அளவே இல்லா அழகன் 2
அளவே இல்லா அழகன் 2.
அவர் புறப்பட்டுப் போனதை உறுதி செய்துகொண்ட பின் நாரதர் "நாராயண! நாராயண' என்றவாறு பாதிக்கப்பட்ட கந்தர்வனை நோக்கிப் புறப்பட்டார்.
காலவர் சொன்னது முழுவதையும் கேட்டுக் கொண்டான் கண்ணன்.
பக்தர்களைக் காப்பது தான் தன் லட்சியம் என்றும், அன்று மாலைக்குள் கந்தர்வன் தலையைத் தான் வீழ்த்துவது நிச்சயம் என்றும் வாக்குறுதி தந்தான்.
காலவரிஷி நிம்மதியாக ஆஸ்ரமம் போய்ச் சேர்ந்தார்.
நடந்த அனைத்தையும் நாரதர் மூலம் கேட்டறிந்த கந்தர்வன் பதறினான். ""அறியாமல் செய்த பிழைக்கு மரணதண்டனையா? கண்ணனே என்னைக் கொல்லப் போகிறானா?'' கண்ணீர் விட்டுக் கதறினான்.
கந்தர்வனின் மனைவியும் உரத்த குரலெடுத்து அழலானாள்.
நாரதர் அவர்களை அமைதிப்படுத்தினார்.
கந்தர்வனின் மனைவியை உடனடியாக சுபத்திரையிடம் சரணடையுமாறு வற்புறுத்தினார்.
சுபத்திரை கண்ணனின் சகோதரி மட்டுமல்ல! மாவீரன் அர்ஜுனனின் மனைவியும் கூட!
அவளைச் சரணடைந்தால் நல்லதே நடக்கும் என்றார் நாரதர்.
முந்தானையை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்ட கந்தர்வனின் மனைவி, விறுவிறுவென ஓர் ஆவேசத்தோடு சுபத்திரையின் மாளிகைக்குச் சென்றாள்.
அர்ஜுனன் அருகில் இல்லாத நேரத்தில் அவள் காலில் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சடாரென விழுந்தாள். விழுந்தவள் நீண்டநேரம் எழுந்திருக்கவே இல்லை.
ஒரு சுமங்கலி, கண்ணீரும் கம்பலையுமாய்த் தன் காலில் விழவேண்டிய அவசியமென்ன?
கந்தர்வன் மனைவியைத் தொட்டுத் தூக்கி ஆறுதல் சொல்லி விவரம் கேட்டாள் சுபத்திரை.
""என் கணவரை ஒருவர் இன்று மாலைக்குள் கொல்லப் போகிறார். என் கணவரைக் காப்பாற்றி என் மாங்கல்யத்தைக் காப்பதாக வாக்குறுதி கொடுங்கள் தாயே!''.
நாரதரின் அறிவுரைப்படி, தன் கணவரைக் கொல்லப்போவது கண்ணன் தான் என்பதை அப்போது சொல்லாமல் தவிர்த்தாள் அந்த புத்திசாலி மனைவி.
சுபத்திரை வாக்குறுதி தந்து, அவளை அர்ஜுனனிடம் அழைத்துப் போனாள்.
இவள் கணவரின் உயிரை நீங்கள் காக்க வேண்டும் பிரபோ!
அவனைக் காப்பதாக வாக்குறுதி தாருங்கள்!'' என்று சுபத்திரை வேண்டினாள்.
மனைவி கேட்டபின் சரியென்று தலையாட்டாத கணவனும் உண்டா?
அர்ஜுனன் வாக்குறுதி தந்தபின், ""கொல்லப்படப் போவது
கந்தர்வன் என்பது சரி. அவனைக் கொல்லப் போவது யார்?'' என்று தாமதமாக விசாரித்தான்.
""கண்ணக் கடவுள்!'' என்றாள் கந்தர்வன் மனைவி.
அதைக் கேட்ட சுபத்திரை, அர்ஜுனன் இருவர் தலையும் கிறுகிறுவெனச் சுற்றியது.
ஆனால், ""கொடுத்த வாக்குறுதி கொடுத்ததுதான். நான் கண்ணனை எதிர்த்துப் போரிடுவேன்!'' என காண்டீபத்தோடு எழுந்தான் அர்ஜுனன்.
"தாங்கள் வழிபடும் கடவுளை எதிர்த்துப் போரா...!' சுபத்திரை பதறினாள்....
கண்ணனுக்கும் அவன் பக்தனான அர்ஜுனனுக்கும் போர்.
என்ன விந்தையான காட்சி! இதைக் காண தேவர்கள் அனைவரும் வானில் கூடினார்கள்.
காலவ முனிவர், போர்க்களத்தில் கண்ணன் அருகே கைகூப்பி நின்று கொண்டிருந்தார். நாரதரும் வந்துசேர்ந்தார். பிறகு 🤔🤔

Comments