அடியார்க்கு அடியோன் 1



அடியார்க்கு அடியோன்



யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள்,

சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது,

கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்,

ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்,

""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை,

""எனக்குப் பசிக்கிறது!''

ராதை பதறினாள்,

""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன்,அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''

"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''

""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள்,

அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது,

""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்,

""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''

""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''

சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்,அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி,

ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும்,என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது,ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான்,

ராதை தொடர்ந்தாள்,

""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!

"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''

தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா,

என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள்,நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய்,

என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்'',

""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது, 

என்னை அதிகம்  
புகழவேண்டாம்,எப்படியும் சாப்பாடு உறுதி!''

ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்,

""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''  
ராதை தலையாட்டியபடி,சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்,

ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது,

தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள்,

அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.



Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை