந்து போயினர் அவர் சிஷ்யர்கள் ... நாமும் தானே

*ச்யுத* என்றால் நழுவ விடுவது *அச்யுத* என்றால் நழுவ விடாதது ..சரண் அடையும் பக்தர்களை நழுவ விடாதவன் அச்சுதன் 101 வது திருநாமம் 🙌🙌🙌🙌
ravi said…
*முதலைக்கு அருள்*

*ஆலங்குடி பெரியவா* என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றைச் சுற்றியும் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீ மத் பாகவதமே அவரது உயிர்‌மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீ மத் பாகவதம்‌ சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து அனவரதமும் ஸ்ரீ மத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம் வந்து,

ravi said…
நீங்க ரொம்ப அழகா பாகவதம்‌சொல்றேள். திகம்பரரா இருந்துண்டு சொல்றதால‌ பொது மக்களும்‌, பெண்களும் வந்து கேக்கணும்னு ஆசையிருந்தாலும், சங்கடப்படறா.

என்றதும்,

அப்டின்னா சந்நியாசம்‌ வாங்கிக்கறேன். எல்லாரும் பாகவதம்‌ கேக்கணும்‌ அவ்ளோதான்
என்று சொல்லி சந்நியாசம்‌ வாங்கிக்கொண்டுவிட்டார்.
ஒரு சமயம்‌ ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம்‌ சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட நாஸ்திகனான ஒருவன்,

முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னா‌ விட்டுடுமாம். என்ன கதை விடறார் இவர் என்று நினைத்தான்.

ravi said…
பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை ஸ்நானம் செய்யப்போவார். ஒரு நாள் அவரை சோதனை செய்ய வேண்டி, அந்த துஷ்டன், ஊர்க்குளத்தில் ஒரு குட்டி முதலையைக் கொண்டு வந்து விட்டுவிட்டான்.

சரியாக பெரியவா ஸ்நானம்‌ செய்யும் படித்துறையில் அவன்‌ முதலையை விடவும், அவர் ஸ்நானத்திற்கு வரவும்‌ சரியாக இருந்தது. பெரியவா ப்ரார்த்தனை செய்து, நீரைப் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு நீரில் காலை வைத்ததும் முதலை அவரது காலைக் கவ்வியது.
ravi said…
குருதியாறு ஓட ஆரம்பித்தது. யார் காலையோ முதலை கவ்வியதுபோல்
பெரியவா, பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த துஷ்டன் அவரருகில் வந்தான்.

பெரியவரே, அன்று உபன்யாசத்தில் சொன்னீங்களே. ஸ்லோகம்‌ சொன்னா முதலை விட்டுடும்னு. சொல்றதுதானே. மறந்துபோச்சா?

என்று கேலி செய்தான்.
*காலை‌ முதலை கல்விக் கொண்டிருக்கும் போதும் கதறாமல் அவர் வேடிக்கை பார்ப்பது அவன் புத்திக்கு எட்டவில்லை.*

அப்போதுதான் பெரியவருக்குப் புரிந்தது, அவன் சோதனை செய்ய வந்தவன்‌ என்று.

ஓ, சொல்றேனே‌ என்று கூறி

ஏவம் வ்யவஸிதா புத்த்யா ஸமாதாய மனோஹ்ருதி|
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்ஜன்மனி அனுஸிக்ஷிதம் ||

என்று ஸ்ரீ மத்பாகவதத்தில் அஷ்டமஸ்கந்தம், மூன்றாவது அத்யாயத்தில் வரும் கஜேந்திர ஸ்துதியை கானம் செய்ய ஆரம்பித்தார்.

சரியாக
சந்தோமயேன கருடேன ஸமுஹ்யமான:
சக்ராயுதோப்யகமதாசு யதோ கஜேந்த்ர:||
அதாவது,

பகவானான ஹரி கருடன் மீதேறி விரைந்து வந்து, முதலையின் மீது சக்கரத்தை ஏவி கஜேந்திரனைக் காத்தான்
என்ற வரியை பெரியவா சொல்லும்போது அவரது காலைப் பிடித்திருந்த முதலை திடீரென வெட்டுப் பட்டது போல் துடிதுடித்து இறந்தது.

பார்த்துக்கொண்டேயிருந்த அந்த நாஸ்தீகனுக்கு பயம் வந்துவிட்டது.

அவரது காலைப் பிடித்துக்கொண்டான்.

மன்னிச்சிடுங்க ஸ்வாமி, தெரியாம தப்பு பண்ணிட்டேன். பெரியவங்களை சோதிக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியல.
என்று கதறி அழுதான்.

பெரியவா என்ன செய்தார்?
தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டுவிட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா.

நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா சரிபாக்கறது ஒரு தப்பா. அழாத. என்றார்.

இப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா? முதலை கடித்து காலில் குருதி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, எவன் அதற்குக் காரணமோ அவனிடம் இவ்வளவு கருணையோடு ஒருவர் பேசமுடியுமா?

சாதுக்களால் மட்டுமே இயன்ற விஷயம் அது.

அவன் அழுதுகொண்டே சொன்னான்.

நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வரதைத் தாங்கமுடியாது..

பெரியவா அவனைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டுச் சொன்னார்,

நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேறன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலைப் படாதே

நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களை இந்த உடலின் வழியாத்தானே பாக்கறேன். என்னை நீங்க மன்னிச்சுட்டது நிஜம்தான்னா, என்னுடைய சமாதானத்துக்காகவது வைத்தியம் பண்ணிக்கணும்.

சரி, உனக்காக வைத்தியம் பண்ணுவோம். ஆனா, நான் சொல்ற வைத்தியந்தான். சரியா?

சரி.

அதற்குள் இன்னும் சிலர் வந்துவிட்டனர்.
பெரியவா சில மூலிகைகளின் பேரைச் சொல்லி,
அதையெல்லாம் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துண்டு வா. கொதிக்கற எண்ணெய்யை இந்தப் புண்ணில் விட்டா சீக்கிரம் சரியாகும்.

அவர் வாயால் சொன்னதற்கே, கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டாற்போல் துடித்துப் போனார்கள் அனைவரும்.
முதலை கடித்து ரணகளமாயிருக்கும் காலில் கொதிக்கும் எண்ணெய்யை விடுவதா?

பெரியவா? இதென்ன முரட்டு வைத்தியம்?

இதைப் பண்றதா இருந்தா பண்ணுங்கோ. இல்லாட்டா வேற வைத்தியம் வேண்டாம்.

அத்தனை பேரும் உறைந்துபோயிருக்க,
மூலிகையையும் எண்ணெயையும் கொண்டுவரச் சொல்லி, தானே காய்ச்சி, அதைக் கொதிக்க கொதிக்க தன் காலில் சிரித்த முகத்துடன் தானே விட்டுக்கொண்டார் ஆலங்குடி பெரியவா.

அவரது காலில் புண்ணும் வெகு சீக்கிரமாக குணமாகிவிட்டது.

சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்த ஆலங்குடி பெரியவரின் சமாதி முடிகொண்டானில் உள்ளது. இவர் முடிகொண்டான் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்.

�� �� ��️ ��
-ஜெகத்குரு பீடாதிபதி
பரமாச்சாரியார்
காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஹர ஹர ஹர சங்கரா!
ஜெய ஜெய ஜெய சங்கரா!
சிவ சிவ சிவ சங்கரா!

*குருவே சரணம்*
*குருவே துணை*
*குருவே போற்றி!.*
Oldest Older 201 – 359 of 359

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை