ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 11

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 14 பாடல் 11



11 –
ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா! (அ)

ஆளில்லாத வீட்டில்தான் திருடர்கள் வருவார்கள். ‘ஐம்புலன்களாகிய திருடர்கள் என் உள்ளத்தில் நுழைகிறார்கள் என்றால், அங்கே நீ இல்லையா?’ என்று ஏக்கத்துடன் கேட்கிறார் ரமணர்.

 ‘பெருமானே, உனக்கு இணை யாருமில்லையே, உன்னை மறைத்து என் மனத்தில் நுழையக்கூடியவர்கள் யார்?

இதெல்லாம் உன்னுடைய சோதனைதானா!’


மாணிக்க வாசகர் பாடும் போது இமைப்பொழுதும் என் நெஞ்சை நீங்காதான் தாள் வாழ்க என்றார் --

என் நெஞ்சத்தில் எப்பொழுதும் இமை மூடும் போதும் இருப்பவன் இறைவன் -
ரமணர் இதையே மாற்றி கேட்க்கிறார் -

ஐந்து புலன்களும் ஐந்து திருடர்கள் -- இவர்கள் அடங்கினால் மனம் அடங்கும் -

மனம் அடங்கினால் மனம் லயிக்கும் -
அதை தொடர்ந்து மனம் நாசம் ஆகும் -

மனம் நாசம் ஆனால் "நான் யார்?" என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் ----ரமணர் சொல்கிறார் ....

புலன்களே கள்வர்களாக இருக்கும் நிலை - முதல் வகுப்பு என்று வைத்துக்கொள்வோம் -

அடுத்து வகுப்பு நாம் போவதற்கு இந்த கள்வர்களை அடக்கவேண்டும்

-- இனி மூன்றாவது வகுப்பு போக வேண்டும்.
இங்கே கள்வர்கள் அடங்கி விட்டார்கள் -

மனம் எங்கே போய் லயிக்க வேண்டுமோ அங்கே போய் லயித்துவிடும் நிலை -

அடுத்த வகுப்பில் மனம் லயித்துப்போனது மட்டும் அல்ல, மனம் இரண்டற கலந்தும் போனது -

அடுத்த வகுப்பில் எல்லாம் ஒன்றாய் போன நிலை - இங்கே இறைவனிடம் நாம் கலந்து விடுகிறோம்

ஏன் புலன்களை கள்வர் என்று சொல்கிறார் ரமணர்? --

தன் சொல்படித்தான் மனம் கேட்க வேண்டும் என்று இந்த புலன்கள் ஆட்டம் போடுகின்றன -
மனம் கண்களை அங்கே பார்க்காதே என்று சொன்னால் கண்கள் அங்கே தான் பார்க்கும் -
கால்கள் கோவில் வந்தால் தாண்டி ஓடும் -
காதுகள் நல்லவைகளை ஏற்காது -

வாய் வேண்டாத வார்த்தைகளை வெளிவிடும் --

இப்படி நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை இறைவனிடம் அண்டாமல் இருக்கும் புலன்களை கள்வர்கள் என்று ரமணர் சொல் வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே -----

அருணாசலா -- இந்த நாள் வரை நீ என் மனதின் உள்ளே இருக்கிறாய் என்றல்லவா நினைத்தேன் --

எங்கே போய் விட்டாய் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் - ?

இதோ பார் ஐம்புலன்களாகிய திருடர்கள் என் உள்ளத்தில் நுழைகிறார்கள் -----

நீ வரவில்லை என்றால் என்னை ஒரேயடியாக இவர்கள் அழித்துவிடுவார்கள்

 -- நான் போய் விட்டால் உன்னை தினமும் அன்புடன் அருணாசலா என்று யார் கூப்பிடுவார்கள் ---?


வா அருணாசலா- வந்து இந்த கள்வர்களை உடனே அழித்துவிடு என்கிறார் ரமணர்.... ௐௐௐௐௐ

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை