பச்சைப்புடவைக்காரி - சங்கீத திரிமூர்த்திகள் - (185)

                                                  பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

சங்கீத திரிமூர்த்திகள் 

{185} 

உபயம் : ஆன்மீகம் 


அம்மா - திருவாரூர் தியாகேச பெருமாளையும் கமலாம்பிகையையும் நாங்கள் நீங்கள் சொல்லக்கேட்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்தோம் .. சீஇக்ரம் அந்த ஆலயத்தை தரிசிக்கக்கூடிய பாக்கியம் தாங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் ... 

கண்டிப்பாக ரவி .... இன்று  என்ன வேண்டும் சொல்  ரவி .... 

அம்மா மனம் இன்னும் திருவாரூரில் தான் இருக்கிறது - சங்கீதத்தில் கரை கண்ட மும்மூர்த்திகளுக்கும் திருவாரூர்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் - அம்மா இந்த மகான்களைப்பற்றியும் தங்களிடம் இருந்து தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் - இன்று இந்த வரம் வேண்டும் தாயே 

சரி நீ சொல்வதைப்போல் ஒரு காட்சியை அமைக்கிறேன் - பார் 

காட்சி  மாறுகிறது : 

அப்பப்பா! இந்த காஞ்சி காமாட்சிக்கு அவளது மூத்த மகன் விநாயகரின் மீது எவ்வளவு பிரியம்! 

இந்த காஞ்சியை முதலில் அரசாண்டது ஆகாச பூபதி என்ற ராஜ ராஜன். அவன் சிறந்த தேவி உபாசகன். முப்பொழுதும், எப்போதும் தேவியின் திருப்பாதமே கதி, என்று வாழ்ந்த செம்மல். அவனது பக்தியைக் கண்டு மெச்சிய காமாட்சி தனது சீமந்த புத்திரனான விக்னேஸ்வரனையே தந்து விட்டாள். 

ஆம். தனது சீமந்த புத்திரனை, ஆகாச பூபதியின் மகனாக பிறக்க கட்டளையிட்டு விட்டாள் அம்பிகை. தாய் சொல்லை தட்டாத தனயனாக, விநாயகனும் ஆகாச பூபதிக்கு மகனாக உதித்தான். 


அவனது பெயர் சூட்டுவிழா நாள் வந்தது.  காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டது. விழாவின் முக்கிய அங்கமாக சுமங்கலி பூஜை நடந்தது! சுமங்கலிகளுக்கு படைக்கவிருக்கும் உணவு தயாராவதை, மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு ஆகாச பூபதியின் மனைவியினுடையது என்று சொல்லவும் வேண்டுமா!

உணவு தயாராவதை மேற்பார்வை யிட, அந்த சௌபாக்யவதி சமையல் அறைக்குள் நுழைந்தாள். உணவு உண்ணும் சுவாசினிகள் (சுமங்கலிகள்)சாட்சாத் காமாட்சியின் அம்சம் என்பதால், உணவில் ஒருவித குறையும் இருக்கக்கூடாது, என்று தோன்றியது அவளுக்கு.

உடன், தானிய வகைகளை தனது கைகளால் களைந்து பார்த்து, அதன் தரத்தை கண்டறிந்தாள். அப்படி அந்த மாதரசி செய்யும் போது, அவளது மோதிரத்தில் இருந்த ஒரு தங்க மணி உதிர்ந்து,  அந்த தானியக் குவியலில் கலந்து விட்டது. 



இதை யாரும் கவனிக்க வில்லை. சுவாசினிகளுக்கு பூஜை செய்தபடியே, ஆகாச பூபதி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டு வந்தான். அந்த சுமங்கலிகளின் கூட்டத்தின் நடுவே,  ஒரே ஒரு சுமங்கலியின் முகத்தை கவனித்த ஆகாச பூபதிக்கு, அது அதிகம் பழகிய முகம்போல இருந்தது. அந்த அருள் வதனத்தை கண் கொட்டாமல் சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த அந்தப் பெண், ஒரு மர்மப் புன்னகை பூத்த படியே, இலையில் பரிமாறியிருந்த மோதகத்தை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள். 

அதை கவனித்த மன்னன், மற்ற சுமங்கலிகளுக்கு பூஜை செய்ய,  அவர்களை நோக்கி நகர்ந்தான். ஆனால் அவன் மனதை” யார் அந்த சுமங்கலிப் பெண் ?” என்ற கேள்வி மட்டும் பாடாய்ப் படுத்தியது. 

அதற்கு பதிலை, யோசித்துக் கொண்டே பூஜையைத் தொடர்ந்தான். சட்டென்று கருவறையில் இருக்கும் காமேஸ்வரியின் திருமுகமும்,  பந்தியில் அமர்ந்து உண்டவளின் திருமுகமும் ஒரே முகம்போல மனதில் நிழலாடியது. அதிர்ந்த மன்னன்,  சட்டென்று கையில் இருந்த பூஜை சாமானை போட்டு விட்டு,  அம்பிகை இருந்த இடத்திற்கு ஓடினான். 

அங்கே அம்பிகையைக் காணவில்லை. ஆனால், அரண்மனைக்கு வெளியில் கொட்டும் மழையின் ஆரவாரம் காதைப் பிளந்தது. கொட்டுவது நீர் இல்லை,  தங்க மணிகள்!

ஆம் மகாராணியின் தங்கக் கைகளில் இருந்த தங்க மோதிரத்தின் ஒரு சின்ன மணி, மோதகத்தில் கலந்திருந்தது.  அந்த மோதகம் சரியாக அம்பிகை உண்ணும் இலையில் வந்து விழுந்தது. அந்த தங்கமணி மோதகம், அம்பிகையின் தங்க வயிற்றில் புகுந்த அடுத்த நொடி, காஞ்சி முழுவதும்,  அதாவது தொண்டை மண்டலம் முழுவதும்,  தங்கமழையாக பொழிந்து தீர்த்தது.

தெளிந்த மனதோடு, சதா தன்னை தியானிக்கும் பக்தனுக்கும் ( ஆகாச பூபதி) தாய் சொல்லை தட்டாமல் பூமியில் பிள்ளையாக பிறந்த கணேசனையும், பெருமைப் படுத்த ஊரெங்கும் தங்க மழை பொழிந்து விட்டாள் காமாட்சி. 

இதற்கு நன்றி சொல்வதற்காக இன்றும் பூமியில் பிறந்த விநாயகன், சிலா ரூபமாக துண்டீர மகாராஜன் என்ற நாமத்தோடு, காஞ்சி காமேஸ்வரியை சேவித்தபடியே இருக்கிறார். (காஞ்சிபுரம் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய விஷயம் ) விநாயகன், துண்டீரன் என்ற பெயரோடு ஆட்சி செய்ததால் காஞ்சிக்கு துண்டீர நாடு என்று பெயர் வந்தது. அது நாளடைவில் மருவி தொண்டைநாடு என்று ஆனது.

“அண்டரும் புகழ் துண்டீரன் ஆண்டு,  துண்டீர நாடாய், அத்
தண்டகன், பின்னராண்டு தண்டக நாடாய்...”

என்று விநாயக புராணம் அழகாக இதை எடுத்துக் கூறும். அது மட்டுமில்லை, ஊமையாக இருந்து பின் அம்பிகையின் அருளால் அமுதமாக கவி பாடிய மூகர் “துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருஷ்டி பிரதாத்ரி” என்று அழகாக இந்த சரிதத்தை சொல்கிறார். (மூக பஞ்சதியின் ஸ்துதி சதகத்தில் “கண்டீக்ருத்ய” எனத் தொடங்கும் ஸ்லோகம்.)

தியாகராஜர்! 



இந்த விருத்தாந்தம் நடந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் காஞ்சிக்கு விஜயம் செய்தார் ராம பக்தர் தியாகராஜர்! அவரது காதுகளில் இந்த சரிதம் விழுந்தது. சரிதம் செவி வழியாக உள்ளத்தில் புகுந்த அடுத்த கணம், கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்தது. ஓடினார் காமேஸ்வரியின் சந்நதிக்கு!  அங்கு அழகே வடிவாய், அன்பே உருவாய், கருணையின் நிறைவாய் அன்னை காமாட்சி அருள் காட்சி தந்துகொண்டிருந்தாள்.

இசையில் சிகரம் தொட்ட தியாகராஜரின் மனதில் இப்போது கோபம் குடி கொண்டது. காரணம் இல்லாமலா? கணேசனை பெற்ற வயிற்றால்தானே நம் அனைவரையும் அவள் பெற்றாள். நம் அனைவருக்கும் ஒரே தாய் அவள்தான் என்னும்போது, குழந்தைகளான நம்மிடத்தில் அவள் பார பட்சம் பார்க்கக்கூடாது இல்லையா?

ஒரு புதல்வனுக்காக தங்கமழை பொழிவது மற்றொரு புதல்வனை தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம்? அம்பிகையை தன் தாயாக நினைத்ததால், எந்த ஒரு குழந்தைக்கும் தாயிடம் வரும் ஒரு பொய்க் கோபம் தியாகராஜருக்கும் வந்தது. 

உடன் தனது கோபத்தை பாட்டாகவே பாடிவிட்டார்!“ஆனைமுகனை காப்பது போல என்னை காக்க வேண்டும் அம்மா,பாரில் உன்னை அல்லால் எனக்கு வேறு தெய்வம் கதி ஏது?”(“விநாயகுனி” என்ற தியாகராஜர் கீர்த்தனையின் தமிழாக்கம் - மேலே நாம் சுருங்க அனுபவித்த மூக கவியின் விருத்தாந்தத்தை இந்த கீர்த்தனையில் தியாகராஜர் குறிப்பிடுகிறார்.)

இதை படித்த பின் இதே கேள்வியை நாமும் அந்த காமாட்சியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது இல்லையா! ? 

“கிரி ராஜ சுதா தனையா” என்ற மற்றொரு விநாயகர் கீர்த்தனையிலும், “அம்பிகையின் குமாரனே”  என்று அம்பிகையை முன்னிறுத்தித்தான், அவர் கணேசனை அழைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 

முத்துசுவாமி தீக்ஷிதர்




முத்துசுவாமி தீக்ஷிதர் தற்போதைய வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள் இவரது மூதாதையர்கள். முத்துசுவாமி தீக்ஷிதரின் தகப்பனார், ராமஸ்வாமி தீக்ஷிதர்.

பெரிய சங்கீத வித்வான். ஹம்சத்வனி என்ற ராகத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்த மகான்தான். பிறகு சில காரணங்களுக்காக திருவாரூருக்கு புலம் பெயர்ந்தார் இந்த மகான். 

அங்கே அந்த ஆரூரான் தியாகராஜர் கூட ராமசுவாமி தீக்ஷிதரின் இசைக்கு அடிமை ஆகிவிட்டான் என்றால் அது மிகை அல்ல. ஆம் அவனது உற்சவத்தின் போது நாதஸ்வர வித்வான்கள் செய்ய வேண்டிய ஆலாபனைகளை எல்லாம் இவர் தான் எழுதித் தர வேண்டும் என்று கட்டளையேயிட்டு விட்டானாம் திருவாரூர் தியாகராஜனாக விளங்கும் ஈசன்.

இவரது அரும் தவப் புதல்வனாக பிறந்தவர் தான் முத்துசுவாமி தீக்ஷிதர்! 

பின்னாளில் திருத்தணி முருகன் அருளால் கவி பாட ஆரம்பித்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். 

அவர் திருச்செங்காட்டாங்குடியில் கோயில்கொண்ட வாதாபி கணபதியை போற்றி “வாதாபி கணபதிம் பஜே ” என்ற பாடலை இயற்றினார். (அந்தப் பாடலின் முதல் இரண்டு சொற்களை படித்தவுடன் கர்நாடக இசைப் பிரியர்களின் இதழ்கள் அந்தப் பாடலை முணுமுணுக்காமல் மேலே கட்டுரையை படிக்காது என்பது உறுதி!) இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த கீர்த்தனை அமைந்த ராகம் ஹம்சத்வனி எனும் ராகம். 

இந்த ராகத்தை உலகிற்கு தந்தவர் ராம சுவாமி தீக்ஷிதர். அதாவது முத்து சுவாமி தீக்ஷிதரின் தந்தை. ஆனால் அந்த மகான், இந்த ராகத்தில் விநாயகரைப் பற்றி ஒரு பாடல்கூட இயற்றாதது விந்தைதான்!  ஆனால் அந்தக் குறையை வாதாபி கணபதிம் என்ற கீர்த்தனையை ஹம்சத்வனியில் அமைத்து முத்துசுவாமி தீக்ஷிதர் தீர்த்து விட்டார்.

முத்துசுவாமி தீக்ஷிதர் மட்டும் அந்தக் காலத்தில் இந்தக் கீர்த்தனைக்கு உரிமம் வாங்கியிருந்தால் இந்நாளுக்கு அது பல கோடிகளுக்கு போகும் என்பது கர்நாடக இசை உலகில் பரவலாக இருந்து வரும் ஒரு கருத்து.

ஹம்சத்வனி ராகத்தால் விநாயகனை பூஜிக்கும் மரபை முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் முத்துசுவாமி தீக்ஷிதர். இதன் பிறகு பல கீர்த்தனைகள் ஹம்சத்வனியில் அமைக்கப் பட்டு விநாயகனுக்கு சமர்ப்பிக்கப் பட்டது.

ஹம்சத்வனி ராகத்துக்கும் விநாயகருக்கும் இருக்கும்  தொடர்புக்கான காரணம் இன்று வரையில் பலருக்கு விளங்காத புதிர் தான்!

“துக்கம் சர்வம் ஹந்தீத ஹம்ச:” என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதாவது ஹம்சம் என்ற சொல்லுக்கு அனைத்து துன்பத்தையும் நாசப் படுத்துபவன் என்று பொருள். இது விக்னங்களை களையும் வித்தகனான விநாயகனை (யும்)  குறிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? “த்வனி” என்ற சொல் ஓசை அல்லது இசை  என்ற பொருளை உடையது. 

இப்போது பொருளை சேர்த்து படித்துப் பாருங்கள். “துன்பங்களை போக்குபவனின் இசை” என்றல்லவா வருகிறது. ஆக பெயரிலேயே விநாயகனுக்கு உரிய ராகம் என்று இருக்க வேறு சாட்சிகள் வேண்டுமா? 

இப்படி விநாயகனுக்கு உரிய ராகத்தை நமக்குக் கண்டு பிடித்துத் தந்த, முத்து சுவாமி தீக்ஷிதருக்கும், அவர் தந்தைக்கும் நாம் காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?

சியாமா சாஸ்திரிகள்



ஆச்சரியம் போல சாஸ்திரிகளின் விநாயக கீர்த்தனை எதுவும் கிடைக்கவில்லை. பொறுங்கள்! மனம் நோக வேண்டாம். நம்மை காமாட்சி கைவிடவில்லை. பெரிய காமாட்சி பக்தரான ஷ்யாமா சாஸ்திரி, அம்பிகையை பல இடங்களில் “குஞ்சர கமனே” என்று அழைக்கிறார். (எடுத்துக் காட்டாக “காமாட்சி லோக சாட்சிணி” என்ற கீர்த்தனையை எடுத்துக் கொள்ளலாம்.) யானையை வட மொழியில் குஞ்சரம் என்று சொல்லுவார்கள். “கமனே” என்றால் நடையை உடையவள் என்று பொருள். 

அதாவது அம்பிகையின் நடை அழகை வர்ணிக்க வந்த சாஸ்திரிகள் யானையை நினைவு கொள்கிறார். யானை முகனின் அன்னையிடம் அவனது ஜாடை இல்லாமல் போகுமா? “குமார கண நாதாம்பா” என்று அம்பிகை குஞ்சரனுக்கும் குமரனுக்கும் தாயாக விளங்குவதை, லலிதா ஸஹஸ்ரநாமமும் சொல்லும். 

மாபெரும் சக்தி உபாசகரான சியாமா சாஸ்திரிகள், லலிதா ஸஹஸ்ர நாமத்தின் வழி நின்று அம்பிகையை சேவித்தார் என்று சொல்லலாம். அதாவது  அவர் விநாயகனையும் அம்பிகையின் உள்ளே தரிசித்தார் என்று கொள்ளலாம்.

என்ன ரவி ! உனக்குப்பிடித்த என் கணேசனையும் மேல் சொன்ன விஷயத்தில் முக்கிய நபராக கொண்டு வந்து விட்டேன் பார்த்தாயா ? 




அம்மா உன் சொல்லின் சாதுரியம் யாருக்கு வரும் - சங்கீத மும்மூர்த்திகளையும் விக்னேஸ்வரரையும்  ஒரே சமயத்தில் உங்கள் அருளால் தரிசித்தேன் இன்று -- 

முடிபுனைந்து செங்கோலோச்சி 
முழுதுலகும் செயங்கொண்டு திறைகொண்டு 
நந்திகண முனைப்போர் சாய்த்துத் 
தொழுகணவற்கு அணிமணி மாலிகைச் சூட்டித் 
தன்மகுடம் சூட்டிச் செல்வந்த் 
தழைவுறு தண் அரசளித்த பெண்ணரசி 
அடிக்கமலம் தலைமேல் வைப்பாம்

அம்மா  அரசுகளுக்கெல்லாம் பேரரசியாகத் திகழ்பவள்  தாங்கள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். அம்மா உன்னை துதித்தால் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வாய்க்கும்; கஷ்டங்கள் நீங்கி எங்களுடைய  நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 




பெருமையுடன் நகர்ந்தாள் கமலாம்பிகை என்கிற விசாலாஷி என்கிற காமாக்ஷி என்கிற, அபிராமி என்கிற, லலிதாம்பிகை என்கிற மீனாக்ஷி ....


Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 20/317*

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*,
ravi said…
யாம ஸ்ரீ மிதிலாம் தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம் கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் யத்ர அஸ்தி வாஸுந்தரம்

இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம் யத் மந்த ஸ்மிதம் ஆபபௌ ரகுமணே தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ

மிதிலையை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தில் ராமன் பூத்த புன்னகை
ravi said…
யாம ஸ்ரீ மிதிலாம்

ராமா யாகங்கள் இனிதே உன் தயவால் முடிந்துவிட்டன --
உங்கள் இருவரையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சொல்லப்போகிறேன் - அந்த இடத்தின் பெயர் மிதிலாபுரி

தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம்

அந்த மிதிலாபுரியின் மகத்துவம் என்ன என்று தெரியுமா ? அங்கே ஒரு வில் ஒன்று இருக்கிறது - அது பரமேச்வரனான சிம்புவின் வில் அந்த வில் மிகவும் அற்புதம் , அபூர்வம் - பார்த்தாலே அவ்வளவு புண்ணியம் கிடைக்கும்
ravi said…
அது மட்டும் அல்ல இன்னுமொரு அதிசயமும் அபூர்வமும் அங்கே இருக்கிறது அதுதான் சீதா - அழகும் பண்பும் கொண்டவள் - பூமியை ஜனகர் உழும் போது வில்லுடன் அவளும் ஜனகருக்கு கிடைத்த இரண்டு வரங்கள்

சீதையின் அழகுக்கு உவமையே சொல்லமுடியாது

கம்பன் பெண்களை வர்ணிக்கும் பொது இவள் மஹாலக்ஷ்மியைப்போல் இருக்கிறாள் என்பான் ஆனால் மஹாலக்ஷ்மியே சீதையாக வந்தபோது கம்பனுக்கு உவமை சொல்ல யாருமே கிடைக்கவில்லை - அபிராமி பட்டர் இப்படி பாடுகிறார்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!
ravi said…
இழந்ததை எண்ணி ஏங்கி நிற்கும் என் நெஞ்சமே! அஞ்சாதே, அழகில் வேறெவரும் ஈடாகாத அளவில் ஒப்பற்ற திரு மேனியைக் கொண்ட கொடி போன்றவளும், வேதங்களின் அடி, இடை, முடி என எங்கும் திருநடம் புரிந்ததால் சிவந்த தாமரை போன் ற திருவடி மலர்களைப் பெற்றுள்ளவளும், குளிர்ச்சி பொருந்திய இளம்பிறையைத் தன் திருமுடியிலே சூடிக் கொண்டிருப்பவளுமான யாமளை என்னும் அழகிய கற்பகப் பூங்கொம்பாம் அபிராமி இருக்கு ம்போது உனக்கென்ன குறை?
ravi said…
கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் - அவள் கன்னிகளில் ரத்தனமாக ஜொலிப்பவள் - அதிகமான சௌந்தர்யமும் பிரகாசமும் கொண்டவள்

யத்ர அஸ்தி வாஸுந்தரம் -- பூமி தாயின் மகள் அவள்

ராமா மிதிலாபுரி இரண்டு பாக்கியங்கள் செய்துள்ளது - ஒரு பக்கம் பெண்களில் ரத்தினமாய் இருக்கும் சீதை - மறு பக்கம் சம்புவின் அற்புதமான வில் இவை இரண்டும் மிதிலாபுரியின் மகுடத்திற்கு நவரத்தினங்களாக இருப்பவை ...
ravi said…
இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம்

மிதிலையை விசுவாமித்திரர் வர்ணிக்கும் போது ராமர் முகத்தில் மெல்லியதாய் புன்னகை தோன்றியதாம் - அந்த புன்னகையில் பாதி வீரமாகவும் மறு பாதி வெட்கத்தையும் காட்டியதாம் --- வீரம் --- சிவனின் அற்புதமான வில்லை உடைக்க அதற்கு ஏத்த வீரம் வரவேண்டுமே -- அந்த வீரம் புன்னகையாக ஒரு பாதியாகவும் - சீதையின் அழகை வர்ணித்தவுடன் அதனால் வெட்கமும் பாதி புன்னகையாய் வந்ததாம்

ராமா இப்படி இரண்டும் சேர்ந்த அந்த புன்னகையை வடுவூரிலும் உன் அருளால் பார்க்கிறோம்
ravi said…
நீ கொடுத்த சொற்களால் மாலை ஒன்றை சூட்டுகிறேன்

நீ கொடுத்த கரங்களால் உனை கை எடுத்து தொழுகிறேன்

நீ கொடுத்த கண்களால் உன் மேனி தனை பருகுகின்றேன்

நீ கொடுத்த வாழ்வு தனை நீ திருப்பி கேட்கும் வேளையில்

உன்னுள் நான் சேரவேண்டும் வேறு ஒன்றும் கேட்டறியேன் ...🥇🥇🥇🥇🥇
ravi said…
என்னால் என்ன முடியும் சாயி எதுவும் நீயே ஆனபின்

என்னால் எதுவும் முடியும் என்றே நினைத்தால் எனை விட சிறந்த ஒரு மூடன் உண்டோ சாயி ?

என்னால் முடியும் என்று ஒன்று இருந்தால் எல்லோரையும் நானாக நினைக்க வேண்டும் சாயி ..

எழும் அவர்கள் துயர் துணை விரைந்து சென்றே துடைக்க வேண்டும் சாயி 🌷🌷🌷🌷🌷
ravi said…
எனக்கும் உனக்கும் இடைவெளி உண்டோ அருணாசலா

எனக்குள் நீ இருக்க நான் வேறோ அருணாசலா

என்னுள் உனை காண கோயில்கள் பல செல்வதில் அர்த்தம் என்ன அருணாசலா

என்னை உனக்கு தந்தபின் என்னிடம் கேள்வி என்ன அருணாசலா 🌸🌸🌸🌸🌸
ravi said…
கங்கை பிறந்தாள் பனி சடையின் முடி தனில்

காவேரி பிறந்தாள் குடகு நாட்டின் மடி தனில்

யமுனை பிறந்தாள் கண்ணனின் புல்லாங்குழல் தனில்

சரஸ்வதி பிறந்தாள் பூமி தாயின் திருநாவில்

புன்னகை பிறந்ததோ உன் திருமுகத்தில் ... இறைவன் அன்று சிந்திய அதே புன்னகை இன்றும் காண்கிறோம் உன் திருமுகத்தில் 🙂🙂🙂
ravi said…
*சௌந்தரய லஹரி*💐💐💐👣👣👣

*100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது*

💐💐💐ஸகல ஸித்தி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:

ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம்
ravi said…
வாக்கிற்கு பிறப்பிடமாகிய தாயே !

கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும்,

அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும்,

சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும்,

உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்.🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
“ஸ்ரீ ஆசார்யர் எதற்குமேலே நினைக்க முடியாதோ அந்தத் தத்துவத்தைச் சொன்னவர்.

அவரே இப்படித் தாழ்மையோடு சொல்லியிருக்கிறார்.

*இந்த ஒரு சுலோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலன் ஊண்டாகும்*.

எப்படி ?

எல்லா வித்தைகளுக்கும் விரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்தச் சுலோகத்தில் இருக்கிறது.

பூஜை செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும்.

இதில் நீராஜனம் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்தச் சுலோகம் சொல்லுவதற்கு இதுவும் ஓர் அடையாளம் போல் இருக்கிறது.

–காமகோடி சங்கராசாரியார்.💐💐💐💐💐
ravi said…
*Lalita Trishati 241 - 250*👌👌👌
ravi said…
*241. Kakāriṇī ककारिणी*👌👌👌the nama says that She Herself is Ka

*242. Kāvyalolā काव्यलोला*💐💐💐 She is fond of poetic compositions 🥇🥇🥇

*243. Kāmeśvaramanoharā कामेश्वरमनोहरा*👌👌👌 She steals the heart of Kamesvara🔥🔥🔥

*244. Kāmeśvara-prāna-nāḍī कामेश्वर-प्रान-नाडी*💐💐💐 She is the vital force of kamesvara

*245. Kāmeśotsaṅgavāsinī कामेशोत्सङ्गवासिनी*👌👌👌 She is sitting on the left thigh of Siva 🌺🌺🌺
ravi said…
*246. kāmeśvaraliṅigitāṅgī कामेश्वरलिङिगिताङ्गी*💐💐💐💐💐
ravi said…
She is in embrace with Śiva and because of this Divine embrace, universe is created.

Indirectly embrace here refers to their mutual dependency and trust.🥇🥇🥇
ravi said…
*247. Kāmeśvarasukhapradā कामेश्वरसुखप्रदा*💐💐💐
ravi said…
She gives comfort to Śiva.

This nāma can be explained in two ways.

First, She makes Him comfortable by taking over all His Powers (svātantrya śakti) and administer the universe.

Alternatively, She gives all comforts to Śiva and ensures that He remains in the state eternal happiness.

As She makes Him happy, She is said be the source of Bliss, or She Herself is in the form of Bliss.

The former interpretation broadly applied to dakṣinācāra (upright worship) and the latter interpretation is applicable to vāmācāra (tantric worship).🌷🌷🌷🌷🌷
ravi said…
This concept appears in Śrī Rudraṁ (X.2), which says,

या ते रुद्र शिवा तनुः शिवा विश्वाह भेषजी।

शिवा रुद्रस्य भेषजी तय नो मृड जीवसे॥

yā te rudra śivā tanuḥ śivā viśvāha bheṣajī |

śivā rudrasya bheṣajī taya no mṛḍa jīvase ||🌸🌸🌸🌸🌸
ravi said…
*Meaning:*👌👌👌

O! Rudra! The best panacea for transmigration is Your union with Your Power, the most auspicious Parāśakti, grants us Bliss.

The verse says that neither Rudra nor His Consort in their individual capacities cause Bliss.

He, in the company of His Consort alone causes Bliss.

Perpetually remaining in the state of Bliss leads to realization of the Self within.

Once the Self is realized, liberation is not far away.

The state of liberation depends upon two counts – one’s karmic account and one’s sādhana (practice).🥇🥇🥇🥇🥇
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 113*
🌸🌸🌸🌸

அக்ரகண்யா,சிந்த்யரூபா, கலிகல்மஷநாஶிநீ |
காத்யாயினீ, காலஹந்த்ரீ, கமலாக்ஷ நிஷேவிதா ‖ 113 ‖

🌸🌸🌸🌸
अग्रगण्या,ऽचिन्त्यरूपा, कलिकल्मष नाशिनी |
कात्यायिनी, कालहन्त्री, कमलाक्ष निषेविता ‖ 113 ‖
🌸🌸🌸🌸

Agraganyaa, chintyarupaa, kalikalmaSha naasini |
kaatyaayini, kaalahantri, kamalaaksha nishevitaa ‖ 113 ‖
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் அக்ரகண்யாயை நம;
ஓம் அசிந்த்யரூபாயை நம;
ஓம் கலிகல்மஷ நாஶின்யை நம;
ஓம் காத்யாயின்யை நம;
ஓம் காலஹந்த்ர்யை நம;
ஓம் கமலாக்ஷ நிஷேவிதாயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*553.அக்ர கண்யா* - மேன்மையோடு முதன்மையாக எண்ணப்படுகிறவள் (உயர்ந்த பீடத்தில் இருப்பவள்).
🌸🌸🌸🌸

*554.அசிந்த்ய ரூபா* -நினைவுக்கு (அ) மனதுக்குக் கோசரமில்லாத (எண்ண முடியாத) ரூபத்தையுடையவள் அம்பாள்.சிந்தனைக்கு அப்பாற்பட்டவள்.
🌸🌸🌸🌸

ravi said…
*555.கலிகல்மஷ னாஶினீ* - கலியுகத்தில் சகல துன்பங்களையும், பாபங்களையும், இடையூறுகளையும் நாசம் செய்பவள் அம்பாள் திருவடி.
🌸🌸🌸🌸

*556.காத்யாயினீ* - கதரென்ற ரிஷியின் கோத்திரத்தில் உத்பவித்தவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. காத்யாயன ரிஷியின் குமாரி . ஸகல தேவதைகளின் தேஜஸ்ஸின் (ஓளிமிக்க) ருபம்.
🌸🌸🌸🌸

ravi said…
*557.காலஹந்த்ரீ* - காலனை வதைப்பவள்
🌸🌸🌸🌸

*558.கமலாக்ஷ நிஷேவிதா*- விஷ்ணுவினால் உபாஸிக்கப்பட்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை
🌸🌸🌸🌸
ravi said…
திருக்கோளூர்- (பெண் பிள்ளை ரகசியம்)


காட்டுக்குப் போனேனோ பெருமானைப் போலே - 53
ravi said…
ராமனுக்குப் பட்டாபிஷேகம்

மன்னன் தசரதன் அறிவித்து விட்டான்

சொல்ல வந்த மந்தரைக்கு பொன்மாலையை பரிசளித்தாள் கைகேயி..

"இது மகிழும் தரணமா? அவன் அரசனானால் உன் மகன் பரதன் என்னாவான்.ஆகவே ராமனை காட்டுக்கு அனுப்பு.உன் மகனை அரசனாக்கு: மந்தரை போதித்தாள்.மனம் மாறினாள் கைகேயி
ravi said…
மன்னன் தசரதன் முன்னர் ஒருசமயம் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு இரு வரங்களை அளித்திருந்தார்.அதை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தாள்

"ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்.பரதன் அரசாள வேண்டும்" மன்னனிடம் கேட்டாள்.பிடிவாதமாக இருந்தாள்.கொடுத்த வாக்கைக் காக்க மனனுக்கும் வேறு வழியில்லை.

ராமன் , லட்சுமணன், பிராட்டியுடன் வனத்திற்குக் கிளம்புகிறான்.தந்தையிடம் விடை பெறச் செல்கிறான்.
ravi said…
ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப் பட்டுவிட்டேன்.நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என் கிறான் மன்னன்

"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை.உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன்.பதினான்குஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றான்

தன் தந்தையின் வாக்கைக் காக்கக் காட்டிற்கு சென்றேனோ பெருமானைப் போல நான் என்றாள் திருக்கோளூர்ப் பெண்
S G S Ramani said…
அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த மும்மூர்த்திகளுடைய இசையால் மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும்.

அதை வெளிக் கொணர முயன்று இருக்கும் வார்த்தை சித்தரின் இப்பதிவு அபாரம்..

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?...

இப்பதிவினை கண்டபிறகு நாங்களும் எழுந்தோடி வந்து விட்டோம் ஆன்மீக இசை மழையில் திளைக்க...

🙏🙏🙏🙏🙏🙏🙏
Sujatha said…
Super Arengetram attahasam💐🙏🏼🙏🏼
Shivaji said…
Thondai Nadu vilakkam .👌
Shivaji said…
Arumai.. Mumm Moorthigalin information...💐💐💐🙏
Savitha said…
அருமையான பதிவு

Superb superb👌👌👌👌👌👌👌
K.Balasubramanian said…
Mummoothrigal story well explained in a very beautiful manner. 🙏🙏🙏🙏
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கம் – பதிமூன்றாவது ஸ்லோகம் – ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
ravi said…
நேற்றைக்கு சுப்ரமண்ய புஜங்கத்துல பன்னிரண்டாவது ஸ்லோகம், முருகப் பெருமானுடைய பன்னிரண்டு திருக்கரங்களை பத்தி, அந்த தோள் வலிமையை பத்தி ஒரு ஸ்லோகம் பார்த்தோம்.

இன்னிக்கி முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களை பத்தி அழகான, கவித்துவமான ஒரு ஸ்லோகம்.

இந்த ஆறுமுகங்கள் அப்படி சொன்ன உடனே அருணகிரிநாதருடைய, எல்லாருக்கும் நன்னா தெரிஞ்ச ஒரு திருப்புகழ் பாட்டு ஞாபகம் வர்றது. அதை படிக்கிறேன்
ravi said…
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

ன்னு ஒரு பாட்டு. இந்த பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
ravi said…
ஆறுமுகங்களைப் பார்த்த உடனே, ஆச்சார்யாளுக்கு இதற்கு உவமை ஏதாவது சொல்லணும்னு தோணறது. கவிகள் எல்லாம் பொதுவா சந்திரன் போன்ற முகம் ன்னு சொல்வா இல்லையா, அந்த மாதிரி சந்திரன் போன்ற முகம் ன்னு சொல்லலாமா ன்னு அவர் யோசிக்கிறார். ஸ்லோகத்தை படிக்கிறேன்.
ravi said…
सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-

स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥ १३॥

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத் |

ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் ||

ன்னு சொல்றார்.
ravi said…
ஹே ஸ்கந்தா! நான் உன்னுடைய முகங்களுக்கு ஸாம்யமா சந்திரனை சொல்லணும்னு ஆசைப் படறேன்.

ஆனால் ‘ஸதா’ – எப்பொழுதும், ‘சாரதா:’ சந்திரன் சரத் காலத்துல இருக்கிற மாதிரி, சரத் காலத்துல சந்திரன் மேகங்கள்லாம் இல்லாம ரொம்ப ஸ்வச்சமாக அழகாக இருக்கும். அந்த சரத்காலத்துல இருக்கிற மாதிரி, ‘ஷண்ம்ருகாங்கா:’ ஷஷாங்கா: ம்ருகாங்கா: இதெல்லாம் சந்திரனுக்கு பெயர்.


ஷஷம்-ன்னா முயல். அந்த சந்திரன்ல ஒரு அடையாளம் இருக்கே, அது முயல் மாதிரி இருக்கு. ம்ருக: ன்னா மான், மான் போன்ற அடையாளம், கருப்பா ஒரு அடையாளம் இருக்கு இல்லையா சந்திரன்ல.
ravi said…
அதனால அதுக்கு ம்ருகாங்கா: ன்னு பேரு. ‘‘ஷண்ம்ருகாங்கா:’

ஆறு சந்திரன்கள், ‘பூர்ணபிம்பா:’ பூர்ண சந்திரன்கள், பிறை சந்திரன்லாம் இல்லை. முழு நிலவாக ஆறு சந்திரன்கள், மான் மாதிரி அடையாளத்தை உடைய சந்திரன்கள், ‘ஸமந்தாத்’ –

ravi said…
எல்லா பக்கங்களிலேயும் சேர்ந்து ‘ஸமுத்யந்த ஏவ:’ உதிச்சுதுன்னா ‘ஸ்த்திதா: சேத் யதி ஸ்யு:’ எப்பொழுதும் ஸ்திதமா அந்த ஆறு சந்திரன்களும் உதிச்சு, அது எல்லாம் முழுச் சந்திரனா இருந்து, அந்த ஆறும் எப்பவும் பிரகாசிச்சிண்டு இருந்துதுன்னா, அப்ப உன்னுடைய முகத்துக்கு உவமை சொல்லலாமான்னு நான் நினைப்பேன்.
ravi said…
அது கூட உன் முகத்துல ஒரு கஸ்தூரி திலகமோ, அது மாதிரி உன் முகத்துலேயும் ஒரு அடையாளம் இருந்து, சந்திரன்லேயும் ஒரு களங்கம் இருக்குன்னா சரி. இது ஒரு உவமைன்னு சொல்லலாம் ‘ஸாம்யம் ப்ருவே’ ஸமமாக சொல்லலாம்னு ஆரம்பிப்பேன்
ravi said…
உன்னுடைய முகத்துல கஸ்தூரி திலகம் மாதிரி எதுவும் இல்லாமலே, சாதாரணாமாவே, எப்பொழுதும் உன் முகம் பிரகாசிக்கறது. எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கும் அந்த ஆறுமுகங்களுக்கு நான் ஏதாவது சொல்லணும்னா

‘கலங்கைஸ்ச ஹீனா: பூர்ணபிம்பா:’ சந்திரன் எப்பயாவது இந்த களங்கமே இல்லாம, பூர்ண சந்திரனாக, ஆறு சந்திரன்கள் உதிச்சுதுன்னா,

அப்போ நான் அதை உவமையாக சொல்வேன். சந்திரனோ எப்பொழுதும் களங்கத்தோடு தான் இருக்கு,

ravi said…
ஒரே ஒரு சந்திரன் தான் இருக்கு, அது மாசத்துக்கு ஒரு நாள் தான் பூரண சந்திரனாக இருக்கு, அதுவும் சரத்காலத்துல தான் நன்னா ப்ரகாசிக்கறது, மத்த காலங்கல்லாம் மேகத்துகுள்ள போயிடறது. இப்படி இருக்கும் போது உன்னுடைய முகத்துக்கு நான் எப்படி சந்திரனை உவமையாக சொல்ல முடியும்ன்னு வேடிக்கையா சொல்றார்.
ravi said…
உன்னுடைய முகம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு அழகா இருக்கு. நிருபமான முகங்களா இருக்குன்னு சொல்ல வரதை, இந்த மாதிரி ஆச்சார்யாள் வேடிக்கையா சொல்ற மாதிரியும், அவ்வளவு அழகு அந்த முகத்தினுடைய ஜோதி என்று அப்படி சொல்றார்.

ravi said…
முதல்ல இந்த ஸ்தோத்ரத்தை ஆரம்பிச்ச போதே ‘என் மனதில் உன் ஆறுமுகங்களோடு கூடிய ஒரு ஜோதி, ஒரு ஒளி பிரகாசிப்பதனால் தான், ஒண்ணுமே தெரியாத எனக்கு, எழுத்தும் தெரியாது, சொற்களும் தெரியாது, பொருளும் தெரியாது, கவிதையும் தெரியாது, உரைநடையும் தெரியாது. என் வாக்குல ஸ்லோகம் வறது, நான் இந்த ஸ்தோத்ரத்தை பண்றேன்ன்னு சொல்றார்.
ravi said…
அப்பேற்பட்ட அந்த ஆறுமுகங்களுக்கு சந்திரனையெல்லாம் உவமையா சொல்ல முடியாது ன்னு முடிச்சுடறார்.
ravi said…
எங்களுடைய இந்த திருமயிலாபுரிக்கு அருணகிரிநாதர் வந்திருக்கார். இங்கே சிங்காரவேலர் ஆறுமுக மூர்த்தி தான். அந்த சிங்காரவேலர் மேலே அருணகிரிநாதர் பாடின ஒரு திருப்புகழ் பாட்டு இருக்கு.
ravi said…
அறமி லாவதி பாதக வஞ்சத் …… தொழிலாலே

அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் …… றிளையாதே

திறல்கு லாவிய சேவடி வந்தித் …… தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் …… தருவாயே

விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் …… பொரும்வேலா

விமல மாதபி ராமித ருஞ்செய்ப் …… புதல்வோனே

மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் …… புயவீரா

மயிலை மாநகர் மேவிய கந்தப் …… பெருமாளே.

ன்னு பாட்டு.
ravi said…
அறமிலாத அதி பாதக வஞ்சகத் தொழில்களை நான் பண்ணிண்டே இருக்கேன். அதனால என் மனம் ரொம்ப உலர்ந்து போயிடுத்து. ரொம்ப வாடியிருக்கு. உன்னுடைய பாதங்களை நெருங்கி வந்து எப்பொழுதும், உன்னை பாடக்கூடிய அந்த இன்பத்தை எனக்கு கொடு.

திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத்தருவாயே

உன்னை தினமும் பாடினாத்தான் என் வாழ்வு இன்புறும், அந்த பாக்கியத்தை கொடுன்னு ஒரு அழகான பாட்டு.
ravi said…
அறமி லாவதி பாதக வஞ்சத் …… தொழிலாலே

அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் …… றிளையாதே

திறல்கு லாவிய சேவடி வந்தித் …… தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் …… தருவாயே

விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் …… பொரும்வேலா

விமல மாதபி ராமித ருஞ்செய்ப் …… புதல்வோனே

மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் …… புயவீரா

மயிலை மாநகர் மேவிய கந்தப் …… பெருமாளே.

ன்னு பாட்டு.
ravi said…
அறமிலாத அதி பாதக வஞ்சகத் தொழில்களை நான் பண்ணிண்டே இருக்கேன். அதனால என் மனம் ரொம்ப உலர்ந்து போயிடுத்து. ரொம்ப வாடியிருக்கு. உன்னுடைய பாதங்களை நெருங்கி வந்து எப்பொழுதும், உன்னை பாடக்கூடிய அந்த இன்பத்தை எனக்கு கொடு.

திறல்கு லாவிய சேவடி வந்தித் தருள்கூடத்

தினமு மேமிக வாழ்வுறு மின்பைத்தருவாயே

உன்னை தினமும் பாடினாத்தான் என் வாழ்வு இன்புறும், அந்த பாக்கியத்தை கொடுன்னு ஒரு அழகான பாட்டு.
ravi said…
सदा शारदाः षण्मृगाङ्का यदि स्युः

समुद्यन्त एव स्थिताश्चेत्समन्तात् ।

सदा पूर्णबिम्बाः कलङ्कैश्च हीना-

स्तदा त्वन्मुखानां ब्रुवे स्कन्द साम्यम् ॥ १३॥

இதோட இன்னிக்கி பூர்த்தி பண்ணிக்கிறேன். நாளைக்கும் ஆசார்யாள் இந்த ஆறு முகங்களை பத்தியே இன்னொரு ஸ்லோகம்சொல்றார். அதை நாளைக்கு பாப்போம்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
ravi said…
அருமை ! . முருகப் பெருமானுடைய முகங்களைப் ஆறு பூரண சந்திரர்களாக போற்றும் திருப்புகழ் .


சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம …… மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம …… கதிதோயப்
ravi said…
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம …… மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம …… அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி …… யிகல்சூரா
ravi said…
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக …… முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக …… வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் …… பெருமாளே.
ravi said…
#உண்மைச்_சம்பவம்:
-----------------------------------
இளம் பிராயத்தில் அடிக்கடி 'கும்பகோணம் மடத்திற்கு' விஜயம் செய்வார் #காஞ்சிப்பெரியவர் , #மஹாப்பெரியவா என அனைவராலும் பக்தியுடன் அழைக்கப் பட்ட #ஸ்ரீசந்த்ர_சேகரேந்த்ர_சரஸ்வதி ஸ்வாமிகள்.. அந்த மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பு உண்டு. அதை பரிபாலனம் செய்ய ஓர் குடும்பத்திற்கு உரிமை தரப்பட்டிருந்தது. அவர்கள் அங்கேயே தங்கி அந்தத் தென்னந் தோப்பை கவனித்து கொண்டார்கள்.

ravi said…
அந்த குத்தகைதாரரின் மகன் பெயர் #கருப்பன்.மஹாப்பெரியவரைவிட பத்து பனிரெண்டு வயது இளையவர்..

ஒருமுறை ஸ்வாமிகள் கும்பகோணம் விஜயம் செய்தார்.அப்போது கருப்பன் எனும் அந்த இளைஞன் கையில் #இளநீரை வெட்டி வைத்து கொண்டு அவர் வரும் வழியில் காத்திருந்தான்..

"
ravi said…
ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர" கோஷம் எழும்ப ஸ்வாமி பக்தர் குழாமுடன் வந்தர்.. சாலையில் இரு பக்கத்திலும் மக்கள் பரவசத்துடன் நின்று அந்த மஹானை தரிஸித்தார்கள்..
அப்போது திடீரென உள்ளே பிரவேஸித்த கருப்பன் தன் கையிலிருந்த இளநீரை ஸ்வாமியிடம் நீட்டினான். அடுத்த வினாடியே உடன் வந்த பக்தர்களால் நெட்டி தள்ளப்பட்டான்.. இதை கவனித்து விட்டார் ஸ்ரீ ஸ்வாமிகள்..

.)
ravi said…
அந்த இளைஞனை அருகில் வர சைகை செய்தார்.. மேலாடை இல்லா மேனி..அழுக்கு வேட்டி.. தலையில் கட்டிய துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பவ்யமாக ஸ்வாமி முன் வந்து நின்றான்.. "மடத்து தோப்ப நீதான் இப்ப பாத்துக்கறியா?" ஸ்வாமி கேட்டார். "ஆமா சாமி.. அதான் உங்களுக்கு எளநீர் குடுத்து தாகம் தீக்கலாம்னு வந்தேன்.. என் கையால சாமி வாங்கிக்க மாட்டீங்கன்னு புரியாம தந்துட்டேன். மன்னிச்சுடுங்க " என குற்றவுணர்வில் கூறினான்.. புன்னகைத்தார் ஸ்வாமி..
"நீ குடுத்தா வாங்கிகிக்க மாட்டேன்னு யாரு சொன்னா ஒனக்கு? நா இங்க தங்கற வரைக்கும் உன் கையால வெட்டின இளநீரை கொண்டு வந்து கொடுக்கனும்.. சரியா?.. ஒம்பேரு என்ன?" என்றார்.
"கருப்பனுங்க.. சாமி சொன்ன மாதிரி தினமும் வந்து கொடுக்கறேனுங்க" பணிந்தான்.

அவனுக்கு ஆசி வழங்கி விட்டு மடத்துக்கு செல்ல துவங்கினார்..

************************************************
ravi said…
இது நடந்து ஏறத்தாழ 40-50 ஆண்டுகள் கடந்தன..(பிறகு கும்பகோணம் ஓரிருமுறை சென்றிருப்பார்) சில வருடங்களில் ஸ்வாமியின் 'அவதார நூற்றாண்டு விழா' #கனகாபிஷேகத்துடன் சிறப்பாக நடந்தது..

பரமாச்சாரியார் தம் இறுதிகாலத்தில் இருந்தார்.. #முக்தி அடைந்தவுடன் அவரது அதிஷ்டானம் (ஸ்ரீ சமாதி ) கும்பகோணத்தில் உள்ள மடத்தின் தென்னந்தோப்பில் அமைய ஸ்வாமி விரும்புவதாக தகவல் வந்தது..

ravi said…
கும்பகோணம் மட நிர்வாகிகள் வயது முதிர்ந்த கருப்பனிடம் சென்று "இடத்தை காலி பண்ணு கருப்பா.. ஸ்வாமி அதிஷ்டானம் இங்க அமைய உத்தரவு ஆகிருக்கு" என கட்டளை இட்டனர்.. பதறி விட்டார் கருப்பன்.. "ஐயா.. என் அப்பா காலத்துலேந்து இதை வைத்துதான் நாங்க ஜீவனம் செய்யுறோம்.இங்கியே வீடு அமைத்து வாழுறோம்.இப்ப எங்களை வெளியேற சொன்னால் நாங்க எங்கே ஐயா போறது?" என ஏமாற்றத்துடன் கேட்டார்.. "அதெல்லாம் தெரியாது கருப்பா.. ரெண்டுமூனு நாள் கெடு.. அதுக்குள்ள காலி பண்ணிடு" எனக்கூறி சென்றுவிட்டனர்..

ravi said…
பெரியவாளை நேரில் சந்தித்து மன்றாட முடிவு செய்தார் கருப்பன்.. 'பெரியவர் தற்போது பேசும் நிலையில் இல்லை. சைகைதான்.. காதும் சரியாக கேட்பதில்லை.. தாம் கூறுவதை அவர் புரிந்து கொள்வாரா? இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. முதலில் தம்மை #நினைவில் வைத்திருப்பாரா?' பலவாறான கலக்கத்துடன் காஞ்சி மடத்தை அடைந்தார்...

ravi said…
மிக நீண்ட வரிசை.. பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.. யாரையுமே அருகில் அநுமதிக்க வில்லை..பத்தடி தூர தரிஸனம் மட்டுமே.. பேச முடியாது .. இதை உணர்ந்த கருப்பனுக்கு வெகு ஏமாற்றம்..

ravi said…
வரிசை மெதுவாக நகர நீண்ட நேரத்திற்குபின் கருப்பன் பெரியவாளை நேருக்கு நேர் சந்தித்தார்.. "ஐயா" கரம் கூப்பினார் கருப்பன்..#தெய்வீகப் புன்னகையுடன் கரம் உயர்த்தி ஆசி வழங்கினார் ஸ்வாமி.. "சாமீ.. நான்" என இழுக்க அவரை கையமர்த்திய அந்த மனிததெய்வம் தம் அருகில் இருந்த #கருப்பு_வஸ்திரத்தை எடுத்து காட்டி குறும்புடன் சிரித்தது..

கூட்டத்தினருக்கும் பக்தர்களுக்கும் அந்த சைகை விளங்கவில்லை..
ஆனால் கருப்பன் "ஆமாங்க.. நான் கருப்பன்தாங்க.." என்றார் வியப்பு தாளாமல்.. மீண்டும் கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.. தம் அருகிலிருந்த பழம் ஒன்றை கருப்பனுக்கு வழங்க சொன்னார்.. அதை பெற்று விடை பெற்றார் கருப்பன்..

ravi said…
அடுத்த தினமே ஸ்வாமியின் ஸ்ரீசமாதி #காஞ்சியிலேயே அமையும் என அறிவிப்பு வெளியானது..👌👌👌👌

(இச்சம்பவம் ஸ்ரீ ஸ்வாமிகள் முக்தி அடைந்த சில நாட்களில் விகடன் இதழில் வந்தது.
ravi said…
*சும்மா ஒரு இராமாயணம் 122*🦜🦜🦜🍓🍓🍓🥇🥇🥇
ravi said…
மானைப்போல் ராமனை கண்கள் தேடின ராகவனை காண வில்லை ...

துடிப்புக்களும் ஏமாற்றங்களும் பெண்களின் தாய் வீட்டு சொத்தோ ... ராமா உனக்கு துடிப்பு இல்லையோ என்னை பார்க்க ...

இளையவன் நிழல் கொஞ்சம் நடமாடியது முன்னே ....

அண்ணி அண்ணன் ஜெயித்து விட்டான் அழைக்க வந்தேன் ...

அடடா இவனும் கேட்க மாட்டேனா பேதை தன் நிலமை கொஞ்சம் ...

பேசிவிட்டேன் பேசக்கூடாததை ... தம்பி என்றும் பாராமல் சொன்ன வார்த்தை தீ போல் அவனை இன்னும் சுடுகிறதா ....
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 784*🥇🥇🥇

*US 776*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸

🥇🥇🥇
ravi said…
விததாது ஸம்பந்தம் மே
சகலஜகந்நாத நயஹாரிஜ்யோத் ஸன

ஸீதோs ந்த கார ஹாரீ
ஹாஸ ஸஸீ கஸ்சிதங்கரஹிதோ மாது
ravi said…
அம்மா உன் மந்தஸ்மிதம் ஈசனை கவரக்கூடிய பேரொளி , அஞ்ஞானமாகிய இருளைப் போக்கடிப்பது , குளர்ச்சியானது , அப்பழுக்கற்ற நிர்மலமானது , சந்திரனின் ஒளியை வெட்கப்பட வைப்பது ... அந்த புன்னகை எங்கள் எல்லோரையும் காப்பாற்றட்டும் 🙂🙂🙂
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 207*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

85
ravi said…
தவ த்ரஸ்தம் பாதாத் கிஸலய மரண்யாந் தரமாகத்

பரம் ரேகாரூபம் கமல மமுமே வாச் ரிதமபூத்

ஜிதானாம் காமாக்ஷி த்விதய மபி யுக்தம் பரிபவே

விதேசே வாஸோ வாசரண கமனம் வா நிஜரிபோ
ravi said…
தேவியின் திருவடித்தாமரை தளிர்களை விட மென்மையானது ... அதனால் தளிர்கள் அம்பாளிடம் தோல்வியுற்று காட்டில் மரங்களில் ஒளிந்து கொள்கிறது ..🌷🌷🌷
ravi said…
வரணும் அம்மா வரணும் அம்மா மூகாம்பிகை தாயே சரணம் அம்மா

ஊமைகளை பேச வைக்க உண்மைகளை வாழ வைக்க
செவிடர்களை கேட்க வைக்க குருடர்களை பார்க்க வைக்க. (வ).

ஊனர்களை நலமாக்க கூனர்களை நிமிர வைக்க
ஈனர்களை ஓடவைக்க பார்மீது ஓங்கி நிற்க, (வ).

சேய் அன்பு பால் குடிக்க தாய் அருளில் கலந்திருக்க

மாய அருள் விலகி இருக்க தூய ஒளி ஒளிர்ந்திருக்க. (வ)
ravi said…
என்றும் உன்னை நினைத்திருக்க ஈகை மனம் களித்திருக்க
நின்ற அனைத்தையும் கண்டிருக்க மூகாம்பிகை வரம் கொடுக்க
வரணும் அம்மா வரணும் அம்மா சரணம் சரணம் அம்மா
அம்மா தாயே மூகாம்பிகே சரணம் அம்மா.
ravi said…
விநாயகர் ஹம்சத்வர்ணி ராகம் இணைப்பு மிகவும் இனிப்பு . திருவாரூர் விளக்கம் மிக அருமை 👌👌👌👌👌👌

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை