பாமாவின் கண்ணன் 2
பாமாவின் கண்ணன் 2
கண்ணா கண்ணா என்று சொல்லும் பாமாலையில் பாமா கரைந்து போவாள் ...
பார்த்தனுக்கு சாரதி நீ , பசித்தவர்களுக்கு அக்ஷ்ய பாத்திரம் நீ , பாடுவோரின் மாலை நீ ... நீ அணியும் மாலை நான் ... ஏற்றுக்கொள் கண்ணா இந்த பூ மாலையை ...
வனமாலை அணிந்தவனே ,
தனமாலை மார்பில் கொண்டவனே , இனமாலை அறியேன் ...
இடைமாலையாய் என்னை ஏற்றுக்கொள் ..
.அவள் வளர வளர அவள் மனம் கிருஷ்ணன் பால் அதிகம் சென்றது.
அவனைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் உறுதிப்பட்டது.
அவள் இல்லாமல் கிருஷ்ணன் என்ன செய்வான்? அவளால் தான் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.
அவளால் மட்டுமே அவனுக்கு ஓர் ஆதர்ச மனைவியாக வாழ்க்கை நடத்த முடியும்.
அவள் இல்லையேல் கிருஷ்ணனுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை.
இது வரை அவன் வாழ்க்கையில் சந்தித்த எந்தப் பெண்ணும் கொடுக்காத அளவுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி அவனுடைய வேலைகளிலும், மற்றப் பிரச்னைகளிலும் பங்கெடுப்பாள்.
பெருந்தன்மையுடன் அவனைப் பகிர்ந்து கொள்வாள்.
அவன் வாழ்வில் இத்தகைய பெண்ணையே இதுவரை சந்தித்ததில்லை என அவன் எண்ணும்படி நடந்து கொள்வாள்.
ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கிருஷ்ணனை மணக்க முடியும் என்னும் நம்பிக்கை அவள் மனதில் ஆட்டம் கண்டது.
அவள் தந்தையும் மற்ற யாதவர்களும் மற்ற யாதவர்களிலிருந்து பிரிந்தே காணப்பட்டார்கள்.
அவர்களை இவள் லட்சியமே செய்யவில்லை.
நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. துவாரகையிலேயே மிகப் பெரிய மாளிகை சத்ராஜித்துடையது தான்.
முழுவதும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்த அந்த மாபெரும் மாளிகையைச் சுற்றிலும் தாழ்வாரம் நீண்டு ஓடிக் கொண்டிருந்தது.
சௌராஷ்டிரக் கடற்கரையை ஒட்டி இருந்த அந்த மாபெரும் மாளிகையை ஒட்டியே, அதன் பரந்து விரிந்த தோட்டப்பகுதியில் வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோருக்கான சிறு வீடுகளும், குடில்களும் காணப்பட்டன.
ஓர் பக்கம் குதிரை லாயம் ஒன்று பெரிதாகக் காணப்பட்டது.
இன்னொரு பக்கம் பசுக்கள் இருக்கும் தொழுவமும் இருந்தது.
நூற்றுக்கணக்கில் பசுக்கள் காணப்பட்டன. வீட்டின் பின் பகுதியில் ஏதோ சப்தம்! என்ன?
வீட்டின் பின்பக்கக் கதவு வழியே ஓர் அழகான இளம்பெண் உள்ளே நுழைகிறாள்.
அவள் வேறு யாரும் அல்ல. சத்யபாமா தான்.
சத்ராஜித்தின் ஒரே பெண். சத்யா என அனைவராலும் அழைக்கப்படுவாள்.
சூரியனுக்காக அவள் தந்தை அங்கே ஓர் கோயில் கட்டி இருந்தார்.
அதை ஒட்டிய முற்றத்தில் தான் அந்தக் கதவு திறக்கிறது.
சத்யபாமா சிறு பெண்ணாகக் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தாள். அதனாலோ என்னமோ கொஞ்சம் குண்டாகவும் தெரிந்தாள்.
எனினும் அது அவளுக்கு நன்றாகவே இருந்தது.
வெள்ளை வெளேர் என வெண் தாமரையைப் போல் காணப்படும் அவள் முகம் இப்போது வெயிலில் இருந்து வந்ததால் சிவந்து வெண்மையும், சிவப்பும் கலந்ததொரு அபூர்வ நிறத்தில் காணப்பட்டது.
கவர்ச்சிகரமான எழிலோடு காணப்பட்டாள். அவள் கண்களில் அவளுடைய புத்திசாலித்தனமும், திறமையும் பளிச்சிட்டது.

உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள் பாமா.
அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாள் இந்நாளே என அவள் நினைத்தாள். சற்றுத் தொலைவில் வீட்டின் சுற்றுச் சுவருக்கு அப்பால் காணப்பட்ட சமுத்திரத்தையும் அதன் அலைகள் ஓயாமல் கரையில் வந்து மோதுவதையும் பார்த்தவளுக்கு அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து விட்டே சமுத்திர ராஜன் தன் அலைக்கரங்களை விரித்துக் கொண்டு ஆனந்த நடனம் ஆடுவதாகத் தோன்றியது.
அந்தப்புரம் நோக்கி நடந்த பாமா அங்கே யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள்.
சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட பாமாவுக்குச் சிற்றன்னையர் இருந்தனர்.
ஆனால் அவர்களும் அந்தப்புரத்தின் மற்ற மகளிரும் வீட்டின் முன் முற்றத்தில் அவள் தந்தைக்கு உணவு படைப்பதில் மும்முரமாக இருந்தனர்.
அவருடன் கூட அவரின் அலுவலர்கள், மற்றும் தினந்தோறும் யாகம் வளர்த்து வழிபாடுகளை நடத்தித் தரும் பிராமணர்கள் ஆகியோரும் அமர்ந்து உணவு உண்டனர்.

Comments