பச்சைப்புடவைக்காரி - நம சிவாய எனும் சொல்லும் சக்கரம்
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
நம சிவாய எனும் சொல்லும் சக்கரம்
அடாடா நேற்று அம்மாவிடம் மூலாதாரத்தைப்பற்றி கேட்டுவிட்டு மற்ற ஆதார சக்கரங்களை கேட்காமல் விட்டு விட்டோமே - விளக்கமாக அவளைத்தவிர வேறு யாரால் சொல்ல முடியும் ?
சாவி கொடுத்தபின் கடிகாரம் 7யை எட்டி மீண்டும் நின்று விட்டது -
இந்த கடிகாரம் குண்டலினி மாதிரி மேலே போகவே மாட்டேங்குதே என்று மீண்டும் சரி செய்ய அதை கையில் எடுத்தேன் -
அதை திறந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அதில் spare parts இருந்தது - வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டபோது வாங்கிய கடிகாரம் - வயதிற்கு மீறிய அனுபவம் --
சரி அருகில் உள்ள கடைக்கு எடுத்து சென்றேன் -- அவன் சார் உயர்ந்த ரக பேரீச்சப்பழம் - வாயில் போட்டால் கரைந்து போகும் 100கிராம் தரேன் எடுத்துட்டு போங்க என்றான் - என்னப்பா கடிகாரம் ரிப்பேர் செய்ய வந்தால் எதை எதையோ என் தலையில் கட்டுகிறாயே ....
இல்லை சார் - நீங்கள் கொண்டு வந்த இந்த கடிகாரத்திற்கு 100 கிராம் தான் தரமுடியும் என்றான் - கண்களில் கண்ணீர் வந்தது என் அப்பாவையே அவனிடம் கொடுத்துவிட்டு வருவதைப்போல இருந்தது --- அப்படியே திரும்பி கொண்டு வந்து விட்டேன் ---
என் அறையில் ஒரு பெண் -- என் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தாள் --- யாரம்மா நீ - எப்படி உள்ளே வந்தாய் என்று கேட்க வந்த வார்த்தைகளை மீண்டும் தொண்டைக்குள் அனுப்பிவிட்டு தாயே என்று அவள் பாதங்களில் ஓடிப்போய் விழுந்தேன் ---
சொல்லப்பா---- நீ நேற்று நான் சொன்ன ஆதார சக்கரங்கள் புரிந்து கொண்டாயா ? அம்மா எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டேன் - எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம் - நீயே சொன்னதாயிற்றே மகிழ்ச்சி வராமல் இருக்குமா ?
அம்மா ! மற்ற ஆதார சக்கரங்களைப்பற்றி உங்களிடம் தெரிந்துகொள்ளாமல் விட்டு விட்டேன் - எனக்காகவும் என் நண்பர்களுக்காகவும் மற்ற சக்கரங்களைப்பற்றியும் தயவு செய்து , கருணை கூர்ந்து சொல்லம்மா -
ஒரு நாளைக்கு ஒரு ஆதார சக்கரத்தையாவது சொல் தாயே - உன் முழு நேரத்தை நான் வீணடிக்க எனக்கு மனம் வரவில்லை தாயே!
சரியப்பா -- இன்று உனக்கு சுவாதிஷ்டானத்தை பற்றி சொல்கிறேன்- இது மூலாதாரத்திற்கு அடுத்த சக்கரம் ---இதற்க்கு நிராகுலம் என்ற பெயரும் உண்டு -- நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது என்று அர்த்தம் . உங்கள் பிறப்புறுப்புக்கு மேலே உள்ளது -
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் மூலாதாரத்தில் இருந்து நான்கு கட்டை விறல் தூரத்தில் சுவாதிஷ்ட்டானம் இருக்கிறது -
இந்த சக்கரம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் --- ஏன் தெரியுமா - பஞ்சாட்சர மந்திரத்தில் அதாவது நமசிவாய என்ற மந்திரத்தில் ஒன்றான "ந" என்ற எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாய் அமைந்துள்ளது.
இங்கே தாமரையின் இதழ்கள் மொத்தம் ஆறு - ஆறு முக்கிய நாடிகள் .. ஓவ்வொரு நாடியின் அசைவிலும் ஏற்படும் சப்தங்கள்
ஸ , ஹ , ம் , ய , ர , ல என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன --இதன் மையத்தில் வளைந்த பிறைச்சந்திரன் போல் நான் இருக்கிறேன் - சுவாதிஷ்டானத்தின் அதி தேவதன் பிரம்மன் - அதி தேவதைகள் ராகிணி /சாகிணி -
பஞ்சபூதங்களில் நீர் தான் சுவாதிஷ்ட்டானம் - உங்களது பிறப்பு உறுப்புக்கள் , கருப்பை , குடல் ஆகியவற்றுக்கு தொடர்பு உள்ளது - இந்த சக்கரம் மலர்வதால் சுயகட்டுப்பாடு , விழிப்புணர்வு இவைகள் அதிகமாகும் - மனத்தில் இருக்கும் காமம் , குரோதம் பொறாமை , தாழ்வு மனப்பான்மை எல்லாம் அழிந்துபோகும்
ஆதிசங்கரர் சொந்தர்ய லஹரியில் 39வது ஸ்லோகத்தில் இப்படி சொல்கிறார்
த்வ ஸ்வாதிஷ்ட்டானே ஹுதவஹ மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிர முபசாரம் ரசயதி 39
தாயே ! உன்னுடைய ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்கினி தத்துவத்தை சிந்தித்து அதில் இடைவிடாது பிரகாசிக்கும் காலாக்கினி ரூபரான அந்த ருத்திரனையும், மகிமை வாய்ந்த அந்த ஸமயா அல்லது சந்திரகலா சக்தி என்னும் உன்னையும், போற்றுகின்றேன்.
ருத்திரருடைய எந்தப் பார்வையான அக்கினி கோபத்தால் வளர்ந்து உலகங்களை எரிக்கின்றதோ அப்போது கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது குளிர்ச்சியான உபசாரத்தை செய்கிறது.
உனக்கு தெரியுமா ரவி சுவாதிஷ்ட்டான சக்கரத்திற்கு உரிய திருத்தலம் திருவானைக்கோயில் -- உனக்கு தெரிந்திருக்கும் திருஞான சம்பந்தர் இப்படி பாடியிருக்கிறார்.
சக்கரம் வேண்டுமால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரருந்
தக்கனைத் தலையரி தழலுருவர்
அக்கணி யவராரூர் ஆனைக்காவே
ஸ்வாதிஷ்டா நாம் புஜகதா சதுர் வக்தர மனோஹரா --- நான் ஸ்வாதிஷ்ட்டானமாகிய தாமரையில் நான்கு முகங்கள் கொண்டு , பொன்னிறம் கொண்டவளாய் , சூலம் முதலிய ஆயுதங்கள் தாங்கியவளாய் கருணை ஆறாக பெருக அமர்ந்திருக்கிறேன்
என் குமரனின் திருச்செந்தூர் சுவாதிஷ்டானத்தை குறிக்கும் - அவனை வணங்கு மூலாதாரத்தில் இருந்து குண்டலியை அவன் அண்ணன் எழுப்பி விட்டான் அதை முருகன் வரவேற்று உன்னை திருச்செந்தூர் வரவழைத்துவிட்டான் பார்த்தாயா --- இதுதான் சுப்பிரமணிய புஜங்கத்தின் பெருமை
அம்மா உன் கருணை உன் விளக்கம் பெற என்ன தவம் செய்தோம் - சிரித்துக்கொண்டே மறைந்துபோனாள் மதுரையின் பேரரசி.
======================================================================
Comments
Arumai... Thanks to you for taking my request and explaining beautifully the chakras.. 🙏🙏🙏 Nicely composed & created 👌🙏
Wonderful narration spiritual session experience 👏👏👏🙏🏼🙏🏼
From Mrs Savitha Satish
Super elimayana villakkam
Arumai arumai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
Arumai arumai we are blessed
Savitha
Arumaiyana explanation 🙏🙏🙏🙏
உழன்று கொண்டு இருக்கும் எனக்கு
*ஶ்ரீசக்கரம்* போல் என்னை சீர்தூக்கி வைத்துள்ளது
உங்கள் கவிதை.
வாழ்க்கை எனும் ஆறா புண்ணை
ஆற்ற வந்தது
உங்கள்
*ஆறுசக்கர அனுபவம்.*
முதல் சக்கரமான *சுவாதீஷ்டானத்தை*
உங்களின் சுவாதீனத்தால்
நான் அறிந்து கொண்டது என் அதிஷ்டம்...
துன்பத்தையும் இன்பத்தையும்
இறக்கி வைக்க சொன்னாள் *பச்சைபுடவைக்காரி...*
இரக்கம் காட்டாமல் இருக்கி பிடித்து இருக்கிறதை
எளிதாக இறக்கி விடும் உங்கள் கவிதை