அடியார்க்கு அடியோன் 3
அடியார்க்கு அடியோன் 3
இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர்,
அவர் சொன்னதைச் சொன்னேன், இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது,
இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
"வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''
"நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''
"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய்,
துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்!
நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்'',
அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடு விசாரித்தாள்,
கண்ணன் சொல்லலானான்:
"அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன், ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன்,
நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய், அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு முழுவதையும் உண்டார்,
அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது,
அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது,
என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது,
இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது,
வயிறு நிறைந்திருக்கிறது, இந்த ரகசியத்தை என் ராதை அறியவில்லை, ஆனால் யமுனை அறிவாள், அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்குச் சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை,
ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.
"ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!' 'என்றான் கண்ணன்,
"ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
"நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான்
கண்ணன்,
ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது...

Comments