ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 flashback 2 பாடல் 7 to 11

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 15  A flashback 2  பாடல் 7 to 11



7.உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா!

8.ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா!

9.எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா!

10.ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா!

11.ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா!

7 வது பாடலில் பக்தன் என்னதான் இறைவன்மீது அன்பு வைத்தாலும், அவனது இந்திரியங்கள் அவனை விடுமா?

வேறு விஷயங்களில் இழுத்துச்செல்லுமே!

காற்றில் ஓடும் காகிதத்தின் மீது ஒரு கனமான பொருளை வைத்தால் அது ஓடாதல்லவா?

அதுபோல, ‘என் மனத்தில் வந்து உறுதியாக அமர்ந்துகொள்’ என்று அருணாசலேஸ்வரரை   வேண்டுகிறார் ரமணர்.

 ‘இல்லாவிட்டால் என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும், ஊர் எங்கும் சுற்றித் திரியும், அப்படி நிகழாதபடி கருணைகாட்டி என்னைக் காத்திடுவாய்’அருணாசலா என்று கெஞ்சுகிறார்.

8வது பாடலில் என் மனம் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது - என் கட்டுப்பாட்டில் கொஞ்சமும் வருவதில்லை - அப்படி என் மனம் சுற்றாமல் அமைதியாக அடங்கிட உன் அழகை காட்டமாட்டாயா அருணாசலா? ---

மனம் அடங்கினால் புலன்கள் அடங்கும், புலன்கள் அடங்கினால் நானும் நீயும் ஒன்றாகி விடலாமே என்று சொல்கிறார் இந்த வரிகளில்.

9 வது பாடலில் நான் எனும் அகங்காரத்தை அழித்து என்னுடன் நீ இணையாவிடில் நீ ஆண்மை அற்றவன் என்று பழி சுமத்தி விடுவேன் என்று எச்சரிக்கிறார்.

10வது பாடலில் என்னை உறவுகள் ஒருபக்கம் இழுக்கின்றன - பாசம் பந்தம் என்று சொல்லி எனக்கு விலங்கு மாற்றுகின்றன -

ஒரு பக்கம் மனம் இந்திரியங்கள் பக்கம் இழுக்கிறது - புலன்கள் ஒவ்வொன்றும் என்னை ஒரு பக்கம் இழுத்து என் மனம் அடங்கி விடாமல் பார்த்துக்கொள்கின்றன -- இதையெல்லாம் நீ பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறாயே - இது உனக்கு அழகா அருணாசலா என்று புலம்புகிறார்.

11 வது பாடலில் தன் வருத்தங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கொட்டி விடுகிறார் ---

நீ என் உள்ளத்தில் இருக்கிறாய் என்று மிகவும் சந்தோஷத்துடன் இருந்தேனே அருணாசலா ---

ஐம்புலன்கள் எனும் கள்வர்கள் என் உள்ளத்தில் நுழையும் போது நான் கவலைப்படாமல் இருந்தேன் நீ இருக்கிறாய் அவர்களை அழித்து விடுவாய் என்று நம்பினேன் ---

ஆனால் அவர்கள் நுழைந்து நீ அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்கள் - என்னை காப்பாற்றாமல் எங்கே ஓடிப்போனாய் அருணாசலா என்றே இறைவனை சாடுகிறார் --

அதிகாரம், சந்தோஷம், கெஞ்சல், பரிதாபம், கோபம், மிரட்டல், பரிகாசம், பச்சாதாபம் அத்தனையும் இந்த 11 பாடல்களில் காண்பித்துவிடுகிறார் ரமணர் பக்தி குறையாமல்.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை