மலரும் நாராயணீயம் 7
மலரும் நாராயணீயம் 7
பட்டத்ரி :
குருவாயூரப்பா எப்படி ஆயிரம் நாமங்கள் லலிதாவை புகழ்ந்து பாடியும் அகஸ்தியருக்கு திருப்தி வராமல் ஹயக்ரீவரான உன்னை இன்னும் அவளை புகழ வேண்டும் என்று நச்சரித்து லலிதா திரிசதி 300 ஸ்லோகங்கள் சொல்ல வைத்தாரோ
அது போல் இந்த நாராயணீயம் 100 தசகம் பாடியும் திருப்தி வரவில்லையே ... உன்னை இன்னும் வர்ணித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது ...
என் ரோகங்கள் நீங்க வேண்டும் என்று உன்னை நச்சரித்தேன் ...
வேண்டாம் குருவாயூரப்பா ... அது என்னிடமே இருக்கட்டும் .. உன்னை பாடும், பார்க்கும் , உன்னுடன் தினம் பேசும் வரத்தை மட்டும் தா ... அது போதும் ...
குருவாயூரப்பன் :
சிரித்தான் ...
பட்டத்ரி ... நான் சோதிப்பேன் பக்தர்களை ...
கொஞ்சம் கடுமையாகவும் சமயத்தில் நடந்து கொள்வேன் ..
உன்னிடம் நடந்து கொண்ட மாதிரி ...
என் பக்தர்கள் அனைவருமே வெட்டி எடுத்த தங்க கட்டிகள் ... அதை புடம் போடாமல் நகை செய்ய முடியாது ...
எனவே அவர்கள் கடைசியில் எல்லா நன்மைகளும் அடைவார்கள் .. பொறுமை வேண்டும் என் அருள் பெற ...
பட்டத்ரி :
குருவாயூரப்பா ... இன்னும் உன்னை வர்ணிக்க வார்த்தைகளை கொடு .. கடைசி தசகம் .. இன்னும் அருமையாக இருக்க வேண்டும் ...
பட்டத்ரி*
தங்கள் நாசி எடுப்பாக விளங்குகின்றது.
தங்கள் காதுகளை ரத்னமயமான இரு மகர குண்டலங்கள் அலங்கரிக்கின்றது.
அவை அசைந்து கன்னங்களில் பிரதிபலிப்பதால், கன்னங்கள் பச்சை மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போல் விளங்குகின்றது. சிவப்பான கோவைப்பழம் போல் இரு உதடுகள் பிரகாசிக்கின்றது.
புன்முறுவல் பூத்த உதடுகளின் இடையே தெரியும் அழகிய வரிசையான பற்கள் மனதைக் கவர்கின்றது.
அத்தகைய இனிமையான தங்கள் திருமுகம் என் உள்ளத்தில் தெளிவாகத் தோன்ற வேண்டும்.
உமது இரு திருக்கரங்களை ரத்தினங்கள் இழைத்த வளையல்கள் அலங்கரிக்கின்றன.
உள்ளங்கைகள் சிவந்த தளிர் போன்று காட்சி அளிக்கின்றன.
ஒளி வீசும் நகங்களை உடைய விரல்களால் புல்லாங்குழலை எடுத்து, தாமரை போன்ற தங்கள் முகத்தில் வைத்து, இனிமையான நாதத்தால் உலகம் முழுவதையும் குளிரச் செய்கின்றீர்கள்.
அந்த நாதமாகின்ற அம்ருதத்தால் என் காதுகளை நனைக்க வேண்டும்.

அங்கம் ஒவ்வொன்றாக வர்ணிக்க பட்டத்ரியின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மீண்டும் உயிர் பெற்றன .. அவரால் கரங்களை அசைக்க முடிந்தது .. கால்களை உதற முடிந்தது .. கழுத்தை அசைக்க முடிந்தது .. காதுகள் இன்னும் கூர்மை ஆயின ...
*ஏ குருவாயூரப்பா ....*
மேல் நோக்கி வீசும் கௌஸ்துபம் என்ற மணியின் ஒளியால் உமது கழுத்து சிவந்த நிறத்துடன் அழகாக விளங்குகின்றது.
மார்பில், அசையும் முத்து மாலைகளும், ஸ்ரீவத்ஸம் என்னும் மருவும் அழகாகப் பிரகாசிக்கின்றன.
வண்டுகள் ரீங்காரம் செய்யும் பல்வகையான பூக்களும், தளிர்களும் கொண்டு கட்டப்பட்ட வனமாலையும், ரத்தின மாலைகளும் அலங்கரிக்கின்றன.
உமது திருவடிகளை வணங்குவதே சிறந்த நன்மை பயக்கும் வழி என்று தன் சப்தங்களால் கூறுவது போன்ற கொலுசை நான் தியானிக்கிறேன்.
ஆசையென்னும் கடலில் மூழ்கிய பக்தர்களின் மனமாகிய மந்தர மலையைத் தூக்கிக் கரையேற்றும் ஆமையைப் போல உமது பாதத்தின் மேல்பாகம் இருக்கின்றது.
சற்றே உயர்ந்து சிவந்திருக்கும் நகங்களுடன் கூடிய உமது கால்விரல்கள், நிலவொளி இருட்டைப் போக்குவது போல, உமது பக்தர்களின் துன்பங்களைப் போக்குகின்றன. அவற்றை நான் தியானிக்கிறேன்.
உலகிற்கு நாயகனே! உமது மகிமையை அறியாமல் இதில் கூறியவற்றைப் பொறுத்தருள வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த ஸ்தோத்திரங்கள் உமது அருளை அளிப்பவையாக இருக்க வேண்டும்.
ஸ்ரீமன் நாராயணனைப் போற்றிப் பாடியிருப்பதாலும், நாராயணன் என்பவரால் எழுதப்பட்டதாலும், இந்த ஸ்தோத்திரத்திற்கு நாராயணீயம் என்று பெயர். வேதங்களில் கூறப்பட்ட உமது அவதாரங்களையும், லீலைகளையும் வர்ணிக்கின்றது.
இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட ஸ்ரீ குருவாயூரப்பனும் தலையை ஆட்டி அங்கீகரித்தார்.
நாராயணீயத்தை உடல் ரோகங்களையும் புற்று நோய்களையும் வேறு எந்த உபாதைகள் வந்தாலும் உடனே தீர்க்கக்கூடியது ... இதை விட வேறு சிறந்த மருந்தும் இல்லை குருவாயூரப்பனை காட்டிலும் சிறந்த வைத்தியரும் இல்லை .. இது சத்தியம் என்றார் பட்டத்ரி
குருவாயூரப்பன் உண்மை உண்மை உண்மை என்றானாம் ...
அவன் ஒடி சென்று பட்டத்ரியை கட்டி தழுவிக்கொண்டான் ...
பட்டத்ரி எந்த நோய் நொடி இல்லாமல் 130 வருடங்கள் வாழ்ந்தார் ...
நமக்கும் அந்த ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் .. குருவாயூரப்பனை நம்புங்கள் .. நாராயணீயம் ஜெபியுங்கள் .. உங்களுக்காக மட்டும் அல்ல உங்கள் வருங்கால சந்ததிக்காகவும் ...
அஜ்ஞாத்வா தே மஹத்வம் யதி₃ஹ நிக₃தி₃தம் விஶ்வநாத₂ க்ஷமேதா₂:
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதி₄கதரம் த்வத்ப்ரஸாதா₃ய பூ₄யாத்
|த்₃வேதா₄ நாராயணீயம் ஶ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீ₂தம் லீலாவதாரைரித₃மிஹ குருதாமாயுராரோக்₃யஸௌக்₂யம் || 11||

Comments