பச்சைப்புடவைக்காரி -தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (1)-186


பச்சைப்புடவைக்காரி 

 தியாகராஜ சுவாமிகள் வரலாறு. 

உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

(186)



அம்மா --- என்னால் திருவாருரில் இருந்து வரவே முடியவில்லை - தியாகேசனையம் கமலாம்பிகையையும் உங்கள் அருளால் தரிசித்தோம் --- இன்னொரு தியாகேசனை அதாவது சங்கீத தியாகேசனை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்ல வேண்டுகிறேன் - திருவையாற்றின் சிறப்பையும் தாங்கள் எங்களுக்காக சொல்லவேண்டும் - இரண்டு , மூன்று பதிவுகள் ஆனாலும் பரவாயில்லை தாயே கேட்க தவம் இருக்கிறோம் .. 

சொல்கிறேன் ரவி ராமருக்காக பிறந்தவர் , வாழ்ந்தவர் இவர் --- இவரைப்பற்றி சொல்வதும்  நான் ராமனைப்பற்றி  ஒன்றுதான் - ஏற்கனவே இவரின் பெருமைகளை நான் உனக்கு சொல்லி இருக்கேன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நீ கேட்டதால் விவரமாக சொல்ல முயற்சி செய்கிறேன் .. 


கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். 

கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. 

இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் "சங்கீத விஷயம்" எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். 

தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். 


உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான். அப்படி இவருடைய பாடல்களில், அதிலும் அந்த மொழி உங்களுக்கு  அன்னியமாயிருந்தபோதிலும், மனங்கவரும் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். 

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல. 

மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரஸத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும். 


அவருக்கு முன்பாகவும் பக்தி ரஸத்தோடு பலர் பாடியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அந்தந்த காலங்களில் பாடல் ரஸத்திற்காகவும், பொருளமைதிக்காகவும், இறைவனது பெருமையையும், புகழையும் பாடியிருப்பதனால் அவை பிரபலமாகியிருந்தன. உன் முன்னோர்கள், மகான்கள் இவைபற்றி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதித்திருக்கிறார்கள். 

இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்தியங்கள் என்றென்றும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். 

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஸாகித்தியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவரது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கீர்த்தனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவை, அவற்றைப் பாடுகையில் அவர் மனப்பாங்கு எங்ஙனம் இருந்தது என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 

அவருக்கு ஏற்பட்ட சோதனைகள், மன வேதனைகள், குடும்பத்திலிருந்த சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டோமானால், அவரது கீர்த்தனங்களில் இழையோடும் அந்தந்த பாவங்கள், ரஸங்கள் நமக்குத் தெளிவாகும். ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து 

'இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய், அன்று நீ அப்படிச் சொன்னாயே' இப்படியெல்லாம் அவர் சொல்வது அவர் வாழ்ந்த உலகம் தனி, அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் உங்களுக்குத் தெரியவரும். 

ஸ்ரீ தியாகராஜர் எந்த உணர்வில் இருந்தார், லோகாயதமான விஷயங்களில் அவருக்கு அக்கறை இருந்ததா என்பது போன்ற கேள்விகள்கூட நமக்கு எழலாம். இல்லாவிட்டால் சரபோஜி மன்னன் அவரை அழைத்துப் பொன்னும் பொருளும் தர விரும்பியபோதும், அதற்குச் சம்மதிக்காமல், இவைகள் சுகம் தரக்கூடியவைகளா, அல்லது இராமா உனது சேவடி கைங்கர்யம் சுகம் தருமா என்றெல்லாம் பாடியிருப்பாரா? 


வேதங்கள் எப்படி எழுதப்படாமல் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கிறதோ, அப்படியே, மகான்களின் பாடல்களும் வரிசைப்படுத்தியோ, ஸ்வரப்படுத்தியோ, எழுதிவைத்தோ பிற்கால தலைமுறையினருக்கு கொடுக்கப்படாமல், குருமார்களிடம் கற்றுக்கொண்ட சீடர்களின் மூலமே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தானோ என்னவோ, ஒருசிலர் அவர் பாடிய தெலுங்கு மொழிச் சொற்களைச் சில இடங்களில் தவறாகக்கூட உச்சரிக்கிறார்கள்.

 

நாதத்தின் பெருமை. 

நாதம் அல்லது ஒலி என்றால் என்ன பொருள்? இதற்கு மகான்கள் நல்ல விளக்கங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். "நா" என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், "த" என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள். இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே "நாதம்" எனப்படும். இந்த நாதமே "ஓம்" எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். 


சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் எனப்படும். எனவே குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் ஸங்கீத ஞானம் இல்லாமல் மோக்ஷம் கிடைக்குமா? 

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் "மோக்ஷமு கலதா" எனும் ஸாரமதி இராகக் கீர்த்தனையில் இப்படிச் சொல்லுகிறார். "உன்னுடைய சிறந்த பக்தியோடு கூடிய ஸங்கீத ஞானம் இல்லாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்குமா? அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம். 

"இந்தப் பூவுலகில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்களுக்கு மோட்ச கதி கிடைக்குமா? எப்பொழுதும் பிரத்தியட்சமான உருவத்தை உடையவனே! ராமா! உன்னிடம் பக்தியும் ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? 


பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால் பிரணவநாதம் சப்தஸ்வரங்களாகப் பெருக, 

வீணை வாசிப்பதன் மூலம் நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்க்கு மோட்சம் உண்டா?" என்கிறார். 

*ஆகவே இசை மார்க்கமே மோட்சத்துக்கு வழி என்பது அவரது முடிவு*

ரவி இன்னும் பார்க்கலாம்.

--- அம்மா என்ன பாக்கியம் செய்துள்ளோம் நீங்கள் சொல்லும் அழுக்கு இணையே இல்லை .  எதற்கும் ஒப்பாத வல்லியாக என்றும் நீயே இருக்கிறாய் ....🥇

ரவி  அவர் பாடிய ஒரு பாடலுடன் இந்த பதிவை இன்று முடித்துக்கொள்வோம் 

என்னுடன் ஒரு சொல் பேச நீ ஏன் இவ்வளவு பிணங்குகிறாய் ராமைய்யா?… 

கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட  (முதல் சந்திப்பில்) உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன்  நீ… 

(எளியவனான இந்த) தியாகராஜனிடம்  பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்.

*சதுவுலன்னி தெலிஸி சங்கராம்ஸுடை* 

*ஸதயுடாஸுக ஸம்பவுடு ம்ரொக்க* 

*கதலு தம்முனி பல்க ஜேஸிதிவி கா-*

*கனு த்யாகராஜு ஆடின மாட(லாட)’*👌👌👌


சிரித்துக்கொண்டே  தியாகேச பெருமாள் இருந்த படத்தில் மறைந்துபோனாள் *காவ்யா லாப வினோதினீ*👌👌👌👌👌

ரவி இன்னும் பார்க்கலாம் --- அம்மா என்ன பாக்கியம் செய்துள்ளோம் நீங்கள்  அதன் அழகே தனி தான் .. 

ரவி  அவர் பாடிய ஒரு பாடலுடன் இந்த பதிவை இன்று முடித்துக்கொள்வோம் 

‘என்னுடன் ஒரு சொல் பேச நீ ஏன் இவ்வளவு பிணங்குகிறாய் ராமைய்யா?… கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட  (முதல் சந்திப்பில்) உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன்  நீ…  (எளியவனான இந்த) தியாகராஜனிடம்  பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்.

‘சதுவுலன்னி தெலிஸி சங்கராம்ஸுடை 

ஸதயுடாஸுக ஸம்பவுடு ம்ரொக்க 

கதலு தம்முனி பல்க ஜேஸிதிவி கா-

கனு த்யாகராஜு ஆடின மாட(லாட)’

சிரித்துக்கொண்டே  

தியாகேச பெருமாள் இருந்த 

படத்தில்மறைந்துபோனாள் காவ்யா லாப வினோதினீ👍👍👍👍👍💐💐💐💐💐💐


Comments

ravi said…
ஒரு வீட்டு வாசலில்
யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.

அம்மா...
தாயே...
ஏதாவது
தர்மம் பண்ணுங்
கம்மா !

அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்..

அங்கே
வீதியில் விளையாடிக்
கொண்டு இருந்த,
தனது ஐந்து வயது மகளை அழைத்து,

அவளது கைகளால் அரிசியை,
அள்ளி கொடுத்து,

யாசகனின் பாத்திரத்தில்
இட சொன்னாள்.

பெற்று
கொண்ட யாசகனும், பக்கத்து
வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான்.

அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு,

ravi said…
அவளது
கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.

காலங்கள் உருண்டோடின..

இரண்டு பெண்மணி
களுக்கும் வயது முதிர்ந்து போனது.

இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்
களாகினர்...

அவரவர்கள்
தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன...

ஒரு நாள்,
அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.

அங்கே,
அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது..

மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.

உடனே,
அவள்... இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள்.

இருவருமே,
ஒரே மாதிரி தானே,
தானம் செய்தோம்,

எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்,
ஏற்ற இறக்கம் என்று வாதிட்டாள்.

அதற்கு இறைவனோ...

முதலாமவளோ, தனக்கு
பிறகும், தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,

குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்ய சொன்னாள்.

ஆனால்,
நீயோ...
உன் கைகளால் எடுத்தால்,
அரிசி நிறையவே செலவாகும் என்ற எண்ணத்திலே,

உன் குழந்தையின் கையால்,
எடுத்தே தானமிடச் செய்தாய்...

இருவரது
செயலும்
ஒன்றே..

எனினும் எண்ணங்கள வெவ்வேறு என்றார்.

எனவே,
எந்த செயலை செய்தாலும்,

மேலான எண்ணங்களோடு
செய்யும் செயல்களே

நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும்,
ஆத்ம
திருப்திக்கும்,
மனநிறைவான உணர்வுக்கும்
வழி காட்டும்

சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை
விட,

பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை,
மேலானவை,

அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 114*
🌸🌸🌸🌸

தாம்பூல பூரிதமுகீ, தாடிமீ குஸுமப்ரபா |
ம்ருகாக்ஷீ, மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ ‖ 114 ‖
🌸🌸🌸🌸

ताम्बूल पूरित मुखी, दाडिमी कुसुमप्रभा |
मृगाक्षी, मोहिनी, मुख्या, मृडानी, मित्ररूपिणी ‖ 114 ‖
🌸🌸🌸🌸

taambula purita mukhi, daadimi kusumaprabhaa |
mrgaakshi, mohini, mukhyaa, mrdaani, mitrarupini ‖ 114 ‖
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் தாம்பூல பூரித முக்யை நம;
ஓம் தாடிமீ குஸுமப்ரபாயை நம;
ஓம் ம்ருகாக்ஷ்யை நம;
ஓம் மோஹின்யை நம;
ஓம் முக்யாயை நம;
ஓம் ம்ருடான்யை நம;
ஓம் மித்ரரூபிண்யை நம;
🌸🌸🌸🌸
ravi said…

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*559.தாம்பூல பூரித முகீ* - தாம்பூலத்தோடு நிறைந்த முகத்தையுடையவள் (தாம்பூலத்தால் இதழ்கள் சிவக்க சிவக்க கோவைப்பழம்போல வெற்றிலை பாக்கு தாம்பூல தரித்து சுகிப்பவள்) அம்பாள்.
🌸🌸🌸🌸

*560.தாடிமீ குஸுமப்ரபா* - மாதுளம் பூவின் காந்தியுடையவள் அம்பாள் (சிவந்தவள்) .
🌸🌸🌸🌸

*561.ம்ருகாக்ஷீ* - மானின் கண்களைப்போன்ற கண்களையுடையவள் அம்பாள்
🌸🌸🌸🌸

ravi said…
*562.மோஹினீ* - ஸா்வ ஜகத்தையும் காந்தம் போல் மனதை கவர்பவள். தன்னை மறக்கச் செய்பவள். அழகே உருவானவள். ஞானத்தால், தயையால், காருண்யத்தால், வீரத்தால், சக்தியால் ஒளிவீசும் அழகு.
🌸🌸🌸🌸

*563.முக்யா* - முதன் முதலாக ( முக்யமாக // தலைவியாக ) இருப்பவள்.
🌸🌸🌸🌸

*564.ம்ருடானீ* - எல்லோருக்கும் எப்போதும் மகிழிச்சி, ஆனந்தத்தை தருபவள் அம்பாள். (ம்ருடானின் என்று சிவனுக்கு பத்தினி).
🌸🌸🌸🌸

*565.மித்ரரூபிணீ* - நேசத்தோடு,பாசத்தோடு,பரிவோடு, நட்போடு இருக்கும் ஸ்வரூபமாக இருப்பவள்.
🌸🌸🌸🌸
ravi said…
🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐💐🌹

*இன்றைய சிந்தனை ( 26.09.2020 )*
…………………………………………………........

*இவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது...!*
.....................................................................................

_*மிருகத்திடம் மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை...!"*_
..........................................

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறினையும்,
நாம் கற்று கொள்ள வேண்டும்...!

*1. சிங்கம்*
......................

சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்...

*2. கொக்கு*
.......................

கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்...

*3. கழுதை*
......................

கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்..

தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட்டிருக்கும் . ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை...

ravi said…
4. சேவல்*
.....................

சேவல் நாம் படுக்கையில் இருந்து எழும் முன்பே அதிகாலையிலேயே எழும். மற்ற மிருகங்களிடம் தன் குஞ்சுகளை காக்க துணிவாக சண்டையிடும்....

தன் குஞ்சுகளுக்கு தேவையானவற்றை சேகரித்து பிரித்துக் கொடுக்கும்...

தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடிக் கொள்ளும்...

இந்த நான்கும் சேவலிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியவை...

*5. காகம்*
...................

இரவில் தன் குடும்பத்துடன் சேர்ந்திருக்கும். தேவையான பொருள்களை முன் கூட்டியே சேமித்து வைக்கும். யாரையும் எளிதில் நம்பாது, துணிவு, எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கை யிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியவை...

*6. நாய்*
.................

நாய் கிடைப்பதை உண்டு மனநிறைவு கொள்ளும். உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினியாக இருக்கும். நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருக்கும்...

ravi said…
நல்ல உரக்கத்தில் இருந்தாலும் சிறிய சலசலப்பு கேட்டாலும் உடனடியாக எழுந்து விடும். தன் முதலாளிக்கு இறுதிவரை விசுவாசமாக இருக்கும்...

தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் துணிவுடன் எதிர்க்கும்...

இந்த ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்...

_*எவரொருவர் மேலே கூறப்படும் இந்த ஆறு வழிமுறைகளைக் கடைபிடிக்கிறாரோ, அவர் எதிலும் வெற்றியடைவார். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்...!*_

*ஆம் நண்பர்களே...!*

*''அன்பு, பாசம், பணிவு, நன்றி, பொறுமை, சுறுசுறுப்பு, கடும் உழைப்பு, ஈகை குணம், மன உறுதி, ஆரோக்கியம், இருப்பதில் மனநிறைவு, இவைகள் ஒருசார பெற்றிருப்பவர்கள் வாழ்வில் எப்போதும் சாதனை படைப்பார்கள்...!*

🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐💐💐🌹
S G S Ramani said…
ஸ்ரீராமனைத் தன் ஆண்டானாக, தோழனாக, குழந்தையாக, மகனாக, தந்தையாக, குருவாக என எல்லாமாக எண்ணி பக்தி செய்த தியாகராஜர் பற்றிய தொகுப்பு அழகு....

சுந்தர தெலுங்கை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவலை தூண்டிய தொகுப்பு...

எந்தரோ மஹானுபாவுலு’

எத்தனை பொருள் செறிந்த சொற்கள்.

‘எத்தனையோ மஹான்கள்; அனைவருக்கும் எனது வந்தனம்,’

என்ற மஹா பக்திமானான தியாகராஜருக்கு எனது சிரம் தாழ்த்திய வந்தனம்...

🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai💐💐👌
ravi said…
*Lalita Trishati 241 - 250*👌👌👌
ravi said…
*241. Kakāriṇī ककारिणी*👌👌👌the nama says that She Herself is Ka

*242. Kāvyalolā काव्यलोला*💐💐💐 She is fond of poetic compositions 🥇🥇🥇

*243. Kāmeśvaramanoharā कामेश्वरमनोहरा*👌👌👌 She steals the heart of Kamesvara🔥🔥🔥

*244. Kāmeśvara-prāna-nāḍī कामेश्वर-प्रान-नाडी*💐💐💐 She is the vital force of kamesvara

*245. Kāmeśotsaṅgavāsinī कामेशोत्सङ्गवासिनी*👌👌👌 She is sitting on the left thigh of Siva 🌺🌺🌺

*246. kāmeśvaraliṅigitāṅgī कामेश्वरलिङिगिताङ्गी*💐💐💐💐💐 Shiva and Sakthi both have mutual dependency and trust 🥇🥇🥇

*247. Kāmeśvarasukhapradā कामेश्वरसुखप्रदा*💐💐💐

Sakthi is the cause for eternal happiness of Shiva 🙏🙏🙏
ravi said…
248. Kāmeśvarapraṇayinī कामेश्वरप्रणयिनी👍👍👍
ravi said…
Praṇayin generally refers to a beloved woman of a man, such as wife being beloved to her husband.

This nāma says that not only She is attached to Śiva, but Śiva is equally attached to Her.

Their relationship is based on give and take policy.

He gives Her all His powers and She in turn keeps Him free and carries out all His actions.

Mutually beneficial interdependence is the basis of Śiva – Śakti relationship.🌸🌸🌸🌸🌸
ravi said…
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
எங்கிருந்து ஆரம்பிப்பது ? எப்படி ஆரம்பிப்பது ...

எவ்வளவோ மகான்கள் விளக்கம் தந்துள்ளார்கள் .. google செய்தால் இன்னும் கோடி கோடி விளக்கங்கள் கிடைக்கலாம் ...

முதலில் என் மனதில் தோன்றிய ஒரு மேரு மலை அளவிற்கான கேள்வி எனக்கு என்ன தகுதி இருக்கிறது அம்பாளைப்பற்றி அவள் நாமங்களைப்பற்றி எழுத அல்லது விளக்கம் தர .... ?

நாயை விட கேவலமான பிறவி நான் ...

இருந்தாலும் குயில் என்று நினைத்துக்கொண்டு குரைக்க முயற்சி செய்கிறேன் ....

சௌந்தர்ய லஹரியும் சுப்ரமணிய புஜங்கமும் மனதில் நிழலாடுகின்றன ... ஆதி சங்கரரின் தன்னடக்கத்தின் முன் நான் ஒன்றுமே இல்லை 🌺🌺🌺🌺🌺
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100
ravi said…
அம்மா எல்லாமே நீ கொடுத்த சொற்கள் , வார்த்தைகள் ... நீ கொடுத்த சொற்களை வைத்தே உனக்கு ஒரு பூ மாலை சூட்டுகிறேன் ... நான் எவ்வளவு சுயநல வாதி என்று இன்றாவது புரிந்துகொள் ... 🌧️🙏🙏
ravi said…
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||
ravi said…
முருகா எனக்கு ஒன்றுமே தெரியாது ... உன்னைப்பற்றிய ஸ்லோகமும் சொல்லத் தெரியாது ... எதுவுமே தெரியாத என்னையும் உன் அருளால் இயங்க வைக்கிறாய் .
ravi said…
இப்படி ஆதி சங்கரரே சொன்னபிறகு நான் சொல்ல இன்னும் என்ன இருக்கிறது ...??

ராமாயணத்தில் வரும் அணில் போல் தெரிந்ததை கொஞ்சம் என் கற்பனையில் கிறுக்க ஆரம்பிக்கிறேன் ...

தவறு என்று பட்டால் திருத்திக்கொள்ள தயாராகவும் இருக்கிறேன் ...

--- பயணம் தொடரும் 💐💐💐
ravi said…
நிஜம் என்று நினைப்பதெல்லாம் நினைவாக போகின்றது

நிழலான வாழ்க்கை இதில் நிரந்தரம் எங்கிருக்கிறது ?

வழிப்போக்கன் நான் வசதிகள் என் கூட வருமோ ?

சாஸ்வதம் உன் பாதமன்றோ ?

அது நிழலே ஆனாலும் நான் தேடும் நிஜமன்றோ !!!💐💐💐
ravi said…
சத்தியமே சாவடியே ... சாஸ்வதமே கருப்பன் சாறே

முக்கணி சுவையே முத்தே பவளமே ... பார்த்து பார்த்து இன்னும் பார்க்கத் துடிக்கவைக்கும் பராபரமே

தாமரைகள் குவிந்து விடும் அல்லியும் உறங்கி விடும் ஆதவனுக்கும் ஓய்வுண்டு திங்களுக்கும் இடைவெளி உண்டு

தீண்ட தகாத பாவி எனக்கு உன் பரம பதம் ஸ்பரிசம் உண்டோ சாயி ? 👌👌👌
ravi said…
அற்புதமே அருணாசலா
அன்பின் உச்சமே அருணாசலா

ஆசைகள் பல வளர்த்தேன் அருணாசலா ... அமைதி வரவில்லை அருணாசலா

சட்டை அவுக்கும் நேரமதில் உன் நினைவு வந்ததே அருணாசலா ...

இனி ஒரு பிறவி தந்தால் தமிழ் இசை தனை வளர்க்கும் தகுதி கொடு அருணாசலா 🎼🎼🎼
ravi said…
சுவாமிநாதா சேர்த்துக்கொண்டாயோ சுப்ரமணியத்தை உன்னுடன் ....

வில்வாஷ்ட்டகம் சொன்னவன் விதியை வெல்ல முடியவில்லை

விஷ்ணு சஹஸ்ரநாமம் விதைத்தவன் விண்ணுலகம் செல்வதை தடுக்க முடியவில்லை

வந்த நோக்கம் முடிந்து விட்டால் பயணம் ஏன் தொடரவேண்டும் என்றே நீ நினைத்தாயோ ?

வந்தவர் தங்கி விட்டால் விண்ணுலகம் புனிதம் அடையாதே என்றே நினைக்கிறாய் ....

வெறும் நினைவுகள் மட்டுமே பாக்கி .. குரல் மட்டுமே சொந்தம் ...

கூடு விட்டு பறவை பறக்கும் போது உன் மடி மட்டுமே நிரந்தரமோ சுவாமிநாதா ? 💐💐💐
Shivaji said…
Amarkalamana aarambam...Sree Mathre Nama 💐💐💐🙏
ravi said…
*புன்னகை ராமாயணம் 21/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*
ravi said…
மிதிலாபுரிக்கு கிளம்புகிறார் விசுவாமித்திரர் ராமனையும் இலக்குவனனையும் அழைத்துச் செல்கிறார்

இரண்டு விலைமதிக்கவே முடியாத ரத்தினங்களைக்காட்ட -

ஒரு ரத்தனத்தை சிவன் ஆசிக்கொண்டு உடைக்கவேண்டும்

இன்னொரு ரத்தனத்தை ராமன் மணந்து கொள்ளவேண்டும் -

மிதிலாபுரி விசுவாமித்திரரின் யாகசாலைக்கு வெகு தொலைவில் இருப்பதால் அவர்கள் கட்டை வண்டியில் கிளம்புகிறார்கள் .

அப்பொழுது விசுவாமித்திரர் ராமரிடம் ஒரு கேள்வி கேட்கிறார் அதற்க்கு ராமன் புன்னகையினால் பதில் சொல்கிறார்😊😊😊
ravi said…
யாத்ரா ரதை: கஜ துரங்க பதாதிபி: கிம்
ஹ்ருத்யா தவ அத சகடீபி: இயம் முனீனாம்

இத்தம் முனௌ வததி ராம தவ ஆனனே யத்
மந்த ஸ்மிதம் தத் இதம் இதி அவதாரயாமி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
யாத்ரா ரதை: கஜ துரங்க பதாதிபி: கிம் ஹ்ருத்யா தவ

நால்வகைப் படைகள்
ரதம், யானைப்படை (கஜம்), குதிரைப்படை (துரகம்), காலாட்படை (பதாதி)
துணையாட்கள், பரிவாரம்

ரத கஜ துரக பதாதிகள்
ravi said…
ராமா நீ பத்து திக்குகளையும் வென்ற தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரன் நீ --

யானைப்படை , குதிரைப்படை , தேர் படை ,காலார் படை அப்படி சூழ்ந்து இருக்க

இரத்தின தேரினிலே பவனி வருபவன் நீ -

அப்படி நான்கு வகை படைகள் சூழ கம்பீரமாக வர வேண்டிய நீ என் கேள்விக்கு பதில் சொல்வாயா ராமா ?

அப்படிப்பட்ட ராஜாதி ராஜனாக பவனி வருவது உன் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறதா இல்லை என்னை மாதிரி முனிவர்களுடன் இப்படிப்பட்ட கட்டை வண்டியில் போவது உன் மனதிற்கு சந்தோஷத்தை/ இனிமையைத் தருகின்றதா - இந்த இரண்டில் எது உன் மனதிற்கு இனிமையைத் தருகின்றது ராமா ?👌👌👌
ravi said…
இத்தம் முனௌ வததி ராம தவ ஆனனே

இப்படி விசுவாமித்திரர் ராமரிடம் கேட்டபோது ராமரின் முகத்தில் ஒரு புன்னகை பூத்ததாம் -

அந்த புன்னகை மூலமே ராமன் பதில் தந்து விட்டானாம் ---

முனிவர்களோடும் பயணிப்பதும் இருப்பதுமே என் மனதிற்கு இனிமையைத் தரக்கூடியது என்பதை அந்த புன்னகை விசுவாமித்திரருக்கு எடுத்துச் சொன்னதாம் \

கட்டைவண்டி பயணமோ அல்லது விசுவாமித்திரர் போன்ற முனிவர்களுடன் பயணமோ பிடிக்கவில்லை என்றால் ராமனால் புன்னகையை மனமுவந்து உதிர்த்திருக்க முடியாது

அதனால் அவனுடைய மலர்ந்த முகம் இதுதான் இனிமை எனக்கு என்று காட்டிக்கொடுத்துவிட்டது
ravi said…
மந்த ஸ்மிதம் தத் இதம் இதி அவதாரயாமி

அன்று பதிலாக ஒரு புன்னகையை தெளித்தாயே அதே புன்னகை இன்றும் வடூவூரில் இளமையும், இனிமையும் கொஞ்சமும் மாறாமல் , வாடாமல் இருக்கிறதே ராமா அந்த மந்தஸ்மிதம் எங்களை காப்பாற்றட்டும்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 785*🥇🥇🥇

*US 777*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸

🥇🥇🥇
ravi said…
777

கருணாரஸார்த் ரஹ்ருதயா
ஹ்ருத யாந்தர நிர்யதச்ச வீசிஸ்மேரா

ப்ரமதே ஸ்வரப்ரியதமா
பாதப்ரேஷ்யஸ்ய பவது கல்யாணய
ravi said…
கருணை நிறைந்த உள்ளத்தை உடையவள் . இதயத்திலிருந்து கிளம்பி வெளி வந்த நிர்மலமான வெண்ணிறம் கொண்ட புன் சிரிப்பைக்கொண்டவள்
பரமேஸ்வரனின் பிரியமான மனைவி . அவள் பாதசேவகனாகிய எனக்கு மங்களைங்களை அருள் பாலிக்கட்டும் 👌👌👌👌
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 208*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

86
ravi said…
க்ருஹீத்வா யாதார்த்யம் நிகமவசஸாம் தேசிக்கருபா

கடாக்ஷார்க்கஜ் யோதிச்ச மிதமமதா பந்ததமஸ

யதந்தே காமாக்ஷி ப்ரதிதி வஸமந்தர் த்ரடயிதும்

த்வதீயம் பாதாப்ஜம் ஸூக்ருத பரிபாகேன ஸூஜனா
ravi said…
அம்மா எல்லை தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் , மகான்களும் உங்கள் தாமரைத் திருவடிகளில் தான் ஞானம் பெறுகிறார்கள் அந்த திருவடிகளை நான் கேட்கமலே நான் வணங்க எனக்கு நீ தந்துவிடாய் ... என்னே உன் கருணை? 👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*சும்மா ஒரு இராமாயணம் 123*🦜🦜🦜🍓🍓🍓🥇🥇🥇

இலக்குவன் சொன்னான் தீயிலிம் சுடும் வார்த்தைகளை

அண்ணனின் ஆலிங்கனம் கிடைக்க வில்லை .
அக்னியின் அரவணைப்பு வருகின்றது ...

சுட்டு எரித்த வார்த்தைகள் சூழ்ந்து பொசுக்கும் நெருப்பாய் ஆயின

பக்தனை திட்டிய வார்த்தைகள் பரமன் பொறுக்க வில்லை .. பத்தினியும் கடவுளே என்றாலும் தண்டனை ஒன்றுதான் ...

பிறர் மனம் நோகினால் அது பிராட்டியாக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும் என்றே நினைத்தான் ராமன் ...

அதனால் இன்றும் வாழ்கிறான் நம் நெஞ்சில் 🙏🙏🙏🙏🙏
ravi said…
விடியலில் வணங்குவோம் விடியட்டும்

பஞ்சகம் என்றால் ஐந்து. பஞ்ச பாண்டவர், பஞ்சாக்ஷரம் எல்லாம் தெரியுமே. லலிதாம்பிகை மேல் ஐந்து ஸ்லோகம். விடிகாலையில் அவளை மனதில் நிறுத்தி தொழுவதற்கு சுகமான இந்த ஐந்து ஸ்லோகங்களை தந்தவர் ஆதி சங்கரர்.
ravi said…
1. प्रातः स्मरामि ललितावदनारविन्दं
विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् ।
आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं
मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥

Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam
Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam |
Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam
Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1||
ravi said…
அம்மா லலிதே, உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும் தரிசித்து வணங்குகிறேன் தாயே.

அன்றலர்ந்த தாமரைக்கு இன்னொரு பெயர் தேவி லலிதா திரிபுர சுந்தரியா?சிவந்த அதரங்கள் மாதுளையா?

நாசியால் முத்துக்கு அழகா? முத்து மூக்குத்தியால் நாசிக்கு அழகா? காது வரை கண் என்று கேட்டிருக்கிறேன் இப்போது பார்க்கிறேன் தாயே.

விஸா.. ஸா.. ஸா.. லாக்ஷி முகத்தில் தான் என்ன பாசமிக்க, அன்பில் தோய்த்த தாயின் புன்சிரிப்பு.. நெற்றியில் கமகமவென்று மானின் கஸ்தூரி ஜவ்வாது வாசனை...
ravi said…
प्रातर्भजामि ललिताभुजकल्पवल्लीं
रक्ताङ्गुलीयलसदङ्गुलिपल्लवाढ्याम् ।
माणिक्यहेमवलयाङ्गदशोभमानां
पुण्ड्रेक्षुचापकुसुमेषुसृणिदधानाम् ॥२॥

2. Praatar-Bhajaami Lalitaa-Bhuja-Kalpavalliim
Rakta-Angguliiya-Lasad-Angguli-Pallava-[A]addhyaam |
Maannikya-Hema-Valaya-Anggada-Shobhamaanaam
Punnddrekssu-Caapa-Kusume[a-I]ssu-Srnni-Dadhaanaam ||2||
ravi said…
கல்பவல்லி என்று கொடி . நினைத்ததை நிறைவேற்றும் தன்மை வாய்ந்த செடிகளில் காமதேனு. அதை போன்ற அழகிய மென்மையான கரங்களை உடையவளே

காலையில் நான் வணங்கும் தேவி லலிதா திரிபுரசுந்தரி.

பிஞ்சு வெண்டைக்காய் என்பதா, அழகிய பளபளக்கும் முளைவிட்ட சிவந்த விரல்களில் சிவந்த மோதிரங்கள் அணிந்தவளே.

கரங்களில் தான் எத்தனை அழகிய கங்கணங்கள் , வளையல்கள், கண்ணைப்பறிக்கும் நவரத்ன மணிகள் பதித்த வாகு வளையங்கள்..

அழகுக்கு இனிமை சேர்க்கவென்றே அம்மா, நீ கரும்பு வில்லை கையிலேந்தி இருக்கிறாயா?

அதற்கு ஏற்ப மலர்க்கணைகள், அம்புகள், அங்குசம் வேறு. தேவி அம்பா லலிதா திரிபுரசுந்தரி உன்னை காலையில் பஜிக்க என்ன புண்யம் செயதிருக்கவேண்டும்.
ravi said…
3. प्रातर्नमामि ललिताचरणारविन्दं
भक्तेष्टदाननिरतं भवसिन्धुपोतम् ।
पद्मासनादिसुरनायकपूजनीयं
पद्माङ्कुशध्वजसुदर्शनलाञ्छनाढ्यम् ॥३॥

Praatar-Namaami Lalitaa-Caranna-Aravindam
Bhakte[a-I]sstta-Daana-Niratam Bhava-Sindhu-Potam |
Padmaasana-[A]adi-Sura-Naayaka-Puujaniiyam
Padma-Angkusha-Dhvaja-Sudarshana-Laan.chana-[A]addhyam ||3||
ravi said…
பொழுது விடிந்தது.

அருணன் சிவந்து கிழக்கே தலை தூக்குகிறான்.

உன் தாமரைத் திருவடி போற்றுகிறேன் அம்பா தேவி லலிதா திரிபுரசுந்தரி.

ஆச்சர்யமாக இந்த திருவடிகள் துளியும் ஒய்வு ஒழிவு இல்லாமல் எத்தனை கோடி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறது. ,

சம்சார சாகரத்தை கடக்கும் படகாக அல்லவோ செயல்படுகிறது.

நான் மட்டுமா உன்னை விடிகாலையில் தேடி வந்து வணங்குபவன்?

அதோ எனக்கு முன்னே தாமரை மலர் மேல் அமரும் ப்ரம்மதேவனே தேவர்கள் சுரர்கள் புடை சூழ உன் னருள் வேண்டி நிற்கிறார்கள்.

தாமரை, அங்குசம், கொடி , சுதர்சன சக்ரம் தாங்கி நிற்கும் அம்பா தேவி லலிதா திரிபுர சுந்தரி உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.
ravi said…
4. प्रातः स्तुवे परशिवां ललितां भवानीं
त्रय्यन्तवेद्यविभवां करुणानवद्याम् ।
विश्वस्य सृष्टिविलयस्थितिहेतुभूतां
विद्येश्वरीं निगमवाङ्मनसातिदूराम् ॥४॥

Praatah Stuve Para-Shivaam Lalitaam Bhavaaniim
Trayyanta-Vedya-Vibhavaam Karunnaa-[A]navadyaam |
Vishvasya Srsstti-Vilaya-Sthiti-Hetu-Bhuutaam
Vidyeshvariim Nigama-Vaang-Manasa-Ati-Duuraam ||4||
ravi said…
எப்போதுமே விடிகாலை புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும் நேரம். இந்த சுகமான நேரத்தில் தேவி லலிதா பவனி உன்னை எண்ணி என் மனம் பொங்கி வழிகிறது.

எண்ணம் மனம் இதற்கெல்லாம் எட்டாதவளே. வேதாந்த ஞானம் இருந்தால் தான் கொஞ்சமாவது உன் கம்பீரம், இரக்கம், புனிதம் எல்லாம் புரிபடும் என்று தோன்றுகிறது.

சிருஷ்டி, ஸ்திதி, லயம் , எனும் முத்தொழில்களையும் புரியும் தாயே, தெய்வமே , பிரபஞ்ச காரணி, வேதங்களும் அறியமுடியாதவளே, வார்த்தைக்கு அப்பாற்பட்டவளே, மனதில் எல்லையற்று அறியப்படுபவளே, அம்பா, தேவி லலிதா திரிபுரசுந்தரி தாயே உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.
ravi said…
5. प्रातर्वदामि ललिते तव पुण्यनाम
कामेश्वरीति कमलेति महेश्वरीति ।
श्रीशाम्भवीति जगतां जननी परेति
वाग्देवतेति वचसा त्रिपुरेश्वरीति ॥५॥

Praatar-Vadaami Lalite Tava Punnya-Naama
Kaameshvari-Iti Kamale[a-I]ti Maheshvarii-[I]ti |
Shrii-Shaambhavii-[I]ti Jagataam Jananii Pare[a-I]ti
Vaagdevate[a-I]ti Vacasaa Tripureshvarii-[I]ti ||5||
ravi said…
உள்ளும் புறமும் அமைதி நிறைந்த சூழ்நிலையில் விடிகாலையில் அம்பே, தேவி லலிதா திரிபுரசுந்தரி உனது நாமங்களை நாவினிக்க உச்சரிக்கிறேன்.

காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீ சாம்பவி, ஜகத் ஜனனி, பரா, வாழுதேவி, திரிபுரேஸ்வரி ........ எவ்வளவோ இன்னும்......
ravi said…
यः श्लोकपञ्चकमिदं ललिताम्बिकायाः
सौभाग्यदं सुललितं पठति प्रभाते ।
तस्मै ददाति ललिता झटिति प्रसन्ना
विद्यां श्रियं विमलसौख्यमनन्तकीर्तिम् ॥६॥

Yah Shloka-Pan.cakam-Idam Lalitaa-[A]mbikaayaah
Saubhaagya-Dam Sulalitam Patthati Prabhaate |
Tasmai Dadaati Lalitaa Jhattiti Prasannaa
Vidyaam Shriyam Vimala-Saukhyam-Ananta-Kiirtim ||6||

ravi said…
நண்பர்களே, அம்பாளின் புகழ் பாடும் இந்த ஐந்து ஸ்லோகங்களை விடாது விடிகாலை மனம் ஒருமித்து சொல்லுங்கள். நல்ல காலம் பிறக்கும்,

வீட்டிலே அடைபட்டிருக்க வேண்டாம். முன் போல் செயல்படுவோம்,

ஆனால் இனிமேல் கொஞ்சம் சுத்தம் சுகாதாரத்தோடு, தொடாமல் மேலே படாமல் கரம் கூப்பி வணங்கி வாழ்த்தியவாறு. வெளியே அதிகம் சுற்றாமல், வீட்டு உணவோடு...., .
அம்பாள் இப்படி வணங்கும் பக்தனுக்கு செல்வத்துட் சிறந்த செல்வமான வித்யை, ஞானம்,பொருள் வளம், பரிபூர்ண சந்தோஷம், நிலையான புகழ் பெருமை எல்லாம் தர காத்திருக்கிறாள். நாம் தான் நெருங்க வில்லை.
ravi said…
இன்று தியாகராஜ ஸ்வாமிகளின் ஒரு அருமையான ஆனந்த பைரவி க்ரிதியை கேட்டேன். வழக்கம்போல் இதை பாடியவர் பாலமுரளி கிருஷ்ணா தான். பாடிப்பார்த்தவன் நான்
ravi said…
இந்த கீர்த்தனையை தியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீ ராமனை எப்படி போற்றுகிறார்?

ஹே பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா, உலகின் கொடுமைகளை நீக்குபவனே , கொடூரர்களை விரட்டியடிப்பவனே, வேதங்களின் உறைவிடமே , அற்புதமான நெஞ்சை அள்ளும், கண்ணுக்கினிய ஆஜானுபாகுவாக அழகிய கம்பீர தோற்றம் கொண்டவனே,
ravi said…
இந்திராதி தேவர்களின் துயர் தீர்ப்பவனே, பரமேஸ்வரன் பாடும் பரந்தாமனே , சரணடைந்தவர்களின் நேசனே, அன்பனே, ஜனகரின் மகளான சீதை எனும் மொட்டவிழ்ந்த தாமரை மலரை சுற்றி ரீங்காரமிடும் வண்டே ,
ravi said…
வீராதி வீர ராஜாதி ராஜனே, அழகான ஆபரணங்களை அணிந்து அழகுக்கு அழகூட்டுபவனே, அரசர்கள் எல்லோரும் மனமகிழ்ந்து போற்றுபவனே, மிருதுவாக சம்பாஷிப்பவனே, இந்த தியாகராஜன் போன்ற தீனர்களை, பக்தர்களை ஆதரித்து காப்பவனே, உன்னை வணங்குகிறேன்.
ravi said…
திருஈங்கோய்மலை


ஈங்கோய்மலை இப்போது திருவிங்கநாதமலை எனும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். காவிரி வடகரைத் தலங்களில் 63வது சிவ க்ஷேத்திரம். கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் காவேரி நதியின் வடகரையில் உள்ள சிவாலயம். ரிஷி அகஸ்தியர் ஈயின் வடிவில் வழிபட்ட ஸ்தலம் இது ரத்தினாவளி சக்தி பீடம்.
ravi said…
இந்த மலைக்கு மரகதமலை என்றும் பெயர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது ரொம்ப புண்யம் என்று நம்பிக்கை.
ravi said…
நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலைப் பாடியுள்ளார்.


இவ்வாலய மரகதாசலேஸ்வரர் பற்றி ஒரு கதை. ஆதிசேஷனும் வாயுவும் யார் வலிமை உள்ளவர் என்று போட்டி போட்டு கடுமையான யுத்தம் இருவருக்கும். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில். ஆகவே சிவன் பெயரும் மரகதாசலேஸ்வரர்.
ravi said…
ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.

பார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
ravi said…
மரகத நாதர் பெயருக்கேற்றவாறு, பச்சை மாமலை போல பளபளக்கும் வண்ணம் கொண்ட சிவலிங்கம்.

சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிகிறது.

கார்த்திகை மாதத்து திங்கட் கிழமையன்று பக்தர்கள் இங்கும் அருகே அமைந்துள்ள வாட்போக்கி மலை (சொக்கர்) கடம்பந்துறை (கடம்பர்) ஆகிய மூன்று சிவஸ்தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக உள்ளது.

'காலையில் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளை ஈய்ங்கோ நாதர்' என்ற வரிசையில் தரிசிக்கிறார்கள்.

இக்கோவிலில் திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்து ஏழெட்டு கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ மன்னர்கள் இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததை சொல்கிறது.
ravi said…
திருஞான சம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.
ravi said…
சக்தி பீடம்



பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் (சேது பீடம்)



இந்தியாவில் இருக்கும் சக்தி பீடங்களில் வட இந்தியாவில் பத்ரிநாத், கிழக்கு பக்கம் பூரி ஜெகன்னாத், மேற்கு பக்கம் குஜராத்தில் துவாரகை தென்னிந்தியாவில் தமிழகத்தில் இராமேஸ்வரம் ஆகியவை வெகு முக்கியமான ஸ்தலங்கள். இராமேஸ்வரம் ஒன்று தான் சிவாலயம் மற்ற மூன்றுமே விஷ்ணு ஸ்தலங்கள்.
ravi said…
இராமநாதபுரம் இராமசுவாமி திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்றது. ராமேஸ்வரம் என்று அறியப்படுவது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் தமிழகத்தில் ஒரே சிவாலயம் இராமேஸ்வரம். அம்மனின் சக்தி பீடங்களில் இது சேதுபீடம் என்று அழைக்கப்படுகிறது.
ravi said…
ராமர் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு திரும்புகையில், ராவணனைக் கொன்றதால் உண்டான ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பரிஹாரம் பண்ண முடிவெடுத்தார்.

''ஹனுமா, உடனே நீ காசிக்கு போய் ஒரு சிவலிங்கம் கொண்டுவா'' என்று அனுப்பினார். அனுமன் திரும்ப தாமதமாகி விட்டதால் சீதை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மணலைக் கொண்டு லிங்கம் செய்கிறாள். அந்த லிங்கம் தான் ராமலிங்கம். அதற்கு பூஜை செயது ப்ரம்மஹத்தி தோஷம் விலகுகிறது.
ravi said…
ஹனுமான் கொண்டு சிவலிங்கம் சீதை செய்த மணல் லிங்கம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு தான் அன்றுமுதல் இன்றுவரை பூஜைகள் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.


அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசி விஸ்வநாதர் என்று பெயர் பெற்றுவிட்டது. அவருக்கு தான் இன்றும் முதல் அபிஷேகம். ராமன் தொழுத ஈஸ்வரன் என்பதால் சிவனுக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர்.
ravi said…
கிழக்கு பார்த்த ராமலிங்கம். இந்த லிங்கத்தின் மீது அனுமனின் வால்பட்ட தழும்பை காண முடிகிறது என்கிறார்கள். . .

லிங்கம் சன்னிதிக்கு இடது புறம் காசி விஸ்வநாதர். முன் மண்டபத்தில் இரா மன், சீதை, இலட்சுமணனும் இவர்களுக்கு தெற்கே ஆஞ்சநேயரும் அருள் பாலிக்கிறார்கள். இராமநாதருக்கு வலப்பக்கம் அம்பிகை பர்வதவர்த்தினியின் சன்னிதி அமைந்தி ருக்கிறது.


இங்கே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு, தினமும் காலை 5 மணிக்கு அபிஷேகம் அற்புதமாக நடைபெறுகிறது. நான் கண்ணார தரிசனம் செய்தேன் . அம்பாள்

பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்துக்குக் கீழே, ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம் அமைக்கப் பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம் இது.


ravi said…
ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல அப்படியிருந்தால் இந்நேரம் அது கரைந்திருக்கும் என்று வாதம் செய்யப் பட்டது. பாஸ்கரராயர் என்னும் அம்பாள் பக்தர் தண்ணீரில் கரையும் உப்பைக் கொண்டு லிங்கம் பிடித்து, அபிஷேகம் செய்தார். '' சாதாரண மனிதன் என்னால் உப்பில் செய்த லிங்கமே நீரில் கறையாதபோது, சீதா தேவியார் பிடித்து வைத்த லிங்கம் எப்படி கரையும்?? என்ற அவர் கேள்விக் கு இன்னும் பதில் இல்லை.

பாஸ்கரராயர் செய்த உப்பு லிங்கத்தை ராம நாதர் சன்னிதிக்கு பின்புறம் இப்போதும் காணலாம். உப்பின் சொரசொரப்பை இப்போதும் அந்த லிங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ravi said…
பித்ருக்கள் பூமிக்கு கூட்டமாக வந்து தம் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களை செய்தவர் களுக்கு தமது ஆசிகளைப் பரிபூரணமாக வழங்குவார்கள். பிதுர் காரியம் செய்ய சிறந்த தலமாக இராமேஸ்வரம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ravi said…
இத்தலத்தில் உள்ள மூன்றாம் பிரகாரம், உலக அளவில் புகழ்பெற்றவை. இராமேஸ்வர கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப் படுகிறது. சீதையின் கற்பை நிரூபிக்க இராமன் தீயில் இறங்க சொன்னார். சீதையைத் தீண்டிய பாவம் நீங்க அக்னி பக்வான் இத்தலத்தில் நீராடி தோஷம் கழித்தார். இராமநாதசுவாமியின் தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலிலும் நீராடினால் நன்மைகள் நாடிவரும்.
ravi said…
பிரார்த்தனைகளைப் பக்தன் மறந்தாலும் கோயில் தீர்த்தத்தில் நீராடினால் உரிய பலன் கேட்காமலேயே கிட்டும். இறைவனின் அருளும், இறந்தோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் .
ravi said…
சக்தி பீடம் திருவானைக்கா


திருவானைக்காவல், திருவானைக்கோவில் என எப்படி அழைத்தாலும் அந்த பழம் பெரும் சிவாலயம் திருச்சிக்கு அருகே உள்ளது.

எத்தனையோ பேர் நமக்கு முன்னே இந்த ஆலயத்துக்கு விஜயம் செயதிருந்தாலும் நாம் நினைத்து பார்ப்பது சிவபக்தர்கள் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் விஜயம் செயது தரிசனம் செய்தது பற்றி தான். ஏன் என்றால் அவர்கள் தான் அருமையாக சிவனை, அம்பாளை, இந்த ஊரை பற்றி எல்லாம் பாடி இருக்கிறார்கள். நம்மால் முடியுமா?
ravi said…
இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது. காவிரி நதியின் வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது பாடல்பெற்ற சிவ ஸ்தலம்.

இந்த ஆலயத்தின் நாலாவது பிரஹார சுவர் கட்டும்போது சிவபெருமானே ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு விபூதியை கூலியாகக் கொடுத்ததாக ஸ்தல வரலாறு. அந்தந்த வேலைக்காரர்களின் உழைப்புக்கேற்ப அவர்களுக்களித்த விபூதி பொற்காசுகளாக மாறியதாக அந்த ஸ்தல புராணம் சொல்கிறது. ஆகவே தான் அந்த மதில் சுவற்றுக்கு திரு நீற்றான் மதில் என்று இன்னும் பெயர்.
ravi said…
மூலவர் பெயர் ஜம்புகேசுவரர். லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே எப்போதும் ஜலத்தில் இருக்கிறது. எந்த காலத்திலும் இந்த ஈரம் வற்றவே இல்லை.

ஜம்புகேஸ்வரர் ஆலயம் பிரம்மாண்டமான ஒரு கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பு. உயரமான கோயில் மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நாலாம் பிரஹாரத்தில் உள்ளது. தனி சந்நிதி. கிழக்கு பார்த்து ஆளுயரம் நிற்கிறாள். ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவாக ஜல லிங்கம்.
ravi said…
ஆதி காலத்தில் இங்கே நிறைய வெள்ளை நாவல் மரங்கள் காடாக இருந்தது. ஒரு வெண் நாவல் மரத்தடியில் சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில் பரமேஸ்வரனுக்கு சேவை செய்த சிவகணங்களான புஷ்பதந்தன், மாலியவான் என்ற இருவரிடையே அதிகமாக சிவ சேவை புரிவது யார் என்ற ஒரு போட்டி. ஒருவரையொருவர் சபித்துக் கொண்டதால், புஷ்பவான் யானையாகவும், மாலியவான் சிலந்தியாகவும் திருவானைக்காவில் பிறந்து சிவனை வழிபட்டார்கள்.
ravi said…
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது.

சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை சிலந்தி பின்னிய வலையை சிவனுக்கு அவமரியாதையாக கருதி அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. அவற்றின் தூய பக்தியை மெச்சி சிவனருளால் யானை, சிவகணங்களுக்கு தலைவனாகவும் சிலந்தி கோச்செங்கட் சோழனாகவும் பிறந்தனர்.
ravi said…
பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்கா ஆலயம் செல்பவர்கள் அங்கே கோச்செங்கட் சோழன் சந்நிதியை காணலாம். ஆலயம் பெரிய ஐந்து பிரஹாரங்கள் கொண்டது. ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமாஸ்கந்தர் மண்டபம் ஆகவே சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.
ravi said…
திருவானைக்கா சிவலிங்கம் காவிரி ஆற்று மண்ணைப் பிசைந்து அகிலாண்டேஸ்வரி படைத்தது. காவிரி ஜலம் அதிகமாகி நீர் லிங்கமாக மாறியது. . நீரால் செய்யப்பட்டதால் சிவலிங்கம் ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றது. அம்பாள் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகத் தெரியும்படி உள்ளது. இந்தக் காதணிகளை தாடங்கங்கள் என்பார்கள்.
ravi said…
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்ரமாக கோபாக்னி யோடு கொடூரமாக இருந்ததால் பக்தர்கள் வழிபட பயந்ததால் அவள் கோபம் தணிய இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்ரத்தைத் தணித்தார் என்று வரலாறு.

அம்பாள் உக்ரம் தணிய எதிரே விநாயகர், பின்னால் முருகன். பிள்ளைப்பாசம் கோபத்தை மறைக்காதா?
ravi said…
தினமும் விடிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அம்பாள் சந்நிதியில் பாடி இருக்கிறேன். திருவானைக்கா அப்பர் சம்பந்தர், சுந்தரர், பாடல்களைப் பெற்ற ஸ்தலம்.

சக்தி பீடங்களில் திருவானைக்கா ஒன்று.
ravi said…
ஜம்புகேஸ்வரர் மூலஸ்தானத்தில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாக லிங்க தரிசனம்.

ஒன்பது துளைகள் மனித தேகத்தின் நவ துவாரத்தை குறிக்கும். காளமேகம் பற்றி எழுதும்போது வரதன் என்கிற பெயரில் படிப்பறிவில்லாதவனாக இருந்த ஒருவன் ஒரு நாள் இரவில் இந்த கோவிலில் படுத்துறங்கும்போது அம்பாள் அதிர்ஷ்டவசமாக அம்பாளின் தாம்பூல பிரசாதத்தை தனது வாயில் ஏற்றுக்கொண்டு அவள் வரப்ரசாதத்தால் வரதன் பிரபலமான காளமேகப் புலவர் ஆனான்.

வேறு ஒரு பக்தன் ஸரஸ்வதி கடாக்ஷம் பெற பல காலம் தவமிருந்து அவள் அன்றிரவு அவனுக்கு தனது தாம்பூலத்தை தர வந்தபோது ''சேச்சே எச்சில்.. வேண்டாம் '' என்று இழந்ததை அங்கே படுத்திருந்த எந்த முயற்சியும் செய்யாத முட்டாள் வரதன் பெற்று கவி காளமேகமானான். இதல்லவோ இருட்டு அதிர்ஷ்டம். குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டாம்.

திருச்சியில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருவானைக்காவல் உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்தும் திருவானைக்கா ஆலயம் செல்லலாம்.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை