ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 14

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பாடல் 14 

14 –
ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை

ஆளுவது உன் கடன் அருணாசலா (அ)

ஔவையின் மீது ரமணருக்கு தனி அன்பு, பக்தி -- இங்கே ஔவை என்றும் எடுத்துக்கொள்ளலாம், தாயென்றும் எடுத்துக்கொள்ளலாம் ---ஔவை ஈசன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார் 

அவ்வை என்ற பெயரில் நான்கு புலவர்கள். 

அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். 

இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். 

நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை. 

இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார். 

இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். 

இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர். 

மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். 

சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். 

இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். 

மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். 

குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள். 

நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். 

முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார். 


இவர் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்

வாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று
வாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என
சிந்தைதனில் நின்று
அவாவினால் இந்த அவ்வை தமிழ் கொண்டு
காவி பாடினாள் உன்னை கண்குளிர கண்டு

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்

நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்

நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
      
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்.......
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்

இன்னிசை சுரவங்களில் ஏழானவன்
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை சுரவங்களில் ஏழானவன்

தித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் பொருள்களில் எட்டானவன்

தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பற்றானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருக்கை வேல்லவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்

முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையுண்டு தான்னென்று சொன்னானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையுண்டு தான்னென்று சொன்னானவன்

ஆண் பாதி உமை   பாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்

காற்றானவன் ஒளியனாவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும்
நிலையான ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்

ரமணர் உருகி போகிறார் -- அருணாசலா --  
இந்த தாய்க்கு தாயாக அருள் செய்தாயே எனக்கும் அப்படியே உன் கருணையை காட்டக்கூடாதா? 
உன் அன்புக்காக ஏங்குகிறேன் அருணாசலா --- 
அவர் இப்படி வேண்டும்போது – அருணாசலா ஏன் ஓடி வராமல் இருக்கிறாய் என்று நமக்கே கேட்கவேண்டும் போல் இருக்கிறது 🙏🙏

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை