பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-4 - 218
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பாஸ்கர ராயர்-4
(218) 👍👍👍💥💥💥
பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் உண்டு.
மாலை வேளையில் தம்முடைய இல்லத்தில் வாசல் திண்ணையில் இவர் அமர்ந்திருப்பார். தம் காலைத் தூணில் உதைந்துகொண்டு திண்ணையில் சாய்ந்தபடியே இருப்பாராம்.
திருவிடைமருதூரில் எழுந்தருளிய ஶ்ரீமகாலிங்க சுவாமியைத் தரிசித்து வருவதற்காக மாலை வேளையில் அந்த வீதிவழியே ஒரு சந்நியாசி போவாராம். அப்போதும் பாஸ்கர ராயர் தம் காலை மடக்காமல் தூணில் உதைந்தபடியே அமர்ந்திருப்பாரம். துறவியாகிய தமக்கு இல்லறத்தாராகிய இவர் மரியாதை தரவில்லையே என்று அந்தச் சந்நியாசிக்குக் கோபம்.
ஒருநாள் பாஸ்கர ராயர் திருவிடைமருதூர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அப்பொது அந்தத் துறவியும் வந்திருந்தார். அவை இவரை கண்டதும் தம் கோபத்தை வெளிபடுத்த எண்ணிணார். அருகிலிருந்த சிலரிடம், "இவர் அகங்காரியாக இருக்கிறார். சந்நியாசியைக் கண்டால் எழுந்து நின்று வணங்குவது இல்லரத்தாருக்கு முறை. இவர் வாசல் பக்கம் காலை நீட்டிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டு காலை மடக்குவது கூட இல்லை" என்று சொன்னார்.
:இவர் பெரிய மகான். ஸ்ரீ வித்தையில் இவருக்கு நிகராக யாரும் இல்லை. இவர் அப்படிச் செய்திருக்கமாட்டார். தாங்கள் வேறு யாரையோ கண்டிருப்பீர்கள்" என்று சிலர் சமாதானம் கூற வந்தார்கள்.
"இவர்தான் அப்படி உட்கார்ந்திருந்தார். என் கண்ணையே நான் நம்பமுடியாதா"? என்றார் துறவி.
அப்போது சிலர், பாஸ்கர ராயரைப் பார்த்து, "சுவாமி, இந்த யதி சொல்வது உண்மைதானா? உண்மையானால் அப்படித் தாங்கள் செய்தது நியாயமாகுமா?" என்று கேட்டார்கள்.
இவர் சிரித்துக் கொண்டே, "நான் எழுந்து சென்று இவரை வணங்கியிருந்தால் இவருக்கு ஆபத்து வந்திருக்கும்" என்றார்.
"இது வீண் கற்பனை. எனக்கு மரியாதை கொடுக்காததோடு இப்படி ஒரு மிரட்டலும் செய்கிறார்" என்றார் துறவி. "அப்படி என்ன ஆபத்து வரும்?" என்று கேட்டார்.
உடனே பாஸ்கர ராயர், "சுவாமி, தங்களை நான் வணங்க எண்ணினாலும் அது தீங்காக முடியுமே என்று எண்ணி அப்படிச் செய்யவில்லை. தங்களுடைய தண்ட கமண்டலங்களையும் மேலே அணிந்த காஷாய வஸ்திரத்தையும் தனியே வையுங்கள். அவற்றை நான் வணங்குகிறேன். அவற்றிற்கு என்ன கதி நேருகின்றதென்பதைக் கண்ட பிறகும், தங்களை வணங்கச் சொன்னால் அப்படியே செய்கிறேன்" என்றார்.
உடன் இருந்தவர்கள் யாவரும் என்ன நிகழப்போகிறதோ என்ற ஆவலுடன் இருந்தனர். சந்நியாசி தம் தண்ட கமண்டலங்களையும் காஷாய உடையையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு விலகி நின்றார். பாஸ்கர ராயர், "மஹாத்ரிபுரஸுந்தரி" என்று சொல்லிக்கொண்டே அவற்றின்முன் விழுந்து நமஸ்காரம் செய்தார்.
என்ன ஆச்சரியம்! அடுத்த கணத்தில் அவை துண்டு துண்டாக உடைந்தும் கிழிந்தும் போயின. கண்டவர்கள் யாவரும் வியந்தனர்.
துறவி பாஸ்கர ராயருடைய பெருமையை நினைத்து அஞ்சலி செய்தார். "தாங்கள் இல்லறவாசியானலும் துறவிகளுக்கு எல்லாம் மேற்பட்டவர்" என்று சொல்லிப் போற்றினார்.
பாஸ்கர ராஜபுரம்!
இவ்விதம் தமிழகத்தில் தன்னிகரற்று விளங்கும் சக்தி வாய்ந்த திருத்தலம் ஒன்றுதான் மயிலாடுதுறையை அடுத்த திருவாலங்காடு திருப்பதியை அடுத்த மிகப் புராதனமான பாஸ்கர ராஜபுரம் திருத்தலமாகும்.
உலக மக்களை உய்விக்க சிவபெருமான் உருவமாய், அருவமாய், அருஉருவமாய் தலங்கள்தோறும் எழுந்தருளி சிவலிங்கத் திருமேனியில் காட்சியளித்து திருவருள் புரிந்து வருகிறார்
சிவபெருமானின் சிவலிங்கத் திருமேனிகள் தாமாகவே சுயம்புவாகத் தோன்றுவதுண்டு. மகரிஷிகளாலும், சித்தபுருஷர்களாலும் தோற்றுவிக்கப்பெற்று பூஜிக்கப்படும் சிவலிங்கத் திருமேனிகளும் உண்டு.
மன்னர்கள் தோற்றுவித்து வழிபாடு ஆற்றுகின்ற மரபும் உண்டு. இத்தகைய புராதன பெருமைமிக்க பாஸ்கரராஜபுரத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மகான்
ஸ்ரீ பாஸ்கரராயரின் தேவியரான ஆனந்தி தேவியினால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் பாஸ்கரராஜபுரம்
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்.
ஸ்ரீ பாஸ்கரராயரின் தேவியரான ஆனந்தியும் ஸ்ரீவித்யா உபாசகி ஆவர். அந்த அம்மையார் நிர்மாணித்த அற்புதமான திருக்கோயில்தான் பாஸ்கரராஜபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயிலாகும்.
மகாராஷ்டிரத்தைத் தன் அவதார பூமியாகவும், புண்ணிய காசி க்ஷேத்திரத்தை தனது வித்யா தலமாகவும் கொண்டு விளங்கிய ஸ்ரீ பாஸ்கரராயரும் அவரது தர்ம பத்னியான ஸ்ரீ ஆனந்தவல்லியும், பாஸ்கராயபுரத்தைத் தங்கள் தவக்ஷேத்திரமாகக் கொண்டு விளங்கினர். பல தருணங்களில் அம்பிகையின் தரிசனத்தைப் பெற்ற பாக்கியசாலிகள் இந்த தம்பதிகள்.
அக்காலத்திலும் தர்மத்திற்கு சோதனைகள் ஏற்படுவதுண்டு. ஸ்ரீ பாஸ்கரராயரின் தெய்வீகப் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், தஞ்சை மன்னர் சரபோஜி மகாராஜா அவர்களிடம் சென்று, ஸ்ரீ பாஸ்கரராயர் தனது பூஜையின்போது மது, மாமிசம் படைத்து, பூஜை செய்கிறார் என்று கோள் சொல்லியுள்ளனர்.
இதனால் மனக்கிலேசம் அடைந்த மன்னர், பாஸ்கரராஜபுரம் வந்து ராயர் பூஜை செய்யும் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு ஒரு பித்தளை செம்பு இருந்தது.
அதில்தான் மது இருக்கிறது என்று கூறினர் அவரிடம் கோள் சொன்னவர்கள். அதனைப் பரிசோதனை செய்வதற்காக மகாராஜா அச்செம்பினுள் கைவிட்டபோது, அதில் நைவேத்தியத்திற்காக சூடான பாயசம் இருந்ததைக் கண்டு, தான் இத்தகைய மகானை சந்தேகித்தோமே என்று மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீ பாஸ்கரராயரிடம் ஸ்ரீ அம்பிகையே இருக்கிறாள் என்பதை உணர்ந்து மேலும் பல கிராமங்களை இனாமாகக் கொடுத்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
திருக்கோயிலின் பெருமை!
ஸ்ரீ பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் புராதனமானது. சக்தி வாய்ந்தது. கடன் தொல்லைகள், தொழில் பின்னடைவு, மனக் கிலேசங்கள் ஆகியவற்றிற்கு பரிகாரத்தலம் இது.
முக்கிய விழாக்களாக ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில், பஞ்சமி திதியில் நவாவரண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பூஜ்யஸ்ரீ பாஸ்கரராய ஆச்சார்ய நினைவு மண் டபம் (பாஸ்கரராஜபுரம்) ஸ்ரீசக்கர பூர்ண மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிமாதமும் பௌர்ணமி அன்று ஸ்ரீ மகோமேரு ஆலயத்தில் நவாவரண பூஜை அற்புதமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம அர்ச்சனை!
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 1-ம் தேதி 1008 தாமரை மலர்களால் மூல மந்திரத்துடன் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை அதிசிறப்பாக நடைபெறுகிறது. அனுபவி த்து ஆனந்தமடைய ஆயிரம் பிறவிகள் போதாது. அத்தகைய அற்புத அனுபவம் இந்த அர்ச்சனை.
மிகவும் பழைமையானதும், அளவற்ற சக்தியும், கணக்கற்ற மகான்களின் திருவடி ஸ்பரிசமும் பெற்ற இத்திருக்கோயிலை மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பு : பாஸ்கரராஜபுரம் - மயிலாடுதுறையிலிருந்தும், குற்றாலம், ஆடுதுறையிலிருந்தும் ரயில், பஸ், கார் மூலம் வசதியாகச் சென்று வரலாம். குற்றாலத்திலிருந்து 4 கி.மீ.யும், ஆடுதுறையிலிருந்து 5 கி.மீ.யும் தொலைவிலுள்ளது.
ரவி இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு - அதை நாளை சொல்கிறேன் .......ம்மா என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை - அவர் எங்கே நான் எங்கே ? ? இருந்தாலும் தினமும் எனக்கு உன் தரிசனம் கிடைத்துக்கொண்டு இருக்கிறது ...
விஜயா -- ஜெய விஜயீ - எவராலும் வெல்லமுடியாதவள் - ஒன்பது நாள் தவமிருந்து மகிஷாசுரனை வென்றதால் தானே விஜய தசமி. ஸ்ரீ சக்ர உபாசனையில் திதி நித்திய தேவி, விஜயா என்ற நாமம் உண்டு.
விமலா - புனிதமானவள், பரிசுத்தமானவள். ஞானத்தின் எல்லை. மலம் என்றால் மாசு, அழுக்கு, நிர்-மலம் என்றால் மாசற்ற,சுத்தமான என்று அர்த்தம் அல்லவா? நமது மனத்தில், அஞ்ஞானம் தான் மாசு, அதை போக்குபவள் அம்பாள்.
வந்த்யா - எல்லோராலும் பூஜிக்கப்படுபவள், வணங்கப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. மனதை சுத்தமாக கொண்டு அவளை வணங்கினால், தியானித்தால் உடலில் ஒரு அதிர்வு ஏற்படும். உணரமுடியும். நினைத்த காரியம் கைகூடும் சக்தி பிறக்கும்.
வந்தரு ஜந வத்ஸலா - தன்னை வேண்டுவோருக்கெல்லாம் அன்பை பாசத்தை தருபவள். சேய் மேல் தாய்க்கு பாசம் இருப்பது சொல்லவா வேண்டும் ?
அன்னையின் புன்னகை இதற்கும் மேலே ஒரு விலை உயர்ந்த பொக்கிஷம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று எனக்கு உணர வைத்தது ......
Comments
பதிவு 33
*Started on 26th sep 2020*💐💐💐💐
*ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்*
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
*காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தரா* –
பரமேஸ்வரரால் கட்டப்பட்ட திருமாங்கல்ய கயிற்றினைக் கொண்டவள்.
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி –
சிவனும் சக்தியும் இணைந்த ரூபத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகின்றது.
லலிதா ஸஹஸ்ரத்தைக் கொண்டு அர்ச்சித்தால் சிவ சக்தி இருவரையும் அர்ச்சித்த பலன் கிடைக்கின்றது.
அது போல நடராஜ ஸஹஸ்ரத்தை அர்ச்சித்தாலும் சிவசக்தி அருள் கிடைக்கும் என்கின்றது அதன் பலச்ருதி.
(பார்வதியின் பார்வையால் மகிழ்வு கொள்பவர் சிவன்- சிச்சக்தி லோசனானந்த கந்தள:).
லலிதா ஸஹஸ்ரநாமம் சாக்தத்தின் உச்சநிலைக் கடவுளான லலிதா தேவிக்குரிய அர்ச்சனையாக அமைந்தது போல்,
சைவத்தின் மிக உச்ச நிலையில் அமைந்தவரும், உலக இயக்கத்திற்குக் காரணமாக விளங்குபவரும் ஆகிய ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஸஹஸ்ரநாமம் அமைந்திருக்கின்றது. ஆகவே, இது *ஸ்ரீ நடராஜ ராஜ ஸஹஸ்ரநாமம்* என்றே போற்றபடுகின்றது.
இனி நடராஜ ஸஹஸ்ரநாமத்தைக் காண்போம்👌👌👌
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 147*
🌸🌸🌸🌸
ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்பநிபாக்ருதி; |
ஓஜோவதீ, த்யுதிதரா, யக்ஞரூபா, ப்ரியவ்ரதா ‖ 147 ‖
🌸🌸🌸🌸
स्वर्गापवर्गदा, शुद्धा, जपापुष्प निभाकृतिः |
ओजोवती, द्युतिधरा, यज्ञरूपा, प्रियव्रता ‖ 147 ‖
🌸🌸🌸🌸
svargaapavargadaa, Suddhaa, japaapuShpa nibhaakrtih |
ojovatii, dyutidharaa, yaGYarupaa, priyavrataa ‖ 147 ‖
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் ஸ்வர்காபவர்கதாயை நம;
ஓம் ஶுத்தாயை நம;
ஓம் ஜபாபுஷ்பநிபாக்ருதயே நம;
ஓம் ஓஜோவத்யை நம;
ஓம் த்யுதிதராயை நம;
ஓம் யக்ஞரூபாயை நம;
ஓம் ப்ரியவ்ரதாயை நம;
🌸🌸🌸🌸
*
🌸🌸🌸🌸
*764.ஸ்வர்காபவர்கதா* - ஸ்வர்கமென்ற நித்ய ஸுகத்தையும் (முக்தியாக) தருபவள். கர்மபலனாக இதை அனுபவிக்க உதவுபவள்.
🌸🌸🌸🌸
*765.ஶுத்தா* - அவித்யையினால் எற்படும் மாவின்யம் (அழுக்கு, களங்கம் ) யாதொன்றுமில்லாத பரிசுத்தமானவள். (அதுவே ஞானம். இது இல்லாமல் முக்தி அடையமுடியாது. கறை இருந்தால் பரிசுத்தமானது. கறை என்பது அஞ்ஞானம். அறியாமை).
🌸🌸🌸🌸
*766.ஜபாபுஷ்ப நிபாக்ருதி* - செம்பரத்தைப் (செவ்வரளி) புஷ்பத்திற்க்கு ஸமானமான நிறத்தோடு கூடிய ஸ்வரூபத்தையுடையவள்.
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*768.த்யுதிதரா* - காந்தியை தரிப்பவள் ( காந்தியோடிருப்பவள் ).
🌸🌸🌸🌸
*769.யஜ்ஞரூபா* - யாகங்களின் ருபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*770.ப்ரியவ்ரதா* - விரதங்களில் பிரியமுள்ளவள் அம்பாள். மன உறுதியோடு சங்கல்பம் செய்து கொண்டு நிறைவேற்றுவது தான் விரதம்.
🌸🌸🌸🌸
*272. Labdhayauvanaśālinī लब्धयौवनशालिनी*👌👌👌 She is perceptually and abundantly youthful 👍👍👍
*273. Labdhādhiśayasarvāṅgasaundaryā लब्धाधिशयसर्वाङ्गसौन्दर्या*💐💐💐 Every part of Her body is flawless
This nāma says that She takes care of all the activities of the universe like a play.
The underlying conveyance in this nāma is that administering the universe, is like a child’s play for Her. She does this with such ease.
Lalitā Sahasranāma 966 *Līlā-vinodinī* also conveys the same meaning and its interpretation is given below:
Līlā means facility in doing anything.
In the present context, Līlā means Her three primary actions of creation, sustenance and dissolution.
Manu smṛti (I.80) says “Brahman creates and dissolves the different periods of Manu-s playfully.”💐💐💐
The Brahman acts in spontaneity without extraneous influence or motive.
Activities concerned with names and forms arise out of ignorance and meant to propound the fact that everything is Brahman.
Brahman plays hide and seek game with humans, using His potent tool known as māyā or illusion.
We put them to Death..
People say that when parents die,
the world comes to an end.
The house looks empty.
But I feel that parents live forever
and they stay with us.
It's us who forget them.
The matter of the fact is that
a brother has eyes of his beloved father,
a sister has the pretty face
like the compassionate mother,
a sibling smiles like dad or
a sister cooks like mom.
Parents don't die.
They never leave us.
They live among us.
They live in us.
We are the reflections of our parents.
Despite their physical absence,
they continue to live in us.
When you want to remember parents,
when you want to see them,
when you want to be with them,
simply gather your siblings around you.
You will find the mesmerizing smile
of the mother in one sibling,
the soothing voice of the father in another. You will feel the parents very close to you.
All around you. Deep inside you..
The garden of love that parents cultivate and grow with love, from the time that you are born, with the hard work of their tears and blood; it will continue to bloom,..
unaffected by the cycles of tough weathers of life.. They shelter us in tough times..
But there are times,
when we forget all their hard work and destroy their paradise that they built, with our selfishness, hatred, and opportunistic attitudes.
Parents don't die.
We put them to death..
Love your parents..
Love your siblings..
Continue to feed the garden that parents cultivated with love and compassion so that it never stops to bloom and blossom..
You will make your world a living paradise on earth.. A heaven that only knows love, compassion, care, respect and it has You..
💐🌹🌻💐
பிருந்தாவனம் புரிகிறது ... பிறவி வினை ஓடுகிறது...
கற்பகம் காட்சி கிடைக்கின்றது ... கற்பனை வாழ்க்கை கலைகின்றது... 🙏🙏🙏
உன் பித்தனாய் என்றும் வாழ்வேன் ... அனந்தனாய் உன் அடி பணிவேன்
தித்திக்கும் உன் நாமம் தினம் சொல்வேன் ... வேறு சுவை எதுவும் வெறுத்திடுவேன்
வேண்டியதை தரும் பார்வை .... வேதம் மேனி தனில் ஒரு சால்வை
முகம் எங்கும் ஒரு புன் சிரிப்பு .... வடூவூர் ராமன் தந்த ஒரு அன்பளிப்பு
கலி தீர்க்க வந்த தெய்வம் ... களி விரும்பி உண்ட தெய்வம் ...
பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார் , சாந்தனார் ...
சொல்லாண்ட உன்னை என் சொல்லி வாழ்த்துவேன் 🙏🙏🙏
ஆசை அகன்றது அருணாசலா ... உன் ஆலிங்கனம் எப்பொழுது அருணாசலா?
இன்னொருவர் இல்லை என்றே புரிந்துகொண்டேன் ..
இனிய சேர்க்கை எப்பொழுது அருணாசலா?
மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கௌதமர், ஹாரீதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன், அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள்.
ஸ்ரீமத் பகவத் கீதையையும் ஸ்மிருதிகளோடு சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டு. நேராக வேத மந்திரங்களாக உள்ள ‘ச்ருதி’யாக இல்லாமலும் நம் மதத்துக்கு ஆதாரமாயிருப்பதால் அதை ‘ஸ்மிருதி’ப் பிரமாணமாகச் சொல்கிறார்கள்.
இப்படி அநேகம் ஸ்மிருதிகள் இருப்பதால் இவற்றிலும் ஒன்றிலிருப்பது இன்னொன்றில் இல்லாமல் இருக்கலாம். சில சில காரியங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்படலாம். அதனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் இன்னமும் கொஞ்சம் ஸந்தேஹம் ஏற்படுகிறது. இந்த ஸந்தேகத்தையும் போக்குவதாக ‘தர்ம சாஸ்திர நிபந்தன’ங்கள் என்று சில புஸ்தகங்கள் இருக்கின்றன.
*
*பெரியவா அருள்*🙏
இந்த கொரோனா காலத்தில் நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் தடைபட்டுள்ளது. பல திருமணங்கள் சொந்த பந்தம் ஏதும் இன்றி மிக எளிய முறையில் நடைபெற்றுள்ளது. அப்படி சென்னையில், ஒரு பெண்ணிற்கு கொரோனா தொற்று காலத்திற்குக் முன்பே திருமணம், நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நோய்தொற்று பயத்தாலும், பொது மூடக்க நடவடிக்கையினாலும் நிச்சயித்த நாளிலில் திருமணம் தடை பட்டுவிட்டது. பெண்ணின் மனநிலையோ, சொல் ஒன்னா துன்பத்துக்குள்ளானது.
மஹாபெரியவா எங்கும் நிறை பரம்பொருள், சர்வவ்வியாபி என்பது மீண்டும் பிரத்யக்ஷமாக தெரிகிறது. கலியுக மஹா புருஷரான மஹாபெரியவா சித்தத்திற்க்கு முறனாக எதுவும் நடப்பதில்லை.
அந்த பெண்ணின் திருமணம் முதலில் நிச்சயிக்கப்பட்டதுபோல் நடந்திருந்தால் இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அவள் பெற்றோர் மனமுருகி சொன்னார்கள்.
நடத்தவேண்டிய நேரத்தில், நடத்தவேண்டிய இடத்தில் பெரியவா, பெற்றோர் மணம் குளிர நல்ல முறையில் அந்த பெண்ணின் திருமணத்தை நடத்திக்கொடுத்துள்ளார்.
இப்படி பல நல்ல நிகழ்வுகள், பல இடங்களில் பெரியவாளன் பரிபூரண ஆசியுடன் நிகழ்கிறது. எனவே கண்கண்ட கலியுக தெய்வமாம் மஹாபெரியவா பொன்னடி பணிவோம் நற்பலன்கள் அடைவோம் .
வாழ்க வளர்க ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
*"வாழை இலை சொன்னதாம்..."நான் தான் எல்லோரையும் விட 'சிரேஷ்டம்' யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் .*
*வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து ....' அட பைத்தியமே , 'நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை 'குப்பைத் தொட்டியில் 'அல்லவா வீசி எறிகிறார்கள், என கிண்டல் அடித்தது .*
*வாழை இலையே!!!! நீ தான் ஒசத்தி ,சிரேஷ்டம் என பேசினாய், அகங்காரப்பட்டாய்....... அதனால் நீ குப்பை தொட்டிக்கு போனாய்.*
*வெற்றிலையே!! உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்டாய் அதனால் நீ தெருவிற்கு போனாய்...*
*கருவேப்பிலையே!!! ''நான்' தான் சிரேஷ்டம் என அகங்காரப் பட்டாய், அதனால் இலையின் வெளியில் தள்ளப்பட்டாய்.....*
*நான் அகங்காரத்தை விட்டேன்... அதனால் அந்த பகவானின் பாதம் சேர்ந்தேன் ' நான் துளசி' என்றதாம்.*
*"அகங்காரத்தை விட்டதால்தான் என்றும் அந்த ஆண்டவனை அலங்கரிக்கிறேன்.... துளசி இல்லாத ஹரி பூஜையே முழுமையாகாது, அவனுள் ஐக்கியமானேன் என பணிவாக சொன்னதாம் துளசி.*
*" நான்" எனும் அகங்காரத்தை(அகந்தை) ஒழிந்தால் தான் , நாம் அந்த இறைவனின் திருவடியை அடைவோம் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோம்.*
அந்த அகங்காரம் ஒழிய மஹாபெரியவா அருளை வேண்டுவோம்
श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किञ्चिद्भिदां ब्रूमहे ।
एकस्मै पुरुषाय देवि स ददौ लक्ष्मीं कदाचित्पुरा
सर्वेभ्योsपि ददात्यसौ तु सततं लक्ष्मीं च वागीश्वरीम् ॥
க்ஷீராப்தேரபி ஷைலராஜதனயே த்வன்மந்தஹாஸஸ்ய ச
ஸ்ரீகாமாக்ஷி வலக்ஷிமோதயநிதே: கிம்சித்பிதாம் ப்ரூமஹே |
ஏகஸ்மை புருஷாய தேவி ஸ ததௌ லக்ஷ்மீம் கதாசித்புரா
ஸர்வேப்யோsபி ததாத்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீஷ்வரீம் ||
ன்னு ஒரு ஸ்லோகம். மூக கவி சொல்றார் ‘காமாக்ஷியோட மந்தஸ்மிதம் வெள்ளை வெளேர்னு இருக்கறதுனால இதை பாற்கடலுக்கு ஒப்பிடலாம்னு நான் நினைச்சேன். ஆனா பாற்கடலுக்கும் காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்துக்கும் ‘கிஞ்சித் பிதாம் ப்ருமஹே’ ஒரு சின்ன வித்யாசம் இருக்கு. அதை நான் சொல்றேன்கறார்.
श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किञ्चिद्भिदां ब्रूमहे ।
एकस्मै पुरुषाय देवि स ददौ लक्ष्मीं कदाचित्पुरा
सर्वेभ्योsपि ददात्यसौ तु सततं लक्ष्मीं च वागीश्वरीम् ॥
நாளைக்கு முருகனுடைய கடாக்ஷத்தை பத்தி ஒரு ஸ்லோகம் அதை பார்ப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
*பதிவு 809*🥇🥇🥇
*US 801*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
ஸ்ரியம் திஸந்தோ திஸி திஸ்ய ஸங்க்ஷயாம்
ஜயந்தி ஸீ தாத்ரி ஸூதாஸ் மிதாங்குரா
அம்மா அஞ்ஞானம் உன் நாமங்கள் சொல்வதால் ஆதவனை கண்ட பனி போல் மறைந்து போகிறது ... புத்துணர்ச்சி , புது பலம் உண்டாக்குகிறது ... மனதில் பட்டாம்பூசிக்கள் ஒன்று சேர்ந்து பாடுவதைப்போல் உள்ளது . 🥇🥇🥇
*பதிவு 230*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
5/3
ஸ்யாமா க்ஷீரஸஹோ தரஸ்மிதருசி ப்ரக்ஷாலிதாசாந்த்ரா
வாமாக்ஷீ ஜன மௌலி பூஷண மணிர்வாசாம் பரா தேவதா
காமாக்ஷீதி விபாதி காபி கருணா கம்பா தடின் யாஸ்தடே
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
*உதீதோ பவான்*
*தஸ்யா: மத் நயன*
*அந்தரங்க ஸுகதோ மத் பாக்யதோ ராஜதே*
*தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம் ஆனந்த பூர்ணாஸ்மி அஹம்*
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே*
श्वश्रूर्मे परमं हि दैवतमियं कुक्षावुदीतो भवान्
तस्या मन्नयनान्तरङ्गसुखदो मद्भाग्यतो राजते।
तातो वो मयि वत्सलोऽस्ति सुतरां आनन्दपूर्णास्म्यहं
श्रीकान्तेति विदेहजावचनतः स्मेराननो दृश्यसे॥
ஸீதாதேவியின் பூர்ணானந்தம் கண்ட கௌஸல்யானந்த வர்தனன் ராமர் காட்டிய நிறைவான புன்னகை😊😊😊💐💐💐👌7👌
*நான் மிகவும் கொடுத்து வைத்தவள்* ...
உங்கள் எல்லோரையும் நன்றாக பார்த்துக்கொள்வதைப்போல் என்னையும் ஒரு கடுகளவும் குறைவில்லாமல் என் மூன்று தாயார்களும் , என் வயிற்றில் பிறவாத உங்கள் தம்பிகளும், தந்தை தசரதனும் என்னை பார்த்துக்கொள்கிறர்கள் ...
*வெங்காயம் உரிக்கக்கூட என்னை அனுமதிப்பதில்லை*
அது மட்டும் அல்ல இந்த ஊர் மக்களும் அவர்கள் வீட்டு பெண்ணைப் போல என்னுடன் பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள் ....
என்னை மட்டும் அல்ல என் சகோதரிகளுக்கும் இதே உபசரனை தான் ...
இப்படி சீதை சொன்னவுடன் ராமன் இதுதான் உண்மையான அங்கீகாரம் ....
என் சீதையை கொஞ்சமும் கண் கலங்காமல் பிறரும் பார்த்துக்கொள்கிறார்கள் என்று சீதையே சொல்லும் போது வேறு என்ன வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் புன்னகை பூத்தானாம் ... ☺️☺️☺️
*ச்வச்ரூர்மே* என்றால் மாமியார் என்று அர்த்தம் ...
*மாமியார் என்பவள் தெய்வத்திற்கு சமானம்*
*குக்ஷௌ உதீதோ பவான்*
அந்த தெய்வத்தின் வயிற்றில் இருந்து உதித்தவர் அல்லவா தாங்கள் ??
*தஸ்யா: மத் நயன அந்தரங்க ஸுகதோ*
என் மனதிற்கும் கண்களுக்கும் நீங்கள் ஆனந்தத்தை தருகிறீர்கள் ...
இப்படி அமைந்தது நான் செய்த பெரும் பாக்கியம்
*தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம்*💐💐💐
இது மட்டுமா ... உங்கள் தந்தை என் தந்தையைப்போல என்னிடம் அளவு கடந்த அன்புடன் நடந்து கொள்கிறார் ...👌👌👌
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா*
ஆனந்தத்தால் நான் பூரணமாகி விட்டேன்/ நிறைந்து விட்டேன் இனி நான் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை உன்னிடம் ராமா ...
*ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே*
இப்படி சீதை ஆனந்தத்தின் உச்சத்தை தொட்டுக்கொண்டே உன்னிடம் சொன்ன வார்த்தைகளை கேட்டு அகமகிழ்ந்து ஒரு புன்னகை பூத்தாயே ராமா
அதே புன்னகை உன் முகத்திலும், சீதையின் முகத்திலும் கொஞ்சமும் வயதாகாமல் இளமையுடன் இருக்கிறதே ராமா ...
இன்றும் வடூவூரில் எங்களுக்காக அந்த இனிய புன்னகையை சுமந்து கொண்டிருக்கிறாயோ ராமா??
*சீதை மட்டும் கொடுத்து வைத்தவள் அல்ல நாங்களும் தான் ....* 😊😊😊👌👌👌
சீதை கொடுத்துவைத்தவள்
வெங்காயம் கூட உரிக்கவில்லை
என்று கவி உதாரணம்
அருமை
சிந்திக்க சிரிக்க ரசிக்க👌👌👌👌👌
பாஸ்கரராயர் அருமை
ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சனை
ஆஹா காண கண்கோடி வேண்டும்
லலிதாம்பிகையே சரணம்🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
8.ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா!
9.எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா!
10.ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா!
11.ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா!
அதிகாரம், சந்தோஷம், கெஞ்சல், பரிதாபம், கோபம், மிரட்டல், பரிகாசம், பச்சாதாபம் அத்தனையும் இந்த 11 பாடல்களில் காண்பித்துவிடுகிறார் ரமணர் பக்தி குறையாமல்.
ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணசலா! (அ)
இறைவனை பலர் பக்தி வருவதற்கும் முன் திட்டியுள்ளனர் -
கல்லால் அடித்தும் உள்ளனர், பிரம்பால் அடித்தும் உள்ளனர், பித்தனே, பேயனே என்றும் வசம் மாரி பேசியும் உள்ளனர் -- தேவர்கள் தங்களுக்கு அமுதம் வேண்டும் என்ற ஒரே கொள்கையில் இறைவனை ஆலகால விஷத்தையும் அருந்த சொன்னார்கள் ---
பக்தி வந்தபின் தங்கள் இம்சைகளை குறைத்துக்கொண்டனர்.
ஆனால் அவனிடம் இருந்த உரிமையை குறைத்துக்கொள்ள வில்லை
-- ரமணரோ வேறு மாதிரி ---
ஆனால் அதிலே வஞ்சகம் இல்லை, சூதுவாது இல்லை, தனக்கு என்று எதுவுமே அவர் கேட்கவில்லை ---
உண்மையில் அருணாசேஸ்வரர் ரமணர் இன்னும் தன்னை கொஞ்சம் அதிகமாக திட்ட மாட்டாரா என்று தான் ஏங்கினார்*
முதலில் என்ன சொன்னார்?
எனது மனதை நீ அடக்காவிடில் நீ தான் பழி சுமக்க போகிறாய் என்றார் --
நம்பிக்கை துரோகம் ஏன் செய்தாய் அருணாசலா -?
ஐம்புலகள்வர் என் மனதில் நுழையும் பொது அவர்களை அடக்காமல் எங்கே ஓடி விட்டாய் என்கிறார் -
உனக்கு இதுதான் அழகா, ஆண்மையா என்கிறார் ....
இந்த பாடலில் நீ செய்யும் சூது இதுதானா என்கிறார் -
இன்னொருவராக இருந்திருந்தால் ரமணரை அடித்தே போட்டிருப்பார்.
அவருக்கு தெரியும் தன்னைத் தன்னால் மட்டுமே திட்டிக்கொள்ள முடியும் என்று - அபின்னமாய் ஆன ரமணருக்கும் அருணாசலேஸ்வரருக்கும் வேற்றுமை இல்லை இருவரும் ஒருவரே என்று ------
ஒருவன் தன்னையே திட்டிக்கொண்டால் அவனுக்கு கோபம் வந்தாலும் அதனால் ஒரு கெடுதலும் இல்லை -
இந்த பாடலில் என்ன சொல்கிறார்?
அருணாசலா - நீயே பரந்தாமன் - பரமாத்மா -- ஒளி மிகுந்தவன், எங்கும் நிறைந்தவன், எதிலும் இருப்பவன் --
உனக்குத் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து எவர் எனக்குள் நுழையமுடியும்? ---
இதோ பார் ஐம்புலக்கள்வர்களை --- எப்படி உன் கண்ணில் மாட்டாமல் ஒளிந்துக்கொண்டே என் உள்ளத்தில் குடி புகுந்து விட்டார்கள் -
இது நீ செய்த சூதுதானே -?
அவர்கள் நுழைந்தவுடன் எங்கே காணாமல் போய் விட்டாய் ----?
ஓடி வா அருணாசலா -- நீயின்றி யார் எனைக்காப்பார் அருணாசலா?
எழுதும் போதே கண்களை கண்ணீர் முட்டுகிறது -
என்ன பக்தி! என்ன உரிமை!!! எப்படிப்பட்ட காதல் இது --
உமையே எடுத்துக்கொள்ளாத உரிமையை ரமணர் இங்கே எடுத்துக்கொள்கிறார் இறைவனின் அனுமதியுடன்.
ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணசலா! (அ)
இறைவனை பலர் பக்தி வருவதற்கும் முன் திட்டியுள்ளனர் -
கல்லால் அடித்தும் உள்ளனர், பிரம்பால் அடித்தும் உள்ளனர், பித்தனே, பேயனே என்றும் வசம் மாரி பேசியும் உள்ளனர் -- தேவர்கள் தங்களுக்கு அமுதம் வேண்டும் என்ற ஒரே கொள்கையில் இறைவனை ஆலகால விஷத்தையும் அருந்த சொன்னார்கள் ---
தனக்கு சேவகனாக, தூதுவனாக அனுப்பியும் உள்ளனர் ---
ஆனால் அவனிடம் இருந்த உரிமையை குறைத்துக்கொள்ள வில்லை
-- ரமணரோ வேறு மாதிரி ---
பக்தி அதிகமாக அதிமாக இறைவனை அதிகமாக இந்த அக்ஷர மாலையில் சாடியுள்ளார் -
ஆனால் அதிலே வஞ்சகம் இல்லை, சூதுவாது இல்லை, தனக்கு என்று எதுவுமே அவர் கேட்கவில்லை ---
உண்மையில் அருணாசேஸ்வரர் ரமணர் இன்னும் தன்னை கொஞ்சம் அதிகமாக திட்ட மாட்டாரா என்று தான் ஏங்கினார்*
முதலில் என்ன சொன்னார்?
எனது மனதை நீ அடக்காவிடில் நீ தான் பழி சுமக்க போகிறாய் என்றார் --
நம்பிக்கை துரோகம் ஏன் செய்தாய் அருணாசலா -?
ஐம்புலகள்வர் என் மனதில் நுழையும் பொது அவர்களை அடக்காமல் எங்கே ஓடி விட்டாய் என்கிறார் -
உனக்கு இதுதான் அழகா, ஆண்மையா என்கிறார் ....
இந்த பாடலில் நீ செய்யும் சூது இதுதானா என்கிறார் -
இன்னொருவராக இருந்திருந்தால் ரமணரை அடித்தே போட்டிருப்பார்.
ஆனால் கருணையின் உச்சமான அருணாசலேஸ்வரர் அகம் மகிழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் ---
அவருக்கு தெரியும் தன்னைத் தன்னால் மட்டுமே திட்டிக்கொள்ள முடியும் என்று - அபின்னமாய் ஆன ரமணருக்கும் அருணாசலேஸ்வரருக்கும் வேற்றுமை இல்லை இருவரும் ஒருவரே என்று ------
ஒருவன் தன்னையே திட்டிக்கொண்டால் அவனுக்கு கோபம் வந்தாலும் அதனால் ஒரு கெடுதலும் இல்லை -
ரமணரின் நிலைமை அதே மாதிரி தான் இங்கே ....
இந்த பாடலில் என்ன சொல்கிறார்?
அருணாசலா - நீயே பரந்தாமன் - பரமாத்மா -- ஒளி மிகுந்தவன், எங்கும் நிறைந்தவன், எதிலும் இருப்பவன் --
உனக்குத் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து எவர் எனக்குள் நுழையமுடியும்? ---
இதோ பார் ஐம்புலக்கள்வர்களை --- எப்படி உன் கண்ணில் மாட்டாமல் ஒளிந்துக்கொண்டே என் உள்ளத்தில் குடி புகுந்து விட்டார்கள் -
இது நீ செய்த சூதுதானே -?
உண்மையைச்சொல் -- அவர்களை எப்படி உள்ளே விட்டாய்?
அவர்கள் நுழைந்தவுடன் எங்கே காணாமல் போய் விட்டாய் ----
ஓடி வா அருணாசலா -- நீயின்றி யார் எனைக்காப்பார் அருணாசலா?
எழுதும் போதே கண்களை கண்ணீர் முட்டுகிறது -
என்ன பக்தி! என்ன உரிமை!!! எப்படிப்பட்ட காதல் இது --
உமையே எடுத்துக்கொள்ளாத உரிமையை ரமணர் இங்கே எடுத்துக்கொள்கிறார் இறைவனின் அனுமதியுடன்.
உனை யார் அறிவார் அருணாசலா
இந்த பாடலை பார்க்கும் முன் மனம் மீண்டும் பின்னோக்கி ஓடுகிறது - ரமணரின் அக்ஷர மாலையில் 6வது பாடலை மீண்டும் ஒருமுறை பார்ப்போமா --?
இன்னொரு தடவை படிக்கும் போது வேறு புதிய விளக்கம் வருகிறது ...
ஈன்றிடும் அன்னையின் பெரிதுஅருள் புரிவோய்,
இதுவோ உனதுஅருள் அருணாசலா.
இதில் என்ன சொல்கிறார் ரமணர் --
உன்னைப்போல் யார் என்னிடம் பாசமாக இருக்கிறார்கள் என்கிறார் ---
ரமணருக்கும் ஆதிசங்கரருக்கும், பட்டினத்தாருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது
இந்த மகா யோகிகள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் ---
ஆனால் இவர்களால்
துறக்கவே முடியாதது ஒன்று இருந்தது -
அதுதான் தாய் பாசம் ---
ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் தாயிடம் கடைசி தருணத்தில் ஓடி வந்து கதறி அழுது ஈமக்கடன்களை செய்தனர் ---
ஆதிசங்கரரின் மாத்ரு பஞ்சகம் படித்தால் கண்ணீர் கங்கை போல் வெள்ளமாக ஓடும்.
எதையும் திறக்கலாம் ஆனால் ஒரு தாயின் மீது நமக்கிருக்கும் அன்பை பாசத்தை மட்டும் துறக்கவே முடியாது -
துறக்கவும் தேவை இல்லை என்று இவர்கள் நிரூபித்தார்கள் ----
அப்படிப்பட்ட தாயைக்காட்டிலும் அருணாசலேஸ்வரர் கருணை உள்ளவர் என்கிறார் ரமணர் --
இந்த தாய் இந்த ஜென்மத்திற்கு என் அன்னையாக இருக்கிறாள் --
நான் எடுத்த, எடுக்கப்போகும் பல ஜென்மங்களுக்கு யார் தாயாக இருக்கப்போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது -
ஆனால் அருணாசலேஸ்வரர் என்றுமே எனக்கு தாய்தான் -
குழந்தையே இல்லாதவர்களுக்குத்தான் குழந்தைகள் மீது அதிகமான கருணையும் பாசமும் வரும் -
அதுபோல் தாய் தந்தை இல்லாதவன் அந்த அருணாசலேஸ்வரன் --
அதனால் அவன் கருணை என்னை இந்த ஜென்மத்தில் பெற்றத் தாயைக்காட்டிலும் அதிகம் என்று சொல்கிறார் --- ரமணர்.
எனக்கு தந்தை தாயாக இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை -- நான் எடுத்த எடுக்கவிருக்கும் எல்லா ஜென்மங்களுக்கும் நீயே துணையாக இருக்கிறாய் –
ஒருவர் ஆண்டவனையே பார்த்து இந்த விஷயத்தில் பரிதாபப்படுகிறார் -
இது வேறு விதமான பக்தி
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற (தந்தை தாய்)
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே (அந்தமில்)
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த
அருமையுடனே பெற்று பெருமையுடன் வளர்த்த (தந்தை தாய்)
கல்லால் ஒருவன் அடிக்க ......
கல்லால் ஒருவன் அடிக்க… உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட (கூசாமல்)
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
வீசி மதுரை மாறன் ஆ. ஆ .ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ அய்யா பெற்ற
தந்தை தாய் இருந்தால் உலகத்தில்
உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ
அய்யா (தந்தை தாய்)
ஆனந்தம்....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏