பூதப்றுத் ... நாமத்தின் பெருமை

பூதப்றுத் ... நாமத்தின் பெருமை



அவர் ஒரு ஏழை .. உடையிலும் வறுமை .. உள்ளமும் வறுமை ... 

பெருமை கொண்ட இறைவன் பெயர்கள் பொறுமை இல்லா நெஞ்சமதில் நுழைய வில்லை ... 

கருமை கொண்ட விழிகள் கருமை நிறத்தழகனை பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தன ..  

அருமையாக பிரசவமாகும் நாட்கள் அவருக்கு அதிகமாக பிரசவ வலியை தந்தன 

வாழவேண்டுமே என்ற கவலை ஒருபுறம் .. இன்று குழந்தைகளுக்கு கால் வயிறு கஞ்சி கிடைக்குமா ... என்ற கவலை மறுபுறம் ...காஞ்சி வரதன் சிரித்தான் அரங்கனாக .... கஞ்சி வரதப்பா என்று வாயில் வார்த்தை வராதவனுக்கு கஞ்சி தனை தர கொஞ்சம் நாடகம் புரிந்தான் ... 


தினம் தினம் அரங்கனின் ஆலயம் செல்வார் அவர் .. ரங்கனை வணங்க அல்ல ... ரங்கன் தரும் பிராசதத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு காத்திருக்கும் பசிக்கு விடை கொஞ்சம் கொடுக்க ...


முந்தி அடித்துக்கொண்டு வரிசையில் இருப்பார்  .. வாய் விட்டு கேட்பார் .. எனக்கு இன்னும் கொஞ்சம் போடுங்கோ .. இது போதாது ... 

பார்ப்பவர்கள் முகம் சுளித்தனர்... கேட்பவர்கள் ரங்கா ரங்கா என்ன இது இப்படி ஒரு அல்பத்தை அனுப்பி உள்ளாய் என்றே வாய் விட்டு கேட்டனர் .. 

வறுமை வந்தால் விடை பெறுவது மானம் , ரோஷம் , அகந்தை , வெட்கம் ..  உப்பு நிறைந்த பொங்கல் அவருக்கு உணர்ச்சியை தர வில்லை ... 

தினம் தினம் நடக்கும் நாடகம் இது ... கோயிலில் சென்று புகார் பலர் செய்தனர் ... அவர் போக்கு மாறவில்லை .. பொல்லாதவன் என்ற பெயர் போகவில்லை ... 

அங்கே வந்த ராமானுஜர் காதுகளில் செய்தி அது போனது .... பிரசாதம் அனைவருக்கும் போய் சேரவில்லை ... ஒருவருக்கே அதிகமாகப் போகிறது என்றே ..  

கவலைப்பட்டார் ராமானுஜர் .. அரங்கனின் பிரசாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் .. ஒருவரே அதிகம் வாங்கிக்கொண்டு போனால் என்னாவது ...? 

அந்த நபரை சந்திக்க விரும்பினார் .. தனிமையில் அழைத்து நிறைய பிரசாதம் கையில் கொடுத்து கேட்டார் சில கேள்விகளை

ஐயா .. நீங்கள் செய்வது சரியா ? அரங்கன் எல்லோருக்கும் பொது .. அவன் பிரசாதம் ஒருவரே எல்லாம் எடுத்துக் கொண்டு செல்வது அழகா ? 

அவர் சொன்னார் ... சுவாமி தவறு என்று எனக்கும் தெரியும் .. என்ன செய்வது ஏன் நிலமை அப்படி .. ஏழு பொட்டை குழந்தைகள் ... மனைவிக்கும் உடம்பு சரியில்லை .. உழைத்து உணவிட மனத்திலும் உடம்பிலும் எனக்குத் தெம்பில்லை ... இதுவே சுலபமான வழி .. ஒரு கவளமாவது என் குழந்தைகளுக்கு கிடைக்கின்றது .. மத்த வேலைகள் ஈரத்துணிதான் ... 

ராமானுஜர் ... சரி உனக்கு என்ன வேலை தெரியும் .. கோயிலில் பாடத் தெரியுமா ? சந்தனம் அரைக்க வேண்டும் . மணி அடிக்க வேண்டும் . தினமும் சுத்தம் செய்ய வேண்டும் ... செய்வாயா ? 

ஐயனே ... இன்னும் சுலபமான வேலை இருந்தால் சொல்லுங்கள் ... 

சோம்பேறித்தனம் உடம்பெங்கும் ஒட்டிக்கொண்டு அவனை வேலை எதுவும் செய்ய விடாமல் தடுப்பதை ராமானுஜர் உணர்ந்தார் ... 

சரி விஷ்ணு சஹஸ்ரநாமம் தெரியுமா ? 

ஐயனே ஒரு ஸ்லோகம் எனக்கு நன்றாக வரும் .. சொல்லட்டுமா ? 

சொல் கேட்ப்போம் .... 

விஸ்வம் விஷ்ணுர்-வஸட்காரோ பூதபவ்ய பவத் ப்ரபுஃ | 

பூதக்றுத் ...... மேலே சொல்ல முடியவில்லை ... 

ராமானுஜர் முடித்தார் ..

பூதப்றுத்-பாவோ பூதாத்மா பூத பாவனஃ || 

தினமும் காலையில் எழுந்து உடன் *பூதப்றுத் நம* ( one who nourishes the entire universe ) என்று சொல் .. அதே மாதிரி மதியம் , இரவு .... உன் வறுமை , பசி எல்லாம் அடங்கி விடும் ... 

பசியை போக்கும் பரந்தாமன் என்று பொருள் ... அரங்கன் வழி காட்டுவான் ... போய் வா என்றார் 

படிப்படியாய் அவர் கோயிலுக்கு வருவது நின்று போனது ... புகார்கள் நின்று போயின ... அரங்கனின் பிரசாதம் அனைவருக்கும் கிடைத்தது . 

சில நாட்களுக்கு பிறகு அங்கு வந்த ரானானுஜர் அந்த ஏழை கோயிலுக்கு வராததைப் பற்றி விசாரித்தார் ... ஐயோ வறுமை முற்றி இறந்து விட்டானா .. ஒரு களவம் உணவையும் நான் தான் கிடைக்க முடியாமல் செய்து விட்டேனா ... என் அரங்கன் கை விட மாட்டானே .. நான் நினைப்பது தவறு  என்று சொல்லிக்கொண்டே அவனை த் தேடி அவன் இல்லம் சென்றார் ... அங்கே அவன் குதூகலமாக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ... ராமானுஜரை பார்த்த உடன் ஓடி வந்து அவர் பாதங்களில் விழுந்தான் குடும்பத்துடன் .. 

சுவாமி உங்கள் அருளால் எங்கள் வறுமை தீர்ந்தது .. வடை பாயசத்துடன் மூன்று வேலை உணவு .. செலவழிக்க பணம் , உடுத்த புதிய ஆடைகள் ... எல்லாம் தினமும் கிடைக்கிறது .. 

ராமானுஜர் .. எப்படியப்பா இது விவரமாக சொல் என்றார் 

ஐயனே நீங்கள் சொல்லிக்கொடுத்த *பூதப்றுத்* நாமத்தை நாங்கள் எல்லோரும் தினமும் விடாமல் சொல்கிறோம் .. தினமும் ஒரு சிறுவன் எங்களுக்கு உணவு பொருள் ,ஆடைகள் கொடுத்து விட்டு செல்கிறான் ..  அவன் பெயர் அரங்கனாம் .. உங்கள் மாணவன் என்று சொல்கிறான் .   

ராமானுஜருக்கு வேர்த்து கொட்டியது ... ரங்கா நீயா என் மாணாக்கன் ... நீயா தினமும் இவன் குடிலுக்கு வருகிறாய் ... உன் கருணைக்கு அளவே இல்லையா ? ராமானுஜர் அந்த ஏழை இல்லை இல்லை பணக்காரனின் கால்களில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் ... 

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை சொல்லி மாளாது ...

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை