அளவே இல்லா அழகன் 3
அளவே இல்லா அழகன் 3
வழக்கம்போல் "கிருஷ்ண கிருஷ்ண!' என்று ஜபித்தவாறே அம்புகளைக் கண்ணனை நோக்கி எய்தான் அர்ஜுனன்.
அவனது கிருஷ்ண பக்தி காரணமாக அம்புகள் அனைத்தும் கண்ணன் கழுத்தில் பூமாலையாக விழுந்தன!
கண்ணன் எய்த அம்புகளும், அர்ஜுனனின் கிருஷ்ண பக்தி அவனைக் கவசம்போல் காத்ததால், அவன் கழுத்தில் மாலையாக விழத் தொடங்கின.
இப்படிப் போர்க்களத்தில் கடவுளும் பக்தனும் மாற்றி மாற்றி மாலை மரியாதை நிகழ்த்திக் கொள்வதைப் பார்த்து நாரதர் திகைத்தார்.
""கண்ணா! சூரியாஸ்தமனம் நடக்கப் போகிறது. உன் பக்தர் காலவர் சாபம் பலிக்குமாறு செய்வதாக நீ வாக்குறுதி கொடுத்திருக்கிறாய்.
அர்ஜுனனுடன் எதற்குப் போர்? நேரடியாக ஓர் அஸ்திரத்தை கந்தர்வன் கழுத்தை நோக்கி வீசு! தாமதம் வேண்டாம்!'' நாரதர் கூற்றை ஏற்ற கண்ணன் நேரடியாக கந்தர்வனை நோக்கி அம்பு வீச, அந்த அம்பு அவன் கழுத்தை அறுத்துத் தலையை ஒரே கணத்தில் மண்ணில் வீழ்த்தியது.
கந்தர்வன் மனைவி ஓடோடி வந்து அர்ஜுனன் காலில் விழுந்தாள்.
சுவாமி! என் கணவர் உயிரைக் காப்பதாக வாக்குறுதி தந்தீர்களே? இப்படி நடப்பது நியாயமா?'' என்று கதறினாள்.
நாரதர் ஒரு குறும்புப் புன்னகையுடன் கண்ணனிடம் கேட்டார்:
""கண்ணா! காலவர் உன் பக்தர். அவர் சாபத்தைப் பலிக்கச் செய்வதற்காக நீ கந்தர்வனைக் கொன்றாய். சரி.
ஆனால் அர்ஜுனனும் உன் பக்தன் தான்! அவன் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியதும் உன் கடமைதானே?
அந்தக் கடமையில் நீ தவறலாமா? அப்புறம் உலகம் உன்னை என்ன சொல்லும்?''
கண்ணன் யோசித்தான்.
""அதுவும் சரிதான்! என்று, கந்தர்வனை நோக்கி வலக்கரத்தை உயர்த்தினான்.
மறுகணம் அந்த அருளாசியால் கந்தர்வன் தலை அவன் உடலில் தானே உருண்டோடி வந்து, ஒட்டிக் கொண்டது.
அவன் உயிர் பெற்று எழுந்தான். கந்தர்வனின் மனைவியும்
கந்தர்வனும் கண்ணனையும், அர்ஜுனனையும் நாரதரையும் காலவ மகரிஷியையும் மகிழ்ச்சியோடு வணங்கினார்கள்.
பக்தர்களைக் காப்பதில் எந்த வேறுபாடும் காட்டாத கண்ணனின் அளப்பருங்_ கருணையை எண்ணி வானவர் சொரிந்த பூமாரியால் மண்ணகம் முழுவதும் நிறைந்தது_

Comments