பச்சைப்புடவைக்காரி - ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை 1 - 220
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-1
(220) 👍👍👍💥💥💥
ஓம் நமஸ்தே அஸ்து பகவன்Ōm Namashtēshtou Bhagavanவிஸ்வேஸ்வராய, மஹாதேவாய,Vishvēshvarāya Mahādēvāyaத்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,Trayambakāya Tripourāntakāyaத்ரிகாக்நி-காலாயTrikāgni– Kālāyaகாலாக்நி - ருத்ராய நீல - கண்டாய ம்ருத்யுஞ்ஜயாயKālāgni– Roudrāya Nīl – Kandāya Mroutyougnjayāyaஸர்வேஸ்வராய ஸதாஸிவாயSharvēshvarāya Sadāshivāyaஸ்ரீமன் மஹாதேவாய நம:Srīman Mahādēvāya Namaha !
என்னப்பா ருத்ரம் சொல்கிறாய் போலிருக்கே --- ஆமாம் தாயே புரியாமல் ஏதோ உளறுகிறேன் - எல்லாம் புரிந்தவள் நீ - ஒன்றுமே புரியாமல் வாழும் எனக்கு புரிந்தவள் கொஞ்சம் புரியும் படி சொல் அம்மா ....
சொல்கிறேன் அவசியம் எல்லோருமே தெரிந்துகொள்ளவேண்டியது ருத்ரம் - இதில் வேதம் அந்த தில்லைக்கூத்தனைப்போல் ஆனந்த நடனம் புரிவதை தரிசிக்கலாம்
சரி உனக்கு புரியும் படி சொல்கிறேன் - வரி வாரியாக சொல்வதைக்காட்டிலும் ருத்திரத்தில் இறைவன் புரிந்த லீலைகளை தொகுத்து சொல்கிறேன் - ருத்திரத்தின் தாத்பரியம் புரியும் .... சில கூடுதல் பதிவுகளாக வரும்
அம்மா தன்னியன் ஆனேன் பாஸ்கரராயருக்கு பிறகு நேராக ஈசனிடம் எங்களை அழைத்துச்செல்கிறாய் .
சரி கவனமாக கேள் -----‘‘பரமேஸ்வரா! அடைக்கலம் நாடி உன் சந்நதி வந்து விட்டேன். முப்பொழுதும் உன் திருமேனி தீண்டி பூஜித்த என் உயிரை காலன் கொண்டு செல்வதா? சுவாமி, காத்தருளுங்கள்’’ என்று கதறி லிங்கத்தை அணைத்துக் கொண்டான் மார்கண்டேயன்.
சிவம் சினந்து வந்து, காலனை உதைத்து பாலனை காத்தது. அவன் கொண்ட சினம் , யமனுக்கு தீக்ஷை தந்து அருளிவிட்டது. பாலகனை சிரஞ்சீவியாவும் ஆக்கி விட்டது. ஜீவாத்மா கொள்ளும் கோபம் தள்ள வேண்டியது . பரமன் கொள்ளும் கோபம் போற்றுதலுக்குரியது. ஆகவே வேதமும் முதலில் ‘‘ஓம் நமோ பகவதே ருத்ராய’’ என்று அவன் சினத்தை போற்றுகிறது.
பெருமிழலைக் குறும்பர் என்று ஒரு நாயனார். சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவடியை பணிந்தே அட்டமா சித்தியும் அடைந்தவர். சுந்தரர் கயிலை செல்லப் போவது கேட்டு, அவருக்கு முன்னே யோகத்தால் கயிலை அடைந்தவர். இங்கு பல தலங்கள் சென்று ஈசனை பாடிய சுந்தரர்க்கு முன் சுந்தரரை மட்டுமே பாடிய இவர், சிவ கதி அடைந்து விட்டார். அரன் சேவையை விட அடியவர் சேவையே சிறந்தது என்று உணர்த்தவே ருத்ரம் ‘‘அதோயே .... கரண் நமஹ’’ என்று கூறி சிவனடியாருக்கு சலாம் இடுகிறது.
அடுத்தபடியாக, ஒரு வேண்டுதலை வைக்கிறது வேதம். (அத தஸ்ய தனு: ......பவ) ‘‘அப்பனே உன் கையில் உள்ள வில்லின் நாணை அவிழ்த்து விடு’’ என்று ஈசனை நோக்கி சொல்கிறது வேதம். ஏன்?
அவன் வில்லில் நாண் ஏற்றியும் பயன் இல்லை என்பதால்தான் - அன்று, முப்புரத்தையும் எரிக்க ஈசன் மேருவை வில்லாக வளைத்தான். ஆயினும் அது பயன் படவில்லையே. சிரித்தே முப்புரத்தையும் அழித்து ஒழித்து விட்டானே. ஆக்கவும் அழிக்கவும் அவன் குறு நகையே போதும் அல்லவா?
அன்று வானில் சுற்றித் திரிந்த முப்புரத்தை தாக்க ஈசன் செல்வதற்கு ஒரு தேர் செய்யப்பட்டது. செய்தவன் விஸ்வகர்மா என்னும் தேவ சிற்பி.
அதன் அங்கங்களாக இந்திராதி தேவர்கள் இருந்தனர். ஈசன் போருக்கு புறப்பட சித்தமாகி அந்த தேரில் ஏறினார். அப்போது அந்த தேரின் பல்வேறு பாகத்தில் இருந்த தேவர்கள், தன்னால்தான் ஈசன் முப்புரத்தையே எரிக்கப் போகின்றார் என்று இறுமாந்தனர். ஆணவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பது இல்லை. தேவர்களின் ஆணவத்தை அறிந்த மாலவன் காளையாக மாறினான். பரமன் தேரை விடுத்து எருதில் ஏறினான். மாலவன் என்றால் அன்பானவன் என்று பொருள். அதாவது ஈசன் தூய அன்பையே ஏற்பான். ஆணவத்தை இல்லை என்பதை இந்த புராண சம்பவம் காட்டுகின்றது. இதை கருத்தில் கொண்டே , “நமோ பப்ளுஷாய” என்றது வேதம்.
அதாவது ரிஷப வாகனனை வணங்குகின்றேன் என்று பொருள். அடுத்து, எதிரிகளை நன்கு தாக்கி, கதறச் செய்பவன் என்று சொல்கிறது ( நம: ஸஹமானாய...) . இந்த வாக்கியத்திற்கு பின் வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு நாள் இலங்கை வேந்தன், செருக்கொடு புஷ்பக விமானத்தில் ஏறி உலா வந்து கொண்டு இருந்தான்.
இடைப்பட்டது கைலாசம். அவனுக்கு வந்தது ஆவேசம். இருபது கைகளாலும் கயிலையை பெயர்த்து ஏறிய முற்பட்டான். அதை அசைத்தும் விட்டான் லங்காதிபதி.
ஈசன் நிதானமாக கால் கட்டை விரலை ஊன்றினான். பாரம் தாங்காமல் அலறினான் இலங்கை வேந்தன். அவன் கதறலால் உலகமே நடுங்கியது. அன்று முதல் உலகம் நடுங்கும் அளவு உறக்க கத்தியவன் என்ற பொருள் படும்படி, அவனை, நாம் ராவணன் என்று அழைக்கிறோம். இப்படி ராவணனை அலற செய்ததால் தான் வேதம் ஈசனை அவ்வாறு புகழந்து உள்ளது போலும்.
இப்போது வேதம் ஒரு படி மேலே சென்று பரமனை ‘‘தஸ்கரனாம் பதி’’ அதாவது திருடர் கூட்டத்து தலைவன் என்று சொல்கிறது. பொருளை திருடுபவன் திருடன்.
ஆனால். மனிதர் உள்ளத்தையும் அவர்தம் பாவத்தையும் கவர்பவன் திருடர் தலைவன். சம்பந்தர் ‘‘என் உள்ளம் கவர் கள்வன்’’ என்று அல்லவா ஈசனை போற்றினார். ஆதி சங்கரர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். சிவன் என்னும் திருடர் தலைவனிடம் , மற்றொரு திருடனை கண்டிக்கும் படி சொல்கிறார். சதா பிறர் பொருள் மீது ஆசைப் பட்டு அதை கவர எண்ணமிடும் மனம் என்னும் திருடனை ஈசன் முன் நிறுத்துகிறார் சங்கரர்.
ரவி இன்னும் பார்ப்போம் - எவன் ஒருவனுக்கு ருத்ரம் ,சொல்லவேண்டும் படிக்கவேண்டும் , புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் பிறக்கின்றதோ அவனுக்கு கண்டிப்பாக மறு பிறவி இல்லை எங்களுடன் கலந்துவிடுகிறான் ..
காம்யா - அன்பினால் ஆளவந்தவள் அம்பாள். காமம் என்றாலே உடல்பசி என்ற தப்பான எண்ணம் நிலவுகிறது. காமம் என்றால் வடமொழியில் பூரண அன்பு. காமாக்ஷி என்றாலே தயை, கருணை பொழியும் கண்களை உடையவள் என்று தான் அர்த்தம். காமம் என்றால் நாம் விரும்புவது. மோக்ஷம் கேட்கிறோமே தருவது யார், யாரால் முடியும். அம்பாள் ஸ்ரீ லலிதை ஒருவளால் தான் அதை அனுக்கிரஹம் செய்ய முடியும்.
காமகலாரூபா -- அன்புக்கு ஒரு உருவம் தேடினால் கிடைப்பது ஸ்ரீ லலிதாம்பிகை தான். நுண்ணிய காமகலா ரூபத்தில் ஸ்ரீ பரமேஸ்வரன் கண்ணுக்கு மட்டுமே புலப்படுபவள்.
சிரித்துக்கொண்டே அன்னை நகன்றாள் --- அவள் நடை அழகு தில்லையில் ஆனந்தமாக நடனம் புரியும் தில்லைக்கூத்தனைத்தான் எனக்கு காண்பித்தது
ஓம் நமஸ்தே அஸ்து பகவன்
Ōm Namashtēshtou Bhagavan
விஸ்வேஸ்வராய, மஹாதேவாய,
Vishvēshvarāya Mahādēvāya
த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய,
Trayambakāya Tripourāntakāya
த்ரிகாக்நி-காலாய
Trikāgni– Kālāya
காலாக்நி - ருத்ராய நீல - கண்டாய ம்ருத்யுஞ்ஜயாய
Kālāgni– Roudrāya Nīl – Kandāya Mroutyougnjayāya
ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய
Sharvēshvarāya Sadāshivāya
ஸ்ரீமன் மஹாதேவாய நம:
Srīman Mahādēvāya Namaha !
‘‘பரமேஸ்வரா! அடைக்கலம் நாடி உன் சந்நதி வந்து விட்டேன். முப்பொழுதும் உன் திருமேனி தீண்டி பூஜித்த என் உயிரை காலன் கொண்டு செல்வதா? சுவாமி, காத்தருளுங்கள்’’ என்று கதறி லிங்கத்தை அணைத்துக் கொண்டான் மார்கண்டேயன்.
சிவம் சினந்து வந்து, காலனை உதைத்து பாலனை காத்தது. அவன் கொண்ட சினம் , யமனுக்கு தீக்ஷை தந்து அருளிவிட்டது. பாலகனை சிரஞ்சீவியாவும் ஆக்கி விட்டது. ஜீவாத்மா கொள்ளும் கோபம் தள்ள வேண்டியது . பரமன் கொள்ளும் கோபம் போற்றுதலுக்குரியது. ஆகவே வேதமும் முதலில் ‘‘ஓம் நமோ பகவதே ருத்ராய’’ என்று அவன் சினத்தை போற்றுகிறது.
பெருமிழலைக் குறும்பர் என்று ஒரு நாயனார். சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவடியை பணிந்தே அட்டமா சித்தியும் அடைந்தவர். சுந்தரர் கயிலை செல்லப் போவது கேட்டு, அவருக்கு முன்னே யோகத்தால் கயிலை அடைந்தவர். இங்கு பல தலங்கள் சென்று ஈசனை பாடிய சுந்தரர்க்கு முன் சுந்தரரை மட்டுமே பாடிய இவர், சிவ கதி அடைந்து விட்டார். அரன் சேவையை விட அடியவர் சேவையே சிறந்தது என்று உணர்த்தவே ருத்ரம் ‘‘அதோயே .... கரண் நமஹ’’ என்று கூறி சிவனடியாருக்கு சலாம் இடுகிறது.
அடுத்தபடியாக, ஒரு வேண்டுதலை வைக்கிறது வேதம். (அத தஸ்ய தனு: ......பவ) ‘‘அப்பனே உன் கையில் உள்ள வில்லின் நாணை அவிழ்த்து விடு’’ என்று ஈசனை நோக்கி சொல்கிறது வேதம். ஏன்?
அவன் வில்லில் நாண் ஏற்றியும் பயன் இல்லை என்பதால்தான் - அன்று, முப்புரத்தையும் எரிக்க ஈசன் மேருவை வில்லாக வளைத்தான். ஆயினும் அது பயன் படவில்லையே. சிரித்தே முப்புரத்தையும் அழித்து ஒழித்து விட்டானே. ஆக்கவும் அழிக்கவும் அவன் குறு நகையே போதும் அல்லவா?
அன்று வானில் சுற்றித் திரிந்த முப்புரத்தை தாக்க ஈசன் செல்வதற்கு ஒரு தேர் செய்யப்பட்டது. செய்தவன் விஸ்வகர்மா என்னும் தேவ சிற்பி.
அதன் அங்கங்களாக இந்திராதி தேவர்கள் இருந்தனர். ஈசன் போருக்கு புறப்பட சித்தமாகி அந்த தேரில் ஏறினார். அப்போது அந்த தேரின் பல்வேறு பாகத்தில் இருந்த தேவர்கள், தன்னால்தான் ஈசன் முப்புரத்தையே எரிக்கப் போகின்றார் என்று இறுமாந்தனர்.
ஆணவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பது இல்லை. தேவர்களின் ஆணவத்தை அறிந்த மாலவன் காளையாக மாறினான். பரமன் தேரை விடுத்து எருதில் ஏறினான். மாலவன் என்றால் அன்பானவன் என்று பொருள். அதாவது ஈசன் தூய அன்பையே ஏற்பான். ஆணவத்தை இல்லை என்பதை இந்த புராண சம்பவம் காட்டுகின்றது. இதை கருத்தில் கொண்டே , “நமோ பப்ளுஷாய” என்றது வேதம்.
அதாவது ரிஷப வாகனனை வணங்குகின்றேன் என்று பொருள். அடுத்து, எதிரிகளை நன்கு தாக்கி, கதறச் செய்பவன் என்று சொல்கிறது ( நம: ஸஹமானாய...) . இந்த வாக்கியத்திற்கு பின் வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு நாள் இலங்கை வேந்தன், செருக்கொடு புஷ்பக விமானத்தில் ஏறி உலா வந்து கொண்டு இருந்தான்.
இடைப்பட்டது கைலாசம். அவனுக்கு வந்தது ஆவேசம். இருபது கைகளாலும் கயிலையை பெயர்த்து ஏறிய முற்பட்டான். அதை அசைத்தும் விட்டான் லங்காதிபதி.
ஈசன் நிதானமாக கால் கட்டை விரலை ஊன்றினான். பாரம் தாங்காமல் அலறினான் இலங்கை வேந்தன். அவன் கதறலால் உலகமே நடுங்கியது. அன்று முதல் உலகம் நடுங்கும் அளவு உறக்க கத்தியவன் என்ற பொருள் படும்படி, அவனை, நாம் ராவணன் என்று அழைக்கிறோம். இப்படி ராவணனை அலற செய்ததால் தான் வேதம் ஈசனை அவ்வாறு புகழந்து உள்ளது போலும்.
இப்போது வேதம் ஒரு படி மேலே சென்று பரமனை ‘‘தஸ்கரனாம் பதி’’ அதாவது திருடர் கூட்டத்து தலைவன் என்று சொல்கிறது. பொருளை திருடுபவன் திருடன்.
ஆனால். மனிதர் உள்ளத்தையும் அவர்தம் பாவத்தையும் கவர்பவன் திருடர் தலைவன். சம்பந்தர் ‘‘என் உள்ளம் கவர் கள்வன்’’ என்று அல்லவா ஈசனை போற்றினார். ஆதி சங்கரர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். சிவன் என்னும் திருடர் தலைவனிடம் , மற்றொரு திருடனை கண்டிக்கும் படி சொல்கிறார். சதா பிறர் பொருள் மீது ஆசைப் பட்டு அதை கவர எண்ணமிடும் மனம் என்னும் திருடனை ஈசன் முன் நிறுத்துகிறார் சங்கரர்.
ரவி இன்னும் பார்ப்போம் - எவன் ஒருவனுக்கு ருத்ரம் ,சொல்லவேண்டும் படிக்கவேண்டும் , புரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் பிறக்கின்றதோ அவனுக்கு கண்டிப்பாக மறு பிறவி இல்லை எங்களுடன் கலந்துவிடுகிறான் ..
காம்யா - அன்பினால் ஆளவந்தவள் அம்பாள். காமம் என்றாலே உடல்பசி என்ற தப்பான எண்ணம் நிலவுகிறது. காமம் என்றால் வடமொழியில் பூரண அன்பு. காமாக்ஷி என்றாலே தயை, கருணை பொழியும் கண்களை உடையவள் என்று தான் அர்த்தம். காமம் என்றால் நாம் விரும்புவது. மோக்ஷம் கேட்கிறோமே தருவது யார், யாரால் முடியும். அம்பாள் ஸ்ரீ லலிதை ஒருவளால் தான் அதை அனுக்கிரஹம் செய்ய முடியும்.
காமகலாரூபா -- அன்புக்கு ஒரு உருவம் தேடினால் கிடைப்பது ஸ்ரீ லலிதாம்பிகை தான். நுண்ணிய காமகலா ரூபத்தில் ஸ்ரீ பரமேஸ்வரன் கண்ணுக்கு மட்டுமே புலப்படுபவள்.
சிரித்துக்கொண்டே அன்னை நகன்றாள் --- அவள் நடை அழகு தில்லையில் ஆனந்தமாக நடனம் புரியும் தில்லைக்கூத்தனைத்தான் எனக்கு காண்பித்தது
Comments
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 149*
🌸🌸🌸🌸
வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ ‖ 149 ‖
🌸🌸🌸🌸
वीराराध्या, विराड्रूपा, विरजा, विश्वतोमुखी |
प्रत्यग्रूपा, पराकाशा, प्राणदा, प्राणरूपिणी ‖ 149 ‖
🌸🌸🌸🌸
viraaraadhyaa, viraadrupaa, virajaa, visvatomukhi |
pratyagrupaa, paraakaasaa, praanadaa, praanarupini ‖ 149 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் வீராராத்யாயை நம;
ஓம் விராட்ரூபாயை நம;
ஓம் விரஜாயை நம;
ஓம் விஶ்வதோமுக்யை நம;
ஓம் ப்ரத்யக்ரூபாயை நம;
ஓம் பராகாஶாயை நம;
ஓம் ப்ராணதாயை நம;
ஓம் ப்ராணரூபிண்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*777.வீராராத்யா* - தலை சிறந்த வீரர்களால் ஆராதிக்கப்படுகிறவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*778.விராட்ரூபா* - விராட் ஸ்வருபமாக இருப்பவள் அம்பாள். ஸ்தூல சரீர மைஷ்ட்யபிமானியான ஈஸ்வரனுக்கு விராட் என்று பெயா் (ஆத்மா தேகத்தோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வது. சிறியதில் சிறிது, பெரியதில் பெரிது. சிறியது என்பதை ஒரு ஜீவனின் தனி உணர்வு என்றும் பெரியது என்பதை பிரபஞ்சத்தின் உணர்வு என்றும் புரிந்து கொள்வோம்).
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*780.விஶ்வதோமுகீ* - எல்லா பக்கங்களிலும் முகத்தையுடையவள் அம்பாள் (ப்ரம்மஸ் வரூபிணி).
🌸🌸🌸🌸
*781.ப்ரத்யக்ரூபா* - உள்ளே நோக்கி திரும்புவதினால் தெரியும் (ஆத்ம /த்யான ) ரூபத்தை உடையவள், அவளை உள்ளே தான் காணமுடியும். அதன் பயனாக விளையும் ஆத்மஞானம். ஆத்மானுபவம்.
🌸🌸🌸🌸
*782.பராகாஶா* - ஆத்ம த்யானத்தினால் மிக உயர்ந்த ஆகாச ஸ்வருபமாயிருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*783.ப்ராணதா* - பிராணை (சக்தியை) கொடுப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. ஆகாசத்தை போலவே பிராணனும் அறியமுடியாதது.
🌸🌸🌸🌸
*784.ப்ராணரூபிணீ* - அடியார்களின் ப்ராண ரூபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*மந்தாகினீ மதுர மௌலி த்ருதாத்ம நாம்ன:*
*மந்தாக்ஷ மந்தித மநோ பவ விப்ரமஸ்ய*
*மந்த ஸ்மிதம் மத் அக மர்தனம் அஸ்து நேது:*💐💐💐
मन्दोदरी-दयितमाथि-शराढ्यपाणेः
मन्दाकिनी-मधुरमौलि-धृतात्मनाम्नः।
मन्दाक्ष-मन्दित-मनोभव-विभ्रमस्य
मन्दस्मितं मदघ-मर्दनं अस्तु नेतुः॥
அடுத்த ஸ்பந்தம். அருமையான ஆரம்பம். இனிது, ஈடில்லை. உண்மை, ஊக்கம், எளிமை, ஏற்றம். ஐயமில்லை. ஒப்புவமையில்லா ஓங்கிய புன்னகை. 16 குணங்களும் கொண்ட ஒருவர் என நாரதர் வால்மீகிபகவானிடம். கூறியது ஞாபகம் வந்தது.
பாலகாண்டம்
அயோத்திய காண்டம்
ஆரண்ய காண்டம்
கிஷ்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
உத்தர காண்டம்
ஆசுகவி வால்மி ராமாயணத்தையும் வடுவூர் ராமனின் புன்னகையையும் சேர்த்து அமைத்த மந்தஸ்மித ராமாயணத்திலும் ராமனின் புன்னகையை ஏழு ஸ்பந்தங்களாக அமைத்திருக்கிறார்
1.பால ஸ்பந்தம் - 52 ஸ்லோகங்கள்
2.அயோத்தியா ஸ்பந்தம்
3.ஆரண்ய ஸ்பந்தம்
4.கிஷ்கிந்தா ஸ்பந்தம்
5. சுந்தர ஸ்பந்தம்
6.யுத்த ஸ்பந்தம்
7. ஒரு assorted ஸ்பந்தம்
53 வது ஸ்லோகம் - அயோத்தியா ஸ்பந்தம்
ஆசுகவியும் அயோத்தியா ஸ்பந்தத்தில் வால்மீகி சொன்ன மாதிரியே தனது 53 வைத்து ஸ்லோகத்தை அமைக்கிறார்..👍👍👍
மண்டோதரியின் கணவனான ராவணனை அழிக்க வீரமிகு , திறமை உள்ள கணைகளை ராமன் வைத்திருக்கின்றான்
அதுவே அவன் அவதார நோக்கம் என்று சொல்கிறார் -
ஆற்றல் மிக்க கணைகளை ராமன் ஏந்தி இருக்கிறான்
*மந்தாகினீ மதுர மௌலி த்ருதாத்ம நாம்ன:*👌👌👌
மந்தாகினீ என்றால் கங்கை -
அந்த கங்கையின் ஜலத்தில் முடியில் வைத்துள்ளவன் பரமேஸ்வரன் -
அப்படிப்பட்ட ஈடே இல்லாத சிவபெருமான் தன் நெஞ்சத்திலும் நாவிலும் சுமப்பது ராம நாமமே -
அதனால் தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ராம ராம ராம என்று மூன்று தடவை சொன்னால் ஆயிரம் விஷ்ணுவின் நாமங்களை சொன்னதற்கு ஈடாகும்
சமஸ்கிரதத்தில்
ரா = 2வது எழுத்து ம =5 வது எழுத்து = 2*5 , 2.*5 , 2.*5 = 1000🙏🙏🙏
ராமனின் வெட்கத்தின் ஒரு துளியே மன்மதனை மயங்கவைக்கும் சக்தி உடையது -
அதுமட்டும் அல்ல மன்மதனின் கர்வத்தையும் அடக்கி விடும் சக்தி கொண்டது -
காமனை ஏறித்தான் ஈசன் - தன்னால் தான் எல்லாம் முடியும் என்ற கர்வத்தினால் -
மன்மதனை பெற்ற விஷ்ணுவினால் கூட அவனைக்காப்பாற்ற முடியவில்லை ---
அவன் கர்வம் அவனை அழித்தது ஆனால் அம்பாள் கருணை கொண்டு அவனுக்கு மறுவாழ்வு கொடுத்தாள் ஒரு அத்தையின் ஸ்தானத்தில்
*மந்த ஸ்மிதம் மத் அக மர்தனம் அஸ்து நேது:*💐💐💐
என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் அழிக்கக்கூடிய புன்னகை வடுவூரில் இருக்கும் ராமனின் முகத்தில் சிந்திக்கொண்டிருக்கிறது💐💐💐
பார் புகழும் ஜாதியெல்லாம் பரந்தாமன் உன் பாதம் தொடும் புஷ்ப ராகங்கள்
நீரோடும் நதிகளிலெல்லாம் நின் கருணை புது வெள்ளம் ...
பாசம் மிகுந்த உள்ளம் எல்லாம் ராயர் படுத்துறக்கும் பிருந்தாவனம் 🥇🥇🥇
பாபா என்று சொன்னேன் ...பாவங்கள் எல்லாம் பறந்து மறைந்தன
வா வா என்று உன் குரல் கேட்க கண்டேன் .. வாவ் வாவ் என்றே உன் மேனி தரிசனம் கிடைக்கப் பெற்றேன் 🙏🙏🙏
ஒன்றும் எடுத்துச் செல்ல வில்லை ... எல்லா மனமும் உன்னுடன் அபிபின்னமானதே ...
ஒன்றும் சேர்க்க வில்லை ... ஆத்மாக்கள் உன்னிடம் சங்கமம் ஆனதே
உயிரும் நீ யே என்றேன் ... நீ தான் நான் என்றே என்னையும் ஏற்றுக்கொண்டாயே இறைவா , ரமணா ...🥇🥇🥇
தவிக்கும் இளமை வேள்வியில் நெய்யாக உருகினதோ
தரம் கெட்ட மனிதர்கள் தரமில்லா பேசிட தவிக்கும் பூமிக்கு வானத்தின் நீராக வந்தாயோ
சிகரம் தொட்ட மாந்தர்கள் சிரம் குனிந்து உன் பாதம் தொட சீர் செய்தாயோ வாழ்க்கையின் பயணத்தை🥇🥇🥇
பதிவு 35
*Started on 26th sep 2020*💐💐💐💐
*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
கன கம்பீரமானது. வேத வாக்கியங்களும் இடம்பெறுவதால் வேதங்களுக்கு இணையான தோத்திரமாக விளங்குவது.
வேதங்கள் போன்றே, நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் பொருளை பரமேஸ்வரன் மட்டுமே அறிய முடியும்.
ஒவ்வொரு நாமாவளிக்கும் அனேக அர்த்தங்கள் உண்டு.
இதற்கான விளக்கத்தினை, சிந்தாமணி எனும் நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம் எடுத்துரைக்கின்றது.
ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்,
*ஸ்ரீ சிவ: ஸ்ரீ சிவா நாத: ஸ்ரீமாந் ஸ்ரீபதி பூஜித*’ என்று தொடங்கி
*சிதேக ரஸ ஸம்பூர்ண ஸ்ரீ சிவ: ஸ்ரீ மஹேச்வர:*’ என்று பூர்ணமாகின்றது.
ஸ்ரீ சிவ என்ற நாமாவளி தொடங்கி ஸ்ரீ சிவ ஸ்ரீ மஹேஸ்வர: என்று 👌👌👌முடிவதால் சிவபெருமானின் பரிபூரணமான அருளைத் தரவல்லதாக அமைகின்றது.👍👍👍
*272. Labdhayauvanaśālinī लब्धयौवनशालिनी*👌👌👌 She is perceptually and abundantly youthful 👍👍👍
*273. Labdhādhiśayasarvāṅgasaundaryā लब्धाधिशयसर्वाङ्गसौन्दर्या*💐💐💐 Every part of Her body is flawless
*274. Labdhavibhramā लब्धविभ्रमा*👌👌👌 She takes care of all the activities of the Universe like a Play 🥇🥇🥇
She has these feelings towards two, one is Her Creator Śiva and another is the beings created by Her.👣👣👣🙏🙏🙏👏👏👏
which is explained thus: “Rāga means desire or a wish. Pāśa is a type of rope used to pull an object.
She pulls all the material desires of Her devotees using this rope. There are three śakti-s (śakti in this context means power) – iccā, jñāna and kriya.
This nāma talks about iccā śakti or the desire. She never allows Her devotees to sink with desires.”💐💐💐
which is explained thus: “Rāga means desire or a wish. Pāśa is a type of rope used to pull an object.
She pulls all the material desires of Her devotees using this rope. There are three śakti-s (śakti in this context means power) – iccā, jñāna and kriya.
This nāma talks about iccā śakti or the desire. She never allows Her devotees to sink with desires.”💐💐💐
But this does not make a person complete and makes him to think again about something else in order to make him full.
Thus, he develops a series of desires, attachments, which manifest one after another; and in the process he forgets the true Self within.
He does not have time to think about the Self within, as he is too busy with series of desires and attachments.
If one is able to win over the five constituents of māyā, he enters into the state of Bliss and awaits liberation.
However, this depends upon one’s sādhana (spiritual practice).🥇🥇🥇
உள்ளத்தில் ருத்ரத்தின் நேர்மறையான அதிர்வுகளை உணரத் தொடங்கி விட்டேன்...
அதிர்வுகள் தொடரட்டும்....
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
லலிதாம்பிகையே சரணம்🌷🌷🙏🏻🙏🏻
மகிழ்ச்சி உண்டு. புகழ்ச்சி உண்டு
*பதிவு 231*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
6/3
ஸீமா சூன்யக வித்வ வர்ஷ ஜனனீ யா காபி காதம்பினீ
மாராராதி மனோ விமோஹன விதௌ காசித்தம கந்தலீ
காமாக்ஷ்யா கருணா கடாக்ஷ லஹரீ காமாய மே கல்பதாம்
*பதிவு 810*🥇🥇🥇
*US 802*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
33வது ஸ்தபகம்
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
மஹே ஸஸூத்தாந்த புரந்தரி கர்மணா
நிரந்தரம் மந்த்ரஜபேன வா மதேர்
விஸோத னே நோத மனோர்பணேனவா
1.கர்மானுஷ்டானம் புரி வதாலா ?
2. விடாது உன் நாமங்களை ஜெபிப்பதனாலா?
3. மனத்தையே அர்பணிப்பதினாலா ?
எதனால் அம்மா ?
*பதிவு 811*🥇🥇🥇
*US 803*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
33வது ஸ்தபகம்
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
மனோர் பணே நேஸவது ப்ரஸீதசி
ஜபேன மந்த்ரஸ்ய ஸூபஸ்ய வர்தஸே
ஜகத்ரயீ தாத்ரி கலேபராந்தரே ||
*பதிவு 232*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
7/3
ப்ரௌடத்வாந்த கதம்பகே குமுதநீ புண்யாங்குரம் தர்சயந்
ஜ்யோத் ஸ்னா ஸங்கமனேsபி கோகமிதுனம் மிஸ்ரம் ஸமுத்பாவயந்
காலிந்தீல ஹரீதஸாம் ப்ர கடயந் கம்ராம் நபஸ்யத்புதாம்
கஸ்சிந் நேத்ர மஹோத் ஸவோ விஜயதே காஞ்சீ புரே சூலின
கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுடைய பெற்றோர் பந்துக்களுக்குள்ளேயே முறைப் பையனைப் பார்த்து அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெண், “புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்” என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், “உன் இஷ்டப்படியே போ!” என்று விட்டு விட்டார்கள்.
ஒரு நாளைக்கு ராஜா பல்லக்கில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொண்டு போனான்.
“ஏண்டா அந்த நாயை அடித்தாய்?” என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக் கொண்டு அதட்டினான்.
‘நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அடித்தவனையே திருப்பி அடிக்கிற இவன்தான் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
“எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாதவரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். “தத்தூரே தத்வந்திகே” – ‘தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்’ என்று ச்ருதி சொல்கிறது.
புண்ணகை ராமாயணம்
தழூவல்
அதில் இருக்ககும் காண்டம் விளக்கவுரை அற்புதம்
ஜெய்ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷
ஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம், மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி குமாரனின் சக்தி. குமாரன் என்றால் சுப்ரமண்ய ஸ்வாமி ஒருவரே. ஷண்முகனின் சக்தியான இவளைக் “குமார கண நாதாம்பா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் வல்லமை படைத்தவள். “துள்ளி வருகுது வேல், பகையே சுற்றி நில்லாதே போ!” என்னும்படிக்குப் பகையை ஓட ஓட விரட்டி அடிப்பாள் இவள்.
ஆறுமுக சக்தியான இவள் ஷட்கோணத்தில் உள்ள ஆறு ஆதாரங்களின் மூலமும் சஹஸ்ராரத்தில் இருக்கும் சச்சிதானந்தத்தை அடைய உதவுவாள்.
“மூலாதாரைக –நிலயா-ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ
என்று கூறுகிறது. அபிராமி பட்டரோ,
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”
என்கின்றார்.
முத்தேவர்களாலும் தன் தொழிலை நடத்துபவள், மும்மறைகளுக்கும் அதிபதியானவள், மூன்று வகை அக்னிக்களையும் ஒழுங்கு செய்பவள், மூன்று வகை சக்திகளைத் தன்னிடத்தே கொண்டவள், மூன்று ஸ்வரங்களைக் கொண்டவள், மூவுலகையும் தன்னகத்தே இருத்தியவள், என எல்லாவற்றுக்கும் அதிபதியானதோடு அல்லாமல் மூன்று பிரிவை உடைய ஆறு சக்கரங்களுக்கும் தலைவியாகவும் இருப்பவள். இவளின் அருளாலேயே நஞ்சை அமுதாக்கி நம்மை சாயுஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறாள். இனி சும்ப, நிசும்பர்களின் வதத்தைப் பார்ப்போமா?
ஹம்ஸ வாகனத்தில் அக்ஷமாலையும் கமண்டுவும் ஏந்திக்கொண்டு ப்ரஹ்ம சக்தி ப்ராஹ்மணி என்ற பெயருடனும், ரிஷப வாகனத்தில் திரிசூலம் ஏந்திக்கொண்டு , நாகாபரணங்களைச் சூடிக்கொண்டு சந்திரகலையோடு மஹேஸ்வரரின் சக்தி மாஹேஸ்வரி என்ற பெயருடனும், அசுரனான சூரனைக் கொல்வதற்கென்றே பிறந்த குமாரனின் சக்தி கெளமாரி என்ற பெயருடன் மயில் வாகனத்தில் குகவடிவோடு, அம்பிகை குகனுக்கு அளித்த சக்தியாயுதத்தை ஏந்தியவண்ணமும், சங்கு, சக்ர, கதாதாரியாய், கதை, சார்ங்கம், வாள் ஆகிய ஆயுதங்களோடு கருட வாகனத்தில் வைஷ்ணவியும், ஸ்ரீஹரியின் யக்ஞ வராஹ வடிவத்தின் சக்தியான வாராஹியும், சங்கு, சக்ரங்களை ஏந்திக்கொண்டும், நரசிம்மத்தின் பெண் வடிவான நாரசிம்மி தன் உடலைச் சிலிர்த்துக்கொண்டும், கர்ஜனை செய்து கொண்டும் நாரசிம்மியாகவும், ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு தேவருலகை ஆளும் இந்திரனின் சக்தியான ஐந்த்ரீ இந்திரனைப் போன்றே வஜ்ராயுதம் ஏந்தி யானை வாகனத்திலும் தேவியின் படைத் தலைவர்களாக வந்து சேர்ந்து கொண்டனர். இவர்களே முறையே சப்த கன்னியர் என்றும், சப்த மாதாக்கள் எனவும் அழைக்கப் படுவார்கள். பின்னர் சண்டிகா தேவியானவள் சிவனை அசுரர்களிடம் தூது அனுப்பினாள்.
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா (அ)
இவ்வளவு நேரம் அருணாசலத்தை தன் மனம் போனபடி திட்டினவர் - அதிகமாக திட்டிவிட்டோமோ என்று மனதில் வருந்தி இந்த வரிகளில் புகழ்ந்து தள்ளியுள்ளார் ---
திட்டிய ரமணர் தன்னிடமே சொல்லிக்கொள்வது --
யாரை நான் திட்டினேன்? என் அப்பன் அருணாசலத்தைத்தானே -
கொஞ்சினவர்களுக்கு எங்கே அவன் ஓடிப்போய் அருள் செய்கிறான்?
நான் திட்டுவதால் என்ன தவறு என்று கேட்கிறார்.
அதே சமயம் எங்கே எனக்கும் தெரியாமல் கோபம் கொண்டிருப்பானோ என்றும் பயப்படுகிறார் -
மீண்டும், கோபம் கொள்பவன் என் அருணாசலமாக இருக்கமுடியாது என்று சொல்லி தேற்றிக்கொள்கிறார்
இப்படி மாறி மாறி அக்ஷரமாலையை தொடுக்கிறார் ரமணர் --
ஓம் எனும் பிரணவத்தின் உட்பொருள் நீ தானே --
உனக்கு ஒப்பும் இல்லை மிக்காரும் இல்லை ---
உன்னை யாரால் முழுவதும் புரிந்துகொள்ள முடியும் அருணாசலா ---??
ஓம்கார வடிவே அவன் ஆடும் நடனம் --
சடைகள் விரித்தாடும் அவன் அழகை,
கரங்கள் காட்டும் அபயத்தை,
கால்கள் காட்டும் நளினத்தை
ஒன்றாக சேர்த்தால் ஓம் எனும் வடிவம் வரும் ---
அடி முடி காண முடியாமல் தோற்றவர்கள் பல கோடி --- யாருக்குமே இவனை ஒப்பிட முடியாது ---
எளிமையாக தெரிகின்றாய் அருணாசலா ---
உன்னை யாரே முழுதும் அறிவர் என்று ஒரு கேள்வியை வைக்கிறார் -----
ரமணராலேயே அருணாசலேஸ்வரரை முழுவதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை --
ஆனால் இதற்கு வழியே இல்லை என்றும் அவர் சொல்ல விரும்பவில்லை -
அருணாசலா -- உன்னுடன் நான் அபின்னமாய் கலந்து விட்டால் நான் உன்னை முழுதும் உணர்ந்தவனாகிவிடுவேன் என்றும் சொல்கிறார் --
இறைவனை முழுதும் அறிந்துக்கொள்ள வேண்டுமா? --
அவனிடம் நாம் இரண்டற கலக்க வேண்டும் --
அப்பொழுது அவன் நமக்கு காட்டும் அழகில் அவனை நம்மால் முழுதும் புரிந்துக்கொள்ளமுடியும் -----
பக்தியும், அன்பும் சரணாகதியும் தான் நம்மை அவனிடம் கொண்டு போய் சேர்க்கின்றன என்பதுதான் இந்த பாடலின் தத்துவம் ...ௐௐௐௐௐ
கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா (அ)
முதல் பார்த்த வரிகளில் கோபம் இருந்தது, இயலாமை இருந்தது, அதிகாரம், கட்டளை இருந்தது - உரிமை வார்த்தைகளாக தெளித்தது -- இனி வரு பாடல்களில் இரக்கமும், கெஞ்சுதலுமே இருக்கின்றன --- பார்க்கமாட்டாயா, வர மாட்டாயா, அவ்வைக்கு கருணை காட்டியதைப்போல் எனக்கும் உன் கருணையை காட்ட மாட்டாயா .... என்று புலம்புகிறார் ரமணர் --
இன்றைய வரிகளில் ஒரு படி இன்னும் மேலே போகிறார் ரமணர்.
எனக்கு கண்கள் மிகவும் முக்கியம் அருணாசலா -
அவைகள் கொண்டுதான் இந்த உலகைப்பார்க்கிறேன்.
--- அந்த கண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை ---
கண்களையே பார்க்கும் கண்கள் அருணாசலர் ---
எவ்வளவு அழகாக உணர்ச்சி பூர்வமாக ரமணர் சொல்கிறார் பாருங்கள் ---
இந்த அக கண்கள் உனக்குத்தேவை இல்லை -
இருந்தாலும் உன்னால் கண்களே இல்லாமல் கூட எல்லாவற்றையும் பார்க்க முடியும் ---
இதில் என்ன வேடிக்கை என்றால் உன்னை எங்களால் பார்க்க முடியவில்லை ---
யாரால்தான் பார்க்க முடியும்? நான் உன்னை பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை - அருணாசலா நீ என்னைப்பார் அது எனக்குப்போதும் --
இந்த உலகமே என் கால் அடியில் வந்து விடும்
உன் பார்வை என் மீது கொஞ்சமே பட்டாலும் --
கொஞ்சம் பார் என்னை அருணாசலா!!!! 🙏
ஒரு பின்னோட்டம் 12 to 15
13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா
14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை ஆளுவது உன் கடன் அருணாசலா
15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா
13 வது பாடலில் ஓம் எனும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னை யார்தான் அறிய முடியும் அருணாசலா - ஹரியும் பிரம்மனும் கூட உன்னை முழுவதும் அறிந்துக்கொள்ள வில்லை -- நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது ...
14 வது பாடலில் ஔவையை போல் ஒரு சிறந்த சிவபக்தை இருக்க முடியாது - நீ ஒப்புக்கொண்டால் நானும் சிறந்த சிவ பக்தன்- அவளுக்கு அருள் செய்ததை போல், கருணைக்காட்டியதைப்போல் எனக்கும் காட்டு அருணாசலா என்கிறார்
15வது பாடலில் கண்ணுக்கு கண்ணாக இருக்கிறாய் - கண்ணையே பார்க்கும் கண்ணாக இருக்கிறாய் -- கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கிற உன்னை யாரால் காண முடியும் - என்னை கொஞ்சம் பார் அருணாசலா என்கிறார் -- ஆண்டவனுக்கு கண்ணில்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது --- அவனே பார்வையாக இருக்கும் போது தனியாக அவனுக்கு கண் வேறு வேண்டாமே --- எல்லாவற்றிலும் இருப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும்
16. காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து
எனோடு இருப்பாய் அருணாசலா
திருமாலை காந்தன் என்று சொல்வார்கள் ஆழ்வார்கள்.
கலைமுழு தோர்ந்து கரிசெலாம் அறுத்த
காந்தனே பருமணி அரவத்
தலைகிடந் திமைக்குந் தாத்திரி யதனிற்
சாற்றருந் தக்கநன் முயற்சி
உலைவறப் புரியா ஒருவனுக் கெங்ஙன்
உற்றிடுஞ் செல்வநன் னிலத்தை
நிலைபெற உழுது வித்திலான் தனக்கு
நீள்பயன் உற்றிடுங் கொல்லோ.
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
ஓர் இரும்புத்துண்டு புழுதியில் கிடந்தாலும், காந்தத்தை மேலே காட்டினால் போதும், அந்த இரும்புத்துண்டு காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதனுடன் சேர்ந்துவிடும்.
அதுபோல, தன்னுடைய இப்போதைய நிலையிலிருந்து தன்னை ஈர்த்துக்கொண்டு அரவணைக்குமாறும் என்றும் தன்னோடிருக்குமாறும் வேண்டுகிறார் ரமணர்.
இன்னும் கூர்ந்து படித்தால் அர்த்தம் இப்படியும் வரலாம்.
அருணாசலா, என் மனம் ஒரு இரும்பு ... கெட்ட எண்ணங்களால் மிகவும் துரு பிடித்து போய் விட்டது ...
நீ தான் எல்லோரையும் காந்தம் போல் உன் பக்கம் இழுக்கின்றாயே,
என் மனம் எனும் இரும்பை உன் அன்பு என்ற காந்தத்தால் இழுத்து உன் பக்கம் கொஞ்சம் சேர்க்க மாட்டாயா ... 🙏
கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாசலா (அ)
கிரி என்பது மலையக் குறிக்கும். இங்கே உயர்ந்த மலையை ஒப்பிடுகிறார் ரமணர் ... அதே சமயத்தில் கிருபை கடலே என்கிறார் ...
கடல் ஆழமானது ... மலை உயரமானது ....
சம்பந்தமே இல்லாத இரண்டு உயர்ந்த பொருள்களை, சம்பந்தர் பாடிய அந்த ஈசனுடன் சேர்க்கிறார் ரமணர் ...
திருவெண்ணாமலை பரமேஸ்வரனின் உருவம் ...மலையாக அங்கே அருணாசலம் இருக்கிறார் ... நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல ... அவனுடன் நம்மை அபின்னமாய் ஆக்க .... ஆனால் அதற்கு அருணாசலேஸ்வரருக்கு என்ன வேண்டும் ....
கடலின் ஆழத்தைப்போல் அதிகமாக நம் மீது இருந்தால் தான் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எனும் பெருங்கடலில் தள்ளாமல் நம்மை அவனுடன் சேர்த்துக்கொள்ள முடியும் ...
மலையாக உயர்ந்து நிற்கும் உன்னுடன் நான் சேர கடலின் ஆழத்தைப்போல் உனக்கு இரக்கம் பிறக்க வேண்டும்.
அதை எனக்காக கிருபை கூர்ந்து அருள் செய்ய மாட்டாயா என்று கெஞ்சுகிறார் ரமணர் இந்த பாடல் வரிகளில்.
கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையைப் பாழ்செய் அருணாசலா (அ)
அருணாசலா நீ எங்கும் நிறைந்தவன் ...
நீ இல்லாத இடம் ஒன்று இருக்கும் என்றால் அது இந்த துருபிடித்த என் மனம் மட்டுமே ... நான் சொல்வது தவறு என்றால் ஐம்புலக் கள்வர்கள் என் உள்ளத்தில் நுழையும் போது நீ அங்கே இல்லாமல் ஓடிப்போய் இருக்க மாட்டாய் ...
காந்தமாய் என் இரும்பான நெஞ்சத்தை இந்நேரம் உன் பக்கம் இழுத்துக்கொண்டிருப்பாய் ....
என் தாயினும் அதிக கருணை உடைய நீ இன்னும் வராமல் இருக்கமாட்டாய் ....
உன்னைத் திட்டினாலும் உனக்கு சொரணை வருவதில்லை ...
கெஞ்சினாலும் இரக்கம் வருவதில்லை ...
ஆனால் உன்னை வணங்காமல் நான் சீரழைந்து போவதை மட்டும் உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ....
கீழே இருக்கிறாய் ... பாதங்கள் கண்களுக்கு தெரிவதில்லை ...
மேலே இருக்கிறாய் ... ஜடா முடி புரிவதில்லை ...
எங்கும் இருக்கிறாய் மணியின் ஒலி போல் ...
நான் கீழ்மையான எண்ணங்கள் கொண்டவன் அருணாசலா அதை அழித்து என்னை காப்பாற்ற மாட்டாயா அருணாசலா ....
குர்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாசலா (அ)
இரும்பைக் கவரும் காந்தம், அதன் பிறகு எதுவும் செய்யாது.
ஆனால் என் அருணாசலர் என்ன செய்வார் தெரியுமா?
தன்னைச் சேரும் பக்தர்களுடைய குற்றங்களைத் தீர்ப்பான்,
குணங்களைப் பெருக்குவான்,
காந்தம் தன்னிடம் இழுத்து விட்டுக்கொண்டு ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கும் ...
நீயோ காந்தன் ... நீ காந்தத்தை விட மிக உயர்ந்தவன் ...
என்னை உன் பக்கம் இழுத்துக்கொண்டு, என் குற்றங்களை மன்னித்து, நல்ல குணங்களை தனது எனக்கு குருவாகவும் இருப்பான்.
அதுதான் என் அருணாசலத்தின் மிகப்பெரிய வேறுபாடு ...
இறைவன் மாணிக்க வாசகருக்கு குருவாக வந்தான் ... முருகன் அருணாகிரிக்கு குருவாக வந்தான் ... அதைத்தான் அருணகிரி இப்படி அழகாக சொல்கிறார் ....
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாசலா (அ)
இந்த உலகம் ஒரு மாயை ... எல்லாம் நிஜம் போல் தோன்றும் ...
ஆனால் எல்லாமே கானல்நீர் ...
நல்லவர்களாக தோற்றம் அளிப்பார் பலர்.
ஆனால் நல்லவர்கள் அல்ல அவர்கள் ...
அப்படிப்பட்ட நபர்களின் கண்களில் படாமல் என்னைக் காப்பாற்று ...
உனக்கு மட்டுமே தெரியும் யார் உண்மையில் நல்லவர் அல்லது கெட்டவர் என்று ...
எனக்கு உன்னை மட்டும் தான் தெரியும் ...
அருள் கூர்ந்து என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் அருணாசலா ....
நல்லவர் போல் வேஷம் போடுபவர்கள் ஐம்புலகள்வர்களை காட்டிலும் மோசமானவர்கள் --
இவர்களை விரட்டவும் முடியாது, கொல்லவும் முடியாது -
நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மனதை மீண்டும் இவர்கள் விடுவித்து - ஊரெல்லாம் அலைய விடுவார்கள் --
இவர்களிடம் இருந்து என்னை கண்டிப்பாக காப்பாற்று அருணாசலா என்று வேண்டுகிறார் ரமணர் ...
கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணசலா (அ)
ரமணருக்கு மீண்டும் பொறுமை மறைகிறது ---- அருணாசலா --- நான் எவ்வளவு கெஞ்சுகிறேன் ... ஒரு வஞ்சகன் போல் கொஞ்சமும் என் மீது அருளைக்காட்டாமல் இருக்கிறாயே.
பயப்படாதே நான் இருக்கிறேன், உனக்கு என் அருள் என்றும் எப்பொழுதும் இருக்கிறது என்று எப்பொழுது சொல்லப்போகிறாய் ... என்னை கவனிப்பதை விட உனக்கு வேறு என்ன பெரிய வேலை?