மலரும் நாராயணீயம் 2

மலரும் நாராயணீயம்  2

பட்டத்ரி :

குருவாயூரப்பா ..  நீ சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை ... ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா ? 

குருவாயூரப்பன் :

இல்லை பட்டத்ரி ..  நீயும் தவறாக கேட்கவில்லை நானும் தப்பாக புரிந்து கொள்ள வில்லை ... 

பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு தியான ஸ்லோகம் தேவை ..  

நேராக பாடல் ஆரம்பிக்கக் கூடாது .. 

அதைப்பற்றி நீ ஒன்றும் சிந்திக்க வில்லையே என்று நினைத்தேன் ... என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன் .. 

பட்டத்ரி :

ஆமாம் .. மறந்து விட்டேன் ... யாரை நினைத்து எழுதுவது குருவாயூரப்பா .. நீயே சொல்லேன் .. 

குருவாயூரப்பன்

ம்ம் எனக்கு என்ன தெரியும் ... உன் குருவை நினைத்துக்கொள் , இல்லை உன் தாய் அல்லது தந்தையை நினைத்துக்கொள் 

அல்லது உன் வீட்டில் வேலை செய்யும்  வேலைக்காரனை நினைத்துக்கொள் 

இல்லையா உன் ஜோசியரை நினைத்துக்கொள் 

இல்லையா உன்னை இங்கே தூக்கிக்கொண்டு வந்தார்களே 10 பேர்கள் அவர்களில் ஒருவரையாவது நினைத்துக்கொள் ...

இவ்வளவு பேர்களில் யாருமே நினைவுக்கு வரவில்லை என்றால் இதோ அப்பாவியாக நின்று கொண்டு நீ சொல்வதற்கெல்லாம் தலையை வேகமாக ஆட்டப்போகிறேனே என்னை நினைத்துக்கொண்டு காவியத்தை ஆரம்பி ... 

(குருவாயூரப்பன் நினைத்தானாம் .. இவன் என்னைத்தான் தியான ஸ்லோகத்தில் நினைத்துக்கொள்வான் .. என்னால் இவனுக்கு காரியம் ஆக வேண்டியிருக்கிறதே )

பட்டத்ரி : ( குருவாயூரப்பன் சொன்ன யாரையுமே நினைத்துக்கொள்ள வில்லை .. மாறாக தனக்கு வந்த வாத ரோகத்தை நினைத்துக்கொண்டு தியான ஸ்லோகத்தை ஆரம்பித்தார் ...) 

ஏ குருவாயூரப்பா..
என் வியாதிக்கு நமஸ்காரம் .. இந்த வியாதி மட்டும் எனக்கு வரவில்லை என்றால் உன் கோவிலுக்கு வரும் பாக்கியம் கிடைக்குமா ? 

நாராயணீயம் எழுதும் புண்ணியம் வருமா ? 

100 நாட்கள் உன் திவ்விய தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்குமா ? 

நீ குளித்த நாராயண சரஸ் இல் குளித்து எழும் புண்ணியம் கிடைக்குமா ? 

குருவை அவமதித்து பேசக்கூடாது என்ற ஞானம் பிறக்குமா ? 

எங்கோ சுத்திக்கொண்டு அரசர்களையும் செல்வந்தர்களையும்  வானளவு புகழ்ந்து கொண்டு பணம் ஈட்டி இருப்பேன் .. 

உன் நினைவே வந்திருக்காது ... 

என் வாழ்க்கை விட்டில் பூச்சிப்போல் அழிந்து போயிருக்கும் .... 

என்னை உன்னை காண வைத்த இந்த வியாதிக்கு முதலில் கோடி நமஸ்காரங்கள் ... 

குருவாயூரப்பன் :

(மிகவும் பெருமை அடைந்தான் ... எப்படிப்பட்ட பக்தன் தனக்கு கிடைத்துள்ளான் என்று *அதிகர்விதா* வானான் )


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை