ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 12

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 12

12 –
ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணசலா! (அ)

இறைவனை பலர் பக்தி வருவதற்கும் முன் திட்டியுள்ளனர் - 

கல்லால் அடித்தும் உள்ளனர், பிரம்பால் அடித்தும் உள்ளனர், பித்தனே, பேயனே என்றும் வசம் மாரி பேசியும் உள்ளனர் -- 

தேவர்கள் தங்களுக்கு அமுதம் வேண்டும் என்ற ஒரே கொள்கையில் இறைவனை ஆலகால விஷத்தையும் அருந்த சொன்னார்கள் ---

தனக்கு சேவகனாக, தூதுவனாக அனுப்பியும் உள்ளனர் --- 

பக்தி வந்தபின் தங்கள் இம்சைகளை குறைத்துக்கொண்டனர்.

ஆனால் அவனிடம் இருந்த உரிமையை குறைத்துக்கொள்ள வில்லை.

 -- ரமணரோ வேறு மாதிரி --- 
பக்தி அதிகமாக அதிமாக இறைவனை அதிகமாக இந்த அக்ஷர மாலையில் சாடியுள்ளார் - 

ஆனால் அதிலே வஞ்சகம் இல்லை, சூதுவாது இல்லை, தனக்கு என்று எதுவுமே அவர் கேட்கவில்லை --- 

உண்மையில் அருணாசேஸ்வரர் ரமணர் இன்னும் தன்னை கொஞ்சம் அதிகமாக திட்ட மாட்டாரா என்று தான் ஏங்கினார்

முதலில் என்ன சொன்னார்? 

எனது மனதை நீ அடக்காவிடில் நீ தான் பழி சுமக்க போகிறாய் என்றார் -- 

நம்பிக்கை துரோகம் ஏன் செய்தாய் அருணாசலா -?

ஐம்புலகள்வர் என் மனதில் நுழையும் பொது அவர்களை அடக்காமல் எங்கே ஓடி விட்டாய் என்கிறார் - 

உனக்கு இதுதான் அழகா, ஆண்மையா என்கிறார் .... 

இந்த பாடலில் நீ செய்யும் சூது இதுதானா என்கிறார் - 

இன்னொருவராக இருந்திருந்தால் ரமணரை அடித்தே போட்டிருப்பார்.

ஆனால் கருணையின் உச்சமான அருணாசலேஸ்வரர் அகம் மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் --- 

அவருக்கு தெரியும் தன்னைத் தன்னால் மட்டுமே திட்டிக்கொள்ள முடியும் என்று - அபின்னமாய் ஆன ரமணருக்கும் அருணாசலேஸ்வரருக்கும் வேற்றுமை இல்லை இருவரும் ஒருவரே என்று ------

ஒருவன் தன்னையே திட்டிக்கொண்டால் அவனுக்கு கோபம் வந்தாலும் அதனால் ஒரு கெடுதலும் இல்லை - 

ரமணரின் நிலைமை அதே மாதிரி தான் இங்கே ....

இந்த பாடலில் என்ன சொல்கிறார்?

அருணாசலா - நீயே பரந்தாமன் - பரமாத்மா -- ஒளி மிகுந்தவன், எங்கும் நிறைந்தவன், எதிலும் இருப்பவன் -- 

உனக்குத் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து எவர் எனக்குள் நுழையமுடியும்? --- 

இதோ பார் ஐம்புலக்கள்வர்களை --- எப்படி உன் கண்ணில் மாட்டாமல் ஒளிந்துக்கொண்டே என் உள்ளத்தில் குடி புகுந்து விட்டார்கள் - 

இது நீ செய்த சூதுதானே -?

உண்மையைச்சொல் -- அவர்களை எப்படி உள்ளே விட்டாய்? 

அவர்கள் நுழைந்தவுடன் எங்கே காணாமல் போய் விட்டாய் ---- 

ஓடி வா அருணாசலா -- நீயின்றி யார் எனைக்காப்பார் அருணாசலா?

எழுதும் போதே கண்களை கண்ணீர் முட்டுகிறது - 

என்ன பக்தி! என்ன உரிமை!!!  எப்படிப்பட்ட காதல் இது -- 


உமையே எடுத்துக்கொள்ளாத உரிமையை ரமணர் இங்கே எடுத்துக்கொள்கிறார் இறைவனின் அனுமதியுடன்.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை