ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 .. பாடல் 16

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பாடல் 16



16. காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து
எனோடு இருப்பாய் அருணாசலா

திருமாலை காந்தன் என்று சொல்வார்கள் ஆழ்வார்கள்.

கலைமுழு தோர்ந்து கரிசெலாம் அறுத்த
காந்தனே பருமணி அரவத்
தலைகிடந் திமைக்குந் தாத்திரி யதனிற்
சாற்றருந் தக்கநன் முயற்சி
உலைவறப் புரியா ஒருவனுக் கெங்ஙன்
உற்றிடுஞ் செல்வநன் னிலத்தை
நிலைபெற உழுது வித்திலான் தனக்கு
நீள்பயன் உற்றிடுங் கொல்லோ.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
முருகனும் காந்தன் தான் என்கிறது இந்த பாடல். 

ஓர் இரும்புத்துண்டு புழுதியில் கிடந்தாலும், காந்தத்தை மேலே காட்டினால் போதும், அந்த இரும்புத்துண்டு காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதனுடன் சேர்ந்துவிடும்.  

அதுபோல, தன்னுடைய இப்போதைய நிலையிலிருந்து தன்னை ஈர்த்துக்கொண்டு அரவணைக்குமாறும் என்றும் தன்னோடிருக்குமாறும் வேண்டுகிறார் ரமணர்.  

இன்னும் கூர்ந்து படித்தால் அர்த்தம் இப்படியும் வரலாம். 

அருணாசலா, என் மனம் ஒரு இரும்பு ... கெட்ட எண்ணங்களால் மிகவும் துரு பிடித்து போய் விட்டது ... 

நீ தான் எல்லோரையும் காந்தம் போல் உன் பக்கம் இழுக்கின்றாயே, 

என் மனம் எனும் இரும்பை உன் அன்பு என்ற காந்தத்தால் இழுத்து உன் பக்கம் கொஞ்சம் சேர்க்க மாட்டாயா ... 🙏

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை