பச்சைப்புடவைக்காரி---இன்னாருக்கு இன்னார் என்று
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
இன்னாருக்கு இன்னார் என்று
அம்மா சீதா கல்யாணம் கேள்விப்பட்டிருக்கிறேன் -- ராமரின் தம்பிகளின் திருமணத்தை அதிகம் கேள்விப்படவில்லை -- வால்மீகியாகட்டும் , கம்பர் ஆகட்டும் , துளசி தாசர் ஆகட்டும் சொல்ல மறந்த கல்யாணங்கள் --- அவர்கள் செய்த தியாகங்களும் ஒன்று குறைவில்லையே --- அம்மா தாங்கள் கருணை கூர்ந்து அவர்கள் திருமண வைபவத்தை சொல்ல முடியுமா ?
சொல்கிறேன் ரவி -- ஜானகியின் திருமணம் போல் மிகவும் சிறப்பாக நடந்த திருமணங்கள் தான் அவைகளும் --- ராமர் போல் வில்லை முறித்துதான் ஒவ்வொருவரையும் கை பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை அதே சமயத்தில் வலுக்கட்டாயமாய் நடந்த கல்யாணங்கள் இல்லை அவை .
முதலில் ஊர்மிளாவின் திருமணத்தை பற்றியும் அவள் செய்த தியாகங்கள் பற்றியும் சொல்கிறேன் - பிறகு மாண்டவி திருமணத்தையும் சுருட்கிர்தியின் திருமணத்தையும் பார்ப்போம்
ராமன் அந்த சிவதனுசுவை நெருங்கிக்கொண்டிருந்தான் -- அந்த சிவனும் ராமனை தழுவ முன்னே வந்துகொண்டிருந்தார் -- அங்கே இரண்டு சங்கமங்கள் உண்டாக போகின்ற தருணத்தில் அந்த மிதிலையே மகிழ்ச்சியில் திக்கு முக்காடிக்கொண்டிருந்தது -----
சீதைக்கு ஓவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக சென்றது - ராமா இன்னும் கொஞ்சம் வேகமாக நடையேன் --- அயோத்தி இருக்கும் தொலைவிலா சிவதனுசு உள்ளது?
இதோ பார் என் கையில் வைத்திருக்கும் மாலை உதிர ஆரம்பித்துவிட்டது - உன் கழுத்தில் போடும் போது வெறும் நாராகத்தான் இந்த மாலை இருக்கும் ----பொறுமையுடன் ராஜ பரிபாலனம் செய் --
ஆனால் மெதுவாக நட என்று உனக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள்??
சிவதனுசுவும் ராமனிடம் மீண்டும் பேச ஆரம்பித்தது -- "ராமா --நானே ஓடிவந்து உன் கையில் வந்து அமரவா? என்னை அணைத்துக்கொள்ள ஏன் தாமதம் காட்டுகிறாய் - எனக்கு வந்த பிராத்தனைகள் ஏராளம் --- நான் இன்னும் இங்கு அமர்ந்து இருந்தால் சீதையே ஒடி வந்து நாணேற்றிவிட்டு உன் கரங்களை பற்றி விடுவாள் -
உனக்கு அது அழகா ராமா? - சீதை ஒரு பெண் - அவளிடம் வீரம் இருந்தாலும் அதிகமாக அவளிடம் இருப்பது மென்மை அல்லவோ? ஒரு மென்மையிடம் ஒரு வீரம் தோற்களாகுமா? நீ வேண்டுமானுலும் இப்படி நினைக்கலாம் --- "நான் தான் சீதையுடன் அவளின் ஒரே பார்வையில் தோற்று விட்டேனே! இனி யாரை வென்றாலும் நான் தோற்றதற்கு ஈடு கொடுக்க முடியாதே!"
ஒரு பெண்ணிடம், அதுவும் சர்வ மங்களமும் கொண்ட மஹாராணியிடம் நீ தோற்றது உன் வீரத்திற்கு அழகுதான் --- எந்த ஆண்மகனும் ஒரு பெண்மையின் மென்மையிடம் தோற்றுதான் போக வேண்டும் - அதுதான் உலக நியதி ----
வா ராமா - வேகமாக வா -- என்னை பற்று --- பிறகு மைதிலியின் கரங்களைப்பற்று - உன் வாழ்க்கையை முழுமையாக பண்ணக்கூடியவள் இந்த வைதேகி.. இது இறைவன் உனக்கு கொடுத்த வரம்.
சீதையின் இமைகள் மூட மறுத்தது பின்னால் யாரோ ஓடி வந்து அவளை இறுக்கமாக அனைத்துக்கொண்டனர் -- ஒரு நிமிடம் அது இராமன் தானோ என்று நினைத்தாள் சீதை - அடுத்த வினாடி அது இராமனாக இருக்கக்கூடாதா என்று ஏங்கினாள் - அடுத்த வினாடி அது இராமனாகவே இருந்தால் தான் எப்படி அவனை திருப்பி அணைத்துக்கொள்வது என்ற எண்ணத்தில் மூழ்கினாள் ---
சீதையை கட்டிக்கொண்டவர் ஊர்மிளா -- அவளின் சகோதரி - ஊர்மிளா இல்லாமல் சீதை இல்லை - அவளை பிரிந்து இருந்த நாட்கள் சீதைக்கு இன்னும் பிறவாத நாட்களே!!
சீதை "ஓ நீயா!" - அந்த வார்த்தைகளில் உற்சாகம் இல்லை - உயிர் இல்லை, உணர்ச்சி இல்லை -- ஊர்மிளாவுக்கு புரிந்து விட்டது --- சீதை முன்னே இருந்த நிலையில் இப்பொழுது இல்லை என்று
"என்ன ஜானகி! என்னை ராமன் என்று நினைத்து விட்டாயா? அவனை காணாமல் என்னை கண்டதும் முகத்தில் ஒரு இடமும் பாக்கி இல்லாமல் கேவிக்குறிகளாக இருக்கிறதே! ஏன் சோகமாக இருக்கிறாய்? உன் மீதே உனக்கு நம்பிக்கை எப்படி காணாமல் போனது --- ராமனால் முடியாது என்று ஒன்று இருக்குமானால் அது ஒன்றே ஒன்றுதான் --- கொஞ்சம் நிறுத்தினாள் ஊர்மிளா ----"
சீதை - அதிகமான ஆர்வத்துடன் கேட்டாள் "ஊர்மி! இந்த சிவ தனுசை ராமனால் நாணேற்றமுடியாதது தான் அந்த ஒன்று என்று மட்டும் சொல்லி விடாதே --- இதோ என் உயிர் பாதி பிரிந்து விட்டது - நீ சொல்லப்போகும் விடையில் தான் என் மீதி உயிர் போவதா இல்லை வேண்டாமா என்று முடிவு செய்யும் ...."
சீதையின் நிலைமை மிகவும் சோதனைக்குள்ளாக இருந்தது - ஒரு பக்கம் மெதுவாக நடந்து போகும் ராமன் - இன்னுமொரு பக்கம் ஊர்மிளை சொல்லப்போகும் பதில் -----
"ஊர்மி! என்னை சங்கடப்படுத்தாதே - ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கிறேன் - நீ வேறு இந்த சமயத்தில் என்னை பயமுறுத்துகிறாய் - எந்த ஒன்றை இராமனால் செய்யவே முடியாது? சொல்லு ஊர்மி ----- என் கண்ணல்ல - சொல்லு --"
"ஊர்மி கட கட வென்று சிரித்தாள் -- ரொம்பவும் பயந்து விட்டாயே அக்கா! --- ராமனால் முடியாதது என்று ஒன்று நிஜமாகவே இருக்குமானால் - அது உன்னை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்வது -- உனக்குத்தான் அவன் -- இதோ பார் ராமன் தனுசுவை நெருங்கி விட்டான் --
அங்கே சீதையை குஷிபடுத்த , நம்பிக்கையை ஊட்ட மாண்டவியும் ( பரதனை மணக்கப்போகுபவள் அவள் தங்கை சுருட்கிர்தி (க்ஷத்ருகனனை மணக்கப்போகுபவள் ) இருவரும் ஓடி வந்து விட்டார்கள் - இவர்கள் இருவரும் ஜனகரின் சகோதரர் குஷட்போஜா வின் மகள்கள் . ஊர்மிளா சீதையின் உடன் பிறவா சகோதரி - ஜனகருக்கும் அவர் மனைவி சுனைனா விற்கும் பிறந்தவள் -
சீதையிடம் இருந்த அத்தனை அழகும் , அறிவும் , மங்களமும் , ஜனகரிடம் இருந்த அடக்கமும் பொறுமையும் , எதிலும் அதிக பற்று இல்லாத தண்மையும் இவளிடம் அதிகமாகவே இருந்தது -
ஜனகாபுரியில் ராமன் வருகையை முதலில் பார்த்தவள் ஊர்மிளை தான் - கொஞ்சமும் யோசிக்காமல் இந்த அழகன் சீதைக்குத்தான் என்று சீதை நினைக்கும் முன்னமே விட்டு கொடுத்தவள் -- .
இளவளின் மீது கவனம் சென்றது அவளுக்கு --இளவளும் ஊர்மிளையை நோக்கினான் - அவள் முதல் பார்வையே லக்ஷ்மணனை மூர்ச்சையாகி விட்டது - சஞ்சிவ் மலை இல்லாமலே இன்னமொரு கணிவான பார்வையால் ஊர்மிளை லக்ஷ்மணனை எழுப்பிவிட்டாள் --
எதிலும் எப்பொழுதும் சந்தேகப்படும் லக்ஷ்மணன் -- இப்பொழுது நான் பார்த்தது அண்ணனின் சீதையாக இருக்குமோ - தவறாக எனக்கு வரப்போகும் அண்ணியை பார்த்துவிட்டேனோ --- ஐயோ தெரியாமல் தப்பு செய்துவிட்டேனே - அண்ணா என்னை மன்னித்துவிடு -- என்று புலம்ப ஆரம்பித்தான் --
அவனின் தர்ம சங்கடத்தை புரிந்துகொண்டாள் ஊர்மிளை - லட்சுமணனின் காதுகளில் விழும் மாதிரி சொன்னாள் " அக்கா சீதே! அங்கே தூர நின்று கொண்டு யாரைப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் - இதோ உன் தங்கை ஊர்மிளை கேட்கிறேன் - சொல் அக்கா!!!"
லக்ஷ்மணனுக்கு உயிர் வந்தது - எப்படிப்பட்ட ஞானம் உடையவள் இவள் - என்னால் இவள் கரம் பிடிக்க முடியுமா? இவளை அடையவும் இந்த ஜனக மஹாராஜா வேறு ஏதாவது ஒரு சின்ன சிவதனுசுவை வைத்திருக்கிறாரா??
என் அண்ணா அந்த பரமேஸ்வரனை தியானித்து சொல்லும் ஸ்லோகங்கள் அனைத்தும் எனக்குத் தெரியாதே - அந்த மகேஸ்வரனை நான் எப்படி திருப்தி செய்வேன் - என் தந்தை சொல்லியிருக்கிறார் - ஓம் நமசிவாய என்று சொன்னால் போதும்- அந்த ஈசன் ஓடி வந்துவிடுவான், அவனை கவர வேறு மந்திரங்களோ, ஸ்லோகங்களோ தேவையே இல்லை என்று -- இப்படி தனக்குள் சொல்லிக்கொண்டு ஓம் நமச்சிவாய என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தான்...
லட்சுமணனின் வேதனைகளை புரிந்துகொண்டாள் ஊர்மிளை --- நமசிவாய என்று சொல்லட்டும், அதை நாம் தடுக்க வேண்டாம் ---ஆனால் தேவையில்லாத சந்தேகங்களை அவர் மனதிலிருந்து நீக்கியே ஆகவேண்டும் -என்று சொல்லிக்கொண்டு -- சீதையுடன் லக்ஷ்மணன் கேட்கும் படி உரக்க சொன்னாள் " மைதிலி அக்கா! நானும், மாண்டவியும்,சுருட்கிர்தியும் நம் தந்தை ஜனகருக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும் --- ஏன் தெரியுமா ? ஒரே ஒரு சிவ தனுசுவை மட்டும் போட்டிக்கு வைத்திருக்கிறாரே - இன்னும் மூன்று இருந்தால் - எங்களுக்கெல்லாம் இந்த பிறவியில் திருமணம் நடந்திருக்குமா ??
சீதை திருப்பி கேட்டாள் "ஊர்மி! இந்த சிவதனுசை நாணேற்றித்தான் ஒருவன் தன் வீரத்தை நிரூபிக்கவேண்டுமா? உன் பார்வை என்ற சிவதனுசை நாணேற்ற என் ராமனின் தம்பி லக்ஷ்மணன் இருக்கிறான் -- வீரமே இல்லை எந்த ஆடவருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடாதே - என் ராமன் நாணேற்றட்டும் - பிறகு பார் உங்கள் எல்லோர் வாய்களுக்கும் பூட்டு போட்டு விடுகிறேன்!.”
ஊர்மிளாவுக்கு சீதையின் காதுகளில் தான் சொன்னது விழுந்ததா என்ற கவலையே இல்லை -- சீதை சொன்ன பதிலும் அவள் காதுகளில் விழவில்லை --லக்ஷ்மணன் கேட்டானா நான் சொன்னதை என்பதில் தான் முழு கவனமும் இருந்தது - அவன் அதைக்கேட்டான் என்று அவன் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் மீண்டும் சீதையை ஆரத் தழுவிக்கொண்டாள் --------
ஊர்மியின் மனமும் லட்சுமணனின் மனமும் ஒரு சிவதனுசு இல்லாமல் இருவர் பார்வை பரிமாற்றங்களில் நாணேற்றப்பட்டு அடுத்த கட்டத்திற்கு காத்துக்கொண்டிருந்தன.
அதிகமாக பேசும் ஊர்மிளா அன்று தன் மீன்களான கண்களை ஒரே இடத்தில் நிறுத்தி லக்ஷ்மணன் என்னும் தூண்டிலில் தானாகவே விழுந்து கழுத்தில் மாலையாக விழப்போகும் வலைக்காக காத்திருந்தாள் -- லக்ஷ்மணனனும் தன் பிறவி சகோதரர்களான முன்கோபத்தையும் , சந்தேகம் படும் மனத்தையும் அன்று அவனை விட்டு அகல உத்தரவிட்டான் - வேண்டா வெறுப்பாக அவைகள் அன்று அவனை விட்டு விலகின ....
சர்வ லக்ஷ்ணமும் பொருந்தி இருக்கும் இந்த இரு சகோதர்களும் ஜனகரின் மாப்பிள்ளைகளாக ஆனது ஒரு புறம் இருக்கட்டும் -- நகமும் சதையுமாக எங்கள் இருவருடன் வளர்ந்த மாண்டவிக்கும்,சுருட்கிர்திக்கும் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கவேண்டுமே - தான் தினமும் வணங்கும் அந்த ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை மனமார வேண்டிக்கொண்டாள் ....
திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான கட்டம் - எப்படியோ ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்து, பெரியவர்களாக மாறுகிறோம் --- திருமணம் என்ற ஒன்று ஆனவுடன் நம்முடன் கூடப்பிறந்தவர்கள் தூரத்து உறவினர்களாகி விடுகிறார்கள் - கணவனும் அவனின் குடும்பம் தான் நம் முழு கவனத்தையும் பெறுகிறது ----
தாயே! கருணா ரஸ சாகரமே! எங்கள் விஷயத்தில் எங்களை பிரித்து விடாதே! கடைசி மூச்சு இருக்கும் வரை நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்க வேண்டும் - எங்கள் இருவருக்கும் இந்த பாக்கியத்தை நான் கேட்க்காமலே கொடுத்து விட்டாய் - என் சகோதரிகளான மாண்டவிக்கும், சுருட்கிர்திக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும் படி அருள் செய்யம்மா!!!
நான் சிரித்தேன் ---பிறருக்காக வேண்டும் எவருக்கும் என் கருணை என்றும் கேட்காமலேயே கிடைத்துவிடும் ஊர்மிளா, கவலையை விடு!!-- என்று சொல்வதைப்போல ஒரு புன்னகையை உதிர்த்தேன் ----
ஊர்மிளா லக்ஷ்மணனுக்காக பிறந்தவள் ---- அவள் செய்த தியாகம் மிக அதிகம் அற்புதம் ..... சீதையைப்போல் லக்ஷ்மணனனை தொடர்ந்து காட்டுக்கு போகவில்லை ---எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.
ஊர்மிளாவிடமிருந்தே பல விரதமுறைகளையும், சுமங்கலித்துவம், கணவன் மற்றும் குடும்பங்களை காக்கும் ரட்சா காப்பு சக்திகளை அடையும் வழிமுறைகளையும் சீதை கற்றாள். அப்படி ஊர்மிளா சொல்லித்தந்த விரதமுறைகளே அசோகவனத்தில் சீதைக்கு அரணாய் நின்று அவளை காத்தது.
சீதை அக்னிப்பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளாவின் கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச்சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், சீதையால் அதை மீற முடியுமா?!
பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப்பட்டதால்தானே ராமன் பேசாமல் இருந்துவிட்டான். அதனால்தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். சீதா-ஊர்மிளாவின் தாய் தந்தையர் திருமணம் செய்வித்து கொடுத்ததோடு சரி. ஒருமுறைகூட அயோத்திக்கு வந்து எப்படி மகள்கள் இருக்காங்கன்னு பார்க்கவே இல்ல. அதனால் சீதை உட்பட மற்ற சகோதரிகளுக்கும் தாயாய் ஊர்மிளா இருந்தாள்.
இராமன் விஷ்ணுவின் அவதாரம், சீதையோ, இலட்சுமியின் அவதாரம், இலட்சுமணனோ ஆதிசேஷனின் அவதாரம். அவர்கள் தங்களின் கடமையை செய்வதற்காக செய்த தியாகங்களை காட்டிலும் மனித பிறவியான ஊர்மிளா தன் கணவர்மீது கொண்ட காதலுக்காக செய்த தியாகம் மிகப்பெரியது. அந்த 14 ஆண்டுகளும் அரண்மனையின் எந்தவித சுகபோகங்களையும் அனுபவிக்காமல் தன் கணவரை போலவே விழித்திருக்கும் நேரத்தில் வனவாச வாழ்க்கையே வாழ்ந்தார் ஊர்மிளா. இராமன் மற்றும் சீதாவின் காதலுக்கு எந்தவிதத்திலும் குறையாத காதல் இலட்சுமணன் மற்றும் ஊர்மிளாவிற்கு இடையேயான காதல்.
ராமாயணத்தில் மனைவிக்கான கடமை, தாய்க்கான கடமை, மகன், சகோதரன், தலைவன், குரு, நண்பன்.. என அனைவருக்குமான கடமை சொல்லப்பட்டிருக்கு. ஆனால் மனைவிக்கான கணவனின் கடமையை எந்த இடத்திலு சொல்லப்படவே இல்லையென சீதை பூமிக்குள் புதையுண்டபின் அழுது அரற்றி ராமனிடம் வாதிடுகிறாள்.
14 வருடங்கள் அவள் தன் இளமைக்கு தானே தண்டனை கொடுத்துக்கொண்டாள் தானும் காட்டுக்கு சென்றிருந்தால் லக்ஷ்மணனால் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் சரியாக சேவை செய்திருக்க முடியாது
லக்ஷ்மணனை அவள் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவில்லை - அவள் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை --- அவனை அனுப்பிவிட்டு ஒரு துறவியாக 14 வருடங்கள் என்னை பூஜை செய்துகொண்டிருந்தாள் --- ஓடி ஆடி மிதிலாபுரியே சந்தோஷத்தில் மூழ்க அடித்தவள் ஒரு துறவியாக 14 வருடங்கள் தவம் இருந்தாள் ---
சிலரின் மௌனமான வாழ்க்கை பலருக்கு உதவும் இசைக்கருவிகளாக இருக்கின்றன ---- ராமன் எனும் புல்லாங்குழல் சீதை எனும் கீதம் எழுப்ப காற்றாய் இருந்தாள் ஊர்மிளை லக்ஷ்மணன் எனும் அடர்ந்த காட்டில்
பரதன் பாதுகைகளை வைத்துக்கொண்டு பூஜை செய்தான் ஆனால் ஒன்றுமே இல்லாமல் 14 வருடங்கள் லக்ஷ்மணனனையே நினைத்துக்கொண்டு வாழ்ந்தாள் - இவள் தியாகம் ராமாயணத்தில் யாருமே செய்யவில்லை ரவி
நாளை மாண்டவியின் சிறப்புக்களையும் அவள் செய்த தியாகங்களையும் பார்ப்போம் ---
அம்மா --- பெண்கள் செய்யும் தியாகங்கள் கடலில் இருக்கும் ஆழமான முத்துக்கள் போல ..... பலருக்கு பாராட்ட நேரம் இல்லை , பலருக்கு பொறுமை இல்லை --- சிலருக்கு மட்டுமே தெரியும் அவர்களது தியாகங்கள் எங்கோ சரித்திரத்தில் ஏதோ ஒரு மூலையில் செதுக்கப்படுகின்றன ...
உண்மை ரவி --- உயர்ந்தவள் உயரே சென்றாள் - தாழ்ந்தவன் தரையில் விழுந்து அழுதேன்
Comments
சேர்த்து வைக்கும் சொத்து மதிப்பிழந்து போனது ...
உறவுகளின் அருமை புரிந்தது ... உடல் தீயை வெறுத்தது ...
உள்ளம் உனை நினைத்தது ... வாழ்வின் அர்த்தம் புரிந்தது ...
எதற்கு வந்தோம் என்று தெரிந்தது ... காஞ்சியை நோக்கி கால்கள் நடந்தது
கருணை வெள்ளம் தெரிந்தது ... கண்கள் அதில் நனைந்தது ...🍇🍇🍇
சேர்த்து வைத்த செல்வம் சிரிக்கிறது நம்மை பார்த்து ...
கூட வருவேன் என்றே நினைத்தாயோ ? கூடி வாழ்வோம் என்றே கனா கண்டாயோ ...
புண்ணியங்கள் ஏதும் சேர்க்காமல் புவியில் அழியும் பொருள் அதை சேர்த்தாய் ...
தொடக்கூட முடியாமல் தொற்று நோய் தொடர்கிறது ...
சாயியை நினைக்காமல் வாழ்ந்த வாழ்க்கை போதும் இனி ...
தொட்டாலும் திட்டாத தெய்வம் அவன் ... தொடர்ந்து வந்திடுவான் கூப்பிடாமல் அவனை ... 🍓🍓🍓
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு எடுத்துக்காட்டு கீழ்க்கண்ட வரிகள்...
ராமன் எனும் புல்லாங்குழல் சீதை எனும் கீதம் எழுப்ப காற்றாய் இருந்தாள் ஊர்மிளை லக்ஷ்மணன் எனும் அடர்ந்த காட்டில்*....
அமர்க்களம்... அட்டகாசம்.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு எடுத்துக்காட்டு கீழ்க்கண்ட வரிகள்...
ராமன் எனும் புல்லாங்குழல் சீதை எனும் கீதம் எழுப்ப காற்றாய் இருந்தாள் ஊர்மிளை லக்ஷ்மணன் எனும் அடர்ந்த காட்டில்*....
அமர்க்களம்... அட்டகாசம்.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏
ஊர்மிளாவின் தியாகம்
ராமாயணம் ஒரு அற்புதம்
சீதை லலிதா ததிரிபுரசுந்தரியை
வேண்டிக் கொள்ளுதல்
அருமையாண கற்பனை
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹
👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐
ஞானம் பின் தொடர , தன்னடக்கம் சிறகாக மாறியது ....
பண்பும் பக்தியும்
முகிலாகத் தொடர்ந்து வர , மும்மூர்த்திகள் வாழ்த்துரைக்க ,
புஷ்பங்கள் பாதை போட வானவில் கோலம் போட , தென்றல் தேன் மழை தூவ வாயுமைந்தன் வான வெளி கண்டான் ...
தாயின் கண்ணீரை துடைப்பவன் என்றும் தாழ்வதில்லை எனும் புதிய தாரக மந்திரம் படைத்தான் .
அன்னையின் துயர் துடைப்பவன் அழிவதில்லை பூமியில் எனும் சீதை ஒன்றை கீதையாக்கினான் ...
வியாசர் படைக்க சுகர் பரப்ப பாகவதம் வளர்ந்தது அங்கே .... அனுமன் படைக்க வால்மீகி பரப்ப ராமனின் நாமம் உயர்ந்தது இங்கே ... 🍇🍇🍇
சில கோயில்களில் அனுமார் பஞ்சமுகத்துடனும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர் பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே.
உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் தன்னுடைய சகோதரனான அகிராவணனிடம் இதைப் பற்றி கூறினான். தான் நிச்சயம் இராமனையும் இலக்குவனையும் கடத்திச்சென்று பாதாள உலகத்தில் சண்டிதேவிக்கு பலியிடுவேன் என்று சகோதரனுக்கு வாக்களித்தான்.
விபீஷணன் உருவத்திற்கு மாறினான் அகிராவணன். இராமனையும் லக்ஷ்மணனையும் மயக்கத்தில் ஆழ்த்தி பாதாள உலகிற்குத் தூக்கி சென்றான். சற்று தாமதமாக விபீஷணன் மூலம் விவரமறிந்த அனுமன் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி இராமனைக் கடத்தி சென்றதினாலும் கடும் கோபமடைந்தார். அகிராவணனைக் கொன்று ராமனை மீட்பேன் என வானரப்படைகளுடன் பாதாளம் நோக்கிப் புறப்பட்டார்.
(இராவணனால் அனுமானின் வாலில் மூட்டப்பட்ட தீயானது இலங்கையையே தீக்கரையாக்கியது. அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாத அனுமார் ஒரு பெரிய நீர் நிலையில் மூழ்கி உஷ்ணத்தைக் குறைத்துக் கொண்டார். அப்பொழுது உஷ்ணத்தால் வெளிவந்த உயிரணு, 'மகர்' என்னும் பெண் மச்சத்தின் உடலுக்குள் சென்றது. மகர் கருவுற்று ஒரு புத்திரனை ஈன்றது. அவனே மகரத்வஜன்.
செய்யுங்கள் அல்லது திரும்பி செல்லுங்கள்' என்றான்! வேறு வழியின்றி தந்தையும் மகனும் போரிட்டினர். மிகத் தீவிரமாக நடந்த சண்டையில் யார் வெல்வார் என வானரப் படை பயந்தது.அனுமன் தன் பலத்தைப் பலமடங்காக்கி இறுதியில் மகரத்வாசனை தோற்கடித்தார். அனுமன் தனியாகப் பாதாள அரண்மனையின் உள்ளே சென்றார்.
அடுத்த கணமே அகிராவணனின் மாயசக்தி குறைந்தது, ஒரே வீச்சில் அவன் உயிர் பறித்தார் ஆஞ்சநேயர். இராமனையும் லக்ஷ்மணனையும் மீட்டு விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். ராம பக்தன் என்பதையும் நிரூபணம் செய்தார்.
பஞ்சமுக ஆஞ்சநேயருக்குப் பல இடங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மந்திராலயம் சமீபத்தில் உள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் விசேஷமாக்க கருதப்படுகிறது. காரணம் என்ன? ஸ்ரீ ராகேந்திரர் இங்கே 12 வருட காலம் கடும் தவமிருந்தார். அப்பொழுது ஸ்ரீ ஹனுமானின் பஞ்ச முகம், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வராகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி , ஸ்ரீ கருட வாகனத்துடன் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரருக்கு இந்தத் தலத்தில் காட்சி கொடுத்ததாக்க கூறப்படுகிறது. இதற்குப்பிறகே ஸ்ரீ ராகவேந்திரர் மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்தார் எனக் கூறப்படுகிறது.
ஹனுமத் ஜெயந்தி அன்று ஸ்ரீ அனுமான் சலீஸா படிப்பது மிகவும் மேன்மையைத் தரும். பல மடங்கு பலனைத்தரும். வேண்டிய சௌபாக்கியத்தினைத் தரும்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’
கொண்டாள் இராமனை பேதையாய்
நடந்தாள் இராமனின் பாதை
புருவமே வில்லாய்
பார்வையே அம்பாய்
காதலே அதன் தெம்பாய்
சென்றது இராமனை
வென்றது இராமனின் இதயத்தை
கண்களால் கடிதம் எழுதினர் இருவரும்
காதலுக்கு கிடைத்த இரு வரம்
வில்லை முறிப்பானா என் அன்பை பறிப்பானா
என்னை அவன் தரிப்பானா
என
சீதை சிந்தை எல்லாம் இராமன் எனும் விந்தை
அவளை கொன்றது பயம் எனும் நிந்தை
சீதையின் தேவை பூர்த்தி செய்ய இராமன் மட்டுமே சந்தை
இராமனோ
சீதையை கண்டவுடன் பாதை புரியவில்லை
சீதைதான் என் கோதை என்று பேதையானான்
அவள் அன்பால் போதையானான்
மறுபுறமோ
இலக்குவன் இலக்காய் ஊர்மிளை
இருவருக்குள்ளும் அன்பு இலை மறைக்காய்
இருவர் பார்வையும் இமைக்க மறக்க
கண்களில் காதல் பறக்க
இருவரும் அழகாய் சிரிக்க
அன்பு அமுதாய் சிறக்க
இலக்குவன் கோபம் தாபமானது
சந்தேகம் சந்தோஷமானது
சீதைக்கு தாய் போல் இருந்த ஊர்மிளை இராமனுக்கும் தாயாவாள் எனத் தெரியாமல் இருந்தான் இலக்குவன்
ஜனகனின் அரண்மனை அன்பால் நனைந்தது
அன்பு பால் கரைந்தது
ஊர்மிலையின் உறுதி சீதைக்கு இல்லை
காரணம் இப்போது அவள் சீதையாய் இல்லை
இராமனை மணப்போமா இல்லை மறந்து மரணிப்போமா
ஏதும் தெரிகிலாது தேம்பிக் கொண்டிருந்தாள்
இராமனும் அப்படியே
நடப்பதையும், நடக்கபோவதையும் எண்ணி நடுங்கிக் கொண்டிருந்தான் நாராயணன்
ஒருபுறம்
இராமன் சீதை
மறுபுறமோ
இலக்குவன் ஊர்மிளை
அன்பு ஆறாய் ஓடினாலும்
வம்பு ஏதாவது வந்துவிடுமோ என வியர்த்து நின்றார்கள்
இதையெல்லாம் கண்ட சிவனோ
சற்றே சிரித்தான்
அவர்கள் அன்பை ரசித்தான்
இராம, இலக்குவனின் அழகிய அவஸ்தையை புரிந்தான்
இருவரின் பிரார்த்தனைக்கு இறங்கினான்
சிவதனுசுவிற்கு விடுதலை விடுத்தான்
தன் தங்கைகளுக்காக தனுசுவை தியாகம் செய்தான்
சிவதனுசோ
இராமனின் பரிச்சியமே
இப்பிறவியின் பிராயசித்தம் என பரவசமாய் இருந்தது🏹🏹
தன்னுயிர் காக்காமல் தமிழ் உயிர் காக்க நீந்தி சென்று தமிழ்நீதி காத்தவர் உ. வே. சா
நீங்களோ
பணிநிமித்தத்தால் பலமொழி பயின்றாலும் தமிழன் எனும் தனித்துவம் காக்கும் தமிழ் தவம் செய்யும் தமிழ் நீங்கள்
தமிழ் ஓலை சுவடியெல்லாம் சேர்த்து தமிழ் மாலை செய்த தமிழ்மாமலை அவர்
வேளா வேளைக்கு வேலை செய்தாலும் காலையும் மாலையும்
தமிழுக்கு மாலை கட்டும்
தமிழ்மலை நீங்கள்
ஓடுவது ஊர்தியென்றாலும் உள்ளிருந்து ஓட்டுவது எரிபொருளே
அதுபோல
எழுதுவது நானாக இருந்தாலும்
என்னுள் எரியும் பொருளாக இருப்பதும், இயங்குவதும் உங்களின் படைப்பே
பச்சைப் புடவைக்காரி கைபிடித்து நடக்கிரீர் நீங்கள்
உங்கள் கவிதை எனும் கைபிடித்து அதன் மெய் பிடித்து நடப்பது நான்
நான் எனும் நாண் ஏற்றி நற்றமிழ் ஊற்றும் ஊற்று நீங்கள்
என் தமிழின் சுவாசக் காற்று நீங்கள்
நான் இன்றைய உ.வே.சா எனும் உங்கள் உறவினர். *உரிமை தருவீரா* தினமும் உயிர்பிக்கும் தமிழே📖
🙏🙏🙏🙏