ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 15
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
பாடல் 15
பாடல் 15
15 –
கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா (அ)
முதல் பார்த்த வரிகளில் கோபம் இருந்தது, இயலாமை இருந்தது, அதிகாரம், கட்டளை இருந்தது -
உரிமை வார்த்தைகளாக தெளித்தது -- இனி வரு பாடல்களில் இரக்கமும், கெஞ்சுதலுமே இருக்கின்றன ---
பார்க்கமாட்டாயா, வர மாட்டாயா, அவ்வைக்கு கருணை காட்டியதைப்போல் எனக்கும் உன் கருணையை காட்ட மாட்டாயா .... என்று புலம்புகிறார் ரமணர் --
இன்றைய வரிகளில் ஒரு படி இன்னும் மேலே போகிறார் ரமணர்.
எனக்கு கண்கள் மிகவும் முக்கியம் அருணாசலா -
அவைகள் கொண்டுதான் இந்த உலகைப்பார்க்கிறேன்.
--- அந்த கண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை ---
ஆனால் நீயோ நான் கேட்காமல் அந்த கண்களுக்கு கண்ணாய் இருக்கிறாய் -
கண்களையே பார்க்கும் கண்கள் அருணாசலர் ---
எவ்வளவு அழகாக உணர்ச்சி பூர்வமாக ரமணர் சொல்கிறார் பாருங்கள் ---
இந்த அக கண்கள் உனக்குத்தேவை இல்லை -
இருந்தாலும் உன்னால் கண்களே இல்லாமல் கூட எல்லாவற்றையும் பார்க்க முடியும் ---
இதில் என்ன வேடிக்கை என்றால் உன்னை எங்களால் பார்க்க முடியவில்லை ---
யாரால்தான் பார்க்க முடியும்? நான் உன்னை பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை - அருணாசலா நீ என்னைப்பார் அது எனக்குப்போதும் --
இந்த உலகமே என் கால் அடியில் வந்து விடும்
உன் பார்வை என் மீது கொஞ்சமே பட்டாலும் --
கொஞ்சம் பார் என்னை அருணாசலா!!!! 🙏
Comments