பச்சைப்புடவைக்காரி --- நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்தது இல்லை .
அம்மா ராவணன் சிறந்த சிவபக்தன் -- அவன் இசைக்கும் வீணையில் காம்போதியை கலந்து அவன் சாம வேதம் சொல்லும்போது அந்த கையிலாயமே உருகியதாமே அம்மா!
மிகுந்த ஞானமும் படிப்பும், அறிவாற்றலும், 1000 மதம் கொண்ட யானைகளின் பலமும் கொண்டவன் என்று கேள்விப்பட்டேன் - இப்படிப்பற்ற அறிவாற்றல் பெற்ற, தேவர்கள் ஆசிர்வாதங்களைப்பெற்ற ஒருவன் எப்படியம்மா ஒரு அரக்கனாக முடியும் -
நல்ல குணங்களும் சிவ சிந்தனையும் உள்ளவன் ஒரு ராக்ஷஸன் ஆக முடியுமா - அவன் மனதில் தீய எண்ணங்கள் வர வாய்ப்புள்ளதா? பிறப்பால் சிறந்தவன், படிப்பினால் உயர்ந்தவன், சிவ சிந்தனையால் உயர்ந்த பதவியை அடைந்தவன் கேவலம் இன்னொருவருடைய மனைவிக்கு ஆசைப்படுவானா அம்மா - என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை ----
மேலும் யாரெல்லாம் சிறந்த பாக்கியவானாக இருக்க முடியும் தாயே?
ரவி அரக்கர்கள் பலரை எடுத்துக்கொள் --
சூரபத்மன் ---மேலே பறந்து கீழே செங்குத்தாக வைத்திருந்த கதையில் விழுந்து பிறகு நெருப்புக்கொண்டத்தில் விழுந்து உயிரைவிட்டான் --
அவன் தம்பி மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால் அவன் அன்றே அழிந்திருப்பான் - இவன் படிக்காத,தெரிந்துக்கொள்ளாத வித்தைகளா ? கடவுளை காண வேண்டும் என்றே ஒரே குறிக்கோள் -- அவர் நேரே வந்ததும் தனக்கு அழிவைத்தேடும் வரங்களைத்தான் பெற்றுக்கொண்டான் ----
இவனை விட அதிகம் படித்தவன் , வீராதி வீரன் , சூராதி சூரன் இரண்யகசிபு -- மும்மூர்த்திகளின் ஆயுதங்களாலும் தனக்கு அழிவே வரக்கூடாது என்று சாமர்த்தியமாக வேண்டினான் --
பிரம்மாவிடம் மட்டுமே ஆயுதங்கள் கிடையாது - பிறகு இரு மூர்த்திகள் என்று சொல்லாமல் ஏன் மும்மூர்த்திகளின் ஆயுதங்களால் மரணம் வரக்கூடாது என்று வரம் கேட்டான் ?---
கமண்டலத்தையும் , தண்டத்தையும் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கும் ரிஷிகளின் நாக்கிலே குடிகொண்டிருப்பது பிரம்மா -- அவர்கள் நாக்கினிலேயிருந்து வரும் வார்த்தைகளாலும் , சாபங்களாலும் கூட தப்பித்தவறி கூட தனக்கு மரணம் வாய்க்கக்கூடாது என்று வெகு சாமர்த்தியமாக மும் மூர்த்திகளின் ஆயுதங்களாலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் பெற்றுக்கொண்டான் -
ஆனாலும் வரங்கள் அவனுக்கு நிரந்தர வாழ்க்கையை கொடுக்கவில்லை ---
ராவணனனை எடுத்துக்கொள் -- இவன் பெறாத வரமா ? கடும் தவம் செய்தவன் - வேதங்கள் இவனுக்கு அத்துப்படி -- 10000 ஆண்டுகள் தவம் செய்தான் - ஒவ்வொரு 1000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை தன் பத்து தலைகளில் ஒன்றை கொய்து ஹோம அக்னியில் கடவுளுக்கு சமர்ப்பித்தான் --- எதிலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் பெற்றவன் மனிதனால் மரணம் வரக்கூடாது என்று கேட்கவில்லை - கேவலம் தன்னை ஒரு மனித புதர் என்ன செய்துவிட முடியும் என்ற இறுமார்ப்பு ------
மேலே சொன்ன அத்தனைபேரும் ஞான பண்டிதர்கள் - இறைவனை நேரில் பார்த்தவர்கள் - நீங்கள் அப்படி பார்க்க நேரிட்டால் உங்களுக்கு எல்லாம் மறந்து விடும், எதையும் கேட்கத்தோனாது -
ஆனால் இவர்களோ, இறைவனை முழுவதும் பார்த்ததோடு மட்டும் அல்லாமல் பட்டியல் போட்டு, ஒன்றையும் மறக்காமல் எல்லா வரங்களையும் கேட்டு வாங்கிக்கொண்டார்கள் --- ஆனால் மனதில் நல்ல எண்ணங்களை நிரப்பிக்கொள்ள மறந்து போனார்கள்...
ராக்ஷஸ --- இந்த வார்த்தையை திருப்பி போட்டுப்பார் -
ஸக்ஷரா என்ற வார்த்தை வரும் - அக்ஷரா என்பது என் திருநாமம் - வார்த்தைகளால் அலங்கரிக்கப்படுபவள் என்று பொருள் -
அ என்று தொடங்கும் முதல் எழுத்தில் இருந்து கடைசி எழுத்தான ரா வரை ஓவ்வொரு எழுத்துல நான் நிறைந்து இருக்கிறேன் என்று பொருள்.....
ஸம்ஸ்கிரத்தில் ஸ என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை இணைப்பதற்காக உபயோகப்படுத்துவது -
உதாரணம் சோமஸ்கந்தர் என்பதை ஸ + உமா + கந்தர் என்று பிரிக்கலாம் - அதாவது உமாவும் கந்தனும் இணைந்த என்ற அர்த்தம் வருகிறது -- ஸ+க்ஷரா என்பது - மிகவும் உயர்ந்தவர் , ஞானி என்று பொருள் --
சுருக்கமாக சொன்னால் ஒரு உயர்ந்த ஞானி கெட்ட எண்ணங்களை , தகாத எண்ணங்களை , மட்டமான ஆசைகளை மனதில் வளர்த்துக்கொள்வதால் ஸக்ஷராவாக இருந்தவர் குறுகிய காலத்தில் ஒரு ராக்ஷஸனாக மாறி விடுகிறான் - அவனின் உயர்ந்த படிப்போ , ஞானமோ அவனை காப்பாற்ற வருவதில்லை ...
ரவி எவ்வளவு படித்திருந்தாலும், ஞானம் பெற்றிருந்தாலும், சாக்கடை போன்ற அசுத்தமான எண்ணங்களை உடையவன் ஒரு ராக்ஷஸனே !
இங்கே பார்த்த எந்த புத்திசாலிகளும் தங்கள் அறிவை தங்க வைக்க ஆண்டவனை வேண்டவே இல்லை --
நிரந்தரமான வாழ்க்கையை மற்றவர்களை இம்சித்து வாழும் வாழ்க்கையைத்தான் இறைவனிடம் வேண்டினார்கள் -- மரணம் வரக்கூடாதது என்று வேண்டினால் அது இன்னும் விரைவாக ஒருவனை வந்தடையும் -
மரணம் வந்தால் வரட்டும் - இறைவன் இருக்கிறான் - அவன் நம்மை பார்த்துக்கொள்வான் என்று இருந்தால் மரணமும் நம்மைக்கண்டு பயந்து ஓடி விடும் - அப்படிப்பட்ட ஞானிகளைத்தான் நாம் சிரஞ்சீவி என்று சொல்கிறோம் ----
உன் அடுத்த கேள்வி -- யாரெல்லாம் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் - சொல்கிறேன் கேள் ---
1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்
2. காம குரோதத்தைக் கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்
3.பொய்யுரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் உள்ளவன் பாக்கியவான்
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாத வெள்ளை குணத்தவன் பாக்கியவான்
5.நண்பர்களுடைய நலத்தினைக் கோரும் பண்புடையவனே பாக்கியவான்
6.பெற்றவரைப் பேரானந்தப் படுத்தும் குற்றமற்றவனே பாக்கியவான்
7.ஆசை எண்ணியே மோசம் போகாமலே பாசமற்றவனே பாக்கியவான்
8. துன்பம் வந்தாலும் துக்கம் இல்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்
9.யாதொரு ஸ்தீரியையும் மாதவென்றெண்ணிடும் போரில்லாதவனே பாக்கியவான்
அம்மா யார் பாக்கியவனோ இல்லையோ -- நான் பாக்கியவான் -- உங்களிடமிருந்து மிக அழகான விளக்கத்தை பெற்றதற்கு ---- சிரித்துக்கொண்டே மறைந்து போனாள் என் மனதை திருடிய மதுரைக்காரி
Comments
பறந்து போகும் பறவைக்கூட்டம் பார்த்து மயங்குது .. பாரெல்லாம் உந்தன் நாமம் பவனி வருகுது ...
ஏழை எங்கள் நெஞ்சமெல்லாம் ஞான செல்வம் பெருகுது ... ஏழு பிறவி இனி பிறக்கினும் உன் தண்டம் காக்குது ...
எதிர்த்து வரும் சக்தியெல்லாம் எங்கோ ஓடுது ... சுவாமிநாதா என்றதுமே பிறவி பயனும் ஓடி வருகுது ... 🥇🥇🥇
அமுதம் பொழியும் நிலவைத் தொட்டதில்லை ... ஆதி அந்தம் அறிந்ததில்லை
ஆதவன் நிழலில் அமர்ந்ததில்லை ஆண்டவன் ஒருவன் என்று சொன்னதில்லை
எச்சில் கையால் காக்கை ஓட்டியதில்லை ... ஏந்திய ஓட்டில் காசை நிறப்பியதில்லை ...
இல்லை என்று வந்தவருக்கு இருக்கு என்று சொன்னதில்லை ... ஈசன் இருக்க ஏன் பயம் என்று உணர்ந்ததில்லை ...
உன்னை ஒருமுறை பார்க்க வந்தேன் ..
இல்லை என்பதே இல்லை என்றாகியது ...
8வது அதிசயமோ நீ ... புரியவில்லை ...
காடாக இருந்த என் உள்ளத்தை எப்படி பூஞ்சோலை ஆக்கினாய் ... சொல் அந்த ரகசியத்தை ... சாயி 🥇🥇🥇
அமுதம் பொழியும் நிலவைத் தொட்டதில்லை ... ஆதி அந்தம் அறிந்ததில்லை
ஆதவன் நிழலில் அமர்ந்ததில்லை ஆண்டவன் ஒருவன் என்று சொன்னதில்லை
எச்சில் கையால் காக்கை ஓட்டியதில்லை ... ஏந்திய ஓட்டில் காசை நிறப்பியதில்லை ...
இல்லை என்று வந்தவருக்கு இருக்கு என்று சொன்னதில்லை ... ஈசன் இருக்க ஏன் பயம் என்று உணர்ந்ததில்லை ...
உன்னை ஒருமுறை பார்க்க வந்தேன் ..
இல்லை என்பதே இல்லை என்றாகியது ...
8வது அதிசயமோ நீ ... புரியவில்லை ...
காடாக இருந்த என் உள்ளத்தை எப்படி பூஞ்சோலை ஆக்கினாய் ... சொல் அந்த ரகசியத்தை ... சாயி 🥇🥇🥇
A: tAmarai kaNNanai tannisaiyAl dinam tavattiru nAdayOgi tyAgarAjar kaNDa 💐🙏🏼🙏🏼
அரக்கர்கள் மனதில் உள்ளனர்.
அருமையான விளக்கம்.
Krishnanama sakkare🙏🏻🙏🏻🌹🌹🌹
அழியும் எண்ணம்
நான் என்பது நாண வேண்டியது.
அகந்தை என்பது அழிய வேண்டியது
இதுதான் நம் எண்ணத்தின் பின்னம்
மரணமும் அழகுதான்
பிறப்பின் காரணமே இறப்புதான்
மரணம் மரித்து விட்டால் பிறப்பு அறுந்துவிடும்
அவனவன் விதிப்படியே விளையும் மரணம்
வரம் பெற்று மரணம் வராமல் செய்ய அது ஒன்றும் சதியல்ல
அதுதான் விதி
கருவில் உருவான நொடியே மரணமும் உருவாகும்
ஒவ்வொரு நொடியிலும் கருவாகும்
இராமனோ, இராவணனோ எவராகினும் மரணத்தின் விதைதான்
மரணமில்லா வாழ்வு வெறும் கதைதான்
பிறப்பை விட இறப்பு மேலானது
முன் ஜென்ம பிழையின்
பரிகாசமே பிறப்பு
செய்த பிழையின் பரிகாரமே இறப்பு
பரிகாரமோ பரிகாசமோ பரந்தாமன் கையில்
வரம் பெற வசதி தேவையில்லை தன்னை வருத்திக்கொண்டால் போதும்
ஆனால் தரமாய் வாழ தகுதி தேவை அதற்கு தன்னை திருத்திக் கொண்டால் போதும்
சீதாராமனோ, சிவனோ எவன் வரம் தந்தாலும் எமனே வெல்வான்
மரணம் என்பது மகிமை
கடவுளை சிந்தித்தால் கனிவான மரணம்
கடவுளை நிந்தித்தால்
கடுமையான மரணம்
மரணம் காண காரணம் தேவையில்லை
மரணம் காணா வாழ்வோ கனவு
உடலுக்காக உருகுபவனே மரணம் கண்டு மருகுவான்
உள்ளத்தில் உண்மைக்காக உருகுபவனோ மரணம் கண்டு மலருவான்
அரசனோ அசுரனோ
ராட்ஷஷனோ ரட்சகனோ
மரணம் என்பது மக்கும் உடலுக்கே ஆண்டவன் நாமம் மணக்கும் மனதிற்கில்லை
நாம் இந்த மண்ணில் உதிக்கும்போதும் உதிரும்போது தேவையில்லைநம் அனுமதி
எனவே வருவது ஏதாகிலும் அதனை அனுமதி
கடவுள் நாமத்தை அணுதினம் துதி
அதுவே நம் வாழ்வின் கதி
எண்ணமெல்லாம் இறைவனை இருத்திக்கொண்டால் வாழ்வெல்லாம் வண்ணமாகும்
இதில் இராவணன் என்ன இராமன் என்ன🪐🪐
மலைகள் வாழ்த்தின ... தேவர்கள் தூவினர் ... கந்தர்வர்கள் ஆடினர் ...
பறவைகள் பாடின , விலங்குகள் விலகி வழிவிட்டன ...
தென்றல் தாள் பணிந்தது ... வருணன் பாதம் கோதி விட்டான் ..
அக்னி வாலில் அமர்ந்தது ... வாயு உடலில் சேர்ந்தது ...
மரங்கள் வழி அனுப்பின ... வேதங்கள் கோஷம் போட்டன ...
ஈசன் ஆசீர்வதிக்க ராம நாமம் உதடுகளில் ஓடி வந்து அமர்ந்தது ... 🍇🍇🍇
ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான்
கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)
மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்
ஶ்ரீ ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்
தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது (ராம நாமம் ஒரு வேதமே)
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராமனென்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்
(கம்ப ராமாயணம் –கிஷ்கிந்தா காண்டம், வாலி வதைப்படலம் பாடல் 71)
ராம நாம தாரக மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும் இந்தப் பாடலின் சிறப்பை யாராலும் முழுவதுமாகச் சொல்லி விட முடியாது.
யாரெல்லாம் பாக்கியவான்கள் -very interesting.
God bless
எண்ணற்ற குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பு எனப் போற்றுகிறது ராமாயணம்.
வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், வனத்துக்குச் சென்றான்.
தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயம்.
ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டான். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம்!
அதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி எனப் போற்றுகிறது ராமாயணம்.
இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை சிவபெருமானே உபதேசிக்கிறார் என்பதாக ஐதீகம்!
ராமரை நினைத்தால் போதும்... ராமரை மனதார வணங்கினால் போதும்... நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சந்ததிக்கும் நம் உலகுக்குமே மோட்சம் தந்தருள்வார் ராமபிரான்!
வாழி வாழி வாழி ராமா, வனித ஜானகியும் வாழி
ஆழியேந்தும் கையும் வாழி
அனுஜ லக்ஷ்மணனும் வாழி
அறநெறி பரதன் வாழி
அன்புள்ள சத்ருக்னன் வாழி… (வாழி)
அரசும் வாழ, அயோத்தி வாழ
அந்தணர்தம் வேதம் வாழ
குறைவில்லாத தர்மம் வாழ
கோதண்டமும் வாழ.. (வாழி)
அபிராமர் வருவாரென்று செய்து கொண்டார்
வாசனாதி தைலங்களைக் கேசமதில் தானும் தேய்த்து
பாசமுள்ள தோழியரும் பன்னீரால் ஸ்நானம் செய்தாள்
அகில் புகையால் தலையுலர்த்தி அழகுபட தலையும் சீவி
நடுவதனில் வகிடெடுத்து நகரீகப் பின்னலிட்டார்
தெளிந்து வரும் தலைமயிரை வரிவரியால் பின்னலிட்டு
முடிவதனில் குஞ்சம் வைத்து முழங்கால்வரை தொங்கவிட்டார்
பச்சை வண்ண பட்டதனில் பல வர்ண கரையுமிட்ட
பங்களூர் சேலைதனை மங்கையவள் கைகொடுத்தாள்
இந்த நிறச் சேலையது எந்தனுக்கு பிடித்தமில்லை
என்று சொல்லி ஜானகியும் ஏந்திழைமார் கை கொடுத்தாள்
மஞ்சள் நிறப் பட்டதனில் மகிழம்பூ வேலை செய்த
மாயவரம் சேலைதனை மங்கையவள் கைகொடுத்தாள்
இந்த நிறச் சேலையது மங்கலாக இருக்கிறது
என்று சொல்லி ஜானகியும் ஏந்திழைமார் கை கொடுத்தாள்
ஆகாசக் கலரதனில் ரோஜாப்பு பூக்களிட்ட
ஷோலாப்புர் சேலையதை சுந்தரியாள் கையில் கொடுத்தாள்
இந்த நிறச் சேலையது எந்தனுக்கு பிடித்தமில்லை
என்று சொல்லி ஜானகியும் ஏந்திழைமார் கையில் கொடுத்தாள்
ஸ்ரீராமச் சந்திரனது திருமேனி நிறமுடைய ஜோரான
சேலையதை சுந்தரியாள் கையில் கொடுத்தாள் (இரண்டு முறை)
இந்த நிறச் சேலையதை அன்றொரு நாள் கட்டிக் கொண்டேன்
சொந்தமுடன் ராமர் வந்து என்னை மிகக் கேலி செய்தார்
என்று சொல்லி ஜானகியும் ஏந்திழைமார் கையில் கொடுத்தாள்
எடுத்து வாரும் வேறு சேலை என்றுரைத்தாள் ஜானகியும்
கறுப்பு வண்ணப் பட்டதனில் கரை முழுதும் சரிகை வேலை
திறமையுடன் செய்ததை தேன்மொழியாள்கையில் கொடுத்தாள்
சஞ்சலம் அகன்றிடுமே - (ஸீதா?) (வீண்?)
ராமனைக் கண்ணால் காண்போம் இன்றே
பிறந்த பயன் அடைவோம்
தும்ப்மோடின்பம் கலந்தது ப்ரபஞ்சம்
வெய்யில்லையேல் நிழலில் இன்பமும் உண்டோ
துயரில்லையேம் ராமனை (ஐயனை) நினைப்பாருண்டோ
சோதனைத் தீயில் புடமிடுவாம் - நம்மை
இரங்கி தூக்கி எடுத்தானந்தம் அடைந்திடுவான் - அவன்
நாமாம்ருதம் செவிக்கு திவ்யாம்ருதம் - ராம
ஹரே ராம் ராம் ராம் - சீதா
ஹரே ராம் ராம் ராம்
பாக்யவான் யார்
மனதில் வக்ரம்
வாழ்வை அழிக்கும்
அருமையான விளக்கங்கள்
மரணம் வந்தால் வரட்டும் - இறைவன் இருக்கிறான் - அவன் நம்மை பார்த்துக்கொள்வான் என்று இருந்தால் மரணமும் நம்மைக்கண்டு பயந்து ஓடி விடும்
இன்றைய Corona காலகட்டத்திற்கு ஏற்ற வரிகள்.