ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 10

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 13 பாடல் 10

10 –
ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாசலா! (அ)



படிப்படியாக இறைவனை கேட்கிறார் - ஏதாவது ஒரு கேள்வியில் அவன் மசிய மாட்டானா என்று -

அருணாசலேஸ்வரன் மசியவில்லை - ரமணரின் கேள்விகளும், திட்டல்களும், கெஞ்சலும், அதிகாரமும், கட்டளைகளும், கதறலும் ஓயவே இல்லை ----

எல்லாமே நமக்காகத்தான் இவ்வளவு பாடு படுகிறார் ரமணர் ....

என் தாயினும் அதிக அன்பு காட்டுகிறாய் இன்று இப்பொழுதுதான் சொன்னேன் - சொன்ன வார்த்தைகளில் உள்ள ஈரம் காயும் முன்னே நீ உறங்கிப்போய் விட்டாயே அருணாசலா ---

என்னை பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா?

-- இங்கே பிறர் இழுக்க என்பது என் மனம், நான் எனும் எண்ணங்கள், அதனால் வரும் மமதை, அகம்பாவம்.
இவைகள் ஒன்றாக சேர்ந்துகொண்டு இறைவனிடம் நெருங்க விடாமல் இழுக்கின்றன -அதனால் இப்படி சொல்கிறார்.

 -- காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு தூங்குகிறாயே,

என் தாயினும் நீ உயர்ந்தவன் என்று நினைத்தேனே - நீ செய்யும் காரியமா இது?

  என் மனதை திருடி (அதற்குத் தெரியாமல்) உன் உள்ளம் எனும் குகையில் கொண்டு போய் வை என்று கதறுகிறேனே ---

இப்படி ஒன்றுமே உன் காதில் வாங்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே அருணாசலா - இது உனக்கு அழகா?? 

ரமணரின் ஒவ்வொரு வரிகளும் ஈசனை கட்டிப்போட்டு வைக்கின்றன


---- ரமணா என்னை மன்னித்துவிடு என்று ஏதாவது வரிகளில் அருணாசலேஸ்வரர் சொல்கிறாரா என்று பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை