அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 4
பரமதத்தனுக்கு பயம் வந்து விட்டது ..
ஒரு பெண் தெய்வத்தையா மணந்து கொண்டோம் ..?.
அந்த உலக மாதாவுடனா நான் இவ்வளவு நாட்களாக குடும்பம் நடத்தினேன் ?
ஐயோ இந்த பாவத்தை எவ்வளவு பிறவிகள் எடுத்து தீர்க்கப் போகிறேன் ...? எவ்வளவு முட்டாள் நான் .... புலம்பினான் .. கதறினான் ...
பிராயச்சித்தம் உடனே செய்யவேண்டும் என்றே வியாபாரம் செய்வதாக சொல்லி வீட்டை விட்டு அதாவது புனிதவதியை விட்டு விட்டு கிளம்பினான் ...
கால்கள் அவனை எங்கோ இழுத்துச் சென்றது ... முகத்தில் பரிதாபத்துக்குரிய தாடி முல்லை கொடி போல் படர்ந்தது ...
செடியில் வளர்ந்த பஞ்சு அவன் கண்களில் வந்து அமர்ந்து கொண்டது ...
செவிகள் கொஞ்சம் கேட்க்கும் சக்தியை இழந்தன ... வயிறு பசி எனும் வார்த்தையை மறந்து போயின ...
நெஞ்சம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்றே சொல்லிக்கொண்டது...
வெளி வரும் மூச்சும் உள்ளே போகும் காற்றும் ஐந்தெழுத்தின் நறுமணத்தை பரப்பியது உள்ளும் வெளியும்.
போன கணவன் திரும்பி வந்து விடுவான் என்றே புனிதவதி காத்திருந்தாள் ...
நாட்கள் பல நகர்ந்தன ... எங்கும் நகராமல் வாசலில் பார்வையை செலுத்தி அவன் காலடி ஓசையை கேட்க தவமிருந்தாள்
இந்த மானிடக் காதல் இல்லையே
ஒரு மரணத்தில் மாறி விட
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விட
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வருமே ... என் அன்பே எங்கே சென்றீர்கள் ?
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை...
பரமதத்தன் திரும்பவே இல்லை ..
வாழ்க்கை கசந்தது .. மேனி சுருங்கியது ... உதிரம் உறைந்து போனது ... யாரோ பாண்டிய நாட்டில் பரம தத்தனை பார்த்ததாக சொன்னார்கள் .. ஓடினாள் அவனை பார்க்க ... அங்கே அவள் கண்ட காட்சி ......
Comments