அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 1

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 1




நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு

மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்

செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்

கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க

    தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்

செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு

    திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க

வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி

    யம்மையே யெனநாத னப்பா வென்று

பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்

    புனிதனட மனவரதம் போற்றி னாரே💐

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். பிள்ளை வரம் வேண்டி பெண் ஒன்றை பெற்றான் ஈசன் அருளால் ... குழந்தை அது சிரித்தது ... 

சிரித்த ஒலியில் சிவ நாமம் அங்கே தெளித்தது .... வளர்த்தாள் கோதையாக ... அவள் கால் பதியாத சிவ ஆலயங்கள் இல்லை ... சிவனை நினைக்காத நேரம் அங்கே அவளுக்கு பிறக்க வில்லை ... உமையவள் தன் பதியை கூட கொஞ்ச நேரம் மறந்திருக்கலாம் ஆனால் இந்த புனிதவதி ஒரு வினாடி கூட ஈசனை நினைக்காத நேரம் இல்லை ... 

கனிகொண்டு அவனை பூஜிப்பாள் ... மலர் கொண்டு அவனை அலங்கரிப்பாள்... தனம் கொண்டு அவனுக்கு அமுதம் ஊட்டுவாள் .. வனம் நிறைந்த கோயில்களில் மனம் கொண்டு வேலை செய்திடுவாள் ... வரம் செய்தான் ஈசன் ... தாயாக கொஞ்சும் தாரை அவளை பெற்றிடவே ...

அவள் தினம் ஈசனிடம் இந்த பாடலை பாடுவாள் ... கண்கள் அவன் ஜடாமுடியில் ஓடும் கங்கையை விட அதிகமாக பெருக்கெடுத்து அங்கே ஓடும் ... 

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற (தந்தை தாய்)

அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)

அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)

கல்லால் ஒருவன் அடிக்க ......

கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க

காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க

காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க 

காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க

கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க

அந்த வேளை யாரை நினைந்தீரோ ....அய்யா .....

பெற்றதந்தை தாய் இருந்தால் உலகத்தில்உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோஅய்யா (தந்தை தாய்)...

ஈசன் இதை கேட்டு மூன்று கண்களிலும் கண்ணீர் வெளிவருவதை தடுக்க முடியாமல் தவித்தான்

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை