ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 13

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா


இந்த பாடலை பார்க்கும் முன்   மனம் மீண்டும் பின்னோக்கி ஓடுகிறது - ரமணரின் அக்ஷர மாலையில் 6வது பாடலை மீண்டும் ஒருமுறை பார்ப்போமா --? 

இன்னொரு தடவை படிக்கும் போது வேறு புதிய விளக்கம் வருகிறது ...

ஈன்றிடும் அன்னையின் பெரிதுஅருள் புரிவோய்,
இதுவோ உனதுஅருள் அருணாசலா.

இதில் என்ன சொல்கிறார் ரமணர் --  
அருணாசலா என் தாயைக்காட்டிலும் அதிகமாக கருணை காட்டுகிறாய் - 

உன்னைப்போல் யார் என்னிடம் பாசமாக இருக்கிறார்கள் என்கிறார் ---

ரமணருக்கும் ஆதிசங்கரருக்கும், பட்டினத்தாருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது  
இந்த மகா யோகிகள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் --- 

ஆனால் இவர்களால் துறக்கவே முடியாதது ஒன்று இருந்தது -அதுதான் தாய் பாசம் --- 

ரமணர் அழகம்மை இறக்கும் வரை தன்னுடனே வைத்திருந்தார் -- 

ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் தாயிடம் கடைசி தருணத்தில் ஓடி வந்து கதறி அழுது ஈமக்கடன்களை செய்தனர் ---

ஆதிசங்கரரின் மாத்ரு பஞ்சகம் படித்தால் கண்ணீர் கங்கை போல் வெள்ளமாக ஓடும்.
எதையும் துறக்கலாம் ஆனால் ஒரு தாயின் மீது நமக்கிருக்கும் அன்பை பாசத்தை மட்டும் துறக்கவே முடியாது - 

துறக்கவும் தேவை இல்லை என்று இவர்கள் நிரூபித்தார்கள் ---- 

அப்படிப்பட்ட தாயைக்காட்டிலும் அருணாசலேஸ்வரர் கருணை உள்ளவர் என்கிறார் ரமணர் -- 

ஏன் அப்படி சொல்கிறார் - தாயை துறக்கவே முடியாதவர் சொல்லக்கூடிய வார்த்தைகளா இவைகள்? --- இதில் வேறு அர்த்தம் புதைந்துள்ளது --- 

இந்த தாய் இந்த ஜென்மத்திற்கு என் அன்னையாக இருக்கிறாள் -- 

நான் எடுத்த, எடுக்கப்போகும் பல ஜென்மங்களுக்கு யார் தாயாக இருக்கப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது - 

ஆனால் அருணாசலேஸ்வரர் என்றுமே எனக்கு தாய்தான் - 

அவன் மட்டுமே நிரந்தரமானவன் - அவனை இந்த தாயைப்போல என்னால் எந்த ஜென்மத்திலும் துறக்கவே முடியாது என்கிறார் -- 

குழந்தையே இல்லாதவர்களுக்குத்தான் குழந்தைகள் மீது அதிகமான கருணையும் பாசமும் வரும் - 

அதுபோல் தாய் தந்தை இல்லாதவன் அந்த அருணாசலேஸ்வரன் -- 

அதனால் அவன் கருணை என்னை இந்த ஜென்மத்தில் பெற்றத் தாயைக்காட்டிலும் அதிகம் என்று சொல்கிறார் --- ரமணர்.

அருணாசலா - உனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை -- ஆனால் என்னைப்பார் -- நான் உன்னை விட எவ்வளவு பாக்கியசாலி -- !!

எனக்கு தந்தை தாயாக இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை -- நான் எடுத்த எடுக்கவிருக்கும் எல்லா ஜென்மங்களுக்கும் நீயே துணையாக இருக்கிறாய் – 

இந்த விஷயத்தில் உன்னிலும் நான் மேற்பட்டவன் என்கிறார் ரமணர் ---

ஒருவர் ஆண்டவனையே பார்த்து இந்த விஷயத்தில் பரிதாபப்படுகிறார் -

இது வேறு விதமான பக்தி

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற (தந்தை தாய்)

அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)

கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன் ஆ. ஆ .ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ அய்யா பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ
அய்யா (தந்தை தாய்)


மீண்டும் ஒரு சின்ன பின்னோட்டம் --- 2வது பாடலை இன்னும் கொஞ்சம் விளக்கமாய் பார்ப்போமா? 

அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா

ஏன் இந்த வரிகளில் அபின்னம் என்ற வார்த்தை வருகிறது என்று யோசித்தேன் ----முதலில் பின்னம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம் --- பின்னம் என்றால் ஒரு பகுதி என்று அர்த்தம் ---

உடம்பில் கை கால்கள் பின்னம் என்று சொல்லலாம் -- உடம்பில் ஒரு பகுதி அவைகள் ... 

இதற்கு மாறுப்பட்ட அர்த்தம் அபின்னம் --முழுவதும் ஆன பொருள் -- முழு சந்தோரோதயம் என்று சொல்லலாம் - 

தேய்ந்து போகும் நிலவை பின்னம் என்று சொல்லலாம் .... 

அபின்னமாய் இருப்போம் என்றால் --------  

அருணாசலேஸ்வரா --- நான் இதுவரை நீ படைத்த ஒரு பகுதியாக இருந்தேன் - ஒரு பின்னமாய் இருந்தேன் --- உன்னில் நான் கலந்து விட்டால் ஒரு முழுப்பொருளாகி விடுவேன் - 

இனி என்னை யாரும் பின்னம் என்று சொல்ல முடியாது ------ வாழ்க்கையில் நாம் பார்ப்பதுதான் - 

இரண்டு உயிர்கள் தனித்தனியாக பின்னமாய் திருமணம் ஆகும் முன் இருக்கின்றன --- கணவன் மனைவி என்ற உறவு வந்த பின்    அந்த இரண்டு உயிர்களின் துடிப்பும் ஒன்றாகி மூன்றாவது துடிப்புக்கு வழி வகுக்கிறது - 

இங்கே ரமணரின் வரிகளில் அபின்னமாய் ஆனா இரண்டு துடிப்புக்கள் பரமானந்தம் என்ற மூன்றாவது துடிப்புக்கு வழி வகுக்கிறது 

இரண்டும் அபின்னமாய் ஆகா விடில் பரமானந்தம் கிடைக்க வழி இல்லை .

அதனால் தான் ரமணர் நேராக பரமானந்தம் தா அருணாசலா என்று கேட்காமல் அபின்னமாய் இருப்போம் அருணாசலா என்று கெஞ்சுகிறார் --


இறைவன் சிலசமயம் நம்முடன் வாழ்க்கையில் விளையாடுவதைப்போல் வார்த்தைகளில் விளையாடுகிறார் ரமணர் இங்கே.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை