ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 9
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
பதிவு 11 பாடல் 9
9 –
எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா! (அ)
அருணாசலா ----- எனது என்பது ஒன்றுமே இல்லையே -- எல்லாம் நீ கொடுத்தது ---
இதில் நான், எனது என்று எதை சொல்ல முடியும்?
ஆனாலும் என் பாழும் மனமோ, நான், எனது என்றல்லவா சொல்லித்திரிகிறது ---
அந்த என்னை, நினைக்கும் எண்ணங்களை அழித்துவிடு அருணாசலா ---
அழிப்பது மட்டும் உன் வேலை அல்ல ---
என்னை, நான், எனது என்று தவறாக நினைக்கும் என் மனதிற்கு தெரியாமல் திருடி உன்னிடத்தில் வைத்துக்கொள் ---
அப்படி நீ செய்யாவிட்டால் உனக்கு ஆண்மையே என்று எல்லோரிடமும் போய் சொல்லிவிடுவேன் ....
ரமணரின் உரையாடலைகளை பாருங்கள் --
என்ன உரிமை, அதிகாரம், கோபம், தாபம் --- இதுதான் உயர்ந்த பக்தி ---
முதலில் அருணாசலா என்று நினைப்பவர்களின் கர்வத்தை வேருடன் அழித்துவிடு என்று உத்தரவிடுகிறார் --
பிறகு அழகும் சுந்தரமும் போல் பிரிக்கமுடியாமல் அபின்னமாய் ஆகிவிடுவோம் - என்று கெஞ்சுகிறார்.
பிறகு என் மனம் எங்கோ சுத்துகிறதே அதை அடக்கி இறைக்குள் வைத்துவிடு என்று எச்சரிக்கை விடுகிறார்.
-- என்னை உனக்குள் வைக்காவிட்டால் உலகம் உன்னை பழிக்கும் என்று மிரட்டுகிறார் ---
பிறகு நீதானே என்னை இப்படி சிந்திக்க வைத்தாய் இந்த பழி உனது அல்லவோ என்று சொல்லி இறைவனை மாட்டவைக்க முயற்சிக்கிறார் ---
உடனே கெஞ்சுகிறார் என் அன்னையை காட்டிலும் நீ அல்லவோ அதிகம் அன்பு செலுத்துகிறாய் என்கிறார் --
மீண்டும் கவலை --- ஊரெல்லாம் சுத்தும் என் மனதை அடக்க மாட்டாயா -- அப்படியே எனக்கு உன் அழகு திருமுகத்தை காட்டு அருணாசலா என்று கதறுகிறார் ---
இப்பொழுது கோபம் வருகிறது ---- நான், எனது என்ற எண்ணத்தை நீ அழிக்காவிட்டால் உனக்கு ஆண்மையே இல்லை என்று எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்று திட்டுகிறார் --
இறைவன் எல்லாவற்றையும் ரசித்து கேட்டுக்கொண்டிருக்கிறான் அருணாசலமாக -----

Comments