மலரும் நாராயணீயம் 4

மலரும் நாராயணீயம்  4


பட்டத்ரி

குருவாயூரப்பா ... ஒரு குயில் பாடிய பாகவதத்தை ஒரு கிளி கொத்திய பாகவதம் எனும் பழத்தை நான் பிழிந்து சாரமாக ( juice) ஆக நாராயணீயம் என்ற பெயரில் தருகிறேன் ..  

ஒவ்வொரு தசகம் முடியும் போதும் குருவாயூரப்பா என் ரோகங்களை  நிவர்த்தி செய் ( அதாவது நாராயணீயம் படிக்கும் எல்லோருடைய ரோகங்களையும் நிவர்த்தி செய் ) என்று உனக்கு அப்ளிகேஷன் போட்டு உன் பாதங்களில் வைக்கிறேன் ..  

நான் முடிக்கும் போது உன் பெருமைகளும் என் அப்ளிகேஷன் நூறும் உன் பாதங்களில் இருக்கும் for your disposal . 

குருவாயூரப்பன்

என்ன பட்டத்ரி புதிர் போடுகிறாய் ..??  

குயில் பாடிய பாகவதமா ? கிளி கொத்திய பாகவதமா ? 

ஆமாம்   என்னை வேறு தலையை ஆட்ட சொல்கிறாய் ... சுளுக்கு அதற்குள் பிடித்துக்கொண்டு விட்டது ... 

ஏன் இப்படி செய்கிறாய் ? நீ சொல்வதற்கு நான் சாட்சி என்று பெருமை ( தம்பட்டம் ) பீத்திக்கொள்ளவா .. 

எல்லாவற்றிர்க்கும் நான் தலை ஆட்டுவதை விட தவறுகள் இருந்தால் மட்டுமே தலை அசைப்பதாய் வைத்துக்கொள்ளக் கூடாதா ?

குருவாயூரப்பா உனக்கு புரியாததா .. ? 

எல்லாம் நானே சொல்ல வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறாய் ? 

ராமாயணம் எனும் கீதம் தனை வால்மீகி எனும் குயில் 22000 ஸ்லோகங்களாக பாடியது ... 

சுகர் எனும் கிளி 18000 ஸ்லோகங்களில்  கண்ணன் பெருமைகள்  எனும் பழத்தை கொத்தியது ... இவை இரண்டும் கலந்த கலவை தான் ஸ்ரீ மத் பாகவதம் 

கண்ணா ... ராம அவதாரத்தில் உன் குழந்தைகளான லவ குசா பாடிய 22000 ஸ்லோகங்களை ரசித்த நீ 22000 தடவை தலை அசைத்துக்கேட்டாய் ... 

ஆனால் 18000 ஸ்லோகங்கள் இருக்கும் பாகவத்திற்கு அப்படி ஒரு பெருமை கிடைக்க வில்லை .. 

கண்ணா நீ எந்த விதத்திலும் ராமனுக்கு குறைந்தவன் இல்லை ... 

வெறும் 1036 ஸ்லோகங்கள் கொண்ட நாராயணீயத்தில் உன்னை நான் கேட்பது 1036 ஸ்லோகங்களுக்கும் தலை ஆட்ட அதாவது ராமாயணத்தில் நீ ஆட்டியதை விட மிக மிக குறைவாக ... இந்த ஆசை தவறா குருவாயூரப்பா ? 

குருவாயூரப்பன் சிரித்தான் ... சரி மேலே சொல் .. 

நடுவில் இப்படி நிறுத்தி என்  நேரத்தை ஏன் வீனடிக்கிறாய் என்று பொய் கோபத்துடன் கேட்டான் ..

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை