பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -5 ( 190)

                                             பச்சைப்புடவைக்காரி 

 தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -5

உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்

(190)


சந்திரனைப் பழிக்கும் எழிலுடைய சீதாதேவியே... லட்சுமணனே! நீங்கள் இருவரும் ஸ்ரீராமபிரானின் இருபுறமும் நின்றுகொண்டு சேவை செய்யும் தத்துவத்தை அன்புகூர்ந்து எனக்கு விவரமாகச் சொல்லக் கூடாதா? 

தேகத்தால் வணங்குகிறீர்களா, நாவினால் நாம கீர்த்தனம் செய்கிறீர்களா அல்லது மனதில் தியானித்துப் பரவசம் அடைகிறீர்களா?’ - இப்படி ஒரு கேள்வியை `பக்கல நிலபடி கொலிசே...’ கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர். 




சதா சர்வகாலமும் ராம சிந்தனை... ராமபக்தி! ஆனாலும், ராமபிரானின் மேல் தான் கொண்டிருக்கும் பக்தி குறைவானதோ என்கிற சந்தேகம். 

அற்புதமான சொல்லாடல், கவித்துவம், தேர்ந்தெடுத்த ராகத்துக்குப் பொருத்தமாக, கச்சிதமாக வந்தமரும் பாடல் வரிகள்... நினைக்க நினைக்க மலைக்கவைக்கிறார் தியாக பிரம்மம். 



அப்படிப் பிரமிக்கவைக்கும் பாடல் வரிகளுக்குக் காரணம், அவர் மேற்கொண்ட நாதோபாசனை. அதாவது, இசை வழியாக இறைவனை வழிபடுதல், பக்தி செலுத்துதல். `தியாகய்யா’ என்கிற தியாகராஜர் `கர்னாடக இசையின் இசை மும்மூர்த்திகள்’ என அழைக்கப்படும் மூவரில் முக்கியமானவர். மற்ற இருவர் ஷ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர். தியாகராஜர் பிறந்த 250-ம் ஆண்டில் நாம் இருக்கிறோம். ஆனால், இன்றைக்கும் புதிதாக, கேட்கக் கேட்கத் தெவிட்டாததாக, பக்தி என்கிற கடலுக்குள் நம்மை மூழ்கச் செய்வதாக இருக்கின்றன அவரது கீர்த்தனைகள். 

மேருஸமான தீர! வரத ரகுவீர...’ என்கிற கீர்த்தனையில் ஸ்ரீராமனை இப்படி வணங்குகிறார்... `ஹே ரகுவீரா! வரதா! தியாகராஜனால் பூஜிக்கப் பெற்றவனே! உண்மைப் பொருளே! உன்னுடைய ஒய்யார நடையையும், நீலமேனியின் எழிலையும், கருங்குழல்களையும் கன்னங்களின் பளபளப்பையும் திவ்யாபரணங்களையும் நான் கண்ணாரக் காண என் எதிரில் வா!’ இப்படி உருகி ராமனைப் பாடுகிறவருக்கு ராமனை `வா... வா...’ என்று அழைத்துக் கொண்டிருந்தவருக்கு இல்வாழ்க்கையில் ஈடுபாடு என்ற ஒன்று எப்படி இருந்திருக்க முடியும்? சதா ராமநாம பாராயணம் அல்லது தம்பூராவை மீட்டியபடி ராமனின்மேல் மேற்படி கீர்த்தனைகள். இப்படியே இறுதி வரை நகர்ந்தது அவரின் வாழ்க்கை.    

ரவி தியாக பிரமத்தை இவ்வளவுதான் என்று எந்த வரைமுறைக்குள்ளும்  கொண்டு வர முடியாது - அவர் ஒரு கடல் - தண்ணீர் கொஞ்சம் மொண்டுள்ளோம் அவ்வளவுதான் 

அம்மா மிகவும் அருமை --- சொல்ல வார்த்தைகளே இல்லை ... தயவுசெய்து அடியேனுக்கு திருவையாற்றின் பெருமைகளையும் , திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை இசைப்பதைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா ? 

ஐந்து ஆறுகள் ஓடுவதனால் திருவையாறு என்ற  பெயர் வந்தது . இவ்வூரில் காவிரி ஆற்றில் 23 படித்துறைகள் உண்டு. இவற்றை அச்சுதப்பராயர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் என்பார் முயன்று கட்டினார் . 

திருவையாறு,  தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி.மீ.தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம். 

இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி ஆலயம் சிறப்புடையது. இத்தலத்தின் சிறப்பினைப் பெரியோர்கள் மிகவும் பெருமைப்படுத்திப் பாடியிருக்கிறார்கள். திருநாவுக்கரசர் சுவாமிகள் “ஐயாறே ஐயாறே என்பீராகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்கிறார். 




ஐயடிகள் காடவர்கோன் நாயனார் “ஐயாறு வாயாறு பாயாமுன் ஐயாறு வாயால் அழை” என்கிறார். ஐயாற்று இறைவனை வாயால் அழைத்துப் போற்றினாலே பெரும் பேறு சித்திக்கும் என்பர் பெரியோர். அப்படியிருக்க அந்தப் பெரும் பதிக்குச் சென்று நேரில் வழிபட்டால் அதன் பெருமையினைச் சொல்லவும் வேண்டுமோ?

இது மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்பும் உடைய தலம். தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 51ஆவது தலம். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தலம், இவ்வாலயத்தைச் சுற்றியே இவ்வூர் அமைந்திருப்பது சிறப்பு. இவ்வூருக்கு ஐயாறு, பஞ்சநதத்தலம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன்முக்திபுரம், காவிரிக்கோட்டம் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதன் தலவிருட்சம் வில்வம்.


ரவி இன்னிக்கு முடிக்கலாம் என்று நினைத்தேன் -- திருவையாறைப்பற்றியும் தியாகப்பிரமத்தின் ஆராதனைப்பற்றியும் கேட்டதால் நாளை மீதியை சொல்கிறேன் .... 

அம்மா ! எப்போதுமே  விடிகாலை புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும் நேரம். இந்த சுகமான நேரத்தில்  தேவி லலிதா பவனி உன்னை எண்ணி என் மனம் பொங்கி வழிகிறது. எண்ணம் மனம் இதற்கெல்லாம் எட்டாதவளே. வேதாந்த  ஞானம்  இருந்தால்  தான்   கொஞ்சமாவது உன்  கம்பீரம், இரக்கம், புனிதம் எல்லாம் புரிபடும் என்று தோன்றுகிறது.  

சிருஷ்டி, ஸ்திதி, லயம் , எனும் முத்தொழில்களையும் புரியும் தாயே, தெய்வமே , பிரபஞ்ச  காரணி,  வேதங்களும் அறியமுடியாதவளே,  வார்த்தைக்கு அப்பாற்பட்டவளே, மனதில் எல்லையற்று அறியப்படுபவளே, அம்பா, தேவி லலிதா திரிபுரசுந்தரி தாயே  உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.

உள்ளும் புறமும் அமைதி நிறைந்த சூழ்நிலையில் விடிகாலையில் அம்பே, தேவி லலிதா திரிபுரசுந்தரி உனது நாமங்களை நாவினிக்க  உச்சரிக்கிறேன்.   காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீ சாம்பவி, ஜகத் ஜனனி, பரா, வாழுதேவி, திரிபுரேஸ்வரி ........  எவ்வளவோ  இன்னும்......

சுந்தர வதனத்தில் கமலமாக மலர்ந்த திருமுகத்தில் மெல்லியதாய் ஒரு புன்னகை பூக்க க்ஷராக்ஷராத்மிகா அன்ன  நடை புரிந்தே ஆசி கூறி மறைந்தாள் .


Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 25/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*




ravi said…
கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐
ravi said…
விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம் ச்ருண்வத:
பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம்

புர: பச்யத: வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ: யத் மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே

विश्वामित्रमुनीश्वरेण कथिताहल्याकथां शृण्वतः
पादस्पृष्टशिलातलात् समुदितां श्यामां पुरः पश्यतः।
वेगात् आगतगौतमामलमुखात् जाताशिषो भेजुषः
यन्मन्दस्मितमास राम तदिदं किंन्वत्र विद्योतते॥
ravi said…
கௌதம முனிவரைப்பார்த்து ராமன் சிந்திய புன்னகை
ravi said…
விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம் ச்ருண்வத:

விசுவாமித்திரர் எனும் மாமுனி ராமரை அழைத்துக்கொண்டு வரும் வேளையில் அவர் ராமனுக்கு அகல்யையின் கதையை சொல்லிக்கொண்டேதான் வருகிறார்.
ravi said…
பிரம்மன் மிக மிக அழகான பெண் ஒருத்தியை படைக்க ஆசைப்பட்டார் .. அப்படியே படைத்தவுடன் அவருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது

..இப்படிப்பட்ட அழகான பெண்ணிற்கு ஏத்த பையனை எப்படி தேடுவது ..நடக்கக்கூடிய காரியமா இது ?

இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது சரஸ்வதி அந்த பெண்ணைப்பார்த்து அசந்து போனாளாம்... பெண்ணுக்கே உரிய பொறாமை ஓங்கி எழ நாரதரை கூப்பிட்டு ஏதாவது கலகம் செய்ய சொன்னாளாம் ...

ravi said…
இதற்கு நடுவில் எல்லா தேவர்களும் நான் , நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அவளை திருமணம் செய்ய முன் வர நாரதரின் யோசனைப்படி யார் 16 அண்டங்களையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்குத் தான் இந்த பெண் என்று பிரம்மன் அறிவித்தார் ...
ravi said…
இதற்கு நடுவில் நாரதர் இந்த பெண்ணின் பெயர் என்ன என்று கேட்க பிரம்மன் அகல்யா அதாவது அ + கல்யா = குற்றம் அற்றவள் என்று பெயர் வைத்துள்ளதாக சொன்னார் ..

அவள் தலையெழுத்தை எழுதி விட்டீர்களா என்று கேட்டதற்கு ஆம் ...அதுவும் குற்றம் அற்றவள் என்றே எழுதி விட்டேன் என்றாராம் ...நாரதர் பிரம்மனுக்குத் தெரியாமல் கலைவாணீயின் உதவிக்கொண்டு அகல்யாவில் அ என்ற எழுத்தை அழித்து விட்டாராம் .. அவள் குற்றம் உள்ளவள் என்று தலை எழுத்து மாறி விட்டது
ravi said…
மேலும் நாரதர் வயதான கௌதம ரிஷியிடம் சென்று அப்பொழுது கன்று ஈன்ற பசுவை மூன்று முறை வலம் வரச்சொல்லி அது 16 அண்டங்களையும் சுற்றி வருவதற்கு சமம்...என்று சொல்லி அகல்யாவை கௌதம முனிவருக்கு பிரம்மன் திருமணம் செய்ய வைத்தார் .. கன்று ஈன்ற பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் இருக்கிறார்கள் , 16 அண்டங்களும் பசுவிற்குள் அடக்கம் ...

முதலாக வந்த இந்திரனுக்கு மிகுந்த வெட்கமும் கோபமும் வந்தது . தான் ஏமாந்து விட்டதாக எண்ணி கௌதமருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றே தவறான காரியத்தில் இறங்கி சாபமும் பெற்றான் .
ravi said…
இப்படி விசுவாமித்திரர் கதையை சொல்லிக்கொண்டே கௌதமர் வசித்துவந்த ஆசிரமத்தை அடைகிறார் அங்கே தான் அகல்யா கல்லாக ராமனையே நினைத்துக்கொண்டு காத்திருக்கிறாள்

பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம் புர: பச்யத:

யாருடைய கதையை காதால் ராமன் கேட்டுக்கொண்டு வந்தானோ அவள் ராமனின் பாதத் துளிகள் பட்டவுடன் ராமனின் கண்களில் தெரிந்தாளாம்
ravi said…
வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ:

அது மட்டுமா கௌதம ரிஷி தன் ஞானக்கண்ணால் அக்கல்யாவின் சாபம் தீர்ந்தது என்று புரிந்துகொண்டு வெகு வேகமாக அவளை பார்க்க வேண்டி ஓடி வருகிறாராம் .

அவர் மிகுந்த சந்தோஷம் கொண்டு ராமனை ஆசிர்வதித்தார் தம்பதிகளாக.. உடனே ராமன் அவர்கள் பாதங்களில் சாஸ்ட்டாங்கமாக விழுந்து வணங்கினான் .அவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது உன் முகத்தில் ஒரு புன்னகை உதித்ததே ராமா
ravi said…
யத் மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே

அதே புன்னகை வடுவூரிலும் காண்பிக்கிறாய்... இந்த ஸ்லோகத்தில் ராமனின் எளிமை தெரிகிறது ... எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அடக்கமும் பண்பும் மாறாமல் இருக்கவேண்டும் .

கல்யாவாக இருந்த பெண் ராமனின் பாதத்துளிகள் பட்டவுடன் மறைந்திருந்த அ என்ற எழுத்து ஓடி வந்து கல்யா என்ற பெயருடன் ஓட்டிக்கொண்டு அவள் குற்றமற்றவள் என்று நிரூபித்ததாம் .

தன்னால் எழுப்பப்பட்ட ஒரு பெண் என்று நினைக்காமல் அவள் என் இரண்டாவது தாய் என்று சொல்லும் அளவிற்கு ராமனின் பண்பு ஓங்கி இருந்தது ..
ravi said…
தன்னால் எழுப்பப்பட்ட ஒரு பெண் என்று நினைக்காமல் அவள் என் இரண்டாவது தாய் என்று சொல்லும் அளவிற்கு ராமனின் பண்பு ஓங்கி இருந்தது ..👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌👌
ravi said…
செய்யும் செயலும் அதற்கான காரணமும்.

1.கன்னிகாதானம்" என்றால் என்ன?

2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

ravi said…
வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தை தான்!

ravi said…
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும்
இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.
ravi said…

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..'

என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற
பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகா தானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

ravi said…
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ravi said…
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் *பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன்* என
சான்றோர்கள்
சிலாகிக்கிறார்கள்

ravi said…
*ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...*

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

ravi said…
அந்த நேரங்களில் பெண்ணே
*ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* எனக் குறிக்க பழமும் தருவர்.
ravi said…
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

நான் படித்ததின் தொகுப்பு.
🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
வெற்றி தரும் புரட்டாசி பௌர்ணமி விரதம்

லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும் !

புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து மாலை சந்திர உதய நேரத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் நினைத்த காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

ravi said…
அக்டோபர் 1ஆம் தேதி புரட்டாசி 15ஆம் தேதி வியாழக்கிழமை புரட்டாசி பௌர்ணமி தினமாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசி யான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.

ravi said…
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.

பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும்.

ravi said…
புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமம் உண்டு.

புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

ravi said…
இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். ஒளி பொருந்திய முகமும் நல்ல தேஜசும் பின்னர் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 118*
🌸🌸🌸🌸

ஆத்மவித்யா மஹாவித்யா ஶ்ரீவித்யா காமஸேவிதா |
ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா த்ரிகூடா காமகோடிகா ‖ 118 ‖
🌸🌸🌸🌸

आत्मविद्या, महाविद्या, श्रीविद्या, कामसेविता |
श्रीषोडशाक्षरी विद्या, त्रिकूटा, कामकोटिका ‖ 118 ‖
🌸🌸🌸🌸

aatmavidyaa, mahaavidyaa, srividyaa, kaamasevitaa |
srishodasakhari vidyaa, trikutaa, kaamakotikaa ‖ 118 ‖

ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் ஆத்மவித்யாயை நம;
ஓம் மஹாவித்யாயை நம;
ஓம் ஶ்ரீவித்யாயை நம;
ஓம் காமஸேவிதாயை நம;
ஓம் ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யாயை நம;
ஓம் த்ரிகூடாயை நம;
ஓம் காமகோடிகாயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*583.ஆத்மவித்யா* - ஆத்ம வித்யைக்கு ஆதாரமான ஞான ஸ்வரூபிணியாக இருப்பவள். 🌸🌸🌸🌸

*584.மஹாவித்யா* - சிறந்த உயர்ந்த வித்யை (ஞானமே) உருவானவள்.
🌸🌸🌸🌸

*585.ஶ்ரீவித்யா* - பஞ்சதசி ஸ்வருபமாக இருப்பவள். விஷ்ணு புராணம் நாலு வித்யை பற்றி சொல்கிறது. (கர்மாவைப் பற்றி விளக்கும் யக்ஞ வித்யா, சடங்குகளை பற்றி சொல்லும் மஹா வித்யா, ரஹஸ்யங்களை உரைக்கும் குஹ்ய வித்யா, தன்னை அறியும் ஆத்ம வித்யா).
🌸🌸🌸🌸

*586.காமஸேவிதா* - மன்மதனால் உபாஸிக்கப்பட்டவள்.
🌸🌸🌸🌸

*587.ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா* - பதினாறு அக்ஷரங்களைக் கொண்ட மந்த்ர ஞான உருவானவள் அம்பாள். சக்தி பத்து உருவங்களில் வழிபடப்படுகிறாள். தச மஹா வித்யா என்று அதனால் அவளுக்கு பெயர். சோடசி என்று அதில் ஒரு உருவம்.
🌸🌸🌸🌸
ravi said…

*588.த்ரிகூடா*- மும்முன்றான ஸமூஹங்களோடு இருப்பவள், அம்பாளை மூன்று பிரிவாக காணலாம். அ உ ம (ஓம்) அதில் ஒன்று. ப்ரம்மா விஷ்ணு சிவன் என்று முத்தொழில் புரிபவள். மூன்று நிலைகள், ஜாக்ரதா, ஸ்வப்னா, சுஷுப்தி, மூன்று குணங்கள் சத்வ, ரஜோ, தமோ குணம். அக்னி சூர்யன் சந்திரன் என்று மூன்று கூடம் பஞ்சதசியில் அவளை குறிக்கும்.
அம்பாளை மூன்று சக்தியாக அறிவோம் இச்சா, க்ரியா, ஞான சக்தி ஸ்வரூபம்.
🌸🌸🌸🌸

*589.காமகோடிகா* - பரமசிவனோடு ஏகதேசமாயிருப்பவள்.(காமாக்ஷி. சிவசக்தி).
🌸🌸🌸🌸
ravi said…
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் –

திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன் –

செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் –

என்னாழி வண்ணன் பால் இன்று” என்றார் பேயாழ்வார்

அன்று தந்த காட்சி இன்று காண்பித்தாய் ...என் சொல்வேன் இனி ஒரு சொர்க்கம் வேண்டேன் ... பிறப்பு இருந்தால் பிறக்க வை என்னை ஷீரடி மண்ணில் சாயி 🥇🥇🥇
ravi said…
பிருந்தாவனம் என் கண்ணன் வாழும் பிருந்தாவனம்

பிருந்தாவனம் என் மன்னன் கோயில் கொண்ட பிருந்தாவனம் ...

பிருந்தாவனம் கற்பகமும் காமதேனுவும் சுற்றி வரும் பிருந்தாவனம்

பிருந்தாவனம் என் எண்ணமெல்லாம் நிறைந்தவன் எழில் கொண்டு வீற்றிருக்கும் சிம்மாசனம் 🌸🌸🌸🌸🌸
ravi said…
பூப்போல உன் புன்சிரிப்பு உள்ளம் வெள்ளை போல் நெற்றியின் பளபளப்பு

மாறாத கருணை கார் மேகங்களோ ... வற்றாத அருள் , பெய்யும் பேய் மழையோ

உறங்காத கண்கள் மீனாட்சி தந்ததோ , தள்ளாத வயதில் நீ நடக்கும் பொல்லாத நடை பரமன் தந்த பாதங்களோ 👣👣👣
ravi said…
நான் என்ற சொல் நானாக இல்லாமல் செய்தாய் ...

நான் நான் சொன்னேன் அதை தரை மட்டம் ஆக்கினாய் அருணாசலா

நான் தான் நீயோ என்றே கேட்டேன் உன்னை அருணாசலா ...

படைத்த எல்லா உயிரும் நானே என்று பாகுபாடு இன்றி புரியவைத்தாயே அருணாசலா ..👍👍👍
ravi said…
*மகான்களை தரிசிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை*

*முன்வினையின்படி தான் வாழ்வு நடைபெறுகிறது என்பதால் மகான்களை தரிசிப்பதால் மட்டும் அது மாறி விடப் போகிறதா என்ற கேள்வி மனதில் எழும்..*

*பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மைதான்*.

*ஆனால் நாம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள்*.

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும் . அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம்.

அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார் .

இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை ..! பாரம் குறைந்து விட்டது ..!!
இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள்…!!

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப் படுத்தி விடுகிறார்கள்.

வினைகழிந்த மகான்களை வணங்க நமது பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை.

*ஜீவ சமாதிகளில் வணங்க இன்றும் இது நிகழ்கிறது ..*!
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 5

*Started on 26th sep 2020*💐💐💐💐
ravi said…
நேற்று சில வாக்கியங்கள் / பழமொழிகள் தவறாக உபயோகிக்கப்பட்டு பலர் வாழ்க்கையை சின்னா பின்னாமாக ஆக்குகிறது என்று பார்த்தோம் ... அம்பாளை புரிந்துகொள்ள அவள் அருள் வேண்டும் அந்த அருள் கிடைக்க அவள் நாமங்களை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் . சுவாசம் செய்வது போல்....

அபிராமி பட்டர் கற்பது உன் நாமம் என்று 12 வது பாடலில் சொல்கிறார்

கண்ணியது உன்புகழ் *கற்பது உன் நாமம்*

கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்;

பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.🌷🌷🌷
ravi said…
என்ன அர்த்தம் கற்பது உன் நாமம் என்றால் .... சொல்வது என்றல்லவா இருக்க வேண்டும் ?

அம்பாளின் நாமங்கள் மிகவும் உயர்ந்தவை புனிதமானவை ... மந்திரபூர்வமானவை .....

ஓவ்வொரு முறையும் ஒரு புதுப் புது அர்த்ததைக் கொடுக்கும் ...

உதாரணம் *அதிகர்விதா* என்னும் திருநாமம் ...

மேலாக படித்தால் அம்பாள் மிகவும் கர்வம் கொண்டவள் ... அணுக முடியாதவள் என்று அர்த்தம் வரும் ..

இன்னும் நன்றாக படித்தால் எதனால் அவள் அதிகமான கர்வத்துடன் இருக்கிறாள் என்று புரியவரும் ..

*நல்ல*
*குழைந்தைகளான் நம்மை பெற்றதனால்*

பாரதியார் சொல்வது போல்

உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!

மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!

ravi said…
தாய்க்கு பெருமை தன் மக்களை ஊரார் உத்தமன் என்று புகழ்வதால் ...

*என்ன தவம் செய்தனை யசோதா என்று ஏன் கேட்கிறோம்?* ..

அவளுக்கு பிறந்தவன் பரந்தாமன் ..🙏🙏🙏

அவள் நாமங்கள் புதிய புதிய அர்த்தங்களை தருவதால் இது தான் final meaning என்று சொல்லி விட முடியாது ...

இதைத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார் ..

அம்மா அபிராமி உன் நாமங்களை நான் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன் ...

எவ்வளவு உயர்ந்த வாக்கியம் இது ...👏👏👏

இன்னும் கற்போம் ....🌸🌸🌸🌸🌸
Sujatha said…
By reading this feel we are at Thiruvayyur 💐🙏🏼🙏🏼
Savitha said…
அற்புதம் திருவையாறு
மகிமை
தியாகம்ராஜ கீர்த்தனை கள்
காவிரி ஆறு
ஜெய் ஸ்ரீ ராம்🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
S G S Ramani said…
கடந்த சில நாட்களாக திருவையாற்றில் வாழ்ந்து வருவது போன்ற மனநிலையை ஏற்படுத்தி வரும் பதிவு..

அருமை...அழகு...

🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai... 💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸ்மார்த்தரான* போதிலும் ‘வீரசைவர்’ என்று சொல்கிற அளவுக்குப் பரமசிவன் மட்டுமே தெய்வம் என்று அபிப்ராயப்பட்ட ஒருத்தர் இருந்தார். அவர் நமஸ்காரம் பண்ணும்போது நான் ‘நாராயண’ சொல்வது அவருக்கு ஸங்கடமாக இருந்திருக்கிறது. நான் வாய்விட்டு அப்படி அதிகம் சொல்கிறதில்லைதான்.

ஆனாலும் மடத்து ஸ்ம்ப்ரதாயம் அப்படித்தான் என்று அவருக்குத் தெரியும். அதனால் ஸங்கடப்பட்டிருக்கிறார். என்னிடமே ஒரு நாள் கேட்கவும் கேட்டுவிட்டார்.

ravi said…
அவரிடம் நான், “சிவபக்தர்கள், விஷ்ணு பக்தர்கள் முதலான அத்தனை ஹிந்து மத ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் உபநிஷத்துக்கள் பொதுதானே? அவற்றிலே சிவ குமாரனான ஸ்கந்தன் பேரில் ‘ஸ்கந்தோபநிஷத்’ என்று இருக்கப்பட்டதில் விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ: - ’விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் சிவன் இருக்கிறார்’ – என்று இருக்கிறது. அதனால், நான் சொல்கிற நாராயண நாமத்துக்கும் உயிர் கொடுக்கிற ஹ்ருதயமாக சிவன் தானே இருக்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அவர், “ஆமாம், ஆமாம்” என்று ஒப்புக் கொண்டு த்ருப்தராகப் போனார்.

ravi said…
நான் கொஞ்சம் ‘ஸாமர்த்யம்’தான் பண்ணி விட்டேன்! (ஏனென்றால்) நான் அவரிடம் சொன்னது half truth தான்! இன்னொரு half என்னவென்றால்: “விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ:”  என்பதற்கு முன் பாதமாக அதே மந்த்ரத்தில் “சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு:” – என்று ‘சிவனுடைய இதயத்தில் விஷ்ணு இருக்கிறார்’ என்றும் இருக்கிறது.
ravi said…

*அனைத்துக் கடவுளரையும் ஏற்கும் ஸ்மிருதிகளைப் பின்பற்றும் ஸ்ரீ சங்கராசாரிய மரபுக் குடியினர்.

அந்தத் தீவிர சிவபக்தரை ஸமாதானப்படுத்த ஸாதகமாக இருந்த ஒரு பாதியை மட்டும் சொல்லிச் சமாளித்து விட்டேன்!

(அந்த) இரண்டு வாக்யமுமே நிஜந்தான்; (சிரித்து) இரண்டுமே full truth தான். (எவ்வாறெனில்) ஆடி, ஓடி நடக்கிற கார்ய சக்தி என்ற dynamic energy-க்கும் கார்யம் இல்லாமல், அசைவு இல்லாமல் சாந்தமாக இருக்கும் ஒரு nucleus – கருப் பொருள் – ஹ்ருதயம் என்று சொல்லக்கூடிய உள்பாகம் இருக்கவே செய்கிறது; அதே மாதிரி static என்று அசையாமல் stationary- யாக இருக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளும் ஹ்ருதய ஸ்தானத்தில் dynamic energy குமுறிக் கொண்டேதான் இருக்கிறது. Static Principle-ஐத்தான் சிவன் என்பது; Dynamic Principle-ஐயே விஷ்ணு என்பது.

ravi said…
கார்யலோகத்தில் நடக்கும் ஸகலத்திற்கும் விஷ்ணு தான் காரணம் என்று இதிலிருந்து ஏற்படுகிறதல்லவா? அப்போது ஸகல கார்யங்களையும் அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் ஏற்படிகிறதோ இல்லியோ?

ஆசார்யாள்தான் தம்முடைய காலத்தில் ஆரம்பித்து வைத்தார் என்றில்லாமல், அவருக்கும் எத்தனையோ காலத்திற்கு முன்னாலிருந்தே, காலமே கண்டுபிடிக்க முடியாத அத்தனை ஆதிகாலத்திலிருந்து இந்த தேசத்தில் சாஸ்த்ரங்கள் அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கின்றன:

ravi said…
காயேந வாசா மநஸேந்த்ரியைர் –வா

புத்த்யாந்மநா வா ப்ருக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்-யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி||

கார்யம் என்றால் உடம்பால் செய்கிறது மட்டுமில்லை. மனஸினால் நினைப்பது, புத்தியினால் ஆலோசிப்பது, ஜீவாத்மா என்று இருந்து கொண்டு ப்ரக்ருதி என்ற மாயையினால் ஏற்பட்ட இயற்கைக் குணத்தில் நாம் ஸ்வபாவமாகச் செய்கிறது எல்லாமே கார்யந்தான். த்யானம் என்று பண்ணுவதுகூட கார்யந்தான். ஸமாதி நிலை ஒன்று தவிர ஸகலமுமே கார்யந்தான். அப்படி, இயற்கைக் குணத்தால் தூண்டப்பட்டு காயத்தால், வாக்கால், புத்தியால், கர்மேந்த்ரிய, ஞானேந்த்ரியங்களால், என்னென்ன செய்கிறேனோ அந்த ஸகலத்தையும் பரம்பொருளான நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன்” என்பதுதான் ஸ்லோகத்தின் அர்த்தம்…………..

ravi said…
Half-truth, full-truth சொன்னேனே! அப்படி ஒவ்வொருவருமே  Full Truth-ஆக இருக்கப்பட்ட சிவன், விஷ்ணு இரண்டு பேரும் ஒரே ரூபத்தில்  half-half ஆகச் சேர்ந்திருப்பதுதான் சங்கரநாராயண மூர்த்தம். அந்த மூர்த்தி உள்ள க்ஷேத்திரத்திற்கும் சங்கர நாராயணன் கோவில் என்று பெயர், அதைத்தான் ‘சங்கர நயினார் கோவில்’ என்று வழங்குவதாக ஆகியிருக்கிறது.

ravi said…
ஆசார்யாளே அந்தப் பெயரை ஒரு முக்யமான ஸந்தர்ப்பத்தில் போட்டிருக்கிறார். கேள்வி-பதில் ரூபத்தில் ‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ என்று அவர் ஒன்று அருளியிருக்கிறார். அதை ஸமாப்தி பண்ணுவதற்கு முந்திய ஸ்லோகத்தில் “பகவான் என்றும் மஹேச்வரன் என்றும் சொல்கிறது எவரை?” என்று கேள்வி. பதிலாக சிவன், விஷ்ணு என்று எவரொருவரையும் நம்முடைய ஸமரஸ அத்வைத ஆசார்யாள் சொல்லாமல், ‘சிவ விஷ்ணுக்களாகச் சேர்ந்துள்ள ஒரே ஆத்மாதான்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது ‘சிவ விஷ்ணு’ என்றோ ‘ஹரிஹரன்’ என்றோ வார்த்தை போடாமல் ‘சங்கரநாராயணன்’ என்றே போட்டிருக்கிறார்:

ravi said…
கச்ச பகவான் மஹேச:?

சங்கரநாராயணாத்மைக:

ஆனபடியால் அந்த சங்கரரும் நாராயண நாமத்தை விசேஷித்துச் சொல்லியிருப்பது பொருத்தந்தான்.

மொத்தத்தில் விஷயம், ஜகத்காரண மஹாதத்வத்தை ஆசார்யாள் ‘நாராயணன்’ என்றே குறிப்பிடுவார். அப்படித்தான் எங்களுக்கு மற்றவர்கள் பண்ணுகிற நமஸ்காரத்தையும் காரணவஸ்துவுக்குச் சேர்த்துவிட வேண்டுமென்று சொல்லும் போது ‘நாராயணனுக்குச் சேருங்கள்’ என்று சொல்லி, அப்படி சேர்ப்பிப்பதற்கு ஈஸியாகத் தோன்றுகிற ஒரு விதி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 789*🥇🥇🥇

*US 781*

*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*

பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)

*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.

💐💐💐🌷🌷🌷

*32 வது ஸ்தபகம்*👌👌👌

இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸

🥇🥇🥇
ravi said…
த்ருடதாரணா ந சேத்த்வ

ச்சயவதே யோகீ மஹேசனயநஜ்யோத் ஸ்னே

நாயம் மமேதி பாவ

ஸ்தவ யதி ஸத்ய ஸவித்ரி பக்தம் த்யஜஸி



ravi said…
தேவியே உன்னை யன்றி யாரையும் அறியேன்.. உன்னைத்தவிர எனக்கு வேறு கதியில்லை
ravi said…
ஆனந்தலஹரீ 👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

1.பவாநி ஸ்தோதும் த்வாம் ப்ரபவதி சதுர்பிர்ந வதனை:

ப்ரஜாநாமீசான:த்ரிபுரமதன:பஞ்சபிரபி I

ந ஷட்பி:ஸேநாநீ:தசசதமுகை ரப்யஹிபதி:

ததாsன்யேஷாம் கேஷாம் கதயகதமஸ்மின் அவஸர: II
ravi said…
ஹே பவாநி! உன்னை ஸ்தோத்திரம் செய்ய பிரம்மதேவன் நான்கு முகங்களாலும் முயற்சித்து முடியவில்லை.

த்ரிபுரம் எரித்த பரமேச்வரன் தனது ஐந்து முகங்களாலும் முடியவில்லை.

சுப்ரமணியர் தனது ஆறுமுகங்களாலும் முயன்று முடியவில்லை.

ஏன்?ஆதிசேஷன் ஆயிரம் முகங்களாலுமே முடியவில்லை என்றபொழுது, பிறகு இவ்விஷயத்தில் வேறு எவருக்குத்தான் அவகாசமுள்ளது?
ravi said…
2.க்ருதக்ஷீரத்ராக்ஷ£ மதுமதுரிமா கைரபி பதை:

விசிஷ்யாநாக்யேயோ பவதி ரஸநாமாத்ரவிஷய: I

ததா தே ஸெளந்தர்யம் பரமசிவத்ருங்மாத்ரவிஷய:

கதங்காரம் ப்ரூம:ஸகலநிகமாகோசரகுணே II
ravi said…
நெய், பால், திரா¬க்ஷ, தேன் இவற்றின் இனிமை இவை ஒரு சில வார்த்தைகளால் சிறப்பித்துக் கூற இயலாது;அது சுவைக்கும் நாக்கிற்கு மட்டுமே இலக்கானது. அதுபோல, ஹே தேவி!வேதங்களனைத்திற்குமே எட்டாத குணங்கள் உடையவள் c, உனது அழகு என்பது பரமசிவன் ஒருவன் கண்ணுக்கு மட்டுமே இலக்கானது. ஆகவே நான் எப்படி சொல்ல முடியும்?
ravi said…
3.முகே தே தாம்பூலம் நயனயுகலே கஜ்ஜலகலா

லலாடே காச்மீரம் விலஸதி கலே மௌக்திகலதா I

ஸ்புரத்காஞ்சீ சாடீ ப்ருகடிதடே ஹாடகமயீ

பஜாமி த்வாம் கௌரீம் நகபதி கிசோரீமவிரதம் II
ravi said…
உனது வாயில் தாம்பூலமும், இரு கண்களிலும் மையெழுத்தும், நெற்றியில் கஸ்தூரிதிலகமும், கழுத்தில் முத்துமாலையும் விளங்குகிறது. உனது இடையில் தளதளக்கும் ஒட்டியானத்துடன் வஸ்திரம் பிரகாசிக்கிறது. மலையரசன் மகளான உன்னை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
ravi said…
4.விராஜன் மந்தாரத்ருமகுஸும் ஹாரஸ்தனதடீ

நதத்வீணா நாதச்ரவண விலஸத்குண்டலகுணா I

நதாங்கீ மாதங்கீ ருசிர கதிபங்கீ பகவதீ

ஸதீ சம்போரம்போருஹசடுலசக்ஷ§ர் விஜயதே II
ravi said…
அன்னையின் மார்பில் மந்தார புஷ்பமாலை விளங்குகிறது. வீணையின் நாதம் கேட்டு மகிழும் அன்னையில் காதுகளில் குண்டலம் பளிச்சிடுகிறது. மகங்களின் மகளான அம்பாள் அழகிய நடையும், துவண்ட அங்கமும் கொண்டவள், தாமரை இதழ் போன்ற குறுகுறுப்பான கண்ணுடன் இதோ பரமேச்வரன் அகமுடையாள் விளங்குகிறாளே!
ravi said…
5.நவீநார்கப்ராஜன் மணிகநக பூஷாபரிகரை:

வ்ருதாங்கீ ஸாரங்கீருசிரநயனாங்கீக்ருதசிவா I

தடித்பீதா பீதாம்பரலலித மஞ்ஜீரஸுபகா

மமாபர்ணா பூர்ணாநிரவதிஸுகை ரஸ்துஸுமுகீ II
ravi said…
அபர்ணை பார்வதீ, இளம் சூர்யன் போல் விளங்கும் வைரம், தங்கம் இவற்றாலான நகைகள் பூட்டப்பட்டவளாய், பெண் மான் கண்கள் போன்ற கண்களால் ஈர்க்கப்பட்ட சிவனையுடையவளாய், மின்னல்போல் மேனியளாய், பீதாம்பரத்தின் மேல் அழகிய ஒட்டியானமணிந்தவளாய் எல்லா ஸெளபாக்கியங்களும் நிரம்பி எனக்கு ப்ரஸன்னையாக இருக்கட்டும்
ravi said…
6.ஹிமாத்ரே:ஸம்பூதா ஸுலலிதகரை:பல்லவயுதா

ஸுபுஷ்பா முக்தாபி:ப்ரமரயுதா சாலகபரை: I

க்ருதஸ்தாணு ஸ்தாநா குசபல நதா ஸுக்திஸரஸா

ருஜாம் ஹந்த்ரீ கந்த்ரீ விலஸதி சிதானந்தலதிகா II
ravi said…
நோயைப் போக்கும் நடமாடும் சித்-ஆனந்தமென்ற ஒரு கொடி விளங்குகிறதே, அது ஹிமய மலையில் தோன்றி, மென்மையான கைக்கொண்டிருப்பதால் துளிரோடும், முத்துமாலைகள் உடையதாகையால் புஷ்பங்களோடும், கருங்கூந்தல்கள் இருப்பதால் வண்டுகளோடும், ஸ்தாணு என்ற படரும் கம்போடும் மார்பகங்களாகிய பழம் இருப்பதால் சற்று சாய்ந்தும், நல்ல பேச்சால் சாறு கொண்டும் மிளிர்கிறது.
ravi said…
7.ஸபர்ணாமாகீர்ணாம் கதிபயகுணை:ஸாதரமிஹ

ஸ்ரீயந்த்யந்யே வல்லீம் மம து மதிரேவம் விலஸதி

அபர்ணைகா ஸேவ்யா ஜகதி ஸக லைர்யத்பரிவ்ருத:

புராணோsபிஸ்தாணு:பலதி கிலகைவல்யபதவீம் II
ravi said…
அடர்ந்த இலைகளும், வேறுசில குணங்களும் நிரம்பியதால் ஒரு கொடியை பரிவுடன் நாடுவதுண்டு. ஆனால் என்னைக் கேட்டால், யாவரும் நாட வேண்டியது அபர்ணா (இலையில்லாத) என்ற கொடிதான். ஏனெனில் அது சுற்றியுள்ளதாலேயல்லவா பழைய ஸ்தாணு (மரம்கூட) கைவல்யம் என்ற ஒன்றை காய்க்கிறது.
ravi said…
8.விதாத்ரீ தர்மாணம் த்வமஸி ஸகலாம்நாயஜநநீ

த்வமர்த்தாநாம் மூலம் தநதநம நீயாங்க்ரிகமலே I

த்வமாதி:காமாநாம் ஜநதி க்ருத கந்தர்ப விஜயே

ஸதாம் முக்தேர்பீஜம் த்வமஸி பரம ப்ரஹ்மமஹிஷி II
ravi said…
ஹேதேவி!நீ தர்மம், அந்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் பயக்க வல்லவள். எல்லா வேதங்களையும் தோற்றுவித்து தர்மங்களைச் செய்ய ஹேதுவாகிறாய். நீயே பொருள் அனைத்திற்கும் ஆண்வேர்.

c குபேரன் வணங்கும் திருவடித்தாமரை படைத்தவளன்றோ. நீயே காமங்களுக்கும் முதல்வர்.

ஹே தாயே!நீதானே மன்மதனை வெற்றி கொள்ளச்செய்தாய். பரம்பொருளின் பட்டமஹிஷியாய் இருந்து மோக்ஷத்திற்கும் மூலகாரணமாக இருக்கிறாய்.
ravi said…
9.ப்ரபூதா பக்திஸ்தே யதபி ந மமாலோலமனஸ:

த்வயா து ஸ்ரீமத்யா ஸதயமவலோக்யோsஹமதுநா I

பயோத:பாநீயம் திசதி மதுரம் சாதகமுகே

ப்ருசம் சங்கே கைர்வா விதிபிரநுநீதா மம மதி: II
ravi said…
ஊசலாடும் மனதுடைய எனக்கு பக்தியில்லையெனினும், உனக்குத்தான் எவ்வளவு பாசம் பற்று?ஆகவே நீதான் நல்லவள், என்னைக் கவனித்துக்கொள். சாதகப்பறவையின் வாயில் இனிய தண்ணீரை மேகம் பொழிகிறதே!என்னை முறையாக வேறு யார் அரவணைத்துள்ளார் என்று சந்தேஹமாகத்தான் உள்ளது.
ravi said…
10.க்ருபாபாங்காலோகம் விதர தரஸா ஸாதுசரிதை:

ந தே யுக்தோபேக்ஷ£ மயிசரண தீக்ஷ£முபகதே I

நதேதிஷ்டம் தத்யா தனுபதமஹோ கல்பலதிகா

விசேஷ:ஸாமாந்யை:கதமிதரவல்லீபரிகரை: II
ravi said…
நல்லதொரு சரிதம் படைத்த தேவியே!சீக்ரம் என் மேல் கடைக்கண் பார்வையை செலுத்தி விடு. சரணம் என்ற தீ¬க்ஷ பெற்ற என்னிடம் ஏன் இந்த பாராமுகம் உனக்கு?கற்பகக் கொடி வேண்டியவற்றைக் கொடுக்கவில்லையெனில் மற்ற சாதாரண கொடிகளை விட அதன் விசேஷம்தான் என்ன?

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை