வாழைக்கு மோக்ஷம்


வாழைக்கு மோக்ஷம் 





குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். 

மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். 

பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார். முன் வரிசையில் பார்வதியும் பரமேஸ்வரனும் வந்து அமர்ந்து கேட்பார்கள் ... 

கண்ணனின் குழல் ஓசை அங்கு கேட்டுக்கொண்டே இருக்கும் ... 

வண்ண மயில்கள் தோகை விரித்து ஆடும் அழகில் அங்கே கண்ணனும் ஆடி வருவான் ... 

மாடுகளும் அவர் ப்ரவசனம் கேட்க கூட்டம் கூட்டமாக வரும் ... 

கோகலத்தை பார்க்காதவர்கள் அவர் சொற்பொழிவில் கோகலத்தையும் அங்கே துள்ளி விளையாடும் கண்ணனையும் பார்ப்பார்கள் ... 

துவாரகையை  அறியாதவர்கள் கண்ணன் அரசாள்வதை பார்ப்பார்கள் , மதுரா , பிருந்தாவனம் குருஷேத்திரம் எல்லாமே அவர் சொற்பொழிவை கேட்டப்பவர்களுக்கு கண்ணெதிரே  தெரியும் ... 

எல்லோரையும் பூந்தானம் கோபியர்காளாக்கி கண்ணா கண்ணா என்றே கூப்பிட வைத்து கண்ணீரில் கரைய வைப்பார் .

ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. 

கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். 

அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். 

ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். 

வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். 

இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. 

தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. 

பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடிப் பரப்பினார்.   கண்ணன் அவரை ஆட்கொள்ள  துடித்துக்கொண்டிருந்தான் ...

வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். 

அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். 

தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், 

அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள். 


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை