அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 3

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 3


ஈசன் வந்து அமர்ந்து உணவு அருந்திய இடம் தகதகதக வென்று பொன் போல் ஜொலித்தது .. 


பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம் பண்ணும் பொழுது, புனிதவதி எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். 

பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியை  நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். 

ஒன்றுமே புரியாமல் தவித்தாள் புனிதவதி .. கணவனுக்கு பிடிக்காத ஒன்று இந்த சிவனடியார்களை உப்சரிப்பது , அவர்களுக்கு அமுது படைப்பது அதுவும் தான் சாப்பிடுவதற்கு முன்னால் .... 

உண்மை சொன்னால் கணவன் மனம் புண் படும் .. மிஞ்சி இருந்த பழம் ஒன்றுதான் .. அதையும் அவனுக்கே தந்தாகி விட்டது ... 

கணவனோ இன்னோர் பழம் வேண்டும் என்கிறான் .... கண்களை மூடினாள் .. 

காதலை கண்ணீராக கசிந்து உருகினாள்.. ஓதுவார் தம்மை நன்னெறி படுத்தும் நமச்சிவாய நாமத்தை , அந்த நாதனின் நாமத்தை வேண்டினாள் ... 

அவள் கரங்களில் வந்து விழுந்தது முக்தி எனும் மாம்பழம் ...

அது வெறும் பழம் அல்ல ... அவள் பக்தியின் உச்சம் . சரனாகதியின் சாரம் . அவள் வாழ்க்கையை திருப்பி போட வந்த பழம் ... புனிதவதி எப்படிப்பட்டவள் என்று உலகம் அறிந்துகொள்ள ஈசனே பழமாக வந்த பழம் ... பழம் நீ என்றாள் அவ்வை ... இங்கே நானே பழம் என்றான் ஈசன் ... 

அருந்திய பழம் உள்ளுக்குள் சென்று பரமதத்தனை ஒரு சிவாலயமாக்கியது .... உள்ளுக்குள் ஆலய மணிகள் சிவா சிவா என்றே ஒலித்தன ... 

அவன் ஆசை மனம் சிவனிடம் செல்லும் முன் கடைசி தடவையாக அவளை கேட்டது ... அருமை , ஆச்சரியம் ... அந்த பழத்தை விட இது ஆயிரம் மடங்கு சுவையாக இருக்கிறது ... 

உள்ளே மதுரம் சதுரம் போட்டு விளையாடுகிறது ... 

எப்படி இது சாத்தியம் ? ஒரே கொடியில் பிறந்த இரு பழங்கள் எப்படி சுவையில் மாறுபடும் ? 

இது இயற்கையின் புறம்பாக இருக்கிறதே என்றான் ...

திகைத்தாள் புனிதவதி .. உண்மை சொல் சொல் என்றது ... பயம் நில் நில் என்றது ... பக்தி  ஈசனை வேண்டு என்றது .. சரணாகதி கால்களை ஓம் என்றே கட்டிப்போட்டது ... 

கண்களில் ஈசன் வாதாட  உண்மை அங்கே வென்றது .. நடந்தவற்றை மறைக்காமல் சொன்னாள் ... 

நம்பிக்கை தும்பிக்கையாகி பரமதத்னை  தூக்கி எறிந்தது .. பயத்துடன் கேட்டான் .. நீ சொல்வது உண்மை என்றால் தரச்சொல் உன் ஈசனை இதே போல் சுவைக்கும் இன்னொரு கணியை ... 

வேண்டினாள் ஈசனை ..  அவள் கரங்களில் வேண்டும் பழம் மலையாக குவிந்தன ... வீடெங்கும் மாம்பழங்கள் .. வீதி எங்கும் நறுமணம் ... 

திகைத்தான் கணவன் .. புனிதவதி அவனுக்கு அம்பாளாக தெரிந்தாள் ... அழகிய கேசம் அதிலே சீமந்த வகுடு அங்கே உதிக்கும் பால சூர்யனைப்போல் , ஓடை போல் ஓடும்  குங்குமம் ... 

ஒன்றும் பேசாமல் எழுந்தான் ... அன்று தான் புனிதவதி கடைசி முறையாக அவனை பார்த்தாள் ....

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை