பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-3 - 217
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பாஸ்கர ராயர்-3
(217) 👍👍👍💥💥💥
ரவி ! இவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்வோம் ...
ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார்.
இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள்.
அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார்.
அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர்,
கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம்,
மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம்
தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது,
வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.
பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர் .
அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும்.
வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும்.
காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உபாசனை செய்து வந்திருக்கிறார்.
இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள்.
அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர்.
ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார்.
அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார்
அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி.
அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள்.
நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார்.
இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் உண்டு.
அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம்.
அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். அம்மா பிறகு .....
பிறகு நாளை சொல்கிறேன் ரவி ...
தாயே மிகவும் சுவரஸ்யமாகவும் பக்தியின் உச்சமாகவும் இவர் வாழ்க்கை அமைகிறது .. \
அவர் தோளில் தாங்கள் அமர்ந்தது அவர் எவ்வளவு பெரிய பாக்கியவான் என்று புரிகிறது ..
கோடான கோடி தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் கிடைக்காத பாக்கியம் ஒரு தாய் மகன் தோள்களில் அமரும் புண்ணியம் ...
யாருக்கு இப்படி ஒரு வரம் கிடைக்கும் தாயே ....
வியத்ப்ரஸூ वियत्प्रसू
பஞ்சபூதங்களை உருவாக்கியவள் அம்பாள். ப்ரம்மத்திலிருந்து உருவானது தானே ஆகாசம்.
ஆகாசத்திலிருந்து மற்ற பூதங்கள் தோன்றியவை. தைத்ரிய உபநிஷத் (II.1)
தஸ்மாத் வை ஏதஸ்மாத்ஆத்மனா ஆகாஸா ஸம்பூதா:
அதாவது ப்ரம்மத்திலிருந்து ஆகாசம் தோன்றியது.
ஆகாசத்தின் மூலம் அக்னி, அக்னி மூலம் ஜலம் , ஜலத்தினால் பூமி, பூமியிலிருந்து தாவரம், அதிலிருந்து உணவு, அதிலிருந்து மனிதன் முதலான ஜீவராசிகள் என்று படிப்படியாக விளக்குகிறது.
அம்மா எல்லாமாய் நின்றாய் .. எதிலும் நீயே .. உன் அருள் இன்றி பொருள் ஏதம்மா ?
அம்பாளின் முகம் வடுவூர் ராமன் போல் அதி சுந்தரமாக மந்தஸ்மிதத்தை என் மீது அள்ளித் தெளித்தது 🥇
Comments
உன் உறவின்றி ஆதவன் உதித்து என்ன பயன் ?
உன் புன்னகை இன்றி கமலம் மலர்ந்து என்ன பயன் ?
உன் குரல் கேட்காமல் குயில் குரல் கேட்பது என்ன பயன்?
பயன் கருதா பவன் நீ ...பவானி கொஞ்சும் சுவாமிநாதன் நீ🥇🥇🥇
ஆடம்பரங்கள் விரும்பினோர் பலர் ... எளிமையை தத்து எடுத்துக்கொண்டார்
மகான்கள் பலர் வண்டாக உனை சுற்றினர் ...
சுற்றிய வண்டுக்கு ஞானம் எனும் தேன் தந்தாய் ...
சும்மா இருந்தவர்க்கும் அம்மா வானாய் ...
அருணாசலா உன் கருணை பெறின் வாழ்வில் உண்டோ இனி ஒரு சொர்க்கம் ? 💐💐💐
இப்போ மஹிஷாசுரனைப் பத்திப் பார்ப்போமா?? மஹிஷாசுரன் வாங்கிய வரங்களைக் கொண்டு நல்லாட்சி நடத்தாமல் அனைவரையும் துன்புறுத்தியே வந்தான். அவனுடைய அசுர வலிமையால் இந்திரலோகத்தில் இருந்து இந்திரனை விரட்டிவிட்டு மஹிஷாசுரன் தானே இந்திரன் என அறிவித்துக்கொண்டான். மேலும் திக் தேவதைகளின் அதிகாரங்களையும், சூரிய, சந்திரர்களைக் கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தான். ஆகவே மூவுலகிலும் நியதிகளில் மாறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அவனுடைய கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகவே அனைவரும் ஈசனைச் சரண் அடைந்தனர்.
தேவி அனைத்தையும் பெற்றுக்கொள்கிறாள். இவ்வாறு உபசாரங்கள் செய்யப் பட்டதில் மனம் மகிழ்ந்து சிம்ம வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் “அட்டஹாசம்” என்னும் சிரிப்பைத் தர அண்டசராசரமும் நடுங்கியது. தேவர்கள் ஜயகோஷம் எழுப்பினர். மஹிஷனை வதைக்க தேவி கிளம்பினாள்.
தபஸுமிகப்பண்ணி வரமடைந்தான்
ஜகத்திலுள்ளோரை உபத்திரவிக்க அஸுரன்
தேவர்கள் ரிஷிகளெல்லோருங்கூடி,
கைலாசத்திற்கு ஓடி வந்தெல்லோரும்
அறிவித்தாள் மஹாதேவருக்கும்
சிவனுடைய ஸந்நிதியில் நின்று
தேவி மஹிமை சொல்லி ஸ்துதித்தாள்.
தேவாளுடைய முகத்திலிருந்தம்மன்
தேஜோரூபமாய் ஒன்று சேர்த்து
அத்தனை பேர்களின் தேஜசைக் கிரஹித்து
அம்மன் பிரத்தியக்ஷமாக வந்தாள்
ஆயுதமும் தேவி கைகொடுத்தாள்
பக்தியாய் ஆயுதமுங்கொடுக்க அம்மன்
பதினெட்டுக் கையிலும் தரித்துக்கொண்டு,
சிம்ஹவாஹனத்தில் ஏறிக்கொண்டாள் மஹா
தேவியும் யுத்தம் பண்ண வந்தாள்
மஹிஷாஸுரனும் தேவியுமாய் மஹா
ஆங்காரமாய் யுத்தம் பண்ணலுற்றார்.
அஞ்சாமலே யுத்தம் செய்து நின்றான்
மாய்கையினால் பல ரூபமெடுத்தவன்
மஹாதேவியுடன் யுத்தம் செய்தான்
காளிரூபமெடுத்துக்கொண்டு தேவி
கைதனில் சக்ராயுதமுங்கொண்டு
மஹிஷரூபமெடுக்கும் போதவனை
மடிய வெட்டினாள் மாதேவியும்
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 145*
🌸🌸🌸🌸
மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹாஶனா |
அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாஸுர நிஷூதினீ ‖ 145 ‖
🌸🌸🌸🌸
महेश्वरी, महाकाली, महाग्रासा, महाऽशना |
अपर्णा, चण्डिका, चण्डमुण्डाऽसुर निषूदिनी ‖ 145 ‖
🌸🌸🌸🌸
maheśvarī, mahākāḻī, mahāgrāsā, mahā'śanā |
aparṇā, chaṇḍikā, chaṇḍamuṇḍā'sura niśhūdinī ‖ 145 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் மஹேஶ்வர்யை நம;
ஓம் மஹாகாள்யை நம;
ஓம் மஹாக்ராஸாயை நம;
ஓம மஹாஶனாயை நம;
ஓம் அபர்ணாயை நம;
ஓம் சண்டிகாயை நம;
ஓம் சண்டமுண்டாஸுர நிஷூதின்யை நம;
🌸🌸🌸🌸
*
🌸🌸🌸🌸
*750.மஹேஶ்வரீ* - மஹதீயாயும் ( பெரியவளாயும்), மகேஸ்வரனின் மனைவி மஹேஸ்வரியாகவும் இருப்பவள் (*208 – நாமா பார்க்கவும்*).
🌸🌸🌸🌸
*751.மஹாகாளீ* - மஹதீயாயும் மஹா காளியாயுமிருப்பவள் (எதெல்லாம் அளவிடமுடியாததோ, மிக ப்ரம்மாண்டமானதோ, அது மஹத். மஹா என்ற வார்த்தையில் உருவாவது. மிக பிரதானமான சக்தி மனிதனில் புத்தி ஒன்றே. புருஷன் ப்ரக்ருதி என்கிற வரிசையில் மூன்றாவது புத்தி. சாங்கிய யோகம் இப்படி சொல்கிறது. சிவன் மஹா காலன் அவனுடைய சக்தியாக இருப்பவள் மஹா காளி).
🌸🌸🌸🌸
*752.மஹாக்ராஸா* - பெரியதான பிடியை (அபரிமிதமான ப்ரபஞ்சாத்மகமான சுபத்தை) உடையவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*753.மஹாஶனா* - பெரியதான ஆஹாரத்தையுடையவள் (உட்கொள்பவள்) பிரபஞ்சத்தை அழிப்பவள்.(எல்லாவற்றையும் தன்னுள் கொள்பவள்)அம்பாள்..
🌸🌸🌸🌸
*754.அபர்ணா* - ருணமில்லாதவள் (கடன்பட்டிருப்பதைத் தீர்த்தவள் / பாக்கி ஒன்றும் வைக்காதவள்). பூரணமாக தயை புரிபவள். பக்தர்களின் அன்பை, சரணாகதியை பெற்று, அவர்களுக்கு வரங்களை வழங்குபவள்.
🌸🌸🌸🌸
*755.சண்டிகா* - பெரும் (கோபாக்னியானவள்) கோபமுள்ளவள் / நெருங்கமுடியாதவள்.
🌸🌸🌸🌸
*756.சண்ட முண்டாசுர நிஷூதினீ* - சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை வதம் செய்பவள் அம்பாள் மார்கண்டேய புராணத்தில் (தேவி பாகவதம்) (84.25) சண்டிகா தேவி காளியைப் பார்த்து ''நீ சண்ட முண்டர்களை வதம் செய்ததால் இனி உலகம் உன்னை சாமுண்டி என்று உணரும்'' என்று உரைத்ததாக சொல்கிறது.
🌸🌸🌸🌸
பதிவு 32
*Started on 26th sep 2020*💐💐💐💐
*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
*அது ஸம்மேளன அர்ச்சனை*👌👌👌.
ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் ஒருங்கே வழிபாடு செய்வது ஸம்மேளன அர்ச்சனை.
ஒரே நேரத்தில் இரு தெய்வங்களுக்கும் செய்யப்படும் அர்ச்சனை வழிபாடு. மிகவும் மேன்மையானது.
ஸ்ரீ ஆனந்த தாண்டவாயை நம: என்று முதலில் அம்பிகையையும்,
ஸ்ரீ ஆனந்த தாண்டவாய நம: என்று அடுத்து, நடராஜ மூர்த்தியையும் ஒரே நேரத்தில்,
ஒரே நாமாவளியை ஆண்பால் & பெண்பாலாகக் கொண்டு, அர்ச்சனை செய்யப்படுவது ஸம்மேளன அர்ச்சனை என்று போற்றப்படுகின்றது.
(பொதுவாக ஸம்மேளன அர்ச்சனை, குடும்ப நன்மை, தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்குவதற்கு, விரைவில் திருமண பாக்கியம் கிடைப்பதற்கு, வம்ச அபிவிருத்தி – நற்குழந்தைப் பேறு போன்ற பொதுவான வேண்டுதல்களுக்கும், மேலான ஞான அருள் கிடைக்கவும் செய்யப்படும்.)
*ஸம்மேளனம் என்றால் கலந்தது என்று பொருள்*💐💐💐
Brahman is devoid of any modifications. Lalitā Sahasranāma 470 is Vayo'vasthā-vivarjitā, which says that She is beyond the effects of aging.
This is the unique quality of Brahman, who does not undergo changes.
Lalitā Sahasranāma 430 *Nitya-yauvanā* says that She is eternally youthful, as She is beyond time and space.
The Upaniṣad says that Brahman is without aging and is eternal and this message is conveyed through this nāma.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*உதீதோ பவான்*
*தஸ்யா: மத் நயன*
*அந்தரங்க ஸுகதோ மத் பாக்யதோ ராஜதே*
*தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம் ஆனந்த பூர்ணாஸ்மி அஹம்*
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே*
श्वश्रूर्मे परमं हि दैवतमियं कुक्षावुदीतो भवान्
तस्या मन्नयनान्तरङ्गसुखदो मद्भाग्यतो राजते।
तातो वो मयि वत्सलोऽस्ति सुतरां आनन्दपूर्णास्म्यहं
श्रीकान्तेति विदेहजावचनतः स्मेराननो दृश्यसे॥
ஸீதாதேவியின் பூர்ணானந்தம் கண்ட கௌஸல்யானந்த வர்தனன் ராமர் காட்டிய நிறைவான புன்னகை😊😊😊💐💐💐👌7👌
*நான் மிகவும் கொடுத்து வைத்தவள்* ...
உங்கள் எல்லோரையும் நன்றாக பார்த்துக்கொள்வதைப்போல் என்னையும் ஒரு கடுகளவும் குறைவில்லாமல் என் மூன்று தாயார்களும் , என் வயிற்றில் பிறவாத உங்கள் தம்பிகளும், தந்தை தசரதனும் என்னை பார்த்துக்கொள்கிறர்கள் ...
*வெங்காயம் உரிக்கக்கூட என்னை அனுமதிப்பதில்லை*
அது மட்டும் அல்ல இந்த ஊர் மக்களும் அவர்கள் வீட்டு பெண்ணைப் போல என்னுடன் பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள் ....
என்னை மட்டும் அல்ல என் சகோதரிகளுக்கும் இதே உபசரனை தான் ...
இப்படி சீதை சொன்னவுடன் ராமன் இதுதான் உண்மையான அங்கீகாரம் ....
என் சீதையை கொஞ்சமும் கண் கலங்காமல் பிறரும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று சீதையே சொல்லும் போது வேறு என்ன வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்தானாம் ... ☺️☺️☺️
*ச்வச்ரூர்மே* என்றால் மாமியார் என்று அர்த்தம் ...
*மாமியார் என்பவள் தெய்வத்திற்கு சமானம்*
*குக்ஷௌ உதீதோ பவான்*
அந்த தெய்வத்தின் வயிற்றில் இருந்து உதித்தவர் அல்லவா தாங்கள் ??
*தஸ்யா: மத் நயன அந்தரங்க ஸுகதோ*
என் மனதிற்கும் கண்களுக்கும் நீங்கள் ஆனந்தத்தை தருகிறீர்கள் ...
இப்படி அமைந்தது நான் செய்த பெரும் பாக்கியம்
*தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம்*💐💐💐
இது மட்டுமா ... உங்கள் தந்தை என் தந்தையைப்போல என்னிடம் அளவு கடந்த அன்புடன் நடந்து கொள்கிறார் ...👌👌👌
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா*
ஆனந்தத்தால் நான் பூரணமாகி விட்டேன்/ நிறைந்து விட்டேன் இனி நான் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை உன்னிடம் ராமா ...
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே*
இப்படி சீதை ஆனந்தத்தின் உச்சத்தை தொட்டுக்கொண்டே உன்னிடம் சொன்ன வார்த்தைகளை கேட்டு அகமகிழ்ந்து ஒரு புன்னகை பூத்தாயே ராமா
அதே புன்னகை உன் முகத்திலும், சீதையின் முகத்திலும் கொஞ்சமும் வயதாகாமல் இளமையுடன் இருக்கிறதே ராமா ...
இன்றும் வடூவூரில் எங்களுக்காக அந்த இனிய புன்னகையை சுமந்து கொண்டிருக்கிறாயோ ராமா??
*சீதை மட்டும் கொடுத்து வைத்தவள் அல்ல நாங்களும் தான் ....* 😊😊😊👌👌👌
சீதை கொடுத்துவைத்தவள்
வெங்கயாம் கூட உரிக்கவில்லை
என்று கவி உதாரணம்
அருமை
சிந்திக்க சிரிக்க ரசிக்க
From 61
61.மஹ்யம் த்ருஹ்யந்தி யே மாத:த்வத் த்யாநாஸக்தசேதஸே
தாநம்ப ஸாயகைரேபி:அவ ப்ரஹ்மத்விஷோஜஹி
ஒ அன்னையே!உன் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் எனக்கு துரோஹம் இழைக்கும் அந்த பிரம்மத்வேஷம் கொண்டோரை இந்த பாணங்களால் வதைத்து என்னைக் காப்பாயே!
ப்ரஹ்ஷ்டாநாம் த்ருஷ்டிபாதேந பூத:
பாபீயாநப்யாவ்ருத:ஸ்வர்வதூபி:
சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே
ஹே அம்மே! உனது பக்தர்களும் ஏஷ்ணாத்ரயம் அடங்கியவர்களுமான ப்ரஹ்ம ஞானிகளின் கடாக்ஷமம் பட்டு பரிசுத்தனாய்ப் பரிணத்த பாபிகூட தேவலோக மங்கையர் சூழ துன்பமெல்லாம் நீங்கி, பின் சுவர்க லோகத்தில் மகிழ்ந்திருப்பானே!
பஜே sஹம் த்வாம் யயாவித்வான் வித்யயாsம்ருதமச்நுதே
இவ்வுலகில் சம்சாரச் சூழலைத் தோற்றுவிக்கும் வித்யைகள் பல உண்டு. ஆனால் எந்த ஒரு வித்யையால் மோக்ஷத்தைப் பெறலாமோ அந்த வித்யாரூபிணியான உன்னை ஸேவிக்கிறேன்.
ச்ரோணீசிஞ்ஜன் மேகலா கிங்கிணீகம்
சந்த்ரோத்தம்ஸம் சின்மயம் வஸ்து கிஞ்சித்
வித்தி த்வமேதந்நிஹிதம் குஹாயாம்
பவழம் போல் பிரகாசிப்பதும், விசாலமான கடிதடத்தில் ஒலிக்கும் ஒட்டியான மணிகளைக் கொண்டதும், சந்திரனையணியாகவுடையதுமான ஒரு தத்வப் பொருள் அறிவாளிகளால் மறைவாக வைக்கப்படுவதை c அறிவாயாக!
65.நவிஸ்மரா சின்மூர்திம் இக்ஷ§தேண்டசாலி
முனய:ஸநகப்ரேஷ்டா ஸ்தாமாஹ§:பரமாம்கதிம்
கரும்பு வில்லுடன் விளங்கும் சின் மூர்த்தியை ஸனகர் முதலிய முனிவர் சிறந்த கதியாகக் கூறுவதை நான் மறக்கவில்லை.
ஹம்ஸஜ்யோத்ஸ்னாபூர ஹ்ருஷ்யச்சகோராம்
யாமாச்லிஷ்யன் மோததே தேவதேவ:
ஸாநோ தேஸுஹவா சர்ம யச்சது
கண்ணில் சுரக்கும் அன்பு, கருணை இவற்றின் தாரையை உடையவளும், அன்னமாகிய நிலா வெள்ளத்தில் மகிழ்ந்து நிற்கும் சகோரப் பிறவைகளுடையவளுமான எந்த தேவியை அணைத்துக்கொண்டு தேவதேவனான பரமேச்வரன் மகிழ்கிறாரோ அந்த தேவி எங்களுக்கு மங்களம் தந்தருளட்டும்.
க்ருஹாண பதம்மபாயா ஏததாலம்பனம் பரம்
ஒ மனமே!ஏமாற்றும் தன்மையை விட்டுவிடு! சாதாரண தைவங்களையும் விட்டுவிடு. அம்பிகையின் திருவடியன்றையே நாடு. அதுவே உயரிய பிடியாகும்.
காமேசாங்கோத்துங்க பர்யங்கஸம்ஸ்தாம்
தத்வாதீதாம் அச்யுதானந்த தாத்ரீம்
தேமஹம் நிர்ருதிம் வந்தமாந:
காமேச்வரர் மடியாகிய உயர்ந்த கட்டிலின் மீதமர்ந்துள்ளவளும், தத்வம் கடந்த தத்வமாகவும், அழிவற்ற ஆனந்தமளிப்பவளுமான நிர்ருதிதேவியை நான் வழிபடுவதால் எனக்கு பயமும் இல்லை. குறையுல்லை. அடைய முடியாத பொருளுல்லையே!
லலிதே த்வாம் ஸக்ருந்நத்வா ந பிபேதி குதஸ்சந
சிந்தாமணியின் சீரிய ஒளி படர்ந்த முகத்தைக் கொண்ட ஹே லலிதாம்பிகே!உன்னை ஒருதரம் நமஸ்கரித்தவர் வேறு எங்கிருந்தும் பயப்பட மாட்டார்.
தவாஜ்ஞயைவ காமாத்யா மா ஸ்மான் ப்ராபந்நராதய:
இளமையின் காரணமாக உயரமான குசங்களும், அழகு ளிரும் கண்களும் கொண்ட அம்பிகே! உனது ஆஞ்ஞையால் காமம் முதலிய ஆறுவித எதிரிகளும் எங்களை அணுகாமலிருக்கட்டும்.
அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாசலா
ஏன் இந்த வரிகளில் அபின்னம் என்ற வார்த்தை வருகிறது என்று யோசித்தேன் ----முதலில் பின்னம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம் --- பின்னம் என்றால் ஒரு பகுதி என்று அர்த்தம் ---உடம்பில் கை கால்கள் பின்னம் என்று சொல்லலாம் -- உடம்பில் ஒரு பகுதி அவைகள் ...
இதற்கு மாறுப்பட்ட அர்த்தம் அபின்னம் --முழுவதும் ஆன பொருள் -- முழு சந்தோரோதயம் என்று சொல்லலாம் - தேய்ந்து போகும் நிலவை பின்னம் என்று சொல்லலாம் ....
அருணாசலேஸ்வரா --- நான் இதுவரை நீ படைத்த ஒரு பகுதியாக இருந்தேன் - ஒரு பின்னமாய் இருந்தேன் --- உன்னில் நான் கலந்து விட்டால் ஒரு முழுப்பொருளாகி விடுவேன் -
இனி என்னை யாரும் பின்னம் என்று சொல்ல முடியாது ------ வாழ்க்கையில் நாம் பார்ப்பதுதான் - இரண்டு உயிர்கள் தனித்தனியாக பின்னமாய் திருமணம் ஆகும் முன் இருக்கின்றன --- கணவன் மனைவி என்ற உறவு வந்த பின் அந்த இரண்டு உயிர்களின் துடிப்பும் ஒன்றாகி மூன்றாவது துடிப்புக்கு வழி வகுக்கிறது -
இரண்டும் அபின்னமாய் ஆகா விடில் பரமானந்தம் கிடைக்க வழி இல்லை
அதனால் தான் ரமணர் நேராக பரமானந்தம் தா அருணாசலா என்று கேட்காமல் அபின்னமாய் இருப்போம் அருணாசலா என்று கெஞ்சுகிறார் --
இறைவன் சிலசமயம் நம்முடன் வாழ்க்கையில் விளையாடுவதைப்போல் வார்த்தைகளில் விளையாடுகிறார் ரமணர் இங்கே.
ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாசலா (அ)
இவ்வளவு நேரம் அருணாசலத்தை தன் மனம் போனபடி திட்டினவர் - அதிகமாக திட்டிவிட்டோமோ என்று மனதில் வருந்தி இந்த வரிகளில் புகழ்ந்து தள்ளியுள்ளார் ---
திட்டிய ரமணர் தன்னிடமே சொல்லிக்கொள்வது --
கொஞ்சினவர்களுக்கு எங்கே அவன் ஓடிப்போய் அருள் செய்கிறான்?
அவனை நிந்தித்தவர்களுக்குதானே ஓடிப்போய் வரம் தருகிறான் ---
நான் திட்டுவதால் என்ன தவறு என்று கேட்கிறார்.
அதே சமயம் எங்கே எனக்கும் தெரியாமல் கோபம் கொண்டிருப்பானோ என்றும் பயப்படுகிறார் -
மீண்டும், கோபம் கொள்பவன் என் அருணாசலமாக இருக்கமுடியாது என்று சொல்லி தேற்றிக்கொள்கிறார்
இந்த பாடல் வரிகளில் என்ன சொல்கிறார் என்று இன்று பார்ப்போம் ---
ஓம் எனும் பிரணவத்தின் உட்பொருள் நீ தானே --
உனக்கு ஒப்பும் இல்லை மிக்காரும் இல்லை ---
உன்னை யாரால் முழுவதும் புரிந்துகொள்ள முடியும் அருணாசலா ---??
ஓம்கார வடிவே அவன் ஆடும் நடனம் --
சடைகள் விரித்தாடும் அவன் அழகை,
கரங்கள் காட்டும் அபயத்தை,
கால்கள் காட்டும் நளினத்தை
ஒன்றாக சேர்த்தால் ஓம் எனும் வடிவம் வரும் ---
அடி முடி காண முடியாமல் தோற்றவர்கள் பல கோடி --- யாருக்குமே இவனை ஒப்பிட முடியாது ---
ஆனால் உன்னை முழுவதும் புரிந்து கொள்வது உன் தோற்றத்தைப்போல் அவ்வளவு எளிமை இல்லை ----
உன்னை யாரே முழுதும் அறிவர் என்று ஒரு கேள்வியை வைக்கிறார் -----
ரமணராலேயே அருணாசலேஸ்வரரை முழுவதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை --
ஆனால் இதற்கு வழியே இல்லை என்றும் அவர் சொல்ல விரும்பவில்லை -
அருணாசலா -- உன்னுடன் நான் அபின்னமாய் கலந்து விட்டால் நான் உன்னை முழுதும் உணர்ந்தவனாகிவிடுவேன் என்றும் சொல்கிறார் --
இறைவனை முழுதும் அறிந்துக்கொள்ள வேண்டுமா? --
அவனிடம் நாம் இரண்டற கலக்க வேண்டும் --
அப்பொழுது அவன் நமக்கு காட்டும் அழகில் அவனை நம்மால் முழுதும் புரிந்துக்கொள்ளமுடியும் -----
பக்தியும், அன்பும் சரணாகதியும் தான் நம்மை அவனிடம் கொண்டு போய் சேர்க்கின்றன என்பதுதான் இந்த பாடலின் தத்துவம் ...ௐௐௐௐௐ
ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை
ஆளுவது உன் கடன் அருணாசலா (அ)
ஔவையின் மீது ரமணருக்கு தனி அன்பு, பக்தி -- இங்கே ஔவை என்றும் எடுத்துக்கொள்ளலாம், தாயென்றும் எடுத்துக்கொள்ளலாம் ---ஔவை ஈசன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்
அவ்வை என்ற பெயரில் நான்கு புலவர்கள்.
அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார்.
நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை.
இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.
இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர்.
இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்தபொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.
மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர்.
சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர்.
இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர்.
மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர்.
நான்காவது அவ்வையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர்.
முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப்பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, 'பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார்.
வாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று
வாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என
சிந்தைதனில் நின்று
அவாவினால் இந்த அவ்வை தமிழ் கொண்டு
காவி பாடினாள் உன்னை கண்குளிர கண்டு
உருவான செந்தமிழில் மூன்றானவன்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்.......
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை சுரவங்களில் ஏழானவன்
இன்ப சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை சுரவங்களில் ஏழானவன்
தித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பற்றானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருக்கை வேல்லவனை பெற்றானவன்
முற்றதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையுண்டு தான்னென்று சொன்னானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவையுண்டு தான்னென்று சொன்னானவன்
ஆண் பாதி உமை பாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்
காற்றானவன் ஒளியனாவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும்
நிலையான ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்
ரமணர் உருகி போகிறார் -- அருணாசலா --
இந்த தாய்க்கு தாயாக அருள் செய்தாயே எனக்கும் அப்படியே உன் கருணையை காட்டக்கூடாதா?
உன் அன்புக்காக ஏங்குகிறேன் அருணாசலா ---
அவர் இப்படி வேண்டும்போது – அருணாசலா ஏன் ஓடி வராமல் இருக்கிறாய் என்று நமக்கே கேட்கவேண்டும் போல் இருக்கிறது 🙏🙏
கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாசலா (அ)
முதல் பார்த்த வரிகளில் கோபம் இருந்தது, இயலாமை இருந்தது, அதிகாரம், கட்டளை இருந்தது - உரிமை வார்த்தைகளாக தெளித்தது -- இனி வரு பாடல்களில் இரக்கமும், கெஞ்சுதலுமே இருக்கின்றன --- பார்க்கமாட்டாயா, வர மாட்டாயா, அவ்வைக்கு கருணை காட்டியதைப்போல் எனக்கும் உன் கருணையை காட்ட மாட்டாயா .... என்று புலம்புகிறார் ரமணர் --
எனக்கு கண்கள் மிகவும் முக்கியம் அருணாசலா -
அவைகள் கொண்டுதான் இந்த உலகைப்பார்க்கிறேன்.
--- அந்த கண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை ---
ஆனால் நீயோ நான் கேட்காமல் அந்த கண்களுக்கு கண்ணாய் இருக்கிறாய் -
கண்களையே பார்க்கும் கண்கள் அருணாசலர் ---
எவ்வளவு அழகாக உணர்ச்சி பூர்வமாக ரமணர் சொல்கிறார் பாருங்கள் ---
இந்த அக கண்கள் உனக்குத்தேவை இல்லை -
இருந்தாலும் உன்னால் கண்களே இல்லாமல் கூட எல்லாவற்றையும் பார்க்க முடியும் ---
இதில் என்ன வேடிக்கை என்றால் உன்னை எங்களால் பார்க்க முடியவில்லை ---
யாரால்தான் பார்க்க முடியும்? நான் உன்னை பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை - அருணாசலா நீ என்னைப்பார் அது எனக்குப்போதும் --
உன் பார்வை என் மீது கொஞ்சமே பட்டாலும் --
கொஞ்சம் பார் என்னை அருணாசலா!!!! 🙏
ஒரு பின்னோட்டம் 12 to 15
12.ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணாசலா
13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா
14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை ஆளுவது உன் கடன் அருணாசலா
15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா
13 வது பாடலில் ஓம் எனும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னை யார்தான் அறிய முடியும் அருணாசலா - ஹரியும் பிரம்மனும் கூட உன்னை முழுவதும் அறிந்துக்கொள்ள வில்லை -- நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது ...
14 வது பாடலில் ஔவையை போல் ஒரு சிறந்த சிவபக்தை இருக்க முடியாது - நீ ஒப்புக்கொண்டால் நானும் சிறந்த சிவ பக்தன்- அவளுக்கு அருள் செய்ததை போல், கருணைக்காட்டியதைப்போல் எனக்கும் காட்டு அருணாசலா என்கிறார்
15வது பாடலில் கண்ணுக்கு கண்ணாக இருக்கிறாய் - கண்ணையே பார்க்கும் கண்ணாக இருக்கிறாய் -- கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கிற உன்னை யாரால் காண முடியும் - என்னை கொஞ்சம் பார் அருணாசலா என்கிறார் -- ஆண்டவனுக்கு கண்ணில்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது --- அவனே பார்வையாக இருக்கும் போது தனியாக அவனுக்கு கண் வேறு வேண்டாமே --- எல்லாவற்றிலும் இருப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும்
எனோடு இருப்பாய் அருணாசலா
திருமாலை காந்தன் என்று சொல்வார்கள் ஆழ்வார்கள்.
கலைமுழு தோர்ந்து கரிசெலாம் அறுத்த
காந்தனே பருமணி அரவத்
தலைகிடந் திமைக்குந் தாத்திரி யதனிற்
சாற்றருந் தக்கநன் முயற்சி
உலைவறப் புரியா ஒருவனுக் கெங்ஙன்
உற்றிடுஞ் செல்வநன் னிலத்தை
நிலைபெற உழுது வித்திலான் தனக்கு
நீள்பயன் உற்றிடுங் கொல்லோ.
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே
முருகனும் காந்தன் தான் என்கிறது இந்த பாடல்.
அதுபோல, தன்னுடைய இப்போதைய நிலையிலிருந்து தன்னை ஈர்த்துக்கொண்டு அரவணைக்குமாறும் என்றும் தன்னோடிருக்குமாறும் வேண்டுகிறார் ரமணர்.
இன்னும் கூர்ந்து படித்தால் அர்த்தம் இப்படியும் வரலாம்.
அருணாசலா, என் மனம் ஒரு இரும்பு ... கெட்ட எண்ணங்களால் மிகவும் துரு பிடித்து போய் விட்டது ...
நீ தான் எல்லோரையும் காந்தம் போல் உன் பக்கம் இழுக்கின்றாயே,
என் மனம் எனும் இரும்பை உன் அன்பு என்ற காந்தத்தால் இழுத்து உன் பக்கம் கொஞ்சம் சேர்க்க மாட்டாயா ... 🙏
11. பஞ்ச தன்மாத்ர ஸாயகா ( पञ्चतन्मात्रसायका ) ( பொறியைந்தும் நுகர்கின்ற ஐந்து இந்திரியங்களாம் சுவைத்தல், காணுதல், தொட்டுணர்தல், கேட்டல், முகர்தல் என்பவற்றை அம்புகளாக் கொண்டவள்)
சென்ற நாமத்தில் கண்டது போல கரும்பு வில் மனத்தையும், அதனால் இச்சா சக்தியையும் குறிப்பதென்றால், இந்த நாமத்தில் கூறப்பட்டிருக்கும் இந்திரியங்களான, ஐம்பொறிகளின் உருவகமாகப் அன்னையில் கையிலிருக்கும் பஞ்சபாணங்களும் கிரியாசக்தியைக் குறிப்பன. வில்லிருந்தாலே அம்பெய்ய முடியும்; மனத்தாலேதான் பொறிவழிப் புலன்களை உணரமுடியும். மனது ஒடுங்கியிருந்தால், ஐம்புலன்களும் ஒடுங்கிவிடுமன்றோ? மனத்தின் வழியே புலனடக்கம். அப்புலன்களை அம்மை தன் வலது மேற்கையில் பஞ்ச மலர்ப்பாணங்களாக ஏந்தியுள்ளாள்.
வலந்தரு வாளன்னை வாழ்வில் – உலகுயிர்கட்கு
இச்சைகள் யாவும் இலகுவாக்கி இட்சுவில்லால்
மெச்சிடத் தந்திடுவாள் மிக்கு
12. நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலா ( निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला ) ( அண்டமுழுதும் தன்னுடைய சிவந்த திருமேனியின் ஒளிவெள்ளத்திலே மூழ்கவைத்திருப்பவள் )
தம்முடைய செந்நிறக் காந்தியின் ஒளிவெள்ளத்தால் அன்னை அகிலகோடி பிரம்ஹாண்டம் முழுவதும் முழுக்காட்டியுள்ளாள். இதுவே இந்நாமம் சொல்லுவது. அக்காந்தியினாலேயே அழகும் பெருமையும் அகிலத்துக்கும் உண்டாயிற்று என்பது பெறப்படுகிற பொருள். அந்த உதய ஒளிவெள்ளமே காலைத் தியானத்துக்கு உகந்ததென நியாய சாஸ்திரங்கள் குறிப்பிடுவதாக பாஸ்கரராயர் உரை குறிக்கிறது.
அண்டம் அனைத்திலும் அன்னையள் மேனியின்
கண்களைக் கவ்விடு காந்திநிறம் – வண்ணமாய்
அவ்வருணம் சூழ்ந்து அகிலமெலாம் கொண்டது
செவ்வியாய் சீர்த்திச் சிறப்பு
13. சம்பகாஶோக புன்னாக ஸௌகந்திக லஸத்கசா ( चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा ) – ( சம்பகம், அஶோகம், புன்னாகம், ஸௌகந்திகம் ஆகிய புஷ்பங்களுடம் ஶோபிக்கிற கூந்தலை உடையவள் )
அன்னையவள் கூந்தலை அலங்கரிக்கும் மலர்கள் செண்பகம், புன்னை, அஶோகம் (பிண்டி என்று சங்க இலக்கியங்கள் குறிக்கும்) சௌகந்திகம். இவற்றால் அழகு கூடியிருக்கும் கூந்தலை உடையவள் என்கிறது நாமம். காட்சிக்கு அழகாயினும், நறுமணச்சேர்க்கையாலும் இவை அம்பிகையின் அழகுக்கு அழகு கூட்டுகின்றன. பாஸ்கரராயர் உரையில், அவள் கூந்தல், அம்மலர்களுக்கு மணத்தை அளிப்பதாகக் கூறுகிறார். இது இறையனார் பாடிய “கொங்குதேர் வாழ்க்கை” என்ற சங்கப் பாடலின் கருத்தை ஒத்து இருக்கிறது. “ஓ தேனுண்ணும் வண்டே, அம்பிகை சூட்டியிருக்கும் மலர்களைப் பற்றி எனக்கொரு உண்மையைச் சொல்வாயாக. அம்பிகையின் கூந்தல் மணத்துக்கு நிகராமோ அவை?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.. இது அவருடைய உரையேவா அல்லது அவர் ஏதேனும் மேற்கோள் காட்டியுள்ளாரா என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
வெண்புன்னை சூடும் வியன்முடியாள் – தண்மலர்கள்
மண்டியன்னைக் கூந்தலிலே வாசமா? அன்றவளால்
வண்ணமலர் கட்குமண மா?
பிண்டி மலர் – அஶோகம்
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 14
14. குருவிந்த மணிஶ்ரேணி கனத்கோடீர மண்டிதா ( कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता ) ( பத்மராக மணிகள் வரிசையாகப் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை அணிந்தவள்)
அன்னை ஒளிரும் குருவிந்த மணிகளின் (பதுமராகம்) கோவையாலான ஒரு மணிமுடியை தன் தலையிலே சூடியுள்ளாள் என்று இந்த நாமம் கூறுகிறது. அம்மணி முடி அழகு மிக்கதேயாயினும், அன்னையின் ஒளி வீசும் எழிலே அதனினும் மிக்கதன்றோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
ஒருமகுடம் பூண்டதவள் உச்சி – அருமைதான்
அம்மணிக் கோவைமுடி; ஆயினும் மிக்கதன்றோ
அம்மை எழிலொளி ஆங்கு?
குருவிந்தம் – பத்மராக மணிகள்; கோவை – வரிசை
ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு வெண்பா என்பது சிறிது ஆர்வக்கோளாறான முயற்சியோ என்று எண்ணத்தொடங்கிய நேரத்தில், மூலக்கருத்தைக்கூறி, தொடர்புடைய ஒன்றைச் சொன்னாலும் துவங்கிய செயலுக்கு பங்கமில்லை என்றும் தோன்றியது..
இந்த நாமம், அன்னையின் நெற்றி எட்டாம் நாள் பிறைச் சந்திரன்போல ( பாதி மதி) அழகாக இருக்கிறது என்று கூறுகிறது.. சிவனுடைய சடாமுடியிலும் இளமதிதானே இருக்கிறது (நீலகண்ட சிவன் பாடல் பாதிமதி என்று சொல்லும்). அன்னையின் நுதலே அண்ணலில் தலைமேலமர்ந்ததோ என்ற எண்ணம் தோன்றியது.. இவ்வெண்பாவில் இணைந்தது.
சோதியள் நெற்றித் துலங்கிடும் – ஆதிசிவன்
அண்ணல் அணியும் அரைநிலவும் அஃதன்றி
எண்ணவே றுண்டோ இயம்பு!
ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 16
16. முகசந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா ( मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका ) (நிலவில் உள்ள கறைகள்போல அன்னையின் முகவிலாஸத்தில் கஸ்தூரி திலகம் இருக்கிறது)
நிலவின் முகத்தில் இருக்கும் களங்கம் என்பது நிலவிற்கு குறையே அல்ல! அவை அன்னையின் பாதிமதி போன்ற நுதலில் விளங்கும் கஸ்தூரித் திலகம்போல் என்கிறது நாமம். இது சொல்லவரும் உள்ளுரைக் கருத்தை, நெற்றித்திலகம் பெண்களுக்கு வலிமை தருவதென்று அவர்களுக்குக் குறிப்பால் கூறுவதாகக் கொள்ளவேண்டுமோ?
நிலவின் களங்கம் நிமலை வதனத்(து)
இலங்கும் நுதலில் எழிற்போல் – திலகம்
வலமென அன்னை மகளிருக் கெல்லாம்
குலமுறைக் கூறலென்று கொள்