பச்சைப்புடவைக்காரி-நீயல்லால் தெய்வம் இல்லை*💐💐💐

பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

நீயல்லால் தெய்வம் இல்லை*💐💐💐



அம்மா -- எவ்வளவோ தவம் நான்  செய்திருந்தால்  குண்டலினி சக்தியை நீயே விளக்கி  சொல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும்!! --- 

குழந்தைகள் கையில் தங்க வளையல்களை கொடுத்து நீங்கள் இதையும் உங்கள் விளையாட்டு பொருள்களில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காது -- 

ஏன் என்றால் தங்கத்தின் மதிப்பு அந்த உண்மையான தங்கங்களுக்குத் தெரியாது - 

அதைப்போல் வேதங்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காதவள் தினமும் நேரம் தவறாமல் என்னைத் தேடி வந்து என்னை புதுப்பிக்கின்றாயே தாயே  - 

உன் அருமையை இன்னும் என்னால் அந்த குழந்தைகளைப்போல் புரிந்து கொள்ள முடியவில்லை அம்மா --- 

என்னை மன்னித்துவிடு... கண்கள் அணையை திறந்து விட்ட நீரைப்போல் பாய்ந்து ஓடியது ..... 🌷🌷🌷

பச்சைப் புடவைக்காரி என்னை தன்  மடியில் சாய்த்துக்கொண்டாள் ---  

கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தெரிவதில்லை - கண்ணை மூடிக்கொண்டு என்னையே நினைப்பவர்களுக்கு மட்டுமே தெரிவேன் --- 

சரி இன்று அடுத்த ஆதார சக்கரம் - பார்ப்போமா ?  --அநாகதம்

உங்கள் உடலில் இது நான்காவது ஆதார சக்கரம் ...

அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும் . 

இந்த ஆதார மையமானது உங்கள் கழுத்துக்கு கீழே இதயத்திற்கும் , நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது .. 

அகத்தியரின் விளக்கத்தை கொஞ்சம் கேள் ரவி

பாரப்பா ரேசகத்தின் பூசை கேளு

பண்பான ரேசகத்தின் ஆமென்று ஏத்தி

ஆரப்பா நைவேத்யம் கும்பகம் செய்

அப்பனே ரேசகத்தில் மனத்தை நாட்டு

வாரப்பா மனமது ரேசகமே யாச்சு

வளமான ரேசகந்தான் வசியம் ஆச்சு

நாரப்பா ரேசகத்தின் பூசை சொன்னேன்

நலமான பூரகத்தின் பூசை கேளே

இந்த சக்கரம் இதயத்தோடு சமபந்தப்பட்டது . 

இதன் மூலக்கூறு காற்று - 

அதிதேவதை ருத்திரன் -- நமசிவாய என்ற நாமத்தில் "சி "எனும் எழுத்தையும் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.ௐௐௐ👍👍👍

இந்த சக்கரத்தில் இருந்து 12 யோக நாடிகள் தாமரை இதழ் போல் வெளி க்கிளம்புகின்றன 

இவை எழுப்பும் சப்தங்கள் சங , கக , டட , ஞஜ , , ஜச   என்பதாகும் சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின் நாதமான அநாகத சப்தம் கேட்கும் . அனதாக மந்திரத்தின் மூல மந்திரம் "யங் "-

இந்த மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க , குண்டலினி சக்தி முடிச்சைய் அறுத்துக்கொண்டு மேலெழும்பி அடுத்த சக்கரத்திற்கு போகும் -- 

மூலாதாரத்தில் இருந்து வரும் குண்டலினி இங்கே அக்னி குண்டம் என்ற பெயரில் இருக்கிறது ... 

இந்த இடத்திற்கு குண்டலினி சக்தி வருவதால் ஒருவனுக்கு கருணை, அன்பு , இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும் -- 

ஏன் , எதற்காக பிறந்தாய் என்று உன்னை நீயே அலசும் குணமும் வரும் ரமணரைப்போல் .....👣👣👣

ரவி இப்போழுது ஆதி சங்கரர் என்னை எப்படி வர்ணிக்கிறார் என்று பார்போமா ? 👌👌👌

எங்கள் இருவரையும் அவர் ஹம்ச பறவைகளாக இந்த சக்கரத்தில் பார்க்கிறார் ... 

சௌந்தர்ய லஹரி -38

ஸமுன்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்

யதாலாபா தஷ்டாதஶ குணித வித்யாபரிணதி:

                            யதாதத்தே தோஷாத் குணமகில மத்ப்ய: பய இவ                                38

நன்றாக மலர்ந்த ஞானத்தாமரையின் ஆனந்தமாகிய மகரந்தம் ஒன்றையே விரும்பி அநுபவிப்பவைகளும் மகான்களுடைய மனதாகிற மானஸ ஸரஸில் நீந்துபவைகளும் இப்படிப்பட்டவை என்று வர்ணிக்க முடியாதவைகளுமான

இரண்டு ஹம்ஸங்களை பூஜிக்கிறேன்.

அவைகளுடைய இன்பப் பேச்சில் இருந்தே பதினெட்டெனக் கணக்கிடப்பட்ட வித்தைகள் பரிணமிக்கின்றன. 

அவை குற்றத்திலிருந்து குணமனைத்தையும் நீரிலிருந்து பாலைப்போல் பிரிக்கின்றன.

வாயு தத்துவத்திற்கு இருப்பிடம் அநாஹத சக்கரம்.

இது பன்னிரண்டு தள கமலம். 

இங்கு *ஹம்* என்ற சிவனையும் *ஸ* என்ற சக்தியையும் *ஹம்ஸேசுவரன்* – *ஹம்ஸேசுவரி* என்று போற்றி எங்களை வணங்கவேண்டும்

அம்மா உன் திருநாமமும் லலிதாசஹஸ்ரநாமத்தில் மிகவும் அழகாக இந்த சக்கரத்தைப்பற்றி சொல்கிறதே - 

கொஞ்சம் சொல்லட்டுமா உன் அனுமதியுடன் -- 

சரி ரவி சொல்

அநாஹதாப்ஜ-நிலயாச்யாமாபா வதனத்வயா |

தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தராருதிரஸம்ஸ்திதா ||100||

காலராத்ர்யாதி-சக்த்யௌக-வ்ருதா
ஸ்நிக்தௌதனப்ரியா |

மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா ஸ்வரூபிணீ ||101||

அநாஹாதத்தில் ஒளிரும் கருப்பு வண்ணத்தில்  இரண்டு முகங்களுடன் தேவி வாசம் செய்கிறாள் 

ஒளிரும் முகங்களுடன் கூடிய அம்பிகை அக்ஷ மாலை முதலியானவை தரித்து எல்லா உயிர்களிடத்திலும் உதிரமாக இருக்கிறாள்

காலராத்ரி முதலான 11சக்திகளை தன் பரிவார தேவதைகளாகக்கொண்ட தேவி நெய் கலந்த அன்னத்தில் ப்ரியமுள்ளவளாக , மஹா வீரர்களுக்கு வேண்டும் வரமளிக்கும் தெய்வமாய் *ராகினி* என்ற திருநாமத்தில் ஜொலிக்கின்றாள்....🔥🔥🔥

உண்மை ரவி -- ஓவ்வொரு சக்கரமும் சிவசக்தியின் ஸ்வரூபம் --- 

உங்கள் உடம்பை ஒரு கோயிலாக நினைத்தால் அதுவே நாங்கள் தங்கும் இடம் -- 

இடத்தை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கடமை -- 

"உள்ளே வா வா"  என்று கூப்பிட்டு விட்டு உடம்பில் தேவை இல்லாத குப்பைகளையும் தீய எண்ணங்களையும் வைத்திருந்தால் என்ன செய்தாலும் உங்கள் குண்டலினி சக்தி மூலாதாரத்தில் இருந்து எழுந்திருக்கவே எழுந்திருக்காது -- 

நல்ல எண்ணங்கள் , நான் என்ற மமதை இல்லாத உயர்ந்த உள்ளம் , பிறருக்கு அவர்கள் கேட்க்காமல் உதவி செய்யும் குணம் இவைகளை வளர்த்துக்கொண்டால் நான் சொல்லாமலேயே மேலே எழும்பி வருவேன் - *இது சத்தியம் ரவி*



சொன்னவள் காற்றாய் மறைந்தாள் --- 

கண்கள் குளமாயின -- 

இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டுமே அந்த நாடாளும் அரசியின் தரிசனம் கிடைக்க ....😰🙏🙏

Comments

 உடலில் நான்காவது ஆதார சக்கரம் ...அநாகதம்.very well explained with Agastiar's and Shankara's slokas in a simple manner. God bless

ravi said…
From Mrs Savitha

Excellent excellent
Sree matre namaha🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
From Mrs Lakshmi Bakaraman

ப்ரமாதம். 🌸🌼🌻🌹🌷💐🌺
ravi said…
From Shivaji

Arumai... Arpudhamai irukkiradu.. Eliya naday.. meendum meendum padikka vendum...PP thaayae.. Arul kodu..👌🙏🙏
ravi said…
From Mrs Sujatha


Wonderful 💐🙏🏼🙏🏼Deham mee devalayam 👍🏻🙏🏼🙏🏼Pachai padavai kari daan Hrudayaaatha 🙏🏼🙏🏼
HVBabu said…
🙏🙏 சூப்பர் அருமை கவிஞரே
ravi said…
From TV Ganesh


நான் கண் மூடினாலும்
என்னை மண் மூடினாலும்
உன் நினைவு மூடாது

என் நினைவு வேறெதையும் தேடாது

இகபர சுகத்தை நாடாது

நீ என்னுள் இருக்கும் வரை என் உயிரும் உணர்வும் வாடாது

எந்த தீங்கும் என்னிடம் கூடாது

உருவமில்லா உணர்வுகளும்

உணர்ச்சியற்ற உள்ளமும் உருக்குலைக்கிறது வாழ்வை

பச்சை புடவைக்காரியின் பரிவு இருந்தால் தவிர்க்கலாம் தாழ்வை

குண்டலினி அடைய குவிக்க வேண்டும் உணர்வை

குணவதி உன்னை அடைய குவிக்க வேண்டும் கரத்தையும் மனதையும்

நான்காம் சக்கரம் அது நல்லது நல்கும் சக்கரம்

பச்சை புடவைக்காரியின் நாமம் சொல்வதும் ஒரு வகையில் அநாகதமே.

உங்கள் மூலம் குண்டலினி மூலம் தெரிந்து கொள்கிறேன். தெளிந்து கொள்கிறேன்
ravi said…
From Mrs Savitha

🙏🏻🙏🏻🌹arumai
Visukthi chakra nilaya
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
Unknown said…
Anadharam explained in simple and easily understood words.
Kumar

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை