ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 7

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 9 பாடல் 7

7
உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாசலா! (அ)



பக்தன் என்னதான் இறைவன்மீது அன்பு வைத்தாலும், அவனது இந்திரியங்கள் அவனை விடுமா? 

வேறு விஷயங்களில் இழுத்துச்செல்லுமே! 
காற்றில் ஓடும் காகிதத்தின் மீது ஒரு கனமான பொருளை வைத்தால் அது ஓடாதல்லவா? 

அதுபோல, ‘என் மனத்தில் வந்து உறுதியாக அமர்ந்துகொள்’ என்று சிவனை வேண்டுகிறார் ரமணர்

இல்லாவிட்டால் என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும், 
ஊரில் எங்கும் சுற்றித் திரியும், அப்படி நிகழாதபடி கருணைகாட்டி என்னைக் காத்திடுவாய்!’

இங்கே பாலமுரளி பாடிய ஒரு பாடல் ராமனரின் மனதை அப்படியே பிரதிபலிப்பதைப் போல் உள்ளது. 

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே  

ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி 
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ 
சோதனைக்களம் அல்லவா?

நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே 

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி 

யாருக்கும் நீயல்லவா

நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ 

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)


எல்லாவற்றிக்கும் நம் மனதே காரணம் .... அதற்கு மூக்கனாம் கயிறு ஒன்று போட வேண்டும் என்றால் சொல்ல வேண்டிய நாமம் நம சிவாய என்பதே என்கிறார் ரமணர் இந்த பாடல் மூலம்.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை