பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. (3) -188

                                              பச்சைப்புடவைக்காரி 

 தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -3

உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

(188)


இப்படி ஸ்ரீ தியாகராஜர் தினப்படி கீர்த்தனைகளை இயற்றிப் பாடிவருவதை கவனித்து அதனை எழுதி, திருவையாற்றிலிருந்த பல பெரியவர்களிடம் ஸ்ரீ ராமபிரம்மம் காட்டி மகிழத் தொடங்கினார். 

அந்த கீர்த்தனைகளில் பொதிந்து கிடக்கும் பக்தி ரஸம், பாடல் யுக்தி, கவிதைச் சிறப்பு இவைகளைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் தியாகராஜரைப் புகழ்ந்து பாராட்டத் தொடங்கினார்கள். 

அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். கலைகளையும், கல்வியையும் போற்றி வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுடைய சபையில் சுமார் 360க்கும் மேற்பட்ட ஸங்கீத வித்வான்கள் இருந்தார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் தலைவராக இருந்தவர் ஸ்ரீ ஸொண்டி வேங்கடரமணய்யா என்பவர். 


இவரது தகுதி கருதி இவருக்கு மன்னருக்கு இணையான ஆசனமிட்டு அதில் உட்கார வைக்கப்படுவார். தலைமை வித்வானாகிய இவர்தான் ஒவ்வோர் வருஷத்தின் முதல்நாள் மன்னன் சபையில் பாடி கெளரவிக்கும் வித்வான் எனத் தகுதி பெற்றவர். 

அத்தகைய சிறப்புப் பெற்ற தலைமை வித்வானிடம் நமது தியாகராஜர் முறைப்படி ஸங்கீத சிக்ஷை பெறலானார். ஸொண்டி வெங்கடரமணய்யா: ஸ்ரீ தியாகராஜரின் குருவான ஸொண்டி வெங்கடரமணய்யா பற்றி பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி அவர்கள் கூறும் விவரங்களைப் பார்ப்போம்:- 

தியாகராஜர் சிறுவனாக இருக்கும்போது காலையில் மலர் கொய்வதற்கு நந்தவனம் செல்வார். அது திருவையாற்றையடுத்த அந்தணக்குறிச்சி எனுமிடத்தில் இருக்கிறது. போகும் வழியில் ஸொண்டி வெங்கடரமணய்யாவின் வீடு. 



அங்கு சீடர்களுக்கு அவர் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்பார். அந்த வீட்டு வாயிலில் நின்று தியாகராஜர் சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியொருநாள் இவர் நின்று கேட்பதை ராமப்பிரம்மம் கவனித்துவிட்டு, குருநாதரிடம் சென்று தன் மகனுக்கும் சங்கீத சிக்ஷை சொல்லிக்கொடுக்க வேண்டினார். அவரும் உவகையுடன் ஒப்புக்கொண்டாராம். 

சொல்லிக்கொடுக்க வேண்டியதனைத்தையும் சீடன் மகா மேதை என்பதை உணர்ந்து ஒரே ஆண்டில் சொல்லிக்கொடுத்து விட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய தாய்வழித் தாத்தா வீணை காளஹஸ்தி அய்யர் என்பவர். அவர் பல ஸங்கீத நூல்களைத் தன்வசம் வைத்திருந்தார். 

அவைகளையெல்லாம் வாங்கி வந்து தியாகராஜர் படிக்கலானார். அந்த நூல்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக்கொள்ள இவர் அப்போது திருவையாற்றிலிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணாந்தா ஸ்வாமிகளிடம் சென்று பாடம் கேட்கலானார். 



அப்படி பாடம் சொல்லிக்கொடுக்கும்போது ராமகிருஷ்ணானந்தர் தியாகராஜரிடம், நாரத மஹரிஷியை உபாசனை செய்துவந்து வழிபட்டால் ஸங்கீதக் கலை வசப்படுவதோடு, மனதில் தோன்றும் ஐயப்பாடுகள் அனைத்தும் நீங்கிப்போகும் என்று எடுத்துரைத்தார். அதற்கான "நாரத உபாஸனா" மந்திரத்தையும் அவருக்கு உபதேசித்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் குருநாதர் கூறிய மந்திரத்தைத் தலைமேற்கொண்டு உபாசனை செய்து வந்தார். 

இவரது மந்திரோபாசனையையும், பக்தியையும் பாராட்டி நாரத மஹரிஷியே இவர்முன் தோன்றி, ஸங்கீத ஸ்வர ரகஸ்யங்களடங்கிய "ஸ்வரார்ணவம்" எனும் அரிய நூலைக் கொடுத்து மறைந்தார். ஸ்ரீ நாரத பகவான் தரிசனமும், அவர் அளித்த நூலின் சிறப்பாலும், தியாகராஜர் நிரம்ப ஸங்கீத ஸ்ருதி ஆதாரங்களைக் கொண்ட பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தார். இப்படி இவரது பெயரும் புகழும் நாடு முழுவதும் பரவப் பரவ பல்வேறு இடங்களிலிருந்தும் சீடர்கள் இவரை நாடிவந்து சேர்ந்து கொண்டார்கள். 

ரவி  இன்னும் பார்ப்போம் ... 

அம்மா ரொம்பவும் அழகாக பொறுமையாக சொல்கிறீர்கள் ...



கல்பவல்லி என்று கொடி . நினைத்ததை நிறைவேற்றும் தன்மை வாய்ந்த செடிகளில் காமதேனு. அதை போன்ற அழகிய மென்மையான கரங்களை உடையவளே 

பிஞ்சு வெண்டைக்காய் என்பதா, அழகிய பளபளக்கும் முளைவிட்ட சிவந்த விரல்களில் சிவந்த மோதிரங்கள் அணிந்தவளே. 

கரங்களில் தான் எத்தனை அழகிய கங்கணங்கள் , வளையல்கள், கண்ணைப்பறிக்கும் நவரத்ன மணிகள் பதித்த வாகு வளையங்கள்.. 

அழகுக்கு இனிமை சேர்க்கவென்றே அம்மா, நீ கரும்பு வில்லை கையிலேந்தி இருக்கிறாயா? 

அதற்கு ஏற்ப மலர்க்கணைகள், அம்புகள், அங்குசம் வேறு. தேவி அம்பா லலிதா திரிபுரசுந்தரி உன்னை காலையில் பஜிக்க என்ன புண்யம் செய் திருக்கவேண்டும்....

சிரித்துக்கொண்டாள் எல்லாம் தெரிந்தவள்....... 




Comments

ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 786*🥇🥇🥇

*US 778*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸

🥇🥇🥇
ravi said…
778

காரணகார்யவிபேதாத்

ரூபத்விதயம் தவாம்ப யத்ருஷிப்ரோக்தம்

தத்ரைகம் பர்துமிதம்

விஹர்த்துமந்யத்து பூதபர்துர்லலனே

ravi said…
மகான்கள் அம்பாளுக்குக் காரண வடிவம் , காரிய வடிவம் என்று இரண்டு உருவங்கள் உள்ளதாகச் சொல்வார்கள் . ஒன்று உலகத்தை நிர்வகிப்பதற்காக உள்ளது . மற்றொன்று லீலா விலாசத்திற்காக உள்ளது
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 209*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

87
ravi said…
87

ஜடானாமப்யம்ப ஸ்மரணஸமயே த்வச்சரணயோ

ப்ரமன்மந்தக்ஷ்மாப்ருத்கு முகுமிதஸிந்து
ப்ரதிபடா

ப்ரசன்னா காமாக்ஷி ப்ரசாபமதரஸ் பந்தனக்கலா

பவந்தி ஸ்வச்சந்தம் ப்ரக்ருதிபரிபக்வா பனிதய
ravi said…
காளிதாசன் மூகர் , வரதன், நான் இன்னும் எவ்வளவோ மந்த புத்திகள் கொண்டவர்களை கவிகள் புனைய வைக்கின்றது அம்பாளை உளமார வணங்குபவர்கள் அடையும் உயர்வுக்கு அளவே இல்லை
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 787*🥇🥇🥇

*US 779*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸

🥇🥇🥇
ravi said…
779

ஸ்ரோதும் ஸ்தோத்ரவி ஸேஷம்

பக்தவிஸேஷம் ச போத்துமயமீத்ருகிதி

தாதும் ச வாஞ்சிதார்தம்

தவ மாதஸ்சந்த்ர லோகரூபம் பவதி

ravi said…
பக்தர்களை புரிந்துகொண்டு அவர்கள் கேட்க்கும் வரங்களை தரும் நீ சந்திர லோக ரூபமாகிய கார்ய வடிவம் எடுத்துக்கொள்கிறாய்
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 210*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇

88
ravi said…
வஹன்னப்யச் ராந்தம் மதுரநிநதம்
ஹம்ஸகமசௌ

தமேவாத கர்த்தும் கிமிவ யததே கேலிகமனே
பவஸ்யைவானந்தம் விதததபி காமாக்ஷி சரணோ

பவத்யாஸ்தத் த்ரோஹம் பகவதி கிமேவம் விதனுதே
ravi said…
அம்மா உன் பாதங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஹம்ஸகம் என்ற சிலம்பு இன்னொலி செய்து கொண்டிருக்கும் அந்த ஒலி நமக்கு எல்லா நன்மைகளையும் தரட்டும்
ravi said…
*புன்னகை ராமாயணம் 23/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*
ravi said…
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
ravi said…
சிலா பாலா காசித் பல மதன லீலா விலுலிதா
வஸதி அஸ்மின் தேசே தவ பத ரஜோ வாஞ்சதிதராம்

இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்
ஸ்மிதம் மந்தம் யத் தே ஜயதி தத் இதம் ஸ்ரீ ரகுபதே
ravi said…
அகல்யா சாபவிமோசனம்

கட்டை வண்டிகளில் இருந்து எல்லோரும் இறங்கி கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கிறார்கள்

அப்படி நடக்க ஆரம்பித்தவுடன் கொஞ்ச தூரம் சென்றபின் விசுவாமித்திரர் ராமனிடம் சொல்கிறார் - ராமா உனக்காக அகல்யா என்ற ஒரு பெண் காத்துக்கொண்டிருக்கிறாள் அதைக்கேட்டு ராமர் ஒரு மெல்லியதாய் புன்னகை பூத்தாராம்
ravi said…
சிலா பாலா : சிலா என்றால் கல் , பாலா என்றால் இளம் பெண் - ஒரு இளம் பெண் கல்லாய் இருக்கிறாள்

காசித் பல மதன லீலா விலுலிதா :

என் அவள் கல்லாய் இருக்கிறாள் என்றால் இந்திரன் செய்த பல மன்மத லீலைகளில் இவள் தள்ளப்பட்டு கணவர் கௌதம முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாய் ஆகிவிட்டாள்
ravi said…
வஸதி அஸ்மின் தேசே : அவள் நீ போகும் இந்த பாதையில் தான் கல்லாய் வசித்துக்கொண்டிருக்கிறாள்

தவ பத ரஜோ வாஞ்சதிதராம் : ஏன் கல்லில் வசித்துக்கொண்டிருக்கிறாள் தெரியுமா ?

தவ பத ரஜோ வாஞ்சதிதராம் : ராமா , உன் பாத துளி மண் அவள் மீது விழாதா என்ற ஏக்கத்துடன் கல்லில் வசித்துக்கொண்டிருக்கிறாள்
ravi said…
இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்

அப்பொழுது ராமன் ஒரு புன்னகை பூத்தானாம் --- ராமன் ஏன் புன்னகை பூத்தான் என்றால் தனக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டாளே என்ற சந்தோஷம் தாங்கவில்லை யாம்

ராமன் கௌசல்யாவின் வயிற்றில் 12 மாதங்கள் வாசம் செய்தானாம் - சாதாரணமாக இரண்டு மதம் குழந்தை தந்தையிடமும் பத்து மாதங்கள் தாயிடமும் வாசம் செய்யும் என்று சாஸ்த்திரங்கள் சொல்லும் இங்கே தசரதன் மூலம் குழந்தை பிறக்காததினால் தசரதனிடம் தங்க வேண்டிய இரண்டு மாதங்களையும் சேர்த்து 12 மாதங்கள் கௌசல்யாவின் கர்ப்பத்தில் வாசம் செய்தான் ராமன்
ravi said…
அகல்யா எத்தனையோ யுகங்களாக தன் நெஞ்சத்தில் கருத்தில் ராமனை சுமந்துகொண்டிருக்கிறாள் -

இதோ என் ராமன் இப்பொழுது வந்துவிடுவான் - ஏதோ காலடி சப்தம் கேட்க்கிறதே ராமன் வருகிறானோ என்று வழிமேல் விழி வைத்துக்கொண்டு காத்திருந்தாளாம் -

மழை புயல் விலங்குகளின் எச்சம் , சுடும் கதிரவனின் கதிர்கள் இப்படி எவ்வளவோ சங்கடங்களுக்கு நடுவே கல்லாய் அமர்ந்திருந்தாள் - ராமா நீயும் என்னைப்போல் ஒரு கல்லா ? உனக்கு என் மீது கருணை இல்லையா என்றே கண்ணீர் சிந்தியபடி


ராமனுக்கு ஒரே சந்தோஷம் வயிற்றில் சுமந்தவளைவிட கருத்தில் சுமந்தவள் இன்னும் உயர்ந்த பெண் என்று நினைக்கிறான் ராமன்
ravi said…
ராமா அன்று இன்னொரு தாய் மனதினால் ராமனை யுகம் யுகமாக சுமந்தவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் ஒரு புன்னகை பூத்தாயே அதே புன்னகை வடுவூரிலும் எங்களுக்கும் நீயே தாயாக இருக்கிறாய் என்பதைக்காட்டவே அன்று சிந்திய அதே புன்னகையை எங்களுக்கும் காண்பிக்கின்றாயோ ராமா ☺️☺️☺️
ravi said…
திருக்கோளூர்- (பெண் பிள்ளை ரகசியம்)


இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே - 55
ravi said…
சூதாட்டத்தில் தருமர் மயங்கி, வீடு, வாசல்,நாடு,நகரம் அனைத்தையும் பணயம் வைத்து இழக்கிறார்.கடைசியில், சகோதரர்களையும், தன்னையும், திரௌபதியையும் தோற்றார்

கௌரவர் சபைக்கு பாஞ்சாலி, துச்சாதனனால் அழைத்து வரப்படுகிறாள்.அவளைத் துகிலுரிகையில்... தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால்தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள்

ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள்.கண்ணன் வரவில்லை
ravi said…
பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள்.கண்ணன் வரவில்லை

இறுதியாக, தன் இருகைகளையும் மேலே தூக்கி, முற்றிலும் அவனே கதி என "கோவிந்தா: " என அலறுகிறாள்.கண்ணன் வந்து ரட்சிக்கிறான்

எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்

நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் சரணம் என இருகையும் விட்டேனா...ஆகவே எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி உள்ளது..ஆகவே..நான் போகிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்
ravi said…
*சும்மா ஒரு இராமாயணம் 124*🦜🦜🦜🍓🍓🍓🥇🥇🥇
ravi said…
சீதை பயந்த வார்த்தைகள் நெருப்பாய் வெளிவந்தன

அஞ்சவில்லை அன்னை ... இந்த தீயின் சூடு நான் சொல்லிய வார்த்தைகளுக்கு ஈடாகுமோ

எனக்கு முன்னே இளையவன் தீ குளித்தான் என் சொற்களால்

இதற்கும் முன்னே பரதன் தீ குளித்தான் தசரதன் *மகன் இல்லை நீ* என்றே சொன்ன வார்த்தையால்

இதற்கும் முன்னே ராமன் தீ குளித்தான் பெறாத தாய் சொன்ன வார்த்தையால்

இந்த தீ என்னை சுட்டுவிடுமோ ...

ராமனை பிரிந்த துன்பம் தீயினும் சுடுமோ ...

ராவணன் கொஞ்சிய வார்த்தைகள் சுட்ட நெருப்பு இந்த தீயினும் அதிகம் சுடுமோ ? 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Savitha said…
அருமை
ஜெய் ஸ்ரீ ராம்🌸🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🌷🌷
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 116*
🌸🌸🌸🌸

பராஶக்தி; பராநிஷ்டா ப்ரக்ஞானகனரூபிணீ |
மாத்வீபானாலஸா மத்தா, மாத்ருகா வர்ண ரூபிணீ ‖ 116 ‖

🌸🌸🌸🌸

पराशक्तिः, परानिष्ठा, प्रज्ञान घनरूपिणी |
माध्वीपानालसा, मत्ता, मातृका वर्ण रूपिणी ‖ 116 ‖
🌸🌸🌸🌸

paraasaktih, paraanishthaa, pragyaana ghanarupini |
maadhvipaanaalasaa, mattaa, maatrkaa varna rupinii ‖ 116 ‖

🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் பராஶக்த்யை நம;
ஓம் பராநிஷ்டாயை நம;
ஓம் ப்ரக்ஞான கனரூபிண்யை நம;
ஓம் மாத்வீபானாலஸாயை நம;
ஓம் மத்தாயை நம;
ஓம் மாத்ருகா வர்ண ரூபிண்யை நம;
🌸🌸🌸🌸

ravi said…
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*572.பராஶக்தி* - இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் பெருகின்ற சக்தி ருபமாக இருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.எனவே தான் அவளை பரா சக்தி என்கிறோம்.
🌸🌸🌸🌸

*573.பராநிஷ்டா* - உத்க்ருஷ்டமான (மனம், வாக்கு, காயம் எல்லாமே ஒன்றாகி தியானித்து) முடிவாக இருப்பவள்.
🌸🌸🌸🌸

*574.ப்ரஜ்ஞான கன ரூபிணீ* - நித்யமானதும் உயர் தத்துவங்களின் ஞான ருபமாக இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸

*575.மாத்வீபானாலஸா* - பக்தர்களின் அன்பும் ஞானமும் தரும் ஆனந்த அனுபவத்தில் மையமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*576.மத்தா* - மேலே சொன்ன ஆனந்த பரவச நிலையில் ஆழ்ந்து மயங்கியிருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

ravi said…
*577.மத்ருகா வர்ண ரூபிணீ* - ஜம்பதிதோறு அக்ஷரங்களின் ரூபமாக இருப்பவள் *மத்ருகா*. அவை ஆறு பகுதிகளாக பிரிபடும். ஆறு சக்ரங்களாக வழிபடப்படும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்ரம் வரை. வித வித *வண்ணங்கள்* கொண்டவை. ஸ்ரீ சக்ரத்தின் ஆதாரம் இந்த அக்ஷரங்கள்.

ஸ்ரீ சக்ர வழிபாட்டில் கைலாச ப்ரஸ்தாரத்தை தவிர மேரு ப்ரஸ்தாரம் பூ ப்ரஸ்தாரம் என்றும் இரு பிரிவுகள் உண்டு. ப்ரஸ்தாரம் என்பது மேலே அழைத்து செல்லும் என்று எடுத்துக் கொள்வோம்.
🌸🌸🌸🌸
ravi said…
அரங்கன் கொடுத்தானோ தன் தாமரைக் கண்களை காரூண்யம் மழை பெய்ய 🌧️🌧️🌧️

ஆடலாரசன் அளித்தானோ தன் குமிழ் சிரிப்பை ... புன்னகையினால் உலகை வெல்ல 🙂🙂🙂

காமாக்ஷி அருளினாலோ அரசாட்சி செய்யவே ஆண்டு கொண்டாய் அனைவர் மனதையும் 🦜🦜🦜

காலடி சங்கரன் தன் அவதாரம் தந்தானோ உலகை உன் காலடி கொண்டு அளந்திடவே...👣👣👣

என்ன பாக்கியம் செய்தோம் தினம் உன்னை நினைக்க ... 🙏🙏🙏

நான் எழுதும் எழுத்துக்கள் நீ அளித்த பிக்க்ஷை அல்லவா 🥇🥇🥇
ravi said…
மாலை அது மாலை வேளை தனில் மலைபோல் சிரித்தது ...

மலைபோல் மலைத்து நின்றேன் ... சிரிப்பின் அர்த்தம் புரியாமலே

மலையில் வாழும் மதி சூடியவன் சொன்னான் ...

எங்கோ பிறந்த பூக்கள் எங்கோ வளர்ந்த நாரில் இடம் பிடிக்க

எங்கோ ஒருவன் அவைகளை இணைக்க

எங்கும் நிறைந்தவனின் மார்பில் மாலை பள்ளிக்கொள்ள

அடைந்தது
பிறவிப்பயனை ....

நீயும் இருக்கின்றாய் மலரும் இல்லை நாரும் இல்லை

மாலையாக விழவும் ஆசை இல்லை ...

பிறவிப்பயன் மட்டும் தீர வேண்டும் என்றே வேண்டுகிறாய் ...

பித்தன் என்பார் என்னை ... உனை கண்டதும் என் சொல்வாரோ .....

கண் திறந்து பார்த்தேன் சிரித்துக்கொண்டிருந்தான் என் சாயி 🙂🙂🙂
ravi said…
உன் அருளால் உனை வணங்குகிறேன் அருணாசலா

உன் அருள் இன்றி உண்டோ ஒரு உயிர் அருணாசலா ...

உன் அருள் கண்டு உன்னையே தினம் வலம் வருகிறதோ இந்த உலகம் அருணாசலா

உன் அருள் கண்டு உதயமானதோ இசை கொண்ட எங்கள் இதயம் சொல் நீ அருணாசலா . 🙏🙏🙏
ravi said…
அரங்கன் கொடுத்தானோ தன் தாமரைக் கண்களை காரூண்யம் மழை பெய்ய 🌧️🌧️🌧️

ஆடலாரசன் அளித்தானோ தன் குமிழ் சிரிப்பை ... புன்னகையினால் உலகை வெல்ல 🙂🙂🙂

காமாக்ஷி அருளினாலோ அரசாட்சி செய்யவே ஆண்டு கொண்டாய் அனைவர் மனதையும் 🦜🦜🦜

காலடி சங்கரன் தன் அவதாரம் தந்தானோ உலகை உன் காலடி கொண்டு அளந்திடவே...👣👣👣

என்ன பாக்கியம் செய்தோம் தினம் உன்னை நினைக்க ... 🙏🙏🙏

நான் எழுதும் எழுத்துக்கள் நீ போட்ட பிக்க்ஷை அல்லவா 🥇🥇🥇
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 3

*Started on 26th sep 2020*💐💐💐💐
ravi said…
தவறான வாக்கியங்கள் / பழ மொழிகள் ...

*அர்த்தங்கள் அனர்த்தமான வேதனை சொற்கள்*😢😢😢

*1. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்*

*2. ஒரு பெண் ஒன்றை ஒன்பதாக்குவாள்*

*3. ஏன் அம்பிகை தன்னை எல்லோரும் புகழவேண்டும் என்று ஆசைப்படுகிறாள் ?*
ravi said…
முதல் கேள்விக்கு விளக்கம் கிடைத்தது . எந்த
பெண்னையும் அம்பாள் நிர்மூலமாக ஆக்க மாட்டாள் ..

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவள் அருளால் கண்டிப்பாக அரசாள்வார்கள் ... இது சத்தியம் 🥇🥇🥇
ravi said…
இனி இரண்டாவது கேள்விக்கு விளக்கம் தேடுவோம் ...

பெண் ஒன்றை ஒன்பதாக்குபவள் ... அதாவது ஒன்றாய் இருக்கும் குடும்பத்தை சின்னா பின்னமாக்குபவள் ...

இது பொதுவாக மாட்டுப் பெண்களை குறிக்கும் ...

அபத்தமான அர்த்தம் ... ஒரு ஆண் விந்துவை தன் கர்ப்பத்தில் சுமந்து ஒன்றை ஒன்பதாக்குபவள்

அதாவது அந்த விந்துவிற்கு உயிர் கொடுத்து கை , கால்கள், கண் எல்லா அவயவங்களையும் கொடுத்து 9 பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு குழந்தையை தருபவள் ...

எவ்வளவு பெருந்தன்மை கொண்டவள் ... தாய்மை என்றுமே ஈரப்பசைக் கொண்டது ...

அம்பாள் இந்த உலகம் ஒன்றை படைத்து பல உயிர்களை உருவாக்கினாள் ..

அவள் அம்சமான பெண் எப்படி ஒன்றாய் இருக்கும் குடும்பத்தை ஒன்பதாக்குவாள் ... நிச்சயம் செய்ய மாட்டாள் ..

கருணை என்பது ஒரு பெண்ணுடன் கூடப் பிறப்பது ... 🦜🦜🦜
ravi said…
*Lalita Trishati 241 - 250*👌👌👌
ravi said…
*241. Kakāriṇī ककारिणी*👌👌👌the nama says that She Herself is Ka

*242. Kāvyalolā काव्यलोला*💐💐💐 She is fond of poetic compositions 🥇🥇🥇

*243. Kāmeśvaramanoharā कामेश्वरमनोहरा*👌👌👌 She steals the heart of Kamesvara🔥🔥🔥

*244. Kāmeśvara-prāna-nāḍī कामेश्वर-प्रान-नाडी*💐💐💐 She is the vital force of kamesvara

*245. Kāmeśotsaṅgavāsinī कामेशोत्सङ्गवासिनी*👌👌👌 She is sitting on the left thigh of Siva 🌺🌺🌺

*246. kāmeśvaraliṅigitāṅgī कामेश्वरलिङिगिताङ्गी*💐💐💐💐💐 Shiva and Sakthi both have mutual dependency and trust 🥇🥇🥇

*247. Kāmeśvarasukhapradā कामेश्वरसुखप्रदा*💐💐💐

Sakthi is the cause for eternal happiness of Shiva 🙏🙏🙏

*248. Kāmeśvarapraṇayinī कामेश्वरप्रणयिनी👍👍👍*

Shiva and sakthi based give and take policy 🙂🙂🙂
ravi said…
*249. Kāmeśvaravilāsinī कामेश्वरविलासिनी*👌👌👌
ravi said…
She is the Consort of Kāmeśvara. Vilāsin means fond of.

Previous nāma said that Śiva is fond of Her and this nāma says that She is fond of Śiva.

Vilāsin also means moving to and fro. Based on this meaning, this nāma says that She moves to and fro between Śiva and those who are ready for merger into Śiva.

There are several stages before merging into Śiva. The stages are sādhana, contemplating a form, contemplating within, state of sthitaprajña, state of jīvanmukta, liberated soul and finally merger with Śiva.

Except the last stage, She takes care of other states of an aspirant. Even in the last stage, She only takes that yogī to Śiva, by imparting knowledge about Him. This is explained in Lalitā Sahasranāma 721 *Śiva-jñāna-pradāyinī* and the interpretation of this nāma is given below:💐💐💐
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே👌👌👌👌👌💐💐💐💐💐💐💐
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கத்துல பதிமூணு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம்.

நேற்றைக்கு, ஆச்சார்யாள் ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ஆறுமுகங்களை வர்ணிக்கும் போது, சந்திரனைக் கூட இதற்கு உவமையா சொல்ல முடியாது.

ஏன்னா சந்திரன் ஒரே சந்திரன், ஆனா ஆறுமுகங்கள் ஆறு சந்திரன்கள் போல இருக்கு. அதுவும் களங்கமில்லாத சந்திரனுக்கு நிகரான அழகுன்னு சொன்னார்.

இன்னிக்கும் இந்த ஆறு முகங்கள் பத்தி இன்னொரு ஸ்லோகம்.

இந்த ஆறு முகங்கள் பத்தி மஹான்கள் எல்லாம் ரொம்ப, திரும்ப திரும்ப அதை த்யானம் பண்ணி, தர்சனம் பண்ணி சந்தோஷப் பட்டிருக்கான்னு தெரியறது. கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனுடைய அவதாரத்தை சொல்லும் போது,
ravi said…
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே

ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகம் உய்ய

னு பாடறார்.
ravi said…
அருணகிரிநாதர் ஆறுமுகத்தை நிறைய பாடல்களில் பாடியிருக்கார்.

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.

நம்ம மாதிரி மஹா பெரியவாகிட்ட பக்தி இருக்கறவாளுக்குனே ஒரு கந்தர் அலங்காரப் பாடல் இருக்கு
ravi said…
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்

பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்

மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்

குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
ravi said…
அப்படீன்னு அந்த மருவடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும் குருவடிவாய் வந்து என் உள்ளத்தில் குடி கொண்டவே, வந்து தங்கியாச்சு, என் உள்ளத்துலதான் இருக்கார்ன்னு சொல்லியிருக்கார். முருகப் பெருமான் அருணகிரி நாதருக்கு முத்து முத்தா பாடுன்னு, முத்துங்கற வார்த்தையை எடுத்து கொடுத்தார். உடனே அருணகிரிநாதர் என்ன பாடறார்.

முத்தைத் தரு பத்தி திருநகை அத்திகிறை சக்தி சரவண ன்னு பாடறார். அந்த முத்து போன்ற வரிசையான பற்களில் விளங்கும் புன்சிரிப்பு, முத்தை தரு பத்தி திருநகை-ன்னு புன்சிரிப்பைத் தான் பாடறார்.
ravi said…
அப்படி பாகவனோட தர்சனம் கிடைச்ச உடனே மஹான்கள் எல்லாம் முகத்தினுடைய அழகை பார்த்து ரொம்ப லயிக்கிறா. இன்னொரு பாடல் இருக்கு. அந்த ஆறுமுகம் தான் எல்லாமே, எனக்கு கிடைச்ச எல்லா நன்மைகளும் அந்த ஆறுமுகம் தான்னு அந்த பாடல்ல வரும். எல்லாரும் முழுத் திருப்புகழைப் பாடுங்கோ, எங்களுக்கு கேட்கணும்னு சொல்றா. அதனால முழுப்பாட்டையும் நான் பாடறேன்.
ravi said…
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டதாடுமயி லென்ப தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து திரிவேனே
ravi said…
நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற ஸோகமது தந்து எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே.
ravi said…
இந்த பாட்டுல ‘ஆதியோடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே ன்னு பாடறார். அப்படி மஹான்கள் எல்லாம் அந்த ஆறுமுக தரிசனத்துல ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கா. ஆறுமுகம், ஆறுமுகம்-ன்னு இதே ஒரு மந்த்ரமா ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்ன்னு ஒரு பாடல் இருக்கு. முன்னமே நாம அதைப் பார்தோம். ஆச்சார்யாள் ஆறு திருமுகங்களை பத்தி இன்னொரு ஸ்லோகம் சொல்றார் ன்னு சொல்ல வந்தேன். அதை இப்ப படிக்கிறேன்
ravi said…
स्फुरन्मन्दहासैः सहंसानि चञ्च-

त्कटाक्षावलीभृङ्गसङ्घोज्ज्वलानि ।

सुधास्यन्दिबिम्बाधराणीशसूनो

तवालोकये षण्मुखाम्भोरुहाणि ॥ १४॥

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி
ravi said…
நேத்தி ஸ்லோகத்துல இந்த ஆறு முகங்களை சந்திரனோட ஒப்பிட முடியாதுன்னு ஒரு கவித்துவமா சொன்னார்.

இந்த ஸ்லோகத்துல ஆனா அவற்றை தாமரையோட ஒப்பிடலாம் ன்னு சொல்றார்.

‘ஹே ஈஷஸூனோ’ பரமேஸ்வரனுடைய புத்ரனான ஷண்முகக் கடவுளே

‘ஸ்புரன் மந்தஹாஸை’ உன்னுடைய முகத்துல மந்தஹாசம் ஒளிவிடுகிறது.

மந்தஹாசம் என்றவுடன் எப்பயுமே மஹான்கள் வெண்மையா இருக்கு, வெள்ளையா சிரிக்கறது எங்கறதை வெச்சுண்டு, தூய்மையான புன்சிரிப்பு என்பதைப் பத்தி மூக கவி கூட காமாக்ஷியினுடைய மந்தஹாஸத்தை பத்தி நூறு பாடல்கள் எழுதியிருக்கார்😊😊😊
Savitha said…
அருமை அற்புதமான பதிவு தியாகராஜ சுவாமி வரலாறு 👍👍👍👍👍
Sujatha said…
Beautifully narrated . Learnt a lot . Thanks for taking all of us with you in this divine journey 👌👌👌
Shivaji said…
Wonderful . Gets goosebumps . Not known many aspects of your narration 👍👍👍
ravi said…
*தர்மத்தின் அளவுகோல் எது..?*

தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன்.
மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.

*வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார்.*

ravi said…
பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார்.

*மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.*

இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன்பார்த்தது.

*இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்... என்று நினைத்து.*

அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

ravi said…
பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.*

மன்னர் போஜன் விவசாயியிடம்., *"என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்"* என்றார் மன்னர்.

ravi said…
*"தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால்., பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன்..?வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன். அதற்கு ஈடாகத்தான் உங்கள் சத்திரத்தில் நான் சாப்பிட்டு விட்டேன். எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை."* என்று அடக்கமாக சொன்னார் விவசாயி.

*"உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே."* என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.

ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர்.
*கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.*

வியந்த மன்னன், *"உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?"* என்றார்.

*"மன்னா நான் ஒரு விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை."* என்றார் பணிவுடன்.

ravi said…
அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள். *"போஜனே..! தராசில் நிறுத்துப் பார்த்து அளவிடுவது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதனது அளவுகோல். இவர் மனம் மிகப் பெரியது. பகட்டுக்காக தர்மம் செய்யாமல்., ஆத்மார்த்தமாக., வேண்டிய உயிருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம்., அதுவும் உணவை கொடுத்து விட்டார். அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும்., தராசு முள் அப்படியேதான் இருக்கும். ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ., அதை கேட்டு., கொடுத்தால் போதுமானது."* என்றாள்.

ravi said…
இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார்.

*விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.*

*ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தை/கடமையைச் செய். பலன்தானாக வரும். அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்.*
💐💐💐 💐💐💐
S G S Ramani said…
தான் மட்டுமின்றிக் தன் பதிவை படிப்பவர்களையும் இறைவனோடு ஒருங்கிணைக்கும் திறமை நமது ஆன்மீக குருவிற்கே உரித்தான ஒன்று.

அதை மீண்டும் நிரூபித்துள்ள பதிவு...

🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
அபிராமி அந்தாதி -பாடல் 27 
ravi said…
உடைத்தனை வஞ்சப் பிறவியை,
உள்ளம் உருகும் அன்பு படைத்தனை,
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை,
நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை,
சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே


Udaiththanai vanjap piraviyai, ullam urugum anbu padaiththanai, pathma padhayugam soodum pani enakke adaiththanai, nenjaththu azhukkaiyellaam nin arutpunalaal thudaiththanai, sundhari nin arul edhenru solluvadhe.
ravi said…
பேரழகு வடிவுடைய தாயே! என் முன்வினைப் பயனால் ஏற்பட்ட பிறவியைத் தகர்த்து, என் உள்ளம் உருகும் வண்ணம் ஆழ்ந்த அன்பையும் அந்த உள்ளத்தில் உண்டாக்கி, தாமரை மலரையொத்த உன் திருவடிகள் இரண்டையும் தலையால் வணங்கி மகிழும் தொண்டையும் எனக்கென ஏற்படுத்தித் தந்தாய்.

என் நெஞ்சில் கப்பி யிருந்த ஆணவம் முதலிய அழுக்கு களையெல்லாம் உன் கருணை யென்னும் தூய நீரால் கழுவிப் போக்கினாய். இந்த உன் திருவருட் சிறப்பை நான் என்னவென எவ்விதம் எடுத்துக்கூறிப்பாராட்டுவேன்?
ravi said…
உடைத்தனை வஞ்சப் பிறவியை,  --- பிறவி வஞ்சக வேலையை கொடுத்துக்கொண்டே இருக்கிறதாம் - அதாவது இன்னும் பிற இன்னும் பிற என்று வஞ்சகம் செய்துகொண்டே முக்தியைக்காட்டாமல் வஞ்சகம் செய்கிறதாம் - அப்படிப்பட்ட பிறவிப்பிணியை , வஞ்சகத்தை அம்பாள் உடைக்கின்றாள் ...

உள்ளம் உருகும் அன்பு படைத்தனை, ---- ஒரு கடினமான பொருளை உடைக்கவேண்டுமானால் அதை உருக்கவேண்டும்- அம்பாள் என் உள்ளம் உருகியதால் வஞ்சப்பிறவியை உடைத்தாள்

உள்ளம் உருகவேண்டும் அதுதான் உண்மையான பக்தி - என் பிறவிப்பிணியை அம்பாள் உடைத்தாள் என்றால் அவள் அருளால் என் மனம் உருகியதே அதற்கு காரணம்
ravi said…
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை, --- அம்பாள் எனக்கு திணித்தாள் - எதை ?

என் திருவடிகளில் எப்பொழுதும் கிட என் நாமங்களை எப்பொழுதும் சொல்லிக்கொண்டிரு என்ற வரத்தை என்னிடம் திணித்தாள் நான் உய்ய வேண்டியே

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை,

அருட்புனலால் என் நெஞ்சத்தில் உள்ள அழுக்கை துடைத்தாள் -

ravi said…
சுந்தரி ! நின் அருள் ஏதென்று சொல்லுவதே - அம்மா உன் அருளை எப்படி என்று சொல்வது ? என்னவென்று பாடுவேன்

நெஞ்சத்தில் இருக்கும் அழுக்கை எல்லாம் துடைத்து , தன்  பாத திருவடிகளை பற்றிக்கொள்ளும் அழகான வேலையை எனக்கு அளித்து நெஞ்சம் உருகி அவளை நினைக்கும் போது அவள் என் பிறவிப்பிணிகளை அழித்து எனக்கு அவளின் வற்றாத அருளைத் தருகிறாள் அப்படிப்பட்ட அபிராமியை என்னெவென்று புகழ்வேன் பாராட்டுவேன் ?
ravi said…
மனநோய் மற்றும் மன சஞ்சலத்தைப் போக்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 27 | Abirami Anthathi - 27
ravi said…
பையனின் ஜாதகமே தப்பு,சரியில்லை

புதிய ஜாதகத்தை தொட்டுக்கூட பார்க்காமல்,கிரஹக் கோளாறு இல்லை என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

நவ (ஓன்பது) கிரஹங்களுக்கு மேற்பட்ட, நவ (புதிய) கிரஹம் பெரியவாள்.

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.

ravi said…
"பையனுக்கு வயிற்று வலி. எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தாகி விட்டது. பையன் ஜாதகத்தில் கிரஹங்கள் பாதகமாக இருக்கின்றன என்று ஜோஸ்யர்கள் சொல்கிறார்கள். அதற்காக பரிகாரம் செய்ய வேண்டுமாம்"- பெரியவாளிடம் ஒரு பக்தர்..

பெரியவாள் சொன்னார்கள்;

"பையனின் ஜாதகம் தப்பு. பிறந்த தேதி, நேரம் எல்லாம் சரியாகக் கொடுக்கலே. சரியான நேரம் - காலம் கொடுத்து, புதுசா ஜாதகம் கணிச்சுண்டு வா"---பெரியவா.

ravi said…
காஞ்சிபுரம் உபநிஷத் பிரும்மேந்திர மடத்தில், ஸ்ரீவேங்கட சேஷாத்ரி நன்றாக ஜாதகம் கணிக்கக் கூடியவர். அவர் எழுதிக் கொடுத்த ஜாதகத்துக்கும், பழைய ஜாதகத்துக்கும் வித்தியாசம் இருந்தது. கிரகங்கள் இடம் மாறியிருந்தன.

.புதிய ஜாதகத்தைப் பெரியவாளிடம் காட்டினார்கள்.

ravi said…
ஜாதகப்படி, பையனுக்கு எந்தவிதமான கஷ்டமில்லை. பேதி மருந்து கொடுங்கள் சரியாகிவிடும்"-பெரியவா.

பேதி கொடுத்ததன் விளைவாக, நாலைந்து நாக்குப் பூச்சிகள் வெளியே வந்து விழுந்தன.பையன் சொஸ்தமாகி விட்டான்.

ஆமாம், பையனின் ஜாதகம் சரியாக கணிக்கப்படவில்லை என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? புதிய ஜாதகத்தைக் கண்ணால் பார்த்ததோடு சரி, தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஜாதகத்தில் கிரஹக் கோளாறு இல்லை என்பது எப்படித் தெரிந்தது?.

நவ (ஓன்பது) கிரஹங்களுக்கு மேற்பட்ட, நவ (புதிய) கிரஹம் பெரியவா.
ravi said…
*சும்மா ஒரு இராமாயணம் 125*🦜🦜🦜🍓🍓🍓🥇🥇🥇💪💪

சிதைக்கு இளையவன் தீ மூட்டினான் ...

சீதைக்கு ராமன் தீ மூட்டினான் ...

பேசிய வார்த்தைக்கு சீதை தீ மூட்டினாள் ....

கேட்ட பேச்சுக்கு இளையவன் தீ மூட்டினான் ....

விதைத்த விதை வினையை தேடிக்கொடுத்தது ....

சீதே சீதே என்றே புலம்பியவன் சீதை கிடைத்தபின் ஏனோ நிறம் மாறினான் .. 🔥🔥🔥
ravi said…
*இன்னிசை செய்யும் புழுக்கள் 🎼🎼🎼*

பெரிய உடம்பு சுருக்கி க்கொண்டு மண்ணுக்குள் சென்றது ...

போட்ட மலர்கள் வாடிப்போயின

சிந்திய கண்ணீர் கரைந்து போயின ...

பாடல் கேட்ப்போர் யாரும் இல்லை ... கை தட்டுவோர் கண் தூரம் இல்லை ...

சுற்றி இருப்போர் எல்லாம் மண் அரிக்கும் பூச்சிகள் மௌன ராகங்கள் ....

பாடல் ஒன்று பாடேன் பாலு என்றே கேட்டது சில கரையான்கள் .... நாங்கள் இசைக்கிறோம் நீ பாடும் பாட்டுக்கு என்றே எதிரே ஓடிய மண் புழுக்கள் முழங்கின ...

எதற்கும் இசைபவன் பாட ஆரம்பித்தான் ...

சங்கரா ..... சங்கரா.... நாதசரீரா பரா..
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா..
உயிரும் நீ என்,உடலும் நீ என்,
உலகமே நீயே .....

சுற்றி இருந்த புழுக்கள் ரசிக்க சுவை குன்றா இசை இசைக்க ஆலாபரணம் செய்தன பாலுவின் உடலை சுவைத்துக்கொண்டே ....
ravi said…
*ஆயிரம் நிலவே வா*🌕🌕🌕

ஆயிரம் நிலவே வா என்ற குரல் அடிமைபெண்களின் சங்கலியை உடைத்தெழுந்த காலம் அது ...

முதுமை முட்டி மோதும் நடிகர்கள் நடுவிலே இளமை இதோ இதோ என்று இளமையை தயிரியமாக ஊஞ்சலாட விட்டவன் ...

இளைய நிலா பருவம் வந்து நாணி நின்ற காலம் அது ...

பொட்டு வைத்த முகம் கொண்ட அந்த நிலா பொழிந்தது அமுதம் தனை 55 வருடங்களுக்கு ... அணை கட்டி மாள வில்லை ...

பூப்போலே ஒரு புன்னகையில் பால நிலாவை கண்டோம் ..

இயற்கை எனும் இளைய கன்னி ஏற்றி வைத்தாள் காதல் எனும் தீபம் ஒன்று ...

எங்கும் இனிமை எதிலும் புதுமை .... எல்லாரும் தன்னைத்தானே தேடி பாலுவிடம் கண்டோம் ....

பாதரசம் போல் புகழுக்கு கட்டுப்படாமல் தாமரை இலை போல் தர்மத்துடன் வாழ்ந்தான் ....

பூமி ஏங்க புன்னகை கண்ணீர் சிந்த மறைந்து போனான் மறக்க முடியாதவன் ....

சங்கரா ..... சங்கரா.... நாதசரீரா பரா..
வேத விஹாரஹரா..ஜீவேஸ்வரா..
உயிரும் நீ என்,உடலும் நீ என்,
உலகமே நீயே .....

பாடல் ஒன்று பூமிக்குள் இருந்து ஒலிக்கிறது ... கேட்பவர்கள் காதுகளில் கண்ணீர் .....🎼🎼🎼

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை