பச்சைப்புடவைக்காரி -- அழியாத கோலங்கள்
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
அழியாத கோலங்கள்
மிதிலையே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. திடுக்கென்று ஒரு லேசான இன்ப அதிர்ச்சியுடன் மக்கள் மனம் பூராவும் ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராத வகையில் பனித்துளி ஒன்று திறந்த மார்பில் பட்டால் சிலிர்க்குமே, அந்த உணர்வு.
இயற்கைக்கு முரணான இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? ஒட்டு மொத்தமாக அனைத்து உயிரினங்களுக்குமே மனம் உற்சாகமாகத் துள்ளும்படியாகச் செய்தது எது?
அதற்குக் காரணமானவனான, அப்போது அந்த ஜனகபுரிக்குள் தன் பொற்பாதங்களைப் பதித்த, ராமனுக்கே அது தெரியாது. மாமுனிவர் விஸ்வாமித்திரர் முன்னே செல்ல, அவர் வழிகாட்டலில் அவருக்குப் பின்னால் அமைதியாக ஆனால், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் ராமன்.
இவனுக்குப் பின்னால் சுற்றுமுற்றும் பார்த்தபடி, அண்ணனுக்கு எத்திசையிலிருந்தும் எந்தத் தீங்கும் நெருங்கிவிடாதபடி, பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தான் லட்சுமணன்.
அந்தப் பகலிலும் பளிச்சென்று ஒரு நிலவு தென்பட்டது ராமனுக்கு. சற்றே தலைதூக்கி, நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட அவனது பார்வையில் பட்ட அந்த நிலவும் சட்டென மேலும் ஒளிர்ந்தது.
நான்கு விழிகளின் பார்வை சந்திப்பில் இரு மனங்கள் ஒன்றாகிவிட்ட அதிசயம் அங்கே நடந்தது. அதுதான் முதல் பார்வை. சந்திப்புகூட இல்லை. ஆனாலும், என்னவோ பூர்வ பந்தத் தொடர்புபோல மனங்கள் மட்டும் கலந்துவிட்ட அற்புதம் அங்கே நிகழ்ந்தது. அவள், பெண்மையின் இயற்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
ஆனாலும், உப்பரிகையிலிருந்தபடி அவள் அப்படிச் செய்ததால் அந்தத் தாழ்ந்த பார்வையும் அவனைச் சுற்றியே வேலியிட்டிருந்தது. சாலையில் தொலைதூரத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவளுக்கு அவன் நெருங்கி வரவர, அதனால் விரிந்த அவள் விழிகள் தாழ, அப்போதும் அவன் அவள் பார்வைக்குள்ளேயே சிறைபட்டிருந்தான்.
ராமனும் அவளுடைய பார்வை கொக்கியில் தன் பார்வை சிக்கிக் கொண்டுவிட்டதை அறிந்தும், அதிலிருந்து மீளமுடியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.
எல்லாம் அறிந்த முனிவரோ மெல்லிய புன்னகையுடன் வேகமாகவே போய்க் கொண்டிருந்தார். ராமனுக்கும் தவிப்புதான், அவருடைய அடி ஒற்றியே போக வேண்டியிருந்ததால் அவருடைய வேகம் அவனுக்கு மனவருத்தத்தைத் தந்தது. மெதுவாகப் போகமாட்டாரா இவர்? அந்த உப்பரிகையை வேகமாகக் கடந்து விடுவோம் போலிருக்கிறதே. கட்டாயப்படுத்தி பார்வையை விலக்கிக் கொள்ளத்தான் வேண்டுமா?
கால்கள் மேலும் நடக்க மறுத்தன -- அழகே மொத்த குத்திகையும்
எடுத்துக்கொண்டதைப்போல் உப்பரிகையில் மைதிலி நின்று கொண்டிருந்தாள் ---
ஆயிரமாயிரம் பேர்கள் நடந்து செல்லும் அந்த அரண்மனை சாலையில் அவள் ஒருவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ------
கால்கள் முன்னே நடந்தாலும் ராமனின் கண்கள் மட்டும் பின்னே நடந்துகொண்டிருந்தது - பார்த்த அழகை ஆராதித்துக்கொண்டிருந்தான் ராமன் ...பார்த்த கண்கள் பரிதவித்தன ---
பரந்த உள்ளங்கள் மஞ்சம் விரித்துக்கொண்டிருந்தன ---
இவன் தான் இனி எனக்கு என்றாள் வைதேகி --இவள் இல்லையேல் என் உயிர் இல்லை என்று சொல்லிக்கொண்டான் ராகவன்.
அம்மா தாங்கள் சத்துருகன் திருமணத்தை அல்லவா இன்று சொல்வதாக இருந்தீர்கள் - மீண்டும் ராகவனிடமே சென்று விட்டீர்களே ---
ரவி அனைவருக்கும் மூலம் ராமன் --- எங்கே ஆரம்பித்தாலும் அது அவனிடமே போய் சேரும் ----
இன்னும் கேள்..
சீதையின் இதயம் அங்கே அவ்வளவு காவலர்கள் இருந்த போதும் திருடு போய்விட்டது - இதை அறிந்தவள் சுருதகிருதி --
குசத்துவஜன் (Kushadhwaja), மிதிலை நாட்டு மன்னர் ஜனகரின் இளையதம்பி . இவரின் மனைவி சந்திரபாகா . குசத்துவஜரின் மகளான மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி .....
சுருதகிர்தி மற்ற சகோதரிகளைப்போல் மிகவும் அழகானவள், புத்திசாலி, எதையும் ஆலோசித்து விட்டுத்தான் ஒரு முடிவுக்கு வருவாள் -
பேச வேண்டிய இடத்தில், பேச வேண்டிய வார்த்தைகளை முன்னதாகவே சரியாக அளந்து, மற்றவர்களுக்கு " இதைத்தான் எதிர்ப்பார்த்தேன் " என்று சொல்லும் அளவிற்கு திறம்பட பேசுபவள் --
வாள் சண்டை, குதிரையேற்றம், நீச்சல், மல் யுத்தம் போன்ற ஆண்களுக்கே சொந்தம் என்று கருதிக்கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் ஒரு பெண்ணாலும் இவைகளை எளிதாக செய்ய முடியும் என்று நிரூபித்தவள் -
இதைத்தவிர தன் அக்கா மாண்டவியைப்போல் இசையிலும் முழு பயிற்சி பெற்றவள் - சீதை சுருதகிர்தியிடம் தான் அதிகமாக உரிமை எடுத்துக்கொள்வாள்
சுருதகிர்தி சொன்னாள் "மாண்டவி, ஊர்மிளா அக்கா, நம் அப்பா- குஷட்போஜாவும், ஜனகர் பெரியப்பாவும் பேசிக்கொண்டிருந்ததை தற்செயலாக கேட்டேன் -
மாண்டவி உடனே ஊர்மிளாவிடம் - ஒட்டு கேட்டேன் என்று சொல்லாமல் எப்படி நாசுக்காக சொல்கிறாள் சுருதகிர்தி - பார்த்தாயா?? " என்றாள்.
உடனே ஊர்மிளா - இப்படி நீ குறுக்கே பேசினால் அவள் சொல்ல வந்ததை சொல்லாமலே போய் விடுவாள் - கேட்போம் அவள் சொல்வதை ----- "கிர்தி! நீ சொல் - அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் ----?
ஜனகர் பெரியப்பாவை , அப்பா உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் போது சொன்னார் -- "அண்ணா --- ராமனால் மட்டுமே இந்த சிவதனுசுவை உடைக்க முடியும் -- தையிரயமாக இரு - உன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக்கொள் -
நம் குழந்தைகள் அனைவரும் ராமனைப்பார்க்க தவறி உன்னையே பார்த்துக்கொண்டு உற்சாகமே இல்லாமல் உப்பரிகைகளில் அமர்ந்து இருக்கிறார்கள் --- உன் கண்ணீரை அவர்கள் பார்த்ததே இல்லை - இனியும் பார்க்கக்கூடாது ---
இந்த இரண்டு ராஜ குமாரர்களை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது -- ஊர்மிளாவை அவன் தம்பி லக்ஷ்மணனுக்கு மணம் முடித்து விடலாம் --- உனக்கு சம்மதம் தானே ??? " ஜனகர் துள்ளி குதித்தார் - நான் நினைத்தேன், நீ சொல்லி விட்டாய் - என்ன இருந்தாலும் ஊர்மிளாவையும் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் - அவள் மனதில் வேறு ஆசைகள் இருக்கலாம் அல்லவா??
அதற்கு பிறகு என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை - சந்தோஷத்தில் ஊர்மிளா அக்காவிற்கு இந்த நல்ல செய்தியை சொல்லலாம் என்று ஓடி வந்தேன் - இந்த நெஞ்சை திருடிய கள்வன் ராமனின் தம்பி லக்ஷ்மணன் தானே அக்கா??? "
உள்ளுக்குள் சந்தோஷம் வந்தாலும் அதையும் மீறி ஊர்மிளாவின் கண்களில் கண்ணீர் பெருகி அவள் நின்று கொண்டிருந்த உப்பரிகையை நனைத்தது......
கிர்தி உன்னால் எப்படி எப்பொழுதும் கலகலப்பாய் இருக்க முடிகிறது - மற்றவர்கள் எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும் என்றே எப்படி எப்பொழுதும் நினைக்கத் தோன்றுகிறது - உனக்கு என்று ஆண்டவனிடம் ஒன்றுமே வேண்டிக்கொள்ள மாட்டாயா ....
ஊர்மிளா அக்கா --
-- வாசனைத் திராவியங்கள் நம்மை சுற்றி இருந்தால் அந்த நறுமணம் நம்மீதும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் அதுபோலத்தான் -
நம்மை சுற்றி எல்லோரும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் நம்மையும் அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் - நாம் அதை தேடிப்போக தேவை இல்லை ...
திகைத்துப்போனாள் ஊர்மிளா - இப்படியும் ஒரு பெண்ணா என்றே!!
ஊர்மிளாவிடம் சொன்னாள் கிர்தி -
அக்கா நீங்களும் நானும் விசேஷதரதர்மத்தை பின்பற்றுபவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்.
ஊர்மிளா கேட்டாள் --- அது என்ன அம்மா விசேஷதர தர்மம் - கேள்விப்பட்டதே இல்லையே ----
சொல்கிறேன் அக்கா பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம்.
உங்கள் லக்ஷ்மணனும் என் சத்ருகனனும் பாகவத உத்தமனாகிய ராமனுக்கும் ,பரதனுக்கும் தொண்டு செய்தே கரையேறி விடப்போகிறவர்கள் . அடியவர்களுக்கு தொண்டு செய்வதுதான் பெரும் பாக்கியம் ஊர்மிளா அக்கா ...
நாட்கள் ஓடுகின்றன
பரதன் சதுர்கனனிடம் சொல்கிறேன் -- தம்பி நான் அயோத்திக்குள் வரமாட்டேன் 14 வருடங்கள் நான் ராமன் கொடுத்த பாதுகைகளைக்கொண்டு அவன் சார்பில் அயோத்தியை பார்த்துக்கொள்கிறேன் --- நீ அயோத்தி சென்று அரசாட்சியை மேற்கொள் ..... உனக்கு எந்த தடையும் இல்லை - உன்னை வெறுப்போர் இல்லை , கண்டு மிதிப்போர் இல்லை அங்கே
மிகுந்த மனக்குழப்பத்துடன் சத்ருகன் வருகிறான் -
எதிரே சுருதகிர்தி -----
லக்ஷ்மணனுக்கு சாபம் இல்லை --- அவன் இங்கே இருந்திருக்கலாமே ஏன் ராமனுடன் காடு சென்றான் ? அண்ணனனுக்கு சேவை செய்ய -
நீங்கள் இருவரும் இரட்டையர்கள் - அதே ரத்தம் உங்கள் உடம்பிலும் ஓடும் போது ஆயிரம் ராமனானாலும் ஈடு கொடுக்க முடியாத பரதனுக்கு சேவை தாங்கள் தானே செய்ய வேண்டும் --
அது நம் இருவருக்கும் கிடைத்த வரம் அல்லவா? --- 14 வருடங்கள் முடிந்து ராமன் வரவில்லையென்றால் பரதண்ணா ஆத்ம தியாக செய்வதாய் உள்ளான் - மன உளைச்சல்கள் அதிகம் உள்ளவன் பரதண்ணா ---
அவனுக்கு நீங்கள் தான் தாயாக அருகில் இருந்து மனோதயிரயம் தரவேண்டும் ---
பாவம் பரதண்ணா --- தந்தையால் சிதை மூட்டும் பாக்கியம் கிடைக்கப்பெறாதவன் --- தாய் அழியாத அவமானத்தை அவனுக்கு கொடுத்துவிட்டாள் --- நீங்கள் தான் அண்ணாவின் தாய் தந்தை ....
சுருதகிர்தி - உன்னை அடைய என்ன பாக்கியம் செய்தேன் ? என் கடமையை சரியான நேரத்தில் நினைவு படுத்தினாய் --- இனி பரதண்ணாவிற்கு இனி நான் தான் பாதுகாப்பு - அதனால் -----
புரிகிறது நாதா --- நீங்கள் இருவரும் 14 வருடம் உங்கள் இளமையை தியாகம் செய்ததை நாங்களும் செய்கிறோம் -
பெண்களால் முடியாதது என்று ஒன்றுமே இல்லை --
நீங்கள் அயோத்திக்கு திரும்பி வரும் வழி உங்கள் இருவருக்காகவும் , காட்டில் உள்ள மூவருக்காகவும் அங்கே அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காகவும் நான் 14 வருடங்கள் கௌரி நோன்பு பூத்து வழிப்படப்போகிறேன் ---
தாய்மார்கள் மூவரையும் மாண்டவி உஊர்மிளா அக்காக்களுடன் சேர்ந்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம் -
சீதையுடன் பிறந்தவர்கள் நாங்கள் மூவரும் --- அதனால் எல்லோரும் எப்பவும் நன்றாக இருப்பார்கள் ...
கைகேயி ராமனை மட்டுமே காட்டுக்கு போ என்றாள் --- அந்த தண்டனையை தங்களுக்கும் பிரித்துக்கொண்டனர் பரதனும் லக்ஷ்மணனும் ---
அதிலே பாரிஜாத பூக்களாக அவர்களுக்கு மலர்ந்தவர்கள் சீதையும் , ஊர்மிளாவும் மாண்டவியும் சுருதகிர்தி சந்நியாசம் பூண்ட ராஜமாதாக்கள்
அம்மா யார் யாரை மிஞ்சினார்கள் தியாகத்தில் என்றே சொல்ல முடியவில்லை --- இவர்கள் வெறும் பெண்கள் அல்ல தாயே பெண் உருவத்தில் வந்த தெய்வங்கள்
தியாகம் செய்வதில் எல்லா பெண்களுமே பெண் உருவில் வந்த தெய்வங்கள் தான் ரவி!!
மறைந்தாள் மாணிக்க மூக்குத்திக்காரி ---- மாய்ந்துபோனேன் இவர்களது பெருமைகளை எண்ணி
Comments
அமுதம் கொடுக்கும் திங்கள் காணாமல் போகலாம்
வானில் தோன்றும் விண்மீன்கள் மண்ணில் முளைக்கலாம்.....
அடித்து செல்லும் காட்டு வெள்ளம் நம்மை அணைத்து செல்லும் நீரோடை ஆகலாம் ...
பாம்பென சீறும் கொடும் புயல் கொடியில் தலை சீவி நடந்து செல்லலாம்
உன் கருணை மட்டும் என்றும் கடலென பொங்கும் ..
அதில் மாற்றம் இல்லை
இயற்கை செயற்கையாகும் வேளையிலே .....🍇🍇🍇
தித்திக்கும் நவரசமே ... தீண்டி செல்லும் பூங்காற்றே ....
ஓடி விடும் வாழ்க்கையிலே ஆடிப்போகும் நாட்களிலே ஆட்கொள்ளும் பேரழகே
கற்கண்டு சாரினிலே கரும்பு சாறை பிழித்தெடுத்து
பச்சைக்கற்பூரம் உடன் பாலும் நெய்யும் சேர்த்து கலந்து
அண்டாவில் உள்ள தேனை அழகாக கொட்டி
அதிலே தட்டிப்போட்ட முந்திரியும் பாதாமும் புன்னகை செய்ய , குங்கமப்பூ கண்சிமிட்ட ,
நாட்டு வெல்லம் வெள்ளமென ஒட நாளும்
உனக்கு அமுதென படைத்து
நீ ஆட்சி செய்யும் காஞ்சியில் காலெடுத்து வைத்தேன் ...
காலடியும் இனிக்க வில்லை கற்கண்டும் தித்திக்க வில்லை உன் நாமம் உரக்க சொன்ன போது ..... 🥇🥇🥇
கண்ணா கருமை நிற கண்ணா பாடலின் வரி கவிதிறன்
அற்புதம்
சகோதரிகளின் பாசம்
நல்ல எடுத்துகாட்டு🌹🌹🌹🌹🙏🏻
ஒவ்வொன்றாய் உடைத்து சிதறினான் ராம நாமம் எனும் ஒரே ஆயுதத்தால் ...
இலங்கையை அடைய எதிர்கொண்டாள் இலங்கையின் காவல் தெய்வம் ....
கை முஷ்டியினால் கொடுத்த ஒரு குத்து அவளை காலன் மடியில் உறங்க செய்தது ...
குட்டி குரங்காய் வடிவெடுத்து கோபுரங்கள் பல கண்டு அரண்மனைகள் அரங்கேறி மண்டோதரியின் மதிலுக்கு வருகிறான் ... 💐💐💐
ஊர்மிளா அக்கா --
-- வாசனைத் திராவியங்கள் நம்மை சுற்றி இருந்தால் அந்த நறுமணம் நம்மீதும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் அதுபோலத்தான் -
நம்மை சுற்றி எல்லோரும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் நம்மையும் அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் - நாம் அதை தேடிப்போக தேவை இல்லை ...
arumai - fantastic , beautifully narrated . No words to appreciate
பனித்திவளை படர்ந்தது
பரவசத்தில் பதறியது
இராமா இராமா எனக் கதறியது
தன் அமைதி உதறியது
மிதிலையின் வீதியோ இராமன் பாதம் பட்டதும் பரதம் ஆடியது பாரதமே குலுங்கியது ஒருமுறை
இராமனின் ஸ்பரிசம் பெற்றதால் ஸ்தம்பித்து நின்றது
இராமன் ஒவ்வொரு அடி வைக்கும்போதும் ஆரவாரம் செய்தது
------2---
இராமன் அவளின் மருமகன் அல்லவா
அவளின் மறு மகனல்லவா
மரங்களெல்லாம் பூக்களை தூவியது
மயில்கள் தோகை விரித்து விசிறி விட்டது
குயில்களோ ராமனின் ராகம் பாடியது
வண்டுகள் ராமா ராமா என ரீங்காரமிட்டது
மான்களோ தேன் குடித்த குரங்காய் அங்குமிங்கும் ஓடியது
சூரியனோ
சுட்டுவிடும் இராமனின் பாதம் என்று சுருட்டிக்கொண்டது
----3-----
மிதிலை மக்களோ அவன் படையாய் நடந்தது
ஊரே உருகிப் போனது உத்தமனைக் கண்டு
இராமனின் *மிதி* பட்டு அவன் *லீலை* காணப் போவதால்தான் *மிதிலை* என்றானதோ
என ஊரின் பெயர் காரணம் சொல்லி பெருமை கொண்டனர்
இராமன் மிதிலையை மிதித்ததிலிருந்து அவன் துதி பாடியது
விஷ்வாமித்திரரின் பின்னால் விஸ்வாசமாய் விரைந்தான் விஷ்ணு
அவர் விஷ்வாமித்திரர்
இராமனை இராமனாய் செதுக்கிய விஷ்வகர்மா
அது அவர் பிறவியின் கர்மா
---4------
இடவலம் பார்த்து இராமனை இடரில்லாமல் காத்தான் இலக்குவன்
மூவரும் நடந்தனர் ஜனகனின் ஜாகை நோக்கி
அங்கோ
மாடத்து புறா ஒன்று மணவாளனை கண்டு மயங்கி நின்றது
வெட்கம் அவளை கடித்துத் தின்றது
முளைத்து வந்த நெற்கதிர் போல் தலை குனிந்து நின்றது
விழிகள் அங்குமிங்கும் அல்லாடியது
அங்கமெல்லாம் தள்ளாடியது
இராமன் அழகை கொண்டாடியது
அவளே சீதையெனும் பெயர் கொண்ட கோமகள்
திருமதி இராமனாய் மாற காத்திருந்த திருமகள்
இராமனும் சற்றே நிமிர்ந்து நோக்கினான்
சிலிர்த்து சொக்கினான்
---5----👌👌👌
உயிர் உள்ள அற்புதக் கலையா
என சிந்தித்தே சிலையானான்.
இருவரும் தனித்திருந்தாலும்
உள்ளத்தால் தணியாது இருந்தனர்
அண்ணலின் நோக்கமும்
அவளின் நோக்கமும்
ஏன்
இருவரின் நோக்கமும் இருவரும் நோக்கியதால்
இருவரையும் தாக்கியது
காதல் இருவரையும் தூக்கியது
சுயவரம் சுகமாய் முடிந்தது
----6---💐💐💐
ஊர்மிளைக்கு இலக்குவன்
மாண்டவிக்கு பரதன்
சுருதக்கிர்திக்கு சத்ருக்கனன்
இது ஜனகனின் வார்த்தை
மருமகன் மாதவனாய் இருந்தாலும் மகளே தகப்பனுக்கு முதல்
இராமனோ வனவாசத்தில்
சீதையும் இலக்குவனும் அவன் வசத்தில்
பரதனோ அன்னை மீது கோபத்தில்
அயோத்தியோ இப்போது பேராபத்தில்
---7----👌👌👌
சத்ருக்கனா
நீ என்றுமே சத்துருக்களை காணாதவன்
தன்னலம் பேணாதாவன்
புத்தியில் எங்கள் மூவருக்கும் தந்தையானவன்
அறிவில் சிறந்தவன்
அறம் எதுவென புரிந்தவன்
ஆட்டுவித்தாள் கூனி
அதனால்
எனை வைத்து கைகேயி ஆடிவிட்டாள் பரமபதம்
பரந்தாமனை பார்த்துவிட்டாள் பதம்
இராமனின் வனவாசத்திற்கு
என்னை வசதியாய் பலி கொடுத்துவிட்டாள்
எனக்கு தீராத வலி கொடுத்துவிட்டாள்
---8-----👍👍👌👌💐💐
எனவே அயோத்திக்கு அரசணாய் இரு
அரணாய் இரு ஆணையிட்டான்
குழம்பினான் சத்ருக்கனன்
இரு அண்ணனும் நடுக்காட்டில்
ஒரு அண்ணன் ஊரின் எல்லையில்
செய்வதறியாது போய் சேர்ந்தான் சுருதகிர்தியிடம்
என்னவளே
என்னவரெல்லாம் எண்ணிலடங்கா துன்பத்தில்
----9----👌👌👌
என்நிலையோ இப்போது துலா பாரத்தில்
முடிவொன்று சொல் என் மூச்சே
என்றும் சரியானது உனது பேச்சே
என்று பேதை போல் பாதை கேட்டு நின்றான்
சுருதகிர்தியோ
சங்கடம் வேண்டாம்
இராமனும், இலக்குவனும் பரதனை பணித்தனர்
பரதனோ உனை பணித்தார்
பிணி கொள்ளாதே
---10----👌👌👌
இலக்குவனாகினும்
பரதனாகினும்
நீயாகினும்
ஏன் யாராகினும்
நடப்பெதெல்லாம் நான்முகன் எழுதிய எழுத்தே
இராமனின் தம்பியாய் இரு
இராமனின் தும்பியாய் இரு
இராமனைப் போல் தர்மத்தை போற்று
இலக்குவன் போல் அயோத்தியை காப்பாற்று
பரதன் போல் நேர்மையாய் நில்
சத்ருக்கனான நீ உன்னைப் போல் அறத்தோடு ஆட்சி செய்
இதுதான் இராமன் சொல்லும் மெய்
என மெய்யுரைத்தாள்
சுருதகிர்தி
----11----👌👌👌
ஊர்மிளையோ
மாண்டவியோ
சுருதகிர்தியோ
அனைவருமே
கண்வன்களின் கடமைகளை கூறிய குருமார்களே
தியாகம் செய்வது பெண்களா
இல்லை
அவர்கள் தெய்வத்தின் கண்கள் அதில் கருணை மட்டுமே அருவியாய் கொட்டும்
பிரமாதம் 👍👍👍👍👍👍God bless
சகோதர பாசம்
ஆஹா அருமை🙏🏻