Posts

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (1) பதிவு10

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே       தேவகார்ய ஸமுத்யதா பதிவு 10 இன்று நாம் பார்க்கப் போவது 5வது திருநாமம் . எதற்காக சிதக்னிக்குண்டலத்தில் இருந்து தோன்றினாள் ?  அவளுக்கும் உண்மையில் பிறவிகள் உண்டா மாந்தர்களைப்போல ??   5வது திருநாமம் பதில் சொல்கிறது .. தேவகார்ய ஸமுத்யதா தேவர்களின் சகல காரியங்களிலும் உதவுபவள்.   தேவர்களால் முடியாததை எல்லாம் முடிக்கும் சக்தியுள்ள தேவி அல்லவா இவள்? தேவர்களுக்கு உதவுபவள்.  தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.🚩🚩🚩 ஸமுத்யதா   என்றால் வழங்குபவள் . சரி தேவர்கள் என்றால் விண்ணோர்கள் . அமரர் தங்கோன் இருக்குமிடம் .. அப்படி என்றால் அம்பாள் அவர்களுக்கு மட்டும் தான் வருவாளா ?  நாமும் அவள் பிள்ளைகள் தானே நாம் அழைத்தால் வர மாட்டாளா ?  முதலில் நாமும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நம் மனதில் வரவேண்டும் . வந்தால் மட்டுமே போதாது  அப்படிப்பட்ட உயர்ந்த சேவைகள் செய்ய வேண்டும் ..  விண்ணவர் யாவரு...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 4 சிதக்நி குண்ட ஸம்பூதா பதிவு 9

Image
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே       சிதக்நி குண்ட ஸம்பூதா பதிவு 9 4வது திருநாமம் ...  சிதக்நி குண்ட ஸம்பூதா 🔥🔥🔥 சாதாரண  நெருப்பல்ல .  சித்தத்தில் ஸ்புடம் போட்ட   பிரம்ம ஞான அக்னியிலிருந்து அவதரித்த மஹா சத்ய ஸ்வரூபி என் தாய் அவளே மகாராணி அவளே சிம்மங்கள் நிறைந்த சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிந்து கொண்டு வருகிறாள் சித் = சித் என்ற சேதனம் (அறிவு-ஆன்மா) அக்னிகுண்ட = அக்னிகுண்டம்  சம்பூதா = தோன்றுதல்   சிதக்னி-குண்ட சம்பூதா = 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டவள்.  சுயம்புவாக தோன்றியவள். ' * சித் * ' என்பது சேதன்மாகிய ஆன்மாவைக் குறிக்கும் 🔥🔥🔥 * சத் * ’ என்றால் நிலையானது; ’ * சித் * ’ என்றால் அறிவு; ’ஆனந்தம்’ என்றால் மகிழ்ச்சி. நிலையானவள் அவள்  ஒருவளே.  அவளை வழிபட்டால் நல்லறிவு  பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே ’ சச்சிதானந்தம்.. சத்  என்றால் பாதிக்கப்படாதது. சித்  என்றால் சுயம் பிரகாசமானது (அதாவது தானே பிரகாசிப்பது) பாரதியாரின் பாடல் வரிகள் இ...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 . ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ பதிவு 8

Image
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே       ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ   பதிவு 8 இன்று நாம் பார்க்கப் போவது மூன்றாவது திருநாமம் . அடுத்து வரும் திருநாமம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ . இந்தத் திருநாமத்துக்குத் தனியொரு அழகு உண்டு .  சில சொற்களை நேராகச் சொன்னால் ஓர் அர்த்தம் வருவதுபோல அதையே திருப்பிச் சொன்னால் வேறொரு அர்த்தம் வரும் .  இந்தச் சொல்லைச் சொல்லும்போது சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்று பொருளாகிறது .  சிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் என்ன செய்கிறாள் ?  இந்த வினாவிற்கு விடையாக , முந்தைய திருநாமம்தான் பொருந்தி வரும் .  மஹாராணியாக   இருப்பவள்தான்    சிம்மாஸனத்தில்   அமர்ந்திருக்கிறாள் ;  உயிர்களைக் காக்கிறாள் .   " அவ்வாறு ' சிம்மாஸனத்தில் அமர்ந்திருப்பது ' எவ்வாறு ' சம்ஹாரம் ' என்னும் தொழிலுக்குப் பொருந்தி வரும் ?" என்றும் கேள்வி வரலாம் .  சிம்ஹாஸனேச்வரி   என்பதைக்   கொஞ்சம்   புரட்டிப்   பார்த்தால்    சம்ஹரிக்கக் ...