பச்சைப்புடவைக்காரி - ஜானகீ சோக நாசநம்
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
ஜானகீ சோக நாசநம்
ரவி நேற்று ராமரைப்பற்றி நிறைய பேசினோம் ...
பலமில்லாதவருக்கு பலம் ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி தான்:
“நிர்பல் கே பல் ராம்”.
ஆபத்து வந்து சாய்கிற சமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன்தான்!
“ஆபதாம் அபஹர்த்தாரம்”1 என்கிறோம்.
“அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ”2 –
அதாவது, உங்களுக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு சதாவும் உங்களை ரக்ஷிக்கிற மஹாபலவான் யார்?
அந்த ராமன்தான்.
உங்களுக்கு துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவதற்கு சித்தமாகக் கோதண்டத்தின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்தபடி நம்மைச் சூழ்ந்திருக்கிறான்.
அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும் அவனோடேயே இருந்து கொண்டிருப்பான் – “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”3.
ஆனால் இப்படிப்பட்ட புருஷச்ரேஷ்டர், வீரராகவன், விஜயராகவன் என்றே பேர் பெற்ற மஹா வீரர் ஆஞ்ஜநேயரைத் தமக்குப் பக்கபலமாகக் கொண்டதால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்ததாகக் காட்டியிருக்கிறார்!
அம்மா இறைவன் தான் தன் அடியார்களை எப்படி உயர்வடைய செய்கிறான் ? அவர்கள் அடையும் புகழில் இறைவன் எவ்வளவு சந்தோஷம் அடைகிறான் .....
உண்மை ரவி - அவனை நாம் அவமதித்தால் கூட ஏற்றுக்கொள்வான் ஆனால் அவன் அடியார்களை யாரவது துன்பப்படுத்தினால் அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது .....
சீதையைப் பிரிந்து இவர் பட்ட துக்கத்தைவிட இவரைப் பிரிந்து சீதை பட்ட துக்கம் கோடி மடங்கு. ப்ரிய பத்னி பக்கத்தில் இல்லையே, தன்னைப் பிரிந்து அவள் கஷ்டப்படுவாளே என்ற கஷ்டம் மட்டுந்தான் ராமருக்கு.
ஆனால் அவளுக்கோ இதோடு ராக்ஷஸ ராஜ்யத்தில் மஹா காமுகனால் சிறை வைக்கப்பட்டிருப்பதான மஹா கஷ்டமும் சேர்ந்திருந்தது. ‘அபலா’ என்றே ஸ்திரீக்குப் பெயர்.
ஸாக்ஷாத் ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மி சீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று சுருக்குப் போட்டுக்கொள்ள இருந்தபோது அவளுக்கு உற்சாகத்தை , தெம்பை, பலத்தைத் தந்தது – ஆஞ்ஜநேயர்தான்.
இறைவிக்கே உயிர் கொடுத்தவன் அனுமன் என்றால் அவன் புகழை எப்படி விவரிக்க முடியும் ?
அதோ அந்த காட்சியைப்பார் -----
ராவணன் மயக்கும் வார்த்தைகள் சொன்னதாலும், ராமனை இகழ்ந்து பேசியதாலும் சீதைக்கு வாழ்க்கையில் இருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பும் போய்விட்டது.
திரிஜடை எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொல்லியும், நல்ல நல்ல நிமித்தங்கள் அன்று சீதைக்கே தோன்றினாலும் சீதை தன் மனதை மாத்திக்க விரும்பவில்லை ......
ராமன் வருவதற்குள் ராவணன் தன்னை அடைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் - ராமன் வருவதான அறிகுறிகள் எதுவுமே அவள் கண்களில் தென் படவே இல்லை --- இந்த நாற்றமடிக்கும், அழியக்கூடிய உடலைத்தான் விரும்புகிறான் ராவணன் - அதை அழித்துவிட்டால், நான் ஆத்மார்த்தமாக ராமனிடம் சேருவதை யாராலும் பிரிக்க முடியாதே என்று எண்ணினாள் --
எல்லா அரக்கிகளும் தூங்கிக்கொண்டிருந்தனர் -- திரிஜடைக்கும் தூக்கம் வந்தது -
இருந்தாலும் அவள் மனம் தூங்கவில்லை -- சீதையின் நிலைமை சரியில்லை, எந்த நேரமும் ஏதாவது ஒரு தவறான முடிவுக்கு போய்விட்டால் என்ன செய்வது --- ?
கண்களில் இருந்து சீதை சிந்திய கண்ணீர் அங்கு குளமாக தேங்கி கிடக்க அதிலிருந்து கிடைத்த உப்பு நீரை கண்களில் தடவிக்கொண்டாள் தூக்கம் வராமல் இருப்பதற்காக ----
அனுமார் அன்னையை சந்திக்க வேண்டுமே! --- அதனால் நித்திரா தேவியை அனுமார் பிராத்தித்துக்கொண்டார் -
"அம்மா! அன்னையை காப்பாற்ற வந்துள்ளேன் -- நான் அன்னையிடம் பேசி முடிக்கும் வரை யாருக்கும் தூக்கம் கலையக்கூடாது -- தயவு செய்து அருள் செய் தாயே!! "
நித்திரா தேவி அகமகிழ்த்தாள் -- " ஆஞ்சநேயரே -- அன்னையுடன் நீ ஆனந்தமாக பேசு --- அவள் துன்பத்தை உன்னால் மட்டுமே போக்க முடியும் -- நான் இங்கு இருக்கும் எல்லோரையும் அன்னையையும் உன்னையும் தவிர ஒரு கை பார்த்துக்கொள்கிறேன் - உனக்கு என் பூரண ஆசீர்வாதங்கள் "'
அன்னை எல்லோரும் உறங்கி விட்டபின்னர் மரத்தின் பின்னால் சென்றாள் --- அதன் கிளையில் தன் கிழிந்த சேலையின் ஒரு பகுதியை தூளி மாதிரி கட்டினாள் --
அந்த மரம் வேண்டியது அன்னையிடம் "தாயே! அவசரப்பட்டு எந்த முடிவும் செய்துவிடாதே - நீ இருக்கிறாய் என்ற ஒரே நம்பிக்கையில் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது -
எந்த விதமான குடும்பத்தில் இருந்து தாங்கள் வந்திருக்கிறீர்கள் !! --
யாருக்குமே கிடைக்காத ராமன் , அவன் தம்பிமார்கள் , உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் கௌசல்யா , சுமித்திரை , கைகேயி , ஜனகர் , உங்கள் தாயார் , தங்கைமார்கள் , அயோத்தி , கோசலை நாட்டு மக்கள் எல்லோரும் உன்னை இழந்து உயிர் வாழ்வார்கள் என்று நினைக்கிறீர்களா ?
இல்லை தாயே! உலகமே முடிந்துவிடும், ஒரு உயிர் கூட வாழாது --- பொறுமையின் தெய்வமே, எங்களுக்காக உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் ----
" மரம் கெஞ்சியது, மலைகள் கதறின, பறவைகள் புலம்பின; விலங்குகள் விம்பின - வேதங்கள் கரைந்தன - கடல் அலைகள் நின்று போயின ---
சீதையின் காதுகளில் மரம் கதறுவது கேட்டது, மற்றவர்களின் புலம்பல்களும் துல்லியமாக காதுகளில் விழுந்தன-- ஆனால் கவனம் முழுவதும் ராவணனிடம் இருந்து தப்பிக்க இதைவிட ஒரு நல்ல வழி அவளுக்கு புலன் படவில்லை -
விதி அங்கே அவள் கண்களை இழுத்து மூடியது - தன் மீது அன்பு செய்தவர்கள் யாருமே அந்த சமயத்தில் அவள் நினைவில் நிழலாடவில்லை..
"ராமா -- என்னை மன்னித்து விடு - உன்னுடன் வாழ எனக்கு கொடுப்பினை இல்லை - கொஞ்சம் நாள் தான் உன்னுடன் வாழ்ந்தேன் - ஆனால் பல யுகங்கள் வாழ்ந்ததைப்போல் நிம்மதியையும் சந்தோஷத்தையும் எனக்கு அள்ளி அள்ளி தந்திருக்கிறாய் --
என்னைப்போல் எல்லா பெண்களுக்கும் உன்னை மாதிரி உத்தம புருஷன் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பாடு கொண்டவன் கனவனாக வரவேண்டும் - இதுதான் என் வேண்டுகோள் ராமா -
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் உன் துணைவியாக வர என்னை ஆசிர்வாதம் செய் ----" மரக்கிளைகள் நடுங்கின அன்னையின் சேலைப்பட்டு ----
கண்களை மூடிக்கொண்டாள் - அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்தாள் ---- மரத்தில் போட்ட சேலையின் ஒரு பகுதியை தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டாள் -- ராமனின் மாலை விழுந்த கழுத்தில் முதல் முறையாக தன் முடிவைத் தேடும் சேலை ஒன்று விழுந்தது ------
ராம் ராம் -- சீதா ராம், ஜெயராம் ---- இனிய குரல், ஒரு தேவ காண குரல் அவள் காதுகள் இருண்டு போகும் முன் தேனாக விழுந்தது -- நான் சொல்லும் என் தலைவனின் நாமம் -- இங்கே யார் சொல்வது? என் காதுகளில் மட்டும் எப்படி விழுகிறது?
சொல்லும் குரலில் பக்தி பொங்கி எங்கும் சிதறுகிறதே - ஒரு அரக்கனால் இவ்வளவு அழுத்தமும் உணர்ச்சியும் பக்தியும் கலந்து ராம நாமத்தை சொல்ல முடியுமா???
இல்லை இது ஏதோ ஒரு மஹா ஞானியின் குரல் -- அந்த ஈசனின் குரல் ------சேலையின் முடிச்சு அவிழ்ந்தது -- கிளைகள் ஒரு பெரிய பாவத்தில் இருந்து தப்பித்துக்கொண்டன ---- எல்லோருக்கும் உயிர் வந்தது சீதைக்கு இனி ஆபத்து எதுவும் இல்லை என்று --
குனிந்த தலை நிமிராதவள் முதன் முறையாக தன் தலையை உயர்த்திப்பார்த்தாள் -
அங்கே அவள் கண்டது ஆயிரம் சூரியர்கள் ஒன்று சேர அமைந்த முகம் -- தட்சிணா மூர்த்தியின் கண்கள், ஹயக்ரீவரின் ஹம்ச புன்னகை; ஸ்ரீமன் நாராயணனின் தேஜஸ் - பிரம்மாவின் உடற்கட்டு - சாந்தத்தில் ஒரு இமயமலை மரக்கிளைகளில் அமர்ந்து இருந்தது - அதன் வாயிலிருந்து ராம நாமம் கங்கைபோல் அங்கே பெருக்கெடுத்து சீதையின் கண்ணீரை தன் புண்ணிய கரங்களால் துடைத்துவிட்டு சென்றது --------
ராம் ராம் -- சீதா ராம், ஜெயராம் ----இனிய குரல், ஒரு தேவ காண குரல் அவள் காதுகள் இருண்டு போகும் முன் தேனாக விழுந்தது -- நான் சொல்லும் என் தலைவனின் நாமம் -- இங்கே யார் சொல்வது?
என் காதுகளில் மட்டும் எப்படி விழுகிறது? சொல்லும் குரலில் பக்தி பொங்கி எங்கும் சிதறுகிறதே - ஒரு அரக்கனால் இவ்வளவு அழுத்தமும் உணர்ச்சியும் பக்தியும் கலந்து ராம நாமத்தை சொல்ல முடியுமா?? இல்லை இது ஏதோ ஒரு மஹா ஞானியின் குரல் -- அந்த ஈசனின் குரல் ------
சேலையின் முடிச்சு அவிழ்ந்தது -- கிளைகள் ஒரு பெரிய பாவத்தில் இருந்து தப்பித்துக்கொண்டன ----எல்லோருக்கும் உயிர் வந்தது சீதைக்கு இனி ஆபத்து எதுவும் இல்லை என்று --
மேலே தலையைத் தூக்கிப்பார்த்தவள் அசந்தே போய்விட்டாள் - இந்த இரவில் எப்படி ஒளிமிக்க சூரியன் வர முடியும்? -- ராவணனின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்றா? ஆனால் காதுகளில் இப்படி தேன் பாய்வதைப்போல் வரும் ஒரு குரலை நான் இதுவரை ராமனிடம் தானே கேட்டிருக்கிறேன் --- மற்றவர்களிடம் இல்லையே --- யாராக இருக்கும் ----?
யோசித்துக்கொண்டிருந்த சீதையின் பாதங்களில் அதிகமான ஈரப்பசை தெரிந்தது - யாரோ பாதங்களை அலம்பிவிடுவதைப்போல் உணர்ந்தாள் ---
குனிந்து பார்க்கையில் அவள் பாதங்களில் தன் சிரசை வைத்து ஒரு ஞான பிரம்மம் சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்துகொண்டிருந்தது ---- ஆஜானுபாவமான உடல், புடைத்த தோள்கள், குனித்த புருவம், நெற்றியில் ராமன் சீதையை தேடிக்கொண்டிருந்தான் - கண்களில் கங்கை தன்னிடம் இனி நீர் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள் -----
அன்புடன் அந்த பரப்ரம்மத்தை தூக்கி நிறுத்தினாள் சீதை --- யாரப்பா நீ? என் ராகவனின் பெயர் உனக்கு எப்படித்தெரியும்? மனம் நொந்து இருக்கிறேன் - வாழ்க்கையில் கொஞ்சமும் பிடிப்பு இல்லை ---
ராம் ராம் என்று என் நாதனின் நாமத்தை நீ சொன்னதால்,போகும் என் உயிரை பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறேன் -- உண்மையில் உன்னை ராவணன் அனுப்பினானா ? உண்மையை சொல் --- நான் ராமனைப்பிரிந்த உடனேயே இறந்து விட்டேன் - வெறும் சீதையின் உடல் தான் உன்னிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறது --- என்னை இனி யாரும் கொல்ல முடியாது....
தாயே! நான் ராம தூதன் அம்மா!
உங்கள் உடலில் மீண்டும் அந்த ராமன் என்னும் உயிரை சேர்க்க வந்திருக்கிறேன் -
வில்லை முறித்து உங்கள் முகத்தில் புன்னைகையத்தந்தானே அந்த புண்ணிய புருஷனின் சேவகன் அம்மா நான்!
ஒரு பெண் மானுக்கு பொன்மானை பரிசாகத் தர ஓடினானே அந்த சக்ரவர்த்தி திருமகனின் தொண்டன் அம்மா நான்;
ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் மட்டுமே என்று வாழ்கிறானே அந்த வள்ளலின் வாரிசம்மா நான் ---
என்னை அனுமன் என்பார்கள், ஆஞ்சநேயன் என்பார்கள் - வாயுவிற்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அம்மா நான் - மனதில் ராமன் இல்லாமல் தவித்தேன் -
இன்று கிடைத்த ராமனை மனதில் தேக்கி வைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன்- என் அன்னை மீது ஆணையம்மா - இது ராவணனின் மாயாஜாலங்கள் இல்லை - அந்த அரக்கனின் அடியாளும் அல்ல நான் -- நம்புங்கள் தாயே - உங்கள் மகனாக, சேவகனாக, நண்பனாக சொல்கிறேன் - நான் ராமனுக்காக பிறந்தவன் - இந்த உயிர் அவன் போட்ட பிச்சை தாயே!!!
சீதையின் கண்கள் வெகு நாட்களுக்கு பிறகு ஆனந்தத்தை அள்ளித் தெளித்தது.
வாயை கைகளால் பொத்திக்கொண்டு அன்னையின் பாதங்களின் அருகே நின்று கொண்டு ஆஞ்சநேயர் சீதையுடன் எண்ணங்களை பின்னோக்கி எடுத்து சென்றார் ----.
சீதையின் உயிர் பிழைத்தது --- இந்த புண்ணிய பூமியின் மீது அந்த பூமா தேவியின் உதிரம் சிந்தாமல் காப்பாற்றினான் சங்கர சுவனன் ...
அம்மா ..... எப்படிப்பட்ட சேவை அம்மா இது , சீதையை ராமனிடம் அப்படியே ஒப்படைத்த பெருமை சங்கர சுவனனையே சாரும்
ஆமாம் ரவி ... தன்னடக்கம் , எல்லாம் இறைவன் செயல் என்ற நம்பிக்கை இறை நாமம் இறைவனை விட உயர்ந்தது என்ற உறுதி இவை இருந்தால் அனுமனைப்போல் எல்லோருமே சிரஞ்சீவிகளே ! ...
அம்மா .... அவள் பாதங்களில் விழுந்து கதறிவிட்டேன் .... அவள் மறைந்து பல வினாடிகள் ஆனது என்பதை உணராமல்
Comments
இந்த சுந்தரகாண்டம் திரும்ப
திரும்ப படிக்க ஆறுதலாக இருக்கிறது. 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
காட்டினை அழித்தான் கர்வத்தை ஒடுக்க
கற்புடைத் தலைவி கண்ணீர் துடைத்த
காவியத் தலைவன் அனுமன் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம்.... ஆரவாரம்....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏
வெண்மையை உன் உள்ளத்தில் தையித்தான்
காவி வர்ணம் அது உன் பிரம்மச்சரியம் என வைத்தான் ...
பச்சை வர்ணம் நீ காமாக்ஷியாய் தெரியும் போது ...
நீல நிறம் நீ சியாமளனாக இருக்கும் போது ...
சிவப்பு நிறம் உன் குஞ்சித பாதங்கள் உயரும் போது
பவழ நிறம் உன் உதடுகள் விரியும் போது ..
வானவில்லாய் இருப்பவனே ...
கோதண்டாமாய் காண்டீபமாய் பாசுபதாஸ்த்திரம் பிரமாஸ்த்திரமாய் , நாகஸ்திரமாய்
நீ இருக்கும் போது கொரோனா வின் அம்புகள் என்ன செய்யும் எங்களை ?? 👌👌👌
உன் அருளின்றி உலகில் உயிர் வாழக் கூடுமோ
இரையின்றி உயிர்கள் உறவாட முடியுமோ ?
இறை இன்றி இல்வாழ்வு இனிதாக போகுமோ
கறை இன்றி வாழ்க்கை கரை காண முடியுமோ
அந்த ரங்கன் அறியாமல் அந்தரங்கம் வாழுமோ .
கிளி இன்றி மொழி பேச முடியுமோ ? கிலி இல்லா வாழ்வு உன் அருளால் கிடைக்குமோ ?
புலி இன்றி ஒரு கானகம் வாழுமோ ... புளி இன்றி சமையல் சுவை கூடுமோ ?
சாயி இன்றி வாழ்வு தனை வேண்டேன் ... ஷீருடிக்கு வருவதை அன்றி வேரொன்றும் அறியேன் . 🥇🥇🥇
ராம் ராம் -- சீதா ராம், ஜெயராம்
ஜெய் ஹனுமான்.God bless
கண்கண்ட தெய்வத்தைதை காத்த
மாருதிக்கு கோடி நமஸ்காரங்கள்
🙏🙏🙏🙏
என் இதயம் எங்கோ இருப்பதை கண்டும் ஒன்றும் செய்ய வில்லை நான் ...
உத்தமன் என்றே பெயர் வாங்கினேன் ... உத்தமியை தொலைத்து நின்றேன் ...
ராஜா ராமன் என்றே பெயர் வாங்கினேன் ... செல்வதை இழந்து நின்றேன் ...
உயிர் தனியே உடல் தனியே நீ பார்த்ததுண்டோ .. இதோ என்னை பார் புரியும் ...
கண்கள் வற்றியது போதும் கால்கள் நடந்தது போதும் என் கண்மணியை என்னிடம் கொண்டுவந்து விடு .... கோடி புண்ணியம் உனக்கு 🍇🍇🍇
இராமனின் உயிரும்
காத்தான்
அஞ்சலை பெற்ற அஞ்சான்
வாயு பெற்ற வாய்மையாளன்
அண்டியவருக்கு தென்றல் அவன்
சீண்டியவருக்கு புயல் எனும் எமன் அவன்
நாளெல்லாம் இராமனின் நாதம்
இராமனுக்கு அவன் முதல் பாதம்
இராமபக்தி அவன் ஆன்மீகபதம்
கதை(ஆயுதம்) எடுத்தால் எதிரி கதம்
இராமனின் பதி காத்தான் அனுமன் எனும் உமாபதி
இராமபக்தனுக்கு இமை துடிக்கும் நேரம் போதும் இலங்கையை இல்லாமல் செய்ய
இருந்தும் இடம் தந்தான் இராமனின் வெற்றிக்கு
சீதையின் பாதம் தொட்டான்
கண்ணீரால் களங்கம் துடைத்தான்
தன்னை அடக்கினால் விண்ணை அடக்கலாம் என வீர அனுமன் தெரிவித்தான்
தன்தேகம் அடையத் துடிக்கும் இராவணினனின் சூழ்ச்சியோ என சந்தேகம் கொண்டாள்
என்தேகமும் என் மோகமும் இராமனின் இட்ட பிச்சையே
என சுட்டி காட்டினான் சுந்தரகாண்டத் தலைவன்
அனுமனை அனுமதிக்க அய்யம் கொண்டாள் இராமனை மைய்யம் கொண்டவள்
*அனுமனோ*
சயனம் கொடுக்க நித்திரை தேவியை வேண்டினான்
இலங்கைக்கு இரவு இறுதியில்லாம் நீண்டது
நித்திரையில் துவண்டது
சித்திரை நிலவும் சுருண்டது
பகர்ந்தான் பரந்தாமன் நிலை
தாயே நீங்கள்தான் அதற்கான விலை
இப்போது இராமன் சிலை
என்று சிந்தினான் கண்ணீரை
சிதறினான் சீதையின் கண்ணில் வழியும் செந்நீர் கண்டு
அன்னை சீதையே சிதை செல்லும் சித்தம் வேண்டாம்
இராவணன் அழியும் கதை காண காலம் வேண்டும்
பொறுமை செய்வீர் பூமாதேவி மகளே
பெருமை செய்வான் பூகோள நாயகன்
ஆறுதல் தேற்றினான்
நம்பிக்கை எனும் நங்கூரம் சீதைக்கு ஊட்டினான் அனுமன்🐒🐒
துடைப்பான் ... அருமையான அதே சமயத்தில் மிகவும் உருக்கமான பதிவு
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏக ி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில ்
அஞ்சிலே ஒன்றை வைத்தான ்; அவன் எம்மை அளித்துக் காப்பான ்
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியா க, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும ், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பத ு, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்த ு,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.
எனவே தான் ஆஞ்சநேயராகிய அனுமனை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள். அந்த வகையில் தினமும் ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
கவிஞரின் கவிநயத்தை எப்படிச் சொல்லி பாராட்டுவது!
எனவே இனி அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான அஞ்சிலே பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
இதனால் தினமும் ஆஞ்சநேயா நீ என்னுடன் சொக்காட்டம் ஆட வர வேண்டும் என பிரார்த்திக் கொண்டிருந்தான். பக்தனின் இந்த வேண்டுகோளை ஏற்று அவர் முன் ஆஞ்சநேயர் தோன்றினார். அவனுடன் சொக்காட்டம் ஆடவும் ஒப்புக் கொண்டான்.
ராமனாக இருக்கும் உங்களுக்கு சீதை போன்ற மனைவி அமைய ஹனுமனை இப்படி வழிபடுங்கள்..!
ஆனால் பக்தனிடம் மாருதி ஒரு நிபந்தனை விதித்தார்.
“பக்தனிடம், பக்தா நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். தீவிரமாக விளையாடுவேன். பின்னர் நீ தோற்றுவிட்டால் அதற்காக வருந்தக் கூடாது.” என்றார். பக்தனும் சம்மதித்தான்.
இருவரும் விளையாட துவங்கினார். ஆஞ்சநேயர் ஒவ்வொரு முறையும் ஆடும் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறியபடியே காய்களை உருட்டினார். அந்த பக்தனோ, ‘ஜெய் அனுமான்’ என்ற படி காய்களை உருட்டினான்.
அனுமனுக்கு வடை மாலை ஏன்…? பரமாச்சாரியாரின் விளக்கம்!
அந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் அந்த பக்தனே வெற்றி பெற்றான். அனுமனோ சரி அடுத்தமுறையாவது ஜெய்த்துவிடலாம் என்ற முனைப்பில் மீண்டும் மீண்டும் விளையாடினார். ஆனால் வெற்றியோ பக்தன் பக்கம் மட்டுமே இருந்தது.
தற்போது பக்தனுக்குப் பதிலாக, ஆஞ்சநேயர் மனவருத்தத்தில் ஆழ்ந்தார். ராமனிடம் “சுவாமி, நான் உங்கள் திருநாமத்தை ஒவ்வொரு முறை உச்சரித்தும் எனக்கு தோல்வியா?” என புலம்பினார்.
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவதற்கான காரணம்!
அஞ்சனை மைந்தன் முன் தோன்றிய ராமன், “அனுமன்... நீயோ என் பக்தன். அதனால் என் சக்தி உன்னுள் இணைந்துள்ளது.
ஆனால், அவனோ உன் பக்தன், ஆதலால் அவனில் நம் இருவரின் சக்தியும் இணைந்து விடுகிறது. இது தான் அவனின் வெற்றிக்குக் காரணம்” என்றார்.
நெகிழ்ந்து போன ஆஞ்சநேயர் பக்தனுக்கு ஆசி வழங்கிவிட்டுச் சென்றார்.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்...