அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 2
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 2
நாளொரு வண்ணமாக நாதன் தாள் பணிந்த அவளை
நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனின் தாள் பாடிய அவள் தந்தை ஆசை கொண்டான் .
அழியும் மேனி மீது என்றுமே மோகம் இல்லை புனிதவதிக்கு ... காலனை காலால் உதைத்து , காமனை கண்ணால் எரித்தவன் அவளை மேலாக கொஞ்சம் இல்லற வாழ்க்கையில் பேருக்காக கொஞ்சம் திளைக்க வைத்தான் ...
புனிதவதியின் தந்தை பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான்.
இல்லறம் எனும் நல்லறத்தை சிவ சொல்லறம் வைத்து நடத்தினாள் ...
கண்ணில் கணவனை தாங்கி நெஞ்சில் கணவனை தாங்கி சொல்லில் கணிவை தாங்கி , உதடுகளை சிவா எனும் மதுரத்தை தெளித்து வாழ்க்கை எனும் தேரில் கணவனுடன் பவனி வந்தாள் ..
தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.
இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான்.
இங்கே பனித்த மேனியன் , பவழ செவ்வாயில் பணிமலையை உதிர்ப்பவன் புனித வதியை சோதிக்க ஆசைப்பட்டான் ... மாம்பழங்கள் அவன் ஆடும் கனகசபையாக மாறின ... அதிலிருந்து புறப்பட்ட வண்டுகள் நீங்காரம் இட ஜடாமுடிகள் புனித வதியின் இல்லத்திற்கு கொஞ்சம் பாதை போட்டன ...
மான்கள் பன்னீர் தெளிக்க , புலித்தோலில் உள்ள புலி பூனையாக கமண்டலமாய் மாறி புன்னகை புரிந்தது ....

பின்பு, சிவண்டியாராக சிவனே பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார்.
புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார்.
அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார். சிரித்தவன் அவள் சிந்தனையை கொஞ்சம் புரட்டிப்போட்டான்

Comments