ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 a flashback

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

பதிவு 11 flashback

இன்றைய வரிகளை அலசும் முன், ஒரு சிறிய flashback -- மீண்டும் மனம் முதல் பாடலுக்கே ஓடுகிறது ---



அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா

ஏன் அகத்தை (கர்வத்தை, மமதையை) வேருடுன் அழிக்கவேண்டும் என்று ரமணர் அருணாசலத்திடம் வேண்டுகிறார் ---

கிள்ளி எறிந்தால் அல்லது பிடுங்கி போட்டால் போதாதா?

ஏன் வேருடுன் பிடுங்க வேண்டும்?

இரண்டு வரிகள் தான் அக்ஷர மாலை ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளன -

அருணாசலேஸ்வரருக்கும், ரமணருக்கும் மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும் --


இருந்தாலும் ரமணர் நமக்கெல்லாம் ஒரு வரத்தை தருகிறார் --

நான் யார் என்று உள்ளுக்குள்ளே தேடு - தேடிக்கொண்டே இரு -

ஒரு இடத்தில் நீ தேடுவது நின்று போகும் --

அங்கே உன்னை நீ காண்பாய் சிவமாக என்கிறார் ரமணர் --

அதேபோல் அக்ஷர மாலையை படிக்க படிக்க வேறு வேறு அர்த்தங்கள், விளக்கங்கள் வரும்.

முடிவில் அங்கே நீ காண்பது ரமணராக நிற்கும் அருணாசலேஸ்வரைத்தான். ஏன் வேருடன் அறுக்கவேண்டும்? --

நமக்குள் இருக்கும் நான் என்ற எண்ணத்தை, மமதையை, அகங்காரத்தை வெறுமனே கிள்ளிபோட்டால் வேர் இருப்பதால் மீண்டும் மீண்டும் முளைத்து விடும் ---- 

அருணாசலா உன்னை நினைப்பவர்களுக்கு அந்த கஷ்டம் வரக்கூடாது -

உன்னை நினைக்கும் மாத்திரத்தில் அவர்கள் மனதில் இருக்கும் எல்லா குப்பைகளும், அகந்தையும் அடிச்ச்சுவடே இல்லாமல் வேருடன் பிடுங்கி அழித்துவிடு என்கிறார் --

ரமணருக்குத்தான் நம்மீது எவ்வளவு கனிவு, பாசம், அன்பு பாருங்கள் -

நமக்கு அகந்தை இல்லை என்றால் நமக்கு எல்லோர் மீதும் அன்பு வரும் -

அந்த அன்பே சிவம் - அதுவே அருணாசலேஸ்வரர் ....

இன்னுமொரு பாடல் வரிகளை பார்ப்போம்

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாசலா!

ஆண்டவனை பார்த்து எப்படி உனக்கு ஆண்மை இல்லை என்று சொல்ல முடியும்?
ரமணரால் மட்டுமே இப்படியும் கேட்க முடியும்?

இங்கே வேறு அர்த்தம் புதைந்துள்ளது ---

அருணாசலேஸ்வரா --- நீயோ பலமிக்கவன் --- உன் அடி முடி தெரியாமல், உன் ஆண்மை புரியாமல் தோற்று போயினர் தேவர்கள் ---

ஆனாலும் உனக்கு ஆண்மை குறைவே --- ஏன் தெரியுமா?

உன் சரிபாதியை என் அன்னை உமைக்குத் தந்துவிட்டாய் --

மீதி இருக்கும் பாதியில் ஆண்மை அரை பங்குதானே இருக்க முடியும்?

அந்த அரை பகுதி ஆண்மையை நீ காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் என் மனதில் இருக்கும் நான், எனது என்ற குப்பைகளை கலைத்துவிட்டு --

என்னை திருடிக்கொண்டு உன்னிடம் சேர்த்துக்கொள் --

இல்லை என்றால் நீ பாதிதான் ஆண்மை உடையவன் என்றே எல்லோருக்கும் சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை!! 

நான் மிகவும் பொல்லாதவன் என்கிறார் ரமணர் -

வரிகளை அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள் -

அதில் புதைந்துள்ள தாத்பரியங்களையும், பக்தியையும், இறைவன் மீது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய உரிமைகளையும் புரிந்துகொள்ளுங்கள் -

அப்பொழுதுதான் ரமணரின் அக்ஷர மாலையை நாம் நன்றாக அனுபவிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை