ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 37 -அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ --பதிவு 44

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 44

அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ 



இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்சரிவை அலங்கரித்தவள்  என்று பார்த்தோம் .. அருணா எனும் அடை மொழி அடிக்கடி வருகிறது .. அதை இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம் இன்று

சிந்தூ அருண விக்ரஹாம்


இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியான ஸ்லோகத்தில் வருகிறது என்று முன்பே பார்த்தோம்  .

சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.

இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியதால் உண்டானது. 

அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.

அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.

ஏன் உருவத்தோடு தோன்றினாள்.

அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.

ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? 

அவள் எப்படியிருப்பாள் ? " "தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "* " என்கிறது துர்கா ஸூக்தம்.



அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.🔥

37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; =

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும்.?? 

மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"

அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் 

நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.

அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்"என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும்  சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."

*ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்""* 

தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.

ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்  ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா" 
இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள்.  என்று சொல்கிறார் ..

அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். 

இதன் அர்த்தம் என்ன. 

நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் *V(நீலீ)* ஆரம்பித்து சிகப்பில் *R* முடிக்கிறோம் 

பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
======================================================================


Comments

ravi said…
03.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 25)

Sanskrit Version:

भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति।।1.25।।

English Version:

Bhishma Drona pramukhatah:
sarveshaam cha mahI kshitaam |

uvaacha paarTha pashya
ethaan samavetaankurUniti ||

Shloka Meaning

The sarathy placed the divine chariot in between the competing armies and
bring the presence of Bhishma and Dronacharya in front of Arjuna's eyes.
A lot of other kings from other kingdoms have come to support the Kaurava cause.
They are also in the eyeline".

Jai Shri Krishna ��
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் பல வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது. முக்கியமாக ஸ்ரீ வித்யா என்கிற தேவி உபாஸனா மார்க்கத்தில் சொல்கிறபோது, அவள் அமிருத சாகரத்தின் மத்தியில், மணித்வீபம் என்கிற மணிமயமான தீவில் இருப்பதாகச் சொல்கிறோம். மணித்தீவில் பல கோட்டைகள் உத்தியான வனங்களுக்குள், சிந்தாமணிகளயை இழைத்துச் செய்த கிருகத்துக்குள் இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், ஸதாசிவன் இவர்கள் நாலு கால்களாகவும், உட்காருமிடமாகவும் அமைந்து உருவான மஞ்சத்தின்மேல், பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது. அவள் இருக்கும் இடத்தை ஸ்ரீபுரம் என்று கூறியிருக்கிறது. அமிருத ஸாகரத்தில் இருப்பதாகச் சொல்கிற மாதிரியே ஸ்வர்ணமயமான மேருசிகரத்தில் இந்த ஸ்ரீபுரம் இருப்பதாகவும் சொல்வதுண்டு.

ravi said…
04.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 26)

Sanskrit Version:

तत्रापश्यत्स्थितान्पार्थः पितृ़नथ पितामहान्।
आचार्यान्मातुलान्भ्रातृ़न्पुत्रान्पौत्रान्सखींस्तथा।।1.26।।

English Version:

tatrA apashyat sThitaan pArtah:
piTrUn aTha pitamahaan |
aachaaryan maatulaan bhraatrUn
putraan pautraann sakhIn taTha ||


Shloka Meaning

After Krishna placed the ratha at a convenient place for Arjuna to have a survey of the rival army, whom all did Arjuna see amongst those present?

Additional details:

He saw fathers (father is called as pitha) and grandfathers (grand father is called as pithamaha).
He saw teachers (acharyah means one who teaches), maternal uncles (maatulah means maternal uncle,
also called as thaai maaman in tamizh) and brothers (bhraata means brother).
He also saw sons (putra means son), grand son (pautra means grand son on the male lineage),
friends / comrades (sakhaa means friend).

Jai Shri Krishna 🌺
ravi said…
03.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 25)

Sanskrit Version:

भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति।।1.25।।

English Version:

Bhishma Drona pramukhatah:
sarveshaam cha mahI kshitaam |

uvaacha paarTha pashya
ethaan samavetaankurUniti ||

Shloka Meaning

The sarathy placed the divine chariot in between the competing armies and
bring the presence of Bhishma and Dronacharya in front of Arjuna's eyes.
A lot of other kings from other kingdoms have come to support the Kaurava cause.
They are also in the eyeline".

Jai Shri Krishna 🌺
ravi said…
*❖ 103 அக்ஞா சக்ராந்தராலஸ்தா =* ஆக்ஞா சக்கரத்தின் நடுவிலிருப்பவள் ( ஆக்ஞா சக்கரம் புருவ மத்தியின் பின் நிலைகொண்டிருப்பது)
ravi said…
*அம்மா*

புருவத்தின் மத்தியில் பூக்கோலம் போட்டே பூபாளம் பாடுகிறாய்

இருண்ட புருவத்தில் மருண்ட மான்களை மேய விடுகிறாய்

அரண்ட என் நெஞ்சில் ஆலாபணம் செய்கின்றாய்

உருண்ட உன் விழி கொண்டு புவனம் தனை பூக்க வைக்கின்றாய் ...

எழுந்த கேள்விக்கு விடையாய் விடை ஏறி வருகின்றாய் ..

படை இன்றி சடை கொண்டவன் தனை வென்று உன் வசம் கொண்டாய் ...

காமனை எரித்தவன் மீதே காதல் தீ வைத்தாய் ...

கற்பகமே உனை அன்றி மற்றோர் தெய்வம் உண்டோ ...

கண் மூடி நின்றாலும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றே ஆனாலும்

உருகி ஓடி வருவது நீ அன்றோ 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

60 –
நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ
மோசம் செயாது அருள் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

நேசம் இன்றி இருந்தேன் ... பாசம் அற்று கிடந்தேன் ...

உன் வாசம் நெஞ்சில் வந்த பின் வாசம் கொண்டு மலர்ந்தேன் உன் வசம் வந்து மகிழ்ந்தேன் ...

ஆசை காட்டி மோசம் செய்வாயோ *அருணாசலா* ...

உன் 63 திருவிளையாடல் தனில் என்னுடன் விளையாடுவதும் ஒரு திருவிளையாடலோ *அருணாசலா* ...

ஏற்றம் தருவேன் என்றே ஒரு மாற்றம் தந்தாய் ..

ஆனந்தம் என்னவென்றே உன் ஆடல் கொண்டு புரிய வைத்தாய் ..

எல்லாம் தந்தபின் இது மாயை என்று சொல்வது முறையோ *அருணாசலா*

உனை கண்டதும் உன் வசம் எனை நான் இழந்ததும் மாயை என்றாகி விட்டால்

மண்ணில் புதையட்டும் என் பூத உடல் ...

உன் கணங்களில் ஒன்றாகட்டும் உரு தெரியாமல் ...

நிஜம் என்று சொல்லி என் நிழலை வெட்டி விடு *அருணாசலா* 🪷🪷🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 477* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*201 सद्गतिप्रदा - ஸத்கதிப்ரதா --*

நல்வழி காட்டுபவள் . ''உலக பந்தங்களில் சிக்காதே.

முள் குத்தும். இப்படிப்போ''

என்று வழிகாட்டு பவள்.

தாயல்லவா?

அவள் காட்டும் பாதையில் சென்றால் பிரம்மத்தை அடையலாம்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 73*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
पञ्चदशवर्णरूपं कंचन काञ्चीविहारधौरेयम् ।

पञ्चशरीयं शम्भोर्वञ्चनवैदग्ध्यमूलमवलम्बे ॥ ५८॥

58. Pancha dasa varna roopaam kanchana Kaanchi vihara dhoureyam,

Pancha sareeyam SAmbho vanchana vaidakdhya moolam avalambe

பஞ்சதஶவர்ணரூபம் கம்சன காஞ்சீவிஹாரதௌரேயம் |

பஞ்சஶரீயம் ஶம்போர்வஞ்சனவைதக்த்யமூலமவலம்பே ||58||
ravi said…
அம்பாளுக்கு பஞ்சதசாக்ஷரி என்று ஒரு நாமம்.

லலிதா சஹஸ்ரநாமத்திலும் வரும்.

காஞ்சிக்ஷேத்ரத்தில் லீலைகள் புரிபவள்.

மன்மதனை விட சிறந்த காமரூபிணியாக காமேஸ்வரனை தன் வயப்படுத்திய சாமர்த்திய சாலி.

அம்பா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

---நம்மாழ்வார் (திருவாய்மொழி)
ravi said…
உன்னை விட்டு பிரிய மட்டேன்
ஒரு நொடியும்"

என்று
தாமரை மலரில் அவதரித்த திருமகள் ஆனவள்

தங்கி இருக்கும் திருமார்பை உடையவனே!

ஒப்பில்லா பெருமை வாய்ந்தவனே!
நாகலோகம்,பூவுலகம், வானுலகு என்ற மூவுலகங்களின் நாயகனே!

என்னை ஆள்வானே -

நிகரற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களின்
விரும்பும் திருவேங்கடத்தானே -

பேரன்புக்கு பாத்திரமான, திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே!

தஞ்சம் புக (வேறு) இடம் ஒன்றுமில்லாமல்
அடியேன் -

உனது திருவடியின் கீழே
அமர்ந்து புகுந்தேனே -
ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை."..*

*_✍️ 04, Saturday, Feb., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿'உங்களை நீங்களே நேசியுங்கள்..''*


*♻️நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...*

*♻️ஒவ்வொருவரும் அவரவர் தனித்தன்மையில் அழகுடன் மிளிர்வீர்கள். மிக முக்கியமாக பிறரைப் பார்த்து அவரின் தோற்றத்தையும் உங்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.*

*♻️உங்களை நீங்களே உற்சாகம் கொள்ளும் வாசகங்களையோ அல்லது உங்கள் இலக்கு என்னவோ அதனைஅடைந்தே தீருவேன்,*

*♻️அதற்கான சிறு முயற்சியை, உழைப்பை இன்றில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன் என்று உறுதி மொழி எடுங்கள்.*

*♻️இலக்கை நிர்ணயித்தால் மட்டும் போதாது அதில் வெற்றி பெறுவேன் என்று நம்ப வேண்டும்.*

*♻️எப்போதும் வெளியிலிருந்து ஒருவரால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.*

*♻️உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கைகளில் இருக்க வேண்டும். இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.*

*♻️இயல்பாகவே மகிழ்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.*

*♻️மற்றவர்களை விட உங்களை நீங்களே நேசியுங்கள். தோல்வியடைந்தாலோ அல்லது ஏதேனும் தவறு செய்தாலோ அதையே நினைத்து உங்களை நீங்களே வெறுத்து விடாதீர்கள்.*

*♻️உங்களிடம் குறைகள் இருந்தாலும், அதனையே நினைத்துக் கொண்டிருக்காமல் உங்கள் குறைகளை எப்படி மீட்டெடுப்பது என்று யோசியுங்கள்.*

*♻️உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கு இல்லை.நிராகரித்தவருக்கே என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்..*

*♻️மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்கு உள்ளேயே தேடுங்கள்.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நாம் எல்லாரும் ஒரு அங்கீகாரத்திற்காக, ஒரு பாரட்டிற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.*

*⚽இன்னொருவர் உங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்காமல் உங்களை நீங்களே பாராட்டுங்கள்.*

*🏵️இன்று நீங்கள் சமுதாயத்தில் ஒரு முக்கியமானவராக இருப்பதற்குக் காரணமே உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் காரணமேயொழிய வேறு எதும் காரணமில்லை..*

*⚽உங்கள் கண் முன்னே தெரிவது எல்லாம் வெற்றிப் படிக்கட்டுகளாக இருக்கட்டும்,*

*🏵️வெற்றிப் படிகளில் பயணியுங்கள்.. மற்றவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழுங்கள்..*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

பசுவைப் போல சாந்தமாக இருந்து விட்டுப் போகத் தான் ஆசை..

ஆனால் நரிகளுக்கு மத்தியில் தான் வாழ்கின்றோம் என்பதை உணரும் போது,

கர்ஜனை செய்யாமல் கடந்து செல்ல முடிவதில்லை!!

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…

பழனிக் கடவுள் துணை -04.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-49

மூலம்:

ஏனம் தடிந்தான், இருங்கடலிற் சூரைவென்றான்,
ஆனத்த வாரி அமுதன்னான் – ஞானம்
தருவதினும் சித்திதரத் தாமதித்து வாட்டும்
ஒருவன் பழனியுடை யோன் (49).

பதப்பிரிவு:

ஏனம் தடிந்தான், இரும் கடலில் சூரை வென்றான்,
ஆனத்த வாரி அமுது அன்னான் – ஞானம்
தருவதினும் சித்தி தரத் தாமதித்து வாட்டும்
ஒருவன் பழனி உடையோன்!! (49).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

ஏனம் - பன்றி; திருமால் வராக அவதாரம் எடுத்த பொழுது முடிவில் அதன் பற்களைப் பறித்தவன் முருகப் பெருமான்;
இரும் கடலில் சூரை வென்றான்- இரும்- கரிய,பெரிய. எம் பெருமானின் இந்தப் பராக்கிரமம் கடுவன் இளவெயினனார் இயற்றிய பரிபாடலில் இருந்தும் நாம் அறிய முடியும். பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு, சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி, தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து, ..... அதாவது, சூரபத்மனை அழிப்பதற்காக முருகப் பெருமான் பிணிமுகம் என்ற யானையின் மீதேறிப் போருக்குச் சென்றான். போரில் அவன் எறிந்த வேல் கடலில் புகுந்து கடற் பாறைகளைத் தூள் தூளாக்கியது. கடலை வற்றச் செய்தது. அவ்வேல் தான் சென்ற வேகத்தில் தீயையும் ஒலியையும் எழுப்பியது.

பழனி உடையோன், எம் பெருமான் பழனாபுரிப் பெருமாள் யார் என்று அவன் ஒரு சில பராக்கிரமங்களை வரிசைப்படுத்துகிறார். ஞானத்தின் சொரூபம், ஞானத்தின் மொத்தம், உச்சம் அவன். ஆனால், சித்தி தரத், தாமதித்து வாட்டுவான் என்று ஏற்கனவே தான் கூறிய கருத்தை, இங்கும் வலுப்படுத்துகிறார் நம் சுவாமிகள். வந்தனவும், நேரே வருவனவும், மாய்ந்தனவும் சந்ததமும் எத்தனையோ தண் தமிழ்ப்பாட்டு – இந்தவிதப்
பேறு அளித்தான்; சித்தி பெறத் தந்திலான், பழனி வீறு அணையத் தாங்கு கந்தவேள் என்றார் 40வது வெண்பாவில்- முதல் பகுதியில்.

ஒருவன்- ஒருவன் இவன் என்று அருணகிரிநாதர் சுட்டும் திருவகுப்பு நினைவில் வருகின்றது.

சகல பராக்கிரமமும் உடைய ஒரே ஒருவன்- வேறு நிகரே அற்றவன்-பழனி உடையோன்- பழனாபுரி ஆண்டவன்- அவன், யார் எனில்- திருமால் வராக அவதாரம் எடுத்த பொழுது முடிவில் அதன் பற்களைப் பறித்தவன்; பெரிய, கரிய கடலில் ஒழிந்த சூரனை வேல் விடுத்து வென்றவன்; ஆனந்தக் கடல் அமுது அவன்; – ஞானத்தின் கொள்ளிடமாய் இருந்து ஞானம் தருபவன்; ஞானம் தருவதினும் சித்தி தரத் தாமதித்து வாட்டுபவன்; - அந்த ஒருவன் தான் - பழனிக்கே உடையவன்; எங்களுக்கே உரியவன்!!

தீயவர் யார் என்று தெரியாது பழகி, மனம் நொந்து வாடும் என்னை, மாயோன் மருக! நான் உன்பால் உருக, நீ என்பால், உன் தாய் அன்பால், என் மாயா, மாய வினையை மாய்த்து, உய்விக்க வேண்டும்! பழனி ஆண்டவனே!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺" *வாழ்வை கண்டு களி!*
*ரசனையோடு வாழ்!*
*வாழ்க்கை வாழ்வதற்கே* ! *எனக் கூறிய ஜீவகாருண்ய வேந்தர் வள்ளலார் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺வள்ளலார் கூறிய வாழ்க்கை போதனைகளை நம் வாழ்வின் முக்கியமாகக் கொள்வோம்

🌺தேவைக்கு செலவிடு.இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப் போவதில்லை.

🌺உயிர் போகும் போது,எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை.ஆகவே,அதிகமான சிக்கனம் அவசியமில்லை.மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

🌺உயிர் பிரிய தான் வாழ்வு.ஒரு நாள் பிரியும்.சுற்றம்,நட்பு,செல்வம்,எல்லாமே பிரிந்து விடும்.

🌺உயிர் உள்ள வரை,ஆரோக்கியமாக இரு.உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

🌺உன் குழந்தைகளை பேணு.அவர்களிடம் அன்பாய் இரு.அவ்வப்போது பரிசுகள் அளி.அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே.அடிமையாகவும் ஆகாதே.

🌺பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,பாசமாய் இருந்தாலும்,பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ,உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம்.புரிந்து கொள்!

🌺அதைப் போல,பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.உன் சொத்தை தான் அனுபவிக்க,நீ சீக்கிரம் சாக வேண்டுமென,வேண்டிக் கொள்ளலாம்.பொறுத்துக் கொள்.அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்;கடமை மற்றும் அன்பை அறியார்.

🌺"அவரவர் வாழ்வு,அவரவர் விதிப்படி"என அறிந்து கொள்.இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.ஆனால், நிலைமையை அறிந்து,அளவோடு கொடு.எல்லாவற்றையும் தந்து விட்டு,பின் கை ஏந்தாதே.

🌺"எல்லாமே நான் இறந்த பிறகு தான்"என,உயில் எழுதி வைத்திராதே.நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.எனவே,கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு;மேலும் தர வேண்டியதை,பிறகு கொடு.

🌺மாற்ற முடியாததை,மாற்ற முனையாதே.மற்றவர் குடும்ப நிலை கண்டு,பொறாமையால் வதங்காதே.அமைதியாக,மகிழ்ச்சியோடு இரு.

🌺பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

🌺நல்ல உணவு உண்டு,நடை பயிற்சி செய்து,உடல் நலம் பேணி,இறை பக்தி கொண்டு,குடும்பத்தினர்,நண்பர்களோடு கலந்து உறவாடி,மன நிறைவோடு வாழ்.இன்னும் இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்,சுலபமாக ஓடி விடும்!

🌺வாழ்வை கண்டு களி!
ரசனையோடு வாழ்!
வாழ்க்கை
வாழ்வதற்கே! என வாழும் வாழ்வின் அர்த்தம் பற்றி கூறுகிறார் வள்ளல் பெருமான் ஜீவகாருண்ய வேந்தர் வள்ளலார்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺" Enjoy life!
Live with taste!
Life is for living! Jivakarunya Vender Vallalar - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Let's take the life teachings given by Vallalar as the key of our life

🌺Spend as needed. Help others as much as possible.
Follow Jivakarunya. You will not live many more years.

🌺 When life is gone, nothing is going to be taken away. So, there is no need to save too much. Don't be confused about what will happen after you die.

🌺 Love is life. One day we will part. Surroundings, friendship, wealth, everything will be separated.

🌺 As long as you live, be healthy. Don't lose your health and add money.

🌺 Take care of your children. Be kind to them. Give them gifts every now and then. Don't expect too much from them. Don't become a slave.

🌺 Even children who respect their parents, even if they are affectionate, may be unable to pay attention to you due to work or circumstances. Understand!

🌺Like that, children who don't respect their parents, may fight for the distribution of your property. They may beg you to die soon so that they can enjoy your property. Be patient. They only know rights; they know duty and love.

🌺Know that "his life is according to his rules". Give to the children while they are there. But know the situation and give in measure. Don't give everything and leave it behind.

🌺 Don't write a will saying, "Everything is after I die." They will wait for you to die. So, first give only what you think of giving, and then give what you need to give.

🌺 Don't try to change what can't be changed. Don't be jealous of other people's family status. Be calm and happy.

🌺Appreciate the good in others.

🌺 Eat good food, exercise, take care of your health, be religious, socialize with family and friends, and live a contented life. Another twenty, thirty, forty years will fly by easily!

🌺 Enjoy life!
Live with taste!
Life
To live! Vallal Peruman Jivakarunya Vendra Vallalar says about the meaning of living life.

🌺🌹Valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*🌹🌹ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா"*

(பிரதோஷம் மாமாவின் வழி காட்டுதலும் மற்றும் பெரியவா அருளால் தரிசிக்க வழியும் தெரிந்த கொண்ட ஒரு வாலிபன்)

தகவல் உதவி - தில்லை நாதன்
கட்டுரையாளர் - ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தில்லைநாதன் தான் நேரில் கண்ட இன்னொரு அனுபவத்தையும் சொல்கிறார். 1980ஆம் ஆண்டு அன்று, இஸ்லாம்பூர் என்ற ஊருக்கு அஸ்தமனம் ஆகும் சமயம் விஜயம் செய்தருளினார். அப்போது இவ்வாலிப பக்தரும் உடன் இருந்தார்

ravi said…
கண்களில் நீர் பொங்கி வழிய முகத்தில் ஆனந்தம் ஜொலிக்க ஒரு வாலிபன் ஸ்ரீமகா பெரியவாளைத் தரிசிக்க நின்றான். அவனைப் பார்க்கும் போது மிகவும் களைப்பாய் தெரிந்தான். ஸ்ரீபெரியவாள் தரிசனம் கிட்டியதே என்கிற ஏக்கம் நீங்கியது போல் அவனது முகபாவம் தெரிந்தது அவன் சொன்ன தகவல்தான் மிகவும் ருசிகரமானது என்கிறார் தில்லைநாதன்.

இவன் பிரதோஷம்  மாமாவை பார்க்க, ஒரு தடவை சென்றபோது மாமா இவனிடம் சொன்னார் "ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ. உன்னை  எப்பவும் காப்பாத்துவா!"ன்னு சொல்லி அவனை தரிசனம் பண்ண அனுப்பி வைத்தார். அப்போது ஸ்ரீபெரியவா 'மீரஜ்' என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார். "அங்கே போய் தரிசனம் பண்ணிட்டு வா" என்று பிரதோஷம் மாமா அவனிடம் கண்டிப்பாக சொல்லி அனுப்பினார்.

ravi said…
வாலிபன் சொல்கிறான்.." எனக்கு மெட்ராஸ்  தவிர இந்த ஊரெல்லாம் புதுசு. எனக்கு எந்த இடமும் தெரியாது. குறிப்பிட்ட ரயிலிலே ஏறி 'மீரஜ்' வந்தவுடன் கேட்டுக்கொண்டு இறங்கி விட்டேன். ஊருக்குள்ளே போய்ப் பார்த்தேன். அந்த ஊர்லே மகாபெரியவா இருக்கிற சுவடே தெரியலே தமிழ் பேசறவா யாராவது தென்பட்டா கேட்கலாம்னு பார்த்தா, ஒருத்தரும் அப்படி எனக்குக் கிடைக்கல்லே. கன்னட பாஷையும் எனக்குத் தெரியாது.

ஒருவழியா எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்லே கேட்டுப் பார்த்தேன். அப்போ எனக்குக் கிடைச்ச தகவல் என்ன தெரியுமா? ஸ்ரீபெரியவா அந்த ஊரை விட்டு கிளம்பிட்டார் என்கிற தகவல் மட்டும் தெரிஞ்சுது. ஆனா அவர் எந்த ஊருக்குப் போனார் என்பதே தெரியல்லே!

அப்படி தெரிஞ்சுண்டாலும் அந்த ஊருக்கு எப்படிப் போவதுன்னு தயக்கம். ஒரு விபரமும் தெரியாத இடத்தில் எப்படித் தேட முடியும் என்று நம்பிக்கையில்லாமே மறுபடியும் ரெயில்வே ஸ்டேஷனுக்கே வந்து சேர்ந்தேன்.

திரும்பவும் நான் ஸ்டேஷனுக்கு வந்த நேரம் விடியற்காலை. அப்போதிருந்து மாலை 3 மணி வரை ஸ்டேஷனிலேயே இருந்தேன். ஸ்ரீபெரியவாளை இத்தனை தூரம் வந்தும் தரிசிக்க இயலாத அபாக்யசாலி ஆனேனே! ஸ்ரீபெரியவா கைவிடமாட்டார். எப்பவும் காப்பாத்துவார்னு ஸ்ரீபிரதோஷம் மாமா சொன்னாரே! அது பொய்யாகிப் போச்சே. இதுதான் எனது வாஸ்தவமான நிலையோ என்றெல்லாம்  அத்தனை நேரமும் ஒரே விதமா நினைச்சு நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததாலே துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீர் வடிக்கும் நிலையுமானது.

மாலை மணி மூன்று. இனி சென்னைக்குத் திரும்ப வேண்டியதுதான்னு  முடிவு செஞ்சி, சென்னைக்கு டிக்கெட் எடுக்க மனசில் வேதனையோடு க்யூவில் நின்னேன். தூக்கத்தில் சோர்ந்து போய் நின்றவனுக்கு செவியில் தேனாக அப்போது அங்கே தமிழ் குரல் கேட்டது. அதைக் கேட்டபின் மனசிலே தெம்பு தானாக வந்தது. 'க்யூ' வை விட்டு நகர்ந்து இவர்களிடம் போய் தமிழில் விசாரித்து ஸ்ரீபெரியவா போய் கொண்டிருக்கும் இடத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு மனதில் தோன்றியது.

அவர்களிடம் சென்று மெதுவாக ஸ்ரீ பெரியவாளைப் பற்றி விசாரித்த போது ஒரு இன்ப அதிர்ச்சி அங்கே காத்துக் கொண்டு இருந்தது.

"அடடா பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுத்தானே நாங்களும் வர்றோம். எங்களோட வந்தவர் ஒருவர், மெட்ராஸ் போறார். அவரை வண்டி ஏத்த நாங்கள் இங்கே வந்தோம். திரும்பவும் நாங்க ரெண்டுபேர் மட்டும் பெரியவா இப்போ இருக்கிற இடத்துக்குத்தான் போறோம். நீங்களும் எங்களோடேயே காரில் வரலாம். நாங்க பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்தோம். இப்போ பெரியவா இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்குப் போய் இருப்பார். "வாங்க போகலாம்" ன்னு அவர்கள் சொன்னார்கள்.

அப்போதுதான் ஸ்ரீபிரதோஷம் மாமாவின் வாக்கு எவ்வளவு சத்யமானது என்று எனக்குப் புரிந்தது. ஸ்ரீபெரியவா தன்னோட பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்கிரகம் செய்கிறார்னு நினைச்சபோது எனக்கு மெய்சிலிர்த்தது. தன்னை அழைத்துப் போக தயாராக இருந்தவர்களிடம் இதை அந்த வாலிபர் சொன்னபோது அந்த பக்தர்களுக்கும் ஸ்ரீ மகா பெரியவாளின் பெருங்கருணை வெளிப்பட்டது

Jaya Jaya Shankara hare hare Shankara
ravi said…
*சங்க இலக்கியம்*

*மூதுரை-ஔவையார் பாடல்கள்*

*பாடல் 4 :*

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

*பொருள்:*

நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்போன்றது அவர் நட்பு.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டும் உண்டு.

தாயான கௌஸல்யா மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள் .இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது.

சிற்றன்னை கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள் .குழந்தையாக இருந்தபோது ஸ்ரீ ராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள்.இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.

ப்ரம்ம ரிஷிகளான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார் .

அயோத்யா நகரத்து ப்ரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர் .

ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள் .அப்படி அழைப்பதற்கு ஸீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு.

மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று கூறி வந்தார்கள்.

அந்த ஸ்லோகம் : --
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம :... !!!

இது மிகவும் ப்ரஸித்தமான ஸ்லோகம் .ஆனால் இந்த பத ப்ரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் மனதைத் தொடுவதாகும் .
இப்படிப்பட்ட ராமனுக்கு நமஸ்காரங்கள்.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜய ஜய ராமா !

ஜய் ஸ்ரீ ராம். ஜய் ஸ்ரீ ராம்...🙏🚩🙏
ravi said…
⚡ சிலைகளைக் கும்பிடுவது
சரியா..???

மஹரிஷி ரமணரின் பதில்

முஸ்லீம் அன்பரின் சந்தேகம்

திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி

தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம்

பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின்

மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம்

சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர்

அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா....???

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது..???

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா..???

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம்

ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர்

உங்களை எடுத்துக் கொள்வோம்

உங்களுக்கு உருவம் உண்டா...???

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள்

ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே...!!!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா...???

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது

ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால்

இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்...???

உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்..???

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்

மஹரிஷி: ஓ...!!!

அப்படி என்றால்,

உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது

ஆனால் இப்போது உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள்

இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள்,

உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது..???

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார் ⚡

✨ ஓம் ஸ்ரீ இரமணார்ப்பனம் ✨
ravi said…
*I recall - pictures that speak*

The murmur of the sea,
The wet sand,
The bracing breeze,
The morning time.

I give up my slippers,
While I tread the beach,
New sensations,
Electrify my body.

When we choose,
To de-armour ourselves,
A richer world presents itself,
For embracing, than hitherto.

As the sun rises,
My solitary ramble is no longer so,
We frolic - the waves, I and all else,
Time stands still.

As I trudge back - feet now sheathed,
The grains of sand, as I flip-flop,
Are endurable now,
Imbued as I am with gratitude.
ravi said…
*ஒரு வரியில் உறவுகள்*🙌🙌🙌

*தாய்*

மகள் சொன்னாள் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து ...

"என் கர்பையை விட பாதுகாப்பான இடம் என் தாயின் கரங்கள்"

*மகள்* தாயின் நிழல்

*மகன்* தந்தையாகி பின் மகனாகுபவன்

*தந்தை* தந்ததை எண்ணாதவன்

*சகோதரன்* கண்களில் கண்ணீருக்கு பாத்தி போடுபவன்

*சகோதரி* கூட இருக்கும் தோழி

*நண்பன்* அழிந்த கோலங்களில் மீண்டும் புள்ளிகள் போடுபவன்

*கணவன்* : மனைவியின் குங்குமம்

*மனைவி* ... கணவனின் காதல் எழில் அரசி
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தைப்பூசம் பற்றிய பதிவுகள் :*

பகுதி 1 :

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.

3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.

5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.

6. சிதம்பரத்தில் நடராஜர், உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தைப்பூசம் தினத்தன்றுதான் தரிசனம் கொடுத்தார்.

7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

9. தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.

10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.

11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.

13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.

14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

15. தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.

16. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

17. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். குமாரிலப்பட்டர் பேரைச் சிலராவது கேட்டிருப்பீர்கள். இப்போது யாருக்குமே தெரியாத இன்னொரு ஸுப்ரம்மண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ரொம்ப சமீப காலம் வரையில் எனக்கே இது தெரியாது.

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளைப் பற்றி ஏதோ கொஞ்சம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். குமாரிலப்பட்டர் பேரைச் சிலராவது கேட்டிருப்பீர்கள். இப்போது யாருக்குமே தெரியாத இன்னொரு ஸுப்ரம்மண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ரொம்ப சமீப காலம் வரையில் எனக்கே இது தெரியாது.

ravi said…


ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.(நாளை இறுதிப்பகுதி)
(நாளை தைப் பூசம்)
ravi said…
சரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்கு முன்னால் அவர் யாராக இருந்தார் என்று இந்தக் கதை சொல்கிறது. இது எப்படி எனக்குத் தெரிய வந்தது என்பதே ஒரு கதை மாதிரிதான்.

*              *             *

வியாஸர் ‘பிரம்ம ஸூத்திரம்’ என்று பரமாத்ம தத்வத்தைப் பற்றி விசாரணை செய்து எழுதியிருக்கிறார். அதில் மூன்றாவது அத்தியாயம், மூன்றாவது பாதத்தில், முப்பத்திரண்டாவது சூத்திரம். “ஒர் அதிகாரத்துடன் அவதரித்தவர்களுக்கு அதிகாரம் உள்ள வரையில் சரீரத்தில் இருப்பு உண்டு” என்று சொல்கிறது. இதற்கு பாஷ்யம் பண்ணும்போது நம் ஆசார்யாள், “பிரம்மாவின் மானஸ புத்திரரான ஸனத்குமாரர்கூட, தானே ருத்திரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக, ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார்” என்று திருஷ்டாந்தமாகச் சொல்லியிருக்கிறார்.

ஸனத்குமாரராவது, பரமேசுவரனுக்கு வரம் தருவதாவது, அதற்காக மறுபடி பிறப்பதாவது, அதுவும் சாக்ஷாத் ஸ்கந்தனாக – இது எந்தப் புராணத்திலிருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. பல பண்டிதர்களை விசாரித்துப் பார்த்தும் தெரியவில்லை. ஆஞ்சநேய ஸ்வாமிகளும் ரொம்ப விசாரித்துவிட்டு, பதினெட்டுப் புராணங்களையும் பார்த்துப் தமிழில் சுருக்கிப் போட்டிருக்கிற (ஸ்ரீ வத்ஸ) ஸோமதேவ சர்மாவிடம் இந்தக் காரியத்தைக் கொடுத்தார். சர்மா எனக்கு பிக்ஷை பண்ண வந்தபோது, பெரிய பிக்ஷையாக இந்த ‘டிஸ்கவரி’யைச் சொன்னார். ‘திரிபுரா ரஹஸ்யம்’ என்ற கிரந்தத்தில் மஹாத்மிய காண்டம் முப்பத்தேழாம் அத்தியாயத்தில் இது நீள நெடுகப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறது.

கதைக்கு வருகிறேன்:

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.

இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்னத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்த ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.

பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.

இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்னத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.

ஆனால் இவர் ஸ்வப்னத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.
ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தைப்பூசம் பற்றிய பதிவுகள் :*

பகுதி 2 :

21. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.

22. குளித்தலை கடம்பவன நாதர் ஆலயம் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. சப்த கன்னி யருக்கு ஒரு தைப்பூச நாளில்தான் இங்கு ஈசன் காட்சி அளித்தார்.

23. தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

24. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.

25. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே.

26. மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.

27. விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.

28. ஆய்குடி ஹரிராம சுப்பிரமணியர் ஆலயத்தில் தை மாதம் புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று பாலசுப்பிரமணியர் கருவறையை பூக்களால் நிரப்புவர். தைப்பூசத்தன்று நடத்தப்படும் பரிவேட்டை உற்சவம் இங்கு மிகவும் புகழ் பெற்றது.

29. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

30. நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும் அதனைத் தரிசிப் பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_

*உலகில் பணத்தை தேடி அலைந்தவரை விட*
*அன்பை தேடி அலைந்தவர்கள் தான் அதிகம்*
பணம் கூட சுலபத்தில் கிடைத்துவிடுகிறது
ஆனால்
இந்த அன்புதான்‌..❣

*இரவு இனிதாகட்டும் 😴*

*விடியல் நலமாகட்டும்😍*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
[04/02, 17:54] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[04/02, 17:54] Jayaraman Ravilumar: *102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)*
[04/02, 17:56] Jayaraman Ravilumar: கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘ *வ்ருஷாகபி* :’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் *102* -வது திருநாமம்.

“ *வ்ருஷாகபயே நமஹ”* என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்
சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.
ravi said…
[04/02, 17:50] Jayaraman Ravilumar: சிவானந்தலஹரி 62வது ஸ்லோகம் பொருளுரை
[04/02, 17:51] Jayaraman Ravilumar: த்ருஷ்டாந்ததிற்கு சகோர பறவையும் சாதகப் பறவையும் சக்ரவாஹ பறவையும்
குறிக்கோள் (focus) மாறாது இருப்பது போல் பக்தி செய்யும் விதம் விளக்கியுள்ளார்

மேலு‌ம் அங்கோல மரத்தின் பழம் மரத்தில் ஒன்றி விடுவதையும் காந்தக்கல் சிறிய ஊசியை தன் வசம் சேர்த்து கொள்வதைப்போல்

அனன்ய பக்தி மூலம் பகவானை அடைய முடியும் என்று தந்த விளக்கம் மஹா பெரியவா ஒலியில் பக்தி மேம்பட அனுக்ரஹித்துள்ளார்.
[04/02, 17:52] Jayaraman Ravilumar: 60ஆவது ஸ்லோகத்தில் நாம் செய்த துஷ்கர்மங்களால் ஸம்ஸாரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

“ஈஸ்வரனுடைய சரண கமலத்தை ஏ மனமே! நீ பக்தியோடு நாடுவாயாக. அதுவே நமக்கு புகலிடம்” என்று மிகப்பொருத்தமான மேற்கோள்களைக் கொண்டு நமக்கு காட்டுகிறார்.

ஐந்து வயதான துருவன் தன்னுடைய சிற்றன்னையின் கடுஞ்சொற்களை நாள் புண்பட்டபோது தன் தாயிடம் சென்றான்.

स्वकर्मगतिसन्तरणाय पुंसां, त्वत्पादमेव शरणं, शिशवे शशंस

“ஸ்வகர்மக³திஸந்தரணாய பும்ஸாம், த்வத் பாத³மேவ ஶரணம்,
ஶிஶவே ஶஶம்ஸ” –

மனிதர்களுக்கு தங்களது துஷ்கர்ம பலன்கள் நிவ்ருத்தியாவதற்கு பகவானின் திருவடிகளே புகலிடம் என்று தன் குழந்தைக்கு உபதேசிக்கிறாள்.
ravi said…
[04/02, 17:45] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 79 started on 6th nov

*பாடல் 26* ...💐💐💐
[04/02, 17:47] Jayaraman Ravilumar: *பாடல் 26 ... ஆதாரம் இலேன்*

(திரு அருள் பெற)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே

நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே

வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.
[04/02, 17:48] Jayaraman Ravilumar: வேத ஆகமங்களில் காணப்படும் உபதேசப் பொருட்களில் பொதிந்து
விளங்கும் பூரணப் பொருளே,

அல்லது வேத ஆகமங்களின்
துணைகொண்டு அடியார்களிடம் விளையாடல்களைப் புரிபவனே,

தேவலோக சிரோரத்தினமே,

உன் அருளைப் பெறுவதற்கு எனக்கு
எந்த வித மார்க்கமும், அடிப்படைக் கொள்கைப் பலமும்,
தோன்றவில்லையே.

என்னுடைய இந்த நிராதார நிலையைப்
பார்த்தும் எனக்கு இரங்காமல் நீ இப்படி சும்மா இருப்பது உனக்கு
நியாயமாகுமா?
ravi said…
🌹🌺 "Excuse me! The test is not over yet. In a little while Lord Surya will come and judge," said the Guru."- A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Mahabharata war
In the end it was decided to conduct a knowledge test between Kaurava and Pandavar.

🌺Drona said that they should give the same amount of money to both sexes and fill a room with a lot of things.

🌺 Duryodhana bought and filled the room with straw.

🌺 When Bhishma, Vidurar, Krupar etc. came and opened the room, it was sneezing.

🌺When you open the room of the Pancha Pandavas, the room is filled with golems. It was beautifully lit.

🌺 Flower offerings, fruits, milk, sandalwood were all ready.
Akhil scent filled the mind.

🌺 Everyone was amazed at the skill of the Pandavas.
Enraged at their defeat, Duryodhana argued that a single test would not decide who was the smartest.

🌺 Drona accordingly called one hundred and five people and within ten days from today, Kauravas should fill eight jugs and Pandavas eight jugs with ice water.

🌺 On the morning of the tenth day, before the sun rises, we will come and see."

🌺 It was agreed by both sides as 'OK'.
When the Kauravas could not understand how to do this, they sought the help of Maman Sakuni.

Meanwhile, nine days have passed. Eight jugs should be filled with ice water before sunrise on the morning of the tenth day.

🌺 The dignitaries feared that if they did not do so, they would lose and be humiliated.

🌺When it was snowing in the middle of the night, all the Kauravas went into the palace garden of their uncle Sakuni.

🌺 Separated the ice water that was stagnant on the leaves of the plant and put it in a jug.

🌺 They did this in the morning till sunrise. There was only one jug of ice water they had collected.

🌺How to fill other jugs? As per Sakuni's idea they filled other jugs with water and took the jugs to the venue of the competition.

🌺The Pandavas also reached the venue of the match with eight pitchers on time.
Many people gathered to watch the match.

🌺 Both the sages also presented their eight kutams filled with ice water to the Guru.

🌺 King Dhritarashtra was happy that his people had filled eight jugs with ice water... "Drona! Aren't my sons knowledgeable?'' he asked.

"🌺Excuse me! The test is not over yet. In a little while Lord Surya will come and judge," replied the Guru.

🌺 Will the Sun Lord come? Judging? Everyone woke up not knowing what it was.

🌺 Drona himself told the Pandavas to put their eight pots of ice water in the sun.

And so they did. As the sun shone, the water in the eight jugs slowly evaporated.

🌺Then he asked the Kauravas to keep their Ettukudam ice water in the sun.

🌺The eight tents were placed in the sun.
Only the water in a jug turned into vapor and disappeared.

🌺The water in the other seven jars remained as it was and did not turn into vapor.

🌺 "Mannava! Their sisters have filled only one jug with ice water and other jugs with water.

🌺 You can tell yourself who won the competition,'' the king bowed his head without answering.

🌺 Drona asked Daruman how the Pandavas filled the eight jugs with ice water.

🌺 "On the tenth day after the end of the competition, before going to bed at night, we spread cloths over the plants and vines in the garden. The snow that had fallen all night had soaked the clothes.

🌺 In the morning we took the grains and squeezed them in a jug and filled eight jugs with ice water,'' replied Tharuman.

🌺 People praised the Pandavas as truly intelligent. The Kauravas came out with their heads bowed in shame

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *மன்னவா* ! *சோதனை இன்னும் முடியவில்லை* . *சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்ற குரு* .”- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺 மகாபாரதம் போரின்
முடிவில் கவுரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

🌺இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பிவைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார்.

🌺துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து வைத்திருந்தான்.

🌺பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல்தான் வந்தது.

🌺பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள். அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

🌺மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன.
அகில் வாசனை மனதை நிறைத்தது.

🌺பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர்.
தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது" என வாதிட்டான்.
ravi said…

🌺துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள் கௌரவர்கள் எட்டு குடங்களிலும், பாண்டவர்கள் எட்டு குடங்களிலும் பனி நீரை நிரப்ப வேண்டும்.

🌺பத்தாம் நாள் காலை சூரியன் தோன்றுவதற்கு முன் நாங்கள் வந்து பார்ப்போம்" என்றார்.

🌺‘சரி’ என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர்.

🌺இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும்.

🌺அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.

🌺நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர்.

🌺செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர்.

ravi said…
🌺இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது.

🌺மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

🌺பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
போட்டியைக் காண பலர் கூடி விட்டனர்.

🌺இரு சாரரும் பனி நீர் நிரம்பிய தங்களுடைய எட்டுக்குடங்களையும் குருவின் முன்வைத்தனர்.

🌺மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்... ""துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்.

"🌺மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்று குரு பதிலளித்தார்.

🌺சூரிய பகவான் வருவதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.

🌺துரோணரே பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார்.

🌺அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது.

🌺பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார்.

🌺எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன.
ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது.

🌺மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.

🌺"மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர்.

🌺போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.

🌺பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார்.

🌺"போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன.

🌺காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.

🌺பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளிஏறினர்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை."*

*_✍️ 05, Sunday, Feb., 2023_*

https://srimahavishnuinfo.org

*🧿’ஆடம்பரம் ஒரு அழிவுப் பாதை..’’*


*♻️அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றி விட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட அதனால் அழிந்து போனவர்கள் தான் அதிகம்.*

*♻️ஓவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தத் தடையுமில்லை.*

*♻️அது ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற போது தான் அழிவுப்பாதை ஆரம்பமாகின்றது.*

*♻️மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.*
*ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள்.*

*♻️தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையில் உள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு? என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.*

*♻️தெனாலிராமன் பொட்டலத்தைப் பிரித்தான் அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று இருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர்.*

*♻️அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.*

*♻️“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான்.*

*♻️மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.*

*♻️“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்!” என்றான்.*

*♻️அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தை விட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி,”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை தான்.*

*♻️”பொக்கிஷப் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே என் பிறந்தநாள் விழாவை நிறுத்துங்கள்.*

*♻️இனி என் பிறந்த நாளன்று வறுமையில் வாடும் ஆதரவற்ற ஏழைகள்,*
*வயோதியர்ளுக்கு மூன்று வேலை அன்னதானம் செய்யுங்கள்.*

*♻️வீர விளையாட்டை நடத்துங்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னும்,பொருளும் கொடுங்கள். அவசியம் இல்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவும் இட்டார்.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் பின் ஒருநாள் நிம்மதி இழப்பார்கள்.*

*⚽ஆடம்பர வாழ்க்கை வாழ்பவனின் செல்வம் எல்லாம் சூரிய ஒளியின் முன் மாயும் மூடு பனியைப் போல மறைந்து விடும்.*

*🏵️நமது தகுதிக்கு உட்பட்டு, எளிமையாக வாழ்ந்து விட்டால் மன நிம்மதியுடன் வாழலாம்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌴🌴🌴

*எளிய பரிகாரங்களும், இனிய பலன்களும் !*

* பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

* துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

* மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

* ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

* தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

* பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

* தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

* காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

* கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும்.

* உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.


💫🌈🌹🙏

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
💛💛💛💛💛💛💛💛💛💛💛

💛கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும். ஆனால் அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் தான் முடியும்.

💛வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நீங்கள் எதிர் பார்த்தால் நாம் அன்றாடம் செய்யும் பழக்க வழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.

💛தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எண்ணங்களில் நீங்கள் அழகாய் இருங்கள்.

💛💛💛💛💛💛💛💛💛💛

*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*❖ 104 ருத்ரக்ரந்தி விபேதினி =*

ருத்ரக்ரந்தி நாடி முடிச்சுத்தளைகளை ஊடுருவுபவள் (ருத்ரக்ரந்தி ஆக்ஞா சக்கரத்திற்கும் சஹஸ்ராரத்திற்கும் நடுவில் இருப்பதாக யோக நூல்கள் உரைக்கின்றன)
ravi said…
*அம்மா* ....

தைப் பூச நன்னாளில் தரணி புகழும் திருநாளில்

தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய

மூதறிவின்
மகனும் உண்டாயது வல்லி நீ செய்த வல்லபம் அன்றோ

உன் வல்லபம் ஒன்றும் கண்டறியா என்னையும் ஓர் பொருளாய் வலிய வந்து ஆட்கொண்டாய் ...

அம்மா என் சொல்வேன் ... ஏது உரைப்பேன் ...

கடன் பட்டேன்

காலங்கள் யுகங்கள் மாறினாலும் என் கடன் தீருமோ....

உன் அருள் வெள்ளம் எனை அடித்து செல்லும் வேலையில்

பட்ட கடன் மட்டும் கரையில் நின்று பல்லை காட்டும் மாயம் என்ன தாயே ?
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

61 –
நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

கனி கணிந்தபின் அதை அடித்து பறிப்பதைப் போல மூப்பு கண்டபின் ஆன்மீக ஒளி தருவதன் நோக்கம் என்ன *அருணாசலா*

அழுகி போன கனியை யார் உண்பர் *அருணாசலா* ...

நிலை குலைந்தபின் நீர் ஆகாரம் யார் விரும்புவர் *அருணாசலா*

குழந்தையாய் தவழும் போது உன் நிழல் தொடவில்லை

வாலிபனாய் உயர்ந்தபின் உன் அழகு உணரவில்லை

வயது முடியும் முன்னே வார்த்தை தனை தேடுகிறேன் ...

உன் நாமம் நாவில் ஒட்டவில்லை ...

திரும்பி கொஞ்சம் பார்க்கிறேன் வந்த வழியெல்லாம் இரு பொன்னிற பாதங்கள் ...

என் கால் பதிவு இல்லை

எங்கே போனது *அருணாசலா* ?

துன்பம் வரும் போதெல்லாம் நீ என்னை தூக்கிக் கொண்டு நடந்தாய் என்றே நான் அறிய வில்லை ...

அனுதினமும் நீ உள்ளாயா எனக் கேட்டே நாஸ்திகம் பாடினேன் ...

பதில் சொல்லாமல் பதில் தந்தாயே *அருணாசலா* ...

உன் பந்தம் இறுக கண்டேன் ...

நன்றி சொல்ல வார்த்தை இல்லை *அருணாசலா*💐💐💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 74*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
परिणतिमतीं चतुर्धा पदवीं सुधियां समेत्य सौषुम्नीम् ।

पञ्चाशदर्णकल्पितमदशिल्पां त्वां नमामि कामाक्षि ॥ ५९॥

59. Parinathivathim chathrdhaa padavim sudhiyaam samethya soushumneem,

Panchasatharna kalpitha pada shilpaamthwaam namami Kaamakshi.

பரிணதிமதீம் சதுர்தா பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்னீம் |

பஞ்சாஶதர்ணகல்பிதமதஶில்பாம் த்வாம் னமாமி காமாக்ஷி ||59||
ravi said…
அம்பாள் காமாக்ஷி, வித்யா ஸ்வரூபிணி, ஸப்த (SABTHA ) ஸ்வரூபிணி, ஒலி வடிவானவள்.

ஒலியை ஸப்தம் என்கிறோமே அது நாலு வகைப்படும்.

மூலாதாரத்தில் இருக்கும்போது '' *பரா* '' என்று பெயர்.

மூலாதாரத்திலிருந்து மேலே கிளம்பி, ஸ்வாதிஷ்டானத்துக்கு ஸுஷும்னா நாடியில் செல்லும்போது '' *பஸ்யந்தி* '' என்று பெயர்.

அனாகத்தை அடையும்போது அந்த நாதத்தின் பெயர் '' *மத்யமா* ''.

இன்னும் மேலே விசுத்தியை அடையும்போது, கண்டத்திலிருந்து வெளிப்படும் போது அதன் பெயர் *வைகரீ* .

அதை தான் வாக்கு என்கிறோம்.

ஞானிகளின் சுஷும்னா நாடியில் இப்படி ''அ'' முதல் ''க்ஷ'' வரையான ஐம்பது ஸம்ஸ்க்ரித அக்ஷரங்களாக ஒலிக்கும் ஸப்த ஸ்வரூபிணி, அம்பா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 478* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*201 सद्गतिप्रदा - ஸத்கதிப்ரதா --*

அசையாத பிரம்மம் சிவமாய் சிவந்திருக்க உள்ளே உணர்வுகள் பெருக்கெடுக்க உணர்வுக்கு ஓர் பெண் உருவம் தந்தது பிரம்மம் ...

பெண்ணான எண்ணங்கள் எழில் உருவம் கொண்டே பிரம்மம் தனை தழுவ பிறந்தது அண்டங்கள் ஆகாயங்கள் ...

எண்ணம் வேறு எழில் வேறு என்று ஒன்று உண்டோ ...

அனைத்தும் சக்தி என்றே சிவம் சொல்ல சிவத்தினுள் புகுந்த சக்தி பிரம்மம் நானே என்றது
ravi said…
*பிப்ரவரி மாதம் (6-2-2023) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி*!

சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விபட்டிருப்பீர்கள்!

சிவ பெயர்ச்சி கேள்வி பட்டுள்ளீர்களா?

ஆம் சிவன் ஆலகால விஷத்தை உண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது

ருத்ர மூர்த்தியாக சிவன் கோபம் கொண்டு ஆடியதை கண்ட பார்வதி மனமுருகி ஸ்வாமியை வேண்டி கோபத்தை குறைத்து சாந்த ஸ்வரூபனாக பகவான் சகல உயிர்களையும் காக்க வேண்டும் என வேண்டினாள்

பகவான் அம்பாளின் வேண்டுதலை ஏற்று கோபமார

ருத்ர ரூபத்திலிருந்து சாத்வீகமான சதாசிவ ரூபத்திற்கு மாறிய தினமே "சிவப்பெயர்ச்சி"

ஒவ்வொரு வருடமும் தை மாதம் கடைசி திங்கட்கிழமை நாளில் வருவதே இந்த சிவப்பெயர்ச்சி!

இந்த சிவப்பெயர்ச்சி தினத்தில் பகவானின் அருள் என்பது மிகப்பெரிய தடைகளை விலக்கும்

இன்றைய கலியுகத்தில் கடன் வியாபாரம் என பல வித மன அழுத்தத்தால் மனித குலம் அதீத கோபத்திற்கு ஆளாகிறது.

அப்படிபட்ட கோபத்தை அழித்து சாந்தம் அன்பு கருணை குணம் மாறக்கூடிய தினமே சிவப்பெயர்ச்சி.

ஏழரை சனி அஷ்டமசனி,ஜென்ம குரு ,ராகு,கேது தீவினைகள் என எல்லாவித கிரக தோஷங்களையும் விலக்கும் ஒரே தினம் தை மாதத்தில் வரும் கடைசி திங்கட்கிழமையே

அனைத்து ராசியினரும் சிவப்பெயர்ச்சி அன்று சிவனை சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் கடன்,நோய், விலகும்

சொல் வாக்கு செல்வாக்கு திரும்ப கிடைக்கும்.

மனம் அமைதி பெறும்.கோபம் குறையும் , வீட்டில் அமைதி தங்கும்
*பிப்ரவரி 6 ஆம் தேதி 2023 (தை 23 )தை மாதத்தில் வரும் கடைசி திங்கட் கிழமையன்று* அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்யுங்கள்.

சிவப்பெயர்ச்சிக்கான
விஷேச ஸ்தலம் எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறை அருகில் உள்ள முட்டம் குளத்தங்கரை கிராமத்தில் உள்ள " ஸ்ரீமஹாபலீஸ்வரர்"
சிவன் கோவிலே சிவப்பெயர்ச்சிக்கான
விஷேச ஸ்தலம் ஆகும்.

இது மஹாபலிச்சக்கரவர்த்தி தான் இழந்த செல்வம் புகழ் சொல்வாக்கு என அனைத்தையும் மீட்டெடுத்த தலமாகும்.

பல ஆயிரம் வருட பழமையான சிதிலமடைந்த சிவஸ்தலம்.

பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது.

மேலும் தகவலுக்காக தொடர்புக்கு
+91 9245773871

*பஸ் ரூட் :* மயிலாடுதுறை TO திருவாரூர் சாலையில் *மஞ்ச வாய்க்கால் பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்* கிழக்கு புறம் புற சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் *ஸ்ரீமஹாபலீஸ்வரர் ஆலயம்* உள்ளது..
ravi said…
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்

உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறுதுணையே.

- ராமானுஜ நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
கற்க/ புரிந்து சரியான பொருள் கொள்ளக் கடினமான
மறைகளை -

வேதங்களை
ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு -

அருளுவதற்கு
உலகில் வரும் சடகோபனைச் -

இப்பூவுலகில் அவதரித்த (காரிமாறன் எனும்) நம்மாழ்வாரை
சிந்தையுள்ளே பெய்தற்கு -

மிக்க விருப்பத்துடன் ஏற்றுக் கொண்ட
பெரியவர் சீரை -

மதுரகவியாழ்வாரின் சிறப்பையும், பெருமையையும்
உயிர்கள் எல்லாம் உய்தற்கு -
உதவும்

- உதவியருளும் (எம்பெருமானார் எனும்) இராமானுஜர்
எம் உறுதுணையே - !
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
💛💛💛💛💛💛💛💛💛💛💛

💛கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும். ஆனால் அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் தான் முடியும்.

💛வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை நீங்கள் எதிர் பார்த்தால் நாம் அன்றாடம் செய்யும் பழக்க வழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.

💛தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை கொள்ளாதீர்கள். எண்ணங்களில் நீங்கள் அழகாய் இருங்கள்.

💛💛💛💛💛💛💛💛💛💛

*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
[05/02, 07:36] +91 96209 96097: *ப்ருஹத் பானவே நமஹ* 🙏
பேர் ஒளி மிக்கவர
[05/02, 07:36] +91 96209 96097: ஸ்ருஷ்டிகர்த்ரீ *ப்³ரஹ்மரூபா* கோ³ப்த்ரீ கோ³விந்த³ரூபிணீ
சரீர சுகம், உலகக் கல்வி கொடுக்கும் வேத ஸ்வரூபமாக விளங்குபவள் 🙏
ravi said…
*மூதுரை-ஔவையார் பாடல்கள்*

*பாடல் 5 :*

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

*பொருள்:*

கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில்
மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
05.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 27)

Sanskrit Version:

श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्।।1.27।।

English Version:

shvasuraan suhradah cha eva
senayoh ubhayoh api |
taan samikshya sah kaunteyah
sarvaan banDhUn ava sThithaan ||


Shloka Meaning

Continue from shloka 26 where Arjuna was surveying the rival and his own camp,
Arjuna saw father in laws (in sanskrit shvasura means father in law),
friends (suhrd means friend implying one with a nice heart)
and many relatives (bandhu means relative) in both the competing armies.

Additional details;

Here, Arjuna is referred to Kaunteyah. Kaunteyah means son of Kunti.

Similar, Anjana's son is called as Anjaneya
Son of Vasudeva is called as Vaasudeva, son of Dasharatha is called as Daasharati.
Daugher of Janaka is called as Jaanaki and so on.

(This is the beauty of the Sanskrit language. Names are derived with a clear purpose).

The relative circle in the rival camps are as follows


Fathers - Bhurisravas and others
Grand Fathers - Bhishma and others
Teachers - Drona and others
Uncles - Saibhya and others
Brothers - Duryodhana and others
Sons - Lakshmana and others
Grandsons - The sons of Lakshmana and others
Friends - Ashwathaama and others
Fathers in law - Drupada and others
Well Wishers - Kritavarma and others

Jai Shri Krishna 🌺
ravi said…
இந்த ஸ்தோத்ரத்தை சொன்னால் ஸௌந்தர்யலஹரியில்
அத்தனை ஸ்தோத்ரங்களையும் பாரயணம் செய்த பலன்
கிடைக்கும் எப்படி?
विध्याविनयसम्पन्ने ब्रह्मणे गविहस्थिनि|
शुनि चैव श्वापके च पण्डिता: समदर्शिन: ||

என்பது சாஸ்த்ரம்.

எல்லா வித்யைகளுக்கும் பிரயோஜனம் வினய சம்பத்,
ஸகல வினயமும் இந்தக் கடைசி ச்லோகத்தில்
இருக்கிறது. ஆகையால் இதைப் பாராயணம் செய்தால்
எல்லா வித்தைகளும் தெரிந்து ,அனுபவித்து,வினயம்
உண்டாகும். ஆசார்யா வாக்கைப் பாராயணம் செய்ய
வேண்டுமானால் இந்த ச்லோகத்தைப் பாராயணம் செய்தாலே
போதும்..
பூஜை செய்யும்போது எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டு,
கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம்
இருக்கிறது, எல்லாவற்றிற்கும் முடிந்த தத்வத்தை இது
சொல்கிறது,

ப்ரதீபஜ்வாலாபி: திவஸகர நீராஜனவிதி::
ஸுதாஸூதேஸ்சந்த்ரோபலஜலலவைரர்க்யரசனா||
ஸ்வகீயைரம்போபி: ஸலிலனிதிஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர்வாக்பிஸ்தவ ஜனனி வாசாம் ஸ்துதிரியம்||

ஸ்தோத்ரம் பண்ணின வாக்கிற்கும், யாவர்க்கும் அம்பிகை
ஜனனி!
'நான் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கேன், எதைக் கொண்டு பண்ணினாய்
என்று கேட்டால்,நீதான் வாக் ஜனனியாக இருப்பதால் உன்னிடமிருந்ததைக்
கொண்டு பண்ணவேண்டாம் என்று பார்த்தேன்.உன்னை ஸ்தோத்ரம் பண்ண
எங்கே போகிறது? அவர்கள் வீட்டுப்பழத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்தேன்
என்பதுபோல சொல்லியிருக்கிறேன்.
நீதான் வாக்குக்கு எல்லாம் இருப்பிடம்! நீயே வாக் ஜனனி என்பதால் எல்லா
வாக்கும் உன்னுடையது அல்லவா? உன்னுடைய வாக்கைக் கொண்டே
உன்னை ஸ்தோத்ரம் செய்ய எப்படி தைர்யம் வந்தது?

ஸங்கிராந்தியில் எல்லோரும் ஸூர்ய பூஜை செய்வார்கள், சூரியன் மாதிரி
கோலம் போட்டு,அர்க்யம் பாத்யம் எல்லாம் கொடுத்துப் பூஜை பண்ணி கற்பூர
ஹாரத்தி செய்வார்கள்..அதைப்பார்த்து ஆசார்யாளும் 'நாமும் அது போல்
நாமும் அம்பிகையை ஸ்தோத்ரம் பண்ணலாம்" என்று எண்ணினார்.ஸர்வ
ப்ரகாசனான ஸூர்ய பகவானுக்கு நீராஜனம் பண்ணின மாதிரி நான் பண்ணினேன்
என்று சொல்லியிருக்கிறார்.
அமிர்தமயமான கிரணன் என்பது சந்திரனுக்கு ஒரு பெயர்,அவன் மிக சீதளமானவன்.
சந்திரக்காந்தக் கல்லில் சந்திற்உ ஆசார்யாள் சொல்கிறார். மூன்றாவதாக ஓர்
உபமானம், என்ன? ராமேஸ்வரத்தில் சமுத்ரராஜனுக்கு பூஜை செய்வதுண்டு. அதைப்
பண்ணுவதற்கு வீட்டிலிருந்து ஒரு சிறிய பாத்திரத்தில் ஜலம் கொண்டு போய், அதை
ஆபோ ஹி ஷ்டா என்று சொல்லி ஸமுத்ரத்தில் ப்ரோக்ஷணம் செய்வதுண்டு, அதைப்
போல் நானும்ம் செய்தேன் என்று அடுத்தபடியாகச் சொல்கிறார்.
இந்தக் கார்யங்களெல்லாம் செய்கிறபோது நான் பண்ணுவது மட்டும் தப்பா? என்று
அவர் நினைத்தார். எல்லா ஸ்தோத்ரங்களும் பண்ணி அம்பிகைக்கே அர்ப்பணம் செய்தார்!

ஸ்ரீ ஆசார்யாள் எதற்கு மேல் நினைக்க முடியாதோ அந்தத் தத்வத்தை சொன்னவர்,
அவரே இப்படித்தாழ்மையோடு சொல்கிறார். ஸாக்ஷாத் வாக் தேவியான உன்னுடைய
வாக்கிலிருந்து கோடியில் ஒன்றை எடுத்து உன்னையே ஸ்தோத்ரம் செய்திருக்கிறேன்
என்று!
ravi said…
*❖ 105 சஹஸ்ராராம்புஜாரூடா =*

சஹஸ்ரார பத்மத்தில் உயர்ந்தெழுபவள் (சஹஸ்ர சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட கமலமாக உச்சந்தலையில் திகழ்வதாக விவரிக்கப்டுகிறது)
ravi said…
அம்மா

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் உன் அழகை விவரிக்க முடியவில்லை 🐍

ஆயிரம் ரூபங்கள் கொண்ட ஹரியும் உன் எழிலை எடுத்துரைக்க முடியவில்லை ...

விண் தொட்ட மேகங்கள்

வான் அணைக்கும் மலைகள்

உன் மாண்பை அறிய வில்லை

துள்ளி ஓடும் மீன்கள்

பாட பள்ளிக்கு செல்லும் மான்கள்

தோகை விரித்து பாவை கவரும் மயில்கள்

அன்ன நடையில் அகிலம் வென்ற அன்னங்கள் ,

குரலில் தேன் சொரியும் குயில்கள்

எதுவும் உன் அழகை எட்ட வில்லை

ஆடலரன் ஆடுகிறான் ஆனந்த குத்தாட்டம்

அவன் பெற்ற தாரகை அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி என்ற ஆணவத்தில் ...

அணை போட முடியுமோ உன் கருணை வெள்ளத்திற்கு ?

தடை போட முடியுமோ தவழ்ந்து வரும் உன் தாய்மையின் மென்மைக்கு ... ?

தமிழ் வார்த்தை தீருமோ உன் அழகை சொல்லில் செதுக்குவதற்கு .... 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

62 –
நொந்திடாது உந்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

உனை அடைவது சுலபமோ ... ?

உன் எழில் காணுவது முடியுமோ ?

உன் அருள் இன்றி உன் தாள் பணிய முடியுமோ ?

எனை வருத்தி உன் வசம் கொண்டாய் ...

என் பிணிக்கு மருந்தானாய் ...

உனை நினையா நாள் பிறக்காமல் வைத்தாய்

உன் பாதம் காண வைத்தாய் ...

பாதங்கள் பதிய இடம் கோடி இருக்க என் சென்னி தனை தேர்ந்தெடுத்தாய்

அயன் வியக்கும் வண்ணம் என் கொடிய ஊழ் வினை தனை நீக்கி அவன் போட்ட எழுத்தை அழித்தாய் ...

என் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் உன் அருட்புணலால் நீ யே துடைத்தாய் ...

எனை உனதாக்கி எனை நீ அழித்தே எமனாக வந்தாய் ...

என் சொல்வேன் ... ?

கருணை எமனுக்கும் உண்டு என்றே உணர வைத்தாய் ...

விடை ஏறும் எமன் எவரும் கண்டதுண்டோ ...

வினை தீர்க்கும் விமலன் இவன்

அறிந்து கொண்டோர் ஹரிக்கும் அன்பர் அன்றோ 🙌🙌🙌🙌
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 479* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*202 सर्वेश्वरी ஸர்வேச்வரீ --*

சகல அகில புவன லோகங்களுக்கும் உண்டான ஒரே தெய்வம் ஸ்ரீ லலிதாம்பிகை.

அவளுக்கு மிஞ்சியதோ, சமமோ வேறொன்றும் இல்லாதவள்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 75*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।

स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥ ६०॥

60. Aadhikshan mama guru rad Aadhi kshanthaa aksharathmikaam vidhyam,

Swadhista chapa dandaam nedishtameva kama peeta gathaam.

ஆதிக்ஷன்மம குருராடாதிக்ஷான்தாக்ஷராத்மிகாம் வித்யாம் |

ஸ்வாதிஷ்டசாபதண்டாம் னேதிஷ்டாமேவ காமபீடகதாம் ||60||
ravi said…
மூகர் இந்த ஸ்லோகத்தில் இப்படி தனது குருவினால் தான் பெற்ற அனுக்ரஹத்தை,
இனியவளாக, கரும்புவில்லேந்திய காமாக்ஷியின் அருளை, தரிசனத்தை பெற்றதாக நன்றி கூறுகிறார்.🪷🪷🪷
ravi said…
முனியார் துயரங்கள் முந்திலும்

இன்பங்கள் மொய்த்திடினும்

கனியார் மனம் கண்ணமங்கை

நின்றானைக் கலை பரவும்

தனி யானையைத் தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்

இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.

--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
ravi said…
துன்பங்கள் மிகுந்தாலும் வெறுப்புணர்வு/வருத்தம் கொள்ளாதவர்,

இன்பங்கள் மொய்த்திடினும் -

(தமது) உள்ளக் களிப்பு கொள்ளாதவர்

திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தில் நின்று ஆளும் பக்தவத்சலப் பெருமாளை

சாத்திரங்கள், தோத்திரங்கள், ஆயகலைகள் என அனைத்தாலும் போற்றித் துதிக்கப்படுகிற,

ஒப்பிலாத, ஒரு வீறு கொண்ட யானையைப் போல விளங்குகிற அந்தப் பரந்தாமனை,

(பெரியதிருமொழி உட்பட்ட ஆறு பிரபந்தங்கள் அருளி)

குளிர்த்தமிழ்ப் பாசுரங்களால் போற்றிய திருமங்கை மன்னனை

தனக்கு இந்தப் பூவுலகில் மிக்க உவப்பானவராக (உள்ளத்தில்) ஏற்ற

எங்கள் இராமானுசனை -

வந்தடைந்து (திருவடி) பணிந்தனரே!🙌🙌🙌
ravi said…
🌹🌺 "Mahan, an incarnation of Bhakta Prahlada who healed the ailments and physical disabilities of his devotees wherever he went - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Sri Raghavendra Swami (1595-1671), was a 16th century Hindu saint.

🌺He is also a Madhvar of Vaishnavism
He was also the preacher of established Dvaitism. He is considered to be an incarnation of Prahlada, a devotee of Vishnu.

🌺His followers believe that he performed many miracles during his lifetime and continues to bless his devotees even today.


🌺Sri Raghavendra Swami went on various pilgrimages after enshrining the pedestal. Wherever he went, he was involved in spreading Srimad Acharya's ideology, winning debates with scholars who supported other opposing ideologies, writing notes, teaching students the Shastras and encouraging local scholars.

🌺 Wherever he went he blessed his devotees by healing their defects and physical disabilities.

🌺He attained the state of Samadhi (Jiva Samadhi) alive in Brindavan at Mandiralayam in Andhra Pradesh.

🌺Raghavendra Math (Raghavendra Math) Also known as Irayar Math and Kumbakonam Math, it is one of the three main Dvaita Vedanta Maths centered around Mandiralaya.

🌺Iragavendra Mutt is located in Mandiralaya located on the bank of Dungapatrai river in Karnool district of Andhra Pradesh state of India.

🌺Guru Raghavendra Slokam🌹

🌺🌹Poojaya Raghavendraya Satya Dharma Rathayasa |
Bajadham kalpavrukshaya namadham kamadenave ||🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்த பக்த பிரஹலாதரின் அவதாரமான மகான் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார்.

🌺இவர் வைணவ நெறியையும் மத்வர்
நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார்.

🌺இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர்.


🌺ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார்.

🌺அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

🌺ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.

🌺இராகவேந்திர மடம் (Raghavendra Math) இராயர் மடம் எனவும் கும்பகோணம் மடம் எனவும் அழைக்கப்படும் இது மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் மந்திராலயத்தை மையமாகக் கொண்ட முக்கியமான ஒன்றாகும்.

🌺இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மந்திராலயத்தில் இராகவேந்திர மடம் அமைந்துள்ளது.

🌺 *குரு ராகவேந்திரர் சுலோகம்* 🌹

🌺🌹பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
06.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 28)

Sanskrit Version:

कृपया परयाऽऽविष्टो विषीदन्निदमब्रवीत्।
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्।।1.28।।

English Version:

krupayaa parayaa aavishtah
vishIdan idam abraveet |
drushtvaaa imam svajanam krishna
yuyutsum samupasThitam ||


Shloka Meaning

Krupaa means pity, compassion and kindness.
paraa means deep.

Moved by the people he saw in the rival armies, Arjuna was filled with deep pity.
Filled with extreme sorrow, Kaunteyah (Arjunah) started speaking thus.

Additional details:

After seeing that the warriors who are assembled for the dharma yuddhah
are all his svajana (relatives, acharyas etc ), Arjuna starts speaking to Krishna.

Krupaa is a good attribute to have for a human being under normal circumstances.
Here, a Arjuna, a Kshatriya, is called to do battle.
Maya overtakes his mind and he wallows in pity and sorrow."

Jai Shri Krishna 🌺
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரஸத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த ஐம்புலன்களும் புதிதாக ஒன்றை உண்டாக்கவில்லை. வெளியே உண்டாகி இருக்கிற சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்களை இவை உணர்கின்றன. ரேடியோ ஸெட் மின்ஸார சப்த அலைகளைப் பிடிப்பது போல் இவை எப்படியோ வெளியில் இருப்பவற்றை அறிந்து பிடித்துக்கொண்டு மூளைக்கு அனுப்பி வைக்கின்றன.
ravi said…
காரியம் செய்து புதிதாக ஒன்றைப் படைக்காமல், வெறுமே கிரகித்து நமக்கு அறிவிப்பதால், இந்தப் புலன்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். கை, கால் போல காரியம் செய்கின்ற புலன்களுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர். நாக்கு ஞானேந்திரியமாக இருந்து ரஸத்தை உணர்வதோடு, பேச்சு என்று காரியத்தால் புதிதாக சப்தத்தைப் படைக்கவும் செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது.

ravi said…
ஞானேந்திரியங்களான ஐம்புலன்களுக்கும் ஆசிரயமாக இருப்பனவே பஞ்ச பூதங்கள் என்கிற ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பிரபஞ்ச சக்திகள். சப்தம் மட்டுமே ஆகாசத்தில் உண்டு. ஓம்கார நாதமாகிய பிரணவம் ஆகாயத்தில் நிரம்பியிருக்கிறது. பலர் கூடியிருக்கிற இடத்தில் பல தினுசான பேச்சுச் சப்தம் உண்டானாலும் ‘ஓ’ என்ற ஓசையொன்றே கேட்கிறது. சமுத்திரம் ‘ஓ’ என்கிறது. ஒரு சங்கைக் காதில் வைத்துக் கொண்டால் ‘ஓ’ சப்தம்தான் கேட்கும். “ஏன் ‘ஓ’ என்று கத்துகிறாய்?” என்றுதான் கேட்கிறோம். ‘ஓ’வுக்கு ஒரு புள்ளி வைத்து முடித்தால் ‘ஓம்’ இதுதான் எங்கும் இருப்பது. வாயுவில் சத்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நம்மீது காற்றுப்பட்டால் நமக்குக் காற்றுதான் படுகிறது என்று புரிகிறது அல்லவா? நெருப்புக்கு ஸ்பரிசத்தோடு ரூபமும் இருக்கிறது. தீயைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஜலத்துக்கு இவற்றோடு ரஸம் (சுவை) என்பதும் உள்ளது. அதை நாம் நாக்கில் விட்டுக்கொண்டு குடிக்கிறோம். மண்ணுக்கு மணமும் உள்ளது. மண் என்றால் மண்ணில் விளைகிற எல்லாம் அதில் அடங்கும். நாம் கண்டும் கேட்டும், ருசித்தும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் இவற்றையெல்லாம் அநுபவிக்கிறோம்.

ravi said…
ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரண சந்திரனின் காட்சி இவை நமக்கு ஐம்புலன்களாலே அநுபவத்துக்கு வருகின்றன. மனிதனுக்கு இந்த ஐம்புலன்களைத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலிய அழகுகளையும் வைத்திருப்பவர் ஸ்வாமி. அவரது கிருபையால்தான் சகல இன்பங்களும் கிடைக்கின்றன. நம்மால் ஒரு மணி அரிசி சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமியே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, அதன் அழகுகளை நாம் அநுபவிப்பதற்காக நமக்கு பஞ்ச இந்திரியங்களையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். ஆனபடியால் நமது புலன்களால் அநுபவிக்கும் இன்பங்களை ஸ்வாமியின் நினைவோடு அநுபவிப்பதே நமது கடமையும் தர்மமுமாகும்.

ravi said…
அவருக்கு இந்த இன்பங்களை முதலில் அர்ப்பித்து அவரது பிரஸாதமாகவே இவற்றை நாம் ஏற்க வேண்டும். இந்த வழக்கம் நிலைப்பட்டால் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யத்தகாத எந்தப் பொருளையும் நமது புலன்களால் அநுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.

பஞ்சேந்திரியங்களால் அநுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவனையில் பிறந்ததுதான் பஞ்சோபசாரம் என்கிற ஐந்து உபாசாரங்கள். கோயிலிலும் வீட்டுப் பூஜையிலும் ஸ்வாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரம் செய்யவேண்டும். ஸ்வாமியின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியனவே பஞ்சோபச்சாரங்கள். இவற்றில் சந்தனமிடுவது கந்தம் – பிருதிவி தத்துவம் என்ற மண்ணைக் குறிப்பது. புஷ்பம் ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது. தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அமிருதமாகிய நீரைக் குறிப்பது, எனவே பஞ்ச பூதங்களும் பஞ்சோபசாரத்தில் அடக்கம். பஞ்ச பூதங்களிலிருந்துதான் பஞ்சேந்திரியங்களின் அத்தனை நுகர்ச்சி வஸ்துக்களும் உண்டாகின்றன. ஆகவே, பஞ்சோபசாரத்தில் ஈசுவரன், பிரபஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுபடுத்தப் பெறுகின்றன.
ravi said…
சிந்தை முழு தெந்தை- சிவன்
வந்துப் பதம் தந்து -நிதம்
சிந்துக் கவி உந்தப்- பல
விந்தைப் பொருள் அருள்வாயே சங்கரா...
ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
[06/02, 17:13] Jayaraman Ravilumar: *கந்தர் அநுபூதி*

பதிவு 80 started on 6th nov

*பாடல் 26* ...💐💐💐
[06/02, 17:14] Jayaraman Ravilumar: *பாடல் 26 ... ஆதாரம் இலேன்*

(திரு அருள் பெற)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே

நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே

வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.
[06/02, 17:16] Jayaraman Ravilumar: *வேத ஆகம ஞான விநோத ...*

வேதங்களிலும் ஆகமங்களிலும்
காணப்படுகின்ற உட்பொருளான ஞானத்தையே வடிவாகக்
உடையவனே,

*மன அதீத ...* மனதிற்கு எட்டாத நிலையில் இருப்பவனே,

*சுர லோக சிகாமணியே ...*

தேவலோகத்தின் முடி மணியாக
விளங்குபவனே,

உனது திருவடியை அன்றி வேறு ஒரு பற்றுக்
கோடும் இல்லாத அடியேன்,

*திருவருளைப் பெற்று உய்யுமாறு,*

*நீ தான் ஒரு சற்றும் நினைந்திலையே ..* .

நீ ஒரு சிறிதேனும்
நினைக்க வில்லையே (நினைத்து அருள் புரியவும்
ravi said…
[06/02, 17:09] Jayaraman Ravilumar: ஆனந்தா3ச்ருபி4-ராதனோதி புலகம் நைர்மல்யதச்-சா2தனம்

வாசா சங்க1முகே2 ஸ்திதைச்ச ஜட2ராபூர்த்திம் சரித்ராம்ருதை: |

ருத்3ராக்ஷைர்-ப4ஸிதேன தே3வ வபுஷோ ரக்ஷாம் ப4வத்-பா4வனா-

ப4ர்யங்கே விநிவேச்ய ப4க்தி-ஜனனீ ப4க்தார்ப4கம் ரக்ஷதி || 62
[06/02, 17:11] Jayaraman Ravilumar: மஹா தேவா!

நினது பக்தியாகிய தாய், பக்தனான குழந்தையை ஆனந்தக்கண்ணீரைக் கொண்டு மயிர்க்கூச்சல் ஏற்படும்படி குளிப்பாட்டி, மாசற்ற மனமென்னும் ஆடையுடுத்தி, வாக்கு என்னும் சங்கத்தின் (பாலாடையினை) வாயிலாக நினது

சரித்திர மெனும் அமிருதத்தை நிறைய அருந்தச் செய்து, ருத்ராக்ஷ மாலை, விபூதிகளைக்கொண்டு உடல் ரக்ஷை செய்து,

தியானமாகிய தொட்டிலில் படுக்கவைத்துக் காக்கிறாள்.
ravi said…
[06/02, 17:00] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 459* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[06/02, 17:02] Jayaraman Ravilumar: அஜஸ்: ஸர்வேச்’வரஸ் : ஸித்த:

ஸித்திஸ் :‌ ஸர்வாதி
அச்யுத : |

*வ்ருஷாகபிரமேயாத்மா*
ஸர்வயோக வினிஸ்ருத: ||11
[06/02, 17:02] Jayaraman Ravilumar: *103. அமேயாத்மநே நமஹ (Ameyaathmane namaha)*🦚🦚🦚
ravi said…
பிரகலாதனின் சரித்திரம் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!

“நானே கடவுள்” என்று கூறிக் கொண்டிருந்தான் இரணியன் என்னும் அசுரன்.

அவனது மகனான பிரகலாதன், சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான்.

எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

“நீ நாராயணனை வணங்காதே, என்னைத் தான் வணங்க வேண்டும்! ‘இரண்யாய நமஹ’ என்று சொல்!” என்று
எச்சரித்தான் இரணியன்.

அதை மறுத்த பிரகலாதனைப் பலமுறை கொல்ல முயன்றான் இரணியன்.
ravi said…
*தினமும் ஒரு திருவாசகம்* 🪷🪷🪷 13

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
ravi said…
ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன.

இதன் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில் *ஸ்ரீ ருத்ரம்* மந்திரம் உள்ளது.

அந்த மந்திரத்தின் நடுவில் *நமசிவாய* என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது.

வேதங்களின் நடுவில் வைத்து போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் ‘ *நமசிவாய* ’.

மாசில் வீணை என்ற பதிகத்தின் இரண்டாம் பாடலில் *நமசிவாய* என்னும் தூல பஞ்சாட்சரத்தின் பெருமை அப்பர் பேசுகின்றார்.

*நமசிவாய* என்னும் ஐந்தெழுத்தை முறையாக ஓதினால் அதுவே நன்னெறிக்கண் கொண்டு செலுத்தும் என்கிறார்.

ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் இப்பஞ்சாக்கரத்தை ஓதினால் அதுவே கல்வியைத் தரும்.

அதன் வாயிலாகக் கலைஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் தரும்.

மந்திர சாத்திர வித்தையும் கைவரும்.

எல்லாம் ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுவதால் கிடைக்கும்.

நல்ல நெறியும், அதனால் வீடுபேறும் கிடைக்கும் என்கிறார்.
ravi said…
நமசிவாயவே ஞானமும் கல்வியும்

நமசிவாயவே நான் அறி விச்சையும்

நமசிவாயவே நாநவின் றேத்துமே

நமசிவாயவே நன்னெறி காட்டுமே. -
ravi said…
ஸ்ரீராமர் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது.

அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது.

இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன.

இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும்.

ravi said…
போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள்.

அதைக் கவனித்த ராமர் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.

ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது.

ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள்.

தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன்.

ravi said…
ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன்.

கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.

வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன்.

கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது.

தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன்.

தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது.

கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது.

திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது.

சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை.

ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது.

சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை

நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது

இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது.

இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது.

முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள்.

நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள்.

ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது.

எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள்.

அப்போது ராமர் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா? பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார்.

அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன்.

அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமர்.

ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான்.

தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன்.

ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார்.

உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமர்.

அனுமனும் ராமரும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள்.

பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன்.

சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமர் ஒரு இடத்தில் நின்றார்.

அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார்.

ராமர் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு.

இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள்.

சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான்.

அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன.

பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள்.

எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள்.

வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம்.

உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம்.

எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின.

அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமர் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.

ராமர் அனுமனைப் பார்த்து சொன்னார்

அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா?

இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம், எதிலும் வெற்றியும், கிட்டும் என்று வாழ்த்தினார்.

கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.

ஸ்ரீராம ஜய ராம ஜய ஜெய ராமா..!
ravi said…
_*இரவு சிந்தனை 🤔*_


மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
இரண்டே வழிகள் தான்....

ஒன்று சூழ்நிலையை
மாற்றுங்கள்....

இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப
நீங்கள் மாறி விடுங்கள்...!!

*இரவு இனிதாகட்டும் 😴*
*விடியல் நலமாகட்டும்😍*


╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺"🌺 *ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஒருவன் தொடந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் ,ஒருவர் கிருஷ்ணரின் பாத கமலங்களில் மனதை நிலை நிறுத்த முடியும் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன

🌺 தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை.

🌺இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?

🌺வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம்.

🌺அதுபோலவே அனைத்து கிரகங்களும் அதிவேகத்தில் சுற்றும்போதும் தத்தமது சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகுவதில்லை; ஏனெனில், பிரபஞ்சத்திற்கென்று ஒரு நிர்வாகம் செயல்படுகிறது.

🌺ஒரு கார் மணிக்கு எழுபது மைல் வேகத்தில் செல்கிறது; ஆனால், பூமி அதைவிட பல மடங்கு வேகமாகச் சுற்றுகிறது.

🌺பூமியின் அமைப்பு அருமையாகவும் பக்குவமாகவும் உள்ளது. இஃது எவ்வளவு பக்குவமாகச் செயல்படுகிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

🌺மனத்தை கட்டுப்படுத்த, இந்த கலியுகத்தில் தியான முறையை விட தொடர்ச்சியான புனித நாம ஜபம் மட்டுமே அதிக பலன் தரக் கூடியது.

🌺மனம் என்பது சஞ்சலமுடையது, மினுமினுக்கும் ஒளி போன்றது மற்றும் மிகத் திடமாக மாறக் கூடியது. அதனால் அர்ஜுனன் மனத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் , காற்றை அடக்குவது போல் சிரமமானது.

🌺நம் மனம் பக்தி-யோகத்தில் ஈடுபடுத்தப்பட்டால், கிருஷ்ணரின் அருளால் ஒருவர் சுலபமாக அதை கட்டுப்படுத்த முடியும்.

🌺ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஒருவன் தொடந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் ,ஒருவர் கிருஷ்ணரின் பாத கமலங்களில் மனதை நிலை நிறுத்த முடியும்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
[07/02, 07:27] +91 96209 96097: *புரந்தராய நமஹ*🙏🙏
அசுரர்களை இருப்பிடத்தோடு அழிப்பவர்
[07/02, 07:27] +91 96209 96097: ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்³ரஹ்மரூபா கோ³ப்த்ரீ *கோ³விந்த³ரூபிணீ*
வேத ஸ்வரூபமாக இருந்து ஸ்தூல சுஷ்ம சரீரங்களை காப்பவள் 🙏
ravi said…
🌹🌺"🌺A simple story to explain that by continuously chanting the Hare Krishna Maha Mantra, one can fix one's mind on the lotus feet of Krishna 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Outside the window we hear the sound of speeding vehicles. But, these vehicles move carefully within the bounds of a certain track

🌺 If they cross paths, they will collide with each other and cause an accident. Similarly, each of the planets has a finite speed. There are billions of planets around. But, they don't collide.

🌺How was this regulation designed? Who laid the path for planets to travel in this open space?

🌺Vehicles are regulated to move within a specific lane. Who developed this method? Police Department, Govt.

🌺Similarly, all the planets do not deviate from their orbit even when they rotate at high speed; Because there is an administration working for the universe.

🌺A car travels at a speed of seventy miles per hour; But the Earth rotates many times faster than that.

🌺 Earth's structure is beautiful and mature. We cannot even fathom how mature it is.

🌺Continuous chanting of the Holy Name is more effective than meditation in this Kali Yuga to control the mind.

🌺The mind is fickle, like a flickering light and can become very solid. So controlling Arjuna's mind is an impossible task, as difficult as controlling the wind.

🌺If our mind is engaged in bhakti-yoga, one can easily control it by Krishna's grace.

🌺 As one keeps chanting the Hare Krishna Maha Mantra, one can fix the mind on the lotus feet of Krishna.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺

-----
🌺🌹Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
🌹🌺"🌺A simple story to explain that by continuously chanting the Hare Krishna Maha Mantra, one can fix one's mind on the lotus feet of Krishna 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Outside the window we hear the sound of speeding vehicles. But, these vehicles move carefully within the bounds of a certain track

🌺 If they cross paths, they will collide with each other and cause an accident. Similarly, each of the planets has a finite speed. There are billions of planets around. But, they don't collide.

🌺How was this regulation designed? Who laid the path for planets to travel in this open space?

🌺Vehicles are regulated to move within a specific lane. Who developed this method? Police Department, Govt.

🌺Similarly, all the planets do not deviate from their orbit even when they rotate at high speed; Because there is an administration working for the universe.

🌺A car travels at a speed of seventy miles per hour; But the Earth rotates many times faster than that.

🌺 Earth's structure is beautiful and mature. We cannot even fathom how mature it is.

🌺Continuous chanting of the Holy Name is more effective than meditation in this Kali Yuga to control the mind.

🌺The mind is fickle, like a flickering light and can become very solid. So controlling Arjuna's mind is an impossible task, as difficult as controlling the wind.

🌺If our mind is engaged in bhakti-yoga, one can easily control it by Krishna's grace.

🌺 As one keeps chanting the Hare Krishna Maha Mantra, one can fix the mind on the lotus feet of Krishna.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺

-----
🌺🌹Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
07.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 29)

Sanskrit Version:

सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते।।1.29।।

English Version:

Sidanti mama gaatraaNi
mukham cha parishushyati |
vepuThascha sharire me
roma harsham cha jaayate ||


Shloka Meaning

Arjuna continues his response after pity over takes him on seeing
his own people in rival camps in the battle field.

My limbs are weakening and failing.
My mouth is going dry.
My body is trembling.
My hair stands upright."

Jai Shri Krishna 🌺
ravi said…
06.02.2023:
"Gita Shloka (Chapter 1 and Shloka 28)

Sanskrit Version:

कृपया परयाऽऽविष्टो विषीदन्निदमब्रवीत्।
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्।।1.28।।

English Version:

krupayaa parayaa aavishtah
vishIdan idam abraveet |
drushtvaaa imam svajanam krishna
yuyutsum samupasThitam ||


Shloka Meaning

Krupaa means pity, compassion and kindness.
paraa means deep.

Moved by the people he saw in the rival armies, Arjuna was filled with deep pity.
Filled with extreme sorrow, Kaunteyah (Arjunah) started speaking thus.

Additional details:

After seeing that the warriors who are assembled for the dharma yuddhah
are all his svajana (relatives, acharyas etc ), Arjuna starts speaking to Krishna.

Krupaa is a good attribute to have for a human being under normal circumstances.
Here, a Arjuna, a Kshatriya, is called to do battle.
Maya overtakes his mind and he wallows in pity and sorrow."

Jai Shri Krishna 🌺
ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை."*

*_✍️ 07, Tuesday, Feb., 2023_*

https://www.srimahavishnuinfo.org

*🧿''கூடா நட்பு .."*

*♻️ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள்.*

*♻️அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது*
*நல்ல நட்பு இதயம் போல உனக்குத் தெரியாமலே உனக்காகத் துடிக்கும்!*

*♻️நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள்*

*♻️நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.*

*♻️தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.*

*♻️திடீர் என்று வருபவர்களைத் தெரியாமல் நட்பாக்கிக் கொண்டால் அந்த நட்பு கேடாய் தான் முடியும்*

*♻️'மனம் கனத்து இருக்கிறது., பணம் எனக்குத் தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவை இருக்கு' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள்.*

*♻️நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்,*

*♻️அதே போல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்டச் சொல்வார்கள் அவர்கள் நல்ல பாம்பின் விஷம் போன்றவர்கள்*

*♻️நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன்.*

*♻️நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும் அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது*

*♻️'உங்கள் நண்பர்களுடன் பேசும் போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள்.*

*♻️எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.*

*♻️சில நண்பர்களோடு பழகும் போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.*

*♻️உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்கு பேரை நினையுங்கள்.*

*♻️அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்கள் என்றால் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!*

*⚽எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர் அதன் வலி தாங்க முடியாதது. எல்லோரும் எல்லாவர்களுக்கும் நல்லவராய் இருக்க முடியாது*

*🏵️எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
🌹🌺"🌺A simple story to explain that by continuously chanting the Hare Krishna Maha Mantra, one can fix one's mind on the lotus feet of Krishna 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Outside the window we hear the sound of speeding vehicles. But, these vehicles move carefully within the bounds of a certain track

🌺 If they cross paths, they will collide with each other and cause an accident. Similarly, each of the planets has a finite speed. There are billions of planets around. But, they don't collide.

🌺How was this regulation designed? Who laid the path for planets to travel in this open space?

🌺Vehicles are regulated to move within a specific lane. Who developed this method? Police Department, Govt.

🌺Similarly, all the planets do not deviate from their orbit even when they rotate at high speed; Because there is an administration working for the universe.

🌺A car travels at a speed of seventy miles per hour; But the Earth rotates many times faster than that.

🌺 Earth's structure is beautiful and mature. We cannot even fathom how mature it is.

🌺Continuous chanting of the Holy Name is more effective than meditation in this Kali Yuga to control the mind.

🌺The mind is fickle, like a flickering light and can become very solid. So controlling Arjuna's mind is an impossible task, as difficult as controlling the wind.

🌺If our mind is engaged in bhakti-yoga, one can easily control it by Krishna's grace.

🌺 As one keeps chanting the Hare Krishna Maha Mantra, one can fix the mind on the lotus feet of Krishna.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺

-----
🌺🌹Sarvam Shri Krishnarppanam 🌹🌺
ravi said…
🌹🌺"🌺 *ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஒருவன் தொடந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் ,ஒருவர் கிருஷ்ணரின் பாத கமலங்களில் மனதை நிலை நிறுத்த முடியும் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன

🌺 தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை.

🌺இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?

🌺வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம்.

🌺அதுபோலவே அனைத்து கிரகங்களும் அதிவேகத்தில் சுற்றும்போதும் தத்தமது சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகுவதில்லை; ஏனெனில், பிரபஞ்சத்திற்கென்று ஒரு நிர்வாகம் செயல்படுகிறது.

🌺ஒரு கார் மணிக்கு எழுபது மைல் வேகத்தில் செல்கிறது; ஆனால், பூமி அதைவிட பல மடங்கு வேகமாகச் சுற்றுகிறது.

🌺பூமியின் அமைப்பு அருமையாகவும் பக்குவமாகவும் உள்ளது. இஃது எவ்வளவு பக்குவமாகச் செயல்படுகிறது என்பதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

🌺மனத்தை கட்டுப்படுத்த, இந்த கலியுகத்தில் தியான முறையை விட தொடர்ச்சியான புனித நாம ஜபம் மட்டுமே அதிக பலன் தரக் கூடியது.

🌺மனம் என்பது சஞ்சலமுடையது, மினுமினுக்கும் ஒளி போன்றது மற்றும் மிகத் திடமாக மாறக் கூடியது. அதனால் அர்ஜுனன் மனத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் , காற்றை அடக்குவது போல் சிரமமானது.

🌺நம் மனம் பக்தி-யோகத்தில் ஈடுபடுத்தப்பட்டால், கிருஷ்ணரின் அருளால் ஒருவர் சுலபமாக அதை கட்டுப்படுத்த முடியும்.

🌺ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை ஒருவன் தொடந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் ,ஒருவர் கிருஷ்ணரின் பாத கமலங்களில் மனதை நிலை நிறுத்த முடியும்

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
https://chat.whatsapp.com/JCdQBXPm76747NBLSo1PZh

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சில சிவன் கோயிலில் நந்திக்கு முன் ஆமை இருப்பதன் தத்துவம் பற்றிய பதிவுகள் :*
 
ஆமை தனது உறுப்புகளை ஓட்டுக்குள் இழுப்பது போல, புலன்களிலிருந்து தனது புலன்களை விலக்கக்கூடிய ஒருவன், முழுமையான உணர்வில் உறுதியாக நிலைத்திருப்பான்.

இதேபோல், நாம் ஆன்மீக சூழ்நிலையில் இல்லாதபோதும், ஆன்மீக கலாச்சாரத்தின் ஒரு இடத்திற்குள் நமது புலன்களை முழுமையாகப் பயன்படுத்தும்போது நம் புலன்களைத் திரும்பப் பெறுவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக நந்தி (காளை) சிலைக்கு அருகில் ஆமை சிலை வைக்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். 

முதலில் நந்தியின் அடையாள அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். நந்தி என்பது முழு பக்தி. அதுதான் "பக்தி". 

மறுபுறம் ஒரு ஆமை பற்றின்மையை குறிக்கிறது. அதுதான் "வைராக்யம்". பக்தியும் பற்றின்மையும் சேர்ந்து நம்மை இறைவனின் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. 

ஒரு ஆமை அதன் ஓட்டில் தன்னை முழுவதுமாக கூட்டி வைத்துக் கொள்ளும். ஒரு யோகி தியானம் செய்யும் போது உலகத்திலிருந்தும் தன்னைத் தானே விலக்கிக் கொண்டு, தன் தியான ஓட்டுக்குள் நுழைகிறார். 

அவர் பொருள் உடைமைகளையோ அல்லது அவற்றைப் பற்றிய சிந்தனையையோ துறக்கிறார்.

மேலும், ஆமை அதன் முட்டைகளை ஒரு விசித்திரமான முறையில் குஞ்சு பொரிக்கிறது. அவள் அவற்றை குஞ்சு பொரிப்பதற்காக அவற்றின் மேல் உட்காரவில்லை, ஆனால் தொடர்ந்து அவற்றைப் பார்த்து தன் கவனத்தைச் செலுத்துகிறது. இது கண்கள் யோக வாயில் என்பதை சொல்கிறது.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
கருணை என்னும் வாரிதியே

காஞ்சி நகர் பெரும் தவமே

காமகோடி பீடமதன் கதிரொளியே

கண்ணொளியால் அருள் வழங்கும் அத்புதமே

அருமறைத்தேன் பொழிமுகிலே

ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே

தருணமதை நோக்காமல்

காரணமும் கருதாமல்
தண்ணளியால்

காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து
பரிவுடனே

அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே

பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன், ஏற்றருளே !!
ravi said…
❖ 106 *சுதாசாரபிவர்ஷிணி* = அம்ருத பிரவாகமாகப் பொழிபவள்🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
ravi said…
அம்மா நீ சிந்தும் வார்த்தைகள் மதுரமோ

உன் குரல் வாணீயின் கச்சபீக்கு வந்த சோதனையோ

அம்மா உன் கரங்கள் அமிர்தம் தோய்த்து செய்தவையோ

உன் பாதங்கள் பஞ்சு அஞ்சும் மென்மை கொண்டவையோ

உன் விழிகள் ஆறுமுகன் வேலுக்கு ஓர் எதிரியோ

உன் இடை எடை கொண்ட மாந்தர்க்கு விடை தரும் களஞ்சியமோ

உன் விரல்கள் விஷம் முறிக்கும் விந்தை கற்றவையோ

உன் காரூண்யம் எதிரி இல்லா ராஜ சபையோ

உன் கருணை பாய்ந்து வேர்த்து ஓடி வரும் கங்கைக்கு போடா பாலமோ

எதனுடன் ஒப்பிடுவேன் எதுவும் உனை வெற்றி கொண்டதுண்டோ ...

ஒப்பிட்டு பார்க்கும் வேளையில் சப்பிட நாவும் மூப்பு அடைந்து போகின்றதே 🙌🙌🙌
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

63 –
நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா (அ)
ravi said…
நாள் என் செய்யும் அருணாசலா

கோள் என் செய்யும் கொடும் கூற்று என் செய்யும் அருணாசலா ..

நீ என் உளமே புகுந்த பின் எனை வெல்வோர் எவருண்டு *அருணாசலா* ... ?

காசி சென்று கங்கை மூழ்கி பாவம் தொலைக்க நினைத்தேன் *அருணாசலா* ...

காடு சென்று மதியின் களி நடனம் காணத் துடித்தேன் *அருணாசலா*

விஷம் கொண்ட உணர்வுகள் முறித்து போக கரு நாகம் அதை தேடினேன் *அருணாசலா*

புலித்தோல் மீது அமர்ந்து மான்களுடன் நுனிப் புல் மேய ஆசை கொண்டேன் *அருணாசலா*

எல்லாம் ஓரிடம் என்றே உணர்ந்தேன் உன் நல்வரவு என் உள்ளமதில் கிடைக்கப்பெற்றேன்

எல்லாம் நல்லது எதுவும் நல்லது என்றே மனம் ஆனந்த நடனம் புரியக்கண்டேன் *அருணாசலா* 💐💐💐
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 76*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
ravi said…
तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया ।

स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया ॥ ६१॥

61. Thushyami harshitha smara sasanayaa, Kanchipura kruthaasayaa,

Swasanayaa sakala jagad bhasanayaa kalithasambarasanayaa

துஷ்யாமி ஹர்ஷிதஸ்மரஶாஸனயா காஞ்சிபுரக்றுதாஸனயா |

ஸ்வாஸனயா ஸகலஜகத்பாஸனயா கலிதஶம்பராஸனயா ||61||
ravi said…
அம்பாள் காமாக்ஷி தேவி பரமேஸ்வரனுக்கும் பக்தர்களுக்கும் பரம சந்தோஷத்தை அளிப்பவள்

பிரபஞ்சத்தில் உள்ள சகல ஜீவன்களுக்கும் ப்ரம்மமே ஆதாரம்,

அந்த பிரம்மமே உருவானவள் அம்பாள்.

பிரபஞ்சத்தில் சகலமும் திருப்தி அடைய செய்பவள் அம்பாள்.

காஞ்சிபுர க்ஷேத்ரத்தில் நிலையாக வாசம் செயது மகிழ்பவள்.

மன்மதன் சம்பரன் எனும் அசுரனை வதம் செய்து சம்பராசனன் என்ற பெயர் பெற்றவன்.

அவனை பரமேஸ்வரன் நெற்றிக்கண் தீயினால் சுட்டெரித்த பொது அவனுக்கு புத்துயிர் தந்தவள் அம்பாள்.

சம்பரம் என்றால் மிகவும் ஸ்ரேஷ்டமானது என்று ஒரு அர்த்தம்.

சம்பராஸன என்று சொல்லும்போது அம்பாள் மிகச் சிறந்த, ஸ்ரேஷ்டமான காஞ்சி காமகோடி பீடத்தில் அமர்ந்திருப்பவள் என்று அவளை வணங்கச் செய்கிறது.
ravi said…
[07/02, 10:45] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 480* 🙏🙏🙏started on 7th Oct 2021
[07/02, 11:54] Jayaraman Ravilumar: *202 सर्वेश्वरी ஸர்வேச்வரீ --*

சர்வம் என்றால் பூரணம் , முழுமை , நிறைவு ...

எல்லாவற்றிற்கும் ஒரு மூலம் உண்டு ...

அந்த மூலத்தை தான் தாய் என்கிறோம் ...

பிறப்பு அவள் இன்றி பிறக்காது ...

ஒரு தாய்க்குத் தான் அத்தனை சக்தியும், காரூண்யமும் கருணையும் இருக்கும் ...

அதனால் அம்பாள் சர்வேஸ்வரீ என்று அழைக்கப் படுகிறாள்
ravi said…
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம்

முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.

-- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ravi said…
கற்க எண்ணுபவர்கள்
இராமபிரானை அல்லால் -

(சக்கரவர்த்தித் திருமகன்) இராமனின் பண்பையும் மாண்பையும் விடுத்து
மற்றும் கற்பரோ? -

வேறொன்றை கற்க நினைப்பார்களா?
(மாட்டார்கள்!)

புல் இனங்கள் தொடங்கி
புல் எறும்பு ஆதி -

(சிறிய அளவில் இருக்கும்)

அற்பமான எறும்பு, சிற்றுயிர் ஆகியவையோடு

நல்லொழுக்கம் சிறந்து ஒங்கும் அயோத்தி மாநகரில் வாழ்கிற
சராசரம் முற்றவும் -

(இன்ன பிற) உயிரினங்கள், மாந்தர் வரையிலும்
ஒன்று இன்றியே -
(அவை, அவர்கள்)

எவ்வித முயற்சியும் செய்யாத போதிலும்

நற்தன்மைகளுடன்/குணங்களுடனும் விளங்கும்படிச் (இராமன்) செய்தனன்
பிரமன் படைத்த இந்த பூவுலகத்து (வாழ்விலே)!👏👏👏
ravi said…
How do you know
you are rich?

Amazing answer
by an IIT student.

When I was doing my B Tech, there was a Professor who used to teach us ‘Mechanics’.

His lectures used to be very interesting since he had an interesting way to teach and explain
the concepts.

One day, in the class, he asked the following questions:

1. What is ZERO?
2. What is INFINITY?
3. Can ZERO and INFINITY be same?

We all thought that we knew the answers and we replied as following:

ZERO means nothing.
INFINITY means
a number greater than any countable number.

ZERO and INFINITY are opposite and they can never be same.

He countered us by first talking about infinity and asked, How can there be any number which is greater than any countable number?

We had no answers.

He then explained the concept of infinity in a very interesting way, which I remember even after more than 35 years.

He said that imagine that there is an illiterate shepherd who can count only
upto 20.

Now, if the number of sheep he has less than 20 and you ask him how many sheep he has, he can tell you the precise number (like 3, 5 14 etc.).

However, if the number is more than 20, he is likely to say “TOO MANY”.

He then explained that in science infinity means ‘too many’ (and not uncountable) and in the same way zero means ‘too few’ (and not nothing).

As an example, he said that if we take the diameter of the Earth as compared to distance between Earth and Sun, the diameter of earth can be said to be zero since it is too small.

However, when we compare the same diameter of earth with the size of a grain, diameter of earth can be said to be infinite.

Hence, he concluded that the same thing can be ZERO and INFINITE at the same time, depending on the context, or your matrix of comparison.

The relationship between richness and poverty is similar to the relationship between infinity
and zero.

It all depends on the scale of comparison with your wants.

If your income is more than your wants,
you are rich.
If your wants are more than your income,
you are poor.

I consider myself rich because my wants are far less than my income.

I have become rich not so much by acquiring lots of money, but BY PROGRESSIVELY REDUCING MY WANTS.

If you can reduce your wants, you too can BECOME RICH at this very moment.

*May your lives get rich by good thoughts, good deeds, good people around you*

😊💐👏🙏🏻
ravi said…
*🕉 *ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்* 🕉 *whatsapp குழு இணைவதற்கான லிங்க்

https://chat.whatsapp.com/Cc76JoMhai688DRiXKI7k4


*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫*

*💫08/02/2023 புதன்கிழமை*

*🟡காயத்ரி மந்திரம்*
*******************ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!*

*🟡விநாயகர் காயத்ரி*
*******************ஓம் தத்புருஷாய வித்மஹே*
**வக்ர துண்டாய தீமஹி*
*தந்நோ தந்தி ப்ரசோதயாத்*
***************** *🟡ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*
**ஓம் தத்புருஷாய வித்மஹே*
**மஹா சேநாய தீமஹி*
*தந்நோ சண்முக: ப்ரசோதயாத்*
*******************🕉 ஓம் (குலதெய்வம்) நமஹ*
*🕉 ஓம் (இஷ்டதெய்வம்) நமஹ*
******************🟡சூரிய பகவானின் காயத்ரி*
**ஓம் பாஸ்கராய வித்மஹே*
**திவாகராய தீமஹி*
*தன்னோ சூர்யஹ்ப்ரசோதயாத்
*******🕉️இன்றைய கிழமை காயத்திரி*
**🟡புதன் காயத்ரி*
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

*🕉️இன்றைய தின நட்சத்திரம்.
*** ***🟡 பூரம் நட்சத்திரம் :*
*ஓம் பூரம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயா*

***🟡ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*
**ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே*
* *ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ*

*🟡ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*
*******************ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே*
**வாயு புத்ராய தீமஹி*
*தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்*
*******************‌
**🟡நவகிரக மந்திரம்,*

*ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச*
********************குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:*

*🔯நோய்களை குணமாக்குவதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்!*
*******************🔵தேவாரம்*
*மாசில் வீணையும்* *மாலை மதியமும்*
********************வீசு தென்றலும்* *வீங்கிள வேனிலும்*
*மூசு வண்டறை* *பொய்கையும் போன்றதே*
********************ஈச னெந்தை யிணையடி நீழலே.*

*🟢முருகப் பெருமானின் மந்திரம்*
*******************ஓம் பாலசுப்பிரமணிய மஹா தேவி புத்ரா சுவாமி வரவர சுவாஹா!*
*🟣ம்ருத்யுஞ்ச மந்திரம்*
*******************ஓம் த்ரயம்பகம் யஜாமஹே*
**ஸீகந்திம் புஷ்டி வர்த்தகம்*
*உர்வாருகமிவ பந்தனான்*
********************ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத்*

*💹தன்வந்திரி மந்திரம்*
*******************ஓம் நமோ பகவதே வாஸுதேவாய*
**தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய*
*ஸர்வ ஆமய விநாசநாய* *த்ரைலோக்ய நாதாய*
********************ஸ்ரீ மஹா விஷ்ணவே நம!:*


🕉 *ஸ்ரீ குரு ஜோதிட ஐயர்* 🕉 *whatsapp குழு இணைவதற்கான லிங்க்*

https://chat.whatsapp.com/Cc76JoMhai688DRiXKI7k4
ravi said…
*❖ 107 தடில்லதா சமருசி:* = மின்னல் கிரணங்களுக்கு சமமான ஜோதி ஸ்வரூபமானவள்
ravi said…
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி

எண்ணமெல்லாம் நிறைவாள்

இன்பமெல்லாம் தருவாள்

மின்னல் விழி கொண்டாள்

மின்னல் இடை பெற்றாள் மின்னல் போல் வருவாள்

மின்னலென கருணை பொழிவாள்

மின்னலே மேனி சிறந்தவளே உன் பழைய இடம் மறந்தனையோ

என் நெஞ்சில் இடம் இல்லை என்றே ஒதுங்கினாயோ ..

உன் இடம் யார் நிறப்புவார் நீ இன்றி யார் களிப்பார் ...

மின்னலாக வருவாய் என் எண்ணம் எனும் கரும் மேகம் தனை களைப்பாய் ..
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

64 –
பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

விடம் உண்டவன் நீ ... ஒரு விஷம் அல்ல இரண்டு ... ஆலம் + காலம் எனும் கொடிய விஷங்கள் ...

ஜம்மு பழம் என்று நினைத்து உண்டாயோ *அருணாசலா* ...

மாயை எனும் விஷம் என்னை கடைகிறதே அருணாசலா ... நீ அன்றோ அதையும் அருந்த வேண்டும் ...

கண்டம் தடவ அன்னை அருகில் இருக்க தயங்குவதேன் *அருணாசலா* ...

ஆலகால விஷம் உண்டவன் இந்த விஷம் உண்ண தயங்கலாமோ
*அருணாசலா* ?💐💐💐💐💐

உடல் நீலமாகி வாயில் நுரை தள்ளி நான் தவிப்பது உனக்கு அழகோ *அருணாசலா* ...
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 481* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*203 सर्वमयी -ஸர்வமயீ -*
எல்லாமும் தானே ஆனவள்.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி......

இது அவளே தான். அவள் எங்கில்லை?, எதில் இல்லை?.

சர்வம் என்பது 36 தத்துவங்களை குறிக்கிறது.

🙏🙏🙏🙏🙏
ravi said…
[08/02, 09:37] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 77*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[08/02, 09:38] Jayaraman Ravilumar: प्रेमवती कम्पायां स्थेमवती यतिमनस्सु भूमवती ।

सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥ ६२॥

62. Premavathi kampyaam sdhemavathee yathi manassu bhoomavathi,

Saamavathi nithyagiraa somavathi sirasi bhathi Haimavathi.

ப்ரேமவதீ கம்பாயாம் ஸ்தேமவதீ யதிமனஸ்ஸு பூமவதீ |
ஸாமவதீ னித்யகிரா ஸோமவதீ ஶிரஸி பாதி ஹைமவதீ ||62||
ravi said…
இந்த ஸ்லோகத்தில் அம்பாளை மூகர் அருமையாக வர்ணிக்கிறார்.

ஹிமவான் பெண் ஹைமவதி,

காஞ்சியில் தவழும் கம்பாநதியின் மேல் ப்ரியம் கொண்ட பிரேமாவதி,

முனீஸ்வரர்கள் , யோகிகள், யதீந்த்ரர்கள் மனதில் ஸ்திரமாக வாசம் செய்யும் ஸ்தேமவதி,

பூமியில் சகல செல்வங்களுக்கும் ஐஸ்வர்யங்களும் அதிபதி பூமவதி,

வேதங்களால் பூஜித்து பாடப்படுவாள் ஸாமவதி,

சந்திரனை பிறையாக சூடியவள் சோமவதி என்கிறார். 🪷🪷🪷
ravi said…
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்

உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து

எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.

---பெரிய திருமொழி (திருமங்கை மன்னன்)
ravi said…
பூவுலகையும், (இமையவர் உலகம், சுவர்க்கம் போன்ற 6) வான் உலகங்களையும்

வானவரும் தானவரும் -

மற்றுமெல்லாம் -

அடங்க மாட்டாமல் பெருகி வந்த பிரளயம் பெருவெள்ளம்

அடித்துச் சென்று அழித்து விடாதபடி
தான் விழுங்கி -


தன் வயிற்றில் வைத்துக் காத்தருளிய
கண்ணாளன் -

பரம அருளாளனும்
கண்ணமங்கை நகராளன் -

கழல் சூடி - திருவடிகளில் தலை பதித்து

சிந்தையில் வைக்காத
மானிடத்தை -

மாந்தரை
எண்ணாத போதெல்லாம் -

எனக்கு இனிதாகவே கழியுமே!🪷🪷🪷
ravi said…
08.02.2023:

"Gita Shloka (Chapter 1 and Shloka 30)

Sanskrit Version:

गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः।।1.30।।

English Version:

gaandIvam sramsate hastaat
tvakchaiva paridahyate |

na cha shaknomi avasThathum
Bhramativa cha me manah: ||

Shloka Meaning

The mental turmoil of Arjuna is being continued in this shloka.

The Gandiva slips out of my hand.
(Gandiva is the name of the bow of Arjuna)
The skin has a burning sensation.
Even standing steadily seems difficult.
And the mind is whirling with various emotions.

The mental and bodily changes that overwhelm Arjuna are being described in these verses.

Additional details:

Arjuna has seen many a battle in his life and has emerged victorious.
His physical powers have not disappeared.

Arjuna has lost the battle in his mind. He is carried away the sight of his blood relatives.
His mind is cluttered with ignorance that makes him sway away from the path of dharma.

Jai Shri Krishna 🌺
ravi said…

பழனிக் கடவுள் துணை -08.02.2023

பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்

பழனித் திருவாயிரம் -நூல்

இரண்டாவது- வெண்பா அந்தாதி -வெண்பா-53

மூலம்:

சேவேறு வான் கனற்கட் செங்குருந்தைப் பைங்கடப்பம்
பூவேறு திண்டோட் புரவலனை – நாவேறு
மங்கைக் கிலக்கணம் சொல் வாய்ப்பழனி யானை, உமை
அங்கைச்சேய் என்றுரைப்பார் ஆர்? (53).

பதப்பிரிவு:

சேவு ஏறுவான் கனல் கண் செம் குருந்தைப், பைங் கடப்பம்
பூ ஏறு திண் தோள் புரவலனை, – நாவேறு
மங்கைக்கு இலக்கணம் சொல் வாய்ப்பழனியானை, உமை
அங்கைச் சேய் என்று உரைப்பார் ஆர்? (53).

பதவுரை மற்றும் பொருள் விளக்கம்:

சேவு- இடபம்;

இடபம் ஏறுவான் ஆன சிவபெருமானின் கோபக் கனல் சிந்தும் அக்கினிக் கண் ஈன்ற முழுதும் செய்யோனான இளம் குமரன், பச்சைப்பசும் கடப்பம் பூக்கள் மலையாக மாறி, ஏறும் திண்மையான ஈராறு தோள் உடை பக்தஜனக் காவலன், நாவேறு மங்கையான கலைமகளுக்கு இலக்கணம் சொல்லி அருளும் ஞானத்தின் இருப்பிடமான பழனியான், இப்படிப் பல சொல்ல ஒண்ணாத பராக்கிரமங்களை உடைய பெருமாளை, உமையம்மை அருளிய பச்சிளம் குழந்தை என்று யார் உரைப்பார்கள்?

இந்தப் பாடலுக்குப் பொருள் விளக்கம் எழுத்து பொழுது என் மனத்திரையில் ஓடியது நம் குருநாதர் அருணகிரிப் பெருமானின் வாய்மொழி- "குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே"!:

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை, திருமுலைப்பால்
அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை
விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,
குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.

எதற்கும் உறுப்படாத, மருவுமெனக்கு, மறுப்படாது, மறுப்பேதுமின்றிக் காத்துப் புரப்பவன் -கருப்படாத பழனிச் சேய்! அந்தப் பழனிப் பெருமான் தான் என்னைக் கருவில் சுமக்காத தாய்!

ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!

வேலும் மயிலும் சேவலும் துணை;

பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்!சரணம்!
ravi said…
🌹🌺 "Shri Syamala Devi Thandakam - A simple story that explains how we can make a few changes ourselves 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Sri Ambikai, who is called by many names as Syamala, Sri Raja Syamala, Srimathangi and Mahamandrinee, incarnated as the penitent daughter of Sage Madanga.

🌺 She is known as the ninth vidya among the Dasamahavidyas. She is known as the ruler of arts, eloquence, straight intellect, education and ability to reach the highest level in questions.

🌺 She is the goddess of all Vedic mantras and hence she is known as 'Mantrinee'. She rules and graces this world as the Mahamandri of Sri Lalitha Parameshwari.

🌺 Sri Raja Matangi was created by Sri Lalita Parameshwari from her sugarcane bow.

🌺The proud soul is represented as Bandasura and the worldly minded man is represented as his younger brother Vishanga.

🌺 Syamala Devi is the ruler of the right mind, intelligence and spirit. So Syamala Devi herself performs 'Vishanga Vatam'.

🌺 Sri Syamala Devi Dandagam composed by Kalidasa is omnipotent. It can attract waves of grace and spread them everywhere.

🌺 We can make some changes ourselves. These waves of grace are very much needed to rise in life. These waves of grace are needed for a prosperous life.

🌺Syamala Dandakam🌹

🌺 Meditation ॥🌹

🌺 Manikya Veenam Mubalalayanthim Madhalasam Manjulavak Vilasam |
Mahendra Neeladyuti Komalangeem Matanga Kanyam Manasa Smarami ||
Chaturbhuje Chandrakalavatamse Kusonnathe kunguma ragasone |
Bundrekshu Pasangusa Pushpapana- Haste Namaste Jagatheka Mata: ||🌹🌺

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺" *நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய ஸ்ரீ சியாமளா தேவி தண்டகம் - என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺" சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

🌺தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

🌺வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதாபரமேஸ்வரியின் மஹாமந்திரியாக இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

🌺ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.

🌺அகங்காரம் மிகுந்த ஜீவனே பண்டாசுரனாகவும் உலக விஷயங்களில் செல்லும் புத்தியே அவன் தம்பி விஷங்கனாகவும் குறிக்கப்படுகிறார்கள்

🌺சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

🌺காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது.

🌺நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. வாழ்வில் உயர இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை.

🌺 *சியாமளா தண்டகம்* 🌹

🌺॥ *த்யானம்* ॥🌹

🌺மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*🔹🔸"இன்றைய சிந்தனை."*

*_✍️ 09, Thursday, Feb., 2023_*


*🧿‘’பிடிவாத குணம்’’*

https://srimahavishnuinfo.org

*♻️பிடிவாதம் மனநோயா? என்றால் “இல்லை” என்றும் சொல்ல முடியாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது? அது ஒருவரின் வாழ்க்கை சூழலைப் பொறுத்தே அமைந்து இருக்கும்.*

*♻️“மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும்” என்று சொல்கிறார் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ்..*

*♻️பிடிவாத குணம் என்பது, ஒரு வலிமையான மனோபாவம்..தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டு தான் பலமுறை தோற்ற பின்பும்,வெற்றியை விரட்டிப் பிடித்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.*

*♻️’எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் அகிம்சையை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்ற மோகன்தாசின் பிடிவாத குணம் தான் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது..*

*♻️ஆராய்ச்சிக் கூடமே எரிந்து சாம்பலான நிலையிலும் இரவைப் பகலாக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன் எனும் பிடிவாத குணம் தான் தாமஸ் ஆல்வா எடிசனை,1600 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது..*

*♻️என்றாவது ஒரு நாள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நான் மிதிப்பேன்’’எனும் பிடிவாதம் தான் ‘’யாக்’’ எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த டென்சிங்கை உலக வரலாற்றில் இடம் பெற வைத்தது..*

*♻️இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு சாதாரண மனிதரின் லட்சியம் மீதான உறுதியான, கொள்கைப் பிடிப்புடன் கூடிய, தளராத முயற்சியின் பிடிவாத குணம் தான் அவர்கள் அனைவரையும் இன்னும் இந்த உலகத்தில் சிறந்தவர்களாக நிலை நிறுத்தி உள்ளது.*

*♻️ஹிட்லர் போல, முசோலினி போல, இடி அமீன் போல, வியட்நாமில் அமெரிக்கா வாங்கிய அடி போல, வீண் பிடிவாதத்திற்காகவும், வறட்டு கௌரவத்துக்காகவும் ஒரு சிலர் வரலாற்றில் இடம் பிடித்திருக்கலாம்,*

*♻️ஆனால் அவை எல்லால் வெறும் கருப்புப் பக்கங்களே!. எப்படி இருக்கக் கூடாது என்பதின் உதாரணம் மட்டுமே அவர்களும், அவர்களின் செயல்களும்.*

*♻️சுயநல லாபத்திற்கும், வீணான கவுரவ செயலுக்கும், ஆணவப் பிடிப்பிலும் ஒருவர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை மாற்றி திருத்திக் கொள்ளாமல் வீண் பிடிவாதம் பிடிப்பவர்கள் நிச்சயம் அடையாளம் தெரியாமல் அழிவார்கள்..*

*😎ஆம்.,நண்பர்களே..*

*🏵️தீர்க்க முடிந்த பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தரும்,*

*⚽தீராத பிடிவாதம் நல்வாழ்க்கையைத் தொலைத்து விடும்.*

╔•═•-⊰❉⊱•🦅•⊰❉⊱• •═•╗
★ *Mahavishnuinfo* ★
*ஆன்மீக வழிகாட்டி*
╚•═•-⊰❉⊱•═•═•⊰❉⊱• •═•╝
ravi said…
காளிதாஸர் மனம் வருந்தி வேண்ட, பேச்சிழந்து பிறந்தாலும் மீண்டும் பேச்சுத்திறன் மற்றும் கவிபாடும் திறமையை அருள்வதாக வாக்களித்தாள் தேவி. அதன்படி காஞ்சிபுரத்தில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பேச்சிழந்த குழந்தையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் எனும் பெயர் கொண்டார். சிறுவயதிலிருந்தே காமாட்சி அம்மன் சந்நதியிலேயே அமர்ந்திருப்பார். அச்சமயம் ஒரு தேவி உபாசகர் வாக்கு சித்தி வேண்டி, தேவியை வழிபட்டு வந்தார். காளிதாஸருக்கு தேவி திருவருள்புரியும் நேரம் வந்தது. ஒருநாள் தன்னை எண்ணி வழிபடும் உபாசகருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை உபாசகருக்கு அருகில் வந்தாள். அப்போது முற்பிறவியில் ச்யாமளா தண்டகம் போன்ற அற்புத துதிகளை அருளிய காளிதாஸர் அவளைப் பார்த்து தாயே என்று சொல்ல நினைத்து, பேபே என அழைக்க, அந்த சப்தம் உபாசகரின் தியானத்தைக் கலைத்தது. உடனே விழித்த அவர், அந்த சப்தத்தை வெளிப்படுத்தியது இந்த கன்னியே காரணம் என நினைத்து ‘போ இங்கிருந்து,’ என்று தேவியை விரட்டினார்
ravi said…
மணக்கும் தாம்பூலத்தைத் தரித்திருந்த தேவி அங்கிருந்து அகன்று மூகராய் பிறந்த காளிதாஸரின் வாயில் தன் தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். உடனே வாக்கும், கவிபாடும் திறமையும் பெற்றார் மூகர்.
ravi said…
அந்தக் கணமே பேரருவியாக ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் என ஐநூறு ஸ்லோகங்களால் தேவியைத் துதித்தார். மூகர் (பேச்சிழந்தவர்) ஐநூறு துதிகளால் துதித்ததால், இத்துதி மூகபஞ்சசதீ என பெயர் பெற்றது. இதில் ஒவ்வொரு துதியிலும் காமாக்ஷி, காஞ்சி அல்லது காமகோடி என்ற பதம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குனி உத்திரம் நாளில் (இவ்வருடம் 23.3.2016 அன்று) அனைவரும் படித்து அனைத்து நலன்களும் பெற இந்த அற்புதமான துதியின் ஒவ்வொரு சதகத்திலிருந்தும் இரண்டிரண்டு துதிகளை இங்கே வழங்குகிறோம்.
ravi said…
ஆர்யா சதகம்
காரண பர சித்ரூபா காஞ்சீபுர
ஸிம்னி காமபீடகதா
காசன விஹரதி கருணா காச்மீர
ஸ்தப கோமலாங்கலதா.
ravi said…
காரண பர சித்ரூபா’ வான தேவி ‘கார்ய காரண நிர்முக்தா’வாகவும் ஆகிறாள். சத் சித் ஆனந்தம் எல்லா உயிர்களிலும் ஒன்றியும், எல்லாவற்றிலும் விடுபட்டும், மேலான அதீதமான பரப்ரம்மமாகவும் விளங்குகின்றாள். பூமிதேவியின் நாபிஸ்தானமான காஞ்சீ எனும் நகரத்தில் காமபீடத்தில் குங்குமப்பூ கொத்துப் போல் கருணையை வாரி வழங்கிக் கொண்டு அநேக திருவிளையாடல்களை புரிந்து கொண்டிருக்கிறாள்.
ravi said…
குவித்து வைத்த குங்குமமோ, கொட்டி வைத்த குங்குமப்பூ குவியலோ என்பதாக மூகர் நம் மனக்கண் முன்பு தேவியை நிறுத்துகிறார்.
ravi said…
மோதித மதுகர விசிகம், ஸவாதிம
ஸமுதாய சார கோதண்டம்
ஆத்ருத காஞ்சி கேலனம்
ஆதிமமாருண்ய பேதமாகலயே
ravi said…
தேவி தன் வலது முன் கையில் தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ என ஐந்து புஷ்பங்களையே பாணங்களாகக் கொண்டிருக்கிறாள். பூக்களிலிலுள்ள தேனைப் பருகும் வண்டுகள் ஹ்ரீம் என்று ரீங்காரமிடுகின்றன. ஹ்ரீங்காரத்துடன் வண்டுகள் தேனை பருகுவதால் வண்டின் எச்சில் படும் என்றாலும், அந்த மலர்கள் பூஜைக்கு உகந்ததாகின்றன. தேவி வலது முன்கையில் கரும்பை வில்லாகக் கொண்டிருக்கிறாள். நம் மனமே தேவி கைக்கரும்பு வில். கரும்பிலிருந்துதான் கற்கண்டு,சர்க்கரை, வெல்லம் போன்ற இனிப்புப் பொருட்கள் கிடைக்கின்றன. மனம் எனும் கரும்புவில்லில் கருணை என்ற புஷ்பங்களால் தேவி நம் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுகிறாள்.

ravi said…
[09/02, 07:22] +91 96209 96097: ஸம்ஹாரிணீ *ருத்³ரரூபா* திரோதா⁴னகரீஶ்வரீ |🙏

வேதனைகளை அழிக்கும் ருத்ர ரூபமாக இருப்பவள்
[09/02, 07:22] +91 96209 96097: *தாரணாய நமஹ*🙏
வியாதியிலிருந்தும் வியாதி பயத்திலிருந்தும் காப்பவர்
ravi said…
*மூதுரை-*
*ஔவையார் பாடல்கள்*


*பாடல் 9 :*

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

*பொருள்:*

தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்
கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில்
சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக்
கெடுதியே.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

விக்நேச்வரரோடு ரொம்பவும் ஸம்பந்தப்பட்டவர் அகஸ்திய மஹர்ஷி. இரண்டு பேரும் தொப்பை வயிற்றுக்காரர்கள். அகஸ்தியர் அங்குஷ்ட மாத்ரர் (கட்டை விரல் அளவேயானவர்), குறுமுனி என்று சொல்கிறது. பிள்ளையாரையும் “வாமன ரூப” என்று சொல்லியிருக்கிறது.

வாமந-ரூப மஹேச்வர – புத்ர
விக்ந – விநாயக பாத நமஸ்தே || *

ravi said…
வாமன ரூப’ என்றால் குள்ள உருவம் – வாமனாவதாரம் மாதிரி. “வக்ரதுண்ட, மஹாகாய” என்று ஒரு பக்கம் மஹா பெரிய சரீரமுடையவர் என்றும் சொல்லி இன்னொரு பக்கம் வாமன ரூபர் என்றும் வர்ணித்திருக்கிறது. பெரிசு சிறிசு எல்லாம் அவர்தான். அணுவும் அவர்தான். அகிலாண்டமும் அவர்தான் என்று தாத்பர்யம். ‘அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்’ என்று ஒளவை (அகவலில்) சொல்லியிருக்கிறாள்.

ravi said…
ஹம்பியில் பெரிசு பெரிசாக இரண்டு விக்நேச்வர மூர்த்திகள். ஒன்று பத்தடி உயரம், இன்னொன்று இருபதடி உயரம் இருக்கும். இப்படி மஹாகாயராக இருப்பவர்களுடைய பேர்களோ நேர்மாறாக வாமன ரூபத்தைக் காட்டுவதாக இருக்கின்றன! பத்தடிப் பிள்ளையாருக்கு ‘சசிவுகல்லு’ என்று பேர்; அப்படியென்றால் கடுகத்தனை அளவேயானவரென்று அர்த்தம்! இருபதடிப் பிள்ளையாருக்கு ‘கடலைக்கல்லு’ என்று பேர்; கடலைப் பருப்பு அளவானவர் என்று அர்த்தம்! ‘இவருக்கு இத்தனை பெரிய விக்ரஹங்கள் இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். வாஸ்தவத்தில் விச்வரூபியாக உள்ள அவருக்கு life – size விக்ரஹம் பண்ணி எவராலும் ஆகாது. முடிந்த அளவுக்கு இங்கே பண்ணி வைத்திருக்கிறோம். அது அவருடைய நிஜமான ரூபத்தோடு ஒப்பிட்டால் கடுகத்தனை, கடலையத்தனையாகத்தான் தெரியும்’ என்று அடக்கத்தோடு இப்படிப் பேர் வைத்திருக்கிறார்கள்.

ravi said…
அகஸ்தியருக்கும் விக்நேச்வரருக்கும் ஸம்பந்தம் சொன்னேன். அகஸ்தியர் கமண்டலுவுக்குள் அடைத்து வைத்திருந்த காவேரியைக் காக்கா ரூபத்தில் வந்து கவிழ்த்து விட்டு நதியாக ஒடப் பண்ணினவர் விக்நேச்வரர்தான். அந்த ஸமயத்தில் அகஸ்தியருக்கு காக்காயிடம் கனகோபம் வந்தாலும் அப்புறம் அது விக்நேச்வரர் என்று தெரிந்ததும் ஒரே பக்தியாகிவிட்டார். அவர்தான் ‘காக்கா பிடித்தவர்’ போலிருக்கிறது – காக்காயை மனஸுக்கு ரொம்பவும் பிடித்தவர்! அப்புறம் ஒரேடியாகப் பிள்ளையார் பக்தியில் ஈடுபட்டுவிட்டார்.

வாதாபி விஷயத்துக்கு வருகிறேன். அதிலே அகஸ்தியர் முக்கியமான கதாபாத்திரம். வாதாபி இல்வலன் என்று அண்ணன்-தம்பியாக இரண்டு அஸுரர்கள்…. அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கக்கூடிய கதைதான். நேரடியாகத் தாக்கிக் கொல்கிற அஸுரர்களை விடவும் ஒருபடி மட்டமாக நயவஞ்சனையால் ரிஷிகளைக் கொன்று தின்னுவது இவர்களது வழக்கம். பொதுவாகவே நரமாம்ஸமென்றால் அஸுரர்களுக்கு ரொம்ப இஷ்டம். அதிலும் வேத மந்த்ரத்தில் ஊறிப்போய் பரம மதுரமாகிவிட்ட ரிஷி சரீரமென்றால் ஹல்வா மாதிரி! அந்த ஹல்வா கிடைப்பதற்காக இந்த இரண்டு பேரும் ஒரு நயவஞ்சனை செய்வார்கள். இரண்டு பேரில் மூத்தவனான இல்வலன் ஒரு ப்ராம்மண ரூபம் எடுத்துக்கொண்டு யாராவது ரிஷியிடம் போய் ரொம்பவும் நமஸ்காரம் பண்ணித் தன் வீட்டில் அவர் போஜனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்பான். ரிஷியும் ஒப்புக் கொண்டு போவார். அவன் என்ன பண்ணியிருப்பானென்றால் வாதாபியையே மாம்ஸமென்று தெரிந்து கொள்ள முடியாத விதத்தில் கறியாகச் சமைத்துப் பரிமாறுவான். ரிஷிகள் அவசியமான ஸமயத்தில்தான் ஞான த்ருஷ்டியை ப்ரயோகிப்பார்கள். மற்ற ஸமயங்களில் ஸாதாரண ஜனங்கள் மாதிரிதான் இருப்பார்கள். அஸுர சூழ்ச்சி தெரியாமல் அவர்கள் வாதாபிக் கறியைச் சாப்பிட்டு விடுவார்கள். போஜனம் முடிந்தபின் இல்வலன் அவர்களுக்கு தாம்பூலாதிகள் கொடுத்து சிரம பரிஹாரம் பண்ணிக் கொள்ளச் சொல்லி விட்டு, தம்பியை “வாடா!” என்று கூப்பிடுவான். உடனே ரிஷி வயிற்றில் போஜ்ய பதார்த்த ரூபத்தில் இருக்கும் வாதாபி ஆடு ரூபம் எடுத்துக்கொண்டு கொம்பால் அவர் வயிற்றை கிழித்துக் கொன்றபடி வெளியே வருவான். அப்புறம் இரண்டு பேரும் அந்த சரீரத்தை ஸந்தோஷமாக தின்று தீர்ப்பார்கள்.

அகஸ்த்யருக்கும் இதே மாதிரி போஜன உபசாரம் பண்ணிவிட்டு, “வாதாபி, வாடா வெளியிலே!” என்று இல்வலன் கூப்பிட்டான். அவர் விக்நேச்வர ஸ்மரணையிலேயே இருந்து கொண்டிருப்பவரல்லவா? அதனாலே அஸுரனுடைய கபடம் அவருக்குப் புரியும்படியாக விக்நேச்வரர் அநுக்ரஹம் செய்துவிட்டார். இதற்கு மாற்று பண்ணுவதற்கான உபாயமும் ஸ்புரிக்கும்படி அநுக்ரஹித்து விட்டார். உடனே அகஸ்த்யர் தொப்பையைத் தடவிக்கொண்டு, “வாதாபி! ஜீர்ணோ பவ!” என்றார். அஸுரன் வெளியிலே வரமுடியாமல் அவர் வயிற்றுக்குள்ளேயே வைச்வாநர அக்னியாயுள்ள பரமாத்மாவில் ஜீர்ணமாகி விட்டான்.

அதைப் பார்த்து இல்வலன் பயந்துபோய் அகஸ்த்யரிடம் ச்ரணாகதி பண்ணி, பொன்னும் பொருளும் காணிக்கை கொடுத்தான் என்று ஒரு கதை. இன்னொரு கதைப்படி, தம்பியை ஜீர்ணித்துக் கொண்டுவிட்டாரே என்ற கோபத்தில் அவன் அவர் மேல் பாய்ந்தான்; அவர் ஒரு தர்ப்பையை அபிமந்திரித்து அவன் மேலே போட்டார். அது அஸ்திரமாகி அவனை வதைத்துவிட்டது.

தான் வாதாபியை ஜீர்ணித்து அதன் வழியாக லோகத்துக்கு நல்லது செய்யும்படியாக அநுக்ரஹித்த பிள்ளையாருக்கு அகஸ்தியர் பூஜைகள் பண்ணினார். அப்போது விக்நேச்வரர் இருந்த அவஸரத்துக்கு [திருக்கோலத்திற்கு] “வாதாபி கணபதி” என்றே பேர் வந்துவிட்டது.

திருவாரூரில் அநேக கணபதி மூர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே வாதாபி கணபதியும் இருக்கிறார். தீக்ஷிதருடைய “வாதாபி கணபதி(ம் பஜே)” கீர்த்தனை இவர் பேரிலே தான். பல பேர் தப்பாகத் திருச்செங்காட்டாங்குடிப் பிள்ளையார் பேரில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீர்த்தனத்திலேயே “மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்” என்று வருகிறது. ப்ருத்வீ ஸ்தலமான திருவாரூர்தான் மூலாதார க்ஷேத்ரம். அகஸ்த்யர் க்ஷேத்ராடனம் பண்ணிக் கொண்டு திருவாரூர் வந்தபோது மூலாதார க்ஷேத்ரமான அங்கே வாதாபி கணபதியை பிரத்ஷ்டை பண்ணி விட்டார்.
(இன்று சங்கடஹர சதுர்த்தி)
ravi said…
[09/02, 07:24] Jayaraman Ravilumar: *மூக பஞ்ச சதி*

*பதிவு 78*
*18th Nov 24*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

💐💐💐
[09/02, 07:25] Jayaraman Ravilumar: कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः ।

कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नःप्रतिभा ॥ ६३॥

63. Kouthukinaa Kampaayaam kousuma chapena keelithenaantha,

Kula daivathena mahathaa kudmala mudhram dhunothu na prathibhaa.

கௌதுகினா கம்பாயாம் கௌஸுமசாபேன கீலிதேனான்தஃ |

குலதைவதேன மஹதா குட்மலமுத்ராம் துனோது னஃப்ரதிபா ||63||
ravi said…
அம்பாள் மனசில் என்ன இருக்கிறது?

கம்பாநதி மேல் அளவில்லாத ஆசையும் உத்ஸாகமும் . மன்மதனின் ஸ்ருங்கார ரசத்தை அப்படியே மனதில் கொண்டு பரமேஸ்வரன் பால் பாவிக் கிறவள், நமது குல தெய்வமான அம்பாளின் மேல் நமது மனதை அரும்புகள் மலர்வது போல் பரிமளிக்கச் செய்வோம்.🙏🙏🙏
ravi said…
[09/02, 07:18] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 482* 🙏🙏🙏started on 7th Oct 2021
[09/02, 07:23] Jayaraman Ravilumar: *203 सर्वमयी -ஸர்வமயீ -*
எங்கும் அவள் வியாபித்து இருப்பவள் .. காற்று புகா இடம் எனினும் அவள் கருணை புகுந்து விடும் ...கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கருணை கட்டுபவள் இவள் அள்ளவோ ...

படைத்து படைப்பதை ரக்ஷித்து , காப்பாற்றியதை மறைத்து பின் களைத்து தன்னுடன் சேர்த்துக்கொள்பவள்

.. எதுவுமே நம்மால் முடியும் என்ற ஆணவ எண்ணம் இருக்கும்வரை இவள் நம் கண்களில் தென் பட மாட்டாள் .

எல்லாம் இவளே என்றே சரண் புகுந்தபின் இன்னொரு தாயை நமக்கு தர மாட்டாள்
ravi said…
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்

சென்று சேர் திருவேங்கட மா மலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

-திருவாய்மொழி (நம்மாழ்வார்)🙏🙏🙏
ravi said…
கோவர்த்தன மலையை (தனது ஒரு விரலால் உயர்த்திப் பிடித்து

ஆயர் குல மக்களை) குளிர்ந்த பெருமழையிலிருந்து காத்தவனும்

முன்னொரு காலத்தில்
தனது திருவடிகளால்

உலகங்களை அளந்த நம் தலைவனும்
பரன் -

அருள் பாலிக்கும்
திருமலை ஒன்றை மட்டுமே

தொழ -

நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே 🙌🙌🙌
ravi said…
*❖ 108 ஷட்சக்ரோபரி சம்ஸ்திதா* =

ஆறு சக்கரங்களுக்கு மேலே நிலை கொண்டிருப்பவள்

(மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிப்பூரக, அனாஹத, விஷுத்தி, ஆக்ஞா ஆகிய சக்கரங்கள்)
ravi said…
ஆறும் மனம் உன் நிலை நாடும் மனம்

தேடும் விழியில் ஓடி வரும் குணம் ..

நாடும் அடியவர் நலம் காக்கும் க்ஷணம்

நதிபோல் ஓடும் அருள்

என் கதிக்கு அதுவே உடைக்கும் விதி ...

சதி செய்வோர் சாதி பிரிப்போர் சங்கடங்கள் பல காண்போரே ...

சரண் என்று உனை அடைந்த பின்

கூடும் சதி ,
நாடும் விதி ,
வினை செய்யும் கோள்கள் , பொல்லாத நாட்கள்

எல்லாம் பொசுங்கி விடாதோ ...

பூத்தவளே உன் பூ மனம் எண்ணில் என்னில் புது மணம் வீசுகின்றதே 🪷🪷🪷
ravi said…
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா !

65 –
பார்த்தருள் மால் அறப் பார்த்தினை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா (அ)
ravi said…
*அருணாசலா*

கோடி சூரியர்கள் இன்று உதித்தனர் என் முன்னே ...

கோடி இருந்து என்ன பயன் ?

உன் மந்தஸ்மிதம் தரும் ஒளிக்கு கடுகளவும் ஈடாகவில்லையே *அருணாசலா*

கோடி திங்கள் தோன்றினர் இன்று என் முன்னே ... தோன்றி என்ன பயன் *அருணாசலா* ...

நீ பொழியும் அமுதில் ஒரு சொட்டும் அங்கில்லையே

கோடி கமலம் உதித்தது இன்று ...உதித்து என்ன பயன் *அருணாசலா* ?

கூம்பிவிடும் மாலையில்

கூம்பா உன் பாத தாமரைக்கு ஈடாகுமோ ?

கோடி பொன் கொடுத்தாய் சுகம் கண்டு வாழ்கவே .. பொன் இருந்து என்ன பயன் ..

உன் நாமம் தரும் நிரந்தரம் பொன்னுக்கு உண்டோ *அருணாசலா* ?

கோடிகள் குவிந்தாலும் கோமகன் உனை மறந்து போனால்

தெருக் கோடியில் அரசனாய் இருந்து என்ன பயன்?
கோடிகள் இருந்து என்ன பயன் *அருணாசலா* ?

கோடி கோடியாய் வெளியில் வெளிச்சம் இருந்து என்ன பயன் *அருணாசலா* ... ?

மன இருளில் உன் கருணை வெளிச்சம் இல்லை எனில் நான் இன்னும் இருந்து என்ன பயன் *அருணாசலா*?
Oldest Older 201 – 354 of 354

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை