நாராயணீயம் உதயம் 11

நாராயணீயம் உதயம் 11






இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, நாராயண பட்டத்ரி நாராயணீயம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர். 

சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணீயம் எழுதி முடித்தவுடன், இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். 

ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். 

இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.) 

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணீயத்திற்கு உண்டு. 

என்ன வென்றால், இந்த நாராயணீம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. 

இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது. 

நான் நாராயனீயம்  எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க, 

ம்ம் எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.
அப்போது பட்டத்ரி, நான் நாராயணீயத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. 

அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணீயம் பாட முடியும். 

இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார். 

(இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாக்ஷணை செய்த நிகழ்வுகள் நம் நாட்டில் நிறைய உள்ளன... 

திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசுவர். 

ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே ரங்கநாதருடன் பேசுவர். 

சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசுவர். 

மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷியடன் பேசுவார்) 

இன்னும் இப்படிப்பட்ட அற்புத மகோன்னத நிகழ்வுகளைச் சொல்ல வேண்டுமானால்- 

காஞ்சியில் வரதராஜ பெருமாளும்- திருக்கச்சி நம்பிகளும், 

கந்தவேள் முருகனும்- கச்சியப்ப சிவாச்சார்யாரும், 

திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், 

பிள்ளையாரும்- முருகனும்- அவ்வையாரும், 

காளியும்- கவி காளிதாசனும், 

திருத்தணி முருகனும்- முத்துசுவாமி தீட்சிதரும், 

காளியும்- ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும், 

மூல ராமரும்- ஸ்ரீஇராகவேந்திரரும் ...

இன்னும்... இன்னும்... என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படிபரம பக்தர்களும், பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம். 

இந்த அற்புதத்திற்கெல்லாம் அற்புதமாக நிகழ்ந்ததுதான் நம் பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது. 

ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். 

ஆனால் இங்கு குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! 

பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.



Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை