Posts

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 33

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  40 33 कामेश्वरप्रेमरत्नमणिप्रतिपणस्तनी -காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | - பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா என்று அறிந்து கொண்டாலே போதுமானது.  தாயை அதற்கு மேல் வர்ணிக்க நமக்கு உரிமையில்லை. காமேஷ்வர ப்ரேம  = காமேஷ்வரனின் அன்பு ப்ரேமை ரதன-மணி  = ரத்தினங்கள்- செல்வம் - விலைமதிப்பற்ற  ப்ரதிபண = ப்ரதியாக - பரிமாற்றம் ஸ்தனி  = மார்பகம்  33 காமேஷ்வர ப்ரெம ரத்னமணி ப்ரதிபண ஸ்தனி = காமேஷ்வரனான ஈஸ்வரனின் ஈடற்ற பிரமைக்கு தன் பெண்மையின் அடையாளமான ஸ்தனங்களைப் பரிசளிப்பவள் 🌷🌷🌷  👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 32

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  39 32 रत्नग्रैवेयचिन्ताकलोलमुक्ताफलान्विता -  ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா - உலகின் விலையுயர்ந்த எந்த நகைக் கடையிலும் காணமுடியாத அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே.  சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள்,  நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகளின்  கைவண்ணத்தில் உருவான  நகாஸ் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.💐💐💐 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அல்லவோ அவள் 🙏 ரத்ன = ரத்தினங்கள் / மணிகள் க்ரைவேய =  பதக்கமாலை - ஹாரம்  சிந்தாக = ஓயாது / அலைகழிக்கப்படுவது  லோல = ஆடும் - இங்குமங்கும் ஆடுதல்  முக்தபல் = முத்துகள்  அன்விதா = சேர்ந்த - கூடிய  32 ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தபலான்விதா = முத்தோடு ரத்தினமும் சேர்ந்தாடும் பதக்கமாலை (ஹாரம்) அணிந்திருப்பவள். லோல   என்ற சொல்லுக்கு ஆடுதல் என்று பொருள். லோலக   என்றால் பதக்கம் என்று கொள்ளலாம்.   லோலக   என்று பொருள் கொண்டு முத்துமாலையுடன் கூட...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 31

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  38 31 कनकाङ्गदकेयूरकमनीयभुजान्विता - கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா - 🙏🙏🙏 அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும்  தோள் வளை  எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா?  இப்போது இம்மாதிரியான  ஆபரணங்கள் வழக்கத்தில் இல்லாத ஒரு நாகரீகம் நம்மை ஆக்ரமித்துவிட்டது. கனகாங்கத = தங்க வளையல் -    கனக  என்றால் தங்கம்  கேயூர  = வங்கி (புஜங்களில் அணியும் அணிகலன்)   கமனீய  = ரம்யமான புஜ = கைகள்    அன்விதா = அதனுடன் -  கூடிய  31 கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதா =  தங்க வளையலும் வங்கியும் அணிந்தலங்கரிக்கும் ரம்யமான கைகளை உடையவள் 🇨🇮🇨🇮🇨🇮 கைகளில் மலர் ஏந்தி காளி வந்தாள்  கங்கை கரையோரம் நீலி வந்தாள்  மை நிறத்து பேரழகி நேரில் வந்தாள்  மலரடிகள் நோகும் படி அருள வந்தாள்  ஓடமெல்லாம் ஓயிந்திருந்த நதியோரம்  வேத மொழி முழங்குகின்ற கரையோரம்  தேகம் தனை இழந்த மகள் செல்லும் நேரம்  தேவ தேவி அருகில் இருந்தாள் வெகு நேரம்  மங்கை இவள் வாழ்ந்திருந்த...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 30 காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா -- பதிவு 37

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  37   30 कामेशबद्धमाङ्गल्यसूत्रशोभितकन्धरा  காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா - அ ம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா? மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித மாங்கல்ய சரடு தான். இதைவிட விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா?  காளமேகம் ( முன்னாள் மடப்பள்ளி வரதன் ) புலவர் அதிகமாகவே கிண்டலாக பாடுபவர் ..  அவர் ஒரு பாடலில் அம்பாளை கேட்க்கிறார் தாயே!!  நீயோ பரிபூரண தேவதை .. சகல சௌபாக்கியமும் தருபவள் ... அன்ன பூரணீ ...  ஆனால் உன் புருஷனோ கபாலம் ஏந்தி தெருவில் பிச்சை வாங்குகிறார்  அது மட்டுமா ?  அணிய நல்ல ஆடை இல்லாமல் 8 திசைகளையும் ஆடையாக அணிகிறார் ...  அணிந்துகொள்ள ஆபரணங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ... உன் மாமியார் வீட்டு சீதனம் என்று ஏதாவது உண்டா   உனக்கு ?  அவரிடம் இருப்பதெல்லாம்  பயமுறுத்தும் பூத கணங்களும் , மண்டை ஓடுகள் மட்டுமே ..  என்ன அப்படி கண்டு விட்டாய் அவரிடம் இப்படி தவசியாய் இருந்து அவர் துணைவியாக ??  இதையே வேறு யாராவது சொல்லி இருந்...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 29 அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- பதிவு 36

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   பதிவு  36 29  अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता  அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா 12 ( 29 & 30) 💐 அம்பாளின் முக அழகை ஈசன் ஒரு நாள் ரசிக்க நினைத்தானாம் . .  தினம் ரசிப்பவன் தான் அன்று கொஞ்சம் கூடுதலாக ரசிக்க ஆசைப்பட்டான் .. .  முகத்தை கையில் ஏந்தினால் நாணம் எனும் மேகங்கள் அந்த முழு நிலவை ரசிக்கும் படி விடுவதில்லை . கண்களை பார்த்தால் அங்கே விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் மீன் போல அங்கும் இங்கும் அலை பாய்ந்தனவாம் ...  சரி நெற்றியை ரசிப்போம் என்றால் அதுவோ தன் தலையில் உள்ள பிறைச் சந்திரன் போல் இருந்து ஈசனை ப்பார்த்து கேலி செய்ததாம்   புருவங்களை ரசிப்போம் என்றால் அதுவோ மன்மதன் இருக்கும் வீட்டின் வாசல் தோரணமாய் உள்ளது ..  ஈசனுக்கு பரம விரோதி மன்மதன் அதனால் ஈசன் புருவங்களை பார்ப்தை தவிர்த்தானாம் நாசியை ரசிப்போம் என்றால் அதில் வெளி வரும் சுவாசம் உள்ளிழுக்கும் வாசம் தன் பெயரையே சொன்ன வண்ணம் உள்ளது .. அதனால் ஈசனுக்கு வெ...