ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 8

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 10 பாடல் 8

8 –
ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாசலா! (அ)



அருணாசலா என் மனம் இருக்கிறதே அது என்றுமே எனக்கு கட்டுப்பட்டது இல்லை.

 - நான் ஒன்று செய்ய ஆசைப்பட்டால் அது ஒன்று நினைக்கும் ---

எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மிகவும் அப்பாவியாக எனக்குள் ஓடி வந்து ஒளிந்து கொள்ளும் --

ஒரு குரங்கு செய்யும் அத்தனை விஷமங்களையும் என் மனம் செய்யும் ...

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது.

அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது.

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்

கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்

கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்

நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு

இதனால் தான் இப்படி வேண்டுகிறார் -- ஊர் சுற்றும் என் உள்ளம் என்றும் இடைவிடாமல் உன்னை கண்டு அமைதி பெற உன் அழகை காட்டு அருணாசலா என்கிறார் ---

ரமணர் தன் பரிசுத்தமான மனதையே அடங்கவில்லை என்று சொன்னால் நாமெல்லாம் எந்த மூலை???

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை