பச்சைப்புடவைக்காரி - ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2 - 221

                                             பச்சைப்புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

                ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2


                            (221) 👍👍👍💥💥💥

‘‘அப்பனே ஈஸ்வரா, நீயோ உள்ளம் கவர் கள்வன்,என் மனமோ பிறர் பொருளை திருடும் திருடன். ஆகையால் நீ இவனை ஆட்கொண்டு, இவனை திருத்து’’ என்று ஈசனிடம் வேண்டுகிறார் சங்கரர். (சிவானந்த லஹரி - 22)  

அடுத்து வேத நாயனார் பரமனை சபாபதியாக தரிசிக்கிறார். சபாபதி என்றாலே சிதம்பரநாதர் தான் மனக் கண் முன் வருவார். மனம் என்னும் மேடை, தூய்மை ஆகி வெற்றிடமானால், அதில் ஈசன் நர்த்தனம் ஆடுவான். இதுவே சிதம்பர ரகசியம். சரி சித்தம் வெற்றிடம் ஆவது எப்படி?. அது யோகத்தாலும் சாத்தியம் பக்தியாலும் சாத்தியம். 

அதைக் காட்டவே யோகத்தில் சிறந்த பதஞ்சலிக்கும், பக்தியில் சிறந்த வியாக்ரபாதருக்கும் சமமாய் அவன் ஆனந்தத் தாண்டவத்தை காட்டுகின்றான் நடராஜன். 

அவன் மட்டும் ஆட வில்லை. அவன் அடியவரையும் ஆடவும் பாடவும் விட்டுப் பார்க்கிறான். தந்தை மகனைக் கண்டு களிப்பது போல தானும் களிக்கிறான். மாணிக்கவாசகரை திருவாசகம் பாட விட்டு தானே அதை எழுதவும் செய்தான். இந்தக் குணமே வேத நாயனாரை கவர்ந்திருக்க வேண்டும். 


அதனால் தான் சபாபதியைப் புகழ்கிறார். அடுத்து அவனை ‘‘அஷ்வேப்யோ அஷ்வபதிப்யச்ச வோ நமோ நமோ’’ என்கின்றார் வேதநாயனார். 

அதாவது குதிரையாகவும் குதிரையை நடத்துபவனாகவும் இருக்கிறான் என்கிறார்.  பரமேஸ்வரன், மாணிக்கவாசகருக்காக நரியை பரியாக (குதிரையாக) மாற்றி அருளினான். 

தானே ஒரு குதிரை வீரன் ரூபத்தில் குதிரைகளை ,அரிமர்த்தன பாண்டியன் அவைக்கு நடத்தி வந்தான். ஈசனின் குதிரை நடத்திய அழகும் மிடுக்கும் மன்னனைக் கவர்ந்து விட்டது. அவருக்கு, பாண்டியன் உயர்ந்த பட்டாடை ஒன்றை பரிசாக தந்தான். அதை ஈசன் குதிரையின் சாட்டையால் அலட்சியமாக வாங்கினான். இறைவனுக்கு மாணிக்கவாசகர் பக்தியே உகந்து ஏற்கும் பொருள். 

பட்டோ பகட்டோ இல்லை. இன்றும் இந்த குதிரை வீரன் கோலத்தில் ஈசனை திருப்பெருந்துறையில் தரிசிக்கலாம். அடுத்து,  ஈசனை வேடன் என்றும், மீனவன் என்றும் வர்ணிக்கிறார் வேத நாயனார். 

வருங்காலத்தில் அர்ஜுனன் பாசுபதம் வேண்டி தவமியற்றுவான். அப்போது அவனுக்கு அருள, சிவன், வேடுவனாக வருவான் என்று  வேத நாயனார் கணித்தார் போலும். ஆதலால் வேதநாயனார் ஈசனை வேடன் என்று விளித்து விட்டார். திருவிளையாடற் புராணத்தில்  ஒரு கதை உண்டு. அதன்படி, ஒருமுறை அம்பிகை ஈசனை வேதத்தின் பொருள் சொல்லுமாறு கேட்கிறாள். 


பாதி உபதேசம் நடக்கும்போது, அம்பிகை குமரனைக் கண்டு கொஞ்ச ஆரம்பிக்கிறாள். ஈசன் கோபம் அடைந்து உமையை மீனவப் பெண்ணாக பிறக்கும்படி சபிக்கிறான். 

அம்பிகையும் மீனவப் பெண்ணாக பிறக்கிறாள். ஈசன் தானே மீனவனாக வந்து அவளை தடுத்து ஆட்கொள்கி்றான். இந்த சரிதத்தை வேதநாயனார் சித்தத்தில் கொண்டே ஈசனை மீனவனாக போற்றி உள்ளான் போலும். அது மட்டும் இல்லை ஈசன் மீனவத் தொழில்தானே செய்கிறான். 

ஆம். சம்சார சாகரத்தில், நாயன்மார்கள் போன்ற நல்ல மீன்களை பிடித்து கரை சேர்கிறான். மற்ற மீன்களை விட்டு விடுகி்றான். 


இப்போது இறைவனை நாய்களோடு திரியும் சண்டாளன் என்று சொல்கிறது வேதம். (4.2.8 & 9). ஒருவிதத்தில் பார்த்தால் இதுவும் உண்மைதான். ஆதி சங்கராச்சாரியார் ஒரு முறை காசிக்கு விஸ்வநாதரின் தரிசனத்திற்கு செல்கின்றார். அப்போது நான்கு வேட்டை நாய்கள் சூழ, கையில் கள் பானையோடும் வாயில்  கள் வாடையோடும் ஒரு சண்டாளன் அவர் வழியில்  குறுக்கிட்டான். ஆதி சங்கரர் அவனை விலகிப் போகச் சொன்னார். 

அந்த சண்டாளன் மெதுவாக, ‘‘ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தை விலகிப் போகச் சொல்கிறது’’ என்றான். 

ஆதிசங்கரருக்கு பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. காரணம் அவரின் அத்வைத தத்துவத்தை அந்தச் சண்டாளன் சுருக்கமாகச் சொல்லி விட்டான். சடால் என்று சண்டாளன் காலில் விழுந்தார், சங்கரர். ‘‘நீரே எம் குரு’’ என்று உருகினார். 

இப்போது சண்டாளன் இருந்த இடத்தில் பரமேஸ்வரன் இருந்தான். நாய்கள் வேதங்களாக காட்சி தந்தன. தன் அடியவருக்கு புத்தி புகட்ட சண்டாளனாய் வந்த மேன்மையை புகழ்ந்ததையே வேதநாயனார் இவ்வாறு கூறி இருக்க வேண்டும்.


அடுத்ததாக, வேதம் ஒரு வருங்கால கணிப்பை சூசகமாக சொல்கிறது. பரமனை கபர்த்தி என்றும் வியுப்தகேசன் என்றும் வர்ணிக்கிறது. 

அதாவது ஈசன் தலையில் ஜடாமுடி தாங்குகி்றானாம் அதேபோல் மொட்டைத் தலையனாகவும் உள்ளானாம். அவன் ஜடா முடியை போற்றாத அடியார்களே இல்லை. இப்படி சிகை அழகனாக இருக்கும் பகவான் அதை முழுவதும் மழித்து ஆதிசங்கரராக அவதாரம் எடுக்கப் போகின்றான் என்ற ஒரு கணிப்பை, மேலே சொன்ன வாக்கியம் மூலம், வேதமே முன் வைக்கிறது.

அம்மா ருத்திரத்தில் வரும் நாமங்களை எவ்வளவு அழகாக எனக்கும் புரியும் படி சொல்கிறாய் --- எனக்கே  புரிந்துவிட்டால் இந்த உலகத்தில் இருக்கும் கடைசி அடி  முட்டாளுக்கு கூட சுலபமாக புரிந்துவிடும் ... 

ரம்யா -  ரம்யமாக இருக்கிறது என்றால் எல்லோரையும் மகிழ்விப்பது.  அம்பாளின் திருநாமத்தை சொல்லும்போது மனம் இனிக்கிறதல்லவா?  அழகின் சிகரம் மகிழ்விக்காதா?

ராஜீவலோசநா --  தாமரைக்கண்ணாள் என்கிறார் ஹயக்ரீவர்.  மான் விழி, கயல்விழி, என்றும் சொல்லலாம்.  ராஜீவ என்றால் மான், மீன் என்றும் அர்த்தம்.   மற்றெதுவுடனும் ஒப்பிட முடியாத அழகிய விழிகள். அவள்  கடைக்கண் பார்வையே  உலகை ரக்ஷிக்கிறது.

ரஞ்ஜநீ  -   தன்னுடைய சிவந்த நிறத்தால் சிவனையும் சிவப்பாக்குபவள்.  சிவன்  பளிங்கு, நிறமற்றவர். எதையும் பிரதிபலிப்பவர்.  எனவே  அம்பாளின் ஒளி அவரை சிவந்து காட்டுகிறது.  மறுபிறப்பெனும் துன்பமில்லாமல் நம்மை காப்பவள்.

ரஸ்யா  -- எல்லாமே  கரைத்து குடித்தவர்  என்று ஒருவரை சொல்கிறோமே  என்ன அர்த்தம். சகலமும்              அறிந்தவர் என்று தானே.  ஸ்ரீ லலிதை எல்லாவற்றின்  ஸாரமானவள். ஆத்மாவின் ரஸம் அவள்.  தைத்ரிய உபநிஷத் ஒரு வார்த்தை சொல்லும்:  (II.vii) '' ரஸோ வை ஸா ''  --    ' இனிப்பானது, சுவையானது என்றால் அது தான்'' . ஆத்மாவை தான் சொல்கிறது. 


ரவி சொல்ல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன -- உங்களை சுகமாக வைத்துக்கொள்ள நிறைய ஸ்லோகங்கள் இருக்கின்றன ஆனால் மனிதன் செயற்கையில் உருவான கலப்படமான மருந்தைகளைத்தான் நாடுகிறான் அதனால் அவன் வாழ்வின் நாட்கள் எண்ணப்படுகிறது அதிகம் எழுதப்படுவதில்லை ...

சொல்லிவிட்டு கண் சிமிட்டிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் காற்றில் கரைந்துபோனாள் காஞ்சீ நகர் வாழும் ஒட்டியானம் அணியும்  சுந்தரி ...













Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 54/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
அயோத்தியா ஸ்பந்தம் from sloka 53 முதல் 👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐
ravi said…
ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ மயி ஆயதேயம் ஜரா
ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத:
ஏவம் வாதினி தத்ர நாம ஜனகே ஸ்ரீஜானகீ நாத தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?

राम त्वय्यतिवत्सलाः प्रकृतयो मय्यायतेयं जरा
साकेताधिपतिं समस्तजगतां कुर्वे पतिं त्वामतः।
एवं वादिनि तत्र नाम जनके श्रीजानकीनाथ ते
यन्मन्दस्मितं आनने समभवत् तद्दर्शयसि अद्य किम्?॥

ஸீதாராம்! ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை, தன் மகனிடம் கூறிய வார்த்தைகள் , பூதேவி இணைதல், சக்ரவர்த்தி திருமகனாக ஆக்குதல், (ஏளனமோ!) ( பேருண்மையோ!?)
ravi said…
ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டும் என்று தசரதர் விரும்புகிறார் -- அவர் உடனே ராமரை அழைத்து தன் விருப்பத்தை ராமனிடம் சொல்கிறார் - அவர் சொன்னதைக்கேட்டு ராமன் புன்னகைக்கிறான்
ravi said…
ராம த்வயி அதி வத்ஸலா: ப்ரக்ருதயோ

ராமா - இந்த அயோத்தி மக்கள் அனைவருமே உன்னிடத்தில் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார்கள் அவர்களின் அன்புக்கு ஈடாக எதையுமே சொல்ல முடியாது அவர்கள் உன்னை தங்கள் வீட்டில் பிறந்த பிள்ளையாக எண்ணி மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள் -- இதையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொது உனக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது

மயி ஆயதேயம் ஜரா

எனக்கும் வயதாகிக்கொண்டு போகிறது - 60,000 ஆண்டுகள் ஆண்டுவிட்டேன்
ravi said…
ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் த்வாமத:

ராமா , நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? அயோத்திக்கு தெரிந்த உன்னை அகில உலகமும் தெரிந்துகொள்ள சக்ரவர்த்தியாக்கப்போகிறேன் - அனைத்துலங்களுக்கும் தலைவன் அல்லவா நீ - அதனால் உனக்கு நான் இருக்கும் போதே பட்டாபிஷேகம் செய்ய ஆசைப்படுகிறேன்
ravi said…
இப்படி தசரதன் சொல்ல அதைக்கேட்ட ராமன் புன்னகைக்கிறான் - இந்த புன்னகையில் மூன்று விஷயங்களை ராமன் தெரிவிக்கிறான்
ravi said…
1. ஸாகேத அதிபதிம் ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் -

ஸாகேத அதிபதிம் என்றால் அயோத்திக்கு தலைவன் --- ஸமஸ்த ஜகதாம் குர்வே பதிம் என்றால் எல்லா உலகங்களுக்கும் தலைவனாக ஆக்குவேன் -

இப்படி சொல்கிறான் தசரதன் ---- இது பதவி உயர்வா இல்லை குறைவா என்று எண்ணி ராமன் புன்னகைக்கிறான்

இதை நக்கல் கலந்த புன்னகையாகவும் எடுத்துக்கொள்ளலாம் ---

அண்ட சராசரங்களும் அதிபதியாக இருக்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்துள்ளான் அவனை தசரதன் ஒரு குறுகிய அயோத்திக்கு மட்டும் அரசனாக்குவேன் என்று சொல்ல வருகிறானோ ? இது ராமனுக்கு பதவி குறைவு அல்லவா ?
ravi said…
2. இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் --- தசரதனிடம் கைகேயி அயோத்திக்கு அரசனாக ராமன் ஆக வேண்டாம் --

காட்டுக்கு போகட்டும் என்று கேட்கப்போகிறாள் -- அதன் விளைவு கைகேயிக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பு இல்லை --

ராமன் ராவணனை அழித்து மிகப்பெரிய சக்ரவர்த்தியாக ஆகப்போகிறான் -- இதை உணராமல் தசரதன் வெறும் அயோத்திக்கு மட்டும் அரசனாக ஆக்கப்போகிறேன் என்கிறானே --

தசரதனின் சூட்சமாக சொன்ன வார்த்தைகளை எண்ணியும் கைகேயின் அறியாமையை எண்ணியும் ராமன் புன்னகைப்பதாக வைத்துக்கொள்ளலாம்
ravi said…
3. ஸ்ரீமன் நாராயணனுக்கு ஸ்ரீதேவி பூதேவி என்று இரண்டு தாரங்கள் உண்டு என்று அறிவோம் -- தசரதன் ராமனுக்கு செத்தான் மூலம் ஏற்கனவே ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொடுத்துவிட்டான் -

என்னதான் ஏகபத்தினி விரதனாக ராமன் இருந்தாலும் மனதில் ஒரு சின்ன உளைச்சல் ராமனின் மனதில் இருந்துகொண்டுதான் இருந்தது --

என்னையே நம்பி வந்தவர்கள் இந்த இருவரும்-ஒருத்தியை அருகில் வைத்துக்கொண்டு இன்னொருத்தியை கண்டுக்காமல் விட்டுவிட்டேன் --

இந்த பாவம் கங்கையில் மூழ்கினாலும் போகாதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தான் -

சீதையிடம் சொல்லவும் பயம் ... யாரிடம் சொல்வது ?

தசரதன் இந்த சங்கடத்தை எப்படியோ புரிந்துகொண்டு பூமியின் முழு பரப்பையும் ராமன் ஆளவேண்டும் என்று நினைக்கிறான் -

இதன் மூலம் ராமனுக்கு பூமா தேவியும் கிடைத்துவிடுவாள் ---

ராமனின் மனஉளைச்சல் நின்று போகும் ---- தந்தை பேசின வார்த்தைகளுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ என்று எண்ணி புன்னகைத்தானாம் ராமன்
ravi said…
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் தத் தர்சயஸி அத்ய கிம்?

உன் புன்னகை அன்று சிந்திய ஒன்று தசரதனின் பட்டாபிஷேகம் பேச்சைக்கேட்டு இன்றும் வடுவூரிலும் காண்பித்துக்கொண்டு இருக்கிறாய் மன்னாதி மன்னனே உனக்கு எங்கள் வந்தனம்
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 150*
🌸🌸🌸🌸

மார்த்தாண்ட பைரவாராத்யா, மந்த்ரிணீந்யஸ்தராஜ்யதூ; |
த்ரிபுரேஶீ, ஜயத்ஸேனா, நிஸ்த்ரைகுண்யா, பராபரா ‖ 150 ‖
🌸🌸🌸🌸

मार्ताण्ड भैरवाराध्या, मन्त्रिणी न्यस्तराज्यधूः |
त्रिपुरेशी, जयत्सेना, निस्त्रैगुण्या, परापरा ‖ 150 ‖
🌸🌸🌸🌸

maartaanda bhairavaaraadhyaa, mantrini nyastaraajyadhuh |
tripuresi, jayatsenaa, nistraigunyaa, paraaparaa ‖ 150 ‖
🌸🌸🌸🌸
ravi said…

*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் மார்த்தாண்ட பைரவாராத்யாயை நம;
ஓம் மந்த்ரிணீந்யஸ்தராஜ்யதுரே நம;
ஓம் த்ரிபுரேஶ்யை நம;
ஓம் ஜயத்ஸேனாயை நம;
ஓம் நிஸ்த்ரைகுண்யாயை நம;
ஓம் பராபராயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸

*785.மார்த்தாண்ட பைரவாராத்யா* மார்த்தாண்ட பைரவரால் ஆராதிக்கப்பட்டவள் அம்பாள்.
🌸🌸🌸🌸

*786.மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதூஃ* - மந்த்ரிணீ யிடத்தில் வைக்கப்பட்ட சாம்ராஜ்யத்தில் இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
ravi said…

*787.த்ரிபுரேஶீ* - ஶ்ரீசக்ரத்தின் ஓன்பது பாகங்களில் ஸா்வாசாபரிபுரகமென்ற இடத்தில் அதிஷ்டானமாயிருக்கும் த்ரிபுரேசீ என்ற தேவியின் விசேஷ ரூபமாயிருப்பவள் திரிபுரங்களை எரித்த பரமசிவன்.அவர் மனைவி திரிபுரேஸி தேவி.
🌸🌸🌸🌸

*788.ஜயத்ஸேனா* - ஜயத்துடனிருக்கும் ஸேனையோடு(படை) இருப்பவள்.
🌸🌸🌸🌸

*789.நிஸ்த்ரைகுண்யா* - குணத்ரயங்கள் நீங்கியிருக்கும் ரூபத்தையுடையவள் அம்பாள்
🌸🌸🌸🌸

*790.பராபரா* - பரா, அபரா, பராபரா என்ற முன்று பிரம்ஹத்தின் ஸ்வருபமாயிருப்பவள்.
🌸🌸🌸🌸
ravi said…
பொழுது புலர்ந்தது ... புலன்கள் உயிர் பெற்றன

ஆதவன் புன்னகை ஆகாயம் அதில் மிதந்து வந்தது ...

வடுவூர் ராமன் முகம் போல் மலர்ந்து நின்றான் கதிரவன்

வண்ண வண்ண விண்மீன்கள் வானம் எனும் கடலில் வட்டமிட்டு குதித்தன ..

வசந்தம் வந்து வாசல் கதவை எட்டி நின்றே தட்டி பார்த்தது ...

பட்டாம்பூச்சிகள் கண்களில் ரீங்காரம் புரிவதேன் ... சாயி?

புரியாமல் இருக்கும் இந்த புதிர் ஏன் இன்று சாயி ?

என்னைப்போல் ஒரு ஏழைக்கு அன்னம் அளித்தாயே நேற்று

உன் மனம் உயரவே என் ஆசி தருகிறேன் ...

இயற்கையின் சம்மதம் தான் நீ காணும் காட்சிகள் என்றார் என் சாயி 🙏🙏🙏
ravi said…
வீணையாய் நான் இருக்க மீட்டும் விரலாய் நீ வந்தாய்

நாதமாய் நான் இருக்க அதில் மதுரமாய் சுவை சேர்த்தாய்

வேதமாய் நான் மாற அதில் வார்த்தையாய் நீ அமர்ந்தாய்

உடலாய் நான் திரிந்திருக்க உயிராய் உணர்ச்சி கொடுத்தாய் ...

உன் போல் தெய்வம் உண்டோ என்றே நான் திகைத்திருக்க தெய்வம் ஒன்றே என்று உணர வைத்தாய் .. 🙏🙏🙏
ravi said…
காவியம் என்றே நினைத்தேன் உயிர் ஓவியமாய் காட்சி தந்தாய் ..

ஓவியம் என்றே வரைந்தேன் ...

அதில் உணர்ச்சிகளை ஒன்று கூட்டி உருவம் தந்தாய் .

உணர்ச்சிகள் கொண்ட உத்தமன் என்று நினைத்தேன் ...

உணர்ச்சிகளை வென்ற பரமாத்வாக கண் முன்னே வந்து நின்றாய் ...

God is nowhere என்றே உளறினேன் .. God is now here என்றே புரிய வைத்தாய் ... 🙏🙏🙏
ravi said…
அரங்கனின் சயணமோ ரமணா

ஆனந்த கூத்தனின் மௌனமோ ரமணா

உண்டவன் உறங்க ஒழித்தவன் பித்தாக உன் பாதம் துணை என்றே வந்தோம் ...

கண்டவன் மேனி சிலிர்க்க கழித்தவன் கவலை நீங்க காட்சி தருவாயோ ரமணா 🥇🥇🥇
ravi said…
*271. Labdhalīlā लब्धलीला*💐💐💐💐 She has five primary acts ... Creation , Sustenance , destruction , concealment and re creation

*272. Labdhayauvanaśālinī लब्धयौवनशालिनी*👌👌👌 She is perceptually and abundantly youthful 👍👍👍

*273. Labdhādhiśayasarvāṅgasaundaryā लब्धाधिशयसर्वाङ्गसौन्दर्या*💐💐💐 Every part of Her body is flawless

*274. Labdhavibhramā लब्धविभ्रमा*👌👌👌 She takes care of all the activities of the Universe like a Play 🥇🥇🥇

*275. Labdharāgā लब्धरागा*

She has these feelings towards two, one is Her Creator Śiva and another is the beings created by Her.👣👣👣🙏🙏🙏👏👏👏
ravi said…
*Lalita Trishati 271 - 280*👌👌👌
ravi said…
*276. Labdhapatiḥ लब्धपतिः*👌👌👌👌👌
ravi said…
She attained Śiva by Her perseverance.

Her marriage is described in Brahmāṇda Purāṇa {Lalitā Māhātmya (chapter 15) which forms Chapter IV of Brahmāṇda Purāṇa}.

She addresses other gods and goddesses: “I am always independent. My conduct of life and my sports and pastimes are in accordance with my own whims and wishes.

My husband shall be the one, whose conduct befits me.” Kāmeśvara arrived on the scene assuming a form that fascinated and thrilled the universe.

He was taken to Her by Brahmā and Viṣṇu. Kāmeśvara was exhilarated by Her beauty and She was also overpowered by His appearance.

She decided that He is the right person for Her and their marriage was held with joy and they together ascended the Throne.
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 36

*Started on 26th sep 2020*💐💐💐💐

*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரத்தில் அமைந்த

*ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ* –

முதல் வரி போல்,
ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந்ஸ்ரீபதிபூஜித: - ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் முதல் வரியில், லக்ஷ்மி தேவிக்குரிய ஸ்ரீம் எனும் எழுத்தில் பொருந்தி அமைவது, இவற்றைப் பாராயணம் செய்பவர்களுக்கு கடன் தொல்லைகள் யாவும் நீங்கப் பெற்று, பெரும் செல்வம் அடையும் என்கின்றது
இரண்டினுடைய விளக்கவுரைகளும்.

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும், எந்த ஒரு வார்த்தையும் மறு முறை வருவதில்லை.

அதே போல அர்த்தமற்ற அசைச் சொற்களும் இடம்பெறவில்லை.

*முழுமையான இலக்கணப்படி அமைந்தது ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்*

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டது.

அதே போல நடராஜ ஸஹஸ்ரநாமமும் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களையேக் கொண்டுள்ளது –

சிவ சக்தி – இருவரும் வேறல்ல என்பதை நிச்சயிக்கின்றது.💐💐💐👌👌👌
ravi said…
#கண்ணன்...

எட்டாத உயரத்தில் உறியில் இருக்கும் வெண்ணையை அரவைக் கல்லின் மீதேறி எக்கி நின்று எடுத்துக் கொண்டிருக்க...

எடுக்கும் போது பானைகள் உருண்டு சத்தம் செய்து விடாமல் இருக்க தன்னுடைய மறு கையை பானைகளுக்கு அடியில் தாங்கிப் பிடிக்க...

ஏற்கனவே சில பானைகளில் இருந்த வெண்ணையை உண்டு ருசி கண்ட அவனின் நண்பர்கள் "தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் கொடு கண்ணா" என்று ஏங்கியபடி காத்துக்கிடக்க...

அதிலும் வலது ஓரத்தில் மூன்றாவதாக இருக்கும் ஒருவன் முட்டிக் கால் போட்டு கொஞ்சிக் கொண்டிருக்க...

பானையில் இருந்து ஏதேனும் கீழே சிந்தாதா என ஒரு எலி? காத்துக் கிடப்பதைப் போன்று கல்லில் வடித்து அசத்தியிருக்கிறார்கள்...

அதுவும் கோபுரத்தின் மேலே!
யார் வந்து பார்க்கப் போகிறார்கள் என்ற அலட்சியம் துளியும் இல்லை!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.

🙏 கு பண்பரசு
ravi said…
#கயந்தலை!

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம்! வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது.

குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...

🙏 கு பண்பரசு
ravi said…
தேவியானவள் அசுரர்கள் எய்த அம்புகளையும், சூலங்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் தன் வில்லினின்று எய்யப்பட்ட அம்புகளால் தடுத்து நிறுத்தக் காலியானவள் தன் கட்வாங்கம் என்னும் ஆயுதத்தால் அசுரக் கூட்டத்தை நசுக்கினாள்.

.
ravi said…
பிரம்மாணியோ தன் கமண்டலுவின் நீராலேயே சத்துருக்களை பலமற்றவர்களாக்கினாள். மாஹேஸ்வரி, திரிசூலத்தாலும், வைஷ்ணவி, தன் சக்கரத்தாலும், கெளமாரி ஈட்டியாலும், ஐந்திரி வஜ்ராயுதத்தாலும் அசுரர்படையைத் தாக்கினர். வாராஹி தன் கூரிய மூக்காலும், நாரசிம்ஹி தன் கூரிய நகங்களாலும் அசுரப் படைகளை ஒழித்தார்கள்.

ravi said…
அப்போது ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப்போல் ஓர் அசுரன் உதிக்க, சப்த மாதர்களும் சூழ்ந்து கொண்டு அவனைத் தங்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். சண்டிகையானவள் சாமுண்டியான காலியைப் பார்த்து ரக்தபீஜனின் ரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ளச் சொன்னாள். காலியும் அவ்வாறே அவனின் கடைசிச் சொட்டு ரத்தம் கீழே விழும்வரைக்கும் அவனைக் களைப்படையச் செய்து ரக்தபீஜனின் ரத்தத்தைத் தன் வாயில் ஏந்தினாள். ரக்தபீஜன் ரத்தம் இல்லாமல் கீழே விழ, சும்பனும், நிசும்பனும் கோபம் கொண்டு அம்பிகையைத் தாக்கினார்கள்
ravi said…
நிசும்பன் தன் கூரிய வாளால் தேவியின் வாகனமான சிங்கத்தின் தலையில் அடிக்க அந்த வாள் தேவியின் கூரிய பாணத்தால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறே நிசும்பன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பயனற்றுப் போக நிசும்பன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான்.
ravi said…
சங்கநாதமும், மணியை ஒலித்தும் ஓசை எழுப்பிய தேவி, நிசும்பனை மூர்ச்சை அடைய வைத்ததைக் கண்டு . கோபம் கொண்ட சும்பன் தேவியோடு போரிட, விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு எட்டுக் கைகளோடு பாய்ந்தான்.

சும்பனின் ஆயுதங்களும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பலனற்றுப் போக சும்பனையும் தன் சூலத்தால் அடித்து மூர்ச்சை அடைய வைத்தாள் தேவி. இதற்குள் எழுந்த நிசும்பன் மீண்டும் போருக்கு வர தன் சூலத்தால் நிசும்பனின் இதயத்தைப் பிளந்து அவனைக் கொன்றாள் தேவி. சகோதரன் கொல்லப்பட்டது கண்ட சும்பன் தேவியைப் பார்த்துக் கேலியாக மற்றவர்கள் பலத்தினால் ஜெயித்துவிட்டுக் கர்வம் கொள்ளாதே என்றான்.

ravi said…
அப்போது தேவி அவனைப் பார்த்து, “மூடா, இங்கு இருப்பவள் நான் ஒருத்தியே. இரண்டாவதாக எவரும் இல்லையடா! இவர்களெல்லாம் என்னிலிருந்து தோன்றிய என் அம்சங்களே அன்றி என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல! இதோ பார்!” என்றாள். சப்த கன்னியரும், காளியும் மறைந்து சும்பன் கண்ணெதிரே தேவி ஒருத்தியின் உடலில் புகுவதைக் கண்டான். “என்னால் அளிக்கப்பட்ட என் பல்வேறு சக்திகளும் இப்போது என்னிலேயே கலந்துவிட்டன. இப்போது போரில் உறுதியாக இருந்து போர் செய்வாய்!” என்றாள் தேவி.
ravi said…
அசுர ராஜன் சும்பன் பல ஆயுதங்களால் தேவியைத் தாக்கினான். மிக உக்கிரமான அஸ்திரங்களை எய்தான். அனைத்தும் தேவி தன் ஹூங்காரம், உச்சாரணம் போன்றவற்றாலேயே அழித்தாள். அவனுடைய குதிரையையும் கொன்று ரத சாரதியுமின்றி வில்லையும் ஒடித்தாள் தேவி.

ravi said…
காளிதேவியும் ரக்தபீஜர்களை
வாரி வாரி விழுங்கிவிட்டாள்
ரக்தபீஜனும் பட்டவுடன் பொல்லா
நிசும்பனும் பார்த்துக் கோபத்துடன்
ஸம்ஹரிப்பேன் இவளையென்று சொல்லி
சபதம் செய்து தமையன் முன்னே
தேவியுடன் எதிர்த்து நிசும்பனும்
தோற்காமலே யுத்தம் செய்து நின்றான்
ravi said…
ஆயிரமாயிரம் அம்பு தொடுத்தவன்
அஞ்சாமலே யுத்தம் பண்ணலுற்றான்
நேரே யுத்தம் பண்ணி லீலாவிநோதமாய்
நிசும்பனக் கொன்றாள் ஸ்ரீதேவியும்
தம்பியும் பட்டதைக் கேட்டுச் சும்பாஸுரன்
சங்கையில்லாத கோபத்துடன்
அம்பிகையெதிரில் வந்து சும்பாஸுரன்
ஆங்காரத்துடன் ஏது சொல்வான்
யுத்தம் பண்ணத் தெரிந்தவளே எங்கள்
இத்தனை பேரையும் ஏய்த்தாயேடி நீயும்
யாருமில்லாதே யிருந்தாயேடி நீயும்
ஏழுபேருனிப்போ நின்றாயடி.
சதிகாரியடி நீயுமிப்போ என்னை
சற்பனை செய்யவே வந்தாயடி
வஞ்சித்தாயடி நீயுமென்னை யிப்போ
வாரத்தைகள் இரண்டு சொன்னாயடி.
ravi said…
ஒருத்தியாக இருந்து கொண்டன்றோ நீ
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாய்
அத்தனைபேர்களைச் சேர்த்துக்கொண்டு இப்போ
அதட்டுகிறாயடி நீயுமென்னை
சும்பன் வார்த்தையைக் கேட்டு ஸகிகளே
இங்கே வாருங்கள் என்றழைத்து
வாரியணைத்தாள் ஸகிகள் எல்லோரையும்
மாரோடு மறைத்து ஐக்கியமானாள்
இரண்டாம்பேரிங்கில்லை காளியுடன் நீ
எதிர்த்து யுத்தமும் பண்ணுயென்ரால்
அம்மன் செயலையும் வார்த்தையையும் கேட்டு
அ ம்புபட்டாப்போலுந்தானுருகி,
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தோற்காமலே யுத்தம் பண்ணலுற்றார்
அடித்த பந்து கிளம்பினாற்போலவன்


ravi said…
ஆகாயத்தினிலே கிளம்பி,
ஒருவருக்கொருவர் சளையாமல் அங்கு
ஓடோடி யுத்தமும் பண்ணினார்கள்
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தொந்தயுத்தமும் பண்ணினார்கள்
தேவர்களெல்லாம் பயத்துடனே மஹா
தேவியை ஸ்துதித்துக்கொண்டிருந்தார்கள்
எத்தனை பொழுதாக யுத்தம் பண்ணுவோம்
என்று காளியும் கோபத்துடன்
சும்பாஸுரனை வதைத்தாள் காளியும்
துர்க்காதேவி என்றவம்மனை அழைத்தாள்
துர்க்காதேவியம்மன் அஸுரனை வதைக்கத்
தேவர்கள் புஷ்பமழை சொரிந்தார்.

அடுத்து ஸ்ரீலலிதையின் உதயம்.
ravi said…
நவராத்திரியின் ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். இன்றைய நிவேதனம் பால் சாதமும், கடலைச்சுண்டலும் செய்யலாம்.

“நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
ravi said…
என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்;

இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது.

.
ravi said…
மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார். இனி ஸ்ரீலலிதையின் அவதார மஹத்துவத்தைக் காண்போம்
ravi said…
மோஹினி அவதாரத்தையும் அம்பிகையின் அவதாரமென்றே கூறும் லலிதாம்பாள் சோபனம், அதை இவ்வண்ணம் கூறுகிறது.


“முன்னே பிரம்மாவை ரக்ஷிக்க வந்தாளே
முதலாவது அந்த அவதாரம்
பின்னே இப்பொழுது சொன்னோம் மோஹினி ரூபம்
பின்னுங்கேள் இது விரண்டு- சோபனம் சோபனம்.
என்று கூறுகிறது. பிரும்மாவை ரக்ஷிக்க வந்த மதுகைடப வதத்தையும், அதைத் தொடர்ந்த மற்ற அம்பிகையின் திருவிளையாடல்களையும் கண்டோம். இப்போது ஸ்ரீலலிதையின் மஹிமை.

ravi said…
லலிதாதேவியுடைய மஹிமை தன்னிலே
லக்ஷங்கோடியுள்ளதில் லேசஞ் சொல்வோம்,
கேளும் பக்தியுடன் கேட்டவர்க்கு மங்களம்
கிட்டும் நிச்சயம் ஸந்தேஹமில்லை
பூர்வத்தில் தக்ஷனுடைய கன்னிகையாக்கும்
பூர்வாவதாரம் பரமேச்வரிக்கு
சாம்பவர் சொல் தள்ளி தகப்பனார் யக்ஞத்துக்குத்
தாக்ஷாயணி போனாள்- சோபனம் சோபனம்
ravi said…
இதைத் தொடர்ந்து தக்ஷன் தேவியையும், ஈசனையும் இகழ்ந்ததையும் அது பொறுக்காத தேவி அக்கினியில் வீழ்ந்ததையும் அறிவோம். தேவி பின்னர் பர்வதராஜனின் மகளான பார்வதியாய்த் தவம் செய்யுங்காலை குமரக்கடவுள் பிறக்கவேண்டி மன்மதனை தேவாதி தேவர்கள் ஸ்வாமிக்கு முன் ஏவினதையும் ஈசனின் நெற்றிக்கண்ணால் மன்மதன் சாம்பலானதும் அறிவோம்.

எரிந்த மன்மதனின் சாம்பலைப் பிசைந்து விஸ்வகர்மா மனித உருவம் செய்ய, ஈசன் அதை ஒரு கண நேரம் நோக்க அந்தச் சாம்பலில் செய்யப்பட்ட மனித உருவம் ஓர் மனிதனாக மாற விஸ்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய் வளர்த்து அனைத்தும் கற்பிக்கிறான்.
ravi said…
மன்மதன் சாம்பலைப் பிசைந்து விச்வகர்மா
மனித உருவஞ் செய்தான் – சோபனம் சோபனம்
சாம்பமூர்த்தியப்போ அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் பொம்மையைப் பார்த்தார்; பார்த்தவுடன்
சாம்பசிவனுடைய அம்ருத கடாக்ஷத்தால்
சாம்பல் புருஷன் ஜீவனோடெழுந்தான்
விச்வகர்மா அந்தக் குழந்தையைக் கொண்டு போய்
விருப்பத்துடனே வளர்த்த பின்பு
வேண்டிய வரங்களை அடையும் பொருட்டவன்
ஈசனைப் பூஜித்தான் –சோபனம் சோபனம்

ravi said…
தவம் செய்து ஈசனிடம் வரங்கள் பெற்று ஆட்சி செய்யும் அந்தக் குழந்தை ஈசனின் நெற்றிக்கண்ணின் அக்னியில் உண்டானதால் பண்டன் என்ற பெயரைப் பெறுகிறது. வரங்கள் வாங்கிய கர்வத்தில் ஆட்சி செய்த அவனை பண்டாசுரன் என அனைவரும் கூற, தேவர்களுக்குப் பயந்து பாதாளம் சென்று ஒளிந்திருந்த அசுரக்குலம் மீண்டும் வெளியே வருகிறது. அசுரர்களின் குருவான சுக்கிராசாரியார் அவனுக்குப் பல யோசனைகள் கூறுகிறார். ஆனாலும் அவன் அதைக் கேட்கவில்லை.

ravi said…
பண்டாஸுரனுக்குப் பலநாளைக்குப் பின்பு
கெட்ட புத்தி வந்து தேவர்களைப் ப்
பிடிக்கத் துவங்கினான்; வாஸ்வன் முதலாகப்
பிடித்துக்கொண்டு வந்து தன் கோட்டையில்
காவல் காக்கச் சொல்லிச் சேவகராகவே
கட்டளையிட்டான் தேவர்களை;
துஷ்டன் கையிலகப்பட்டு விழிக்கிறார்கள்
வில்வலாந்தகனே கேள் –சோபனம் சோபனம்
ravi said…
தங்கட்கு வினையைத் தேவாள் வருத்திக்கொண்டார்
தாருகாஸுரனை வதைக்கவென்றே
சங்கரரிடத்தில் மன்மதனை ஏவப் போய்த்
தானே வலையில் விழும்புலியைப் போல
ஸ்வாமி தபஸிற்குத் துரோகம் நினைத்ததால்
சத்துருவாகினான் பண்டாஸுரன்
வம்பன் பண்டாஸுரனை வதைப்பதற்கு
மனதில் நிச்சயித்தார்கள் –சோபனம் சோபனம்

ravi said…
மஹாவிஷ்ணு தன் மாயையின் மூலம் அவனை மயக்கிச் சிவபூஜையிலிருந்து அவனை விலகி இருக்கச் செய்ய தேவர்கள் அனைவரும் தேவியைத் துதித்து ஜபம், தவம், ஹோமம் போன்றவற்றைச் செய்கின்றனர்.

ravi said…
தேவமுனி சொல்ல இந்திரனுடன் கூடச்
செய்கிறார் தேவர்கள் உக்கிரதபஸை
ஈச்வரியை நோக்கி வருஷம் பதினாயிரம்
இப்படித் தேவர்கள் தபஞ் செய்தார்கள்
ஆஹார நித்திரை விட்டெல்லாத் தேவர்களும்
அதிகடினமான தபஸிருந்தார்
பகவதி ஈச்வரியாள் இதுவரைக்கும்
பிரத்யக்ஷமாகவில்லை –சோபனம் சோபனம்

ravi said…
தங்கள் உடலை வருத்தி, உறுப்புக்களையும் ஆஹுதியில் இட்டு யாகம் செய்ய ஆரம்பித்தனர் தேவர்கள். அப்போது யாக குண்டத்தில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. கோடி கோடி சூரியப் பிரகாசங்களை ஒத்திருந்த அந்த வெளிச்சத்தில் ஒரு அழகான ஸ்ரீ சக்ரரதம். அந்தச் சக்ர ரதத்தின் மேல் ஸ்ரீலலிதை சுப ஜனனம்.
ravi said…
கால் முதல் தோள்வரை ஹோமஞ்செய்து தேவாள்
கழுத்துடன் குதிக்க நிச்சயித்தார்கள்
மின்னல்மலை போல அக்னி குண்டத்தில்
மின்னிக்கொண்டொரு காந்தியுண்டாயிற்று
ஆச்சரியத்துடன் தேவாள் தேஜஸைக் கண்டார்
அதற்குள்ளே ஸ்ரீசக்ரரதத்தைக் கண்டார்.
அழகான ஸ்ரீசக்ரரத்தின் மேல் லலிதா
அம்மனவதரித்தாள் – சோபனம் சோபனம்
ravi said…
திருக்கோளூர்- (பெண் பிள்ளை ரகசியம்)


65- ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே
ravi said…
ஆளவந்தார், திருவனந்தபுரம் புறப்பட்டு செல்வதற்கு முன்னால்தம் மடத்தின் பொறுப்பைதெய்வவாரியாண்டான் என்ற சீடரிடம் விட்டுச் சென்றார்.இந்த சீடர் குருபக்தி அதிகம் கொண்டவர் ஆவார்

ஆளவந்தாரின் பிரிவு அவரை வாட்டியது.அதனால் உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற உடன் இருந்தவர்கள் , ஆசானின் பிரிவே இதற்குக் காரணம் என அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்
ravi said…
அவரை பல்லக்கில் ஏற்றினர்.ஆசானைக் காணப்போகிறோம் என்ற எண்ணமே..அவருக்கு உடல் தேறத் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டு ஆளவந்தார் திரும்பி வந்த போது பல்லக்கைக் கண்டார்.மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் அவர் வந்ததைக் கண்டு"வாரியாண்டாரே! பரதன், ராமபெருமான் கட்டளைக் கிணங்க நந்திக்கிராமத்தைவிட்டு அகலாமல் இருந்தார்.ஆனால் நீயோ என் கட்டளக்கு கீழ் படியாது வந்துவிட்டாய்" என்று கடிந்து கொண்டார்.
அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாத வாரியாண்டார் மயங்கி விழுந்தார்

ravi said…
தன் பிரிவுதான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என மற்றவர்கள் மூலம் அறிந்த, ஆளவந்தார் அவரை எழுப்பி..ஆறுதல் கூறினார்.

ஆளவந்தார், வாரியாண்டானை எம்பெருமானை தரிசித்துவிட்டு வரச் சொன்னார்.ஆனால் அவரோ "ஆரியப் பெருமானே எனக்கு அரங்கனும் நீங்களே..அனந்தபத்மனாபனும் நீங்களே! உங்களைப் பிரிய இயலாது" என்றார்.

பின் குருநாதருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

"ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே" என இதையே திருக்கோளூர்ப் பெண் கூறினாள்

(இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது)
ravi said…
66-.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
ravi said…
நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார்.ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை

நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப்படுத்தினார்.

அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சி க்குத் திரும்பச் செல்ல நினைத்தார்.கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார்

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

ravi said…
அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அதை ராமானுஜரிடம் சொன்னார்.கூரத்தாழ்வாரையோ அல்லது பன்னிரு ஆழ்வார்களையோக் குறித்து நூல் எழுதலாம்" என்றார் ராமானுஜர்

ஆனால், அமுதனாரோ. "ராமானுஜர் நூற்றந்தாதி;' என்ற நூலை எழுதினார்.ஒவ்வொரு பாடலும் ராமானுஜரின் பெயரை வைத்து நூறு பாடல்கள் கொண்ட அந்தாதி அது

அந்நூல் ராமானுஜர் முன் அரங்கேறியது.அறிஞர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது

இதையே திருக்கோளூர்ப் பெண்'அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே" (இல்லையே) என்கிறாள்
ravi said…
67-அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
ravi said…
சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் பல அறிஞர்கள் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள்

ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.

மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்

இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்

வயதானவர்,அறிவாளி,அனுபவம் நிறைந்தவர் அவர் ராவணனிடம் சொல்கிறார்

"ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப் போகாதே!

ravi said…
மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர்.அவர்கள் உனக்கு எதிரிகள்.மேலும், ராமன் ,ஒரு மனிதனாய்த் தெரியவில்லை.அவன் விஷ்ணுவின் அவதாரம்.நம் படை முழுதும் போரில் அழியும்.ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சமாதானமாய்ப் போய்விடு "

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை

அந்த மால்யவானைப் போல அனுகூலம் சொன்னேனோ (எம்பெருமான் பற்றி) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்
ravi said…
68 - கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே
ravi said…
கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும்.கள்வன்..எனில்..திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள்.எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார்.அவரது திவ்யதேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்

ravi said…
மகாபலி யாகசாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி..உலகை அளக்கிறார் எம்பெருமான்.அந்நேரம் அசுரர்களின் லோககுரு நாராயணனை கள்வன் என் கிறார்

நம்மாழ்வாரையும் லோககுரு எனலாம்.பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார்.திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என் கிறார் (வாமன அவதாரத்தை)

ravi said…
தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார்.அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான்.அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை..அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என் கிறார்


(தவிர்த்து திருவாய்மொழியில் ஒரு பாடல்-

கள்வா! எம்மையும் ஏழுலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.


பொழிப்புரை

வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும் நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்)

ravi said…
திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என் கிறார்

இப்படியெல்லாம் லோககுருக்கள் எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற்போல நான் அழைக்கவில்லையே..இவ்வூரில் இருக்க என்ன தகுதி என்றாள் திருக்கோளூர்ப் பெண்
ravi said…
69- கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே
ravi said…
மாறனேரி மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர்.பெரிய நம்பிக்கு நெருக்கமானவர்

இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்.ஒருநாள் அவர் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த பெரிய நம்பி அதைப் பற்றிக் கேட்டார்."மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன்' என சொன்னவர், அத்துடன் நிலலது கண்ணனும் மண்ணை உண்டதைச் சொன்னார்

ravi said…
ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார்.மாறனேறி நபிகள், அதனைத் தான் வாங்கிக் கொண்டு ஆளவந்தாரைக் குணமடையச் செய்தார்.தமது நோயை வாங்கிக் கொண்ட நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார்.இப்படி, அவர்கள் சாதி பேதமின்றிப் பழகினர்

ravi said…
மாறனேறி நம்பி மறைந்து விட வேதியரான பெரிய நம்பி, அவருக்கு இறுதிக் கடன் களைச் செய்தார்.அதை விரும்பாத மற்ற வேதியர்கள்பெரிய நம்பியை விலக்கி வைத்தனர்.இது கண்ட அவரது மகள் கோபமுற்று திருவரங்கப் பெருமானிடம் நியாயம் கேட்கச் சென்றாள்.அப்போது, தேரில் உலா வந்து கொண்டிருந்த திருவரங்கனை நோக்கி' "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இருதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள் அந்துழாய் (பெரிய நம்பியின் மகள்)

ravi said…
தேர் அப்படியே நின்றது.அப்போது ராமானுஜர் அங்கு வந்தார்.பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்டார்

பெரிய நம்பிகள்"பறவை யினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்ததையும்,விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன் செய்ததையும் கூறி மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா" என்றார்

ravi said…
ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
ravi said…

‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

ravi said…
அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார்

. இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே? என்றாள்
ravi said…
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே
ravi said…
திருக்கோட்டியூர் நம்பி. திருமலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரை காண ஸ்ரீரங்கம் வந்தார்.திருமலையாண்டான் ஆளவந்தாரின் சீடர்

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலையாண்டானையும் வணங்கினார்.நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன்.திருவாய்மொழியை ஆளவ்ந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர்.நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்
ravi said…
ராமானுஜரும் ஒப்புக் கொண்டார்.திருமலையாண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறினார்.இது ஆண்டானுக்கு எரிச்ச்ல் மூட்டியது

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

"அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
அறியாமைக் குறள் ஆய்,நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்
ravi said…
இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள்,பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல.தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்

ravi said…
இதனால் கடுப்பான ஆண்டான், பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டார்

இதையெல்லாம் அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ' எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார்.அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும் 'என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார்

திரும்ப பாடம் ஆரம்பமானது.ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது

ஆண்டான் யோசித்தார்,ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார்.பின் கேட்டார்"நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை.அவர் பேசிக் கேட்டதும் இல்லை.அப்படியிருக்க இவ்வளவு சரியான ப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"

அதற்கு ராமானுஜர் நான் ஒரு ஏகலைவன் என்றார்

அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே...என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்
Savitha said…
ராஜிவலோசநா
அற்புதம்
S G S Ramani said…
ஒவ்வொரு வரிக்கும் கருத்துரை/விளக்கவுரை அருமை...

ஆனந்தம்...

🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
அற்புதம்
அயோத்தி மக்களின் அன்பு
ராமனின் புண்ணகை
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻🌷🌷
Shivaji said…
Arumai 👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை